Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரளவுக்குதான் பொறுமை; செய்ய வேண்டியதை செய்வோம்! கார்டனில் சசிகலா ஆவேசம்

Featured Replies

ஓரளவுக்குதான் பொறுமை; செய்ய வேண்டியதை செய்வோம்! கார்டனில் சசிகலா ஆவேசம்

ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆவேசமாக பேசினார்.
 

Sasikala

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், "ஒன்றரைக்கோடி தொண்டர்களை ஜெயலலிதா என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இந்த கட்சியையும், இந்த ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. தொண்டர்களின் துணை எனக்கு இருக்கும்போது ஒருசிலரின் ஆட்டங்கள் இங்கே ஒன்றும் செய்துவிட முடியாது. எனக்கு எல்லாமே நீங்கள்தான். ஆட்சியையும், கட்சியையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன் என்றுதான் ஜெயலலிதா உறுதியான நினைத்து என்னிடம் விட்டுச்சென்றிருக்கிறார்.

தலைவருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா பல சோதனைகளை தாண்டி கட்டிக்காத்தார். அதனுடைய பலன் இன்று இந்தியாவிலேயே அதிமுக மூன்றாவது கட்சி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ஜெயலலிதா இப்போது நம்மிடம்தான் இருக்கிறார். நம் கழகத்தில் உள்ள புல்லுருவிகளை ஜெயலலிதா அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார். இன்று நடக்கும் சூழ்நிலைகளை பார்த்து நமக்கு தெரிகிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்மிடம் இருக்கும் வரை, நம்மை பிரித்தாள நினைக்கும் எவராக இருந்தாலும் தோற்றுப்போவார்கள்.

நம் இயக்கம், ஜெயலலிதா சொன்னது போல் ஒரு எஃகு கோட்டை. அந்த கோட்டையை யாரும் அசைக்க முடியாது. ஜெயலலிதாவும் நிறைய போராட்டங்களை சந்தித்துத்தான் இந்த இயக்கத்தை நடத்தி வந்தார். இப்போது நமக்கும் அந்த சோதனை வந்திருக்கிறது. நாமும் அதில் வென்று காட்டுவோம். நீங்கள் என்னுடன் துணை நிற்கும்போது நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தோடும் நம்பிக்கை வைத்துள்ளதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்" என்று ஆவேசமாக பேசினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80465-will-do-what-we-can-do-says-sasikala.html

  • தொடங்கியவர்

கூவத்தூர் புறப்பட்டார் சசிகலா!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்ததையடுத்து, போயஸ் கார்டனில் பேசிய சசிகலா, ஓரளவுக்குதான் பொறுமை காப்போம். அதன்பின், அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டியதை செய்வோம்' என்றார். இந்நிலையில், போயஸ் கார்டனில் இருந்து சசிகலா தற்போது கூவத்தூருக்கு புறப்பட்டுள்ளார்.

Sasikala

இதையடுத்து நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக கூவத்தூர் புறப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் புறப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80476-sasikala-starts-to-kuvathur.html

ஆளுநருக்கு, சசிகலா முக்கிய கடிதம்!

sasikala_new_2a_13450.jpg

தமிழகத்தின் நலன் கருதி விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரை, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்தார். அப்போது, எம்எல்ஏக்களின் பெரும்பான்மை கடிதத்தை கொடுத்தார். ஆனால், இன்று வரை சசிகலாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனிடையே, பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், "முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் அளித்து ஏழு நாட்களாகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேச விரும்புகிறேன். தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசன சட்டப்படி ஜனநாயகத்தை காக்க ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

Governor_letter_13008.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/80466-sasikala-insists-governor-to-take-decision-soon.html

  • தொடங்கியவர்
கவர்னர் மாளிகையில் போலீஸ் குவிப்பு; எம்.எல்.ஏ.,க்களுடன் சசிகலா வருவதாக தகவல்

சென்னை: அதிமுக பொதுசெயலர் சசிகலா எம்.எல்.ஏ.,க்களுடன் வரவுள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்து கவர்னர் மாளிகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் சசிகலா இன்று கூவத்தூர் சென்றார்.
 

