Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சியைக் கவிழ்க்க எவராலும் முடியாது

Featured Replies

ஆட்சியைக் கவிழ்க்க எவராலும் முடியாது

01-9b97c01184ccdd93ada84ce2b9d6ae7895b5ac75.jpg

 

பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசு தேவையில்லை என்­கிறார் ஜனா­தி­பதி  
(பன்­னீர்­செல்வம்)

எதிர்­கால அதி­காரம் தொடர்பில் இப்­போதே கனவு காணாது உண்­மை­யான பிரச்­சி­னை­களை கருத்தில் கொண்டு செயற்­ப­ட­வேண்டும். அந்த பிரச்­சி­னை­களை

தீர்க்க புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்­டிய அவ­சி யம் இல்லை. இருக்கும் அர­சாங்­கத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­பட அனை­வரும் முன்வர­வேண்டும் என விரும்­பு­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நாட்டில் அழுத்­தங்­களில் இருந்து மீளும் தீர்­மா­னங்­களை எடுக்கும் போது அதை அர­சியல் பிரச்­சி­னை­க­ளாக மாற்றி விடு­கின்­றனர். அதன்­மூலம் ஆட்­சியை கவிழ்க்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நல்ல காரி­யங்­க­ளுக்­காக தீர் மா­னங்­களை எடுக்­கும்­போது  அதனைக் கொண்டு யாரும் கன­வு­காணும் வகையில் இந்த ஆட்­சியை கவிழ்க்க எவ­ராலும் முடி­யாது. அர­சாங்­க­மாக நாம் பல­மாக முன்­னெ­டுத்து செல்­கின்றோம் என்றும் அவர் கூறினார்.  

எமது பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை­யாக உள்­ளனர்.அம்­பாந்­தோட்­டைக்கு வர­வி­ருக்கும் இந்த அபி­வி­ருத்தி வேண்டாம் என எவரும் தடுத்தால் அதை பொல­ந­று­வைக்கு தாருங்கள் நாம் அதனை செய்­கின்றோம் என பிர­த­ம­ரிடம் கேட்­டுக்­கொள்­கின்றேன். நாம் இந்த நாட்டின் நிலத்தை யாருக்கும் தாரை­வாக்­க­வில்லை என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று இரண்டு வருட பூர்த்­தியை முன்­னிட்டு நேற்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரைற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்கி இன்று இரண்டு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் மூன்­றா­வது ஆண்டில் காலெ­டுத்து வைத்­துள்ளோம். இந்த நிலையில் ஒரு­புறம் நாம் இந்த நிகழ்வை எண்ணி மகிழ்ச்சி அடை­வ­துடன் மறு­புறம் நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் சிந்­தித்து அதற்­க­மைய நக­ர­வேண்­டி­யுள்­ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நாம் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­ற­வுடன் முன்­னெ­டுத்­து­செல்லும் அர­சாங்கம் தேசிய அர­சாங்­க­மாக அமையும் என தீர்­மா­னித்தோம்.

