Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர் பாட்டு எடுக்க வாங்க.

Featured Replies

யாழ்க்கள உறவுகளே! இது ஒரு ஆரம்பம்.

வாருங்கள் எதிர்ப்பாட்டு எடுக்கலாம்.

ஏற்கனவே இத்தகைய பாடல்கள் இங்கு உலா வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு உங்களுக்குப் புரியும் வகையில் சில ஆக்கங்களை இங்கு இடுகின்றேன். இந் நிகழ்வு கவிதை அந்தாதி போன்று விரும்பியவர்கள் எழுதலாம்.

உதாரணம்1

ஆதி,

காப்பாய் வெண்ணிலா கடம்பவன புூங்கொடியே

பார்ப்பாய் பாவியேன் படும்பாட்டை பரிதவிக்கும் நிலைப்பாட்டை

கேட்பாய் என் அழுங்குரலை கிடந்து உழலும் யாழ்க்களத்து

வால்களின் வலியிருந்து தண்நிலவே ஆதியின் உயிர் காப்பாய்.

சுயிந்தன்,

காக்காய் வெண்ணிலவே காக்காய் பிடித்திடினும்

பார்க்காய் பாவியரை பகடைக்காய் ஆக்கிடுவார்

கேட்காய் அழுங்குரலைக் கேள்வியிலே காய்த்திடுவார்

வால்வலியே வாழ்வாகட்டும் வாழவழி செய்யாதே.

ஆதி,

நோக்காய் தண்மதியே காக்காய் கவிதையினை

தீர்ப்பாய் தீதெல்லாம் தீயர்சொற் கேளாமல்

ஆப்பில் அகப்பட்டு அழுங்கவியின் மொழிகேட்டு

மீட்பாய் வெண்ணெழிலே மீளாத் துயரிருந்து....

சுயிந்தன்,

தண்மதி எனக்கேட்டு நின்(ம்)மதி இழக்காதே

வெண்மதி வேதனையில் வெந்தமதி ஆகாதே

ஆப்பிழுத்து ஆதியினை ஆட்லறியால் அடித்துவிடு

காப்பின்றி கடல்நடுவில் கதறியழ விட்டுவிடு

பாலும் லொலிபொப்பும் வண்ணங்களில் சிமார்ட்டீசும்

நாளும் கலந்துனக்கு நான்தருவேன் - யாழ்களத்து

தங்க வெண்ணிலவே வேல்விழியே நீயெனக்கு

அங்கம் அனைத்தையும் தா!

என்று ஆதியைப்பாடச் சொல்லி சுயிந்தன் பரிந்துரை செய்த பாடல்

ஆதி,

காப்பின்றிக் கடல்நடுவே கதறியழ விட்டிடவோ?

ஆப்பிற்குப் பதில் இங்கு ஆட்லறி எறிகனையோ?

கேட்பாரே இல்லையா? சின்னக் கவிமேகமவன்

வண்ணக்கவி வால் அறுக்க வடிவெடுத்து வந்தகதை.....

பாலும் லொலிப்பொப்புடனே பலவர்ண சுமார்டீசும்

நாளும் பொழுதும் நாமூட்டிக் கொடுத்தாலும்

பாழும் லஞ்சமேற்க பால்நிலா ஒப்பிடுமோ?

மீளாத வழிசொல்லும் மிளகாய்ச் சுயிந்தனே!

தாளாத இன்னலிலே தனித்திங்கு நின்றாலும்

வீழாது வாழும் மாவால் மன்னனிவன்

உதாரணம் 2

எல்ஸ் கிழவன் பாடியது

செவ்வானச் சிவப்புக் கன்னம்

சிந்தாகும் முல்லைச் சிரிப்பு

முன்னாடும் இரண்டு கண்கள்

முத்தாடும் செவ் விதழ்கள்

தள்ளாடும் வாழைக் கால்கள்

தடுமாறும் அந்த நினைவு

பந்தாடும் உந்தன் அங்கம்

பஞ்சாகும் எந்தன் இதயம்

முகம் துடைக்கும் காற்றில்

முந்தானை அது சரிய

தீ வளர்த்த மெழுகாய்

தீப்பிடித்து நான் உருக

கண் மூடி ரசிப்பதேன்

காதல் நோயை வளர்ப்பதேன்

மனம் அமிழ்ந்து போகுமட்டும்

மது நிரப்பி வைப்பதேன்

சொல் ஆடும் சுந்தரம்

செதுக்கி வைத்த சிற்பமிது

வில் ஆடும் புருவம்

விளை யாடும் பருவமிது

கொன்று கொன்று போகிறாய்

கொஞ்சம் மீதி வைக்கிறாய்

நெஞ்சு (உ) ரசிய பூவே

கொஞ்சி இருக்க வந்துவிடு

ஆதியின் எதிர்ப்பாட்டு

அக்கினிக் குழம்பெடுத்து அந்திமத்

துணைவி வருவாள்....