தர்ணா போராட்டம் :

அஙகு தங்க வைக்ககப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் கவர்னர் மாளிகை முன்பு எம்.எல்.ஏ.,க்களுடன் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் சசிகலா தன்னை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கவர்னர் கேட்டிருந்தார் . இது மறுக்கப்படும் பட்சத்தில் அவர், கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708822

  • கருத்துக்கள உறவுகள்

m . l. a க்கள் தப்பி ஓட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் .... ஓடுவீர்களா ...ஓடுவீர்களா ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரமுகி படத்தில் ரஜினி, 

“கங்கா சந்திரமுகியா நின்னா

கங்கா சந்திரமுகியா நடந்தா

கங்கா முழு சந்திர முகியா மாறினா” என்று சொல்வது போல, சசிகலா ஜெயலலிதாவாக மாற , முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரியத்தான் செய்கிறது.

 

15940696_10207969654340317_5924035820590

 

  • தொடங்கியவர்

'ஆளுனர் காலம் கடத்துவது கட்சியைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை' - சசிகலா #OPSvsSasikala #LiveUpdates

மாலை 8: 30 மணி: போயஸ் கார்டன் திரும்பினார் சசிகலா

sasikalaafba_20172.jpg

கூவத்தூரில் இருந்து திரும்பிய சசிகலா, 'அதிமுக எம்.பிகள் மன உறுதியுடன் இருக்கிறார்கள். ஆளுனர் காலம் கடத்துவது கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியாக கருதுகிறேன்'.  என கூறினார். 

மாலை 8:20 மணி:

sawamy_20593.jpg

சுப்ரமணியன் சுவாமி-ஆளுநர் வித்யாசாகர ராவ் சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்.

மாலை 7:30 மணி:

திருப்பூர் எம்.பி சத்தியபாமா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்படுவதாக சத்தியபாமா எம்.பி கூறினார். 

sathiyababa_20273.jpg

படம்:ப.சரவணகுமார்

முதல்வருக்கு ஏற்கெனவே மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம் ஆகிய எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

3 மணி நேர ஆலோசனைக்குக்கு பின் கூவத்தூரில் இருந்து புறப்பட்டார் சசிகலா! 

 

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து பொன்னையன் ஆதரவு!

 

ponniiyan44_20492.jpg

படம்:ப.சரவணகுமார்.ப

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வரின் கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு நேரில் சென்ற பொன்னையன், அவருக்கு பொன்னாடை போர்த்தி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கோலோச்சி வந்த பொன்னையன், அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரின் வரவு ஓ.பி.எஸ் அணியை பலப்படுத்தியுள்ளது.

இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்த பின் பொன்னையன் செய்தியாளர்களைச் சந்தித்து, 'ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, சசிகலாவை தவிர வேறு யாரும் அவரைப் பார்க்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்படுபவர் பன்னீர்செல்வம் தான். அண்ணாவை போன்று ஓ.பி.எஸ் அடக்கத்தோடு பணியாற்றுபவர்' என்றார். 

 இந்நிலையில், கூவத்தூரில் நடைபெற்று வந்த சசிகலா - எம்.எல்.ஏக்கள் சந்திப்பு நிறைவடைந்துள்ளது. மூத்த அமைச்சர்களும், எம்.பிக்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

'சிறு தூறல் சுனாமியாகும்'- பன்னீர் இல்லத்தில் மாஃபா பேட்டி

 

Maafa.Pandiarajan

நேற்றுவரை அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து கூறிவந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா.பாண்டியராஜன், 'சிறு தூறலாக ஆரம்பித்துள்ள இந்த அரசியல் மாற்றம் சுனாமியாகும். மக்கள் ஆதரவு பொருத்துதான் இந்த மாற்றம். கட்சி ஒன்றாக சீரிய தலைமையில் இயங்க வேண்டும். ஆட்சி நல்லபடியாக நடத்த பன்னீர்செல்வத்தினால் தான் முடியும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஓ.பி.எஸ் தலைமையில் பணியாற்ற வரவேண்டும்' என்று கூறினார். 

