Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Featured Replies

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

தூத்துக்குடி அதிமுக எம்.பி.ஜெய்சிங் நாட்டர்ஜி, வேலூர் எம்.பி. செங்குட்டுவன்.
தூத்துக்குடி அதிமுக எம்.பி.ஜெய்சிங் நாட்டர்ஜி, வேலூர் எம்.பி. செங்குட்டுவன்.
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

11.15 am: பெரம்பலூர் அதிமுக எம்.பி. மருதராஜா முதல்வர் ஓபிஎஸ்-க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஓபிஸ்-க்கு மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு!

11.00 am: அதிமுக உட்கட்சி விவகாரங்கள் திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகின்றன. இன்று அதிமுக-வின் இரண்டு எம்.பி.க்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். வேலூர் எம்.பி. செங்குட்டுவன் மற்றும் தூத்துக்குடி எம்.பி. ஜெய்சிங் ஆகியோர் ஓபிஎஸ்-க்கு தங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள், 8 எம்பிக்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

நேற்று:

பிளவு படுத்தவே காலதாமதம்: எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்த பிறகு சசிகலா நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார்: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து விட்டு போயஸ் தோட்டம் திரும்பிய வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் கால தாமதம் செய்வது அதிமுகவை பிளவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

எம்.எல்.ஏ.க்களை சந்தித்த பிறகு அதிமுக குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மன உறுதியுடன் இருக்கிறார்கள்.

ஆளுநர் முடிவுக்காக இன்று வரை காத்திருந்தோம், நாளை முதல் எங்கள் போராட்டம் வேறு விதத்தில் இருக்கும், என்றார்.

அப்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா: ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்12ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9537317.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

தமிழிசை. | கோப்புப் படம்.
தமிழிசை. | கோப்புப் படம்.
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

12.00 pm: அதிமுக-வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக-வின் உட்கட்சி விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.அவர் கூறியதாவது: அதிமுக உட்கட்சி பூசல் பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலன்களுக்காக தமிழக அரசு விரைவில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறும்போது, “தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்க ஆளுநர் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

11.50 am: ஆளுநர் தாமதப்படுத்தவில்லை: தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து

தமிழக ஆளுநர் முடிவெடுப்பதை தாமதப்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆளுநர் தாமதப்படுத்தவில்லை. சரியான முடிவெடுக்க கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை பாஜக-வின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.

11.40 am: முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், முன்னாள் காதி அமைச்சர் பூனாட்சி ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்திற்குச் சென்று பன்னீர்செல்வத்திற்குப் பொன்னாடை போர்த்தினர்.

11.30 am: சினிமா நடிகர்கள் ராமராஜன், தியாகு, ஓபிஎஸ்.க்க்கு ஆதரவு

சினிமா நடிகர்கள் ராமராஜன் மற்றும் தியாகு ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் இல்லத்துக்குச் சென்று இவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

நேற்று இயக்குநர்கள் பாலா, பாக்யராஜ் ஆகியோரும் முதல்வர் ஓபிஎஸ்.க்கு ஆதரவு அளித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்12ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9537317.ece?homepage=true

  • தொடங்கியவர்

'ஆளுநர் மீது வழக்கு போடுவேன்' - மிரட்டும் சு.சுவாமி

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில், சசிகலாவை முதல்வராக்க, ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

Subramanian Swamy

இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் நாளைக்குள், முடிவு எடுக்காவிடின் அரசியலமைப்பு சட்டம் 32-பிரிவின்படி ஆளுநர் மீது வழக்கு தொடரப்படும். குறிப்பாக, குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கை என்ற புகாரில் வழக்கு தொடரப்படும்' என்று ஆளுநருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The TN Guv must decide CM issue by tomorrow otherwise a WP under Art 32 of the Constitution can be filed charging abetment of horse trading

http://www.vikatan.com/news/india/80534-will-file-the-case-against-tn-governor-says-subramanian-swamy.html

