Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோப்பூர் பிரதேச சபை கோரிக்கை நியாயமானதா?

Featured Replies

தோப்பூர் பிரதேச சபை கோரிக்கை நியாயமானதா?

 

புல்மோட்டையில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்கும் போது, இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாற்பட்ட எல்லைகளைக் கொண்ட பகுதியாகப் பிரித்து பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென்ற சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அவ்வாறு செய்யப்படுமாயின் இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாலுள்ள தமிழ் கிராமங்களும் அது போல் மறு எல்லைக்கு உட்பட்ட தமிழ் கிராமங்களும் பாதிப்படைவதுடன் சிறுபான்மைத் தன்மை பெற சூழ்நிலை உருவாகி விடுமென்ற கருத்தை தமிழ்த் தரப்பினர் முன்வைப்பதாகவும் தெரிய வருகிறது.

தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் கூடிக் குலாவி வாழும் மூதூர் பிர­தே­சத்­தி­லுள்ள பிரதேச சபையை உடைத்து தோப்பூர் என்னும் பெய­ரு­டைய இன்­னு­மொரு இன­மு­றை­யி­லான பிர­தேச சபையை உரு­வாக்­கு­வது தமிழ் மக்­களை நேர­டி­யா­கவே பாதிக்கும் முயற்­சி­யென தமிழ் மக்கள் கவலை கொள்ளும் நிலை­யொன்று மூதூர் பிர­தே­சத்தில் தற்­பொ­ழுது உரு­வா­கி­யுள்­ளது.

தோப்­பூ­ருக்கு தனி­யான ஓர் பிர­தேச சபையை உரு­வாக்க வேண்­டு­மென்ற அப்­ப­குதி மக்­களின் கோரிக்­கை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் நிறை­வேற்றும் வண்­ணத்தில் சில அர­சியல் தலை­மை­களும் ஆளும் கட்சி செல்­வாக்­கா­ளர்­களும் முயற்சி செய்து வரு­வது தமிழ் மக்­களை இன்னும் இன்னும் ஓரங்­கட்டும் நட­வ­டிக்கை மாத்­தி­ர­மின்றி இன­வு­ற­வு­க­ளுக்குள் விரி­சலை உண்டு பண்ணும் செய­லென தமிழ் தலை­மைகள் தமது கவ­லை­களைத் தெரி­வித்து வரு­கின்­றன.

தோப்­பூரில் ஓர் புதி­தான பிர­தேச சபையை உரு­வாக்கும் திட்­ட­மாக முஸ்லிம் கிரா­மங்­க­ளான இக்பால் நகர், அல்லை நகர், மேற்கு அல்லை நகர், கிழக்கு தோப்பூர் ஆசாத் நகர், ஜின்னா நகர், பாலத்­தோப்பூர் ஆகிய ஏழு கிரா­மங்­க­ளுடன் தமிழ் கிரா­மங்­க­ளான கிளி­வெட்டி, மேன்­காமம் கங்­கு­வேலி, பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு, பாலத்­தடிச் சேனை ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரி­வு­க­ளையும் ஒன்­றி­ணைத்து 12, கிராம சேவகர் பிரி­வு­களைக் கொண்ட தோப்பூர் பிர­தேச சபை­யொன்றை உரு­வாக்­கு­வதே மேற்­படி திட்­டத்தின் நோக்கம்.

ஏலவே மேற்­படி தமிழ் கிரா­மங்கள் மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தவை. இவற்றை மீண்டும் தோப்­பூ­ருக்­கென உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய பிர­தேச சபைக்­குள்ளும் தாம் சிறு­பான்­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளோம் என்ற கவலை கொண்­ட­வர்­க­ளாக, குறித்த தமிழ் கிரா­மங்­களைச் சேர்ந்­த­வர்கள் கவ­லையைத் தெரி­வித்­தனர்.

