Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவர் அஞ்சாதவர்: மனைவி சசிகலா பேட்டி

Featured Replies

அவர் அஞ்சாதவர்: மனைவி சசிகலா பேட்டி
 
 

article_1484108155-aa.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு, வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய மகள் பிரவீனா ரவிராஜ், மனைவி சசிகலா ரவிராஜ் ஆகிய இருவரும் சுமார் பத்துவருடங்களுக்குப் பின்னர், ஊடகத்துக்கு செவ்வியளித்துள்ளனர். இந்தியாவிலிருந்து  வெளியாகும் த ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளருடன் பேசுகின்றனர்.

கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளைப் பார்க்கிறார்.

அவர்கள் பேசுகின்றனர்.

கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளை பார்க்கிறார். பத்திரிகைகளில் “சகலரும் விடுதலை” தலைப்புச் செய்திகளாக கிடந்தன. அந்த செய்தி தலைப்புகளை கண்டு அவள் கதறிவிட்டாள்.

2006இல் கொலை செய்யப்பட்ட தமிழ் எம்.பியும் தனது தந்தையுமான நடராஜா ரவிராஜின் படத்தின் பக்கத்தில், அந்த மூன்று கடற்படை உளவு அதிகாரிகள் தமது குடும்பத்துடன் தமது விடுதலையைக் கொண்டாடும் படங்கள். இது எங்கோ இடிக்கிறது, 25 வயது மகள் தனது மனதில் கூறிக்கொண்டார்.  

கொழும்பின் சுறுசுறுப்பான வீதியில் நடராஜா ரவிராஜாவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் 2006 நவம்பர் 10ஆம் திகதியன்று சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று கடற்படையினர் உட்பட ஐவரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. சந்தேகநபர்களைச் சுட்டிக்காட்டிய கண்கண்ட சாட்சியங்கள் போதியதாக இல்லையென, முழுவதும் சிங்களவர்களான ஜூரிகள் கூறினர்.

பயமும் நம்பிக்கையீனமும்

பத்து வருடங்களாக, ரவிராஜ் குடும்பம், அவரைக் கொன்றவர்களைப் பிடிப்பதையிட்டு ஒரு தடவைகூட யோசிக்கவில்லை.

“நாம், பயந்து போய் இருந்தோம் எம்மால் யாரையும் நம்ப முடியவில்லை” என, ரவிராஜ் மனைவி சசிகலா ரவிராஜ் கூறினார். யுத்தகளத்துக்கு வெளியில் இன்னொரு யுத்தம் நடந்துக்கொண்டிருந்தது.

கண்காணித்துப் பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி, அன்றைய அரசாங்கம், வெள்ளை வான் கடத்தல் மற்றும் தேர்ந்தெடுத்த ஆளை கொலை செய்தல் என்பவற்றை செய்துக் கொண்டிருந்தது.

நான் இந்தப் பிரச்சினைகளைக் கிளற விரும்பவில்லை. நான் என்பாட்டிலேயே இருக்க விரும்புகிறேன் என, சசிகலா ரவிராஜ் கூறினார். கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் கணித ஆசிரியரான அவர், தனது பிள்ளைகளின் கல்வியிலேயே மனமூன்றியிருந்தார். மகளான பிரவீனா, சட்டம் படிக்க, மகனான சகோதரன் வைத்தியம் படித்தான். தனது கணவன் சுடப்பட்ட இடத்திலிருந்து 200 மீற்றரிலும் குறைந்த தூரத்திலிருந்து வீட்டுக்கு வெளியில் போவதில்லை என, அவர் தீர்மானித்திருந்தார்.  முதலாவது ஊடக நேர்க்காணல்

இவர்கள் வீட்டுக்கு செல்லும் குறுகிய பாதையில் நன்கு பராமரிக்கப்பட்ட கொடிகள் காணப்பட்டன. திருமதி ரவிராஜ் வரவேற்பறையில் குறைந்த வெளிச்சத்தில் அமர்ந்திருந்தார்.

