Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்த இராணுவத்தைவிட அதிகமானவர்கள் அம்பாந்தோட்டையில்

Featured Replies

வடக்­கி­லி­ருந்த இரா­ணு­வத்­தை­விட அதி­க­மா­ன­வர்கள் அம்­பாந்­தோட்­டையில்

04-5bca20e6074eb0df6e7fcf1d5a2f9fb13e581f62.jpg

 

திரு­மலை, பலாலி, கொழும்பும் பறி­போகும் அபாயம் என்­கிறார் மஹிந்த  
(ஆர்.யசி )

அம்­பாந்­தோட்டை மக்­களின் போராட்­டத்தை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் கையாண்ட விதம் ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­னது. தமது நிலம் பறி­போகும் நிலையில் மக்­களின் போராட்டம் நியா­ய­மா­னது. அன்று வடக்கில் இருந்த இரா­ணு­வத்தை விடவும் அதி­க­மான இரா­ணுவம் மற்றும் பொலிஸ் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த  ராஜபக் ஷ தெரி­வித்தார்.   

இன்று அம்­பாந்­தோட்டை சர்­வ­தேச மய­மா­னதை போல நாளை திரு­கோ­ண­மலை,பலாலி பின்னர் கொழும்பும் பறி­போகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று கண்டி தலதா மாளி­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நிலையில் வழி­பா­டு­களின் பின்னர் கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

அம்­பாந்­தோட்­டையில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நிகழ்வு தொடர்பில் நான் தொலை­பே­சியில் விசா­ரித்தேன். யுத்த காலத்தில் வடக்கில் இருந்த பாது­காப்பை விடவும் அதி­க­மாக இரா­ணுவம் மற்றும் பொலிஸார் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­பாந்­தோட்டை மக்கள் கூறினார். வட­மா­ராச்சி,கிளி­நொச்­சியை விடவும் பல­மான பாது­காப்பு அன்­றைய நிகழ்வில் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவே மக்கள் கூறினர். பொது­மக்­க­ளுக்கு வீதியில் பய­ணிக்க முடி­ய­வில்லை, வாக­னங்கள் பய­ணிக்க முடி­யா­தி­ருந்­தது. தொலை­பேசி இணைப்­புகள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன என்­றெல்லாம் கூறினர்.ஏன் இவ்­வா­றான ஒரு அடக்­கு­முறை கையாளப் படு­கின்­றது? மக்கள் ஏன் குழம்­பிபோய் உள்­ளனர் என கவ­னத்தில் கொள்ள வேண்டும். மக்­களின் நிலம் அவர்­களின் காணிகள் வீடுகள் , வயல் நிலங்­க­ளையும் அனைத்­தையும் வெளி­நாட்­டு­க­ளுக்கு விற்கும் போது மக்கள் சாதா­ர­ண­மா­கவே முரன்­ப­டு­வார்கள். இப்­போது சீனா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பில் பொது­மக்­களின் காணி­களே விற்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் எனது ஆட்­சியில் என்னால் தான் இந்த காணிகள் விற்கும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது என கூறு­கின்­றனர். ஆமாம் எனது ஆட்­சியில் நான் தான் 750 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் தொழில் பேட்டை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­களை கொண்­டு­வந்தேன். ஆனால் இவர்­களை போன்று ஆயிரக் கணக்­கி­லான ஏக்கர் நிலங்­களை தான்­தோன்­றித்­த­ன­மாக விற்­க­வில்லை. நாட்டில் தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது அவ­சியம். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிக்க தொழில் பேட்­டைகள் உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சியம்.