செவ்வானம் உந்தன் பருவம்

கைதாங்கும் பொல்லை முறிக்க

முன்நோக்கும் முதுமைக் கண்கள்

முகந்தேடி முனகிக் கலங்கும்

தள்ளாடும் வறண்ட கால்கள்

தடுமாறும் மெய்யின் உணர்வு

பந்தாடும் தொய்ந்த நெஞ்சை

'பழுத்த கிழம்" என்ற முட்சொல்

முந்தானை காற்றில் வேண்டி

முதுமையின் சபலம் ஓங்க

அக்கினிக் குழம்பெடுத்து

அந்திமத் துணைவி வந்தாள்

கண்களால் இரசித்தேன்

எல்ஸின் காதலாள் இட்ட 'முத்தம்"

மந்தியாய் நானா?...... கேட்டு

மன மந்தியை மன்னனில் கண்டேன்

சொல் ஆடும் சுந்தரந்தான்

செதுக்கி வைக்கச் செங்கல் ஆச்சு

வில் ஆடும் புருவமென்று

வியப்புக் குறியினைத் தடவிடும் மன்னன்.....

பொக்கை வாய் வேந்தனிடம்

பொற்கொடியாள் நெஞ்சு (உ)ரசாள்

ஆதிசொல் அறிவிதன்பால்

அரசே நீ திருந்திவிடு!

உதாரணம் 3

பைத்தியக்கார எல்லாளன்

என்னைச் சுத்தி எத்தனையோ பொண்ணுங்க

அத்தனையும் எனக்கு இங்கு கண்ணுங்க....

காதல் என்னும் பட்டம் விடும் நூலுங்க...

சமயத்திலே காலை வாரும் வாலுங்க...

அடராமா....அடராமா......அட அட அட ராமா.......

அசர வைக்கும் அயலு வீட்டு அல்லிகா

அயிரை மீனு கண்ணாலே என்னைக் கொல்லுரா

ரசிக்க வைக்கும் இரசிகை இந்தப் பொண்ணுதான்

ராட்டினமா என் மனசை சுத்துரா....

அட ராமா... அட ராமா...அட அட அட ராமா...

நிமிஷம் ஒரு ஜாலம் காட்டும் நித்திலா

நித்தம் நித்தம் என் நெஞ்சில் முட்டுரா...

வட்டமிட்டு வம்பு செய்யும் வெண்ணிலா

வெள்ளிப் பொட்டு போல விண்ணிலே துள்ளுரா..

அட ராமா...அட ராமா...அட அட அட ராமா..

சந்தணம் போல மணக்குமிந்த சகாரா

சாகரம் போல நிறைந்து நிற்கும் சகானா...

தூர நின்று தூண்டில் போடும் தூயா

சிக்கிக் கொண்ட மீனு இங்கு நானா....

அட ராமா... அட ராமா... அட அட அட ராமா....

என்னைச் சுத்தி எத்தனையோ பொண்ணுங்க

அத்தனையும் எனக்கு இங்கு கண்ணுங்க

காதல் என்னும் பட்டம் விடும் நூலுங்க

சமயத்தில காலை வாரும் வாலுங்க.....

ஆதியின் பதில் பாடல்

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

அசர வைக்கும் அயலு வீட்டு அல்லிகா - உன்

உசிரைப் பிடிச்சு உலுக்கிடுவா சொல்லிட்டேன்

ரசிக்க வைக்கும் இரசிகை என்னும் பொண்ணுதான் - உனைப்

புசித்து ஏப்பம் விட்டுடுவா புரிஞ்சுக்கோ

நிமிசம் ஒரு யாலம் காட்டும் நித்திலா - உனை

வகிர்ந்தெடுத்துப் போட்டுடுவா வத்தலா...

வட்டமிட்டு வம்பு செய்யும் வெண்ணிலா - உனை

குட்டிக் குட்டித் தப்புகளை எண்ணுவா..

சந்தணம்போல் மணக்குமந்தச் சகாரா - உனைச்

சந்தியிலே நிற்க வைச்சுச் சாத்துவா....

தூர நின்று தூண்டில் போடும் தூயா - காலை

வாரி விட்டுக் காட்டுவாய்யா தாயா...

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

Edited by ஆதிவாசி

  • தொடங்கியவர்

என்ன உறவுகளே தயாரா?

