Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடிநீர் மாசு தொடர்பான ஆய்வுக்குழு-தவராசா குற்றச்சாட்டு

Featured Replies

பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடிநீர் மாசு தொடர்பான ஆய்வுக்குழு-தவராசா குற்றச்சாட்டு
 
 
பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடிநீர் மாசு தொடர்பான ஆய்வுக்குழு-தவராசா குற்றச்சாட்டு
யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
 
யாழ்.பொது நூலகத்தில் நேற்றையதினம்(24) விசாரணை குழுவால் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன். இந்த விசாரணை களின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
 
ஆய்வுக் குழுவின் அறிக்கை பிழையான அறிக்கை என்பதுடன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு இந்த விடயத்தில் தலையிட அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் இல்லை.
 
மேற்கண்டவாறு வடமாகாண அமைச்சர்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான விசாரணை குழுவிற்கு தாம் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சு ஆய்வுகுழு ஒன்றை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ரீதியாக விவசாய அமைச்சருக்கு அதிகாரம் இல்லை.
 
மேலும், விவசாய அமைச்சருக்குரிய விடயமும் இல்லை. அந்த விடயம் முதலமைச்சருக்குரிய விடயம். முதலமைச்சருக்கே அதிகா ரம் உள்ளது.
 
இதேபோல் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், ஆய்வு குழுவும் பிழையானவை. என்பதை விஞ்ஞான ரீதியாக விசாரணை குழுவிற்கு சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
 
இதேபோல் மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக ஆய்வின் முடிவு இப்படித் தான் அமையப்போகின்றது என நொதேண்பவர் நிறுவனத்தின் தலமைக்கு எப்படி தெரியவந்தது? என்பதை கேட்டு அந்த கடிதத்தின் பிரதியையும் விசாரணை குழுவிற்கு காட்டியிருக்கின்றேன். அதற்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் பதிலளிக்கை யில்,
 
அந்த கடிதத்தை அரசியல் ரீதியான வேறுபாடுள்ள இணையம் ஒன்றை நடத்திவரும் ஒருவர் திட்டமிட்டு  வெளியிட்டதாக கூறி யிருக்கின்றார்.
 
இவ்வாறான ஆதாரங்களை நான் சமர்பித்திருக்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
 
இதேவேளை மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனும்  மேற்படி விசாரணை குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

http://www.onlineuthayan.com/news/24318

வடமாகாணசபையில் தவராசாவின் பங்களிப்பு சிறப்பானது!

  • கருத்துக்கள உறவுகள்

குறையற்றவர் என்று உலகில் எவரும்இல்லை.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபற்றிய ஆய்வு அறிக்கை தொடர்பான உண்மை பொய்களுக்கு அப்பால் சிந்திக்கும்போது.... இந்த மாசடைவினால் ஏற்பட்ட பாதிப்புகளை அல்லது பாதிக்கப்பட்ட மக்கள்பற்றி இன்றுவரை ஏந்தவித அறிக்கைகளும் வந்ததாக அறியக்கிடைக்கவில்லையே ஏன்..??  நீர் மாசடைந்ததாக அறியப்பட்ட ஊர்களில் இன்று முன்போலவே கிணற்றுநீர் பாவனையில் உள்ளதே..! 

எதிர்க்கட்சி என்றால் எதிர்ப்பதல்ல...! தவறுகளைப் பாராட்டவும் செய்தல்வேண்டும் என்பதைச் சிங்கள அரசின் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து பாடமாகப் பயின்றுகொள்ளவும் வேண்டும்.!!   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.