தனது கணவன் இறந்து 10 வருடத்தின் பின்னர், இவரது முதலாவது ஊடக நேர்காணலுக்கான திருமதி ரவிராஜ்,

தி இந்துவுடன் நீண்டநேரம் பேசினார்.

“மீன் பொரியல் வாசத்தை பொருட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறேன்” என அவர் யோசனையோடு கூறினார்.

நிறைந்த சிரிப்புடன் தாடி வைத்திருந்த ரவிராஜின் படம் ஒரு மூலையில் இருந்தது.

இந்த மாற்றம் இலகுவாக இருக்கவில்லை. அதாவது சோகத்தோடு வாழ பழகிவிட்ட நிலையிலிருந்து திடீரென நீதி கிடைக்கும் போல இருந்த சூழலுக்கு மாறவில்லை. ரவிராஜ் குடும்பத்துக்கு இலகுவாக இருக்கவில்லை, அதுவும் பத்து வருடங்களாயின.

ராஜபக்ஷ அரசியலிருந்து விலகிய மைத்திரியும் அவரைச் சேர்ந்தவர்களும் ஜனவரி 2015 தேர்தலின்போது நல்லாட்சி வருமென திடீர் பிரசாரம் செய்தனர். அவர்கள், பழைய அல்லது கிடப்பில் கிடக்கும் வழக்குகளை மீள எடுப்பதாக உறுதியளித்தனர். இதன் மூலம் நீதி கிடைக்கும் என்றனர்.

இதன் மூலம் நீதி வழங்கப்படும் என்றனர். “நான் அவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களித்தேன்” தேர்தல் முடிவுகள் வந்தபோது பிரவீனா தனது தந்தை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜுதீன் ஆகியோரின் படங்களைச் சேர்த்து ஒரு தொகுதியாக்கினாள். இவர்கள், 2006 - 2012 காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் “இறுதியில் இவர்களோடு நீதி கிடைக்கும் என நம்பினேன்” ஆனால், இப்போது தீர்ப்பு வந்துவிட்டது எனது தந்தையின் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் என நம்பப்பட்டவர்கள் சுதந்திரமாகத் திரிவதைக் காண, நான் முதுகில் குத்தப்பட்டதைப் போல உணர்கிறேன் என பிரவீனா கூறினார்.

ரவிராஜை கொன்றவர்கள் யார் என்பதில் சந்தேகமில்லை. வீதியில் போகும் ஒருவரைக் கேட்டாலும் அவர் சொல்வாரென, நறுக்கென திருமதி ரவிராஜ் கூறினார். விசாரணையின் போது இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபர் திணைக்களம், அரச உளவு சேவை, இக்கொலையில் சம்மந்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி சாட்சியம் அளித்தனர்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர், எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் தளபதி கருணா அம்மானுக்கு இந்த கொலைக்காக கணிசமான ஒரு தொகை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ கொடுத்தார் என, அரசதரப்பு சாட்சியாக மாறிய ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கூறினார் . ரவிராஜின் கொலை முற்றுமுழுதாக எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது சமமான அரசியல், அதிகாரவர்க்கத்தினருக்கு சகிக்க முடியாததாக இருப்பினும் ஏனையவர்கள் அவர் தமிழர் பிரச்சினைகளை பெரும்பான்மை சிங்களவர்களுக்கு விளக்குவதில் ஈடுபட்டிருந்தார். அவர் அரை குறைச் சிங்களத்தில் வெட்கப்படாமல் தொலைக்காட்சியில் பேசினார். இதன் மூலம் பெரும்பான்மையினரை அவர்கள் மொழியூடாகவே அவரைத் தெரியும். இதனால் அவர் சிங்களவர்களாலும் விரும்பப்பட்டார்.