ஆரம்பிப்போமா?

இதோ...

தின்ற ஊண் செறிக்க

திண்ணையிலே குந்திக்கின்னு

கண்டவரைக் கதைபேசி

கிண்டல் செய்யும் மச்சான்....

கண்டாங்கிச் சேலை கட்டி

கணுக்காலும் மறைக்கும் அக்காள்

கொண்டாடும் கோபத்தோடு

கூட்டுத்தடி கொண்டு வந்தால்.....

மயக்கும் மாலையிலே

மச்சானின் நிலை என்ன?

வட்டமா பொட்டுவைச்சே

கட்டம்போட்ட ரவிக்கைபோட்டே

தொட்டுப்பேச வேணாமின்னு

எட்டிநின்னே குரல்கொடுத்தே

நெய்துவைச்ச நெஞ்சத்தை நீ

நார்நாரா கிழிச்சுப்புட்ட

பஞ்சுமிட்டா போல நானும்

கரைஞ்சுநின்னேன் உன்எதிரே

அலையடிச்ச கரைமேலே

நுரை மிதிச்சு நீ நடந்த

வலைபுடிச்ச மீன்காரன்

கடல்கடந்து போகையிலே.

  • தொடங்கியவர்

வட்டமா பொட்டுவைச்சே

கட்டம்போட்ட ரவிக்கைபோட்டே

தொட்டுப்பேச வேணாமின்னு

எட்டிநின்னே குரல்கொடுத்தே

நெய்துவைச்ச நெஞ்சத்தை நீ

நார்நாரா கிழிச்சுப்புட்ட

பஞ்சுமிட்டா போல நானும்

கரைஞ்சுநின்னேன் உன்எதிரே

அலையடிச்ச கரைமேலே

நுரை மிதிச்சு நீ நடந்த

வலைபுடிச்ச மீன்காரன்

கடல்கடந்து போகையிலே.

வட்டப்பொட்டு வைத்திருந்தேன்

கட்டுக்காவல் தாண்டி வந்தும்

கண்ணியத்தைப் பாத்திருந்தேன்

நெஞ்சை நீயும் நெய்து வைச்சா

பஞ்சம் தீரும் நாளு எப்போ?

அலையடிச்ச கரைமேல

நுரை மிதிச்சு நான் நிற்க

கடல்தாண்டி போனவனே..

காணமல் போனதென்ன?

எங்கே ஆரம்பியுங்கள்.

தின்ற ஊண் செறிக்க

திண்ணையிலே குந்திக்கின்னு

கண்டவரைக் கதைபேசி

கிண்டல் செய்யும் மச்சான்....

கண்டாங்கிச் சேலை கட்டி

கணுக்காலும் மறைக்கும் அக்காள்

கொண்டாடும் கோபத்தோடு

கூட்டுத்தடி கொண்டு வந்தால்.....

மயக்கும் மாலையிலே

மச்சானின் நிலை என்ன?

Edited by ஆதிவாசி

தின்ற ஊண் செறிக்க

திண்ணையிலே குந்திக்கின்னு

கண்டவரைக் கதைபேசி

கிண்டல் செய்யும் மச்சான்....

கண்டாங்கிச் சேலை கட்டி

கணுக்காலும் மறைக்கும் அக்காள்

கொண்டாடும் கோபத்தோடு

கூட்டுத்தடி கொண்டு வந்தால்.....

மயக்கும் மாலையிலே

மச்சானின் நிலை என்ன?

கள்ளுக்கடை போகும் மச்சான்

காலை மாலை ரெண்டு தரம்!

கொள்ளிக் கட்டை கொண்டு அக்காள்

சேலைச் சிங்கி வந்துமென்ன?

உள்ளே போன கள்ளுவின்னும்

வேலை உடம்பில் செய்கிறது!

அள்ளித்தின்ன ஆட்டுக்கறி சோறு

வாழையிலையில் போடும் காணும்!

முந்தாணை முடிஞ்சுவெச்ச

வெத்தலையை மடிச்சிவெச்ச

பத்து முழச் சேலையிலை

அத்தானைக் கட்டிவெச்ச

முத்து முத்தா வேத்த முகம்

முத்தந் தந்தா நாணும் சுகம்

பக்கம் வந்தா கெஞ்சிடுவா

பாயை போட்டா கொஞ்சிடுவா

சித்திரையில் சமஞ்சவளே-என்

நித்திரையை கலைச்சவளே.

  • தொடங்கியவர்

கள்ளுக்கடை போகும் மச்சான்

காலை மாலை ரெண்டு தரம்!

