Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்றமடிக்கும் ரயில்வே திணைக்களத்தின் மலசலகூடங்கள்

Featured Replies

நாற்றமடிக்கும் ரயில்வே திணைக்களத்தின் மலசலகூடங்கள்
 
 
நாற்றமடிக்கும் ரயில்வே திணைக்களத்தின் மலசலகூடங்கள்

ஒருவர்மணிக்கணக்காக பயணம் செய்யும்போது , இடையிடையே அவருக்கு வரும் இயற்கை உபாதைகளுக்கு பதில் சொல்லியாகவே வேண்டும். அதிலும் பெண்கள் விடயத்தில் இது மேலும் சிக்கலான விடயமாகி விடுகின்றது . பொதுன சேவை என்று வரும்போது , பயணிகளுக்கு கழிப்பிட வசதிகள் கொடுக்க வேண்டியது கட்டாய சேவை என்பதில் எந்தச் சந்தேகமுமே இல்லை .

இந்த விடயத்தில்  இலங்கை  ரயில்வே திணைக்களம் பொதுமக்களை அதிருப்திப்படுத்தி இருப்பதால் அதற்கு கல்லெறி விழ ஆரம்பித்து ள்ளது . கொழும்பில் தனியார் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக பொதுன மலசல கூடங்களை பரிபாலித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஏன் அது இந்தத் திணைக்களத்தால் முடியாது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள் .

பில்லியன் ரூபாய் கணக்கில்  கிடைக்கும் திணைக்கள வருமானம் சம்பளக் கொடுப்பனவுகளுக்காக போகின்றனவே தவிர புகையிரத நிலையங்களில் உள்ள நாற்றமடிக்கும் கழிப்பறைகளை மேம்படுத்தும் செலவுகளுக்கு கொடுக்க தாயாராக இல்லை .

1487223922_unnamed%20%281%29.jpg

மாநகர சபை அதிகாரிகள் இப்படி தனியார் நிறுவனங்களை வைத்து சுத்தமான கழிவறைகளை உருவாக்குவதில் முன்மாதிரியாகத் திகழ்ந்தாலும் , கொழும்பில் போதுமான அளவு கழிவறைகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது .

1923 இல் கொழும்பில் பொது கழிப்பறைகளை  ஆரம்பித்து வைத்த கொழும்பு மாநகர சபை 14 பொது கழிப்பறைகளை நடாத்த தான் வகுத்த திட்டம் நன்றாகச் செயற்பட்டு வருவதாகக் கூறுகின்றது . கொழும்பு மாநகர சபை பொறியியல் இயக்குனர் எம். ஏ. சீ.பாசல் இது பற்றிக் கூறுகையில் பொதுன கழிப்பறைகளுக்கு பாவனையாளர்களால்  ஏற்படும் சேதங்கள் குறித்து நான் நன்கறிவேன். மாநகரசபை கழிவகங்களைகட்டி எழுப்பி பின்பு தனியாருக்கு அதை ஏலத்தில் கையளித்து வருகின்றது. ஆரம்பத்தில் அந்நிய நாட்டு முதலின் உதவியுடன் இவை கட்டப்பட்டு வந்தன . இப்பொழுது மாநகரசபை தான் கட்டியதை ஏலத்தில் தனியாரிடம் விடுகின்றது .

பாவனையாளர் ஒவ்வொருவரிடமும் இருந்து 10 ரூபா நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது . இந்தப்பணத்தை கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்ய பயன்படுத்தப்படுகிறோம் என்று கூறிய மாநகரசபை அதிகாரி ஒருவர் தண்ணீர், மின்சாரக் கட்டணங்களை தாம் செலுத்துவதாகவும் நிறுவனம் கணிசமான வருமானம் ஈட்டினால் அவர்களே இந்தச் செலவீனங்களுக்கு பொறுப்பேற்பார்கள் என்று  மேலும் தெரிவித்தார் .