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை- ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிப்பு

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்ததையடுத்து, போயஸ் கார்டனில் பேசிய சசிகலா, ஓரளவுக்குதான் பொறுமை காப்போம். அதன்பின், அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டியதை செய்வோம்' என்றார். இந்நிலையில், போயஸ் கார்டனில் இருந்து சசிகலா கூவத்தூருக்கு புறப்பட்டார்.

கூவத்தூரில் சசிகலா!

 

 

sasikuvathur_19203.jpg

பிற்கலில் கூவத்தூர் சென்றடைந்தார் சசிகலா. நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி, நவநீதிகிருஷ்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.

rajpavan_19018.jpg

இதனிடையே, சென்னை ராஜ்பவனை சுற்றி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆளுநருக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'அன்பு அண்ணன் ஓ.பி.எஸ்' - தமிழக அரசியலில் ட்விஸ்ட்!

opssss_14162.jpg

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் இன்று அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன். சசிகலா தரப்பில் இருந்து ஓ.பி.எஸ் தரப்பு மாறிய முதல் அமைச்சர் பாண்டியராஜன் என்பது ஸ்பெஷல். 'அன்பு அண்ணன் ஓ.பி.எஸ்' என பாண்டியராஜன் உருக, பன்னீர்செல்வம் நெகிழ என களைகட்டுகிறது க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லம். 

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார் மாஃபா. பாண்டியராஜன். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படக்கூடாது என்றும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்றும் மாஃபா. பாண்டியராஜன் கூறினார். 

படங்கள்: ஜெரோம்,ப.சரவணகுமார்

sasikala_new_2a_13450.jpg

தமிழகத்தின் நலன் கருதி விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

Governor_letter_13008.jpg

 

இதைத் தொடர்ந்து, ஆளுநரை, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்தார். அப்போது, எம்எல்ஏக்களின் பெரும்பான்மை கடிதத்தை கொடுத்தார். ஆனால், இன்று வரை சசிகலாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனிடையே, பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், "முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் அளித்து ஏழு நாட்களாகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேச விரும்புகிறேன். தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசன சட்டப்படி ஜனநாயகத்தை காக்க ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

pandiyarajan_long_1_11105.jpg

முதல்வர் பன்னீர்செல்வத்தை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் இன்று சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார். முதன்முறையாக அமைச்சர் ஒருவர், முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சசிகலா அணியில் இருந்து வந்தார். இவர் தொடர்ந்து சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவித்து வந்தார்ர்.

 

இந்நிலையில் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு எடுப்பேன். அம்மாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும், நல்ல முடிவு எடுப்பேன்' எனக்கூறியுள்ளார்.

Mafo Pandiyarajan Tweet



இதனிடையே, முதல்வர் பன்னீர்செல்வத்தை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் இன்று சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார். முதன்முறையாக அமைச்சர் ஒருவர், முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Two ADMK MP's supports for Panneerselvam

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் ஆகியோர் இன்று ஆதரவு தெரிவித்துள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவது அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன், சோழவந்தான் (தனி), எம்.எல்.ஏ கே.மாணிக்கம், வாசுதேவநல்லூர் (தனி) எம்.எல்.ஏ ஏ.மனோகரன், ஊத்தங்கரை (தனி) எம்.எல்.ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், சசிகலா புஷ்பா ஆகியோர் ஏற்கெனவே பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் ஆகியோர் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு திடீரென வருகை தந்தனர். இவர்களை பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவது அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/80494-latest-news-on-opsvssasikala---tamilnadu-politics-twist-and-turns.html

  • தொடங்கியவர்
 
 
 
 
 
 
பதவிக்கு இடைஞ்சலா?: ஜெ., மோதிரத்தை கழட்டிய சசிகலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2017
18:07
 
Tamil_News_large_1708826_318_219.jpg
 

சென்னை: ஜெயலலிதா இறந்த பின், அவர் வகித்த அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவி, முதல்வர் பதவி என இரண்டையும் அடைய வேண்டும் என்பதற்காக, சசிகலா, தன்னை ஜெயலலிதாவாகவே மாற்றும் முயற்சியில் இறங்கினார்.
இதற்காக, புடவை, ஜாக்கெட், நெற்றிப் பொட்டு என எல்லாவற்றையும் மாற்றிய, சசிகலா, போயஸ் தோட்டத்தில், ஜெயலலிதா அறை மட்டுமல்லாது, அவர் பயன்படுத்திய செருப்பு, கார், நாற்காலி என எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். ஜெயலலிதா பயன்படுத்திய வைர மோதிரங்களையும் பயன்படுத்தினார்.