கொள்ளிக் கட்டை கொண்டு அக்காள்

சேலைச் சிங்கி வந்துமென்ன?

உள்ளே போன கள்ளுவின்னும்

வேலை உடம்பில் செய்கிறது!

அள்ளித்தின்ன ஆட்டுக்கறி சோறு

வாழையிலையில் போடும் காணும்!

கள்ளுக்கடை போன மச்சான்

கூட்டுத்தடி அக்காள் கையில்

கொள்ளிக்கட்டை கொடுத்ததென்ன?

அள்ளித் தின்ன ஆட்டுக்கறி

வக்கனையாக் கேக்கிறியே...

வாழையிலை தன்னும்

அறுத்துத் தந்த லச்சணமோ?

அக்காளின் சக்களத்தி

பிழாவேறி உன்னுள் புகுந்து

வைச்சாளே ஆப்பு மச்சான்

உச்சி வெயில் கொதிக்கையிலே

உழைச்சுக் களைச்சாயோ?

உட்கார்ந்து ஆணையிட்டா

அக்காள் உன் கையாட...

கள்ளுக்கடை போன மச்சான்

கூட்டுத்தடி அக்காள் கையில்

கொள்ளிக்கட்டை கொடுத்ததென்ன?

அள்ளித் தின்ன ஆட்டுக்கறி

வக்கனையாக் கேக்கிறியே...

வாழையிலை தன்னும்

அறுத்துத் தந்த லச்சணமோ?

அக்காளின் சக்களத்தி

பிழாவேறி உன்னுள் புகுந்து

வைச்சாளே ஆப்பு மச்சான்

உச்சி வெயில் கொதிக்கையிலே

உழைச்சுக் களைச்சாயோ?

உட்கார்ந்து ஆணையிட்டா

அக்காள் உன் கையாட...

அக்காச்சி கையாற் சமைத்த

ஆட்டுக்கறி தின்ற மச்சான்!

அக்காய்ச்சி அன்பாய்த் தந்த

ஆட்டுப்பால் குடித்த கிச்சான்!

சக்களத்தி வைத்த பொறியில்

மாட்டுப் பட்டுத்தான் போனான்!

எக்கட்சி நீயென்று தலையில்4

போட்டு மச்சானை கேட்டாள்!

"மொக்கச்சி அடியே பாவியென்

ஓட்டுவெப்பவும் உனக்குத்தான்" சொன்னான்!

இயக்கச்சிக்கு வலி மருந்துபோட

ஓட்டமாய் வண்டிலில் சென்றான்!

:lol::lol::lol::D:D:lol:

வண்டியிலே குந்திக்குன்னு..

வட்டக்கச்சி போன மச்சான்..

அந்தியிலே வருவாயின்னு

அக்கறையா காத்திருக்கேன்..

கோழிக்கால் பொரிச்சிருக்கு..

குத்தரிசிச்சோறிருக்கு...

என்னாசை மச்சானே..நடை

எட்டி வச்சு வா சுருக்கா..

கருக்கலிலே வந்திடுவேன்னு புள்ள

காத்திருன்னு சொன்னதென்ன..

கணுக்காலும் கடுக்குதய்யா..

காத்திருந்து..பாத்திருந்து

பொட்டு வைச்ச கையாலே

தினம் பூமுடிக்கும்

என் புருசா..ஆசையிலே

காத்திருக்கேன்னு அட

சீக்கிரமா வாடா என்னைச்

சீர்குலைச்சா சிறுக்கி மவனே..

அட குறுக்காலே போனவனே..

கெதியா வாடா கேப்பமாரி.. :lol:

(மன்னிக்கனும் சிரிக்கறதுக்காக மட்டும் கடைசி வரிகள்..)

  • தொடங்கியவர்

வாவென்ற உன் அழைப்பில்

வந்துவிட நான் கூனா? :angry:

சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை நான்

புடிச்சா நீ அணைக்க இல்லாட்டில் போட்டுதைக்க

நான் என்ன அடுப்படிப் பாத்திரமா? :lol:

ஆண்பிள்ளை நான் உன் அழகான மாப்பிள்ளை

ஆளான எனைப்பாத்து ஆயிரமாய் கேள்வியடி

ஆட்டுப்பால் தந்ததென்றே அகங்காரம் உனக்கென்றால்

கற்பகத் தருவதற்கு கர்வம் எவ்வளவிருக்கும்?

கனிவோடு என்னுறவாடும் காமதேனிவளை

சக்களத்தி ரேஞ்சுக்கு சரசக்காரி என்கிறியே! :lol:

குறுக்கால நான் போறன்....

விட்டுடடி விட்டுடடி

விருந்தோம்பலான பின்னே..

