Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு

Featured Replies

அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு

 

நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்டி, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாக முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அர­சாங்கம் செயற்­படத் தவ­றி­யி­ருக்­கின்­றது. அதன் கார­ண­மாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அரசு சிக்­கல்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும், அங்கு எழுப்­பப்­ப­டு­கின்ற பல்­வேறு வினாக்­க­ளுக்கு ஆக்­க­பூர்­வ­மாகப் பதி­ல­ளிக்க முடி­யாமல் தடு­மாற நேர்ந்­தி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. 

மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்குப் பொறுப்பு கூறு­வதில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி, பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தாக 2015 ஆம் ஆண்டு அரசு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. ஆனால் அந்த உறு­தி­மொ­ழிகள் உரிய முறையில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளி­னாலும், பல மட்­டங்­களில் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு ஒரு நெருக்­க­டி­யான சூழல் சர்­வ­தேச மட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள போதிலும், அரசு மீதான அந்த அழுத்­தத்தை,  தமிழ் தரப்பின் அர­சியல் தலை­மைகள் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான வாய்ப்­பாகப் பயன்­ப­டுத்திச் செயற்­பட முனைந்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. 

அர­சியல் ரீதி­யாக எதிர்த்­த­ரப்பில் உள்ள அர­சாங்­கத்தை அழுத்­தங்­களின் மூல­மாக வழிக்குக் கொண்டு வந்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு 2017 ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் அமர்வு நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாக வந்­துள்­ளது என்­பது இரா­ஜ­தந்­திர நுட்பம் தெரிந்­த­வர்­களின் கருத்­தாக உள்­ளது.

பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகச் செயற்­பட்டு வரு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இது விட­யத்தில் சம­யோசி­த­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றதா என்ற கேள்வி இப்­போது எழுந்­துள்­ளது. ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­து­விட்டு கடந்த சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளாகக் காலத்தைக் கடத்­திய உத்­தி­யைத்தான்  பயன்­ப­டுத்­தி­யி­ருக்கின்றதே என்று ஆதங்­கப்­படும் வகையில் அர­சாங்கம் செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் அத்­த­கைய போக்­கிற்குத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை துணை போயி­ருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டும் முன் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்கம் சில சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது. அந்த நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் என்று அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வான முறையில் கூட்­ட­மைப்பின் தலை­மை­யி­ட­மி­ருந்து தொடர்ச்­சி­யாகக் கருத்­துக்கள் வெளி­வந்­தி­ருந்­தன. அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்ட மக்­களை ஊக்­கு­விக்கும் தன்­மையில் அமை­ய­வில்லை என்று அதி­ருப்தி குரல்கள் எழுந்­த­போ­தெல்லாம், அவற்றை அடக்கி வாசிக்கச் செய்­வ­தற்கே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைமை முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தது. அந்த முயற்­சி­யா­னது, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்­கத்தைத் தூண்­ட­வில்லை. மாறாக அந்த அதி­ருப்தி கூட்­ட­மைப்புத் தலை­மையின் மீது நம்­பிக்கை இழக்கும் நிலைக்கு முன்­னே­றி­யி­ருக்­கின்­றது என்றே கூற வேண்­டி­யி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மா­கத்தான், கூட்­ட­மைப்புத் தலை­மையை நம்பி இனி பய­னில்லை என்ற நிலைப்­பாட்­டிற்கு பாதிக்­கப்­பட்ட மக்கள் தள்­ளப்­பட்­டார்கள். அது மட்­டு­மல்­லாமல், தாங்­க­ளா­கவே தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். பாதிக்­கப்­பட்ட மக்­களின் இந்தத் தன்­னு­ணர்வு எழுச்சிப் போராட்­டத்தின் ஊடா­கவே முல்­லைத்­தீவு மாவட்டம் கேப்­பாப்­பு­லவு கிராம சேவகர் பிரி­வுக்கு உட்­பட்ட பில­வுக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தைச் சேர்ந்த 84 குடும்­பங்­களும் தங்­க­ளு­டைய காணி­களை மீளப் பெற முடிந்­தி­ருக்­கின்­றது. 

