Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளோட்டத்துடன் நிற்கும் நெடுந்தாரகை

Featured Replies

வெள்ளோட்டத்துடன் நிற்கும் நெடுந்தாரகை
 
 
வெள்ளோட்டத்துடன் நிற்கும் நெடுந்தாரகை
நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட ´´நெடுந்தாரகை´´ படகு வெள்ளோட்டம் விட ப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவே இல்லை என, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டி யுள்ளார். 
 
இந்தநிலையில், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும், என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 
 
வட மாகாண சபையின் 83ம் அமர்வு நேற்றையதினம் நடைபெற்றது.இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 
 
அவர் மேலும் குறிப்பிடுகையில், நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் நெடுந்தாரகை என்ற படகு புதிதாக கட்டப்பட்டது. 
16130027_839083056230778_498303358_o.jpg
அந்த படகு வெள்ளோட்டத்தில் அன்று ஓடியதற்கு பிறகு ஓடவே இல்லை. இதனால் நெடுந்தீவு மக்கள் வடமாகாண சபை மீது கடும் கோபத்துடன் உள்ளதாக கூறினார். 
 
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளி க்கப்படும் என கூறினார். 
 
மேலும் மாகாணசபை உறுப்பினர் க.விந்தன் கூறுகையில், 6 சிப்பந்திகள் இந்த படகை ஓட்டுவதற்காக நியமிக்கப்பட்டனர். 
 
அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் படகை ஓட்ட முடியவில்லை. இதனால் கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்கினார். 
 
ஆனால் கடற்படையினரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. என கூறிவிட்ட நிலையில் அந்த படகினால் சேவையில் ஈடுபட முடியவில்லை என, கூறினார். 
 
இந்நிலையில் எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பதிலளிக்க உள்ளார். 

http://onlineuthayan.com/news/23365

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் வடமாகாணசபையில் இருக்கும் பிரச்சனை, ஆரம்பத்தில் மேளதாளத்துடன் தொடங்குவார்கள் பின்னர் காணாமல் போய்விடும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.