வெட்டிப்பேச்செதுக்கு மச்சாள்..

விபரம் கெட்ட சிறுக்கிகிட்ட

விவகாரம் எதுக்கு மச்சான்..

கலந்நதெல்லாம் மறந்துடறேன்

கையலம்பி வா மச்சான்..

தொங்குதாலி கண்ணுறுத்த..

தோட்டந்தொரவு எனக்கிருக்க..

என்னத்த தேடி எழவு

எடுத்த மவளோட..எம்புருசா

எடுபட்டுப் போனியோ நீ.. :lol:

  • தொடங்கியவர்

தோட்டந் தொரவைக் காட்டி எந்தன்

ஆத்தா உள்ளம் புகுந்தாய்!

அடக்க ஒடுக்க பண்புகாட்டி என்

அப்பன் சிந்தை அறிந்தாய்!

சிலுப்பிச் சிலுப்பி நீ நடந்து

என் சிந்தைக் காதல் அறிந்து

சீக்கிரமாய் அதைத் சிதைத்தாய்!

சாதி சன வேட்டில்....

அன்று பட்ட காயமடி

ஆறவில்லை இன்னும்...

என் தொண்டைக்குழி இறுக்கும்

தொங்கு தாலி காட்டி

தொடருகிறாய் தொடருகிறாய்

தொலைந்த என்னைத் தேடி...

பைத்தியமாய் புலம்பாதே!

பரத்தையிடம் போகமாட்டேன்

பங்கு தந்த பாவத்திற்கு

பறந்து வாறன் தூங்கு!

  • தொடங்கியவர்

முந்தாணை முடிஞ்சுவெச்ச

வெத்தலையை மடிச்சிவெச்ச

பத்து முழச் சேலையிலை

அத்தானைக் கட்டிவெச்ச

முத்து முத்தா வேத்த முகம்

முத்தந் தந்தா நாணும் சுகம்

பக்கம் வந்தா கெஞ்சிடுவா

பாயை போட்டா கொஞ்சிடுவா

சித்திரையில் சமஞ்சவளே-என்

நித்திரையை கலைச்சவளே.

முந்தானையில் முடிவதென்றால் சில்லறை நாணயமா?

வெத்தலையில் மடிச்சு வைக்க சுண்ணாம்பா? இல்லை பாக்கா?

பத்து முழச் சேலையிலே அத்தானைக் கட்டி வச்சா..!!!!

ஐயோ!!! ஏணை பிய்யும். அவுத்துவிடு! அவுத்து விடு!

முத்து முத்தா முகம் வேத்தா! சிப்பி விளை செங்கடலோ?

முத்தந் தந்தா.... :lol: வில்லங்க நாண் சுகமா?

ஐயோ... இதைக் கேளுங்கோவன்!

எந்தப் பக்கம் எண்டாத்தானே கெஞ்சும் பொருள் கிழக்காகும்.

பந்தாவா பாயைப்போட்டா(கொன்னா) பயப்பிடமா கொஞ்சுவாவா?

சித்திரையில் சமைச்ச வாடை - உன்

நித்திரையைக் களைச்சதெப்படி? :lol:

(இது நகைச்சுவையாக எழுதியது இன்னல் என்றால் மன்னித்திடுக)

Edited by ஆதிவாசி

தோட்டந் தொரவைக் காட்டி எந்தன்

ஆத்தா உள்ளம் புகுந்தாய்!

அடக்க ஒடுக்க பண்புகாட்டி என்

அப்பன் சிந்தை அறிந்தாய்!

சிலுப்பிச் சிலுப்பி நீ நடந்து

என் சிந்தைக் காதல் அறிந்து

சீக்கிரமாய் அதைத் சிதைத்தாய்!

சாதி சன வேட்டில்....

அன்று பட்ட காயமடி

ஆறவில்லை இன்னும்...

என் தொண்டைக்குழி இறுக்கும்

தொங்கு தாலி காட்டி

தொடருகிறாய் தொடருகிறாய்

தொலைந்த என்னைத் தேடி...

பைத்தியமாய் புலம்பாதே!

பரத்தையிடம் போகமாட்டேன்

பங்கு தந்த பாவத்திற்கு

பறந்து வாறன் தூங்கு!

நக்கல் விட நேரம் இல்லை! நெடுந்தூரம் போன மச்சான்!

