Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைமைக்கு ஆபத்து

Featured Replies

இறைமைக்கு ஆபத்து

 

பூகோள அர­சி­யலில் அண்­மைக்­கா­லத்தில் பல்­வேறு மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. நிகழ்ந்த வண்­ண­மு­மி­ருக்­கின்­றன. எதிர்­கா­லத்தில் நிக­ழவும் இருக்­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கையில் இந்­துமா சமுத்­திரம் முதல் வல்­ல­ர­சு­களின் கடற்­ப­ரப்­புக்­களில் அடுத்­த­டுத்து யுத்­தப்­ப­யிற்­சி­களும் ஒத்­தி­கை­களும் இடம்­பெற்­ற­வண்­ண­மி­ருக்­கின்­றன.

இத்­த­கை­ய­தொரு சூழ­மைவில் உலக அமை­தியை நிலை­பெ­றச்­செய்­வ­த­னையே பிர­தான இலக்­காக கொண்டு செயற்­படும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அந்­தோ­னியோ குத்­தேரஸ். ஐரோப்­பிய கண்­டத்­தினுள் தீவி­ர­ம­டைந்து வரும் முறு­கல்கள் குறித்து தனது கரி­ச­னையை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்­கையில்,

ஜன­ரஞ்­சகம், தேசியவாதம் மற்றும் பிரி­வி­னை­வாதம் என்­ப­ன­வற்றால் புதிய அச்­சு­றுத்­தல்­களும், சவால்­களும் உரு­வாகி வரு­கி­ன்றன. பல சம­யங்­களில் அமைதி உடன்­ப­டிக்­கைகள் அமுல்­ப­டுத்தப் படு­வ­தில்லை. ஜன­நா­யக நிர்­வாகம் மற்றும் சட்­டப்­ப­டி­யான ஆட்சி முறை­க­ளுக்கு எதி­ரான சவால்­களே மோதல்­க­ளுக்கு கார­ண­மா­கின்­றன.

அர­சியல் ஆதா­யத்­துக்­கா­கவும் சுய இலா­பத்­துக்­கா­கவும் இன, பொரு­ளா­தார, மத மற்றும் ஜாதி ரீதி­யி­லான பதற்­றங்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன இதனை சரி­யான முறையில் கையாண்டு தடுக்க வேண்டும் என பகி­ரங்­க­மான கோரிக்­கை­யொன்றை முன்­வைத்­துள்ளார்.

இவ்­வாறு உலக நாடு­களில் அர­சியல் பொரு­ள­ாதார ரீதி­யி­லான ஸ்திரத்­தன்மை கேள்­விக்­குள்­ளா­கி­யி­ருக்­கின்ற நிலையில் நீண்­ட­கா­ல­மாக நீடித்­துக்­கொண்­டி­ருக்கும் தமி­ழர்­ பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிட்­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் தற்­போது ஏற்­பட்­டுள்­ள­தாக பல்வேறு தரப்­பி­ன­ராலும் கூறப்­ப­டு­கின்­றது.

மறு­பக்­கத்தில் இறுதி யுத்தம் உட்­பட இந்த நாட்டின் தேசிய இன­மான தமி­ழினம் இரண்­டாம் ­த­ரத்தில் கையா­ளப்­பட்டு அடக்­கு­வ­தற்கு முனைந்­த­மையால் ஏற்­பட்ட மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பா­ன ­பொ­றுப்­புக்­கூறல் குறித்த தீர்­மா­னத்­தினை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்றி 18 மாதங்கள் கடந்­துள்­ளன.

அந்த தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் நீண்­ட­தொரு கால­தா­ம­தம் உள்ள நிலையில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் இம்­மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இக்­கூட்­டத்­தொ­டரில் இலங்கை அர­சாங்கம் 18 மாத­கால அவ­கா­சத்தை கோரு­வ­தற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள், அமைப்­பு­க­ளுடன் இரா­ஜ­தந்­திர ரீதி­யான நகர்­வு­களை மேற்­கொண்­டி­ருக்­கின்ற இக்­கா­லப்­ப­கு­தியில் பல்­வேறு நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரிகள் இலங்­கைக்கு உத்­தி­யோகபூர்­வ­மான களப்­ப­ய­ணங்­களை மேற்­கொண்டு கண்­கா­ணிப்­புக்­களை செய்து செல்­கின்­றனர்.