  • தொடங்கியவர்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் மேலும் 2 எம்.பி.,க்கள்

O Paneerselvam

விழுப்புரம் தொகுதி  அதிமுக எம்.பி ராஜேந்திரன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். சற்று முன்னர் அதிமுக எம்.பி லட்சுமணன் முதல்வருக்கு ஆதரவளித்துள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி எம்.பி லட்சுமணன் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். தற்போது ஓபிஎஸ் அணியில் எம்பிக்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளன. 

http://www.vikatan.com/news/tamilnadu/80540-two-more-admk-mps-joins-o-paneerselvams-team.html

  • தொடங்கியவர்

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

1.15 pm: அதிமுக எம்.பி. விழுப்புரம் லட்சுமணன் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்

மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.லட்சுமணன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பின் படி இவரது பொறுப்பிற்கு சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

12.30 pm: நாளைக்குள் முடிவு காணாவிட்டால் ஆளுநருக்கு எதிராக வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி முடிவு

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளைக்குள் முடிவுகாணவில்லையெனில் அவர் மீது வழக்கு தொடரப்போவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தாமதத்தினால் குதிரைபேரத்திற்கு வழிவகுக்கிறது என்ற புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்படும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

இதே காரணத்தைக் காட்டி அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-ன் கீழ் ஆளுநர் மீது வழக்கு தொடரப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஆளுநரை இது தொடர்பாக சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசியல் நெருக்கடிக்கு நாளைக்குள் தீர்வு காணவில்லை எனில் ஆளுநர் மீது வழக்கு தொடரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்12ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9537317.ece?homepage=true

  • தொடங்கியவர்
ஓரம் கட்டப்படும் தம்பிதுரை, வேலுமணி?
 
Tamil_News_large_1709396_318_219.jpg
 
சென்னை: அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி ஆகியோர் ஓரம் கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அவமானப்பட்டார் :

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், டில்லி பணிகளை கவனிக்க அனுப்பப்பட்டவர் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், அவர் மறைந்த பிறகு சசிகலாவுக்கு ஆதரவாகவும் டில்லியில் கட்சி பணிகளை தீவிரமாக கவனித்தவர் தம்பிதுரை. குறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த பிறகு அவர் சார்பாக, டில்லியில் பல முறை அவமானப்படுத்தப்பட்ட போதும் சிறிதும் சளைக்காமல் செயல்பட்டவர்.

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வாய்ப்பு வழங்காத போதும், லோக்சபாவில் குரல் எழுப்பி கட்சிக்காக அவமானப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவி தம்பிதுரைக்கு கிடைக்கும் என்ற பேச்சு இருந்தது. ஆனால், பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கிய பிறகு, கொங்குமண்டலத்தில் கவுண்டர் இனத்தை சேர்ந்த செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதே போல், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால், அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்த தம்பிதுரைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரை நேரில் சந்தித்து சசிகலா கோரிக்கை விடுத்த போது, அவருடன் தம்பிதுரை அழைத்து செல்லப்படவில்லை. கூவத்தூர் சொகுசு விடுதிகளில் தங்கி இருக்கும் அ.தி.மு.க., - எம்.பி.,க்களை சந்திக்க, நேற்று சசிகலா சென்ற போதும், தம்பிதுரை அழைத்து செல்லப்படவில்லை.
 
வேலுமணி நிலை

கடந்த, 10ம் தேதி எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. அதில், தம்பிதுரையை சசிகலா அனைவர் முன்பே, கடுமையாக விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், 10ம் தேதி இரவு முதல் எங்கும் செல்லாமல், யாருடனும் பேசாமல் தம்பிதுரை உள்ளார் என, சசிகலா தரப்பை சேர்ந்த கட்சி நிர்வாகிகளே கூறி வருகின்றனர் . இதே போல் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும் சசிகலா தரப்பினரால் ஓரம் கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த செங்கோட்டையனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வேலுமணிக்கு இல்லை. கொங்கு மண்டலத்தில் வேலுமணிக்கு எதிர் கோஷ்டியாக செயல்படும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை, இன்று போயஸ் கார்டனுக்கு அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தினார். ஆனால், வேலுமணிக்கு அழைப்பு இல்லை.