:lol:

துக்கம் தாங்கமுடியவில்லை! மக்கர் கூட்டத்தாலும் தொல்லை! :angry:

கொக்கரக்கோ கோழிகளையாமி களவெடுத்துக் கொண்டுபோட்டான்! :angry:

புரோக்கர்சோமு சின்னப்பெட்டை படத்தைதரச் சொல்லிக்கேட்டான்! :lol:

சுப்பர் வீடு தேடி வந்துகடனைச் சுருக்காய் அடைக்கச் சொன்னான்! :angry:

பக்கத்துவீட்டு பரிமளம் என்னைப் பரிகாசம் செய்கிறாள்! :angry:

தக்கபதில் கொடுக்க எனக்கு தற்போது தெரியவில்லை! :angry:

பூக்கன்றுகளும் நீவிடும் தண்ணீரின்றி வாடிப்போச்சு! :angry:

தேக்குமர இலைவிழுந்து முற்றம்முழுதும் நிறைஞ்சுபோச்சு! :angry:

துப்பரவாய் வைத்திருக்க வேறு வேலைக்காரனும் இல்லை! :angry:

வக்கிரபுத்தியை விட்டுவிரைந்து வீடுதிரும்பு அத்தான்! :P

Edited by மாப்பிளை

அத்தான் என்று ஆசை மொழி சொன்னவளே....

பாசமெல்லாம் பொய்யென்று பாரத்தேனே..படித்தேனே..

சமையலறை சலித்ததடி..சயனவறை வெறுக்குதடி..

உன்னுடைய உளறலெல்லாம்..எரிச்சலென இருக்குதடி..

அடுத்தவனைப் பார்க்கையிலே ஆன்மாவும் ஏங்குதடி..

சந்தேகக்காட்டாற்றில் ஏன் சந்தோசம் போனதடி..

கிளி போல நீயிருக்க கிழத்தியை நான் பார்ப்பேனோ

புரியாமல் இடிப்பவளே.. புத்தியில்லா இல்லாளே..

சொத்தெல்லாம் சுகம் தருமோ..

சோறுதின்ன மனம் வருமோ..

கண்ணீரை நீ உகுக்க..

காரணம் ஒன்றிருக்கோ..

என்ன எதிர்ப்பாட்டைக் காணோம்...

அத்தான் என்று ஆசை மொழி சொன்னவளே....

பாசமெல்லாம் பொய்யென்று பாரத்தேனே..படித்தேனே..

சமையலறை சலித்ததடி..சயனவறை வெறுக்குதடி..

உன்னுடைய உளறலெல்லாம்..எரிச்சலென இருக்குதடி..

அடுத்தவனைப் பார்க்கையிலே ஆன்மாவும் ஏங்குதடி..

சந்தேகக்காட்டாற்றில் ஏன் சந்தோசம் போனதடி..

கிளி போல நீயிருக்க கிழத்தியை நான் பார்ப்பேனோ

புரியாமல் இடிப்பவளே.. புத்தியில்லா இல்லாளே..

சொத்தெல்லாம் சுகம் தருமோ..

சோறுதின்ன மனம் வருமோ..

கண்ணீரை நீ உகுக்க..

காரணம் ஒன்றிருக்கோ..

அடேய் அத்தான்! என்னுடன் அளந்து நீ கதை!

நாள்பத்து ஆகப்போது மனுசன் நீ திரும்பவிலை!

மனித உரிமை குழுவிடம் போய் உனை

காணவில்லை என புகார் கொடுப்பேன்!

ஊரிலுள்ள உன் உறவிற்கெல்லாம் நீ

தொலைந்து விட்டாய் எனச் சொல்வேன்!

ஈபீடீபீ குழுவிடமும் போய் உனை

பிடித்துத் தரும்படி நயமாய் கேட்பேன்!

கருநாய் குழுவிற்கு காசு கொடுத்து உனையெம்

வீட்டுக்கு கடத்தும்படியும் கேட்பேன்!

பக்கத்து சென்றி ஆமியிடம் போய் நீ

மறைந்த கதையை நான் உரைப்பேன்!

எனது இரத்த அழுத்தம் ஏறுமுன்னர்

அடேய் அத்தான் வீடு திரும்பு!

