Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Featured Replies

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

திருநாவுக்கரசர் | கோப்புப் படம்.
திருநாவுக்கரசர் | கோப்புப் படம்.
 
நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு

*

அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது.

117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால், எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவையில் ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 122-ஆக குறைந்துள்ளது. இது இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பரபரப்புடன் தொடங்கியுள்ள இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு:

10.30 am: கூவத்தூரில் இருந்து புறப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் வரத் தொடங்கினர்.

10.15 am: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலகம் வந்தடைந்தனர்.

10.00 am: சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் வாகனம் வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வாயிற்பகுதியிலிருந்து ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்குள் நடந்தே சென்றார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

9.45 am: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழியும் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் கூடி எடுத்துள்ள ஒருமித்த முடிவு இது என அவர் தெரிவித்தார். | நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு |

9.40 am: நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

9.30 am: "தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடுக்கும் இன்றைய தினம் தர்ம யுத்தத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. மனசாட்சியின் குரலும், அம்மாவின் ஆன்மாவும் இன்றைய வாக்கெடுப்பில் ஓங்கி ஒலிக்கும் என நம்புகிறேன்" என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

9.25 am: நம்பிக்கை வாக்கெடுப்பு ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக அமையும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

9.20 am: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை 10 மணியளவில் ராஜ்பவனில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.

9.15 am: சென்னை சத்யா ஸ்டுடியோஸ் பகுதியில் ஓபிஎஸ். ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

9.10 am: தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.

9.05 am: தலைமைச் செயலகத்தைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

thalamai_3134763a.jpg

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன்.

9.00 am: திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

8.55 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகம் வந்தடைந்தார்.

eps12345_3134762a.jpg

தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம்.

8.50 am: அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக எம்.எல்.ஏ. அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கவில்லை. அதிமுகவில் அணிகளுக்கு இடமில்லை. கட்சியும், சின்னமுமே பிரதானம். மக்கள் விருப்பப்படி இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்றார். | குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணித்தேன்: எம்எல்ஏ அருண்குமார்|

Coimbatorejpg_3134772a.jpg

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ. அருண்குமார்.

8.45 am: சென்னை மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

8.40 am: கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை புறப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பாதுகாப்புடன் வாகனங்கள் புறப்பட்டன.

8.30 am: கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பினார். மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

mla_palam_3134760a.jpg

8.00 am: நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, "இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார் கமல்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்18ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9549689.ece?homepage=true

  • தொடங்கியவர்

பரபரப்புடன் தொடங்கியுள்ள இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு:

11.10 am: ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

11.05 am: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

10.50 am: "எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை; எண்ணிக்கை இருந்ததால் ஆளுநரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்18ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9549689.ece?homepage=true

  • தொடங்கியவர்

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பரபரப்புடன் தொடங்கியுள்ள இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு:

11.30 am: ரகசிய வாக்கெடுப்பே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

11.25 am: சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

11.22 am: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சிறைக்கைதிகள் போல் அழைத்து வந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

11.15 am: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் கதவுகள் அடைக்கப்பட்டன.

  • தொடங்கியவர்

பரபரப்புடன் தொடங்கியுள்ள இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு:

11.57 am: ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக, காங். ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்திவரும் நிலையில் பேரவை கூடி 1 மணி நேரமாகியும் வாகெடுப்பை நடத்த முடியாமல் சபாநாயகர் திணறி வருகிறார்.

11.50 am: வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கூறினார்.

11.45 am: எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

11.42 am: மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க வேண்டும் என பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

  • தொடங்கியவர்

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

சட்டப்பேரவை வளாகம். | படங்கள்: எல்.சீனிவாசன்
சட்டப்பேரவை வளாகம். | படங்கள்: எல்.சீனிவாசன்
 
ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுகவினர் ரகளை: மைக், இருக்கைகள் உடைப்பு; அவை ஒத்திவைப்பு

*

அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது.

117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால், எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவையில் ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 122-ஆக குறைந்துள்ளது. இது இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பரபரப்புடன் தொடங்கியுள்ள இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் செய்க:

12.15 pm: திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்.

12.10 pm: திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார்.

12.00 pm: ரகசிய வாக்கெடுப்பு கோரி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷம்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்18ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9549689.ece?homepage=true

  • தொடங்கியவர்

12.25 pm: சட்டப்பேரவை வளாகத்துக்கு 108 ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை காவலர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

1.03 pm: தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.

