Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தீர்ப்பு வேறு.. தீர்வு வேறு' - ட்விட்டரில் கமல் கருத்து

Featured Replies

 

'தீர்ப்பு வேறு.. தீர்வு வேறு' - ட்விட்டரில் கமல் கருத்து

kamal tweet

பரபரப்பு நிறைந்த சமீபத்திய தமிழக அரசியல் சூழலைப் பற்றி தனது கருத்துகளை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் இன்றைய அவரது ட்விட்டர் பதிவில், 'நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்' என தெரிவித்துள்ளார். நாளை சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/80688-kamal-tweets-about-sasikalas-verdict-tomorrow.html

  • தொடங்கியவர்

தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை: கமல்ஹாசன்

 

 
நடிகர் கமல்ஹாசன் (படம்: வேதன்)
நடிகர் கமல்ஹாசன் (படம்: வேதன்)
 
 

தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று (பிப்ரவரி 14) காலை 10:30 மணிக்கு வெளியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன், நேற்று "நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இன்று காலை "தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை. மக்கள் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மதிப்பளித்து எப்போதும் உறுதுணைபுரிவர்.

நீதிமன்றங்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். மக்களும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தீர்ப்புக்கும்-அமைதியாக-எதிர்வினையாற்ற-மெரினா-உத்வேகம்-தேவை-கமல்ஹாசன்/article9540761.ece?homepage=true

  • தொடங்கியவர்

தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்! கமல் ட்வீட்

kamal haasan


சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழக அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து அரசியல்வாதிகள் பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். 

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம். எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்' என்று பதிவிட்டுள்ளார். நேரடியாக எதையும் சொல்லாமல் ஒரு பாடல் மூலம் குறியீடாக இந்தத் தீர்ப்புப் பற்றி கமல் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80743-kamals-timing-tweet.html

  • தொடங்கியவர்

கமல் தொடங்கி அனைவராலும் களைகட்டிய ட்விட்டர்! #DACase

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததும், ட்விட்டரில் சசிகலா பற்றி வெளியான ட்வீட்ஸ் தொகுப்பு.


 

பழைய பாட்டுத்தான் இருந்தாலும்...

தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..

எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..

— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017

ஸ்டாலினும் ஓபிஎஸ்சும் சிரிச்சுக்கிறாங்கன்னு சொன்னீங்களே, இப்ப தமிழ்நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே உங்களை பார்த்து சிரிக்குதே pic.twitter.com/CHKoLQ61a3

— ஆல்தோட்டபூபதி (@thoatta) February 14, 2017

அம்மாவிற்க்கு எப்போது எல்லாம் துன்பம் வருகிறதோ அப்போதெல்லாம் அதை தன்மீது ஏற்றுகொண்டவர்

இப்போதும்அதை செய்கிறார்

தர்மமே வெல்லும்#Chinnamma

— AIADMK (@AIADMKOfficial) February 14, 2017

 

தவறுகள் சிலரைத் தண்டிக்கின்றன. மரணம் சிலரைக் காப்பாற்றுகிறது.

— SubaVeerapandian (@Suba_Vee) February 14, 2017

அக்கா ஜெயிலுக்கு கிளம்பிவிட்டீர்களா அக்கா...
அக்கா மதிய உணவுக்கு களிதானா அக்கா...

— ATHISHA (@athisha) February 14, 2017

அன்று உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழ்நாடே அழுதுது. இன்னைக்கு அதே தீர்ப்ப தமிழ்நாடே கொண்டாடுது..

— உளவாளி (@withkaran) February 14, 2017

 போச்சே போச்சே #வளர்மதி&கேம்ப் இப்போது pic.twitter.com/C3v9E4meAy

— ஜுனியர் ஓல்ட்மாங்க் (@jroldmonk) February 14, 2017

— Modulu$ (@ashokcommonman) February 14, 2017

இவ்வளவு நாள் சிறப்பா நடிச்சதுக்கு சின்னம்மாவுக்கு ஒரு ஆஸ்கர் விருது வாங்கித்தர ஆவன செய்ய வேண்டும்

— கருணைமலர் (@karunaiimaLar) February 14, 2017

அதிமுக பொதுச்செயலாருக்கு தண்டனை
அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

இப்படிஒரு கன்றாவியான நிகழ்வை
எங்காவது பார்த்ததுண்டா யுவர் ஹானர் pic.twitter.com/ZgkosE1LfV

— மகிழ்ச்சி (@THUYARAM) February 14, 2017

அமலாக்கத்துறை கைதப்பா ஸ்டெச்சர்ல படுத்துக்கிட்டே கோர்ட்ல வாய்தா அட்டென்ட் பண்ணுன ஆளு.. இப்பவும் ஏதாவது டிராமா போடும்.

— உளவாளி (@withkaran) February 14, 2017

பூமாலையில் உள்ள நார் தான் பூ இல்லை என ஒருபோதும் சம்மதிப்பது இல்லை.