கட்சியில் பல ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வரும் தம்பிதுரை மற்றும் வேலுமணி ஓரம் கட்டப்படுவது மற்ற கட்சி நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709396

  • தொடங்கியவர்

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

படம். எம்.வேதன்.
படம். எம்.வேதன்.
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

3.00 pm: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை 10-ஆக உயர்வு

கட்சிப்பொறுப்பிலிருந்து சசிகலாவால் விடுவிக்கப்பட்ட மாநிலங்களவை அதிமுக எம்.பி. லட்சுமணன், மற்றும் விழுப்புரம் லோக்சபா எம்.பி.ராஜேந்திரன் ஆகியோர் பன்னீர்செல்வம் இல்லத்திற்குச் சென்று தங்கள் ஆதரவை அளித்தனர். இதனையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

2.00 pm: அதிமுக எம்.பி. வைத்திலிங்கம், “சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இவருக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை இன்று மதியம் முடிவு செய்யப்படும்.

1.15 pm: அதிமுக எம்.பி. விழுப்புரம் லட்சுமணன் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்

மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.லட்சுமணன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பின் படி இவரது பொறுப்பிற்கு சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

12.30 pm: நாளைக்குள் முடிவு காணாவிட்டால் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர முடியும் : சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளைக்குள் முடிவுகாணவில்லையெனில் அவர் மீது வழக்கு தொடர முடியும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தாமதத்தினால் குதிரைபேரத்திற்கு வழிவகுக்கிறது என்ற புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர முடியும். என்று அவர் அதில் கூறியுள்ளார்.

இதே காரணத்தைக் காட்டி அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-ன் கீழ் ரிட் மனு தாக்கல் செய்யலாம், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஆளுநரை இது தொடர்பாக சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசியல் நெருக்கடிக்கு நாளைக்குள் தீர்வு காணவில்லை எனில் ஆளுநர் மீது வழக்கு தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

12.00 pm: அதிமுக-வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக-வின் உட்கட்சி விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.அவர் கூறியதாவது: அதிமுக உட்கட்சி பூசல் பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலன்களுக்காக தமிழக அரசு விரைவில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறும்போது, “தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்க ஆளுநர் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

11.50 am: ஆளுநர் தாமதப்படுத்தவில்லை: தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து

தமிழக ஆளுநர் முடிவெடுப்பதை தாமதப்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆளுநர் தாமதப்படுத்தவில்லை. சரியான முடிவெடுக்க கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை பாஜக-வின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.

11.40 am: முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், முன்னாள் காதி அமைச்சர் பூனாட்சி ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்திற்குச் சென்று பன்னீர்செல்வத்திற்குப் பொன்னாடை போர்த்தினர்.

11.30 am: சினிமா நடிகர்கள் ராமராஜன், தியாகு, ஓபிஎஸ்.க்க்கு ஆதரவு

சினிமா நடிகர்கள் ராமராஜன் மற்றும் தியாகு ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் இல்லத்துக்குச் சென்று இவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

நேற்று இயக்குநர்கள் பாலா, பாக்யராஜ் ஆகியோரும் முதல்வர் ஓபிஎஸ்.க்கு ஆதரவு அளித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்12ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9537317.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

படம்.| ம.பிரபு.
படம்.| ம.பிரபு.
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

3.45pm: அதிமுக-வை உடைக்க வேண்டும் பிளவுபடுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக சதி நடந்து வருகிறது, ஏனெனில் இது மிகப்பெரிய இயக்கமாக இருந்து வருகிறது, எனவே தற்போது வெளியே சென்றிருக்கும் புல்லுருவிகள் போல் அன்றும் சிலர் செயல்பட்டார்கள். அதனால் இந்தச் சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல, இதிலிருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். அதன் விவரம்: சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல; மீண்டு வெற்றி பெறுவோம்: சசிகலா பேட்டி

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்12ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9537317.ece?homepage=true

  • தொடங்கியவர்

கேட்டான் பார் ஒரு கேள்வி!
 
