Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி3 (சிங்கம்3) விமர்சனம்

Featured Replies

சி3 (சிங்கம்3) விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி

ஒளிப்பதிவு: ப்ரியன்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: ஹரி

 

இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார்.

விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

 

Si3 (Singam 3) review

 

இந்தக் கொலையில், வெளிநாட்டிலிருந்து விஷக் கழிவுகளைக் கொண்டுவந்து இந்தியாவில் எரிக்கும், காலாவதியான மருந்துகளை இந்தியாவில் விற்று காசு பார்க்கும் கொடிய கும்பல், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல்வாதிகள் பின்னணி இருப்பதை சூர்யா கண்டுபிடிக்கிறார்.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சூர்யா எப்படித் தண்டிக்கிறார் என்ற டெம்ப்ளேட் கதைதான் சி3. ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் செம விறுவிறு... ஒரு ஆக்ஷன் கதையில் எத்தனை ஓட்டைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... கதை அரைத்த மாவாகவே கூட இருக்கட்டும். ஆனால் காட்சிகளை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடத்தும் வித்தை கை வந்தால் ஒவ்வொருவரும் ஹரிதான்!

 

Si3 (Singam 3) review

 

சி3 எனும் சிங்கம் 3 படத்தைப் பார்க்கும் யாரையும் யோசிக்கவே விடவில்லை ஹரி. பரபரவென நகர்கின்ற காட்சிகள். அதே நேரம் காதைக் கிழிக்கிறது சத்தம். எல்லோரும் ஹை டெசிபலில் கத்திக் கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

முதல் இரு பாகங்களில் வந்த அதே துரை சிங்கம் சூர்யா. ஆனால் முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதல் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். பார்க்கிறவர்களின் ரத்தத்தைச் சூடாக்கும் பரபர நடிப்பு. வசன உச்சரிப்பில் அனல் கக்குகிறார். ஆனா இவ்ளோ கத்தாதீங்க சூர்யா... தொண்டைக்கும் இதயத்துக்கும் நல்லதல்ல, உங்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும்தான்.. அப்புறம் காதல் காட்சிகளில் எதற்கு இத்தனை விறைப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸா லவ் பண்ணுங்க பாஸ்!

 

சூர்யாவுக்கு இளம் ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார் அனுஷ்கா. இருந்தாலும் ரசிக்க வைக்கிறது அவரது அழகு. நல்ல வேளை இந்தப் படத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.

 

Si3 (Singam 3) review

 

துப்பறியும் பத்திரிகையாளராக வரும் ஸ்ருதி, வழக்கம் போல சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முந்தைய படத்தில் ஹன்சிகா செய்ததைத்தான் இதில் ஸ்ருதி செய்கிறார். பெரிதாகக் கவரவில்லை. சூரியுடன் அவரது காமெடிக் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன.

ரோபோ சங்கர் - சூரி காமெடிக் காட்சிகள் வருவதும் தெரியவில்லை, கடந்து போவதும் தெரியவில்லை. அத்தனை வேகம். அனுபவித்து சிரிக்க கொஞ்சம் அவகாசம் தந்திருக்கலாம் இயக்குநர்!

படத்தில் இரண்டு வில்லன்கள். ஏகப்பட்ட பாத்திரங்கள். வில்லனைத் தவிர, மற்றவர்கள் வந்தார்கள், சென்றார்கள். பாடகர் க்ரீஷுக்கும் ஒரு வேடம் தந்திருக்கிறார்.

Si3 (Singam 3) review

 

ஹரிக்கு ஏற்ற கேமிராமேன் ப்ரியன். ஹாரிஸ் ஜெயராஜினி இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மண்டைக்குள் செம குடைச்சல்! எடிட்டிங்கில் இன்னும்கூட கவனம் செலுத்தியிருக்கலாம் விடி விஜயன். அவரும்தான் என்ன செய்வார், 18 லட்சம் அடி எடுத்து, அதை 14 ஆயிரம் அடியாக்குவது சாமான்ய விஷயமா என்ன!

Si3 (Singam 3) review

வேகம் ஓகே.. இன்னும் கூட விவேகத்தோடு தந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் மீறி ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகம் இந்த சி3!