12.58 pm: தலைமைச் செயலகம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

12.55 pm: அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். | எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை |

  • தொடங்கியவர்
சட்டசபையிலிருந்து தி.மு.க.,வினர் வெளியேற்றம்

சென்னை: சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளி காரணமாக மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சட்டசபை கூடியபோது, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து சபை காவலர்கள் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713450

  • தொடங்கியவர்

1.29 pm: சடட்ப்பேரவை மீண்டும் ஒத்திவைப்பு. திமுகவினர் ரகளையால் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1.15 pm: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷமிட்டனர். "மாற்று, மாற்று தேதியை மாற்று" என தொடர்ந்து கோஷமிட்டனர்.

1.13 pm: பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

1.03 pm: ஒத்திவைப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது என வேதனை தெரிவித்தார் சபாநாயகர். அவை விதிகளின்படியே அவையை நடத்த தான் கடமைபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

  • தொடங்கியவர்

#Undermaintenance: கூவத்தூர் ரிசார்ட் மூடல்!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்துவரும் அரசியல் அசாதாரண சூழலில், அதிகம் கவனிக்கப்பட்டது, கூவத்தூர் ரிசார்ட்தான். 10 நாட்களுக்கும்  மேலாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் அங்கு தங்கிவந்தனர்.  

Kuvathur resort closed

இந்நிலையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் இன்று அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து, அங்கு பராமரிப்புப் பணி மேற்கொள்வதால், ரிசார்ட் மூடப்படுவதாக  ரிசார்ட் நிர்வாகம் கூறியுள்ளது.

இதற்காக "Resort Under Maintenance" என்று போஸ்ட்டரை  ரிசார்ட் நிர்வாகம் வெளியே  ஒட்டியுள்ளனர். மேலும், ரிசார்ட்டின் கேட்டைப் பூட்டு போட்டு மூடி உள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/81243-kuvathur-resort-closed-for-maintenance.html

எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதும் கூவத்தூர் விடுதியை மூடியது நிர்வாகம்

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டதும், அவர்கள் தங்கியிருந்த சொகுசு விடுதி மூடப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதும் கூவத்தூர் விடுதியை மூடியது நிர்வாகம்
 
சென்னை:

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்கும் வகையில், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், சசிகலாவுக்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்ட எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. எதிரணியான ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் இதனை விமர்சித்ததுடன், எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களின் கருத்தை அறிந்து அதன்படி நடக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் கூவத்தூர் விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்குப் பதில், எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் இன்று தனது மெஜாரிட்டியை நிரூபிக்க ஏதுவாக சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக, அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. சட்டசபை வளாகத்திலும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூவத்தூரில் 11 நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த தனியார் சொகுசு விடுதி (கோல்டன் பே ரெசார்ட்) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை திரும்பியதையடுத்து, பராமரிப்பு பணிகளுக்காக விடுதியை மூடியிருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூவத்தூர் விடுதியில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்படலாம்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/18141801/1069092/Golden-Bay-resort-closed.vpf

  • தொடங்கியவர்

2.35 pm: பேரவையில் திமுகவினர் மற்றும் மு.க.ஸ்டாலினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ட்விட்டரில் கூறியுள்ளார்.

2.10 pm: சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

2.00 pm: சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா

1.50 pm: சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். | சட்டப்பேரவை வன்முறை கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் |

1.47 pm: கூவத்தூரில் உள்ள கோல்டன் பே தனியார் விடுதி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுதியில்தான் கடந்த 8-ம் தேதி முதல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கிய கூவத்தூர் விடுதி திடீர் மூடல்

  • தொடங்கியவர்

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர் | படம்: டெனிஸ் எஸ். ஜேசுதாசன்.
சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர் | படம்: டெனிஸ் எஸ். ஜேசுதாசன்.
 
தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் உட்பட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

*

அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது.

117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால், எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவையில் ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 122-ஆக குறைந்துள்ளது. இது இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பரபரப்புடன் தொடங்கியுள்ள இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் செய்க:

3.15 pm: சட்டப்பேரவை மீண்டும் கூடியது. அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

3.10 pm: ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். நாங்கள் உடனே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவையில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால், வருத்தம் தெரிவித்த பின்னரும் அவையில் சபாநாயகர் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசியது விரும்பத்தக்கது அல்ல. சட்டப்பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் தெரிவிப்போம்" என்றார்.

