Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

 
   icon_comments_74.png

vvt_picketing_3_020603

 

இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது.

இலங்கை ராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணம் நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தாலும் பொலிஸாராலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 55 பெண்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, அவர்களுள் 48 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் 7 பேர் புதிய அரசாங்கத்தின் காலத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வவுனியா, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 4 பகுதிகளில் இவ்வாறான பாலியல் முகாம்கள் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட 6 அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கையிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா, இவ்விடயங்களில் இலங்கை அரசாங்கம் எவ்வகையான நீதி விசாரணைகளை முன்னெடுக்கப் போகின்றதென பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/?p=421694

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தமிழ்பெண்களை சிங்கள காமக் காட்டுமிராண்டி இராணுவத்தில் இருவருக்கு கட்டி வைச்சு.. போட்டோ எடுத்துப் போட்டு.. இதையும் சமாளித்து விடுவார்கள்.

சம் சும் கும்பல் இருக்கு. அது உதவும்.

முன்னாள் போராளிகளின் மர்மச் சாவுகள்.. தமிழ் பெண்கள் மீது தொடரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து எம்மவர்களே பேசுவதில்லை.

மாறாக மிகப் பெரிய குற்றவாளிகளையும் காட்டுமிராண்டிகளையும் காடைகளையும் கொண்ட சொறீலங்கா இராணுவத்தை நீதியின் முன் நிறுத்தி தண்டிப்பதை விடுத்து.. அதுக்கு வெள்ளையடித்து.. இன்னும் இன்னும் இராணுவக் குற்றவாளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரகசிய இன அழிப்புக்கு துணை போகிறார்கள். 

Edited by nedukkalapoovan

தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் வைத்திருந்தனர் : புகைப்பட ஆதாரங்களுடன் ஐ.நா.விடம் சிக்கியது

Published on 2017-02-21 15:25:12

 

பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது.sri-lankan-army-abuse.jpg

விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜொகனனஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

 

ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு, குற்றவாளிகளாக இராணுவ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கததை கோருமாறு கேட்டுள்ளது.

 

இந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

 

அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை ஐ.நா குழு ஊடாக வழங்கியுள்ளோம். நீதியை நிலைநாட்டும் கடும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றதா என்பதை பார்ப்போம்.

 

அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எமது அறிக்கையில் கூறியுள்ளோம். ஐ.நா குழு அதன் முன்னேற்றங்களை கண்காணிக்க முடியும் என சூகா கூறியுள்ளார்.

 

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரிகளில் மேஜர் ஒருவரும் லெப்டினட் ஒருவரும் அடங்குகிறார்.

 

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இலங்கையின் மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அவர்களிடம் சிக்கிய பெண்களின் சத்தியக் கடிதங்களின் பெயர்கள் ஐ.நா குழுவிடம் வழங்கப்பட்டுள்ள விபரமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

 

இந்த அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா அமைதிக்காக்கும் படையில் சேவையாற்றியுள்ளார். நான்காவது அதிகாரி சித்திரவதை கொடுப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். 5ஆவது அதிகாரி இந்த குற்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

இராணுவத்தினர் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்த அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்தாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு முகாம்கள் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

முகாம்கள் இயங்கியதாக கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

 

வவுனியாவுக்கு அருகில் ஒரு முகாம், புத்தளத்திற்கு அருகில் ஒரு முகாம். கொழும்பில் ஒரு முகாம் , கொழும்புக்கு வெளியில் வடக்கு,கிழக்கு அல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு முகாம் என இந்த முகாம்கள் இயங்கி வந்துள்ளன எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

விசாரணைகளை நடத்தாமை, பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஐ.நா குழுவின் முன் கடுமையாக சாடியுள்ளது.

 

சித்திரவதை மற்றும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களை வெளியிட்டுள்ள 55 பெண்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 48 பெண்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் ஆட்சியின் கீழ் 7 பெண்களும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

எது எப்படி இருந்த போதிலும் இராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிலர் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/16906

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.