Read more at: http://tamil.filmibeat.com/reviews/si3-singam-3-review-044668.html

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: சி 3

 

 
 
singam3review_3131609f.jpg
 
 
 

விசாகப்பட்டினத்தின் காவல் ஆணையராக இருந்த ஜெயப் பிரகாஷ் கொடூரமாகக் கொல் லப்படுகிறார். கொலையாளிகளைப் பிடிக்க முடியாத அரசுக்கு நெருக்கடி உருவாகிறது. இதனால் ஆந்திர உள்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று விசாகப்பட்டினம் செல்லும் துரைசிங்கம் (சூர்யா), அங்கு சிபிஐ விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். உள்ளூர் கொலை யாளிகளைப் பிடிக்கச் சென்ற வருக்கு சர்வதேச அளவில் இயங்கும் பெரிய திமிங்கிலமே தட்டுப்படுகிறது. அந்தத் திமிங்கிலம் யார், அது சிங்கத்தின் வேட்டையில் சிக்கியதா, இல்லையா என்பதுதான் ‘சிங்கம் 3’.

ஹரி - சூர்யா கூட்டணியின் ‘பிராண்ட்’ ஆக மாறியிருக்கும் சிங்கம் வரிசைப் படங்களில் இது மூன் றாவது. கடந்த 2 படங்களின் தொடர்ச்சியாகவே இதன் திரைக் கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வணிக அம்சங்களுக்கும் இடமளித்து, விறுவிறுப்பாக நகர்ந்து செல்ல வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளும் ஹரி பாணி திரைக்கதையின் முத்திரை கள் படம் முழுக்க விரவியிருக் கின்றன. யோசிக்கக்கூட இடை வெளி தராமல் அடுத்தடுத்து விறு விறுப்பாகச் சம்பவங்களை அமைத் துப் படுவேகமாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறார் ஹரி.

ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, சூரி தொடர்பான காட்சிகள் சுவாரஸ்ய மின்றிக் கடந்துபோனாலும், அதை யும் ஈடுகட்டும் அளவுக்குத் திரைக்கதையில் திருப்பங்களும், சுவாரஸ்யமும் உள்ளன.

பொழுதுபோக்குப் படத்திலும் மின்னணு, மருத்துவக் கழிவுகள் பற்றிய கவலையை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. வசனங்கள் கரம் மசாலா!

சூர்யா, ஒரு கட்டத்தில் சிபிஐ பொறுப்பில் இருந்து வெளியேறி ஆந்திர போலீஸாகப் பொறுப் பேற்றுத் தன் வேட்டையைத் தொடர்வது, விசாகப்பட்டினத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதாவைப் பிடிக்க, சரியான தருணத்துக்காகப் பதுங்கிப் பாய் வது, கடல் கடந்து இயங்கும் வில்லனைத் தேடிச் சென்று, சூசகமாக மிரட்டிவிட்டு மின்னலென மறைவது, நிர்பந்தங்களில் சிக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்துவது என நாயகனின் சாகசச் சித்திரத்தை வரைவதற்கு இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், அதில் சிறிதளவுகூட நாயகிகளின் பாத்திர வார்ப்புக்குக் காட்டவில்லை.

பத்திரிகையாளர் திவ்யா (ஸ்ருதி ஹாசன்) கதாபாத்திரத்தின் அறி முகம், அதன் அணுகுமுறை, முடிவு ஆகியவை ஹீரோயிசத்துக்கு முட்டுக்கொடுக்கவும் கவர்ச்சிக் காகவும்தான் பயன்பட்டிருக்கின்றன. முக்கியக் கதையில் ஸ்ருதியால் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. அனுஷ்கா கதாபாத்திரமும் வீணடிக் கப்பட்டிருக்கிறது. வில்லனைக் கொடூரமானவனாகக் காட்டி, அதன் அடிப்படையில் போலீஸ் செய்யும் எந்த அத்துமீறலையும் சகஜப் படுத்திவிடும் தனது வழக்கத்தை இதிலும் கடைபிடித்திருக்கிறார் ஹரி. பெண்களுக்குக் கலாச்சார வகுப்பெடுக்கும் பழக்கத்தையும் தொடர்கிறார். ‘கலாச்சாரம்’ என்ற பெயரில் பெண்களுக்குக் கோடு போடும் இயக்குநர், சூரி சம்பந்தப் பட்ட நகைச்சுவைக் காட்சிகளில் அதே கண்ணியத்தைக் காட்டியிருக்க வேண்டாமா?

