Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Featured Replies

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Edapaadi Palanisamy

அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80746-edappadi-palanisamy-selected-as-admk--legislative-party-leader.html

  • தொடங்கியவர்

தீர்ப்பு எதிரொலி... அடுத்த முதல்வரை கை காட்டினார் சசிகலா!

9_11534.jpg

உச்ச நீதிமன்றத்தில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் அடுத்த முதல்வராக செங்கோட்டையனை அவர் கை காட்டி இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

அ.தி.மு.க உள்கட்சி பூசலில் சசிகலாவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பன்னீர்செல்வம் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் தீர்ப்பு குறித்தும் அவர் உருக்கமாக பேசி உள்ளார். 'தீர்ப்பு எனக்கு பாதகமாக வந்தாலும் அக்கா காட்டிய வழியில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். அப்போது, சசிகலாவின் கண்கள் கலங்கின. அதற்கு சசிகலாவின் விசுவாசி எம்.எல்.ஏ.க்கள் 'தீர்ப்பு நிச்சயம் நமக்கு சாதகமாகத்தான் வரும்' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து சசிகலாவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினர். சட்ட நிபுணர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் ஒருவேளை தீர்ப்பு எனக்கெதிராக வந்தால் அடுத்து என்ன செய்யலாம், யார் அடுத்த முதல்வர் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கொங்கு மண்டலத்திலிருந்து ஒருவரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சாய்ஸில் சசிகலாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையனை சசிகலாவும், மன்னார்குடி தரப்பும் கை காட்டி இருக்கிறது. செங்கோட்டையன் முதல்வர் என்றதும் அவருக்கு எதிரணியில் இருப்பவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும் அதை வெளிக்காட்டவில்லை. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலாவும், அவரது தரப்பினும் கடும் வருத்தத்தில் உள்ளனர். இக்கட்டான இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் கூவத்தூரில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்தின் அணிக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அவர்களிடம் சசிகலா தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். தீர்ப்பு வருவதற்கு முன்பே அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலிருக்க கூவத்தூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் பிரச்னை ஏற்படாமலிருக்க போலீஸார் தயார் நிலையில் இருக்கின்றனர். ரிசார்ட்டுக்குள் இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர் எம்.எம்.ஏ. ஒருவர் கூறுகையில், "தீர்ப்பு எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களிடம் ஒற்றுமையில்லை என்ற தகவலை பன்னீர்செல்வத்தின் தரப்பு பரப்பி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் சின்னம்மா தலைமையில் செயல்படுவோம்" என்றார். 

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வெளியே வருவதாக சொல்லியும் அவர்களை சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி வைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக வெளியில் விட வேண்டும். ரிசார்ட்டுக்குள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. முதல்வராக பன்னீர்செல்வமே தொடருவார்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80729-sasikala-shows-us-the-next-cm-candidate-from-her-camp.html

  • தொடங்கியவர்

எப்படி தேர்வானார் எடப்பாடி பழனிச்சாமி? - சசிகலாவின் புதிய கணக்கு #OpsVsSasikala #DACase

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தேர்வு செய்ததற்குப் பின்னணியில் பல அரசியல் உள்விவகாரங்கள் மறைந்துள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், மன்னார்குடி குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே நெருக்கம் இருப்பதை இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு முன்பே சசிகலாவும், மன்னார்குடி குடும்பத்தினரும் அவரது அறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த முடிவை கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா தெரிவித்த போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் மட்டும் சசிகலா தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இதன்பிறகு அவர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். 
தீர்ப்பு வெளியானதும் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அரசியல் வழிகாட்டியிடம் ஆலோசனை நடத்தி உள்ளனர். 10 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவாக செயல்பட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது அடுத்த அ.தி.மு.க. சட்டபேரவைகுழு தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சசிகலாவின் தீவிர விசுவாசிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை சொல்லி உள்ளனர். இதன்பிறகே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்"என்றார். 

எடப்பாடி பழனிச்சாமிக்கும், மன்னார்குடி குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக நெருக்கம் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது," பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்திய மன்னார்குடும்பத்தினரே எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளனர். பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் செயல்பாடு ஆகியவை மன்னார்குடி குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் போனது. அப்போது அடுத்த விசுவாசி என்ற பட்டியலில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு அனைத்து கட்சியின் உள்விவகாரங்களும் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. கரூர் அன்புநாதனிடம் நடத்தப்பட்ட சோதனைக்குப்பிறகு கட்சியில் பழனிச்சாமியின் கை ஓங்கியது.