இவ்­வா­றான விஜ­யங்கள் மூலம் உள்­நாட்டில் உள்ள யதார்த்­தங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே அதி­க­முள்­ளதால் பாதிக்­கப்­பட்ட தமி­ழி­னத்­திற்கு சாத­க­மாக அமை­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் அதி­க­முள்­ள­தாக கரு­தப்­பட்­டாலும் கடந்த சனிக்­கி­ழமை முதல் இன்று சனிக்­கி­ழமை வரை­யி­லான ஏழு தினங்­க­ளுக்குள் இலங்­கையின் அர­சியல், பொரு­ள­ாதா­ரத்தில் செல்­வாக்குச் செலுத்­திக்­கொண்­டி­ருக்கும் பிக் திரிஸ் எனச் சொல்­லப்­ப­டு­கின்ற இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­களின் கொள்கை ரீதி­யாக முடி­வெ­டுக்கக் கூடிய தரத்தில் உள்ள குழு­வினர் அடுத்­த­டுத்து வந்து சென்­றி­ருக்­கின்­றார்கள்.

பொரு­ளா­தார, வர்த்­தக மற்றும் இரு­நாட்டு உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்தல் என்ற தோர­ணையில் அமைந்­தி­ருக்­கின்ற இந்த மூன்று நாடு­களின் முக்­கி­யஸ்­தர்­களின் உத்­தி­யோகபூர்வ விஜ­யங்கள் நிச்­ச­ய­மாக தமிழர் இனப்­பி­ரச்­சி­னையில் பிர­தி­ப­லிக்கப் போவ­தில்லை. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையிலும் பிர­தி­ப­லிக்­கப்­போ­வ­தில்லை என்­பது வெளிப்­ப­டை­யா­கின்­றது.

அவ்­வா­றாயின் இந்த நாடு­களின் பிர­தி­நி­திகள் வெறு­மனே பொரு­ளா­தார, வர்த்­தக மற்றும் இரு நாட்டு உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்தல் ஆகி­ய­வற்­றுக்­காக அவ­ச­ர­அ­வ­ச­ர­மாக அடுத்­த­டுத்து வர­வேண்­டிய அவ­சியம் என்ன? அதிலும் இந்­திய, அமெ­ரிக்க நாடு­களின் குழு­வினர் அரச நெறி­மு­றையின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி, பிர­தமர், சபா­நா­யகர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் என சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்த போதும் சீன குழு­வினர் அவ்­வா­றில்­லாது ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு அடுத்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவைச் சந்­தித்­தி­ருக்­கின்­றார்கள்.

ஆகவே கொள்கை ரீதி­யாக முடி­வெ­டுக்கும் நிலையில் உள்ள இத்­த­ரப்­பி­னரின் விஜ­யங்­களின் பின்­ன­ணியில் நிச்­ச­ய­மாக தமது நலன் சார்ந்த விட­யங்கள் இல்­லா­ம­லி­ருக்கப் போவ­தில்லை என்­பது நிதர்­ச­ன­மான உண்மை. கடந்த ஆட்சி மாற்­றத்தின் மூல­கா­ர­ணி­யாக பிராந்­திய மற்றும் பூகோள அர­சி­யலின் செல்­வாக்கு இருந்­தி­ருக்­கின்­றது என்­பது பகி­ரங்­க­மா­கி­யுள்ள நிலையில் இந்த விஜ­யங்­க­ளையும் அத­னுடன் தொடர்பு படுத்­தியே பார்க்க வேண்­டி­யுள்­ளது. மேலும் இந்த மூன்று நாட்டுக் குழு­வி­னரின் விஜ­யங்கள் தொடர்பில் உள்­ளார்ந்த விட­யங்­களை தனித்­த­னி­யான நோக்க வேண்­டி­யுள்­ளது.