திரு­கோ­ண­ம­லையில் மாவட்ட அடிப்­ப­டையில் 11, பிர­தேச சபைகள் உள்ளூர் நிர்­வாக அல­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றன. திரு­கோ­ண­மலை, பட்­ட­ணமும் சூழலும், குச்சவெளி, வெருகல், மூதூர், கிண்­ணியா, கந்­தளாய், பத­வி­ஸ்ரீ­புர, மொற­வேவ, தம்­ப­ல­காமம், கோம­ரங்­க­ட­வல, சேரு­வில என 11 பிர­தேச சபைகள் காணப்­ப­டு­கின்­றன. இதே­வேளை 13, உள்­ளூ­ராட்சி அமைப்­புகள் காணப்­ப­டு­கி­றன. இவற்றில் சிங்­கள மக்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­வை­யாக ஐந்து பிர­தேச செய­ல­கங்கள் காணப்­ப­டு­கின்­றன அவை;

கந்­தளாய், மொற­வேவ, பத­வி­ஸ்ரீ­புர கோம­ரங்­க­ட­வல, சேரு­வில, முஸ்லிம் மக்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாக கிண்­ணியா, மூதூர், தம்­ப­ல­காமம், குச்­ச­வெளி ஆகி­யவை காணப்­பட திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழலும், வெருகல் ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் மாத்­தி­ரமே தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

இதில் மூதூர் பிர­தேச செய­லகம் 42 கிராம சேவ­கர்கள் பிரி­வு­களைக் கொண்­ட­தாக இருக்­கின்ற அதே­வேளை, இவற்றில் 22 பிரி­வுகள் தமிழ்ப் பிரி­வு­க­ளா­கவும் 20, முஸ்லிம் பிரி­வு­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்ற நிலையில் தமிழ் கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய நிலப்­ப­ரப்பு 68 வீதமும் முஸ்லிம் மக்கள் வாழும் நிலப்­ப­ரப்பு 32 வீத­மு­மாக இருக்­கின்­றது என மாவட்­டப்­ புள்ளி விப­ரங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன. தமிழ் மக்கள் வாழும் கிரா­மங்­க­ளாக சுமார் 58 கிரா­மங்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான பௌதீக மற்றும் கிராம அள­வியல் நிலை காணப்­படும் சூழ்­நி­லை­யில் தான் மூதூர், தோப்பூர் என்ற இரு பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உரு­வாக்கும் முயற்­சி­களை மேற்­கொள்ள விளையும் முயற்­சி­யா­னது மூதூர் பிர­தே­சத்தில் வாழும் தமிழ் மக்­களை வேத­னைப்­ப­டுத்தும் செயற்­றிட்­ட­மா­கவும் இரு சமூகத்திற்கும் இடையே உள்ள இடை­யு­ற­வு­களை இல்­லாது ஒழிக்கும் சதி முயற்­சி­யா­கவும் கரு­தப்­ப­டு­கி­றது. ஏலவே சுட்­டிக்­காட்­டி­யது போல் தோப்பூர் பிர­தேச செய­ல­க­மென்­பது 7 முஸ்லிம் கிரா­மங்­க­ளையும் 5 தமிழ் கிரா­மங்­க­ளையும் இணைத்து உரு­வாக்க எத்­த­ணிக்கும் ஒரு புது முயற்­சி­யாகும்.

மேற்­படி கிரா­மங்­களை உள்­ள­டக்கி உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளுக்கு அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்கும் 12 கிராம சேவகர் பிரி­வு­க­ளிலும் பாலத்­தோப்பூர் எனும் கிராம சேவகர் பிரி­வா­னது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து வாழும் இரட்­டை­யி­னத் ­தன்மை கொண்ட கிராமமாக அது காணப்­ப­டு­வது சுட்­டிக் ­காட்­டப்­பட வேண்­டிய விட­ய­மாகும். இதே­ போ­லவே பாலத்­த­டி­சேனை என்ற கிராம சேவகர் பிரி­வு தமிழ், முஸ்லிம் சமூ­கத்­தவர் சமத் ­தன்­மை­யுடன் வாழும் கிரா­ம­மாகும்.