 

ராசி இல்லாத மோதிரம்:

முதல்வராக பதவி ஏற்பது தள்ளிப் போகிறது என்றதும், வைர மோதிரம் தான் ராசியில்லையோ என சந்தேகம் கொண்ட சசிகலா, தன்னுடைய ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, மோதிரம் ஏதும் பிரச்னையா என்று கேட்டுள்ளார்.ஜோதிடரும், வைர மோதிரம்தான் பிரச்னையே. அதில்தான் தோஷம் உள்ளது என்று சொல்ல, ஜெயலலிதா அணிந்த வைர மோதிரத்தை சசிகலா தூக்கி எறிந்துள்ளார். முன்னதாக, கையில் இருந்து கழட்டுவதற்கு முன்பாக முறையான பூஜைகள் நடத்த வேண்டும் என்றும், ஜோதிடர் சொல்ல, அதற்கேற்ப, போயஸ் தோட்டத்தில், 10ம் தேதி மதியம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கையில் போடப்பட்டிருந்த வைர மோதிரத்தை சசிகலா கழட்டி விட்டதாக, போயஸ் வட்டாரங்கல் கூறுகின்றன.
அதற்கு பதிலாக வேறு மோதிரத்தை அணியலாம் என்றும், ஜோதிடர் அறிவுரை கூறியுள்ளதால், புது மோதிரம் அணிவது குறித்து, சசிகலா யோசித்து வருகிறார் என்றும், போயஸ் தோட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708826

  • தொடங்கியவர்
 
கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்களிடம் உருகிய சசிகலா
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2017
23:08
 
Tamil_News_large_1708989_318_219.jpg
 

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கின்றனர் என்றதும், அவசரமாகக் கிளம்பி, அங்கு சென்றார், சசிகலா.

 

நேரில் சந்திப்பு

 


அங்கு சென்றவர், எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் இருக்கின்றனர், அமைச்சர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர், நிர்வாகிகள் எத்தனை பேர் இருக்கின்றனர் என கேட்டுள்ளார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேச முடியுமா என கேட்டுள்ளார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்ததும், எம்.எல்.ஏ.,க்கள் குழு குழுவாக சந்தித்து பேசியுள்ளார். அவர், எம்.எல்.ஏ.,க்களிடம் கெஞ்சும் அளவுக்கு பேசியதாக, அங்கிருக்கும் சிலர் கூறினர்.

எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் சசிகலா பேசியதாகக் கூறப்படுவதாவது:

ஜெயலலிதா மறைந்த பின், கட்சிக்கு ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இக்கட்டுகளை மீறி கட்சியை துரோகிகள் கைகளுக்கு சென்று விடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை, நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா இறந்ததும், நாம் முழுமையாக ஒதுங்கிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், மூத்த தலைவர்களும்; நிர்வாகிகளும், உங்களை விட்டால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கு வேறு நாதி இல்லை என்று கூறி கட்சிக்கு தலைமை ஏற்க வற்புறுத்தினர்.

அ.தி.மு.க.,வில் இருக்கும் 1.5 கோடி தொண்டர்களையும் காப்பாற்றும் பொறுப்பு, எனக்கு பெரும் சுமைதான். என்றாலும், ஜெயலலிதாவை நம்பி வந்தவர்களை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அப்படியே விட்டு விட்டு செல்ல எனக்கு மனம் வரவில்லை. அதனால்தான், கட்சியின் பொதுச் செயலர் ஆவதற்கே ஒப்புக் கொண்டேன்.

