Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் உறுதிமொழி பாதுகாக்கப்படுமா?

Featured Replies

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரின் உறு­தி­மொழி பாது­காக்­கப்­ப­டுமா?

 

 வடக்கில் காணா­ம­ல­டிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கடந்த நான்கு தினங்­க­ளாக வவு­னி­யாவில் மேற்­கொண்ட உண­வுத்­த­விர்ப்புப் போராட்டம், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­த­னவின் எழுத்து மூல உறு­தி­யை­ய­டுத்து வியா­ழ­னன்று மாலை கைவி­டப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 9ஆம் திகதி பிர­தமர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், சட்­டமா அதிபர் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­களில் 10 பேருக்கு பேச்­சு­வார்த்தை நடத்த சந்­தர்ப்பம் அளிப்­ப­தாக இரா­ஜாங்க அமைச்சர் எழுத்து மூல உத்­த­ர­வாதம் அளித்­துள்ளார் .

காணா­ம­ல­டிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கடந்த பல வரு­ட­கா­ல­மாகத் தமது உற­வி­னர்­க­ளுக்கு என்­ன­வா­னது என்ற ஏக்­கத்­து­டனும், கண்­ணீ­ரு­டனும் வாழ்க்­கையை நகர்த்தி கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த வகையில் அவ்­வப்­போது தேர்தல் காலங்­களில் மாத்­திரம் நீண்ட அறிக்­கை­களை விட்டும், வாய் நிறைந்த வாக்­கு­று­தி­களை வழங்­கியும் வாக்கு கேட்கும் அர­சி­யல்­வா­திகள், தேர்தல் முடிந்த கையோடு அதே வேகத்தில் மக்­களை கைவிட்டு விடு­கின்­றனர். அந்த வகையில் நல்­லாட்சி அர­சா­வது தங்கள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் என்று எதிர்­பார்த்தால், அதுவும் இலவு காத்த கிளியின் கதை­யா­கவே போய்க் கொண்­டி­ருப்­ப­தாக மக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர்.

கடந்த அரசின் காலத்தில் பெரும் எண்­ணிக்­கை­யான இளைஞர், யுவ­திகள், குடும்­பஸ்­தர்கள், மத­போ­த­கர்கள் மற்றும் விடு­த­லைப்­பு­லிகள் இயக்க உறுப்­பி­னர்கள் எனப் பலரும் திடீர் திடீ­ரெனக் காணாமல் போயி­ருந்­தனர். சிலர் வெ ள்ளைவேனில் வந்­த­வர்­களால் கடத்திச் செல்­லப்­பட்­டனர். மேலும் சிலர் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் பெற்­றோரால் படை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர். விசா­ர­ணை­களின் பின்னர் பாது­காப்­பாக இவர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள் என்ற மிகுந்த நம்­பிக்­கையின் பேரி­லேயே இவ்­வாறு பெற்­றோரால் பிள்­ளைகள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர். ஆயினும் அவர்­களில் பலர் திரும்பி வர­வில்லை. அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதே அவர்­களின் உற்றார் உற­வி­னர்­களின் ஆதங்­க­மாகும்.

போர்க்­குற்­றங்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தைப் பாது­காக்க அர­சாங்கம் எடுக்கும் கடு­மை­யான பிர­யத்­த­னங்­களில் குறைந்­த­பட்சம் காணாமல் போன­வர்­க­ளுக்கு என்­ன­வா­னது என்­பதைக் கண்­ட­றி­வதில் காட்­டினால் அது தமிழ் மக்­க­ளுக்கு சற்று ஆறு­தலை அளிக்கும். அதை­வி­டுத்து பொறுப்­பற்ற வகையில் கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­வது தமிழ் மக்கள் மத்­தியில் மிகுந்த கவலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

காணாமல் போன­வர்­களில் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய ஒரு­சிலர் வருடக் கணக்கில் சிறைச்­சா­லை­களில் இருந்து மீண்ட சம்­ப­வங்­களும் இருக்­கவே செய்­கின்­றன. அந்த வகையில் தமது உற­வி­னர்­களும் ஏதேனும் தடுப்பு முகாம்­களில் இருப்­பார்­களா? என்ற ஆதங்­கத்­தி­லேயே குறித்த மக்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். எனினும் அர­சாங்­கமோ எந்­த­வி­த­மான இர­க­சிய முகாம்­களோ நாட்டில் இல்லை என்று அடித்து கூறி­வ­ரு­கின்­றது.

காணாமல் போன­வர்கள் என்­ன­வா­னார்கள், அவர்­களின் நிலை என்ன குறைந்­த­பட்சம் அவர்கள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா என்­பதை அறிந்து கொள்­வ­தற்­கா­கவே காணா­ம­ல­டிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் துடியாய் துடிக்­கின்­றனர். கண­வனை இழந்து தவிக்கும் மனை­வியும், தங்கள் பிள்­ளை­களை இழந்து தவிக்கும் பெற்­றோரும், வீதிக்கு வீதி அவர்­களின் புகைப்­ப­டங்­களை ஏந்­தி­ய­வாறு நடத்­தி­வரும் போராட்­டங்கள் இது­வரை காலம் எந்தப் பய­னையும் தோற்­று­விக்­க­வில்லை என்­பதே யதார்த்தம்.