எமது முதல் ஆண்டு நிறைவில் இந்­திய பிர­தி­நிதி கோபலா கிருஷ்ண காந்தி இலங்­கைக்கு வந்­தி­ருந்தார். இன்று இந்­திய ஆந்­திர முதல்வர் சந்­தி­ர­பாபு நாடுபு எமது நிகழ்வில் கலந்­து­கொண்­டுள்ளார். ஒவ்­வொரு ஆண்டும் இந்­திய தலை­வர்கள் இங்கு வரு­கின்­றனர் ஏன் என வினவ முடியும். உண்­மையில் இலங்கை இந்­திய உற­வா­னது சூழ­லியல் மக்கள் உள்­ளிட்ட விட­யங்­க­ளையும் தாண்­டிய தொடர்­புகள் என்­பதை விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்து பெளத்த நோக்­கு­களின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட சமூக அர­சியல் கலா சாரத்தில் இந்த இரு நாடு­களின் நீண்­ட­கால உற­வு­முறை நீட்­டித்து வரு­கின்­றது. அதனால் தான் உடன்­ப­டிக்­கைக்கு அப்பால், புரிந்­து­ணர்­வுக்கு அப்பால் .... இந்த உறவு எமக்கு முக்­கி­ய­மா­னது. ஆகவே தான் எமது நெருங்­கிய நண்பர் என்ற வகையில் எமது வெளி­நாட்டு கொள்­கையின் மூலம் சகல நாடு­க­ளு­டனும் உறவை கையாண்­டு­வ­ரு­கின்றோம். வல­யத்தில் உள்ள நாடுகள் உள்­ளிட்ட சகல நாடு­க­ளு­டனும் புதிய அர­சாங்கம் என்ற ரீதியில் நட்­பு­றவை கையாண்டு கையாண்டு வரு­கிறோம்.

இந்த இரண்டு ஆண்­டு­களில் நாம் என்ன செய்தோம் என சிலர் கேட்­கின்­றனர். 2015 ஆம் ஆண்டு தேர்­த­லுக்கு முன்னர் வரையில் இந்த நாட்டில் மிகவும் மோச­மான ஒரு சூழல் இருந்­ததை யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது. நாட்டில் வடக்கு தெற்­குக்கு அப்பால் சர்­வ­தேச ர்தியில் இருந்த நிலை­மைகள் மற்றும் உள்­நாட்டில் இருந்த சூழ­லினால் மக்­களால் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­யாத நிலைமை இருந்­தது. ஜன­நா­யகம், மனித உரிமை , ஊடக சுதந்­திரம் தொடர்­பி­லான பிரச்­சி­னைகள் இருந்­தன. இந்த இரண்டு ஆண்­டு­களில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­ப­ட­வில்லை. யாரும் நாட்­டை­விட்டு வெளி­யே­ற­வில்லை. ஊடக சுதந்­தி­ரத்­துக்கு முக்­கிய பங்கு வகித்த காலம் இந்த காலம் என்­பதே உண்­மை­யாகும். நாம் அர­சாங்­க­மாக துப்­பாக்­கி­களை கையில் எடுக்­க­வில்லை. யாரையும் கொல்­ல­வில்லை , தாக்க வில்லை. மேலும் சிலர் 19 ஆம் திருத்தம் பற்றி பேசு­வது போதும் என கூறு­கின்­றனர். அவர்­க­ளுக்கு 18ஆம் திருத்­தத்தை நினைத்­து­ப­டுத்த விரும்­பு­கின்­றேன. 19 ஆம் திருத்தம் கொண்­டு­வரப் பட்­டதை விடவும் 18ஆம் திருத்தம் ஒழிக்­கப்­பட்­ட­மையே எம் அனை­வ­ருக்கும் கிடைத்த வெற்­றி­யாகும்.

நவீன தொழில்­நுட்ப அவ­சியம் பற்றி சந்­தி­ர­பாபு நாயு­டு­வுடன் பேசும்­போது நவீன தொழி­நுட்பம் அவ­சியம். அதேபோல் அதில் எமது சமூகம் கெட்­டுப்­போ­வதை தடுக்க ஆந்­திரா பிர­தேசம் எடுக்கும் நட­வ­டிக்கை என்ன என வின­வினேன். அனைத்தும் அவ­சியம் ஆனாலும் அவற்றை கட்­டுப்­ப­டுத்தும் நகர்வும் அவ­சியம் என அவர் என்­னிடம் கூறினார்.