என்னை கட்சியின் பொதுச் செயலர் ஆக வேண்டும் என்றும்; தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்றும் நேரடியாகவே வலியுறுத்தியவர்கள் அவ்வளவு பேரும், இன்று, கருங்காலிகளோடு கைகோர்த்துள்ளனர். அவர்கள் தலைகீழாக நின்றாலும், ஆட்சி அதிகாரத்தில் நிலைக்க முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக, நான் தான் பொறுப்பேற்பேன்.

என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் ஆயிரம் சொல்வார்கள். அதெல்லாவற்றையும், இங்கிருப்பவர்கள் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். நீங்களெல்லாம் தேர்தலில் வெற்றி பெற எவ்வளவு சிரமப்பட்டுள்ளீர்கள் என்று எனக்கும் தெரியும். அவற்றுக்கெல்லாம் முதல்கட்டமாகவே, ஒவ்வொருவருக்கும் நான் உதவிட வேண்டும் என நினைக்கிறேன்; உதவிடுவேன். எதிர்பார்ப்பில் முன்னே-பின்னே இருந்தாலும், யாரும் கவலைப்பட வேண்டாம்.

ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும், உங்கள் யாரையும் நான் மறக்க மாட்டேன்; உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும்; மறக்காமல் செய்வேன்.

இவ்வாறு அவர் பேசியதாக கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708989

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நவீனன் said:
 
கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்களிடம் உருகிய சசிகலா
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 பிப்
2017
23:08
 
Tamil_News_large_1708989_318_219.jpg
 

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கின்றனர் என்றதும், அவசரமாகக் கிளம்பி, அங்கு சென்றார், சசிகலா.

 

நேரில் சந்திப்பு

 


அங்கு சென்றவர், எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் இருக்கின்றனர், அமைச்சர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர், நிர்வாகிகள் எத்தனை பேர் இருக்கின்றனர் என கேட்டுள்ளார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேச முடியுமா என கேட்டுள்ளார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்ததும், எம்.எல்.ஏ.,க்கள் குழு குழுவாக சந்தித்து பேசியுள்ளார். அவர், எம்.எல்.ஏ.,க்களிடம் கெஞ்சும் அளவுக்கு பேசியதாக, அங்கிருக்கும் சிலர் கூறினர்.

எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் சசிகலா பேசியதாகக் கூறப்படுவதாவது:

ஜெயலலிதா மறைந்த பின், கட்சிக்கு ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இக்கட்டுகளை மீறி கட்சியை துரோகிகள் கைகளுக்கு சென்று விடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை, நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா இறந்ததும், நாம் முழுமையாக ஒதுங்கிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், மூத்த தலைவர்களும்; நிர்வாகிகளும், உங்களை விட்டால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கு வேறு நாதி இல்லை என்று கூறி கட்சிக்கு தலைமை ஏற்க வற்புறுத்தினர்.

அ.தி.மு.க.,வில் இருக்கும் 1.5 கோடி தொண்டர்களையும் காப்பாற்றும் பொறுப்பு, எனக்கு பெரும் சுமைதான். என்றாலும், ஜெயலலிதாவை நம்பி வந்தவர்களை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அப்படியே விட்டு விட்டு செல்ல எனக்கு மனம் வரவில்லை. அதனால்தான், கட்சியின் பொதுச் செயலர் ஆவதற்கே ஒப்புக் கொண்டேன்.

என்னை கட்சியின் பொதுச் செயலர் ஆக வேண்டும் என்றும்; தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்றும் நேரடியாகவே வலியுறுத்தியவர்கள் அவ்வளவு பேரும், இன்று, கருங்காலிகளோடு கைகோர்த்துள்ளனர். அவர்கள் தலைகீழாக நின்றாலும், ஆட்சி அதிகாரத்தில் நிலைக்க முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக, நான் தான் பொறுப்பேற்பேன்.

என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் ஆயிரம் சொல்வார்கள். அதெல்லாவற்றையும், இங்கிருப்பவர்கள் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். நீங்களெல்லாம் தேர்தலில் வெற்றி பெற எவ்வளவு சிரமப்பட்டுள்ளீர்கள் என்று எனக்கும் தெரியும். அவற்றுக்கெல்லாம் முதல்கட்டமாகவே, ஒவ்வொருவருக்கும் நான் உதவிட வேண்டும் என நினைக்கிறேன்; உதவிடுவேன். எதிர்பார்ப்பில் முன்னே-பின்னே இருந்தாலும், யாரும் கவலைப்பட வேண்டாம்.

ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும், உங்கள் யாரையும் நான் மறக்க மாட்டேன்; உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும்; மறக்காமல் செய்வேன்.

இவ்வாறு அவர் பேசியதாக கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708989

பேரம்????

  • தொடங்கியவர்

“சசிகலாவுக்கு கோபம் வந்தால், எதிர்விளைவுகளை பா.ஜ.க. எதிர்கொள்ளும்!” - ஹெச். ராஜா

ஹெச். ராஜாபி.ஜே.பி., அதி.மு.க., ஓ.பி.எஸ் ஆகியோரிடம்  ஆடுபுலி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர ராவும் சிக்கியுள்ளார். 134 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு பட்டியலைக் கொடுத்து கவர்னரைச் சந்தித்த சசிகலாவிடம், ஆளுநர்... ஆட்சியமைப்பதற்கான எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இதனால் நாட்கள் கடந்துவரும் நிலையில், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவராய் ஓ.பி.எஸ் அணியில் இணைந்துவருகின்றனர். இதனால் சினமுற்றிருக்கும் சசிகலா, இதற்கு விடைகாண வேறு வகையில் முயற்சிப்பதாகத் தெரிகிறது. இந்த ஆடுபுலி ஆட்டம் குறித்து பி.ஜே.பி செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவிடம் பேசினோம்.

“சுப்பிரமணியன் சுவாமி வந்து சென்றது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைப்பற்றி எதுவும் கருத்துக் கேட்க வேண்டாம். தமிழகத்தில் ஓர் அசாதாரணச் சூழ்நிலை நிலவுகிறது. அதற்காக வழக்கமான நடவடிக்கைகளை எடுக்க முடியாது. 134 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு பட்டியல் கொடுத்தபின்பு, உடனே பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, ஒருசில நியாயமான காரியங்களுக்காக ஆளுநர் தாமதிக்கலாம். அதில், தவறில்லை. ஓ.பி.எஸ்ஸே., தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாகச் சொன்னார். ஒரு மாநில முதல்வரே தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாகச் சொல்வது அசாதாரணச் சூழல் இல்லையா? அதனால், கவர்னர் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியதிருக்கும். அதற்கு, அவருக்குப் போதிய அவகாசம் தேவை. அதுமட்டுமில்லமால், எம்.எல்.ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்றம் செல்வதும், பத்திரிகைகளில் செய்திகள் வருவதும் தொடர்கின்றன. அரசியலமைப்புச் சட்டப்படி, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் கவர்னர் செய்துவிட முடியாது. இந்தத் தகவல்கள் அனைத்தையும் அவர், ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மற்றக் கட்சிகளையும்... அரசியலமைப்புச் சட்டப்படி அவருக்குண்டான வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறார். இது ஓரிரு நாட்களில் முடியவேண்டிய விஷயமில்லை. நான்கு நாட்கள் தாமதமாவதால் வானம் இடிந்துவிழாது. அதுவரை பொறுத்துக்கொள்ள வேண்டும். 