இந்தக் காணி­களை விடு­விக்க வேண்டும் என்­ப­தற்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் தலை­மையில் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன் பாரா­ளு­மன்ற பிரதி குழுக்­களின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேர­டி­யாகச் சந்­தித்துப் பேச்­சுக்கள் நடத்­தி­ய­தை­ய­டுத்து, விமா­னப்­படைத் தள­பதி, இரா­ணுவத் தள­பதி ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாடி, இந்தக் காணி­களை விடு­விப்­ப­தற்­கான உத்­த­ரவை ஜனா­தி­பதி வழங்­கி­யி­ருந்தார். 

கூட்­ட­மைப்புத் தலைமை ஜனா­தி­ப­தி­யுடன் நடத்­திய பேச்­சுக்­க­ளை­ய­டுத்தே காணிகள் விடு­விக்­கப்­பட்­டன என்­பது உண்மை. ஆனால், அதற்­கான தூண்­டு­த­லையும், அழுத்­தத்­தையும் பில­வுக்­கு­டி­யி­ருப்பு மக்­களின் விடாப்­பி­டி­யான ஒரு மாத­கால - இரவு பகல் பாராத போராட்­டமே அளித்­தி­ருந்­தது என்­பதை மறுக்க முடி­யாது. ஆனால் அந்தப் போராட்­டத்­திற்கு அர­சியல் ரீதி­யான தலைமை இருக்­க­வில்லை என்­பதும், அர­சியல் ரீதி­யான வழி­காட்­டல்கள் இருக்­க­வில்லை என்­ப­தையும் கவ­னத்திற் கொள்ள வேண்டும். 

பில­வுக்­கு­டி­யி­ருப்பு காணி­களை விமா­னப்­ப­டை­யி­ன­ரி­ட­மி­ருந்து மீட்­ப­தற்­கான போராட்­டத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய மன உறு­தியும், பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­பதில் விட்­டுக்­கொ­டுக்­காத தன்­மையும், கட்­டுக்­கோப்­பான போராட்டச் செயற்­பா­டுமே வெற்­றியை ஈட்டித் தந்­துள்­ளது. இதே வழியைப் பின்­பற்றி கேப்­பாப்­பு­லவு கிரா­மத்தைச் சேர்ந்த 135 குடும்­பங்கள் தமது 480 ஏக்கர் குடி­யி­ருப்பு காணி­களை இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்து விடு­விப்­ப­தற்­கான போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். பில­வுக்­கு­டி­யி­ருப்பு காணிகள் மார்ச் மாதம் முதலாம் திகதி காலை 11 மணிக்கு விடு­விக்­கப்­பட்ட அதே­நேரம் தமது போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாக கேப்­பாப்­புலவு மாதர் அபி­வி­ருத்திச் சங்­கத்தின் தலைவி சந்­தி­ர­லீலா தெரி­வித்­துள்ளார். 

இதே­போன்று முல்­லைத்­தீவு மாவட்டம் புதுக்­கு­டி­யி­ருப்பில் பொது­மக்­களின் காணி­களை விடு­விக்க வேண்டும் எனக் கோரி நடத்­தப்­பட்ட போராட்­டத்­திற்கு அரை­குறை நிலையில் தீர்வு வழங்­கப்­பட்­ட­தனால் போராட்டம் கைவி­டப்­ப­ட­வில்லை. காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­படும் வரை போராட்டம் தொடரும் என்று அங்கு அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்தப் போராட்­டத்­திற்கும் அர­சியல் தலைமை இல்லை. அர­சியல் ரீதி­யான வழி­காட்டல் இல்லை. தன்­னு­ணர்வு எழுச்­சி­யையே இந்தப் போராட்­டத்­திலும் காண­மு­டி­கின்­றது. பில­வுக்­கு­டி­யி­ருப்பு காணி­களை விடு­விப்­ப­தற்­கான பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­ட­போது, கேப்­பாப்­பு­லவு காணிகள் தொடர்பில் பேசப்­பட்­டதா, அது பற்­றிய கரி­ச­னைகள் ஜனா­தி­ப­தி­யிடம் வெளி­யி­டப்­பட்­டதா என்­பது தெரி­ய­வில்லை. 

இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விக்க வேண்டும் என்ற போராட்டம் இன்று நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­ட­தல்ல. யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, வவு­னியா செட்­டி­குளம் மனிக்பாம் இடைத்­தங்கல் அகதி முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டதில் இருந்தே காணி­களை மீட்­ப­தற்­கான போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்தப் போராட்­டத்தில் வலி­காமம் வடக்குப் பிர­தே­சத்தைச் சேர்ந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளினால் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தப் போராட்­டத்­தை­ய­டுத்து அர­சாங்கம் அவ்­வப்­போது வலி­காமம் வடக்கில் சில சில பிர­தே­சங்­களை இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக விடு­வித்து வந்­தது என்­ப­தையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனாலும், வலி­காமம் வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் 1990 ஆம் ஆண்டு கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணிகள் இன்னும் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அந்தப் பிரச்­சினை நீடித்­தி­ருக்­கின்­றது. இதே­போன்று கிளி­நொச்சி நகரில் பர­விப்­பாஞ்சான் பகு­தியில் இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­தி­யி­ருந்த பொது­மக்­க­ளு­டைய காணி­களை விடு­விப்­ப­தற்­காக அந்தக் காணி­களின் உரி­மை­யா­ளர்கள் அடுத்­த­டுத்து தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்டு இரா­ணு­வத்­திற்கு அழுத்­தத்தைப் பிர­யோ­கித்­ததன் கார­ண­மா­கவே அந்தக் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன என்­ப­தையும் மறக்க முடி­யாது. மறுக்­கவும் முடி­யாது. ஆயினும் விடு­த­லைப்­பு­லி­களின் சமா­தான செய­ல­க­மாகச் செயற்­பட்ட அலு­வ­லகம் அமைந்­தி­ருந்த காணி, விடு­த­லைப்­பு­லி­க­ளினால் நடத்­தப்­பட்டு வந்த தமிழர் புனர்­வாழ்வுக் கழகத்திற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த செய­லகக் காணி, விடு­த­லைப்­பு­லி­களின் வைப்­ப­கத்­திற்­கான கட்­டடம் அமைந்­துள்ள காணி ஆகி­ய­வற்றை விடு­விக்க முடி­யாது என்று இரா­ணு­வத்­தினர் பிடி­வா­த­மாகத் தெரி­வித்து தொடர்ந்தும் அங்கு நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்த மூன்று காணி­களும் பொது­மக்கள் அடர்த்­தி­யாகக் குடி­யி­ருக்­கின்ற பிர­தே­சத்தில் இருக்­கின்­றன. இதனால், அங்கு நிலை­கொண்­டி­ருக்­கின்ற இரா­ணு­வத்தின் பிர­சன்னம் அந்த மக்­க­ளு­டைய சமூக வாழ்க்­கைக்கும் இயல்­பான வாழ்க்­கைக்கும் இடை­யூ­றா­கவே இருக்கும் என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் இல்லை. அதே­நேரம் யுத்த மோதல்­களோ அல்­லது அதற்கு ஒப்­பான வகையில் இரா­ணுவம் கட்­டா­ய­மாகப் பிர­சன்­ன­மாக யஇருக்க வேண்­டிய சூழலோ, தேவையோ இல்­லாத நிலையில் பொது­மக்கள் மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை நிலை கொள்ளச் செய்­தி­ருப்­பது ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தல்ல. 