கட்சிக்கு வருவாய் வரும் அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிச்சாமியே கவனித்து வந்தார். இதனால்தான் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த வாய்ப்பை கொடுக்க செங்கோட்டையன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது செங்கோட்டையனிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் மன்னார்குடி குடும்பம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்ட பிறகே எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை, அவரது நெருங்கிய உறவினரான அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பும் நீருப்பூத்த நெருப்பாக எம்.எல்.ஏ.க்கள் மனதில் இருக்கிறது" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80756-how-did-edappadi-palanisaamy-get-elected-as-admk-legislative-leader.html

  • தொடங்கியவர்
 
கவர்னரை சந்திக்கிறார் எடப்பாடி
 
Tamil_News_large_1710879_318_219.jpg
 
சென்னை: அதிமுக சட்டசபை குழுதலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் கவர்னரை சந்திக்க உள்ளனர். கவர்னர் மாளிகை இதற்காக நேரம் ஒதுக்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710879

  • தொடங்கியவர்

'முதல்வர் ஆவாரா எடப்பாடி பழனிச்சாமி?!'  -அதிர்ச்சி கொடுக்கும் ஆளுநர் அலுவலகம்?

சசிகலா-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

.தி.மு.கவின் சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ' பன்னீர்செல்வத்தின் அதிகாரமும் கார்டன் வட்டாரத்தின் ஈகோ பாலிடிக்ஸும் முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆட்சிக் கலைப்பை நோக்கித் தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

' சசிகலாவா? பன்னீர்செல்வமா?' என ஏழு நாட்களாக தமிழக அரசியலைச் சுற்றிச் சுழன்ற புயல், இன்று வலுவிழந்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசத்தை எதிர்கொள்ள இருக்கிறார் சசிகலா. ' என்னுடைய எம்.எல்.ஏக்களை நான் பார்க்கச் செல்கிறேன்' என அறிவித்துவிட்டு, கூவத்தூர் செல்ல இருக்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். இதனால் அசாதாரண சூழல் ஏற்படலாம் என்பதால், 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும், ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்வார்கள்'  என்ற தகவல் பரவியதால், ஆளுநரை சந்திக்க அமைச்சர் எடப்பாடிக்கு நேரம் கிடைத்திருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி" எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆறு ஆண்டுகளாக அமைச்சரவையில் இருக்கிறார். செங்கோட்டையனை முன்னிறுத்தும் முடிவை எம்.எல்.ஏக்களில் பலர் விரும்பவில்லை. ' ஜெயலலிதாவால் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார். அவரை முன்னிறுத்தினால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?' என்ற ஒற்றை வாதத்தை முன்வைத்து, முன் வரிசைக்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டும் சேலம், கூட்டுறவு வங்கிகளில் நடத்தப்பட்ட சோதனையும் எடப்பாடியை முன்வைத்து நடந்ததுதான். இப்போது அவர் முன்னிறுத்தப்படுவதை ஆளும்கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. வரும் நாட்களில் சேகர் ரெட்டியின் வாக்குமூலம் வெளியில் வந்தாலும் ஆச்சரியமில்லை. கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் மற்றும் நகை குறித்து வருமான வரித்துறை ஆய்வு நடத்தி வருகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏவின் குடும்பத்திற்கும் ஒன்றரை கிலோ வரையில் தங்கம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. அவர்களின் வீடுகளில் சோதனை நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

" முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவக்கு 89-ம் ஆண்டில் கை கொடுத்தது கொங்கு மண்டலம்தான். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் கிடைத்த எம்.எல்.ஏக்கள் பலம்தான், ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்தியது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சசிகலா. இந்த வியூகம் ஆட்சியைத் தக்க வைக்குமா என்பது கேள்விக்குறிதான். பன்னீர்செல்வத்தின் கரத்தை வலுப்படுத்த மேலும் பல எம்.எல்.ஏக்கள் வர உள்ளனர்.ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைக் கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம். டெல்டா மாவட்டங்களில் உள்ள சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏக்களும் கொங்கு மண்டலத்தில் அமைச்சர்களின் கைப்பிடிக்குள் உள்ள எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் மனநிலையில் இல்லை. எப்படிப் பார்த்தாலும், முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பில்லை. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். ' நம்மை வீழ்த்திய பன்னீருக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். நாம் வராவிட்டாலும் பரவாயில்லை. அவர் எந்தக் காலத்திலும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது' என்பதில் உறுதியாக உள்ளனர். இந்தச் சூழலில் தி.மு.கவும் ஆட்சி அமைக்கவே விரும்புகிறது. ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு கொடுக்கும் மனநிலையில் ஸ்டாலின் இல்லை. ' சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஓ.பி.எஸ்ஸுக்கு ஆளுநர் உத்தரவிடுவாரா? எடப்பாடியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வாரா?' என்பதற்கு இன்று மாலைக்குள் விடை தெரிந்துவிடும். யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் போகும் வாய்ப்பு இருப்பதால், ஆட்சிக் கலைப்புக்கு ஆளுநர் உத்தரவிடுவார் என்ற தகவலும் வலம் வருகிறது" என்றார் விரிவாக. 

