Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெளியுறவு செயலாளரை த.தே.கூட்டமைப்பு சந்தித்துள்ளது

Featured Replies

இந்திய வெளியுறவு செயலர் -கூட்டமைப்பு சந்திப்பு
 
 
இந்திய வெளியுறவு செயலர் -கூட்டமைப்பு சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள  இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடை யிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
 
இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணி கள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரிடம் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
 
மேலும், புதிய அரசியல்யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது கரிசனையையும் எடுத்துரைத்தனர்.
 
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கினார்.
20-2-2017%2015.2.50%204.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவைசேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்திய வெளியுறவு செயலாளரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர், துணைசெயலாளர், மற்றும் உயர்ஸ்தானிகரதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/news/24131

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவு செயலாளரை த.தே.கூட்டமைப்பு சந்தித்துள்ளது

 

உத்தியோகபூர்வ  பயணமாக  இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்  ஜெய்சங்கரை  இன்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில்   நடைபெற்ற இந்த சந்திப்பின் போது  உத்தேச அரசியல் யாப்பு தொடர்பிலேயே அதிக கவனம்; செலுத்தப்பட்டதாக தெரிவிக்க்ப்படுகின்றது.

அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக  ஜெய்சங்கர் தெரிவித்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பதலி உள்ள தாமதம் இ காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில்  எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளதாக இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும்இ எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில்இ நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜாஇ சுமந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன்இ சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

http://globaltamilnews.net/archives/18471

  • தொடங்கியவர்
‘முக்கிய விவகாரங்களில் மந்தம்’
 
21-02-2017 09:37 AM
Comments - 0       Views - 25

article_1487650251-TNA%203.jpg

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளனர். 

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், நேற்று (20) இடம்பெற்றது.  

இந்த சந்திப்பு தொடர்பில், கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றது. 

இச்சந்திப்பின்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளான, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில், அவரை தெரிவுபடுத்தினோம்.  

அத்துடன், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் தமது கரிசனையையும் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.  

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக, இந்திய வெளியுறவுச் செயலாளர், கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் உறுதி வழங்கினார். 

இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  

- See more at: http://www.tamilmirror.lk/191895/-ம-க-க-ய-வ-வக-ரங-கள-ல-மந-தம-#sthash.0bv26LwN.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.