விசாகப்பட்டினம் ரயில் நிலை யத்தில் இறங்கும்போதே ரவுடி களைச் சாய்க்கும் சூர்யாவின் கம்பீர உடல்மொழி, க்ளைமாக்ஸ் சண்டை வரை கச்சிதமாகத் தொடர்கிறது. படம் முழுவதையும் அவரே தூக்கிச் சுமக்கிறார் என்பதோடு, கடைசிவரை தனது கதாபாத்திரத்துக்கு எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முனைப்புடன் உழைத்திருக்கிறார். சுறுசுறுப்பான உடல்மொழியோடு காட்சிக்குத் தேவையான அழுத்தங்களுடன் கூடிய தேர்ந்த வசன உச்சரிப்பும் அவரது பலம். இந்தப் படத்தில் வசன உச்சரிப்பில் இன்னும் கவர்ந்துவிடுகிறார்.

விட்டல் கதாபாத்திரத்தில் நடித் திருக்கும் அனுப் தாக்கூர் சிங் - வில்லத் தனத்துக்கு மோசம் இல்லை!

ஹரி படங்களில் கதைக்கு வெளியே நகைச்சுவை துருத்திக் கொண்டு நின்றாலும் ரசிக்கும்படியாக இருக்கும். இந்தப் படத்தில் சூரி, ரோபோ சங்கர் என இரு நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் காமெடி படுத்துவிட்டது. சூரி தனது உடல்மொழி, உரையாடல் இரண்டிலுமே மேம்பட வேண்டிய தேக்கமான கட்டத்துக்கு வந்து நிற்கிறார்.

விசாகப்பட்டினம், ஆஸ்தி ரேலியா, தூத்துக்குடி எனப் பயணித் திருக்கும் ப்ரியனின் கேமரா அகலக் கோணங்களால் பிரம்மாண்டம் காட்டி, இது ஒரு மாஸ் மசாலா படம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவிலும், படத்தொகுப்பிலும் (வி.டி.விஜ யன், டிஎஸ்ஜே) இருக்கும் விறுவிறுப்பு, ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் இல்லை. பின்னணி இசை பல இடங்களில் தொடர்பற்று ஒலிக்கிறது.

விசாகப்பட்டினம் கன்டெய்னர் காட்சிகள், கடற்கரையில் கமிஷனர் அலுவலகம், ஆஸ்திரேலிய கார்ப் பரேட் அலுவலகம் எனப் படம் முழுவதும் கலை இயக்குநர் கே.கதிரின் ராஜ்ஜியம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனல் கண்ணனின் சண்டை, துரத்தல் காட்சிகள் சூர்யா ரசிகர்களுக்கு முழுமையான ஆக்‌ஷன் விருந்தை அளிக்கின்றன.

பார்த்த சிங்கத்தையே சலிப்பு இல்லாமல் பார்க்கவைத்த வகை யில், இயக்குநருக்கு வெற்றி!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-சி-3/article9537282.ece?widget-art=four-all

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் 3 (S3) - இனிமே உங்க காது.. கேக்காது!! :grin: :grin:

-முத்து சிவா

சூர்யா, இயக்குனர் ஹரி இருவரும் அடுத்த படத்தை வெற்றிப் படமாகக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம். ஹரி எதிர்பார்க்குற அளவு சத்தமா பேச சூர்யாவ விட்டா ஆள் இல்லை. சூர்யா எதிர்பார்க்குற அளவு பர பரன்னு ஒரு ஆக்‌ஷன் ப்ளாக்க குடுக்க ஹரிய விட்டா ஆள் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சூழல்ல புதுசா எதுவும் முயற்சி பன்ன வேணாம்னு ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற சிங்கம் சீரிஸ்லயே அடுத்த படத்தையும் உருவாக்கிருக்காங்க. படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஆந்திராவுல ஒரு கமிஷ்னர யாரோ கொலை பண்ணிட, அங்க இருக்கவிங்களால அந்த மர்டர யார் பண்ணதுன்னு கண்டுபுடிக்க முடியல. சட்டசபையில ஒரே அமளியாயிப் போயிடுது. அப்பதான் காஷ்மீர்லருந்து கன்யாகுமரி வரைக்கும் சவால் விட்டே ரவுடிங்கள கொன்ன தொரை சிங்கத்த ஸ்பெஷல் பர்மிசன்ல ஆந்திராவுக்கு CBI மூலமா தற்காலிக போஸ்டிங் போடுறாங்க.

தொரை சிங்கம் பேர சொன்னதும் 'அவர் என்ன பெரிய இவரா?' ன்னு சட்டசபையில நாலு பேர் கேள்வி கேக்க, "அவர் சவுத் ஆப்ரிக்கா வரைக்கும் போய் சத்தம் போட்டவருடா... அவருக்கு இண்டர்நேசனல் லெவல்ல லிங்கு இருக்குடா"ன்னு அந்த ஊர் அமைச்சர் சரத் பாபு பில்டப்ப குடுக்குறாரு. தொரை சிங்கம் விசாகப்பட்டினத்துல இறங்குனதுமே பத்துப் பதினைஞ்சி ரவுடிங்கள பொள பொளன்னு பொளந்து எடுக்குறாப்ள.

ரெண்டு கையையும் எப்பவுமே ரெண்டு இஞ்ச் பின்னால தூக்கி வெரப்பா வச்சிக்கிட்டு அதே பாடி லாங்வேஜ். இவருக்கு சட்டையெல்லாம் தச்சிக் குடுத்து போடச் சொல்லுவாய்ங்களா இல்ல போட்டப்புறம் தச்சி விடுவாய்ங்களானு தெரியாத அளவுக்கு அவ்வளவு டைட்டான சட்டை. சிங்கம் 2 ல பாத்ததுமே பின்னால சுத்துற ஹன்சிகா மாதிரி இதுல சுருதி. செம கடுப்பு.

பசி

அனுஷ்கா ஆன்ட்டி வேற அப்பப்ப வந்து தலையக் காமிச்சிட்டுப் போறாங்க. பாட்டு போடணுமா இல்லையா... லோக்கல் வில்லன் ரெட்டி. அவன ஆஸ்திரேலியாவுலருந்து இயக்குற இண்டர் நேஷனல் வில்லன் விட்டல்னு ஒரு பாடி பில்டர். அவர் நம்ம வெடி படத்துல வர்ற விவேக் மாதிரி அடுத்த நாள்லருந்து ஒரு மணி நேரத்த கடன் வாங்கி ஒரு நாளுக்கு 25 மணி நேரம் எக்ஸர்சைஸ் பண்ணுவாரு போல. சூர்யாகிட்ட ஃபோன் பேசுற டைமத் தவற மத்த நேரத்துலயெல்லாம் எக்ஸர்சைஸ்தான் பன்னிக்கிட்டு இருக்கான். ஃப்ளைட்டுல போயிட்டு இருக்கும் போதெல்லாமா எக்ஸர்சைஸ் பண்ணுவாங்க... (டேக் ஆஃப் ஆகும்போது கீழ விழுந்து வடிவேலு மூக்குல வர்ற மாதிரி பொளக்குன்னு ரத்தம் கொட்டுனாதான் அடங்குவான் போல). சூர்யா இன்வெஸ்டிகேசன ஆரம்பிக்கிறாரு..