வீடு திரும்பாட்டி வாடிடுவாள் பெண்டாட்டி

வீராப்பு வேணாம் இனி சேரப்பு ஊருவந்து

காடு அழைக்காமை காரியங்கள் முடிக்காமை

பத்தினியை பிரியாதை சத்தியத்தை மறக்காதை

பல்லு விளக்காமை பால்பொங்கல் தின்னவரே

மல்லு வேட்டியிலே சண்டிக்கட்டு போட்டவரே

புல்லு சாகாமை தரைமேலே புரண்டவரே

பொல்லு புடிக்காமை ஒருகாதம் நடந்தீரோ

சொல்லி புடிச்சீரே சொக்கத்தங்கம் நான்தானே

கொள்ளி போடாமை பிரியத்தான் நினைச்சீரோ

கள்ளி களவாணி ரோசங்கெட்டாள் ஒய்யாரி

துள்ளிக் குதிச்சிடுவா தாலியைத்தான் பறிக்கவந்தா

தலைவாழை இலைபோலை சிலையாட்டம் நீயிருக்க

உலையரிசி பொங்கிவந்து பசிபோக ஊட்டிடுவேன்

வலைபோட்டு புடிச்சேனே மனம்போல மகராசா

விலைகுடுத்தா தருவாரா நீதானே என்ரோசா

Edited by Norwegian

தங்கத்தில் தாரெனெண்டு..

உன்னப்பன் தகரத்தில் தந்தானடி..பெண்ணே..

தகரத்தில் தந்தானடி...

தகரத்ததை தந்ததையும்..

உன்னப்பன் உலகெல்லாம் சொன்னானடி.பெண்ணே..

உலகெல்லாம் சொன்னானடி..

வெள்ளியில் தாரனெண்டு..

உன்னப்பன் பொண்ணு பார்க்கையிலே சொன்னானடி..கண்ணே

பொண்ணு பார்க்கையிலே சொன்னானடி

கல்யாணம் நடந்து இப்ப காலாண்டு ஆகிக்கூட..

காலாணாவும் தந்தானோடி..கண்ணே..

காலாணாவும் தந்தானோடி

கரும்பு போல என் பொண்ணு

இருப்பான்னு சொன்னானடி..பெண்ணே..

இரும்பு போல வந்து வாய்சுசு துருப்புடிச்சு..

போனதேண்டி பொண்டாட்டி துருப்புடிச்சு

போனதேண்டி..

  • தொடங்கியவர்

காண்டாவனம் கிடக்கும் கழுகு மாப்பிள்ளையே!

தோண்டத் தோண்டத் தங்கந்தரும்

சுரங்கம் என் பொண்ணப்பா!

வானத்து வெள்ளி பார்த்து வாய் பிளந்த உந்தனுக்கு

வெள்ளி காசெறிந்த சந்தம் தரும் பெண் தந்தேன்.

கல்யாணம் செய்த மகள் கண்ணீரில் கரைகிறாள்.

காதல்வாசம் தெரியாத கல்லுக்கு வாழ்க்கைப்பட்டு

கண்ட சுகம் என்ன என்று கலக்கத்துடன் கேட்கிறாள்.

கரும்பாய் இருந்தவளை இரும்பாய் மாற்றிவிட்டு

துருப்பிடித்த கதை சொல்லும் துட்ட மாப்பிள்ளையே!

தொண்டைக்குழி பொத்திக் கொண்டு தூர ஓடிவிடு! -உன்

கண்டத்திலே என் பற்கள் பதிக்குமுன்னே :angry:

Edited by ஆதிவாசி

காண்டாவனம் கிடக்கும் கழுகு மாப்பிள்ளையே!

தோண்டத் தோண்டத் தங்கந்தரும்

சுரங்கம் என் பொண்ணப்பா!

வானத்து வெள்ளி பார்த்து வாய் பிளந்த உந்தனுக்கு

வெள்ளி காசெரிந்த சந்தம் தரும் பெண் தந்தேன்.

கல்யாணம் செய்த மகள் கண்ணீரில் கரைகிறாள்.

காதல்வாசம் தெரியாத கல்லுக்கு வாழ்க்கைப்பட்டு

கண்ட சுகம் என்ன என்று கலக்கத்துடன் கேட்கிறாள்.

கரும்பாய் இருந்தவளை இரும்பாய் மாற்றிவிட்டு

துருப்பிடித்த கதை சொல்லும் துட்ட மாப்பிள்ளையே!

தொண்டைக்குழி பொத்திக் கொண்டு தூர ஓடிவிடு! -உன்

கண்டத்திலே என் பற்கள் பதிக்குமுன்னே :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அடேய் வாய்யா என் ஆசை மாமா!

உடைந்து போன மவளின் மனதை ஒட்டிவைக்க

இடையில் தரகனாய் நீயிங்கு வந்தாயோ?

கடையில் விற்றுவிடுவுன் தங்கங்கொட்டும் பெண்ணை!

விடைதெரியாமல் வாழ்வுவீணாகி நான்துயர்

துடைப்பதற்கு மடத்தடி சாமியாரிடம் வந்துள்ளேன்!

வடைசம்பலுடன் மாப்பிள்ளையாய் என்னை மடக்கிவிட்டு

கொடைவள்ளல் போல் நீ பெருமிதம் அடையாதே!