இவற்றை புள்ளி விபர அடிப்­ப­டையில் கணித்துப் பார்ப்­பது விட­யத்தை எளி­தாக விளங்கிக் கொள்ள உத­வி­யாக இருக்கும்.மேலே­யுள்ள புள்ளி விபர அட்­ட­வ­ணை­யின்­ படி பார்ப்பின் 7 கிரா­மங்கள் முஸ்லிம் கிரா­ம­மாக அடை­யாளம் காணப்­பட்­ட­போதும் ஆசாத் நகர், ஜின்னா நகர் மற்றும் பாலத்­தோப்பூர் கிராம சேவகர் கிரா­மங்­க­ளுக்குள் தமிழ் மக்­களும் ஒன்று சேர்ந்து வாழ்­வதைக் காணக்­ கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இதே ­போன்று தோப்பூர் செய­லாளர் பிரி­வுக்குள் சேர்க்­கப்­பட வேண்­டு­மென்ற தமிழ் கிரா­மங்­களின் சனத்தொகை கணக்­கெ­டுப்பைப் பார்ப்­போ­மாயின் அது அட்­டவ­ணையில் பின்­வ­ரு­மாறு காணப்­ப­டு­கி­றது.கிளி­வெட்டி, மேன்­காமம், கங்கு வேலி, பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு, பாலத்­த­டி­சேனை ஆகிய ஐந்து கிரா­மங்­களும் முற்று முழு­தாக தமிழ்க் குடிகள் வாழு­கின்ற பாரம்­ப­ரிய கிரா­மங்­க­ளாகும்.

இதே­வேளை, மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் கிரா­மங்­க­ளான கட்டை பறிச்சான், கடற்­க­ரைச்­சேனை, கூனித்தீவு நவ­ரட்­ண­புரம் சம்பூர், மல்­லி­கைத்­தீவு, நல்லூர் பாட்­டா­ளி­புரம், பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு, பெருவெளி, இறால்­குழி போன்ற பாரிய கிரா­மங்கள் தமிழ் மக்­களை பெருந்­தொ­கை­யாகக் கொண்ட கிரா­மங்­க­ளாகும். இக் ­கி­ரா­மங்­களின் நிர்­வாக அலகு மட்­டங்­க­ளிலும் இங்கு வாழும் மக்கள் பல்­வேறு கஷ்­டங்­க­ளையும் சவால்­க­ளையும் அனு­ப­வித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

மூதூர் பிர­தே­சத்தில் தமிழ் பகு­தியை (கிரா­மங்­களை) உள்­ள­டக்­கிய கொட்­டி­யா­ரப்­பற்று என்னும் புதிய பிர­தேச செய­ல­கமும் பிர­தேச சபையும் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை கடந்த 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக மூதூர் வாழ் தமிழ் மக்கள் கோரி வந்­தி­ருக்­கி­றார்கள். இவ்­வி­த­மான முன்­னெ­டுப்­பு­களை முன்னாள் மூதூர் பிர­தேச சபை எதிர்க் ­கட்சித் தலைவர் மு.சௌந்­த­ர­ராஜா கடந்த 22 வரு­டங்­க­ளுக்கு முன்பே முன்­மொ­ழிந்து இக் ­கோ­ரிக்­கையை முன் வைத்து வந்­த­ போதும் இது பற்றி அரச தரப்­பி­னரோ அல்­லது தமிழ்த் தலை­மை­களோ கண்­டு­ கொள்­ளா­மலே இருந்­து­ விட்­டார்கள் என அவர் கருத்துத் தெரி­வித்­த­தையும் இங்கு சுட்­டி­காட்ட வேண்­டிய தேவை­யுள்­ளது.

