Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீன் வாடிகள் தீ வைப்பு : தென்னிலங்கை மீனவர் இருவர் கைது

Featured Replies

மீன் வாடிகள் தீ வைப்பு : தென்னிலங்கை  மீனவர் இருவர் கைது
 
 
மீன் வாடிகள் தீ வைப்பு : தென்னிந்திய மீனவர் இருவர் கைது
முல்லைத்தீவு - நாயாறுப் பகுதியில் இருந்த தென்பகுதி மீனவர்களின் மீன் வாடிகளை தீயிட்டுக் கொழுத்தியதான சந்தேகத்தின் பேரில் தென்னிலங்கை மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இது குறித்து மேலும் விபரம் தெரிய வருகையில்,
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக இரு வேறு இடங்களில் அமைந்திருக்கும் தென்பகுதி மீனவர்களின் மீன் வாடிகளை வேண்டுமென்றே தீயிட்டுக் கொழுத்தியதான சந்தேகத்தின் பேரில் இரு தென்னிலங்கை மீனவர்கள் நேற்று முன்தினம் மாலையில் முல்லைத்தீவுப் பொலிசாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நாயாறுப் பகுதியில் பருவகாலத்தில் மட்டுமே தொழில் புரிய தென்னிலங்கை மீனவர்கள் அமைத்த வாடிகளில் சிலவற்றினை கடந்த வெள்ளி இரவு சில விசமிகள் வேண்டுமென்றே தீயிட்டுக் கொழுத்தியதனையடுத்து பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் இவ்வாறு ஏற்பட்ட தீயினால் பாரிய சேதம் ஏதும் ஏற்படாதமையினால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய இன முறுகலகள் தவிர்க்கப்பட்டன.
 
இதன் காரணமாக, நேற்று முன்தினம் முழுவதும் பகல்வேளையில் பொலிசார் அப்பகுதியில் விசாரணைகளில் ஈடுபட்டு நடமாடியவேளையில் சுமார் 12 மணியளவில் மேலும் இரு பாரிய வாடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தீயிடப்பட்ட வாடிகளிற்குள் அதிகமான படகுளிற்கான வெளியிணைப்பு இயந்திரங்கள் வலைகள் என பெருந்தொகையாக காணப்பட்டுள்ளது. 
 
இவ்வாறு விசமிகள் வைத்த தீயானது வலைகளில் பரவியதனையடுத்து பாரிய தீ ஏற்பட்டது. இதனால் தீயினை கட்டுப்படுத்த முடியாது போனது. இருப்பினும் குறித்த தீ ஏனைய பகுதிக்கு பரவாது தடுப்பதில் தமிழ் மீனவர்களும் படையினரும் முழு மூச்சில் ஈடுபட்டனர். இவ்வாறு ஏற்பட்ட தீக்கான காரணம் இனம்தெரியாதோர் வைத்த தீ என்று மட்டும் கூறித் தப்பிவிட அங்கிருந்த இருவர் முயன்றனர்.
 
இருப்பினும் அப்பகுதியில் வேறு எவருமே நடமாடியதை அவதானிக்க முடியாத காரணத்தினால் அங்கிருந்த இருவரில் ஒருவரே தீயினை வைத்திருக்க வேண்டும் எனக் கருதிய பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். 
 
இப்பகுதியில் வாடி அமைத்துள்ள விடயம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிற்கு இடையில் நீண்டகாலம் முறுகல் நிலமை உள்ள நிலையில், இதனை மேலும் மெருப்பித்து மாவட்டத்தில் ஓர் குளப்பநிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே  இச் செயல் செய்யப்பட்டதாக உள்ளூர் மீனவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
 
இவ்வாறு திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் மேற்கொண்ட செயலிற்கான காரணமாக எதிர் வரும் 20 ஆம் திகதி இப்பகுதி வாடிகளின் விடயம் நீதிமன்றிற்கு வருவதாக இருக்கலாம் அல்லது கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான போராட்டத்தை குழப்பும் நோக்கமாகவும் இருக்கலாம். எது எவ்வாறாகினும் அப்பகுதியில் பொலிசார் சம்பவ நேரத்தில் நின்றமையினால் விசமிகளின் திட்டம் தடுக்கப்பட்டது.
 
இருப்பினும் இவ்வாறு ஏற்பட்ட தீயின் காரணமாக 60 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள. எரிந்து நாயமாகியமை வேதனைக்குரியது. என்றனர். 

http://www.onlineuthayan.com/news/23561

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.