ஆனால் எவ்­வா­றான தொழில் பேட்­டை­களை உரு­வாக்­கு­வது என நாம் தீர்­மா­னிக்­க­வேண்டும். தெற்கில் எண்ணெய் குதங்­களை அமைப்­பதால் அதன் தாக்கம் நுவ­ரெ­லிய வரை பரவும். இரும்பு உருக்கும் தொழிற்­சாலை உரு­வாக்­கப்­பட்­டாலும் அதன் வெப்பம் அந்த தாதுக்­களின் தாக்கம் இவ்­வாறு சகல பகு­தி­க­ளையும் பாதிக்கும். ஆகவே இயற்­கையை பாதிக்கும் வகையில் அமையும் இவ்­வா­றான தொழிற்­சா­லைகள் சர்­வ­தேச நாடு­களில் மூடப்­படும் நிலையில் அவற்றை இலங்­கையில் திறந்து வைத்து நாட்டை வீணாக்கும் நட­வ­டிக்­கை­க­ளையே இந்த அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

 அர­சாங்கம் நேற்று முன்­தினம் ஒரு அடக்­கு­முறை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது. கொழும்பில் இருந்து மூன்று பாதாள குழுக்­களை அங்கு கொண்­டு­சென்­றி­ருந்­தனர். அமை­தி­யா­கவும் ஜன­நா­யக ரீதி­யிலும் முன்­னெ­டுத்த பொது­மக்­களின் ஆர்ப்­பாட்­டத்தை இவர்­களே கல்­வீச்சு மூலம் குழப்­பினர். தமது நிலங்கள் பறி­போகும் நிலையில் மக்கள் அதற்கு எதி­ராக கிளர்ந்து எழு­வது தடுக்க முடி­யாது. ஆனால் இந்த நிலையில் பொலிஸார் நடந்­து­கொண்ட விதம் மிகவும் மோச­மா­னது. பொது­மக்­களை பாது­காக்க வேண்­டிய பொலிஸார் பொது­மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வது அவர்கள் மீதான இழுக்கை ஏற்­ப­டுத்தும் செய­லாகும். ஆகவே பொலிஸார் தமது கட­மையை உணர்ந்து செயற்­பட வேண்டும். பொலிஸ்மா அதிபர் அர­சியல் வாதி­களின் அடிமை வேலையை செய்து வரு­கின்றார்.அவர் இவ்­வாறு மோச­மாக அர­சியல் வாதி­க­ளுக்கு துணைபோய் பின்னர் எவ்­வாறு மக்­களின் முகங்­களை பார்க்கப் போகின்றார். அர­சாங்கம் இன்று செய்யும் மோச­டிகள் மற்றும் அரா­ஜக செயற்­பா­டு­க­ளுக்கு இவர்கள் துணை­போ­யுள்­ளனர் .

இன்று அம்பாந்தோட்டை சர்வதேச மயமானதைப்போல் போலவே நாளை திருகோணமலை இல்லாமல் போகும். பின்னர் காங்கேசன்துறை பறிபோகும்.அதன் பின்னர் கொழும்பும் எம்மிடம் இருந்து பறிபோகும். அவ்வாறான நிலையில் நாளை பிறக்கும் இலங்கை பிள்ளைகளுக்கு எஞ்சியிருக்கப்போவது என்ன? ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு முறை செய்த தவறை இனியொருமுறை செய்யக்கூடாது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-09#page-1

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டை மோதல் தொடர்பில் பாராளுமன்றில் வாதப்பிரதிவாதம்

 


ஹம்பாந்தோட்டை மோதல் தொடர்பில் பாராளுமன்றில் வாதப்பிரதிவாதம்
 

ஹம்பாந்தோட்டை அமைதியின்மை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (09) வாதப்பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.

மிரிஜ்ஜவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைதியாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பபாட்ட பேரணி மீது பொலிஸ் மாஅதிபரின் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பொல்லுகளாலும் கற்கலாலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பிரதமர் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன உரையாற்றுகையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், துறைமுக சட்டங்களை மீறி முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

