Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம்

Featured Replies

பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம்
 
 

article_1485860530-missing.jpg-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்,  தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள், காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (30) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியினை சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோகன் அபிசேக் (வயது 14) மற்றும் டியுக் டியோன் (வயது 14) ஆகிய மூன்று மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மதியம் வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியில் சென்று, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவர்களும் மாலை ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

பாடசாலை மற்றும் இதர பகுதிகளில் தேடிய பெற்றோர், இறுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இரவு 11 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/190777#sthash.mJgo4ZjN.dpuf
  • தொடங்கியவர்

யாழில் காணாமல் போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்

யாழில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த மூன்று மாணவர்களும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து இறங்கியபோது, அங்கிருந்த நபரொருவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான, யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோன் அபிசேன் (வயது 14), விசுப்டியோன் (வயது14) ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டவர்களாவர்.

கடந்த திங்கட்கிழமை விளையாடச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்று, விளையாட்டின் நிமித்தம், புகையிரதம் மற்றும் பஸ்ஸில் பயணிக்க வேண்டுமென்ற ஆசையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரை பஸ்ஸில் சென்றோம் என மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து மீண்டும் புகையிரதத்தில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு நேற்று மாலை வந்த வேளையே மூவரையும் அறிந்திருந்த நபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம் மூவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் மூவரும் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=87495

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31.1.2017 at 2:19 PM, நவீனன் said:

பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம்

 

7 minutes ago, நவீனன் said:

யாழில் காணாமல் போன மூன்று மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்

நல்லகாலம்....இடையிலை மறிச்சு புடிச்சுட்டாங்கள்.....இல்லையெண்டால் இயக்கத்துக்கெல்லே போயிருப்பங்கள்.:cool:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.