Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

முதல்வர் பன்னீர்செல்வத்துடன், தலைமைச் செயலாளர், டிஜிபி திடீர் ஆலோசனை

Girija vaidyanathan, OPS

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று காலை திடீரென சந்தித்துப் பேசி வருகின்றனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று மதியம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வர உள்ள நிலையில் முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80226-girija-vaidyanathan-meets-cm-opaneerselvam-at-his-residence.art

  • தொடங்கியவர்

ஓபிஎஸ் அணியில் 6 எம்எல்ஏக்கள்: சசிகலாவுக்கு ஆதரவு கரைகிறதா?

 

 
sasikala_3110090f.jpg
 
 
 

அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக் கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வரை பன்னீர் செல்வத்தையும் சேர்த்து அவரது அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற 232 தொகுதிகளுக்கான தேர்தலில் 134 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. இதில், 131 பேர் அதிமுக வேட்பாளர்கள்; மற்ற மூவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத் தில் போட்டியிட்டவர்கள். இதில், மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சீனிவேலு மரணமடைந் தார். இதையடுத்து, அதிமுகவின் பலம் 133 ஆக குறைந்தது.

அதன்பின் கடந்தாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தொகுதிகளையும் ஆளும் அதிமுக கைப்பற்றியது. இதனால் அதிமுகவின் பலம் 136 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதால், அதிமுகவின் பலம் 135 ஆக குறைந்தது.

இதில் பி.தனபால் பேரவைத் தலைவராக இருப்பதால் கட்சியில் எழும் பிரச்சினைகளுக்கு வாக்களிக்க இயலாது. எனவே, அவர் எண்ணிக்கையில் வர மாட்டார். இதனடிப்படையில், அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 134 எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது ஓபிஎஸ் வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு கே.மாணிக்கம் (சோழவந்தான்), வி.சி. ஆறுகுட்டி (கவுண்டம்பாளையம்), மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங் கரை), ஏ. மனோகரன் (வாசுதேவ நல்லூர்), எஸ்.பி.சண்முகநாதன் (வைகுண்டம்) ஆகிய 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பதவியேற்பதில் சிக்கல்

இதன் காரணமாக சசிகலாவுக்கான ஆதரவு குறைந்து வருகிறது. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்கள் தேவை. இந்நிலையில் இன்னும் 20 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தாலும் கூட, சசிகலா பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும். இதை தவிர்க்கவே, இருக்கும் எம்எல்ஏக்களை தக்கவைக்க சசிகலா தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

'சில தகவல்களை வெளியிட நேரிடும்'! சசிகலாவுக்கு, பன்னீர்செல்வம் எச்சரிக்கை

ops_new_2_14160.jpg

"செயற்கையான குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும்" என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறப்போராட்டம். அதிமுக பொதுச் செயலாளராக வேண்டியவர் மதுசூதனன். கபட நாடகத்தை நிறைவேற்ற அமைச்சர்களை சசிகலா தூண்டி விட்டார். கட்சி, ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன் என ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் தந்தவர் சசிகலா. அரசியலில் பங்கேற்க மாட்டேன் என கடிதத்தில் உறுதியளித்திருந்தார். உதவியாக இருப்பதாக கூறி மீண்டும் வந்தார் சசிகலா.

ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி குடும்பச் சொத்தாக மாற்ற சசிகலா நினைக்கிறார். யார் நாடகமாடினார்கள், யார் துரோகம் செய்தார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளார். கபட நாடகத்தை நிறைவேற்ற அமைச்சர்களை சசிகலா தூண்டி விட்டார். செயற்கையான குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும்.

போயஸ் கார்டனுக்கு உறவினர்களை அழைத்து வந்து துரோகம் செய்தவர் சசிகலா. ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். போயஸ் கார்டன் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும்" என்ற கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80254-’we-will-reveal-important-details-panneerselvam-threatens-sasikala.art

  • தொடங்கியவர்

முதல்வர் பன்னீர்செல்வத்துடன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் சந்திப்பு!

