Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை

Featured Replies

நாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை 

 

 

நாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

IMG_0808.JPG

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கடந்த 31.01.2017 தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது  நாளாக இன்றும் (06.02.2017) தொடர்கின்றது.

IMG_0803.JPG
மேலும் நாளை பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதனால் அங்கு இந்த விடயம் குறித்து பேசுவதாகாக பல பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதி வழங்கி இருந்தனர்.

IMG_0800.JPG

இந்த நிலையில் நாளை (07,02,2017)மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்ப்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும் போராடடத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

IMG_0799.JPG
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள்  செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

IMG_0797.JPG

இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாப்புலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றையதினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.
IMG_0793.JPG

இந்த நிலையில் கடந்த 01.02.2017 அன்று  குறித்த போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட  அரச அதிபரும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரும் மற்றும் வன்னி பிராந்திய விமானப்படை தளபதியும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்து மக்களோடு கலந்துரையாடி சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் உறுதியான நிலைப்பாட்டில் தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்தால்தான் இந்த போராட்டம்  நிறைவுபெறும் என கூறி தொடர்ந்து போராடி  வருகின்றனர்.

IMG_0790.JPG

இந்த நிலையில் ஏழாவது  நாளாக இன்றும் இந்த மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. ஏழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்துக்கு  பல மக்கள் பிரதிநிதிகளும் வருகைதருவதை அவதானிக்கமுடிகின்றது.

IMG_0739.JPG

இந்த நிலையில் இன்றையதினம் (06.02.2017) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் வடக்குமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்ம ற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடினர்.
IMG_0717.JPG

அத்தோடு மக்கள் தமது உணவுகளை தாமே மரங்களுக்கு கீழே சமைத்து உண்டு வருகின்றனர். அத்தோடு இந்தப்போராட்ட்டக்  களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட  வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது  கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது.

IMG_0863.JPG

அத்தோடு இன்று முல்லைத்தீவு கல்வி வலயத்திலிருந்து வந்த பிரதிக்கல்வி பணிப்பாளர் ஆதவன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததோடு சில கற்பித்தல்களையும் மேற்கொண்டனர்.

IMG_0862.JPG

அத்தோடு இன்றையதினம் இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்திற்கு விசேட மருத்துவக்குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வருகைதந்து சளி,இருமல் ,காய்ச்சல் போன்ற நோய்களாலும் ஏனைய நோய்களாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பெண்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.

IMG_0850.JPG

மேலும் இந்த மக்களின் போராட்டம் வெற்றிபெற ஆசிவேண்டி கேப்பாப்புலவு முத்துவிநாயகர் ஆலயத்தில் உள்ள பூசாரி ஒருவர் தொடர் சிவ வழிபாட்டு பூசை ஒன்றினை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளார்.

IMG_0818.JPG
அத்தோடு இரவு நேரங்களில் கடும் பனி பொழிந்துவருவதோடு அந்த பனிப்பொழிவிலும் மக்கள் திறந்த வெளியில் வீதியில் நனைத்தபடி உறங்குவதையும் வெயில் நேரத்தில் சிறுவர்கள் வீதியில் உள்ள மதகுகளின்  கீழ்  இருப்பதனையும்  அவதானிக்கமுடிகின்றது.
IMG_0814.JPG
போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான் உணவு  மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0753.JPG

IMG_0724.JPG

IMG_0789.JPG

IMG_0722.JPG

http://www.virakesari.lk/article/16291

  • தொடங்கியவர்

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Mullai-keppa.jpg

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 6 நாட்களாக  இரவு பகலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பொது மக்களில் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையினால் இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு செயலகத்தின் முன்பாக, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இன்று பிரதேச செயலகத்தினுள் யாரையும் நுழைய விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், பிரசேதச செயலக அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  எனினும், மக்கள் தொடர்;ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

http://globaltamilnews.net/archives/16553

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG_0850.JPG

Quote

இந்த மக்களின் போராட்டம் வெற்றிபெற ஆசிவேண்டி கேப்பாப்புலவு முத்துவிநாயகர் ஆலயத்தில் உள்ள பூசாரி ஒருவர் தொடர் சிவ வழிபாட்டு பூசை ஒன்றினை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளார்.

IMG_4517.jpg

நல்லாட்சி என்றார்கள்..
நல்லது நடக்கும் என்றார்கள்..
நல்லது நடக்கின்றது என்றார்கள்...

சொன்னவர்களும்....சொன்னதை கேட்டவர்களும்...தெய்வ ஆட்சியை நாடுகின்றனர்.
இதுதான் ஸ்ரீலங்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.