நாட்டின் சட்டம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபந்தனைகள் என்பனவற்றை மீறி சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தினூடாக 98 வருடங்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுக பிரதேசம் நாட்டு மக்களுக்கு இல்லாது போவதாகவும் இதனூடாக நாட்டிற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் எதிர்கட்சியின் பிரதம கொறடா தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிறுவனத்திற்கு 15,000 ஏக்கர் காணியை வழங்குவதனூடாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எதிர்கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அடுத்து எதிர்கட்சியினருக்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டைக்கு அபிவிருத்தி அவசியம் இல்லை என்றால் அவற்றை பொலன்னறுவைக்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக சபையில் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஹம்பாந்தோட்டையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு காணியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திப் பணிகளை நிறுத்துமாறு எதிர்கட்சியினர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும் அவற்றை, நுவரெலியாவிற்கும், காலிக்கும், கண்டிக்கும் மொனராகலைக்கும் கொண்டு வருமாறு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் கோருவதாகவும் பாராளுமன்றத்தில் பிரதமர் இன்று தெரிவித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/01/ஹம்பாந்தோட்டை-மோதல்-தொடர/

  • தொடங்கியவர்

அம்பாந்தோட்டையில் தாக்குதல் விவகாரம் ஆளும் எதிர்க்கட்சியிடையே சபையில் சர்ச்சை

02-3974d653a907fee0f34e729f6dd5797626696401.jpg

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

அம்­பாந்­தோட்­டையில் கைத்­தொழில் பேட்டை வலயம் அமைக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்ட சம்­பவம் குறித்து சபையில் ஆளும் தரப்­பிற்கும் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கும் இடையில் நேற்று கடு­மை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

2017ஆம் ஆண்­டுக்­கான முத­லா­வது பாரா­ளு­மன்ற அமர்வு நேற்று புதன்­கி­ழமை சபா­நா­யகர் கரு.ஜய­சூ­ரிய தலை­மையில் ஆரம்­ப­மா­னது. இதன்­போது நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்டு எதி­ர­ணியின்

 ஆத­ர­வா­ள­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன குறிப்பிடுகையில்

அம்­பாந்­தோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்கும் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மற்றும் கடந்த சனிக்­கி­ழமை பொது மக்கள் நடத்­திய ஆர்ப்­பாட்­டத்தின் மீது கண்­மூ­டித்­த­ன­மாக நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் ஆகி­ய­வற்றைக் கடு­மை­யாக கண்டித்ததுடன் குறித்த தாக்­குதல் சம்­பவம்

 தொடர்­பாக பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யோடு, தாக்­கு­தல்கள் மேற்­கொண்­ட­வர்கள் யார் எனவும் கேள்வி எழுப்­பினார்.

 இதன்போது பிர­தமர் ரணில் பதிலளிக்கையில்

அம்­பாந்­தோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள கைத்­தொழில் பேட்டை வல­யத்தின் ஊடாக அதி­க­ள­வான தொழில்­வாய்ப்­புக்கள் கிடைக்­க­வுள்­ளன. முத­லீ­டு­களால் இலங்கை வர்த்­த­கர்­களும் நன்­மை­ய­டை­வார்கள்.

அம்­பாந்­தோட்­டையில் தொழிற்­பேட்டை தேவை­யில்­லை­யெனின் அதனை பொல­ன­று­வைக்கு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி கேட்­டுள்ளார். அத­னை­வி­டவும் மொன­ரா­க­லைக்கு வழங்­கு­மாறும், கண்­டிக்கு வழங்­கு­மாறும் பல்­வேறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

அன்­றைய நிகழ்வில் கலந்­து­கொள்­ளு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்­டோ­ருக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தோம். ஆனால் அவர்கள் வரு­கை­தந்­திருக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டினார்.

இதன்போது குறுக்கீடு செய்த நாமல் ராஜ­பக்ஷ எம்.பி

அம்­பாந்­தோட்­டையில் தொழிற்­பேட்­டைகள் அமைக்­கப்­ப­டு­வ­தற்கோ வேலை­வாய்ப்­புக்­களை வழங்­கு­வ­தற்கோ நாம் எதிர்ப்­புத்­தெ­ரி­விக்­க­வில்லை. 15ஆயிரம் ஏக்கர் பொது மக்­களின் காணிகள் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கே நாம் எதிர்ப்புத் தெரி­விக்­கின்றோம்.