 

இந்­திய வெளியு­ற­வுச் ­ செ­ய­லா­ளரின் விஜயம் 

இந்­திய வெளியு­ற­வுச் ­செ­ய­லாளர் ஜெய்­சங்கர் கடந்த சனிக்­கி­ழமை இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். இலங்­கைக்­கான புதிய இந்­திய தூதுவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முழு­வதும் இலங்­கைக்­கான புதிய இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தில் வெளியு­றவு விவ­கா­ரங்கள் தொடர்­பான நெறிப்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்ட பின்னர் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அர­சியல் தரப்­பி­ன­ருடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்தார்.

தமிழ் முற்­போக்கு கூட்­டணி, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகிய தரப்­புக்­க­ளை தனித்­த­னி­யாக சந்­தித்து அவர்­களின் கோரிக்­கை­களை கேட்­ட­றிந்து கொண்­டவர் பிர­தான எதிர்க்­கட்­சி­யா­க­வி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் முக்­கிய சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்தார்.ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் சில முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்ற நிலையில் நான்கு பங்­கா­ளிக்­கட்­சி­களின் நான்கு தலை­வர்கள், ஊட­கப்­பேச்­சாளர் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இந்­திய வெளியு­றவுச் செய­லா­ள­ருடன் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்­தனர்.

இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ன­பத்தில் கூறப்­பட்­­டுள்ள நிரந்­தர அர­சியல் தீர்­வுக்­கான விட­யத்தில் காணப்­படும் தமிழர் தாய­க­மான வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனின் கேள்­வியில் இந்­திய–இலங்கை ஒப்­பந்­தத்­தினை மேற்­கொள்­வ­தற்கு இந்­தியப் படையினர் இரத்தம் சிந்­தி­யி­ருக்­கின்­றார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப்.வும் அதற்­கான பங்­க­ளிப்பைச் செய்து இழப்­புக்­களைச் சந்­தித்­தி­ருக்­கின்­றது.

அந்த ஒப்­பந்­தத்தின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பு தற்­போது மறுக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே வடக்கு, கிழக்கு இணைப்பை இந்­தியா வலி­யு­றுத்த வேண்டும் எனக் கோரி­யி­ருக்­கின்றார். அதன்­போது இந்­திய வெளியு­ற­வுச்­செ­ய­லாளர், இந்­திய இலங்கை ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் எமது பிர­தமர் ராஜீவ் காந்தி கொலை செய்­யப்­பட்டார். அதன் பின்னர் பல விட­யங்கள் கடந்து விட்­டன.

தற்­போ­துள்ள அர­சியல் சூழ­மை­வுக்கு ஏற்­ப உங்­களின் யதார்த்­த­மான கோரிக்­கை­களை முன்­வை­யுங்கள். அதற்­காக வடக்கு, கிழக்கு இணைப்பை கைவி­ட­வேண்­டு­மெனக் கோர­வில்லை. பேச்­சு­வார்த்தை மேசையில் அந்த நிபந்­த­னை­யையும் வையுங்கள். ஆனால் காலத்­திற்கு பொருத்­த­மா­ன­தாகச் சொல்­லுங்கள் என பதி­ல­ளித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து தான் ஜனா­தி­பதி, பிர­தமரை அடுத்து சந்­திக்­க­வி­ருப்­பதால் அவர்­க­ளி­டத்தில் வலி­யு­றுத்த வேண்­டிய முக்­கிய விட­யங்களை மட்டும் கூறுங்கள் எனவும் கட்­டுக்­கோப்­பாக கோரி­யுள்ளார் இந்­திய வெளியு­ற­வுச்­செ­யலர். இச்­ச­ம­யத்தில் தான் தடைப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள், தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் ஆகி­யன தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்­பதை அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­து­மாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் கேட்­டுக்­கொண்­டனர்.