 அந்த வகையில், வவு­னி­யாவில் ஆரம்­பித்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் எங்கே தமி­ழ­கத்தில் உரு­வான "ஜல்­லிக்­கட்டு" போராட்டம் போன்று உரு­மாறி தமக்கு நெருக்­க­டியைத் தோற்­று­வித்து விடுமோ என்ற அச்சம் மாத்­தி­ரமே அர­சி­யல்­வா­தி­க­ளிடம் காணப்­பட்­டதை நன்கு அவ­தா­னிக்க முடிந்­த­தா­கவும், இவ்­வி­வ­கா­ரத்தில் எத்­த­ரப்­பி­னரும் இதய சுத்­தி­யுடன் நடந்து கொள்­ள­வில்லை எனவும் பாதிக்­கப்­பட்ட மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

அண்­மையில் அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ண, காணாமல் போன­வர்­களை எங்கு சென்று தேடு­வது? ஒரு­சில நாட்­களில் இந்தப் பிரச்­சி­னைக்குப் தீர்வு காண முடி­யாது. காணாமல் போன­வர்­களைத் தேடவும் முடி­யாது. அவர்கள் அனை­வரும் இறந்­து­விட்­ட­தாக மர­ணச்­சான்­றிதழ் வழங்­கவும் முடி­யாது என்று கூறி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், காணாமல் போன­வர்கள் தொடர்பில் கொள்கை ரீதி­யான நட­வ­டிக்­கை­யொன்றை எடுப்­ப­தற்கு எமக்கு நேரிடும் என சபையில் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எவரும் சந்­தே­கிக்கும் வகையில் சிலர் உயி­ருடன் இல்லை என்றே நான் கரு­து­கிறேன் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் காணாமல் போன­வர்கள் பற்றி எந்தத் தக­வல்­க­ளையும் இலங்­கையில் தேடிக்­கொள்ள முடி­யாமல் இருப்­ப­தா­கவும் தற்­போது இருப்­ப­வர்கள் பற்­றிய தக­வல்­களை அறி­யத்­த­ரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய அநு­ர­கு­மார திஸா­நா­யக்க எம். பி.,காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சி­னைக்கு குறிப்­பிட்ட காலத்தில் தீர்­வொன்றை வழங்க அரசு தவ­றி­யுள்­ளது. யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த சமயம் காணாமல் போனோர் தொடர்பில் பிர­தமர் வெளி­யிட்ட கருத்து பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­தி­ருந்­தது.

இப்­ப­டி­யான கருத்­தொன்றை பிர­தமர் எவ்­வாறு வெளி­யிட்டார் என்­பது தொடர்பில் குறித்த உற­வி­னர்­க­ளுக்கு நீதி­யான பதி­லொன்றை வழங்க வேண்­டி­யது கட­மை­யாகும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இதற்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே பிர­தமர், காணாமல் போனோர் குறித்து உரிய தகவல் இல்லை என்று கூறி­யுள்ளார்.

அர­சாங்­கத்தின் தாம­தமும் பொறுப்­பற்ற ரீதி­யான பதி­லுமே காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு பெரும் மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், வவு­னி­யாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட வழியும் வகுத்­தது என்று கூறலாம். இத­னி­டையே காணாமல் போனோர் விவ­காரம் ஜெனீவா மனித உரி­மைகள் பேரவை தொடக்கம் எதி­ரொ­லித்து வரு­கின்­றது. இந்­நி­லையில் காணாமல் போனோர் எவரும் உயி­ருடன் இல்லை என்ற அறி­விப்பை அரசு வெளி­யிட்டால், அவர்­க­ளுக்கு என்ன ஆனார்கள் என்ற கேள்­விக்கும் அடுத்த கட்­ட­மாக அரசு பதில் கூற வேண்­டி­யி­ருக்கும். எனவே இது தொடர்பில் உறு­தி­யான முடிவை கூற அரசு காட்டும் தயக்­கத்­துக்கும் இதுவே கார­ண­மாக இருக்­கலாம்.

அது­மாத்­தி­ர­மன்றி, காணாமல் போன­வர்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கான பணி­யகம் ஒன்றை அமைப்­ப­தற்­கான சட்­டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிய அரசு அதனை இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தா­மை­யையும் குறித்த மக்­க­ளி­டையே விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

காணாமல் போனோர் விவ­கா­ரத்தில் அர­சாங்­கமும் தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வெறு­மனே முதலைக் கண்ணீர் வடிக்­கின்­றார்­களே தவிர, உண்­மை­யான இதய சுத்­தி­யுடன் நடந்து கொள்­ள­வில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, காலத்தைக் கடத்துவதற்காக உறுதி மொழிகளை வழங்கி பிரச்சினையை மேலும் இழுத்தடிக்கக் கூடாது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன வழங்கியுள்ள எழுத்து மூலமான உறுதிமொழி, அவர்களின் நீண்ட கால துயரத்தை துடைப்பதாக அமைய வேண்டுமே தவிர, கடந்த காலங்களைப் போன்று வெறும் வெற்று வாக்குறுதியாக அமைந்துவிடக் கூடாது. மீண்டும் மக்கள் ஏமாற்றத்துக்கு முகம் கொடுத்தால் அது மேலும் விபரீதங்களுக்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதே யதார்த்தம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-29#page-4

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபியின் அநுரா குமார திசநாயக்கா கேட்ட கேள்விக்கே பிரதமர் காணால் போனவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்று கூறியிருக்கிறார். எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்போஅரசாங்கத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் என்று கௌரவம் கொடுத்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்காமல்  பதவி சுகங்களை அனுபித்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் தொண்டை கிழியக் கத்துவார்கள்.வென்றவுடன் காணாமல் போய்விடுவார்கள். காணமல்போன எம்பிக்களைத் தேடும் போராட்டம் ஆரம்பித்தால் நல்லது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.