" எம்.எல்.ஏக்கள் வெளியில் வந்துவிட்டால், அவர்களை தன்பக்கம் இழுப்பதற்கான வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறார் பன்னீர்செல்வம். ' ஆட்சி கலைந்துவிட்டால், தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது வரும். அம்மா ஆட்சி தொடர நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்' என வேண்டுகோள் வைத்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் இருந்து 2 எம்.எல்.ஏக்களை தன்பக்கம் சாய்த்துவிட்டார். இதையே காரணமாக வைத்து, 'டெல்டா மாவட்டங்களில் இருந்தும் சிலர் வந்துவிட்டால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்களும் தன்பக்கம் வந்துவிடுவார்கள்' என நம்புகிறார். 'ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டால், கட்சி அதிகாரத்தைப் பெறுவதில் சிரமம் இருக்காது' என்பது எங்களுடைய எண்ணம். இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து விவகாரங்களும் முடிவுக்கு வந்துவிடும். போயஸ் கார்டனை நினைவுச் சின்னமாக்கும் பணிகளும் வேகம் பெறும்" என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/80785-will-edapadi-palanisamy-become-the-cm-of-tamilnadu---governor-gives-time-to-meet-him.html

  • தொடங்கியவர்

எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநரின் விசாரணை!  - அதிர்ச்சியில் உறைந்த சசிகலா தரப்பு   #VikatanExclusive  #OPSvsSasikala

அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும், உடனடியாக அவர், இன்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கச் சென்றார். அப்போது அவரிடம் ஆளுநர், எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு கடைசி வரை ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வியை கேட்டபோது சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அவரின் முதல்வர் ஆசை கனவாகி விட்டது. உடனடியாக கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அ.தி.மு.க.வின் புதிய சட்டசபைத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அவர், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தைக் கொண்டு இன்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமைக் கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநர் சில கேள்விகளைக் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "ஏற்கெனவே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநரை சந்தித்துப் பேசினார். அடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலைக் கொடுத்தார். 
ஆளுநரைச் பன்னீர்செல்வம் சந்தித்தபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கவும் குறிப்பிட்டு இருந்தார்.  சொத்துக் குவிப்பு வழக்கு, எம்.எல்.ஏ.க்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் ஆளுநர், ஆட்சி அமைக்க யாரையும் அழைக்கவில்லை.  இந்த சூழ்நிலையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று ஆளுநருக்கு தகவல் வந்தது.

 தற்போதுள்ள சூழ்நிலையில் சசிகலா, குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளதால் மீண்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து ஆளுநரைச் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. அப்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலும் பேக்ஸ் மூலம் ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கெனவே சசிகலா கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும், எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தப் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

மேலும், நீங்கள் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கடைசி வரை உங்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்கப்பட்டதாம். இதற்கு உறுதியாக ஆதரவளிப்பார்கள் என்று டி.டி.வி. தினகரன் பதிலளித்துள்ளார். இதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்ற அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் உடனடியாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறினர். "என்றனர்.

அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், "எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதன்பிறகும் ஆளுநர் தரப்பிலிருந்து காலதாமத்தப்படுத்தப்பட்டால் சட்டரீதியாக இந்தப்பிரச்னையை எதிர்கொள்ளவும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர். 

எடப்பாடி பழனிச்சாமியிடன் சென்ற அமைச்சர் ஒருவர் கூறுகையில், "சின்னம்மா கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலில் உள்ள எண்ணிக்கையிலும்  தற்போது கொடுக்கப்பட்ட ஆதரவு பட்டியலில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையிலும் வித்தியாசம் உள்ளது. ஏனெனில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின்போது எங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் சிலர் பன்னீர்செல்வம் அணிக்குத் தாவி உள்ளனர். இதனால் அவர்களை சின்னம்மா கட்சியிலிருந்தே நீக்கம் செய்து விட்டார். அவர்களைத் தவிர்த்து கடைசி வரை எங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை மட்டுமே கொடுத்துள்ளோம். எங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களை விட கூடுதலாகவே ஆதரவு  இருக்கிறது" என்றார். 