அர­சாங்­கத்தை எதிர்த்து ஆயு­த­மேந்திப் போரா­டிய விடு­த­லைப்­பு­லிகள் நிலை­கொண்டு செயற்­பட்­டி­ருந்­தார்கள் என்­ப­தற்­காக அவர்கள் வச­மி­ருந்த காணி­க­ளையும் கட்­ட­டங்­க­ளையும் இரா­ணுவம் பயன்­ப­டுத்த வேண்டும் என்ற கூற்றில் அல்­லது நிலைப்­பாட்டில், சமூக நீதி சார்ந்த நிலையில் நியாயம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. முப்­பது வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக யுத்த மோதல்கள் இடம்­பெற்ற ஒரு பிர­தே­சத்தில், யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர், இயல்பு வாழ்க்கை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மானால், அங்­கி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்­டி­யது அவ­சியம். இதில் உள்ள நியாயத் தன்­மையை உணர்ந்து அர­சாங்கம் உரிய முறையில் செயற்­பட வேண்டும். 

பொது­மக்­க­ளு­டைய காணி­களை அடாத்­தாகக் கைப்­பற்றி அங்கு இரா­ணுவம் நிலை கொண்­டி­ருப்­ப­த­னாலும், இரா­ணு­வத்தின் பிடியில் இருந்து விடு­விக்­கப்­பட்ட காணி­களில் பொது­மக்கள் மீள்­கு­டி­யே­றி­யி­ருக்­கின்ற சூழலில் இரா­ணுவம் இடை­யி­டையே நிலை­கொண்­டி­ருப்­ப­தாலும், பொது­மக்­க­ளு­டைய இயல்பு வாழ்க்கை பல்­வேறு வழி­களில் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலை­மைக்கு முடிவு காண்­ப­தற்கோ அல்­லது இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கோ தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை ஆக்­க­பூர்­வ­மாகச் செயற்­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பில் இருந்து முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

காணிப் பிரச்­சி­னையைப் போலவே, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய பிரச்­சினை, தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களும், தீர்க்கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த மூன்று விட­யங்­களும் இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் தமிழர் தரப்பின் எரியும் பிரச்­சி­னை­க­ளாக இருக்­கின்­றன. இவற்­றுக்குத் தீர்வு காண்­ப­தற்கு  நம்­பத்­த­குந்த வகையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அது நடை­பெ­ற­வில்லை. போர்க்­காலச் செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்­டிய பொறுப்பும் கட­மையும் அர­சாங்­கத்தைச் சார்ந்­தி­ருக்­கின்­றது. அந்த வகையில், இந்த விட­யங்­க­ளி­லா­வது பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்­கத்­தக்க வகையில் சில நகர்­வு­களை மேற்­கொள்­வ­தற்­கான அழுத்­தத்தை கூட்­ட­மைப்பின் தலைமை அர­சாங்­கத்­திற்கு கொடுத்­தி­ருக்க வேண்டும். அதுவும் நடை­பெ­ற­வில்லை என்­பதே பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைப்­பா­டாகும். இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான், ஐ.நா மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் இலங்கை அர­சாங்கம் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு சர்­வ­தேச மட்­டத்தில் முன் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்­டத்தில் இந்தக் குற்­றச்­சாட்­டுக்கு சரி­யான பதி­ல­ளிக்க முடி­யாமல் அர­சாங்கத் தரப்­பினர் தடு­மாற நேர்ந்­தி­ருக்­கின்­றது. அத்­த­கைய ஒரு நிலை­யிலும், ஐ.நா. பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் இரண்டு வருடம் கால அவ­காசம் தேவை என இலங்கை அர­சாங்கம் கோரிக்கை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. 