இது தொடர்­பாக சௌந்­த­ர­ராஜன் அவர்கள் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில் தமிழ் மக்­களின் எதிர்­காலத் தேவை நலன் அபி­வி­ருத்தி கருதி, தமிழ் பிர­தே­சங்­களை (கிரா­மங்­களை) உள்­ள­டக்­கிய புதி­ய­தொரு பிர­தேச செய­லகப் பிரிவை உரு­வாக்கித் தரும்­படி எழுத்து மூலம் கோரிக்­கை­யொன்றை அண்­மையில் (25.1.2017) விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் அர­சியல் தலை­மை­க­ளுக்கு அப்பால் அரச அலு­வ­லர்­க­ளுடன் உரை­யா­டிய வேளையில் அவர்கள் கூறிய கருத்­துக்­க­ளையும் இங்கு பதிவு செய்­வது பொருத்­த­மாக இருக்கும். மூதூர் பிர­தே­சத்­தி­லுள்ள நிர்­வாக மட்டப் பிரச்­சி­னைகள் நீண்­ட­ கா­ல­மா­கவே இருந்து வரு­கின்ற பிரச்­சி­னை­க­ளாகும். அர­சியல் ரீதி­யாக பலம் பெற்ற ஒரு சமூ­கமும் பல­மற்ற இன்­னொரு சமூ­கமும் வாழ்ந்து வரு­கின்ற இப் ­பி­ர­தே­சத்தின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் அர­சி­யல்­வா­தி­களும் அரச உத்­தி­யோ­கத்­தர்கள் இணைந்து ஒரு பொதுத் தன்­மை­யான நியாய அளவு கொண்ட முடிவை எடுப்­பதன் மூலமே இப் ­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும்.

அவ்­வ­கையில் அணு­கு­வோ­மானால் மூதூர் போன்ற பிர­தேச செய­லகப் பிரிவை தேவை ­க­ருதி வகுத்து மூதூர், தோப்பூர், சம்பூர் என்ற மூன்று பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உரு­வாக்க முடியும். அவ்­வாறு உரு­வாக்­கப்­படும் போது இப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான தீர்­வொன்றைக் காண முடியும். இவ்­வாறு மூன்று பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உரு­வாக்­கும்­ போது மூதூரின் ஆதி­பத்­திய எல்­லைக்குள் உள்ள 42, கிரா­மங்­களில் தோப்பூர் 7, கிரா­மங்­களைக் கொண்­ட­தா­கவும் சம்பூர் 20, கிரா­மங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் மூதூர் 15 கிராம சேவகர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் உரு­வாக்க முடியும்.

இவ்­வா­றான வகுப்­பிலும் சில சங்­க­டங்கள் உண்டு. தோப்பூர் பிர­தேச செய­ல­கத்­துக்குள் குறித்த ஒரு தமிழ் கிரா­மமும் மூதூர் செய­லகப் பிரி­வுக்குள் இதே­ போன்­ற­தொரு நிலையும் உரு­வா­கலாம் என எதிர்வு கூறப்­ப­டு­கி­றது.

தோப்­பூரில் பிர­தேச செய­ல­க­மொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கை மிக நீண்­ட­ கா­ல­மா­கவே அப்­பி­ர­தே­சங்­களால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு விட­ய­மாகும். பல்­வேறு கார­ணங்கள் அவ­சி­யங்கள் கருதி இக் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன.

2007 ஆம் ஆண்டு முதல் இக் கோரிக்­கைகள் வலு­வ­டைந்து வந்­துள்­ளன என்­ப­தற்கு பல ஆவண ரீதி­யான ஆதா­ரங்­க­ளுண்டு. 2007 ஆம் ஆண்டு மூதூர் பிர­தேச செய­லாளர் (16.8.2007) திக­தி­யி­டப்­பட்ட கடிதம் மூலம் DS/ MU/ SO/ Thoppur/ 2007– 1 (இலக்கம் கொண்ட) உதவிச் செய­லா­ள­ருக்கு பணி­ப்பு­ரை­யொன்று விடுக்­கப்­பட்­டுள்­ளது.தோப்­பூரில் உப அலு­வ­லகம் ஒன்று செயற்­ப­டு­வ­தற்குத் தேவை­யான ஆளணிக் குழுவை விடு­வித்­துள்ளோம்.

