Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் - 25 க்கு மேற்பட்ட பிரச்சினைகளை முன் கொண்டுவரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் - 25 க்கு மேற்பட்ட பிரச்சினைகளை முன் கொண்டுவரும்

18624383332.jpg

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மேச்சல்தரை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற 25 க்கு மேற்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். 

இதனை இந்த எழுக தமிழ் எழுச்சி பேரணி மூலம் கொண்டுவரவுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தரன் தெரிவித்தார். 

எதிர்வரும் 10 திகதி இடம்பெறவுள்ள கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஊடகவியளாளர் சந்திப்பு நேற்று (05) தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தரன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். 

இன்று இந்த நாட்டிலே தமிழ் பேசும் எமது மக்கள் அவர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு அப்பால் வேறுபட்ட உடனடியாக தீர்க்கக் கூடிய தீர்வுகளை தவிர்த்து கொண்டு நல்லாட்சிக்கு வாக்களித்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். 

இந்தநிலையில், வடக்கு கிழக்கிலே எமது மக்கள் இந்த ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து வீதிகளிவே தெருக்களிவே அறநெறி போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்ற நிலைமைதான் நடக்கின்றது. 

கடந்த சில நாட்களிலே வவுனியாவிலே காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவகள் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.. 

அவ்வாறு இன்று வரை முல்லைத்தீவு கோப்பாவல பிரதேசத்தில் தமது காணிகளை விடுவிக்கமாறு மக்கள் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீதி ஓரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றனர். 

அது மாத்திரமல்ல மட்டக்ளப்பு மாவட்டத்தில் கூட பாடசாலை மாணவர்கள் தங்களுடைய காணியை விடுவிக்கமாறு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளார்கள். 

இன்று வடக்கு கிழக்கிலே மக்களாக முன்வந்த அறவழி போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். 

இந்தநிலையில் பிரதமர் காணாமல் போனோர் தொடர்பாக தெரிவித்த கருத்தானது நல்லாட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அது மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பாக முக்கிய அமைச்சர் சம்பிக் ரணவக்க விடுத்துள்ள கருத்து சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆகவே முன்னாள் போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மிகவும் வேதனைக்குரியதாகும். 

இந்த எழுச்சி பேரணி இது ஒர் அரசியல் களமாக பயன்படுத்துவதாக பல குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றது. 

இது ஒரு அரசியல் செய்வதற்கான ஒரு களமல்ல ஒட்டு மொத்த மக்கள் தங்களடைய பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் மாச்சில் இடம்பெறவுள்ள ஜ.நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கான ஒரு செயற்பாடு தான் எழுக தமிழ் என்று அவர் தெரிவித்தார். 

http://tamil.adaderana.lk/news.php?nid=87633

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.