Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரின் எச்சரிக்கைக்கு மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Featured Replies

இராணுவத்தினர் எச்சரிக்கைக்கு மத்தியில், ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் கோப்பாப்புலவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்றுதிரண்ட மக்கள் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,

கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் எங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்லை. மாறாக வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகள் தான் விடுவிக்கப்படும் பகுதியில் உள்ளன.  யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் சில உறுதிக் காணிகள் கேப்பாப்புலவுப் பகுதியில் உள்ளதோடு அவையும் விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது என கூறினார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றைய தினம் வரவுள்ள ஜனாதிபதி முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்ற உலங்குவானூர்தி இடைநடுவில் கொழும்புக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/133072?ref=morenews

  • கருத்துக்கள உறவுகள்

என் இனமே உங்கள் வெற்றிக்காக வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்

அச்சுறுத்திய இராணுவம்...! அம்பலமானது உண்மை...!
ஜனாதிபதியின் விஜயம் ரத்தானதில் மர்மம்

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர்கள் என்றுமே தள்ளி வைக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். காலம் காலமாக இலங்கையை ஆட்சி செய்தவர்கள் தமிழர்களை புறக்கணித்தே வந்துள்ளனர்.இதனை எதிர்த்து இலங்கையில் இடம்பெற்ற போராட்டம் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. பல ஆயிரம் உயிர்கள், பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருந்தன.

இத்தனை இழப்புகளையும் தாண்டி தமிழ் மக்கள் தமக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்த்துள்ளனர். எனினும், அவர்களுக்கு ஏமாற்றம் என்ற ஒன்று மட்டுமே எச்சியுள்ளது.

2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்றே கூறவேண்டும்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமை, தமிழர் பிரதேசங்களில் உள்ள காணிகளை தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளமை இவற்றில் குறிப்பிடபட வேண்டியவை. அத்துடன், அத்து மீறிய சிங்கள குடியேற்றம், திட்டமிட்ட இனவழிப்பு, திடீர் கைது நடவடிக்கைகள் என தொடர்ந்தும் தமிழர்கள் தண்டிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வருகின்றனர்.

இவ்வாறான தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதா என எண்ணியிருந்த தமிழ் மக்கள் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள். எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு தீர்வு கிடைத்துள்ள என்றால் அது கேள்விக்குரியே.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழர்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் பலரின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்றே நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவிருந்தார். எனினும், அவரின் வியஜம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த தமிழ் மக்களுக்கு பாரிய ஏமாற்றமாவே அமைந்தது.

குறிப்பாக ஜனாதிபதியின் விஜயம் இரத்து செய்யப்பட்டமைக்கு சீரற்ற காலநிலையே காரணம் என கூறப்பட்டது. இருந்து ஜனாதிபதியின் பயணம் இரத்து செய்யப்பட்மையில் பல மரமங்கள் இருப்பதாக பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயத்தின் போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக் கூடாது, ஜனாதிபதியிடன் முறைப்பாடுகள் எதுவும் தெரிவிக்க கூடாது என அந்த பகுதி மக்களை இராணுவத்தினர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உறுதிப்படுத்தியிருந்தார்.

இராணுவ பிரசன்னம், காணி விடுவிப்பு, உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் பேசக் கூடாது என இராணுவத்தினர் அச்சுறுதியிருப்பதாக பாராளுமன்றின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்தால் ஜனாதிபதியின் விஜயம் இரத்து செய்யப்பட்டதில் பல மர்மங்கள் இருப்பது புலனாகின்றது.

அண்மைய நாட்களில் ஜனாதிபதியிடம் தமிழ் மக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளின் சில விடயங்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார்.

சிங்கள மக்களின் எதிர்ப்புகளையும் தாண்டி தமிழ் மக்களின் சில விடயங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறை செலுத்தியுள்ளார்.

குறிப்பாக காணிவிடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் அவர் கவனம் செலுத்தியுள்ளார். கடந்த கால தலைவர்களுடன் ஒப்பிடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் விடயங்களில் சற்று கரிசணையோடு செயற்பட்டு வருகின்றார்.

எனினும், இதனை இராணுவத்தினர் விரும்பவில்லை என ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயத்தை இராணுவத்தினர் விரும்பவில்லை என சிலர் கருதுகின்றனர்.

ஏனெனில், சீரற்ற காலநிலை வான் வழி போக்குவரத்துக்கு தடையாக இருந்த போதிலும், கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கு தரைவழியாக ஜனாதிபதி சென்றிருக்கலாம் என சமூக ஆர்வாலர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

எனினும், இதனை விரும்பாக காரணத்தினாலேயே காலநிலையை காரணம் காட்டி ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பல மர்மங்கள் இருப்பதாகவும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/special/01/133297

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.