— ராதாகிருஷ்ணன் (@radhavenkat2) February 14, 2017

தலைவரே.. pic.twitter.com/8GHjdOdsay

— ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா (@Ulaganandha) February 14, 2017
அந்த 130MLAகள்:அண்ணே நாங்க உங்க பக்கமே வந்துர்றோம்


OPS:டைம் இல்ல #TNSaved pic.twitter.com/y66nflxso7

— எந்திரப்புலவன் (@Endhirapulavan) February 14, 2017

சிங்கம்-னு சொன்ன அடுத்த நாள் கூண்டுல அடைக்க சொல்லிட்டாங்களே#TNSaved

— Ramachandran veera (@ramveera1010) February 14, 2017

இனி எம்எல்ஏக்கள் என்னன்ன கதை சொல்லப்போறாங்களோ.. இருக்கு என்டர்டெய்ன்மெண்ட் இருக்கு

— மழை ☔ (@RenugaRain) February 14, 2017

20 பாய்ண்டு..
233 மஸ்டு ஆடியே தீரணும்
<118 மெஜாரிட்டிக்கு தாங்காது..
ஆளுநர்: அப்றம் என்ன கலச்சிபோடுயா..கலச்சிபோடு pic.twitter.com/n2vm01uG81

— Yoda (@iamVariable) February 10, 2017
செனங்கொண்ட சிங்கத்த செறைல அடைக்கப்போறாய்ங்க. என்ன நடக்கப்போகுதோ..
— சாமியாரு (@Saamiyaru) February 14, 2017

Death absolve Jayalalitha only from conviction not from crime.We the ppl should not forget or forgive politicians with corrupt background

— Jothimani (@jothims) February 14, 2017

அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்த குன்ஹாவை தமிழகம் என்றும் மறவாது, உச்சநீதிமன்றம் உறுதிசெய்த பிறகு உலகமே உங்களை என்றும் மறக்காது. pic.twitter.com/DdqAZyXk8i

— J Anbazhagan (@JAnbazhagan) February 14, 2017

ரிசார்ட் ஓனர நெனச்சாத்தான், சார் அந்த பேலன்ஸ்pic.twitter.com/iLS1VgdHib

— ராஸ்கோலு (@RazKoLu) February 14, 2017

இனி யாரை எல்லாம் முதல்வரா பாக்கனும்னு நம்ம தலயில எழுதிருக்கோ

— சால்ட்&பெப்பர் தளபதி (@thalabathe) February 14, 2017

மன்னார் அன்ட் கம்பெனி என்று டுபாக்கூர் கம்பெனியை அறுபதுகளில் சொன்ன டணால் தங்கவேலு தீர்க்கதரிசி. எப்பப் பாரு கமல் மட்டும்தான் தீர்க்கதரிசியா?

 
— Newton (@twittornewton) February 14, 2017

ரிசார்ட்ல ரெண்டுபக்கமும் வரிசைகட்டி போலீஸ் நிக்கறதப்பார்த்தா வாடிவாசல் வெளிய மாடுபிடி வீரர்கள் நிக்கிற மாதிரி இருக்கு.வெளியவந்தா ஒரே அமுக்கு!

— நாரதன் (@mpgiri) February 14, 2017

http://www.vikatan.com/news/tamilnadu/80753-tweets-collection-of-sasikala-verdict.html

  • தொடங்கியவர்

திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே...: சசி கிளம்பியதும் ட்வீட்டிய கமல்

´´சென்னை: சசிகலா சரண் அடைய பெங்களூருக்கு கிளம்பியுள்ள நேரத்தில் கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் முன்பும், வந்த பிறகும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன். தமிழக அரசியல் சூழல் பரபரப்பானதில் இருந்தே அவர் அவ்வப்போது ட்வீட்டி வருகிறார்.

என்ன, அவர் சொல்வது தான் பலருக்கும் புரிவது இல்லை. கொஞ்சம் புரியும்படி ட்வீட் செய்யுங்கள் தலைவரே என்று ரசிகர்கள் அழாத குறையாக கெஞ்சி வருகிறார்கள்.

திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வோணடும் நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது?என்றால் ஜனமாவது நாயகமாவது 11:25 AM - 15 Feb 2017 1,372 1,372 Retweets 2,560 2,560 likes

 

திருடன் திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வோணடும் நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது?என்றால் ஜனமாவது நாயகமாவது

 

திருடனு திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானமா ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ ஜனமா நாயகமா?

புரியலை நீங்கள் தமிழில் ட்வீட் பண்ணுவது தான் சுத்தமாக புரியவில்லை வாத்தியாரே என்று நெட்டிசன்கள் கமலிடம் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Read more at: http://tamil.filmibeat.com/heroes/kamal-tweets-again-044750.html

 
2 t

சாமி சத்தியமா பலமுறை வாசித்தும் எனக்கு புரியவேயில்லை.

  • தொடங்கியவர்

கமல் இந்த புத்தகத்தைப் படிக்கச் சொல்கிறார்!

இஸ்ரேலைச் சேர்ந்த யுவல் நோவா ஹராரி எழுதிய 'Sapiens' புத்தகத்தை நாம் படிக்க வேண்டும் என கமல் ஹாசன் ட்விட்டரில் பரிந்துரைத்துள்ளார். தமிழிலும் இந்தப் புத்தகம் வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

To get back to more sensible matters.Those who have'nt already read,Pls read,Yuval Noah Harare's Sapiens.தமிழிலும் வரவேண்டும்."சேபியன்ஸ்"

இப்புத்தகத்தில், கற்காலத்தில் இருந்து டிஜிட்டல் காலம் வரை மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி அருமையாக எழுதியிருப்பார் ஹராரி. பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, இதே புத்தகத்தை படிக்க வேண்டும் என பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. 

Yuval Noah Harari's Sapiens recommended by Kamal Haasan

 

 
 
 

http://www.vikatan.com/news/miscellaneous/80981-kamal-haasan-recommends-book-yuval-noah-hararis-sapiens-a-brief-history-of-humankind.html

  • தொடங்கியவர்

107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக்கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்:

 

 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளதை கமல் ஹாஸன் பாராட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் மற்றும் 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை பிரதமர் மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழியபாரத மணித்திருநாடு.


Read more at: http://tamil.filmibeat.com/heroes/kamal-haasan-appreciates-isro-world-record-044754.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.