ஏற்­க­னவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை அண்­மித்த பகு­தியில் உள்ள நிலப்­ப­கு­தியைப் கைத்­தொழில் வல­யத்­திற்­காக பயன்­ப­டுத்த முடியும். அவ்­வா­றி­ருக்­கையில் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை ஏன் கைய­கப்­ப­டுத்­து­கின்­றீர்கள்.

பௌத்த மத­கு­ரு­மாரை அம்­பாந்­தோட்­டையில் சந்­தித்­தி­ருந்த பிர­தமர் தொழிற்­பேட்டை குறித்து விளக்­க­ம­ளித்­தி­ருந்தார். அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­படும் என அவர் கூறி­ய­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளியி­டப்­பட்­டன.

இருந்­த­போதும் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது வீடு தேடிச் சென்று தாக்­குதல் நடத்­தப்­ப­டு­ம­ள­விற்கு நிலைமை மோச­ம­டைந்­தி­ருந்­தது. சிறு­வர்கள் வயது வந்­த­வர்கள் எனக் கூடப்­பார்க்­காமல் கண்ணீர் புகைக்­குண்டு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன என்றார்.

இதன்போது பதிலளித்த பிரதமர் ரணில்

இலங்­கையில் முதல் தட­வை­யாக மூன்று துறை­மு­கங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி சீனா சென்று அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் அபி­வி­ருத்தி செய்­ய­வி­ருக்கும் நிறு­வ­னத்­துடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ செய்தால் நல்­லது மைத்­தி­ரி­பால சிறி­சேன அதனைச் செய்தால் கெட்­டதா? இதனை எரிச்­சலின் வெளிப்­பா­டா­கவே பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெ ளியிட்ட சமல் ராஜ­பக்ஷ எம்.பி.

அம்­பாந்­தோட்டை அபி­வி­ருத்­திக்­காக காணி­களை பெற்­றுக்­கொள்­வது குறித்து சரி­யான விளக்கம் இன்­மையின் கார­ணத்­தாலேயே பொது­மக்கள் மத்­தியில் சந்­தேகம் ஏற்­பட்­டது. பிர­தமர் குறித்த விடயம் சம்­பந்­த­மாக பௌத்த மத­கு­ரு­மாரைச் சந்­தித்து விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.

மக்கள் அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் செய்­யவே விரும்­பி­னார்கள். அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. கதிர்­காமம் செல்­வ­தாக கொழும்­பி­லி­ருந்து அழைத்­து­வ­ரப்­பட்­ட­வர்­க­ளுக்கு மது­பானம் வாங்கிக் கொடுக்­கப்­பட்­ட­துடன் அவர்கள் அம்­பாந்­தோட்­டைக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டனர்.

அவர்­களைப் பயன்­ப­டுத்­தியே தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் காணி கைய­கப்­ப­டுத்­து­வது குறித்து ஆராய குழு­வொன்றை பிர­தமர் அமைத்­துள்ளார். இதனை நாம் வர­வேற்­கின்றோம். இது நல்­ல­தொ­ரு­வி­டயம். பிரச்­சி­னையைத் பேசித் தீர்த்­துக்­கொள்ள முடியும் என்றார்.

முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­ப­க்ஷவின் கருத்தை நான் வர­வேற்­கின்றேன். நாம் இந்த விட­யத்தை பேசித்­தீர்க்­கலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்போது பந்­துல குண­வர்த்­தன எம்.பி.

குறிப்பிடுகையில்

அம்­பாந்­தோட்டை தொழிற்­போட்­டைக்­கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்­ளு­மாறு முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கான (வி.ஐ.பி) அழைப்­புக்­களை எமக்கு அனுப்­ப­யி­ருந்­தர்கள். ஆனால் வீதியில் மறி­யல்­களைப் போட்டு விழா­வுக்குச் செல்­ல­வி­டாது தடுக்­கப்­பட்­டது.

