Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பபு எழுக தமிழ் மேடையில் சுயநல அரசியல் வெளிப்பாடு

Featured Replies

மட்டக்களப்பபு எழுக தமிழ் மேடையில் சுயநல அரசியல் வெளிப்பாடு

 

மட்டக்களப்பபு எழுக தமிழ் மேடையில் சுயநல அரசியல் வெளிப்பாடு

 

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காகவே எழுக தமிழ் என கூறியவர்கள் தங்களுடைய மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் மேடையில் தனது சுயநல அரசியலை வெளிக்காட்டியிருந்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தவறான பாதையில் சென்று எமது மக்களை துன்புறுத்தியவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் எனக் கூறிக்கொள்கிறார்கள். அவர்களது கடந்த கால சரித்திரங்களில் பல தரித்திரங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மீண்டும் புதிய தலைமைகளை உருவாக்கி மக்களை புதிய பாதையில் கொண்டுசெல்லலாம் என்று நினைத்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை அம்பான் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வித்தியாலய அதிபர் ம.ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் எழுச்சி பெறுவதற்காக உண்மையான மனதோடு உளசுத்தியோடு செயற்படுகின்றவர்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம்.

எழுக தமிழ் மேடையில் பிரகடணப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பார்க்கும் போது தமிழ் எழுச்சி பெறவேண்டும், தமிழர்கள் எழுச்சி பெற வேண்டும், தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பலம் அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரகடனங்கள் அமைந்திருந்தால் அதனை நான் வாழ்த்துகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் புதிய தலைமையைக் கொண்டு வரவேண்டும் என்று தங்களது சுயநல அரசியலைக் காட்டுகின்ற மேடையாக அது அமைந்திருந்தது.

தங்களது தோல்விக்கு தாங்களே காரணம் என சிந்திக்காதவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் மீது குற்றம்சாட்டுகின்ற நாகரீகமில்லாத அரசியலைச் செய்கின்ற சில தலைமைகள் எவ்வாறு புதிய தலைமைகளாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் தலைமை தாங்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சுயநல அரசியல் செய்பவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆறு கடக்கும்வரை அண்ணன் தம்பி ஆறு கடந்தால் நீ யாரோ நான் யாரோ என்பது போன்று கெஞ்சி கஷ்டப்பட்டு மனு எடுத்த ஒரு சிலர் இன்று நினைக்கின்றார்கள் தங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் தங்களது பேருக்கு கிடைத்த வாக்குகள் என நினைக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு உரிய பாடம் மக்கள் மன்றத்தின் மூலமாக தீரப்பு வழங்கப்படும்.

அரசியலில் அனுபவம் இருக்க வேண்டும் சாதாரணமாக சிறிய விடயங்களை அறிந்துவிட்டு மற்றவர்களுக்கு போதனை செய்ய முற்படுபவர்களுக்கு மக்கள் எதிர்காலத்தில் தகுந்த பாடம் புகட்டுவர்´ என்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=88074

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற முதுமொழி உலகம் உள்ளளவும் மாறாது.

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.