Mathusoothanan admk

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க ஆதரவு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக அவரை நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைப் பகிரங்கமாகவே அறிவித்தார் பன்னீர்செல்வம். சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் மௌனமாக தியானம் செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொதுச் செயலாளராக மதுசூதனனை நியமிக்கலாம் என்று கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று திடீரென வருகை தந்தார். பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தற்போது உள்ள தமிழக அரசியல் சூழலில் அதிமுக மூத்த தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப்பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/80247-admk-mathusoothanan-meets-paneerselvam.art

இன்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

car121_14088.jpg

படம்: ஆ.முத்துக்குமார்

மும்பையில் இருந்து கிளம்பிய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வர இருக்கிறார். அவரை வரவேற்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையம் விரைந்துள்ளார். இந்நிலையில், ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேச இருக்கிறார். அதன் பின்னர் மாலை 7.30 மணிக்கு வி.கே.சசிகலாவும் ஆளுநரை சந்தித்துப் பேசுகிறார். ஏற்கெனவே, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80257-cm-opanneerselvam-to-meet-governor-vidyasagar-rao-at-5-pm.art

  • தொடங்கியவர்

’நான் ரொம்ப சின்சியர்ப்பா!’ களேபரத்திலும் கடமை கண்ணிய எம்.எல்.ஏ...! #OPSVsSasikala

தமிமுன் அன்சாரி

மிழக அரசியலே பரபரப்பாக இருந்து வருகிறது. அ.தி.மு.க என்ற இயக்கம் இரண்டாக உடைந்துள்ள நிலையில், ஆட்சியை எந்த அணி கைப்பற்றப்போகிறது என்ற பரபரப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் யார் பக்கம் இருக்கப் போகிறார்கள் என்ற சூழ்நிலையில், சசிகலாவின் பக்கமே அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று மாலை வரை நான்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஒ.பி.எஸ் பக்கம் இருந்தனர். சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் மகாபலிபுரம் அருகேயுள்ள உள்ள ஒரு ரிசார்ட்-ல் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மொத்தமுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 135 பேரில், இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் நின்றவர்கள் மூன்று பேர். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர்தான் அவர்கள். இவர்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் அவர்களும் அ.தி.மு,க சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். 

சசிகலாஇந்நிலையில், கருணாஸ், தனியரசு ஆகிய இருவரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரியின் நிலை என்னெவென்று தெரியாமல் இருந்தது. சசிகலா தரப்பில் இருந்து அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது “நான் எனது தொகுதியில் இருக்கின்றேன்” என்று பதில் சொல்லியுள்ளார். இந்நிலையில் இன்று மாலை சசகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரைச் சந்திக்க செல்கின்றனர். அப்போது தமிமுன் அன்சாரியும் அவர்களுடன் செல்வார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக தமிமுன் அன்சாரி சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு வந்து தனது தொகுதியில் இருந்து வந்திருந்த மனுக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், தனது கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்து வருகிறார். "தமிழக அரசியலே அல்லோலப்பட்டு கிடக்கும் நேரத்தில் மனுக்களைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்களே" என்று கேட்டால் “நான் சுயமரியாதை மிக்கவன். யாரையும் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் இருக்கின்றேன். என் தொகுதியில் இருந்து வந்துள்ள மனுக்களை இப்போது ஆய்வு செய்து வருகின்றேன். யாரையும் நான் இப்போது ஆதரிக்கப்போவதில்லை” என்கிறார் கூலாக. 

இரண்டு அணிகளாக பிரிந்து நின்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால், ஒவ்வொரு எம்.எல்.ஏவின் ஓட்டுக்களும் மிக முக்கியமானது. ஆனால், இவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கூலாக தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டுள்ளார். தனது கருத்தையும் முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80261-mla-who-won-in-admk-symbol-now-busy-in-seeing-filesopsvssasikala.art

  • தொடங்கியவர்
நல்லது நடக்கும்: பன்னீர் நம்பிக்கை

 

சென்னை: கவர்னர் மாளிகையில் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின்னர் முதல்வர் பன்னீர் செல்வம், தனது வீட்டில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை விரிவாக பேசி வந்துள்ளோம். உறுதியாக நல்லது நடக்கும். தர்மம்தனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் எனக்கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707553

  • தொடங்கியவர்

“சசிகலா எனும் நான்!”

24-வது நாளில் பொதுச்செயலாளர்... 62-வது நாளில் முதல்வர் தேர்வு!

 

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லையா? என்ன கொடுமை சின்னம்மா!

dot.png மன்னார்(குடி) அன் கம்பெனி!

dot.png ‘அக்கா நீங்கள் கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா?? மதியம் சாப்பிட என்ன வேண்டும்!’

dot.png குனி என்றால் விழுகிற கேவலத்தை விட இது மேல். நல்லவேளை நான் பெரியகுளத்துல பிறக்கல.

dot.png ட்ரம்ப், மோடி, சசிகலா!

dot.png இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது!

dot.png எல்லோரும் ஓடுங்க... அவங்க நம்மள நோக்கிதான் வர்றாங்க!

dot.png ஜெயலலிதா மரணத்திலிருந்த மர்மம் ஒரு வழியாக இன்று தீர்க்கப்பட்டுவிட்டது!

dot.png ஜெயலலிதாவை இரண்டாவது முறை குழி தோண்டிப் புதைத்த நாள் இது.

- சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட கணத்தில் இருந்து ஃபேஸ்புக்கில் கிளம்பிய அரசியல் மொழிகள் இவை.

p6a.jpg

அறுபது நாட்களில் ஆட்சியைப் பிடிப்பது எப்படி?

 ஜெயலலிதா 75 நாட்கள் அப்போலோவில் வாசம் செய்து... அவர் இறந்த 24-வது நாளில் பொதுச்செயலாளர் ஆகி... 62-வது நாளில் முதல்வராகத் தேர்வாகியிருக்கிறார் சசிகலா. 33 ஆண்டு காத்திருப்புக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது சசிகலாவுக்கு.

போயஸ் கார்டன் மந்திராலோசனை!

ஒரு வார இடைவெளிக்குள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-கள் கூட்டம் என்றதுமே ‘அடுத்த முதல்வர் சசிகலா’ என பேச்சுகள் கிளம்பிவிட்டன. ‘‘தொகுதிகளின் குறைகள், பிரச்னைகளை எழுதிக் கொண்டு வாருங்கள்’’ என ஒரு உத்தரவு மட்டும்தான் அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-களுக்குப் போனது. அதை ஃபைல் போட்டு தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு வந்தார்கள். கூட்டம் பிற்பகலில்தான் நடந்தது. ஆனால், முற்பகலில் போயஸ் கார்டனில் மந்திராலோசனை நடந்து கொண்டிருந்தது. முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் அங்கே ஆஜர். சசிகலாவிடம், ‘‘கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒருவரே தலைவராக இருக்க வேண்டும். அதனால், நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனச் சொன்னார் ஓ.பி.எஸ். அதன்பிறகு ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் காட்டினார். பிறகு, அதை கவர்னர் மாளிகைக்கு அனுப்பினார். “உங்கள் வருகைக்காக எம்.எல்.ஏ-க்கள் காத்திருக்கிறார்கள். உங்களை முதல்வராகத் தேர்வு செய்ய நினைக்கிறோம்’’ என்றார் பன்னீர். அப்படியான எந்த அறிவுரையும் எம்.எல்.ஏ-க்களுக்கு சொல்லப்படாத நிலையில், ‘அவர்கள் காத்திருக்கிறார்கள்’ என ஓ.பி.எஸ் சொன்னதும், அமைச்சர்கள் அவரை ஆச்சர்யத் தோடு பார்த்தனர். முன்கூட்டியே பன்னீரும் சசிகலாவும் இதுபற்றி பேசி இருக்கிறார்கள் என்பது அமைச்சர்களுக்கே அப்போதுதான் தெரிந்தது.

எம்.எல்.ஏ-க்களுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவித்து, அவர்களை ரெடி செய்ய அமைச்சர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்துக்குப் போய்விட... பன்னீர்செல்வத்தோடு சசிகலா ஒரு மணி நேரத்துக்கும் மேல் தனியாக ஆலோசனை நடத்தினார்.

p6.jpg

கையெழுத்து சம்பிரதாயம்!

‘இரண்டு மணிக்குக் கூட்டம்’ என அறிவித்திருந்தபோதும் ஒரு மணிக்கே எல்லோரும் ஆஜர். கையில் ஃபைல்கள். தங்கள் தொகுதியில் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இனி நிறைவேற்ற வேண்டிய பணிகள் பற்றிய விவரங்கள் எல்லாம் அந்த ஃபைல்களில் இருந்தன. உள்ளே நுழைந்த எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகிய மூவருக்கும் அழைப்பு போனது. அவர்களுக்கும் அதே தொகுதி பிரச்னைகள்தான். அவர்களை நேராக கார்டனுக்கு அழைத்துக் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

கையெழுத்து நேரம் மதியம் 1.41 மணி!