Tamil_News_large_1709389_318_219.jpg
 
00:39 00:39

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களை பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு சரமாரியாக கேள்விகள் கேட்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற ஒரு போன் உரையாடலில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் சிக்கி உள்ளார். இந்த போன் உரையாடல், ‛வாட்ஸ் ஆப்' மூலம் வேகமாக பரவி வருகிறது.

உரையாடல் வருமாறு:

பொது மக்களில் ஒருவர்: ஹலோ...

நாஞ்சில் சம்பத்: வணக்கம்...

பொதுமக்களில் ஒருவர்: சார், தொந்தரவுக்கு மன்னிக்கனும்... சார், நாஞ்சில் சம்பத் சாருங்களா...

நாஞ்சில் சம்பத்: ஆமாம்...

பொதுமக்களில் ஒருவர்: சார், ஒரு சின்ன சந்தேகம்...

நாஞ்சில் சம்பத்: சொல்லுங்க...

பொதுமக்களில் ஒருவர்: சார் நீங்க சோறு தானே திங்கறீங்க?

நாஞ்சில் சம்பத்: ஆ...

நாஞ்சில் சம்பத்: நீ என் திங்கற?

பொதுமக்களில் ஒருவர்: நான் சோறு தான் திங்கறேன். நீங்க என்ன சாப்பிடிறீங்க என்ற சந்தேகம் வந்ததாலே போன் பண்ணறேன்.

நாஞ்சில் சம்பத்: எந்த பதிலும் இல்லாமல் மவுனம்

பொது மக்களில் ஒருவர்: ஹலோ... ஹலோ...

இத்துடன் போன் உரையாடல் முடிவடைகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709389

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

கூவத்தூர் புறப்படும்போது காரிலிருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா. |
கூவத்தூர் புறப்படும்போது காரிலிருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா. |
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

5.10: கூவத்தூர் சென்றடைந்தார் சசிகலா! வேதாராண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, தான் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறேன்... இது தவறா?, என்றார், மேலும் சசிகலா ஆட்சி அமைப்பார்களா என்ற ஐயத்திற்கே இடமில்லை, காரணம் தங்களிடம் 127 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது என்றும் ஆளுநர் எங்களை அழைப்பார் என்றே நம்புகிறோம், என்றார்.

4.15 pm: கல்வியமைச்சர் கே.பாண்டியராஜன் மைலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜைச் சந்தித்ததாக ட்வீட் செய்துள்ளார், அதாவது நடராஜ் இதுவரை நடுநிலை வகித்து வருகிறார், அவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்குமாறு கோர சந்திப்பு நிகழ்த்தியதாக பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்12ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9537317.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

கூவத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்.
கூவத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்.
 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

7.00 pm: கூவத்தூரில் சாலைமறியலில் பத்திரிகையாளர்களுடன் மக்களும் இணைந்தனர்

6.25 pm: கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் சாலை மறியல்

கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ் அருகே கூடியிருந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்க சென்றுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்களை ரிசார்ட்டுக்குள் நுழைய விடாமல் போலீஸார் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஆனால் வேதரத்தினம் என்ற போலீஸ் அதிகாரி, தி இந்து (ஆங்கிலம்) செய்தியாளர் உத்தவ் நாயக்கிடம், “எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்களிடம் பேச விரும்பவில்லை. கோல்டன் பே ரிசார்ட்ஸ் என்பது தனியார் சொத்து” என்று கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்12ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9537317.ece?homepage=true

  • தொடங்கியவர்

கூவத்தூரில் செய்தியாளர்கள் தர்ணா!