1487223943_unnamed%20%283%29.jpg

கிருமி நாசினிகள் , சவர்க்காரம் மற்றும் சுத்திகரிப்பு பணிக்கான பொருட்களைக் கொள்வனவு செய்தல் ,  பழுதுபட்டவற்றை திருத்துதல்போன்ற பணிகளைஇவர்களே மேற்கொள்வதால் எமக்கு செலவுகள் குறைக்கப்பட்டு , கழிவறைகளும் சுத்தமான நிலையில் பேணப்பட்டு வருகின்றன என்று இந்த அதிகாரி குறிப்பிட்டார் . இந்தக் கழிப்பறைகள் வெளிநாட்டவரும் உள்நாட்டவரும் ஆகிய இருவரது பாவனைக்காக விடப்படுகின்றன . ஒரு ஆணும் பெண்ணும் சுத்திகரிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருப்பதோடு , ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

மேற்பார்வையாளராகப் பணியாற்றும் வசந்தகுமார என்பவர் இந்தக் கழிவறைகள் சுத்தமாகப் பேணப்பட்டு வருகின்றன . ஒரு சில விஷமிகள் பாவனை முடிவில் தண்ணீர் ஊற்றாமல்  செல்வதைத் தவிர எல்லாமே ஒழுங்காக நடக்கின்றன என்று கூறியுள்ளார் . கழிவறை கள் காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. .பம்பலப்பிட்டியவில் உள்ள கழிவறை 24 மணி நேரமும் சேவை யில் இருக்கும் . எந்த ஒரு புதியவர் உள்ளே நுழைந்தாலும் அவரவர் நடவடிக்கைள் கவனிக்கப்படுகின்றன  என்று இவர் தெரி வித்துள்ளார் .

ஆனால் இதற்கு நேர்மாறாக இலங்கை புகையிரத திணைக்களத்தால் பராமரிக்கப்படும் கழிவறைகள் யாருமற்றே காணப்படுகின்றன என்கிறார்கள். வெள்ளவத்தை கழிவறையில் பாதுகாப்பு காவலாளியாக பணியாற்றும் 71வயதான மாரிமுத்து என்பவர்  இங்குள்ள சவர்க்காரங்களை திருட முயல்பவர்களைக் கண்டுள்ளேன் . கையில் மதுப் போத்தல்களுடன் வருபவர்கள் கழிவறைகளில் நின்று குடிக்கலாமா என்று கேட்பார்கள் . நான் சப்தமிட்டு அவர்களை விரட்டுவதுண்டு . சிலர் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வார்கள் .சிலர் சுவர்களில் கிறுக்குவார்கள் என்று தனது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் .

1487223963_unnamed%20%282%29.jpg

கொழும்பு திம்ப்ரிகசாய பிரதேசத்தில் உள்ள பொது கழிப்பறையில் பணியாற்றும் சிரியானி என்ற தொழிலாளி பலருக்கு ஒரு கழிவ றையை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியவில்லை . எது எதையோவெல்லாம் கழிவறைக்குள் வீசிவிட்டுச் செல்கிறார்கள் என்று இவர் குற்றம் சாட்டுகிறார்.ஆண்கள் கழிவறைகளின் தரைகளை  வெற்றிலைச் சாறு நிறைக்கின்றது. சிறுநீரகம் பல இடங்களில் சிந்தி யிருக்கும் . பெண்களோ பல கழிவுகளை வீசிவிட்டு சென்று விடுவார்கள் . சுத்திகரிப்பு என்பது இலேசுப்பட்ட காரியமல்ல என்று அலுத்துக் கொள்கிறார் இவர் . என்றாலும் அந்தந்த நாளில் எல்லாமே ஒழுங்கான நிலைக்கு கொணரப்பட்டு விடுவதுதான் இவர்கள் பராமரிப்பின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது .

புகையிரத நிலையங்களில் உள்ள கழிவறைகளே ஒழுங்காக இல்லாத நிலையில் வெளி நாட்டவர்களுக்கு தனியாக ஒரு கழிவறை எப்படிச் சாத்தியப்படும் என்று ஊடகவியலாளர்களால் திணைக்களத்திடம் கேட்கப்பட்டது. பல புகையிரத நிலைய அதிபர்கள் வெளிநாட்டவர்களு க்கென தனியாக ஒரு கழிப்பறை கட்டப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தெரிவி த்து ள்ளா ர்கள் . எம்மால் உதவ முடியாத நிலையில் இருக்கிறோம் என்றும் இவர்கள் கூறியுள்ளார்கள் .

பண்டாரவெ புகையிரத நிலைய அதிபர் வெளிநாட்டவர் பாவனைக்கு அவசியம் ஒரு தனி கழிப்பறை தேவை என்று மேலதிகாரிகளைக் கோரியுள்ளார்.தற்போதுள்ள பொதுசன கழிப்பறை சுவர்களில் கிறுக்கல்களுடன் மிக மோசமான நிலையில் இருப்பதாக இவர் குற்ற ம்சாட்டிஉள்ளார்.