இவ்­ உப அலு­வ­லகத்தை வாரத்தில் ஐந்து நாட்­களும் இயங்கச் செய்­வ­தோடு பிரதேச செய­லக உப அலு­வ­லகம், தோப்பூர் அடங்கும் கிராம உத்­தி­யோ­கத்­தர்கள் பிரி­வு­களாக அல்லை நகர் மேற்கு, அல்லை நகர் கிழக்கு, இக்பால் நகர், தோப்பூர், பாலத்­தோப்பூர், ஜின்னா நகர், ஆஷாத் நகர், பாலத்­த­டிச்­சேனை, மேன்­காமம், கங்­கு­வேலி, கிளி­வெட்டி, பார­தி­புரம் ஆகிய 12, கிரா­மங்­க­ளையும் இது உள்­ள­டக்­கி­ய­தாக செயற்­பட வேண்­டு­மென்றும் இதற்­கு­ரிய அனு­ம­தியை பொது நிர்­வாக உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு செய­லா­ளரின் HA/ DS/ 14/ 107 இலக்க 2007.02.06 ஆம் திக­தி கடி­தத்­தின் ­படி வழங்­கப்­ப­டு­கி­றது. அக்­கா­லத்தில் மூதூர் பிர­தேச செய­லாளர் பணிப்­பு­ரை­யொன்றை வழங்­கி­யி­ருக்­கிறார்.

இவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பார்க்­கின்­ற ­போது, தோப்­பூரில் பிர­தேச செய­ல­க­மொன்றை கோரிக்கை மிக நீண்­ட ­கா­ல­மா­கவே முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இதே­வேளை முன்­னைய காலத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்த பார­தி­புரம் என்னும் தமிழ் கிராமம் தற்­போ­தைய புதிய முன்­மொ­ழிவில் கைவி­டப்­பட்ட பள்ளிக்குடி­யி­ருப்பு எனும் தமிழ் கிராமம் புதிய உத்­தேச கோரிக்­கையில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

கிரா­மங்கள் புதிது புதி­தாக உரு­வா­கின்­ற ­போதும், சனத்­தொகைப் பெருக்கம் மற்றும் சமூ­க­வியல் மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­ற­ போதும், புதிய நிர்­வாக அல­குகள் அவ­சியம், இலகு தன்மை கருதி உரு­வாக்­கப்­ப­டு­வது சாதா­ரண ஒரு விட­ய­மாகும். உதா­ர­ண­மாக சோல்­பரி அர­சியல் யாப்பின் இலங்கைப் பாரா­ளு­மன்றம் 101, உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தாக (95+ 6) உரு­வாக்­கப்­பட்­டது. அது 1978 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பில் 225 ஆக உயர்த்­தப்­பட்­டது.தற்­போ­தைய புதிய அர­சியல் யாப்பில் 240, மேல் ஆக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனவே மாற்­றங்கள் நிக­ழு­கின்­ற­ போது அபி­வி­ருத்­திகள் அவ­சி­ய­மா­கி­றது, என்­பது பொது­வான உண்மை.