சசிகலா, கவர்னரிடம் முதல்நாள்... தன்  ஆதரவாளர்களின் பட்டியலைத்தான் தந்தார். அவர்களுடைய ஆதரவுக் கடிதங்களை அல்ல. சசிகலாஅதைவைத்து, ஒரு கவர்னர் முடிவெடுக்க முடியாது. அதேசமயம்,  தமிழகத்தில் நிகழும் சூழல் சாதாரண மக்களான நமக்கே நன்றாகத் தெரிகிறது. இதற்குமுன்பு, கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில்  ஜெயலலிதா வெற்றிபெற்றபோது... ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல், அவரை, அப்போதைய கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்து பதவிப்பிரமாணமும் செய்துவைத்தார். ஆனால், இப்போது தாமதிப்பதற்கு அதற்கான முகாந்திரம் இருப்பதாகத்தானே அர்த்தம். அதுமட்டுமின்றி, மொத்தமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள ரிசார்ட்ஸில் 80 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் இல்லை என்று கூறுகிறார்கள். போதிய எம்.எல்.ஏ-க்கள் தங்களிடம் இருப்பதாக சசிகலா அறிவித்திருந்தால், சிறைவைப்பு சம்பவம் நடைபெற்றிருக்காது. ஆரம்பத்தில், '134 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கிறது' என்றார்கள். இப்போது அது குறைந்துகொண்டே வருகிறது. இதன்படி பார்த்தால் எதிர்க்கட்சிகள் சொல்வது சரிதானே? இதுபோன்ற, அசாதாரணச் சம்பவங்களில் போதுமான அவகாசம் எடுத்துக்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்துள்ளது. அதனால், பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதேசமயம், இந்த விஷயத்தில் சசிகலா பொறுமை இழப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது... ஆனால், இதன் எதிர்விளைவாகத் தமிழகத்தில் அசம்பாவிதம் நிகழுமானால், அதைச் சந்திப்பதற்கான, கட்டுப்படுத்துவதற்கான உரிமையும், கடமையும் பி.ஜே.பி-க்கு உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று அழுத்தமாகச் சொல்லி முடித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/80536-bjp-has-guts-to-face-sasikala-anger--h-raja-opsvssasikala.html

  • தொடங்கியவர்

ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவின் அதிரடி நடவடிக்கை என்ன?

 

ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவின் அதிரடி நடவடிக்கை என்ன? என்ற பரபரப்பு அரசியலில் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 
 
 
 
ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவின் அதிரடி நடவடிக்கை என்ன?
 

சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியும் உருவாகிவிட்டது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு இதுவரையில் 8 எம்.பி.க்களும், 6 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதவிர கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் இன்று ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனால் அவருக்கு ஆதரவு பெறுகி வருகிறது. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த சசிகலா, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரியும், அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகவில்லை.

இதனால் கவர்னரின் அழைப்புக்காக காத்திருக்கும் சசிகலா, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அடுத்த கட்ட போராட்டம் வேறு மாதிரி இருக்கும் என்று கூறி இருந்தார்.

சசிகலாவின் இந்த ஆவேச பேட்டி அரசியல் களத்தில் பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. எங்களது போராட்டம் வேறு மாதிரி இருக்கும் என்று மட்டும் கூறிய சசிகலா அது எந்த மாதிரியான போராட்டமாக இருக்கும் என்பதை தெளிவு படுத்தவில்லை. இதனால் சசிகலாவின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பது பற்றி பல்வேறு யூகங்களின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி 3 விதமான திட்டங்களை சசிகலா மனதில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்று, கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவருடனும் சென்று ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் இருப்பது.

இன்னொன்று கவர்னர் அனுமதி அளிக்கும் பட்சத்தில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்துக் கொண்டு கவர்னர் மாளிகைக்கு செல்வது.

3-வதாக, எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் முறையிடுவது என 3 திட்டங்கள் சசிகலாவின் மனதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் ஏதாவது ஒரு முடிவை சசிகலா இன்று கண்டிப்பாக எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று எம்.எல். ஏ.க்களுடன் அவர் உண்ணாவிரதம் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போயஸ் கார்டனில் சசிகலா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலையில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் போயஸ் கார்டனுக்கு வந்திருந்தனர். எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., பாலகங்கா ஆகியோரும் மதியம் வந்தனர். இதுபோன்று கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளனர்.

அவர்களுடன் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி, சசிகலா ஆலோசனை நடத்தி வரு கிறார். போயஸ் கார்டனுக்கு வெளியேயும் கட்சி தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

சசிகலாவின் முடிவுக்காக அவர்களும் காத்திருக்கிறார்கள். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அங்கு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சமரசம், போயஸ்கார்டனுக்கு வெளியே அளித்த பேட்டியில் கூறும்போது, சசிகலாவை, கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்காதது ஜனநாயக விரோதம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சசிகலா ஆலோசனை நடத்தி அறிவிப்பார் என்றார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/12135532/1067823/governor-do-not-called-to-sasikala-do-she-next-action.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.