காது வலிக்குது

ஃபைட்டுக்கெல்லாம் பேக்ரவுண்டு மீசிக்கு Siinggggg..... gummmmm... singgggg... gummmmm ன்னு வருது. யாப்பா அந்த gum ல கொஞ்சம் எடுத்து தொரை சிங்கம் வாயில வச்சி ஒட்டி விடுங்கடா.. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கட்டும். தொரை சிங்கத்தோட இன்வெஸ்டிகேசன் போயிட்டு இருக்கும்போதே பொட்டிக் கடையில ஒரு ஆஸ்திரேலிய கம்பெனி தயாரிச்ச ஒரு மாத்திரை கிடைக்கிது. ஆஸ்திரேலியாலருந்து வந்த ரெண்டு கண்டெய்னர போர்ட்டுல மடக்குறாரு. Port ல மடக்குன கண்டெய்னர இண்டர்வலுக்கு கொஞ்சம் முன்னாடி தான் போய் தொறக்குறாரு சிங்கம். இதத்தான் ஹாரிஸ் ஜெயராஜ் படம் ஆரம்பிச்சதுலருந்தே "சிங்கம்... சிங்கம்... தொற சிங்கம்... தொற சிங்கம்" ன்னு க்ளூ குடுத்துருக்காரு! சரத் பாபுக்கிட்ட போய் "சார் நா உடனே ஆஸ்திரேலியா போகனும்"ன்னு சொன்னதும் "சரியாச் சொன்னீங்க தொரை சிங்கம்... வரும்போது மறக்காம ரிக்கி பாண்டிங் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கிட்டு வாங்க"ன்னு சொல்லாத குறையா அனுப்பி விடுறாய்ங்க.

 

அங்கயும் போய் பல ஏரியாக்கள்ல இன்வெஸ்டிகேசன் பண்ணிட்டு ஊருக்கு வந்தா, பட்டுன்னு வேலைய விட்டு தூக்கிடுறாய்ங்க. 'அப்பாடா ஒழிஞ்சிதுடா.. அம்பதாயிரம் இருந்தா மளிகைக்கடை வப்பேன் வே.... 5 லட்சம் இருந்தா பொட்டிக்கடை வப்பேன்வே," ன்னு பஞ்ச்லாம் பேசுனாப்ளயே கெளம்பிருவாப்ள போலன்னு நினைச்சா, திரும்ப சரத்பாபுக்கிட்ட போய், "சார் ஆந்த்ரா போலீஸ்ல போஸ்டிங்க் போடுங்க,"ன்னு திரும்ப கோட்டேல்லாம் மொதல்லருந்து அழிச்ச்ட்டு ஆரம்பிக்கிறாப்ள.

சூரி, ரோபோ சங்கர் ரெண்டு பேர் இருந்தும் காமெடி கொஞ்சம் கூட இல்லை. ஆனா அதுக்கு பதிலா , ஃபைட்டுகள்ல சூர்யா ஓடும்போது சிங்கம் ஓடுற மாதிரி இருக்கது, சூர்யா வாயப் பொளக்கும்போது சிங்கம் தெரியிறது, வில்லன் ஒருத்தன அடிச்சி ஒரு வெய்ட் மெஷின்ல போடும்போது அது ஒண்ணரை டன் வெயிட் காமிக்கிறது போன்ற காட்சிகள் கைதட்டி சிரிக்க வச்சிது. அதுவும் ஆஸ்திரேலிய ஏர்போர்ட்ல தொரை சிங்கத்த போலீஸ் ஆஃபீஸர்கள் மடக்கும்போது, சிங்கம்2 ல டேனிய அரெஸ்ட் பன்ன வீடியோவ youtube ல காமிச்சி, அந்த ஆஃபீசர்கள் எல்லாம் தொரை சிங்கத்துக்கு சல்யூட் அடிக்கிற சீன்லயெல்லாம்... சான்சே இல்லை போங்க!

குசும்பு

குசும்பு சிங்கம் 3 ஃபர்ஸ்ட் லுக்கை ஹரி இப்படி தான் கிரியேட் செய்தாராம் பாஸு.
 

சிங்கம் முதல் இரண்டு பகுதிகள்லயும் நா அதிகம் விரும்பிய காமெடி ரோல் விஜய குமாரோடதுதான். இதுல அவருக்கு டஃப் காம்பெடிஷன் குடுக்குது சரத்பாபு கேரக்டர். "ஆமா தொரை சிங்கம்," "என்ன உதவி வேணாலும் செய்றேன் தொரை சிங்கம்," "எக்ஸலெண்ட் துரை சிங்கம்"னு ரெண்டு பேரும் மாறி மாறி சிரிப்பு காட்டுறாய்ங்க. அது மட்டும் இல்லை அனுஷ்கா சூர்யாவுக்கு ஃபோன் பன்னாலும் சரி .. விஜய குமார் சூர்யாவுக்கு ஃபோன் பன்னாலும் சரி. அவய்ங்க சொல்ற ஒண்ணே ஒண்ணு "நா உங்கள உடனே பாக்கனும் தொரை சிங்கம்". வழக்கமா காது வலிதான் வரும்.