எமது நாட்­டுக்கு நீரும் மின்­சா­ரமும் மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாகும், இன்று கொழும்பில் கிடைக்கும் நீரில் 35 வீதம் வீணாக்­கப்­ப­டு­கின்­றது. மின் பாவ­னை­யினால் ஏற்­படும் அநா­வ­சிய விரயம் பற்றி நாம் சிந்­திக்­க­வில்லை. நீர் மற்றும் மின் மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். இந்த ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்­டாக நாம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளோம். நிலை­யான அபி­வி­ருத்தி தொடர்பில் சிந்­திக்கும் போது அதை ஏற்­ப­டுத்­து­வதில் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு மற்றும் ஐக்­கி­ய­மாக அனை­வரும் செயற்­படும் நிலைப்­பாடு அவ­சியம் என நாம் கரு­தினோம்.

எமது நாட்டின் வறுமை 7வீத­மாக உள்­ளது. உணவு ,வேலை­வாய்ப்பு , கல்வி அறிவு, சுகா­தார தன்­மை­களை பலப்­ப­டுத்தல் அவ­சி­ய­மாகும். இந்த நிலைமை இன்னும் சிறிது காலத்தில் 25 வீத­ம­ளவில் அதி­க­ரிக்கும். அதை தடுக்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அவ்­வாறு எடுப்­பது என்றால் சமூக பொரு­ளா­தா­ரத்­திலும் சந்தை பொரு­ளா­தா­ரத்­திலும் நாம் பல­ம­டைய வேண்டும். இந்த இரண்­டிலும் சாதக பாதகம் உள்­ளது. அவற்றை சரி­யாக கையாண்டு சாத­க­மான நகர்­வு­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி செயற்­பட வேண்­டி­யது அவ­சியம்.

 அர­சியல் வாதிகள், தனியார், அரச துறை­யினர் பொது­மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். அதற்­கான வழி­காட்­டலும் வேலைத்­திட்­டமும் அவ­சி­ய­மான ஒன்­றாகும். இந்த நாடு விவ­சா­யத்தை முதன்­மை­ப­டுத்தி உரு­வாக்கப் பட்­டுள்­ளது.புதிய தொழி­நுட்பம் அவ­சியம். புதிய பொரு­ளா­தார நகர்வு அவ­சியம். அதே நிலையில் கிரா­மிய விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளுடன் கைகோர்த்து நவீன பொரு­ளா­தார நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

மேலும் முன்­னைய அர­சாங்­கத்­துடன் ஒப்­பிட்டு இந்த அர­சாங்கம் என்ன செய்­துள்­ளது என கேள்வி எழுப்­பு­கின்­றனர். அபி­வி­ருத்தி தொடர்பில் ஒப்­பிட்டு எம்மை விமர்­சிக்­கின்­றனர். அந்த அர­சாங்­கதின் பசு­மை­யான பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை தான் இன்று நாம் அனு­ப­வித்து வரு­கின்றோம். கோடிக்­க­ணக்கில் கடன்­களில் தவிக்­கிறோம். அந்த அபி­வி­ருத்­தியின் பின்­ன­ணியில் உள்ள கடன்கள் இன்று எம்மால் தாக்­கு­பி­டிக்க முடி­யாமல் உள்­ளது. அந்த பொய்­யான அபி­வி­ருத்தி எமக்கு அவ­சி­யமா அல்­லது நாட்டை உண்­மை­யாக கட்­டி­யெ­ழுப்ப அனை­வ­ரையும் ஒன்­றி­னது நாட்டை முன்­னெ­டுக்க வேண்­டுமா என சிந்­திக்க வேண்டும்.

நாம் எங்கு உள்ளோம் என சிந்­திக்க வேண்டும். முன்னர் செய்த வெறு­மை­யான பொரு­ளா­தாரம் அவ­சியம் இல்லை. உண்­மை­களை விளங்­கிக்­கொண்டு செயற்­பட வேண்டும். சக­லரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். நாம் முன்­செல்ல முடியும். அதற்கு தைரியம் செயற்­பாடு என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாகும். ஒன்­றி­ணைந்து செயற்­படும் மன­நி­லையை உரு­வாக்க வேண்டும் . இன்­றைய பொரு­ளா­தார சிக்­க­லுடன் நாட்டை முன்­னெ­டுத்துச் செல்­லும்­போது அதற்கு பல தடைகள் வரு­கின்­றன.