1487223986_unnamed%20%284%29.jpg

கழிப்பறைகளில் உள்ள பல பொருட்கள் கழற்றிச் செலவதைத் தடுக்க இங்கு சீசீடீவீ பொருத்தப்படுவதோடு திருத்தல் பணியாட்கள் மாத்திரமே கழற்றும் வகையில் பொருத்தப்பட்டால் திருட்டுக்களை நிறுத்தலாம் என்று மொரட்டுவ பல்கலைகழக தொல்பொருள் பிரிவின் தலைவர் டாக்டர் காமினி வீரசிங்க தெரிவித்தார்..

பண்டாரவெ பேருந்து தரிப்பு நிலையத்தில் உள்ள பொதுஜனக் கழிப்பறை சல வாடையால் நாற்றமடிப்பதாககூறப்படுகின்றது. இங்கே எந்த பாதுகாப்பு ஊழியரும் பணிக்கு நியமிக்கப்படவில்லை .

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இதுபற்றி பேசுகையில்நீண்ட காலமாக புகையிரத நிலைய சேவையை சீர்படுத்துவதில் அக்கறை எடுக்கவில்லை. இப்பொழுது நாம் இது விடயமாக கவனம் எடுத்து வருகின்றோம் . உல்லாசப்பயணத்துறையின் கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் வெளி நாட்டவர் பாவனைக்கென தனி கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன என்று கூறியுள்ளார் .

ஆனால் பலரின் பார்வையில் இந்தக் கழிப்பறைகள் விவகாரம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தனியாரிடம் ஒப்படைக்கப்ப ட்டால் ஒழிய ஒரு நல்ல தீர்வு வராது என்ற கருத்தே மேலோங்கி நிற்கின்றது .

உல்லாசப் பயணிகள் மேலும் மேலும் வரவேண்டும் என்ற நோக்கில் மட்டுமல்ல உள்ளூரில் உள்ளவர்களும் தங்கள் நெடும் பயணங்களை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கழிக்க இந்த கழிப்பறை விவகாரம் முக்கியத்துவம் பெறுகின்றது .பொதுன பாவனை என்று வரு ம்போது அதிலும் கழிப்பறைகள் என்று வந்துவிட்டால் இங்கே சுத்திகரிப்பு என்பது அவசியப்படும் ஒன்று.மனித ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிப்பதோடு சூழலை அசிங்கப்படுத்தும் இடங்களாக இவை மாறிவிடக்கூடாது.

நம் நாட்டை இன்னொரு சிங்கப்பூராக்க வேண்டும் என்கிறார்கள் .அங்கே தெருக்களில் எச்சில் துப்பினால் தண்டம் . சூயிங்கம்மென்று துப்பினால் தண்டம் என்று பல கெடுபிடி . அந்த அளவுக்கு இலங்கை மாற இன்னும் ஒரு யுகம் வந்தாக வேண்டும் . இந்தக் கட்டுப்பாட்டை முதலில் கழிப்பறைகளில் இலங்கை ஆரம்பிக்கட்டும் கழிப்பறைகளில் துப்புவதையும் கண்டதையெல்லாம் கொட்டுவதையும் நிறுத்தும் வழியினைக் கண்டுபிடித்தால் நாளை ஒருவேளை அது தெருக்கள் வரை நீளலாம் . நாற்றமடிக்கும் இந்த விவகாரத்திற்கும் ஒரு முற்றுப்பு ள்ளி இட்டு விடலாம் 

http://www.onlineuthayan.com/article/271

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசந்துறையில் இருந்து கொழும்புக்கு உத்தரதேவி உத்தரதேவின்னு ஒன்று ஓடுது. உள்ளூர் மக்கள் சிவப்பு ரயில் என்டினம். அந்த ரயிலில் ஏறி பாத்ரூம் பக்கம் போனீங்க... மயங்கி விழுந்திடுவியள். அதுமட்டுமன்றி... பார்ரூமில் உள்ள காமட்டுக்குள்ளால.. தண்டவாளம் பார்க்கலாம். பயணிகளின் கழிவுகள் எல்லாம் நேர தண்டவாளத்திற்கு உரமாகுது. அது உத்தரதேவியா ஊத்தைதேவியான்னு மக்கள் தான் தீர்மானிக்கனும். ரிக்கெட் காசு மட்டும் நல்லா வசூல் ஆகிடுது. tw_blush:

ஆனால்.. இதே சிங்களவன்.. டுபாயிலும்.. டோகாவிலும் எயார்போட் கக்கூஸ் கழுவிறதில மும்மரமா நிற்கிறாங்கள். டுபாயிலும் டோகாவிலும் அவை தான் அதிகம்..! சொந்த நாட்டில அதைச் சுத்தமா வைச்சிருக்க வக்கில்ல. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.