மடைதிறந்த வெள்ளமாக அன்பை பொழிந்தவெனக்கு

குடையாலடித்த அரக்கி கண்ணீர் விடுகிறாளோ?

நடைப்பிணமாக்கி எனையழித்தவுன் பெண்ணுக்குநீதி

கிடைக்காது ஒருபோதும் அடேய் கிழட்டுப் பயலே!

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

பல்லுப் பதிச்சானே பழம்போலென் கன்னத்திலே-அவன்

சொல்லு கேட்டேனே செத்துத்தான் பொழைச்சேனே

வில்லாய் வளைத்தானே கரும்பான மேனியைத்தான்

கல்லாய் சமைஞ்சேனே உழியாலை செதிக்கி வைக்க

பகடைக்காய் போலை பாய்மேலை உருட்டிவிட்டே

பாவைக்காபோலை என்னை கடிச்சுப்புட்டு துப்புவியா

பாவையிலை பாசம் வைச்சு பாலாட்டம் பருகிவிட்ட

பூவைச்சு தாலிகட்ட பங்குனியில் வருவாயா.

ஆயிரம் துன்பமாச்சு....

ஆறடி ஆறடி.............

நாமழிந்து போயிடினும் ஆறடி!

அவர் அரக்க குணம்

அத்தோடு முடியுமா..?

கூறடி..கூறடி!

கொட்டு முழக்கமெலாம்........

கொட்டி தீர்த்தாரா ......?

வ(ழி)ரி - உனதுதான் ......

ஆனால்.....

வட்டமிடும் கழுகுகளிடை............

எம் -வாழ்வு........

முட்டி தள்ளடி...முடியலையா

முட்டாக்கு ..போடடி!

முகம் காட்டாதே - பிறர்க்கு!

முதலை வேட்டை -வேணுமே

இனி வேணுமே!

பத்தும் பறந்ததடா - கொடும்

பசிவரவே மறந்ததடா

நிந்தம் துயர் சேரும்

இதுவா நம் வாழ்க்கையடா

சொந்தம் நமக்கில்லை

சோறுதர யாருமில்லை

அந்தோ பரிதாபம்

காலம் செய்த கோலமடா

பானையில் இல்லையென்றால்

அகப்பையில் வருமோடா

வீணையில் இழையிருந்தும்

விரலின்றேல் ஒலியில்லை

கண்ணில் ஒளிதந்து - அதன்

காட்சிதனை மாற்றிவிட்டார்

மண்ணைக் காதலித்தோம்

மாளாத விலை கொடுத்தோம்

நாம் பேசாத பதுமையடா

இனி வீசாதோ தென்றலடா

சுடு காடாகிப்போயிடிச்சே

இன் உயிரான தேசமடா

சிங்களத்துச் செக்கினிலே

சிக்கியதோர் ஈழமடா

அதைப் பார்த்திருக்கும் உலகமடா

நன்கு போடுது பார் வேசமடா

Edited by Norwegian

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஆரிடம் சொல்லியழ? :lol:

தொலைபேசி வைத்திருப்போரே!

தொலைந்து போங்கள்….

தாயகம்பற்றிப் பேசவா?

யார் முந்தி

நானா?...... நீயா?

உணர்வெடுத்து,

உரிமைக் குரலெடுத்து

ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!!

திட்டங்களும், கருத்தாடல்களும்

கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும்.

ஆகா இனிக் கவலையில்லை

எவ்வளவு குரல்கள்…!

உலக அங்கிகாரம் எதற்கு?

நாங்களே இராசாங்கம்

இதோ தாயகம் எங்கள் கைகளில்

இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம்.

சிரசின்மேல் சுமப்போம்.

வானலைகள் கதவுதட்டி

வார்த்தைகளை குவித்தெறியும்!

நம்பி நம்பிக்கை கொண்டேன்

வானலை வந்த என்னருந்

தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்..

ஆகா நான் கதைத்தது கேட்டீரா?

எப்படி இருந்தது?

உணர்வாய் இருந்ததா? என

ஆயிரம் வினாக்கள்.

அடுத்ததென்ன?

‘அப்ப நாளை காலையில்

செயலாற்றும் இடத்தில் சந்திப்போம்” என

நானுரைக்க…….

சீச்சீ… எனக்கு வேறு வேலையிருக்கு

‘சும்மாதான் ரேடியோவில வருவதாகச் சொன்னேனப்பா”

என்றானே அந்நண்பன்

ஆரிடம் நான் இதைச் சொல்லியழ?

இப்ப இதற்கு எதிர்ப்பாட்டு எடுங்கப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.