கட்சியின் சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், தங்கமணி போன்றவர்கள் இரண்டு மணியில் இருந்தே சசிகலாவை வரவேற்க அலுவலகத்தின் வாயிலில் காத்திருந்தனர். அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோகுல இந்திரா, உற்சாகம் பொங்க நின்று கொண்டிருந்தார். முகத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏறியிருந்த பவுடர், வியர்வையில் வழிய ஆரம்பித்தது. இரண்டரை மணிக்கு ஓ.பி.எஸ் வந்து சேர்ந்தார். கூட்டம் நடக்கும் முதல் மாடிக்குச் சென்று அமர்ந்து கொண்டார். மூன்று மணி ஆகியும் சசிகலா வரவில்லை. ராஜினாமா கடிதத்தில் பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டபோது நேரம், மதியம் 1.41. மணி. அது போய்ச் சேர்ந்த தகவல் உறுதியான பிறகுதான், அவர் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அதற்குள் அவரது ராஜினாமா செய்திகள் கசிய ஆரம்பித்தன. ‘‘பொருளாளராகிய நான் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக சின்னம்மா அவர்களை முன்மொழிகிறேன். முதல் அமைச்சர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்” என எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவித்தார் பன்னீர்செல்வம். இந்தப் பேச்சு அப்படியே ஜெயா டி.வி.யில் லைவ் ஆனது. சசிகலா வராமலேயே அறிவிப்பு முதலில் வெளியானது. ‘அ.தி.மு.க சட்டமன்றக் கட்சி தலைவராக வி.கே.சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறோம்’ என்கிற வாசகம் எழுதப்பட்ட பேப்பரில் எம்.எல்.ஏ-களிடம் கையெழுத்துப் பெறும் படலம் நடந்தது.

‘‘எல்லாம் ரெடி.. நீங்க வரலாம்மா’’

அறிவிப்பு வெளியானதும், செங்கோட்டையன் கார்டனைத் தொடர்பு கொண்டார். “இங்கு எல்லா ஃபார்மாலிட்டிகளும் முடிந்துவிட்டன. சின்னம்மா கிளம்பி வரலாம்’’ எனச் சொல்ல... அதன்பிறகு சசிகலாவின் கார், கார்டனில் இருந்து தலைமை அலுவலகம் நோக்கிக் கிளம்பியது. மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டிருந்ததால் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க ஆட்கள் குவிக்கப்பட்டிருந்தனர். சசிகலாவுடன் டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை கலர் சேலையை சசிகலா அணிந்திருந்தார். ஜெயலலிதாவைப் போலவே தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் போலவே சிரிக்கவும் கைகளை அசைக்கவும் சசிகலா முயற்சி செய்தாலும், ஜெயலலிதா வந்தால் தொண்டர்களிடம் இருக்கும் உற்சாகம் சசிகலாவுக்கு மிஸ்ஸிங்.

p6b.jpg

சசி அருகில் ஓ.பி.எஸ்!

ஏற்கெனவே ஜனவரி 27-ம் தேதிதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. அதற்குள் அடுத்த கூட்டம். முந்தைய கூட்டத்தில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை தனது பக்கத்தில் உட்கார சசிகலா அனுமதிவில்லை. அதனால் எதிரில் எம்.எல்.ஏ-க்களோடு கூட்டத்தில் ஒருவராகத்தான் அவர் அமர்ந்திருந்தார். ஆனால், 5-ம் தேதி கூட்டத்தில் சசிகலாவுக்கு அருகில் பன்னீர்செல்வத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் பேசிய சசிகலா, “அம்மா இறந்தவுடனே கட்சிப் பொறுப்பையும் முதல்வர் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று பன்னீர்செல்வம் என்னிடம் வற்புறுத்தினார். அப்போதைய மனநிலையில் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அனைவரும் வற்புறுத்துவதால் உங்கள் கோரிக்கையை நான் ஏற்கிறேன். அம்மாவின் வழியில் இந்த ஆட்சி செயல்படும் என்ற உறுதிமொழியைத் தருகிறேன்” எனப் பேசினார். சசிகலா அங்கிருந்து கிளம்பியபோது, “முதல்வர் சின்னம்மா” என்ற கோஷம் புதியதாக ஒலிக்கத் தொடங்கியது.

சசிகலாவின் திட்டம்தான் என்ன?

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். வரும் ஜூலை மாதம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைகிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி-க்கள், மாநில சட்டமன்றங்களின் எம்.எல்.ஏ-க்கள்தான் ஓட்டுப் போட்டு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். ஜூலை மாதம் இந்தத் தேர்தலை நடத்த வசதியாக, காலியாக இருக்கிற தொகுதிகளில் எல்லாம் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி உட்பட காலியான தொகுதிகளின் தேர்தலை ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடித்துவிடும் தேர்தல் கமிஷன். அதன்பிறகுதான் ஜனாதிபதி தேர்தல் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கும்.