“அவருக்கு பயம் தெரியாது” என மகள் கூறினார். அவர் தொலைபேசி மூலமான மிரட்டல்களுக்கு பழகிப்போய்விட்டார்” என மகள் கூறினார். இந்த கொலை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் ரவிராஜின் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த முனையிலிருந்து, “வெள்ளை சாரி உடுக்கத் தயாரா? கணவனை எச்சரிக்கை செய்” என்ற குரலை தனது மனதில் அவர் தெளிவாக பதித்துள்ளார். அவர் உடனே பிள்ளைகளை அறைக்குக் கூட்டிச் சென்று “அப்பாவுக்கோ எனக்கோ ஏதும் நடந்தால் அழைக்கும்படி டயரியில் இருந்த சில தொலைபேசி இலக்கங்களை காட்டினார்.

2006 நவம்பர் 10, காலை, பிரவீனா, 10ஆம் வகுப்பில் இருக்க உடற்கல்வி ஆசிரியர் வந்து, பிரிவினாவை, அதிபர் அறைக்குக் கூட்டிச் சென்றார். “அதிபர் கையில் வாயைப் பொத்தியபடி தொலைபேசிக்கு அருகில் நின்றார். ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என நான் தெரிந்துகொண்டேன்”

10 வருடங்களாகியும் பிரவீனா தனது தந்தை பற்றி ஒரு சிலரிடம் மட்டுமே பேசியுள்ளார். “எனக்கு எவருடைய அனுதாபமும் தேவையில்லை. மரணச்சடங்கின் போது அம்மா ஒரு தரம் மட்டுமே அழுதார். அவர்அவ்வளவு உறுதியானவர். அதையே நானும் கடைப்பிடித்தேன்”

“நாம் இந்த வீட்டில் இவ்வாறு பேசுவதில்லை” எனக் கூறி ஆச்சரியப்பட்டவர் போல இருந்த அவரது தாயைத் திரும்பிப்பார்த்தார். அவளுடைய தம்பியும் நடந்ததைப் பற்றிப் பேசுவதில்லை. ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு சட்டப் பட்டதாரியாக திரும்பிய பின்னர் பிரவீனா, சட்டத்துறைக்குப் போகத் தயங்கினாள். “எவ்வித தார்மீக நெறியும் இல்லாத சட்டத்துறைக்குப் போக விரும்பவில்லை” என அவர் கூறினார். புதிய அரசியல் சூழல் அவளுக்கு சட்ட முறையில் சிறிது நம்பிக்கையூட்ட அவள் சந்தைப்படுத்தல் துறையைத் தேர்வு செய்தார்.

மாபெரும் ஏமாற்றம்

ரவிராஜின் மனையின் சட்டவுரைஞர், கொழும்பு மேல் நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வர்.

“எனது கணவனை கொன்றவர்கள் நீதி முன் கொண்டுவரப்படுவர் என நம்பி நான் இதை செய்யவில்லை. இந்தத் தீர்ப்பின் மீதான எனது ஏமாற்றத்தை வெளிக்காட்டவே இது”

ஒரு நீதியான முடிவையிட்டு உறுதியில்லாதவிடத்து அரசாங்கம் இந்த வழக்கைத் திரும்ப எடுத்திருக்கத் தேவையில்லை. ஏன் அவர்கள் எடுத்தார்கள்? என அவர் தனது குரலை உயர்த்திக் கேட்டார்.

தனது விரக்தி, கோபம் என்பவற்றை வெளிக்காட்டிய பிரவீனா, “வழக்கை எடுத்த நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். இதையிட்டு சரியாக ஏதும் செய்ய வேண்டும்”

நான், பட்டம் பெறுவதைக் காண அவரில்லை. இவ்வளவு காலமும் நான் எங்காவது சென்று காலதாமதமானால் என்னைக் கூட்டி வரவும் அவரில்லை. இதைப் பயங்கரமாக உணர்கின்றேன் என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/189621/அவர-அஞ-ச-தவர-மன-வ-சச-கல-ப-ட-ட-#sthash.jhtfbK4e.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.