'எத்தனை பெயர் ஆதரித்துள்ளனர்' என்று அவரிடம் கேட்டதற்கு அமைச்சர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்த நேரத்தில் கூவாத்தூரில் தங்கி இருக்கும் சசிகலா, டி.வி. மூலம் அந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய டி.டி.வி.தினகரன், ஆளுநர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளை அப்படியே ஒப்பித்துள்ளார். அதையெல்லாம் கேட்டபிறகு கூவாத்தூரில் மீண்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் சசிகலா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையில் கூவாத்தூர் ரிசார்ட்டிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ரிசார்ட்டுக்குள் சசிகலா இருப்பதால் போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். ஆளுநர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற முடியும்' என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுநர் சந்திப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியனும் இன்று இரவு 7 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துவிட்டு சென்றார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியவர்களின் தரப்பிலிருந்து ஆளுநரைச் சந்திப்பது அடுத்தக்கட்ட நகர்வை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80811-sasikala-in-shock-as-governor-questions-edappadi-palanisamy.html

  • தொடங்கியவர்
 
Tamil_News_large_171097320170214235620_318_219.jpg
 
முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

முதல்வராக பன்னீர்செல்வம் நீடிப்பதை தடுக்கவும், தங்கள் அதிகாரத்தை தொடரவும், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, எடப்பாடி பழனிச்சாமியை, சசிகலா குடும்பத்தினர் தேர்வுசெய்துள்ளனர்.

ஜெ., மறைந்ததும், முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவரை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து, முதல்வராக சசிகலா முயற்சி செய்தார். முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, கட்சியிலும் ஆதரவு அதிகரித்தது.
இதனால், சசிகலா முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டது. முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்வதை தடுக்க, எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துார் அருகே உள்ள, தனியார் சொகுசு விடுதி யில், சசிகலா தங்க வைத்தார்.

இந்நிலையில், தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு வர உள்ளது என்பதை அறிந்த சசிகலா, நேற்று முன் தினம் இரவு, கூவத்துார் சென்று, எம்.எல்.ஏ.,க்களுடன் தங்கினார்.நேற்று தீர்ப்பு வெளியானதும், தன் குடும்பத்தினருடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். அப்போது, 'முதல்வராக பன்னீர்செல்வம் நீடிக்கக் கூடாது; அதை தடுக்க, நமக்கு வேண்டிய, எடப்பாடி பழனிச்சாமியை, முதல்வர் பதவிக்கு முன்னிறுத்து வோம்' என முடிவு செய்தனர்.

அதன்பின், மூத்த அமைச்சர்களுடன், சசிகலா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், சட்டசபை கட்சி தலைவராக, எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து, எடப்பாடிபழனிச்சாமி கூறியதாவது:

சசிகலா தலைமையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.இதில், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டசபை கட்சி தலைவராக, என்னை முன்மொழிந்தார். அதை ஏற்று, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், என்னை ஒருமனதாக தேர்வு செய்தனர்.அரசு அமைப்பதற்கு, கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளோம். அதில், ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனக் கோரி உள்ளோம். கவர்னர் அழைத்ததும், எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை,அவரிடம் கொடுப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பிப்., 5ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. அதில், சட்டசபை கட்சித் தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.முதல்வர் பன்னீர்செல்வ மும், கவர்னரை சந்தித்து, மெஜாரிட்டியை நிரூபிக்க, தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கோரினார். கவர்னர் வித்யாசாகர் ராவ், எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். நேற்று, சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா சிறை தண்டனை பெற்றார்.

அதைத் தொடர்ந்து நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்ட சபை கட்சி தலைவராக, எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அவர், நேற்று மாலை, 5:00 மணிக்கு, கவர்னர்மாளிகைக்கு வந்தார். அவருடன், ஒன்பது கார்களில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஜெயக்குமார், சரோஜா, ராஜலட்சுமி, வளர்மதி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, செங்கோட்டையன் மற்றும், அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினராக இல்லாத, ஜெயலலிதாவால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சென்றனர்.

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனக்கு ஆதரவு அளிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை கொடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மாலை, 5:40 மணிக்கு, அனைவரும் கூவத்துார் புறப்பட்டு சென்றனர்.

யார் இந்த பழனி?