p6d.jpg

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ-க்களும்தான் வாக்காளர்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு, அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு தோராயமாக 176. தமிழக எம்.எல்.ஏ-க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234*176) 41,184. ஒரு எம்.பி-யின் ஓட்டு மதிப்பு 708. 543 மக்களவை எம்.பி.க்களும், 233 ராஜ்யசபா எம்.பி-க்களும் மாநில எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து மொத்தமாக 4 ஆயிரத்து 896 ஓட்டுப் போடுவார்கள். மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அந்தக் கட்சியை சேர்ந்தவருக்குத்தான் ஜனாதிபதி சான்ஸ் அடித்து வருகிறது. அந்த வகையில் தாங்கள் நினைக்கும் நபர்களை பெரிய எதிர்ப்பின்றி ஜனாதிபதி பதவியிலும், துணை ஜனாதிபதி பதவியிலும் அமர வைக்க நினைக்கிறது பி.ஜே.பி. அ.தி.மு.க-வுக்கு 134 எம்.எல்.ஏ-க்களும் 49 எம்.பி.களும் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவை முழுமையாகப் பெற நினைக்கிறது பி.ஜே.பி. ‘‘ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க.வை அடிபணிய வைப்பதில் பி.ஜே.பி-க்கு அதிக சிரமம் இல்லை. அதன் வெளிப்பாடுதான் ஜெயலலிதா எதிர்த்த உதய் திட்டம், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை என பல விஷயங்களில் பி.ஜே.பி-க்கு தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. இருக்கிறது. தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் துணை ராணுவத்தை வைத்து மத்திய அரசு சோதனை போட்டபோதுகூட வாய் மூடியிருந்தது அ.தி.மு.க. இது எல்லாமே ஜனாதிபதி தேர்தலைக் குறி வைத்து செய்யப்பட்டதுதான். ஜனாதிபதி தேர்தலில் பிஜே.பி-க்கு நிபந்தனையற்ற ஆதரவை சசிகலா தருவார் அதற்கான டீலிங்தான் முதல்வர் பதவியில் சசிகலா அமர்வது’’ என்கிறார்கள் அ.தி.மு.க.வி-ன் முக்கியப் புள்ளிகள்.

பொம்மை ஆட்சியா?

பீகாரில் அசைக்க முடியாத செல்வாக்கோடு இருந்த காங்கிரஸை வீழ்த்திவிட்டு ஆட்சியில் அமர்ந்தவர் லாலு பிரசாத் யாதவ். அங்கே அவரின் கொடி பறந்த காலக்கட்டம் அது. 1997-ம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு சிக்கினார். அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்து சிறைக்குப் போனார். ‘அடுத்த முதல்வர் யார்’ என்ற கேள்வி எழுந்தபோது திடீர் திருப்பமாக தன் மனைவி ராப்ரிதேவியை முதல்வராக்கினார் லாலு. இளம் வயதில் அரசியலில் தீவிரமாக லாலு ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது லாலு ஏழைதான். பால்காரரின் மகன் லாலுவுக்கு ராப்ரிதேவியை திருமணம் செய்து வைத்தார்கள். ராப்ரிதேவியின் குடும்பம் வசதி படைத்தது. திருமணம் நடந்தபோது ராப்ரி தேவிக்கு 14 வயதுதான் இருக்கும். அவருக்கு அரசியல் புரிதல் சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை. காரணம், அவருக்கு எழுதக்கூட தெரியாது. ‘‘ராப்ரி எப்படி ஆட்சி நடத்துவார்’’ என லாலுவிடம் கேள்வி எழுப்பினார்கள் பத்திரிகையாளர்கள். ‘‘முதலமைச்சராக சிறப்பாக செயல்பட மனைவி ராப்ரிக்கு இரண்டுநாள் பயிற்சி கொடுத்திருக்கிறேன். அவர் தரும் சிறப்பான ஆட்சியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’’ என சிரிக்காமல் சொன்னார் லாலு. சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபடியே நிழல் முதல்வராக நீடித்தார் லாலு.

p6c.jpg

தான் சிறைக்குப் போனாலும் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள லாலு போட்ட திட்டங்கள் ஏராளம். அதில் ஒன்றுதான், அதிருப்தியாளர்கள் உருவாகிவிடாமல் இருக்க பலருக்கும் அமைச்சர்கள் பதவியை வாரிக் கொடுத்தது. ராப்ரி அமைச்சரவையில் 74 பேர் அமைச்சர்கள். அந்த அமைச்சர்களின் ஒரு சிலரின் பெயர்கள்கூட ராப்ரிக்கு தெரியாது. ‘‘அமைச்சர்கள் அனைவரின் பெயர்களையும் ராப்ரி சரியாகச் சொன்னால் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுகிறேன்’’ என எதிர்க்கட்சியினர் சவால்விட்டார்கள். கையெழுத்துப் போடக்கூடத் தெரியாத ராப்ரி முதல்வராக இருந்து ஃபைல்களை எல்லாம் பார்த்தது எல்லாம் பீகார் அரசியலின் காமெடி பக்கங்கள். அந்த பொம்மை ஆட்சிதான் இப்போது தமிழகத்தில் அரங்கேறுகிறது. நடராசன் பின்னால் இருந்துகொண்டு சசிகலாவை இயக்கும் காட்சிகள்தான் அரங்கேறும்.