அதற்­க­டுத்து சித்­தார்த்தன் எம்.பி வடக்கில் வேலை­வாய்ப்பு வழங்­கு­வதில் காணப்­படும் நிலை­மை­க­ளையும் வேலை­வாய்ப்­புக்­கான தேவை­க­ளையும் கூறி­ய­போது இந்­திய வெளிவி­வ­காரச் செய­லாளர் வடக்கு கிழக்கு உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திகள் தொடர்­பா­கவும் அதன்­போது வேலை­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­படும் எனவும் கூறி­ய­தோடு நாங்கள் செய்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஆனால் நீங்கள் தான் விரும்­பா­தி­ருக்­கின்­றீர்கள் என்ற பொருள்­படும் வகை­யிலும் கருத்து வெளியிட்­டி­ருக்­கின்றார்.

அத­னை­ய­டுத்து அவர் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோரைச் சந்­தித்­தி­ருந்த போதும் அச்­சந்­திப்­புக்கள் தொடர்­பி­லான தக­வல்கள் வெளியில் கசி­யாத வகையில் இறுக்­க­மாக இருந்­தன. எவ்­வா­றா­யினும் 2017இற்குள் நீண்­ட­கா­ல­மாக இருந்து வரும் இப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும். தொடர்ந்தும் நீட்டிச் செல்ல முடி­யாது என்­பதைச் சொல்­லவே தான் இப்­ப­ய­ணத்தை மேற்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட இந்­திய வெளிவி­வ­கார செய­லாளர் அமெ­ரிக்கா, ஜப்பான் உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் பய­ணிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம் எனவும் குறிப்­பிட்­ட­தாக இரா­ஜ­தந்­திர தக­வல்கள் தெரி­விக்­கின்ற நிலையில் அந்த செய்­தியை ஜனா­தி­பதி பிர­தமர் இடத்தில் நிச்­சயம் வலி­யு­றுத்­தி­யி­ருப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ­ரு­டைய விஜயம் இவ்­வாறு தான் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

 

அமெ­ரிக்க காங்­கிரஸ் குழுவின் விஜ­யமும் சந்­திப்­புக்­களும்  

அதற்கு அடுத்தபடி­யாக அமெ­ரிக்க காங்­கிரஸ் குழு­வினர் இலங்­கைக்கு கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று வருகை தந்­தி­ருந்­தனர். புதிய ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் பதவி­யேற்ற பின்னர் இலங்­கைக்கு வருகை தரும் கொள்­கை­ய­ளவில் தீர்­மா­ன­மெ­டுக்க வல்ல முக்­கிய முதற்­கு­ழு­வாக இக்­குழு காணப்­ப­டு­கின்­றது.

மூன்று நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு வருகை தந்­துள்ள அக்­கு­ழுவில் அமெரிக்க சபை ஜன­நா­யக கூட்­டாண்­மையின் தலைவர் பீற்றர் ரொஸ்கம் தலை­மையில் இணைத்­த­லைவர் டேவிட் பிரைஸ், மற்றும் ஜெரி கொனோலி, அட்­ரியன் ஸ்மித் ஆகியோர் இடம்­பெற்­றுள்ளனர்.

அமெ­ரிக்­காவின் பிர­தான கட்­சி­க­ளான குடி­ய­ரசுக் கட்சி மற்றும் ஜன­நாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தான அமெ­ரிக்க சபை ஜன­நா­யக கூட்­டாண்மை ஆணைக்­கு­ழுவில் இரு­பது உறுப்­பி­னர்கள் உள்­ளனர். அதில் நான்கு உறுப்­பி­னர்­களே இங்கு வரு­கை ­தந்­துள்­ளனர்.

ஏனைய நாடு­க­ளுடன் இரு­த­ரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தோடு சட்­ட­மன்ற நிறு­வ­னங்­களின் பதி­ல­ளிக்கும் தன்மை, சுதந்­திரம், வினைத்­திறன் மிக்க அபி­வி­ருத்தி ஆகிய விட­யங்­களை மேம்­ப­டுத்­து­வ­தையும் இலக்­காக கொண்­டி­ருக்­கின்ற இக் கட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்­க்கட்­சித்­த­லைவர், சபா­நா­யகர் உட்­பட ஊட­கத்­துறை அமைச்சர், இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பாரா­ளு­மன்ற பெண் பிர­தி­நி­திகள், சிவில் சமூகத்­தினர் என பல தரப்­பட்ட குழு­வி­ன­ரையும் சந்­தித்தி­ருந்­தனர்.