உடன்­ப­டிக்கை இல்­லாத முறை­யான தீர்­மானம் இல்­லாத நாம் இன்னும் முன்­னெ­டுக்­காத அம்­பாந்­தோட்டை அபி­வி­ருத்தி திட்டம் தொடர்பில் சிலர் பொய்­யான கதை­களை கூறு­கின்­றனர் .எமது பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை­யாக உள்­ளனர்.அம்­பாந்­தோட்­டைக்கு வர­வி­ருக்கும் இந்த அபி­வி­ருத்தி வேண்டாம் என எவரும் தடுத்தால் அதை பொல­ந­று­வைக்கு தாருங்கள் நாம் அதனை செய்­கின்றோம் என பிர­த­ம­ரிடம் கேட்­டுக்­கொள்­கின்றேன். நாம் இந்த நாட்டின் நிலத்தை யாருக்கும் தாரை­வாக்­க­வில்லை.

நாம் இந்த நாட்டை பலப்­ப­டுத்தி அதன் மூலம் பொரு­ளா­தார புரட்­சியை வெற்­றி­கொள்ள முயற்­சிக்­கின்றோம். ஆனால் இன்று விமர்­சிக்கும் நபர்கள் பொரு­ளா­தார புரட்­சிக்கு முகங்­கொ­டுக்க முடி­யாது நாட்டை விட்டு ஓடிச் சென்­றுள்­ளனர் என்றே நான் கூரு­கின்றேன். சர்­வ­தேச அழுத்­தத்­துக்கும் முகம்­கொ­டுக்க முடி­யாது தப்பி சென்­றனர். மனித உர­மைகள் ஆணைக்­கு­ழுவின் பல­மான அழுத்­தங்­களை நாம் இன்று முகம்­கொ­டுத்து வரு­கிறோம். அதன் செறிவை குறைத்­துள்ளோம். இன்று அவர்கள் அனை­வ­ருக்கும் எமது பயணம் தெரி­கின்­றது.அவர்­களின் உத­வி­களை பெற்று சுதந்­தி­ர­மாக செயற்­பட முடிந்­துள்­ளது. முடங்கிக் கிடந்த நாம் இன்று சுதந்­த­ர­மாக செயற்­ப­டு­கின்றோம்.

சர்­வ­தேச அழுத்தம் பொரு­ளா­தார அழுத்தம் ஆகி­ய­வற்­றுக்கு முகம்­கொ­டுக்க முடி­யாத நிலையில் தான் தேர்­தலை விரைவில் நடத்­தினர். அவர்­களால் இந்த நாட்டை இனியும் முன்­னெ­டுத்து செல்ல முடி­யாத நிலையில் இய­லா­மையில் ஆட்­சியை விட்டு சென்­றனர். அதுதான் உண்மை. ஆனால் இன்று நாம் ஆட்­சிக்கு வந்­ததும் இந்த நிலை­மை­களை சமா­ளித்து நாட்டை முன்­னெ­டுத்து செல்லும் தைரி­யத்தில் உள்ளோம். எமக்கு அழுத்­தங்கள் உள்­ளன. நாம் முடி­வு­களை எடுக்கும் பொது பல சிக்­கல்கள் உள்­ளன. ஆனால் நாட்டில் அழுத்­தங்­களில் இருந்து மீளும் தீர்­மா­னங்­களை எடுக்கும் போது அதை அர­சியல் பிரச்­சி­னை­க­ளாக மாற்றி விடு­கின்­றனர். அதன்­மூலம் ஆட்­சியை கவிழ்க்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நல்ல காரி­யங்­க­ளுக்­காக தீர்­மா­னங்­களை எடுக்­கும்­போது அதனைக் கொண்டு யாரும் கன­வு­காணும் வகையில் இந்த ஆட்­சியை கவிழ்க்க எவ­ராலும் முடி­யாது. அர­சாங்­க­மாக நாம் பல­மாக முன்­னெ­டுத்து செல்­கின்றோம்.

