Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அழகு ராணிப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அழகு ராணிப் போட்டி

இலங்கையின் பிரபல்யமான பிரீமியர் சிலோன்  நிறுவனமும், மிஸ் இங்கிலாந்து என்ற பிரித்தானிய நிறுவனமும் இணைந்து     இல ங்கையில் அழகு ராணிப் போட்டியை கூட்டாக நடாத்த  கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.  வருடா வருடம் மிஸ் பிரீமியர் இலங்கையர் தெரிவுக்கான போட்டிகளை  பிரிட்டனின் பிரபல்யமான அழகு நிலைய நிறுவனத்துடன் இணைந்து நடா த்தப் போவதாக பிரிமீயர் சிலோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
ஹோட்டல்கள், உடற்பயிற்சி நிலையங்கள், கரவன்ஸ் எனப்படும் நகரும்  வாகன ஹோட்டல்கள், உல்லாசப் படகுகள் போன்வற்றை வைத்துக்கொண்டு, விடுதலை நாட்களுக்கான திட்ட ஒழுங்குகளை மேற்கொள்வதில்  இலங்கை நிறுவனம் பிரபல்யமாக உள்ளது. 
 
இதன் தலைவரான டாக்டர் திஸ்ஸ ஜயவீர இதுபற்றிக் குறிப்பிடுகையில்,  அழகு ராணிப் போட்டிகள் சர்வதேச தரத்திற்கு அமைய ஒழுங்கு செய்யப்படுவதோடு, மாவட்டரீதியாகவும் இடம்பெற்று, உல்லாசப் பயணத்திற்கு இலங்கை எத்தகைய தன்மை கொண்டது என்பது வெளிப்படுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார். 
 
பிரிட்டனில் இடம்பெறும் போட்டிகளில் வெற்றி பெறுவோர் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள். அதே போல இலங்கையில் தெரி வாகும் அழகிகள் பிரித்தானிய மேடைகளில்  நிறுத்தப்படுவார்கள். இதன் மூலம் இருநாட்டுக் கலாச்சாரங்களும் பகிரப்பட வாய்ப்பு கள் உருவாகுமென இவர் மேலும் குறிப்பிட்டார். ஏற்கனவே மிஸ் இங்கிலாந்து அழகியாக தெரிவாகிய ஒருவர் முதற்தடவையாக இலங்கையில் இங்கிலாந்து அழகிகளுடன், இலங்கை அழகிகளை இணைத்து, பெரிய அளவில் இலங்கையில் போட்டிகளை நடா த்தவுள்ளார்.
 
இங்கிலாந்தின் இறுதித் தேர்வில் பொறுக்கப்படும் 40 அழகிகள் இலங்கை வந்து, இலங்கையில் தெரிவு செய்யப்படும் 40 அழகி களுடன் நேருக்கு நேர் களத்தில் குதிக்க இருக்கின்றார்கள்.கொழும்புக்கு வெளியே இறுதித் தேர்வு நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளது.

http://www.onlineuthayan.com/news/22443

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.