ராப்ரி தேவியைப் போலவே சசிகலாவுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அது, இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் வெளிப்பட்டது. இந்தியா டுடே பத்திரிகை தமிழில் நிறுத்தப்பட்ட விஷயம்கூட தெரியாமல், அந்தப் பத்திரிகை சிறப்பாக வருகிறது எனச் சொன்னவர் அவர். சசிகலா பொம்மைதான். ஆட்டுவிக்கும் கயிறு நடராசன் கையில் இருக்கும். எனவே, பல விநோதக் காட்சிகளை இனி தமிழகத்தில் அடிக்கடி பார்க்கலாம்!

http://www.vikatan.com/juniorvikatan/

  • தொடங்கியவர்

மக்களோட தலையெழுத்து 135 பேர்கிட்ட இருக்கு: நடிகர் விசு உருக்கம்

நடிகர் விசு

மிழ்நாட்டு அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் சூழலில், இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் சசிகலா. இந்நிலையில் நடிகர் விசு உணர்ச்சிப்பூர்வமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவ்வீடியோவில் அவர் பேசிய விபரங்கள்...

"இப்போ தமிழ்நாட்டோட பொலிடிக்கல் சூழ்நிலை என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும். 

மிஸ்டர் பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகையை நோக்கிப் போயிருக்காரு. அவருக்கு அஞ்சு மணிக்கு அப்பாயின்ட்மென்ட். அஞ்சுங்கிறதை எதுக்குச் சொல்லுவோம். பஞ்ச பூதங்களுக்குச் சொல்லுவோம். பஞ்ச பாண்டவர்களுக்குச் சொல்லுவோம். இதெல்லாம் பாசிடிவ் சைடு.

சசிகலாமாவுக்கு ஏழறை மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்காங்க. ஏழறைன்னு எதுக்கு சொல்லுவோம்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்.

என்னடா இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ஜெயா டிவிக்காக நான் மக்கள் அரங்கம்ங்கிற நிகழ்ச்சியை நடத்தினேன். முதல்ல ஒருநாள் மேடம் புரட்சித்தலைவியை பார்த்ததோட சரி. அதுக்கப்புறம் என்னை ஒருதடவைக்கூட பார்க்கவிடலை. நானும் வெளிலயும் சொல்ல முடியல.

மிஸ்டர் பன்னீர்செல்வம் எவ்ளோ கஷ்டப்பட்டாரோ இப்போ, அதே கஷ்டம்தான் எனக்கும். ஜெயலலிதாவை பார்க்கவே முடியல. இத்தனைக்கும் பப்ளிக்கை வெச்சு நான் ஷோ பண்ணிட்டு இருந்தேன். அப்போ என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு நான் போய் சொல்லணும் இல்லையா. ஆனா சொல்லவே முடியல.  யார் யார் எல்லாமோ வந்தாங்க. என்னன்னம்மோ இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தாங்க. அவர் ஆளு கொடுக்குறதை, அடுத்த ஆள் மாத்தி சொல்லுவான். இப்படித்தான் யாரோ ஒரு குடும்பமா..என்னன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. இதுக்கூட நடக்குமான்னு நீங்க யோசிக்கலாம். யோசனை பண்ணிப் பாருங்க. 

 

 

மேடம் இறந்த பொழுது அவங்க பக்கத்துல யாரு நின்னாங்க. யார் யாரோ நின்னாங்க. இதேதான் அவங்க ஆட்டிடியூட். ஒருவேளை அரசாங்கத்தை அவங்க கையில ஒப்படைச்சா அங்கயும் யார் யாரோ வருவாங்க. என்னன்னம்மோ பண்ணுவாங்க. நான் இதை மக்கள்ட ஒண்ணும் கேட்க முடியாது. இந்த மக்களோட தலையெழுத்து 135 (எம்.எல்.ஏ.க்களை) பேர்கிட்ட இருக்கு. நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். எங்க வாழ்க்கை உங்ககிட்ட இருக்கு. ப்ளீஸ். ப்ளீஸ். சப்போர்ட் மிஸ்டர் ஓபிஎஸ் அண்ட் டெஃபனட்லி நாட் சசிகலா" இவ்வாறு கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/80316-visu-told-the-caps-are-135-mlas-survival.art

  • தொடங்கியவர்

ஸ்டாலினோட சிரிப்புக்கு அப்புறமா இவ்ளோ நடந்துபோச்சு மக்களே!