மட்­டக்­கு­ளி­யி­லி­ருந்து அழைத்­து­வ­ரப்­பட்­டி­ருந்த வன்­முறைக் கும்­பல்­களே அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது. இதற்கு ஆத­ர­மாக ஆர்ப்­பாட்டம் நடந்த இடத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட ஆள் அடை­யாள அட்­டையை சபையில் சமர்ப்­பிக்­கின்றேன். குறித்த சம்­ப­வத்­துடன் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கும் தொடர்­பி­ருக்­கின்­றது என்றார்

ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் எதிர்ப்பு  பந்­துல குண­வர்த்­தன எம்.பியின் குற்­றச்­சாட்டை அடுத்து ஆளும் தரப்­பி­லுள்­ள­வர்கள் கடு­மை­யான தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர். முன்­வ­ரி­சையில் அமர்ந்­தி­ருந்த ஐ.தே.வின் அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, கபீர் ஹாசிம் மற்றும் ரஞ்சித் மத்­து­ம­பண்­டார ஆகியோர் கடும் தொனியில் பந்­துல குண­வர்த்­த­ன­வுடன் தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர். 

இந்த நிலையில் பகிரங்க கோரிக்கையை முன்வைத்த எதிர்க்கட்சியின்

பிர­தம கொர­டா­வான அநுர திஸா­ந­யக்­க

அம்­பாந்­தோட்டை அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் குறித்து கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள கட்­ட­மைப்பு ஒப்­பந்தம் மற்றும் அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்­டு­வரும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்த வரைபு உள்­ளிட்­டவை சபையில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். அது மாத்­தி­ர­மன்றி கடந்த காலத்தில் துறை­முகம் அமைக்­கப்­பட்­ட­மையால் இடம்­பெ­யர்ந்த மக்­களே மீண்டும் இடம்­பெ­யரும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் குறித்து இரண்டு நாட்கள் முழுநாள் விவா­த­மொன்று சபையில் நடத்­தப்­பட வேண்டும் என்றார்.

சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யல்ல குறிப்பிடுகையில்

விவாதம் நடத்த அர­சாங்கம் தயா­ராக இருக்­கி­றது. பொலிஸ் விசா­ரணை அறிக்கை கிடைத்­த­வுடன் இவ்­வி­வா­தத்தை நடத்த முடியும் என்றார்.

நீதி­மன்றம் வழங்­கிய உத்­த­ரவை மீறி செயற்­பட்­ட­மை­யா­லேயே ஆர்ப்­பாட்டக் காரர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய நிலை­மை­யொன்று அங்கு ஏற்­பட்­டது என்று இதன்போது பிர­தமர் குறிப்பிட்டார்.

இதனை மறுத்த நாமல் ராஜ­பக்ஷ எம்.பி.

நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­ய­தாக பிர­தமர் குற்­றஞ்­சாட்­டு­கிறார். அப்­ப­டி­யாயின் எவ்­வாறு ஆர்ப்­பாட்டம் செய்­த­வர்­களின் வீடு­க­ளுக்கு தேடிச் சென்று கண்ணீர் புகைக்­குண்டுத் தாக்­கு­தல்­களும், தடி­ய­டி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. வீடு தேடிச் சென்று கைது­களும் இடம்­பெற்­றுள்­ளன. கொழும்­பி­லி­ருந்து அழைத்­து­வ­ரப்­பட்­ட­வர்­களே இந்தத் தாக்­கு­தல்­களில் ஈடு­பட்­டுள்­ளனர். அப்­பாவி பொது­மக்கள் பழி­வாங்­கப்­ப­டு­கின்­றனர் என்றார்.