தோப்பூர் பிர­தேச செய­லகம் தொடர்­பாக அண்­மையில் நடந்த மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­ கூட்­டத்தில் கருத்துத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அப்­துல்லா மஃறூப், யதார்த்­த­மான கருத்­தொன்றைக் கூறி­யி­ருந்தார். தோப்பூர் பிர­தேச செய­லகம் போன்றே சம்­பூ­ருக்கும் ஒரு பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­ப­டு­வதன் மூலம் மூதூரில் மூன்று செய­ல­கங்­களை கொண்­டு­வர முடி­யு­மென்று தனது கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார். அவ்­வாறு மூன்­றாகப் பிரிக்கும் நிலையில் ஏலவே குறிப்­பிட்­ட­து போல் தோப்பூர் செய­லாளர் பிரி­வில பாலத்­த­டிச்­சே­னையில் வாழும் குறித்­த­ளவு தொகை தமிழ் மக்கள் இப் ­பி­ரி­வுக்குள் இருப்­பார்கள். இதே­ போன்றே மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் 15 கிராம சேவகர் பிரி­வுகள் உள்­ள­டக்­கப்­ப­டு­கி­ன்ற ­போது இறால் குழியில் வாழும் குறித்­த­ளவு குடும்­பங்­களும் சம்பூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் கட்­டைப்­ப­றிச்­சானில் வாழும் குறித்­த­ளவு முஸ்லிம் குடும்­பங்­களும் உள்­ள­டக்­கப்­ப­ட­லா­மெ­னவும் ஆலோ­சனை கூறப்­பட்டு வரு­கின்­றது. இதில் சம்பூர் பிர­தேச செய­லாளர் பிரி­வொன்று உரு­வாக்­கப்­படும் பட்­சத்தில் மூதூர் உள்ள தமிழ் கிரா­மங்­களை ஒன்று தொடுப்­பதன் மூலம் இப் ­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண முடி­யு­மென்ற கருத்தும் முன்­மொ­ழி­யப்­பட்­டாலும் கூட பூகோள ரீதி­யாக இருக்­கின்ற அசௌ­க­ரி­யங்கள் கார­ண­மாக எல்லாத் தமிழ் கிரா­மங்­க­ளையும் குவிந்த முறையில் ஒன்று இணைப்­பது என்­பது கடி­ன­மான காரி­ய­மென்ற ஆலோ­ச­னையும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதே­வேளை, திரு­கோ­ண­ம­லையின் வடக்குப் புல­மான குச்­ச­வெளி செய­லாளர் பிரிவில் உள்ள பல்­வேறு நிர்­வாக, பௌதீக சிக்­கல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு புல்­மோட்­டையில் புதி­ய­தொரு பிர­தேச செய­லாளர் பிரிவு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற செய்­தியும் கசிந்த வண்ணம் உள்­ளன.

குச்­ச­வெளி, பெரி­ய­குளம் தொடக்கம் தென்­ன­ம­ர­வாடி ஈறாக 24, கிராம சேவகர்கள் பிரிவைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். மூதூர் தள நிலை போலவே இப் பிரதேசத்திலும் முஸ்லிம் மற்றும் தமிழர்கள், சிங்களவர் என மூன்று இனத்தவரும் கலந்து வாழும் ஒரு பிரதேசமாக இருக்கின்ற போதும் சிறியளவு தொகையுடைய சிங்கள மக்களே இப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இருந்த போதிலும் உல்லாச ஹோட்டல் மற்றும் மீன்பிடித் தொழில் காரணமாக பெருக்கம் கூடி வருவது அறியப்பட்ட ஒரு விடயமாகும்.

புல்மோட்டையில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்கும் போது, இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாற்பட்ட எல்லைகளைக் கொண்ட பகுதியாகப் பிரித்து பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென்ற சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அவ்வாறு செய்யப்படுமாயின் இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாலுள்ள தமிழ் கிராமங்களும் அது போல் மறு எல்லைக்கு உட்பட்ட தமிழ் கிராமங்களும் பாதிப்படைவதுடன் சிறுபான்மைத் தன்மை பெற சூழ்நிலை உருவாகி விடுமென்ற கருத்தை தமிழ்த் தரப்பினர் முன்வைப்பதாகவும் தெரிய வருகிறது. இதற்கு மாற்றீடாக சலப்பை மாற்றை எல்லைப்படுத்தி இரு பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்படுமாக இருந்தால் நிலைமைகள் சமநிலைக்கு கொண்டு வரப்படுமென்ற கருத்தும் கூறப்படுகிறது.

எவ்வாறு இருக்கின்ற போதும் எல்லைப் பிரிவுகளாக இருக்கலாம் அல்லது அலுவலக நிர்வாகப் பிரிவுகளாக இருக்கலாம் ஒரு இனத்தைப் பாதித்து இன்னொரு இனத்துக்கு பாதிப்புத் தருவதாக இருப்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயமென்பதை சகல இனத்தவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-28#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.