`துன்பம் வரும்போது சிரிங்க'ன்னு சொல்வாங்க, ஆனா அ.தி.மு.க. கட்சில மட்டும் சிரிப்புனாலதான் துன்பமே ஆரம்பிக்குது. அ.தி.மு.க-வுக்கும் சிரிப்புக்கும் அப்படி என்னதான் முன் ஜென்மப் பகைன்னு தெரியலை, எப்போதும் சிரிப்பாலேயே அவங்க கட்சியில் நிறைய பிரச்னை வருது. அதெல்லாம் இருக்கட்டும் ஸ்டாலின் கொஞ்சநாள் முன்னாடி பன்னீர்செல்வத்தைப் பார்த்து சிரிச்சதா சசிகலா சொல்லி இருந்தாங்க. பன்னீர்செல்வத்தைப் பார்த்து ஸ்டாலின் கொடுத்த அந்தச் சின்ன ஸ்மைலி என்னலாம் செஞ்சிருக்குனு யோசிச்சுப் பார்த்தோம்.

சசிகலா

* ஸ்டாலின், பன்னீர்செல்வத்தைப் பார்த்து சிரிச்ச கொஞ்சநாள்லயே அவர் ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் பண்ணார். காலம்காலமா அமைதியா இருக்கிறதையே உலக வழக்கமா வெச்சிருந்த பன்னீர்செல்வம் திடீர்னு `புதிய பன்னீர்செல்வமா` மாறினத்துக்கும் முக்கிய காரணம் ஸ்டாலினோட அந்தச் சிரிப்புதான் பாஸ். #பவர்_ஃபுல்_சிரிப்பு

* அதுவரைக்கும் சசிகலாவை சின்னம்மான்னு மரியாதையா கூப்பிட்டுக்கிட்டு இருந்த பன்னீர் செல்வம் அந்த தியான நிலைக்கு அப்புறம் சசிகலாவை சசிகலான்னு பெயர் சொல்லியே கூப்பிட ஆரம்பிச்சுட்டார். அ.தி.மு.க-வில் எல்லாரும் சின்னம்மான்னு பய பக்தியா கூப்பிட்டுக்கிட்டு இருந்தப்ப இவர்தான் முதல்முதலா அவரை சசிகலான்னு கூப்பிட்டார். இப்போ நிறைய பேர் அப்படிக் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கும் ஸ்டாலின் சிரிப்புதான் காரணம். #டிரான்ஸ்ஃபர்மேஷன்_சிரிப்பு

* அதுக்கு அப்பறம் நடந்ததுதான் மிக முக்கிய ட்ரெண்ட். அமைச்சர்கள் எல்லாருக்கும் கோல்டன் பே ரெசார்ட்ல ரூம் எடுத்துக் கொடுத்து ஒரு வாரமா பேச்சுவார்த்தை நடத்துக்கிட்டு இருந்தாங்க. தமிழ்நாட்டுல இருக்கிறவங்களுக்கே அதுக்கு முன்னாடி கூவத்தூர்னு ஓர் ஊர் இருக்கிறது தெரியாது. ஆனா ஸ்டாலின், பன்னீர் செல்வத்தைப் பார்த்து சிரிச்சதாலதான் கூவத்தூர் அதுக்கு அப்பறம் ஆல் இந்தியா லெவல்ல ட்ரெண்ட் ஆனது. இப்போ கூவத்தூர் தமிழக அரசியலின் ஓர் அடையாளம். #ட்ரெண்டிங்_சிரிப்பு

ஓ.பன்னீர்செல்வம்

* எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச அ.தி.மு.க கடந்த ஒரு வாரம் சந்திச்சதை விட அதிகமா வேற எப்பவும் பிரச்னையை சந்திச்சு இருக்காது. கட்சியில் இருந்த முக்கியத் தலைவர்களை சசிகலா நீக்க, சசிகலா மதுசூதனனை நீக்க, சசிகலாவை மதுசூதனன் நீக்க, மாஃபா பாண்டியராஜன் ஓ.பி.எஸ் டீமுக்கு மாறன்னு கட்சில ஒரே வாரத்தில் மாத்தி மாத்தி ஓடிப்புடிச்சு விளையாண்டு இருக்காங்க. இது எல்லாம் நடந்ததுக்கு ஒரே காரணம்... வேற என்ன நம்ம ஸ்டாலின் சிரிப்புதான். #நீக்கி_நீக்கி_விளையாடுற_சிரிப்பு

