Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர்

Featured Replies

 
தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம்
 

தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் செஞ்­சூ­ரியன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

21907Untitled-5.jpg

இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸ் - தென் ஆபி­ரிக்­க­ அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன்


 

இரண்டு அணி­களும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளை­யா­டி­யுள்ள 6 சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­களில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபி­ரிக்கா முன்­னி­லையில் இருக்­கின்­றது.

 

இதே­வேளை தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெள்­ளை­ய­டிப்புச் செய்­யப்­பட்ட இலங்கை, இரு­பது 20 தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் இறங்­க­வுள்­ளது.

 

தென் ஆபி­ரிக்க வேகப்­பந்­து­ வீச்­சா­ளர்­களை எதிர்­கொள்­வ­தற்கு இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் முதலில் மனதை திடப்­ப­டுத்­திக்­கொள்­வது அவ­சியம் என இலங்கை கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால  தெரி­வித்தார்.

 

தென் ஆபி­ரிக்­கா­வு­டனான டெஸ்ட் தொடர் தோல்­வியை அடுத்து அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸுடன் ஸ்கைப்  கலந்­து­ரை­யாடல் மூலம் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­ட­தா­கவும் அடுத்­து­வரும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் தொடர்­களில் இலங்கை அணியை பிர­கா­சிக்கச் செய்ய கடும் முயற்சி எடுக்­கப்­படும் என ஏஞ்­சலோ மெத்யூஸ் உறுதி வழங்­கி­ய­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

 

இன்­றைய போட்­டியில் தனுஷ்க குண­தி­லக்­க­வுடன் நிரோஷன் டிக்­வெல்ல ஆரம்ப வீர­ராக விளை­யா­டுவார் என எதிர்­பா­ர்க்­கப்­ப­டு­கின்­றது. இவர்­களைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், ஏஞ்­சலோ மெத்யூஸ், தனஞ்­செய டி சில்வா, சச்தித் பத்­தி­ரன, சீக்­குகே பிர­சன்ன அல்­லது லக்ஷான் சந்­தகான், நுவன் குல­சே­கர, சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இடம்­பெ­றுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

பதி­னோ­றா­வது வீர­ராக நுவன் பிரதீப்,  தி­க்ஷிலா டி சில்வா, இசுரு உதான ஆகிய மூவரில் ஒருவர் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

 

தென் ஆபி­ரிக்­காவைப் பொறுத்­த­ மட்டில் 6 புதிய வீரர்­க­ளுடன் முத­லா­வது போட்­டியை எதிர்­கொள்­ள­வுள்­ளது. எனவே இப் போட்டி தென் ஆபி­ரிக்­கா­வுக்கு சவால் மிக்­க­தாக அமையும் என கருதப்படுகின்றது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21907#sthash.UXQjYIkV.dpuf

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
South Africa 126/5 (10/10 ov)
Sri Lanka 36/0 (2.3/10 ov, target 127)
Sri Lanka require another 91 runs with 10 wickets and 45 balls remaining
  • கருத்துக்கள உறவுகள்

SL 74/3(6.2)

  • தொடங்கியவர்

மில்லர் அதிரடி ; இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா (வீடியோ இணைப்பு)

 

 

இலங்கை அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே மழைக்குறுக்கிட்டதன் காரணத்தால் அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

C2qktneW8AIQuE3.jpg

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் டேவிட் மில்லர் 18 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

258091.jpg

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில்  6 விக்கட்டுகளை இழந்து 107  ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் டிக்வெல்ல 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

258090.jpg

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாபிரிக்க அணி முன்னிலை வகிக்கின்றது.

C2qktiSXUAIjoOW.jpg

http://www.virakesari.lk/article/15636

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரண்டாவது இருபதுக்கு20 ;தொடரை தக்கவைத்துக் கொள்ளுமா? இலங்கை

 

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான நடைபெறும் மூன்று இருபதுக்கு20  போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது இருபதுக்கு20 போட்டி இன்று ஜோகன்ஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.

முதலாவது இருபதுக்கு20 போட்டியின் போது மழை குறுக்கிட்டமையால் பந்து ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு நடந்த போட்டியில்  தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் தொடரை தக்கவைத்துக் கொள்ள இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இன்று களம் இறங்குகிறது.

http://www.virakesari.lk/article/15676

  • தொடங்கியவர்
South Africa 113 (19.3/20 ov)
Sri Lanka 119/7 (19.4/20 ov)
Sri Lanka won by 3 wickets (with 2 balls remaining)
ஏஞ்சலோ மெத்யூஸ் அதிரடி: தென் ஆபிரிக்காவுடனான இருபது20 போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றி
2017-01-22 21:28:35

தென் ஆபிரிக்க அணியுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களால் வென்றது.

 

21933lanka-600.jpg


தென் ஆபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில்  இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 19.3 ஓவர்களில்  113 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் ஏஞ்சலே மெத்யூஸ் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21933#sthash.gCAjbKoB.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

258228.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாடி 19.3 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அறிமுகவீரரான சந்தகன் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் உதான 2.3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கட்டுகளை பெற்றுக்கொண்டனர். 

258230.jpg

118 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்ப முதலே ஆட்டம் காணவைத்தனர்.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மெத்­தியூஸ் 50 பந்துகளில் 54 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணியினை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

258231.jpg

போட்டியின் ஆட்டநாயனாக மெத்­தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.மூன்று இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என இலங்கை அணி சமநிலை செய்துள்ளது.

http://www.virakesari.lk/article/15684

  • தொடங்கியவர்

நாடு திரும்புகிறார் அஞ்சலோ மெத்தியூஸ்

 

 

தென்னாபிரிக்க அணிக்கிடையில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு - 20 தொடரின் பாதியில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

mathews-m1.jpg

மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் தனது குடும்பத்துடன் இருப்பதற்கான தேவையுள்ளதாக கோரிக்கை விடுத்து அனுப்பிவைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. 

இதையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மிகமுக்கியமானதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் அணித் தலைவராக டினேஷ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்ககெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் இன்று நாடு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அவர்கள் இருவரும் காயத்தில் இருந்து குணமாக ஓய்வு தேவையுள்ளதால் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15702

  • தொடங்கியவர்
South Africa 169/5 (20/20 ov)
Sri Lanka 170/5 (19.5/20 ov)
Match over

Sri Lanka won by 5 wickets (with 1 ball remaining)

Sri Lanka win by five wickets and take the series!

  • தொடங்கியவர்
தென் ஆபிரிக்காவுடனான இருபது20 இலங்கை வென்றது
2017-01-26 01:06:47

தென் ஆபிரிக்காவுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இதன்  மூலம் இத்தொடரின் வெற்றியையும் 2:1 விகிதத்தில் இலங்கை அணி தனதாக்கியது.

 

21998lanka-600.jpg


கேப்டவுன் நகரில் புதன் இரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  19.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.


நிரோஷன் டிக்வெல்ல 51 பந்துகளில் 68 ஓட்டங்களையும் சீக்குகே பிரசன்ன 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் குவித்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21998#sthash.hfOsEWXU.dpuf
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்க மண்ணில் சாதனைகள் படைத்த இலங்கை

 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 170 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்றுள்ளது.

sadd.jpg

இந்நிலையில் இலங்கை அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற அதிகூடிய ஓட்டங்களாக 170 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு நியுஸிலாந்து அணிக்கெதிராக 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையே அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது.

இதேவேளை தென்னாபிரிக்க மண்ணில் முதற்தடவையாக  தொடரை கைப்பற்றியும் இலங்கை அணி சாதனைப்படைத்துள்ளது.

http://www.virakesari.lk/article/15878

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.