அந்த சந்தர்பத்த்தில் ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய

விமல் வீர­வன்­ஸ

அம்­பாந்­தோட்டை துறை­முகம் அமைக்­கப்­பட்­ட­போது அதனை நீச்சல் தடாகம் என விமர்­சித்­த­வர்கள் தற்­பொ­ழுது அங்கு அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர். அம்­பாந்­தோட்­டையில் 15 ஆயிரம் ஏக்கர் சீனா­வுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னூ­டாக அம்­பாந்­தோட்டை சீனாவின் கொல­னி­யாக மாறி­யுள்­ளது எனச் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்போது விசேட பிர­தி­நி­தி­க­ளுக்­கான பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­படும் வகையில் நடந்து கொண்­ட­மை­யா­லேயே பொலிஸார் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

2014ஆம் ஆண்டு அம்­பாந்­தோட்­டைக்கு நாம் சென்­றி­ருந்­த­போது அங்­கி­ருந்த அடி­யாட்­களே எம்­மீது தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர். இவ்­வா­றான நிலையில் கொழும்­பி­லி­ருந்து அடி­யாட்கள் எவ­ரையும் அழைத்துச் செல்­ல­வேண்­டிய தேவை எமக்கு இல்லை. அம்­பாந்­தோட்­டையில் ஏற்­க­னவே அடி­யாட்கள் இருக்­கின்­றனர் என்று அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரிவித்தார்.

கூட்டு எதி­ர­ணியின் காட்டம்

இதன்­போது கூட்டு எதி­ர­ணி­யினர் கடு­மை­யான தமது எதிர்ப்பை வெ ளியிட்­டனர். ஓலி­வாங்கி முடக்­கப்­ப­டாத நிலையில் அவர்கள் எழுந்து ஆளும் தரப்பை நோக்கி கைகளால் சைகை­களைச் செய்து வார்த்தைப் பிர­யோ­கங்­களை செய்­தனர்.

இதன்போது எமக்கு யாரையும் தாக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாம் யாரையும் தாக்­கவும் இல்லை என்று அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க குறிப்பிட்டார்.

 ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது திட்­ட­மிட்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­வது பச்சைப் பொய். இறு­தி­நேரம் வரை பொலிஸார் அமை­தி­காத்­தனர். ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்­களே திட்­ட­மிட்டு தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

வீடியோ காட்­சி­களை வெளியி­டவும்

அம்­பாந்­தோட்­டையில் என்ன நடை­பெற்­றது என்­பது ட்ரோன் கம­ரா­மூலம் பதி­வு­செய்­யப்­பட்ட காட்­சிகள் மூலம் அறிந்­து­கொள்ள முடியும். முடிந்தால் குறித்த ஒளிப்பதி­வு­களை வெளியி­டு­மாறு சவால் விடுப்­ப­தாக டளஸ் அழகப்பெரும எம்பி தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மஹிந்த அமரவீர

அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம் குறித்து சரியான தகவல்களை அரசாங்கம் வழங்கவில்லையென்ற தவறு உள்ளது. ஒவ்வொரு அமைச்சர் ஒவ்வொரு கருத்தைக் கூறியதால் மக்கள் குழம்பிபப்போயிருப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக்கூறி தனது உரையை தொடர முற்பட்டார்.

எதிரணியினர் குழப்பினர்

இதன்போது கூட்டு எதிரணியினர் அவருடைய உரைய குழப்பும் வகையில் செயற்பட்டனர் இதனால் அமைச்சர் மகிந்த அமரவீர கோபமடைந்தார்.

அமைச்சர் மகிந்த அமரவீரவின் எச்சரிக்கை

இவ்விவகாரத்தை ஒழுங்கான முறையில் பேசித் தீர்த்துக் கொள்வோம். தேவையற்ற முறையில் வாயைக்கிளறினால் பல விடயங்களைக் கூறவேண்டி வந்துவிடும் என்று மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதனையடுத்த குறித்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு சபாநாயகர் கருஜெயசூரிய கூறியதோடு கூட்டு எதிரணியினருக்கு அமைதியைப் பேணுமாறும் எச்சரிக்கையும் விடுத்தார்.

எனினும் கூட்டு எதிரணியினர் அமைதியை பேணாது எழுந்து நின்று ஆளும் தரப்பினருக்கு எதிர்ப்புக்களை வெளியிட்டவாறு இருந்தனர். இதனால் சபையில் அமைதியின்மை நீடித்ததோடு குழப்பகளுக்கு சபையும் ஒத்தி வைக்கப்பட்டது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-10#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.