Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா

Featured Replies

வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா
 
 
வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நேற்றுக்காலை பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
 
இந்தப் பேச்சுக்களில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாக்குறுதியை, 1987ஆம் ஆண்டு இந்தியா வழங்கியது என்றும், அதனை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும்  சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
 
இந்த விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்ற வாக்குறுதியையும் இந்தியா கொடுத்தது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட போது இந்தியா அதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை.  இந்த விவகாரத்தில் இந்தியா தெளிவான  அக்கறை இழந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார்.
 
அதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், “1987ஆம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது மாறி விட்டது, கொழும்பில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது பல்வேறு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
எனினும், ஏனைய எல்லா விவகாரங்கள் குறித்து பேசும் போதும், வடக்கு, கிழக்கு இணைப்பை பணயம் வைக்கக் கூடாது.
 
தமிழர்கள் இதனை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இந்தியா அதனை கருத்தில் கொள்ளாது, எனினும், இலங்கை அரசுடனான பேச்சுக்களில் இதுபற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்” என்று பதிலளித்துள்ளார்.
 
அத்துடன், இந்திய – இலங்கை உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்த முடியாது.
 
இந்த உடன்பாட்டை தடம்புரளச் செய்வதற்கு விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர்.
 
தமிழர் விடுதலைக் கூட்டணியும், இந்த உடன்பாட்டை கண்டித்தது.
 
இந்த உடன்பாட்டுக்கு எதிரானவரான மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதை விடுதலைப் புலிகளும் எதிர்பார்த்திருந்தனர். இவற்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.onlineuthayan.com/news/24141

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழர்களை விபச்சாரியாகவே கருதி நடத்தி வருகிறது. விடுதலைப் புலிகள் மட்டுமே இந்தியாவின் இந்தச் சிந்தனைக்கு எதிராக நின்றார்கள்.. அந்த மனோ வலிமையும் தேசிய தலைவரிடம் மட்டுமே காணக்கப்பட்டது. இன்று அவர்கள் களத்தில் இல்லை என்றதும்.. இந்திய வேதாளம் மீண்டும் முருக்கை மரம் ஏறிவிட்டது.

இந்த இந்திய வேதாளத்தை அதன் சிந்தனைகளை மாற்றக் கூடிய நிலையில்.. ஈழமும் இல்லை தமிழகமும் இல்லை. இரண்டும் மக்கள் அற்பணிப்பற்ற தலைமைகளால்.. சீரழகிறது. இதுவே இந்திய வேதாளம் எதிர்பார்த்ததும் ஆகும்.. தமிழர்களிடம். அதை தமிழர்களே அமைச்சும் கொடுக்கிறார்கள்.. சிந்தனை அற்றவர்களாக.

தமிழர்களின் சிந்தனையும் தெரிவும் மாறினால் அன்றி.. இந்திய உபகண்டத்தில் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் அங்கலாய்ப்புக்களாகவே இருக்கும். 

தமிழினப் படுகொலைக்கு துணை போன கொலைகாரக் கும்பலிடம் எந்த அடிப்படையில் இவர்கள் நம்பிக்கை, நாணயம், நேர்மை போன்ற அம்சங்களை எதிர்பார்த்தார்கள்?

  • தொடங்கியவர்
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது-ஜெய்சங்கர்
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது-ஜெய்சங்கர்
வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது எனவும், இணைந்த மாகாணத்தில் தமிழ் தலை மைகள் கூடுதல் அதிகாரம் கோரியதனாலேயே இனங்களுக்கிடையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமை ச்சின் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்த கருத்துக் குறித்து இவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
 
வடக்கு கிழக்கு இணைவுக்கு கிழக்கு தமிழர்களே அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களும், தெற்கு சிங்களவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் உடன்படிக்கையினால் இது இணைக்கப்பட்டாலும், தற்பொழுதுள்ள நிலையில் அதனை மீண்டும் இணைப்பதற்கு இந்தியா முயற்சிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/news/24192

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.