* அதுவரைக்கும் பேசவே தெரியாம இருந்த சசிகலா தினமும் நாலு பிரஸ் மீட் வெச்சு ஏதாவது புதுசு புதுசா பேசிக்கிட்டே இருந்ததுக்கும் அதுதான் காரணம். முக்கியமா அவங்க அவங்களையே `சிங்கம்'னு சொல்லிக்கிட்டதுக்கும், `ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்'னு சொல்லிக்கிட்டதுக்கும்கூட அதுதான் காரணம்.

* அ.தி.மு.க. கட்சி பழைய மாதிரி ஒற்றுமையா இருந்து, சசிகலாவுக்கு எதிரா தீர்ப்பு வந்து இருந்தா கண்டிப்பா ஓ.பி.எஸ்-தான் முதல்வரா தொடர்ந்து இருப்பார். ஆனா அவர்தான் ஸ்டாலினைப் பார்த்து சிரிச்சிட்டாரே இப்போ ஓ.பி. எஸ்கிட்ட இருந்த முதல்வர் பதவி கை மாறி கை மாறி எங்கேயோ இருந்த எடப்பாடி பழனிசாமி கைக்கு போயிட்டு. எல்லாத்துக்கும் ஸ்டாலின் சிரிப்புதான் காரணம். #பட்டர்ஃபளை_எஃபெக்ட்_சிரிப்பு

* அதுவரைக்கும் தன்னோட கோபத்தை எல்லாம் கட்சிக்காரங்கிட்ட மட்டுமே காட்டிக்கிட்டு இருந்த சசிகலா ஜெயிலுக்குப் போறதுக்குக் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஜெயலலிதா சமாதியில் கோபமா அடிச்சு எல்லோருக்கும் முன்னாடி அவங்க உணர்ச்சியை வெளிப்படுத்துனாங்க. சசிகலா சபதம் எடுத்ததுக்கும், அது பெரிய மீம் டெம்ப்ளேட் ஆனதுக்கும் காரணம் எல்லாம் ஸ்டாலினோட சிரிப்புதான். #மீம்_சிரிப்பு

ஸ்டாலின்

* இவ்வளவு நாள் கட்சியில் இல்லாம இப்போ திடீர் ஜாக்பாட் அடிச்ச மாதிரி நேரா கட்சியோட துணைப் பொதுச்செயலாளரா தினகரன் மாறினத்துக்கும் அதே ஸ்டாலினோட சிரிப்புதான் காரணம். அவரைக் கட்சியைவிட்டு மதுசூதனன் நீக்கினதா அறிவிச்சதுக்கும் அதுதான் காரணம். இனி தமிழ்நாட்டு அரசியல்ல நடக்கப்போற எல்லாத் திருப்பத்துக்கும் ஸ்டாலினோட அந்த சிங்கிள் ஸ்மைலிதான் காரணம்.

ஆகவே, மக்களே இதெல்லாம் இன்னொரு தடவை நடக்கக் கூடாதுன்னுதான் `முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னைப்பார்த்து சிரிக்கக் கூடாது'ன்னு ஸ்டாலின் இப்பவே அறிக்கை விட்டிருக்கார். மொத்தத்தில் சிரிப்பது அரசியலுக்கும் மக்களின் தூக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். கும்மோ கும்! 

http://www.vikatan.com/news/politics/81150-these-are-the-aftereffects-of-stalins-smile.html

  • கருத்துக்கள உறவுகள்

நாளை காலை 11 மணி முதல் கிளைமெக்ஸ் சீன் .. பெட்டியா ? சட்டியா ?
டிஸ்கி :
மற்ற செய்திநிறுவனங்கள் செய்தியை கொஞ்சம் 1 வினாடி லேட்டாக தரும் ... இந்நெரம் .மன்னார் குடி மாப்யா கோஸ்ரியலுக்கு நிலவரம் தெரிந்து இருக்கும் ..! ஆகவே காலை 10 முதலே ஜெயா செய்தி குழுமத்தில் சத்திய காமெடியா ? அல்லது  எம்.ஜி.ஆர்  - ஜெயலலிதா இணைந்து  நடித்த பாடல் காட்சிகளா என்பதை பார்த்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர இயலும் ..!! :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.