3.05 pm: சட்டப்பேரவையில் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

3.00 pm: பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் தெரிவிக்கச் செல்வதாக ஸ்டாலின் தகவல். அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு.

2.50 pm: சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் அவையில் இருந்து வெளியேற மறுத்த ஸ்டாலின் உட்பட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்18ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9549689.ece?homepage=true

  • தொடங்கியவர்

3.30 pm: எதிர்க்கட்சியினரே இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வெற்றி கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

துப்பரவு செய்ய சசிகலாவுக்கு வெயிட்டிங்கோ 

Golden Bay Resort 

6598.png

  • தொடங்கியவர்

சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அமைதிக்கு இதுதான் காரணம்?

தமிழக சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்றிரவு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பாடம் எடுத்ததால் அவர்கள் இன்று அமைதியாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக சட்டசபை

 ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்தது. பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. சசிகலா அணி எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வத்தை 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்தனர். 

 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதும் அவரது அணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பு ஏற்றார். அப்போது சட்ட சபையில் மெஜாரிட்டியை 15 நாள்களுக்குள் நிரூபிக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். மெஜாரிட்டிய நிரூபிக்க இன்று தமிழக சட்டசபை கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்வர் பழனிசாமி முன்மொழிந்ததும், அதற்கு சபையில் கடும் அமளி ஏற்பட்டது. எம்.எல்.ஏ.க்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சபையிலிருந்த நாற்காலிகள், மேஜைகள், மைக்குகள் உடைக்கப்பட்டு போர்களமானது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெரியளவில் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கோஷமிட்டுவிட்டு அமைதியாகவே இருந்தனர். 

 இதுகுறித்து சசிகலா தரப்பு அணியினர் கூறுகையில், "சபையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாக நேற்றே கூவத்தூரில் நடந்த மீட்டிங்கில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் எங்களிடம் தெரிவித்தனர். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் அமைதியாகவே இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படக்கூடாது. மெஜாரிட்டி நம்மிடம் இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இந்த வாக்கெடுப்பில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். அதைத்தடுக்க பன்னீர்செல்வம் மட்டுமல்ல தி.மு.க.வினரும் முயற்சிப்பார்கள். எனவே, சபையில் கடைசி வரை அமைதியாக இருந்து அம்மாவின் ஆட்சியை தொடர வேண்டும் என்று பாடமே எடுத்தனர். அவர்கள் யூகித்தபடியே சபை போர்க்களமானது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய போதும் அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். எந்த சூழ்நிலையிலும்  எங்கள் எம்.எல்.ஏ.க்கள் நிதானத்தை இழக்கவில்லை. இதுதான் அம்மா வழிநடத்திய ராணுவக்கட்டுப்பாடான கட்சிக்கு எடுத்துக்காட்டு"என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/81250-this-is-the-reason-behind-silence-of-admk-mlas-in-assembly.html

  • தொடங்கியவர்

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

dmk_evic1_3134894f.jpg
 
எதிர்க்கட்சிகளே இல்லாமல் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடி அரசுக்கு வெற்றி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். | முழு விவரம் > எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி

பரபரப்பான இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் செய்க:

3.40 pm: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3.30 pm: எதிர்க்கட்சியினரே இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வெற்றி கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்18ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9549689.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

  • ஸ்டாலின் | கோப்புப் படம்: ம.பிரபு
    ஸ்டாலின் | கோப்புப் படம்: ம.பிரபு
  • dmk_evic1_3134894g.jpg
     
எதிர்க்கட்சிகளே இல்லாமல் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடி அரசுக்கு வெற்றி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். | முழு விவரம் > எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி

பரபரப்பான இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் செய்க:

4:40 pm: உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்டாலின் கைது

மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

4.30 pm: ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்கள் குறிக்கோள். குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்போம். அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக செயல்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். நீட் தேர்வு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும்'' என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்18ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9549689.ece?homepage=true

  • தொடங்கியவர்

சிறையில் சசிகலா 'மகிழ்ச்சி'

5_17462.jpg

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து விட்டத்தகவல் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.  முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. சசிகலா, பன்னீர்செல்வம் என்ற இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. இந்த சூழ்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார். சட்டசபையில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் வெற்றியைக் கேட்ட சசிகலா 'மகிழ்ச்சி' என்று ரஜினி ஸ்டைலில் தெரிவித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.vikatan.com/news/tamilnadu/81271-sasikala.html

  • தொடங்கியவர்

5.00 pm: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரிந்து திமுகவினர் ஆர்பாட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.