சட்டசபை, அ.தி.மு.க., தலைவ ராக, எடப்பாடி பழனிச்சாமி, 62, தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர், 1954 மார்ச், 2ல், ஈரோடு மாவட்டம், அந்தியூரில், விவசாய குடும்பத்தில் பிறந்தார். பி.எஸ்சி., முடித்த பின், சர்க்கரை வியாபாரம் செய்தார். கடந்த, 1974ல், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். 1989 சட்டசபை தேர்தலில், ஜெ., அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். பின், 1991, 2011, 2016 என, நான்கு முறை, இதே தொகுதியின், எம்.எல்.ஏ., ஆனார்.
கடந்த, 1998 லோக்சபா தேர்தலில், திருச்செங்கோடு தொகுதி யில் வெற்றி பெற்று, எம்.பி., ஆனார்.இவருக்கு, ஒரு மகன் உள்ளார்.தற்போது, பொதுப்பணித் துறை அமைச்ச ராக உள்ள இவர், 2011 - 16 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710973

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநரின் விசாரணை!  - அதிர்ச்சியில் உறைந்த சசிகலா தரப்பு   #VikatanExclusive  #OPSvsSasikala

அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும், உடனடியாக அவர், இன்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கச் சென்றார். அப்போது அவரிடம் ஆளுநர், எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு கடைசி வரை ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வியை கேட்டபோது சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அவரின் முதல்வர் ஆசை கனவாகி விட்டது. உடனடியாக கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அ.தி.மு.க.வின் புதிய சட்டசபைத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அவர், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தைக் கொண்டு இன்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமைக் கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநர் சில கேள்விகளைக் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "ஏற்கெனவே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநரை சந்தித்துப் பேசினார். அடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலைக் கொடுத்தார். 
ஆளுநரைச் பன்னீர்செல்வம் சந்தித்தபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கவும் குறிப்பிட்டு இருந்தார்.  சொத்துக் குவிப்பு வழக்கு, எம்.எல்.ஏ.க்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் ஆளுநர், ஆட்சி அமைக்க யாரையும் அழைக்கவில்லை.  இந்த சூழ்நிலையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று ஆளுநருக்கு தகவல் வந்தது.

 தற்போதுள்ள சூழ்நிலையில் சசிகலா, குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளதால் மீண்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து ஆளுநரைச் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. அப்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலும் பேக்ஸ் மூலம் ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கெனவே சசிகலா கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும், எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தப் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

மேலும், நீங்கள் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கடைசி வரை உங்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்கப்பட்டதாம். இதற்கு உறுதியாக ஆதரவளிப்பார்கள் என்று டி.டி.வி. தினகரன் பதிலளித்துள்ளார். இதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்ற அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் உடனடியாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறினர். "என்றனர்.

அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், "எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதன்பிறகும் ஆளுநர் தரப்பிலிருந்து காலதாமத்தப்படுத்தப்பட்டால் சட்டரீதியாக இந்தப்பிரச்னையை எதிர்கொள்ளவும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர். 

எடப்பாடி பழனிச்சாமியிடன் சென்ற அமைச்சர் ஒருவர் கூறுகையில், "சின்னம்மா கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலில் உள்ள எண்ணிக்கையிலும்  தற்போது கொடுக்கப்பட்ட ஆதரவு பட்டியலில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையிலும் வித்தியாசம் உள்ளது. ஏனெனில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின்போது எங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் சிலர் பன்னீர்செல்வம் அணிக்குத் தாவி உள்ளனர். இதனால் அவர்களை சின்னம்மா கட்சியிலிருந்தே நீக்கம் செய்து விட்டார். அவர்களைத் தவிர்த்து கடைசி வரை எங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை மட்டுமே கொடுத்துள்ளோம். எங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களை விட கூடுதலாகவே ஆதரவு  இருக்கிறது" என்றார். 

'எத்தனை பெயர் ஆதரித்துள்ளனர்' என்று அவரிடம் கேட்டதற்கு அமைச்சர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்த நேரத்தில் கூவாத்தூரில் தங்கி இருக்கும் சசிகலா, டி.வி. மூலம் அந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய டி.டி.வி.தினகரன், ஆளுநர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளை அப்படியே ஒப்பித்துள்ளார். அதையெல்லாம் கேட்டபிறகு கூவாத்தூரில் மீண்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் சசிகலா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையில் கூவாத்தூர் ரிசார்ட்டிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ரிசார்ட்டுக்குள் சசிகலா இருப்பதால் போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். ஆளுநர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற முடியும்' என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுநர் சந்திப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியனும் இன்று இரவு 7 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துவிட்டு சென்றார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியவர்களின் தரப்பிலிருந்து ஆளுநரைச் சந்திப்பது அடுத்தக்கட்ட நகர்வை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80811-sasikala-in-shock-as-governor-questions-edappadi-palanisamy.html

விட்டால் காலில் விழுந்து விடுவார் போல கிடக்கு கேணை:rolleyes: தமிழன் என்டு சொல்லவே அவமானம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.