நாட்டின் அழுத்­தங்­களில் இருந்து நாம் முழு­மை­யாக விடு­பட வேண்டும். ஐக்­கி­ய­மாக எமது பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். அதற்கு அனை­வரும் எம்­முடன் கைகோர்க்க வேண்டும்,. சகல நாடு­களின் நட்­பு­றவு மூலம் எமக்­கான உத­வி­களை பெற முட்யும். சக­லரும் எமக்கு உதவ தயா­ராக உள்­ளனர். நாம் உரு­வாக்கி வைத்­துள்ள சர்­வ­தேச நட்­பு­றவை சிலர் விமர்­சிக்­கின்­றனர். ஆனால் அதையும் தாண்டி சர்­வ­தேச உத­வி­களை வைத்து முன்­னேற முடியும். தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­க­ளி­டையே சமா­தா­னத்தை உறுதி படுத்தி முரண்­பா­டு­களை தவிர்க்க புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்கும் முயற்­சி­களை எடுத்து வரு­கிறோம். ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்கம். ஆனால் எமது இந்த முயற்­சி­களை விமர்­சித்து இந்த நாட்டின் பெளத்த கொள்கை அழிக்­கப்­ப­டு­வ­தா­கவும் இந்த நாடு பிரி­கின்­றது எனவும் கூறு­கின்­றனர்.இந்த கருத்­துக்­களை நாம் நிரா­க­ரிக்­கின்றோம். நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தும் ஐக்­கிய இலங்­கையை உரு­வாக்கும் அர­சி­ய­ல­மைப்­பையே நாம் உரு­வாக்­கு­கின்றோம். அதற்­காக எமக்கு ஒத்­து­ழைக்கும் சக­ல­ரது செயற்­பா­டு­க­ளையும் மதிக்­கின்றோம்.

எமது நாட்டில் மாத்­திரம் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் இல்லை. இவை உலக நாடு­களில் உள்ள பிரச்­சி­னை­க­ளாகும். எமது நாட்டில் உள்ள பிரச்­சி­னைகள் இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்ட பிரச்­சி­னைகள் அல்ல. உட­ன­டி­யாக தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னை­களும் அல்ல. ஆனால் பிரச்­சி­னை­களை தீர்க்க அனு­பவம் உள்­ளது. நல்ல கற்ற சமூகம் உள்­ளது .புத்திசாலிகள் உள்ளனர் அனைவரையும் ஒன்றிணைந்து நாட்டை முன்டுக்க முடியும். நல்லிணக்கத்தை பலப்படுத்த முடியும். எமக்கு மக்கள் பொறுப்புக்களை கொடுத்துள்ளனர் .அதை முன்னெடுத்து செல்ல வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள தேர்தல், , மக்களின் வாய்ப்புகள் பற்றி பேசுகின்றனர்.

அது இப்போதைக்கு அவசியம் இல்லை. இப்போது நாட்டை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டின் உண்மையான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அதை தீர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பலமான சகோதரத்துவமான நாட்டை உருவாக்க வேண்டும். அதை குழப்ப எவரும் முன்வந்தால் அது தேசத்துரோக செயலாகவே அமையும். கட்சி பேதம் இல்லாது நாம் எடுத்த முயற்சிகளை சரியாக கையாண்டு முன்னெடுத்து செல்ல வேண்டும். எதிர்கால அதிகாரம் தொடர்பில் இப்போதே கனவு காணாது உண்மையான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். அந்த பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசாங்கத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் அரசாங்கத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட அவைவரும் வரவேண்டும் என விரும்புகின்றேன். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.