குறிப்­பாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் எதிர்­க்கட்­சித்­த­லைவர் மற்றும் துறைசார் மேற்­பார்வைக் குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா தலை­மையில் சந்­தித்தி­ருந்­தனர்.

தாங்கள் இலங்­கையில் தற்­போ­தைய அவ­தா­னிப்­புக்கள் தொடர்பில் அறிக்­கை­யொன்றை வாஷிங்­ட­னுக்கு சமர்ப்­பிப்­ப­தாக எதிர்­க்கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ய­ளித்­த­தோடு துறைசார் மேற்­பார்வை குழுவில் அங்கம் வகிக்கும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டத்தில் தமிழ் மக்­க­களின் தேவைகள், பாதிப்­புக்கள் தொடர்பில் புள்­ளி­வி­ப­ரங்­களை கோரி­ய­போதும் அவர்­களால் அதனை உடன் சமர்ப்­பிக்க முடி­யாது போயி­ருக்­கின்­றது.

இக்­கு­ழு­வி­னரும் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் குறித்தே அதி­க­ளவில் கவ­னத்தை செலுத்­து­கின்­றனர் என்­பதை அவர்­களின் வினாக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­ததாக அதில் கலந்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இவ்­வாறு அச்­சந்­திப்பு இருக்­கையில் அதற்­க­டுத்து சீன குழ­ுவினர் வருகை தந்­தி­ருந்­தனர்.

 

தமிழ் தரப்பை கருத்தில்  எடுத்­தி­ராத சீனக்­குழு 

சீன அர­சி­யலில், பொரு­ளா­தா­ரத்தில் கொள்­கை­ய­ளவில் தீர்­மா­னத்தை எடுக்­கும் சக்தி மிக்க சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான திணைக்­கத்தின் தலைவர் சோங்க டாவோ தலை­மை­யி­லான குழு­வினர் ஜூன் மாதம் சீனாவில் நடை­பெ­ற­வுள்ள மாநாடு ஒன்றில் கலந்­து­கொள்­வ­தற்கு அழைப்பு விடு­ப்ப­தையே வெளிப்­ப­டை­யான தோர­ணையாக் கொண்டு வருகை தந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றா­ன­தொரு நிகழ்­வுக்­கு­ அ­ழைப்பு விடுப்­ப­தற்கு வருகை தந்­தி­ருந்தால் அர­சியல் நெறி­மு­றையின் பிர­காரம் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோ­ருக்கு அடுத்து இந்த நாட்டின் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரையும் சந்­தித்­தி­ருக்க வேண்டும். ஆனால் முன்னாள் ஜனா­தி­ப­தி­யையே அக்­கு­ழு­வினர் சந்­தித்­தி­ருந்­தனர். அத்துடன் அனைத்து வகை­யிலும் சீனா­வுடன் உற­வு­களை பலப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென தற்­போ­தைய ஜனா­தி­பதி குறிப்­பி­டு­வது ஒரு­பு­ற­மி­ருக்­கையில் சீனக்­கு­ழ­ுவினர் இலங்­கையின் உண்­மை­யான நண்­ப­னாக எப்­போதும் சீனா இருக்கும் எனக் குறிப்­பிட்­டுள்­ளனர். அத்­துடன் பிர­த­ம­ரைச் சந்­தித்த போது சீனா தற்­போது மேற்­கொண்­டு­வரும் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றது. மேலும் முன்னாள் ஜனா­தி­ப­தியை இக்­கு­ழு­வினர் சந்­தித்த போதும் சீனாவின் திட்­டங்கள் குறித்தே கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

 