ஆனா இந்தப் படத்துல கண்ணு வலியும் சேந்து வருது. எந்த ஷாட்டயும் ரெண்டு செகண்டுக்கு மேல தொடர்ந்து காமிக்க மாட்டேங்குறாங்க. மாறிக்கிட்டே இருக்கு. அதுவும் பெரும்பாலான காட்சிகள் Fast forward mode தான். ஹாரிஸ் ஜெயராஜோட கேரியர்ல ஒரு மட்டமான BGM ன்னா இதச் சொல்லலாம். சூர்யாவே தேவலாம்னு ஆயிப்போச்சு. Wifi பாட்டும், Universal Cop பாட்டும் ஓக்கே. ஹரி படங்கள்ல வசனத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். இங்க அதுலயும் ரொம்ப கவனம் செலுத்தாம விட்டுட்டாங்க போல. ஃபோன் பண்ணி துரை சிங்கத்துக்கு எதுவும் ஆயிடப் போகுதுன்னு மிரட்டுறப்போ, "எனக்கு பையன் இல்லை. என்னோட 12 ஆயிரம் கோடி சொத்துக்கும் அவந்தான் வாரிசு. அப்டி இருந்தும் அவன் 60,000 ரூவா சம்பளத்துக்கு வேல பாத்துக்கிட்டு இருக்கான்னா அவன் போலீஸ் வேலைய எவ்வளவு விரும்பி செய்வான்னு நீயே புரிஞ்சிக்கன்னு," நாசர் சொல்ற பதில் அருமை. சூர்யா ஆளு செம ஃபிட். வசன உச்சரிப்புலயும், உடல் மொழிகள்லயும் அதே வேகம்.

ஆனா காட்சிகள்தான் அதற்கு சப்போர்ட் பன்ற மாதிரி இல்லை. சண்டைக் காட்சிகளையும் நல்லா மெனக்கெட்டு எடுத்துருக்காங்க. ஆனா அந்த சண்டைக்கான ஒரு சீரியஸ்னஸயும், mood ஐயும் க்ரியேட் பண்ணாதான் அந்த சண்டைக்கு மதிப்பு இருக்கு. ஆனா இங்க அந்த மாதிரி சூழலைக் க்ரியேட் பண்ணாம வந்தோடன தூக்கிப் போட்டு மிதிக்கிறாப்ள. உதாரணமா அந்த அறிமுக ஃபைட்.. ஏன் இவ்வளவு நீளம் லெந்த்தான ஃபைட்டு..? படம் முடிஞ்சி வெளில வரும்போது எல்லாரும் காத பொத்துனாப்புல புடிச்சிக்கிட்டேதான் வெளில வந்தோம்.

அதுலயும் ஒருத்தனுக்கு கொடக் கொடன்னு ரத்தம் ஊத்துச்சி. ஆனா அவன் கெக்க கெக்கன்னு சிரிச்சிக்கிட்டே வந்தான். என்னப்பா காதுலருந்து இவ்வளவு ரத்தம் வருது சிரிச்சிட்டு இருக்கன்னு கேட்டா, "ஸ்பீக்கர்லருந்து நாலு சீட்டு தள்ளி உக்காந்த எனக்கே இப்புடி ரத்தம் ஊத்துதே... அப்ப ஸ்பீக்கர ஒட்டி உக்கார்ந்திருந்தவனுக்கு காது இருக்குமா இருக்காதான்னு நினைச்சேன். சிரிச்சேன்,"ன்னுட்டு சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியாம போயிக்கிட்டு இருந்தான்!

Read more at: http://tamil.filmibeat.com/reviews/singam-3-readers-review-044689.html

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.