Koovathur Journalist Dharna

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கூவத்தூரில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக தங்கி இருக்கின்றனர். தற்போது அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவும் அங்கு சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக முகாமிட்டுள்ளனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதியை நெருங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

'ரிசார்ட்டுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னிருந்தே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டு பகுதிக்கு செல்லும் மக்களை போலீசார் தடுக்கின்றனர்' என்று கூறுகின்றனர் களத்தில் இருக்கும் செய்தியாளர்கள்.

செய்தியாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்துவதாகவும் அலைபேசியை பறிப்பதாகவும் கூறுப்படுகிறது. இந்த அனைத்துக்கும் காவல்துறை மௌனம் காப்பதாகவும் பத்திரகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் கூறி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பத்திரிகையாளர்கள்.

இதையடுத்து அ.தி.மு.க தரப்பு நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80554-journalists-stage-protest-at-koovathur.html

  • கருத்துக்கள உறவுகள்

16508811_757345031111063_789176357115834

  • தொடங்கியவர்
வெளியூர் குண்டர்களை கைது செய்ய
முடியவில்லை : சென்னை போலீசார் புலம்பல்
 
'அரசியல் சார்பு ரவுடிகளிடம் விசாரிக்க அனுமதி கிடைத்தால் தான், குண்டர்கள் அனை வரையும் கைது செய்ய முடியும்' என, போலீசார் தெரிவித்தனர்.

Tamil_News_large_170957320170213001339_318_219.jpg

தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த குண்டர்கள், 5,000 பேர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பண்ணை வீடுகள், விடுதிகள், திருமண மண்டபங்களில், உள்ளூர் அரசியல் சார்பு ரவுடிகளின் உதவியோடு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியுள்ளனர்.

இந்த மூன்று மாவட்டங்களிலும், வன் முறையை கட்டவிழ்த்து விடும் திட்டத்துடன் அவர்கள் மறைந்திருப்பதாக, டி.ஜி.பி., சென்னை கமிஷனர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இந்த 3மாவட்டங்களில்

தங்க வைக்கப்பட்டுள்ள குண்டர்களுக்காக, புதுச்சேரி, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து உயர் ரக மதுபானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட் டத்தில் இருந்து, 1,000க்கும் மேற் பட்டஆடுகளும் வாங்கப்பட்டு உள்ளன.

மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி வழி யாகவும், குண்டர்கள் தமிழகத்தில் நுழைய திட்டம் தீட்டி யுள்ள தகவலும் உளவுத்துறைக்கு கிடைத்துள் ளது. இதையடுத்து, எல்லைகளில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதேபோல், சென்னை முழுவதும் உள்ள உணவகங் கள், பண்ணை வீடுகள், வாடகை வீடுகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் சோதனை நடத் தவும், 24 மணி நேர வாகன சோதனை மேற்கொள்ள வும், கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை யில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாகன சோதனை நடைபெற்றது.இதில்,150ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நேற்றும் வாகன சோதனை தொடர்ந்தது.

உள்ளூர் அரசியல்வாதி கள் மற்றும் அரசியல் சார்பு ரவுடிகள் உதவியுடன், வெளியூர் குண்டர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை கைது செய்ய முடியாமல், சென்னை போலீசார் தவிக்கின்றனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: நாங்கள்

வரும் தகவல் தெரிந்து, உடனே இடத்தை மாற்றி வருகின்றனர். போலீசாரின்கெடுபிடி அதிகரித்ததால், தினமும் ஒரு இடத்தில் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு, உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் ரவுடி களின் ஆதரவு உள்ளது.

இவர்களை கைது செய்ய வேண்டும் என்றால், உள்ளூர் அரசியல் சார்பு ரவுடிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக, உயரதிகாரிகளின் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன், குண்டர்களை விரை வில் கைது செய்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709573

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.