தமது நலன்­களே  பின்­ன­ணி­யா­கின்­றன  

மேற்­கண்ட விட­யங்­களே மூன்று நாடு­களின் குழு­வி­ன­ரு­டனான சந்­திப்­புக்­களின் உள்­ளார்ந்த விட­யங்கள் அமைந்­தி­ருக்­கின்­றன. தமி­ழர்­களின் பிரச்­சினை தோற்­றம்­பெற்ற காலம் முதல் ஆய­ுதப்­ப­யிற்சி, இந்­திய – இலங்கை ஒப்­பந்தம், தமிழ் மக்­களின் உரி­மைக்­கான குரல் எழுப்­பி­யமை என பல உத­வி­களை செய்த இந்­தியா யுத்தம் நிறை­வுற்­றதன் பின்­னரும் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றதன் பின்­னரும் தற்­போது வேறொரு நிலைப்­பாட்டில் செல்­வ­தற்கு என்ன காரணம்?

சம்பூர் விட­யத்தில் ஆணை வழங்கும் மக்­க­ளுக்­காக, சாதா­ரண மக்­க­ளுக்­காக பூர்­வீக நிலத்தைக் கொண்ட மக்­க­ளுக்­காக, நாட்டின் சூழல் பாது­காப்­புக்­காக குரல்­கொ­டுத்­தமை அம்­மா­வட்­டத்தை பிர­தி­நி­தித்­துவப்­படுத்தி தற்­போது எதிர்­க்கட்­சித்­த­லை­வ­ராக இருக்கும் சம்­பந்­தனின் தவறா? சம்பூர் விட­யத்தில் தாம் கொண்­டி­ருந்த பாரிய எதிர்­பார்ப்பு சிதைக்­கப்­பட்­டது என்­ப­தற்­கான பழி­வாங்­கலா தற்­போ­தைய கைவி­ரிப்பு என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது.

 

மறு­பக்­கத்தில் இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் தமிழர் தரப்பை குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­திப்­ப­தற்கும் தமி­ழர்கள் விட­யத்தில் அக்­கறை காட்­டு­வ­தாக கூறிக்­கொண்­டி­ருப்­ப­தற்கும் அடிப்­ப­டைக்காரணம் என்ன? இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் தனது வர்த்­த­கத்­தையும், பொரு­ளா­தா­ரத்­தையும் இலங்­கை ஊடாக விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது.

குறிப்­பாக தமி­ழ­கத்­தி­லி­ருந்து தரை­வ­ழிப்­பா­தை­யொன்று இலங்­கையின் வட­பு­லத்­தி­ற்கு அமைப்­பது இல­கு­வா­னது. அந்த திட்டம் நிறை­வேற்­றப்­படும் பட்­சத்தில் அதன் மூலம் ஒரு­கல்லில் இரண்டு மாங்காய் கதை­யாக மன்னார், காங்­கே­சன்­துறை, மற்றும் பலாலி ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்தி கடல் ரீதி­யிலும் வான் ரீதி­யிலும் தனது வர்த்­தக செயற்­பா­டு­களை மேற்­கொள்ள முடியும். இதன்­மூலம் குறைந்த செலவில் தனது பொரு­ளா­தா­ரத்தை வலு­வாக கட்­டி­யெ­ழுப்­பிக்­கொள்ள முடியும் என்­பதே பிர­தான இலக்­கா­கின்­றது. 

அதே­நேரம் அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் திரு­கோ­ண­மலை இயற்கைத் துறை­மு­கத்தின் அவ­சி­யத்தை நன்­க­றிந்­து­கொண்­டுள்­ளது. பூகோள ரீதியில் இலங்கை கொண்­டி­ருக்கும் அமை­வி­டத்தின் வரப்­பி­ர­சா­தத்தைப் பயன்­ப­டுத்தி ஒட்­டு­மொத்த தெற்­கா­சி­யா­வையும் தனது கட்­டுக்­கோப்­புக்குள் வைத்­துக்­கொள்­ளவும் சீனா­வு­டனான பொரு­ளா­தார வல்­லா­திக்க போட்­டியை இல­கு­வாக கையாள்­வ­தற்­கா­கவும் திரு­கோ­ண­ம­லையை தன்­ன­கப்­ப­டுத்­து­வ­தற்­காக மதில்மேல் பூனை­யாக பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த கருத்து தொடர்பில் மாறு­பட்ட அர்த்­தப்­ப­டுத்­தல்­களை வாதத்­திற்­காக கூறி­னாலும் இதுதான் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்தின் நிலைப்­பா­டாக உள்­ளது.

அதே­நேரம் சீனா முத்­து­மாலை திட்­டத்தை முழு­மைப்­படுத்­து­வ­தற்கு இலங்­கையின் தென் பகுதி கடற்­ப­ரப்பு முழுக்க முழுக்க அவ­சி­ய­மாக கரு­து­கின்­றது. ஆகவே தான் கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளையும் தற்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளையும் அந்­நாட்டு ஆளும் தரப்­பினர் சம­ர­ச­மாக வைத்­துக்­கொள்­வ­தற்கு முயல்­வதோடு இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­களை தமது கட்­டுப்­பாட்­டுக்குக் ­கொண்டு வந்தால் பூகோள மற்றும் பிராந்­திய சக்­தி­களின் ஆட்டம் அடங்­கிப்­போகும் என்­பதும் அவர்­களின் திட்­ட­மா­கி­வி­ருக்­கின்­றது. இத்­த­கைய பின்­ன­ணியைக் கொண்­டி­ருப்­ப­தால் தான் அந்­நாட்டுத் தரப்­பினர் அதி­க­ளவில் தமிழர் தரப்பு விவ­கா­ரங்­க­ளிலோ அல்­லது வடக்கு, கிழக்கு புலங்­க­ளிலோ பாரிய தலை­யீ­டு­களை செய்­வ­தில்லை.

இவ்வாறு தமக்கான நலன்களை மட்டும் மையமாக வைத்தே பிக் திரிஸ் எனப்படும் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் அரசியல், பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. தமது நலன்களுக்கான போட்டியில் தான் தமிழர்கள் விவகாரத்திலும் அவை தலையீடு செய்ய ஆரம்பித்தன. தற்போதும் அதனை கையாண்டவண்ணமுள்ளன என்பதை இத்தனை காலத்திற்கு பின்னராவது விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது.

தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பும், ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களும் பிரிக்கப்படாத பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தேசிய பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும். சமத்துவம் வழங்கப்பட்டு இலங்கையர்கள் என்ற அடையாளம் அனைவருக்கும் உரித்தாகவேண்டும் என்பதிலும் உறுதியாகவிருக்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் இலங்கை தனது இறைமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இறைமை பாதுகாக்கப்படவேண்டுமாயின் நாடு ஒரு தேசமாக ஒன்றிணைய வேண்டும். தேசிய இனங்களுக்கான சமத்துவம் அங்கீகரிக்கப்படவேண்டும். இருதரப்பு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான புரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்படுவதற்கு இரு தரப்பிற்குள் காணப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இதய சுத்தியுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இறைமை மக்களுக்குச் சொந்தமானது. மக்கள் இறைமையைக் கையில் வைத்திருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டில் உள்ள பெரும்பான்மையினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குமுறையின் பால் ஏனைய இனங்களுக்கான அங்கீகாரத்தை தொடர்ச்சியாக மறுதலிக்கும் பட்சத்தில் பூகோள போட்டிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு எதிர்காலமே முழுமையான இருள்சூழ்ந்ததாக மாறிவிடும் ஆபத்தே உள்ளது.

இந்த யதார்த்தத்தினை தொடர்ந்தும் நிராகரிக்காது பெரும்பான்மை மற்றும் தமிழ், முஸ்லிம் அரசியல் அதிகாரவர்க்கங்களும் சரியான புரிதல்களை கொண்டு இராஜதந்திர செயற்பாடுகளை அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டும். சர்வதேசம், பிராந்தியம் என பிறரை நம்பிக்கொண்டு காலத்தை நகர்த்தாது நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டிய சந்தர்ப்பத்தினை தற்போதும் தவறவிடவிடுவார்களாயின் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால் பேரலையில் காணாமல்போன மண்திட்டாக இலங்கைத் தீவு மாறிவிடும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-25#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.