இந்தக் கோரிக்­கையை ஏற்கக் கூடாது. இலங்­கைக்குக் கால அவ­காசம் வழங்­கு­வதைக் கைவிட்டு, இலங்கை விவ­கா­ரத்தை ஐ.நா. மன்­றத்தின் பொதுச் சபைக்கும். ஐ.நா. மன்­றத்தின் பாது­காப்புச் சபைக்கும் பாரப்­ப­டுத்தி மேல் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலு­வாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

ஆனால், புதிய அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை, அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு ஆத­ர­வான போக்கில் அர­சாங்கம் கோரு­கின்ற கால அவ­காசம் கண்­கா­ணிப்­புடன் கூடி­ய­தாக வழங்­கப்­பட வேண்டும் என்று கூறி­யி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன் இந்தக் கருத்தை ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டி­ருக்­கின்றார். ஆனால், அர­சாங்­கத்­திற்குக் கால அவ­காசம் வழங்­கக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்­­டையே கூட்­ட­மைப்பில் உள்ள ஏனைய பலர் கொண்­டி­ருக்­கின்­றனர். இது தொடர்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைச் சேர்ந்த பதி­னொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், நான்கு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.  பாதிக்­கப்­பட்ட மக்­களைக் கொண்ட ஆறு அமைப்­புக்­களும், வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த பன்­னி­ரண்டு சிவில் அமைப்­புக்­களும் இந்த அறிக்­கையில் இணைந்­தி­ருக்­கின்­றன. 

 

கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கிய எஸ்.சிறி­தரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், எஸ்.யோகேஸ்­வரன், சிவ­சக்தி ஆனந்தன், ஜி.சிறி­நேசன், சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா, டாக்டர் சிவ­மோகன், எஸ்.வியா­ழேந்­திரன், கே.கோடீஸ்­வரன் ஆகிய பதி­னொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், என்.சிறி­காந்தா, அரி­ய­நேத்­திரன் பாக்­கி­ய­செல்வம், சந்­தி­ர­நேரு சந்­தி­ர­காந்தன் ஆகிய முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுமே இந்த அறிக்­கையில் கையெ­ழுத்­திட்­டி­ருக்­கின்­றனர்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் 16 பேர் உறுப்­பி­னர்­க­ளாக பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்­றனர். அவர்­களில் 5 பேரைத் தவிர ஏனையோர் அர­சாங்­கத்­திற்குக் கால அவ­காசம் வழங்­கு­வதை எதிர்த்­தி­ருக்­கின்­றனர். 

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30/1 இலக்க பிரே­ர­ணையை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக இணங்கி உறு­தி­ய­ளித்­துள்ள இலங்கை அர­சாங்­கத்­திற்கு மேலும் கால அவ­காசம் வழங்கக் கூடாது என்று அந்த அறிக்­கையில் கோரப்­பட்­டி­ருக்­கின்­றது. கால நீடிப்பும் சலு­கை­களும் ஏற்­க­னவே இலங்கை அர­சாங்­கத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால் எந்த ஒரு விட­யத்­திலும் முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்றும் அந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. வட­கொ­ரி­யாவின் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விட­யத்தில் பின்­பற்ற வேண்டிய நடை­மு­றைக்கு அமை­வாக, இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்பு கூறல் விட­யத்தை சர்­வ­தேச போர்க்­குற்ற நீதி­மன்­றத்­திற்கு அல்­லது, அதற்கு ஒப்­பான ஒரு தீர்ப்­பா­யத்­திற்குப் பாரப்­ப­டுத்தும் வகை­யி­லான பரிந்­து­ரையை ஐ.நா. மன்­றத்தின் பொதுச் சபை ஊடாக ஐ.நா. மன்­றத்தின் பாது­காப்புச் சபைக்கு ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்­கையில் கோரப்­பட்­டி­ருக்­கின்­றது. இத்­த­கைய ஒரு நட­வ­டிக்­கையின் மூலமே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கவும், அவர்­களைப் பாது­காக்­கவும் முடியும் என்றும் அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள இந்த கோரிக்­கையின் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி­யையும் நியா­யத்­தையும் பெற்­றுக்­கொள்­கின்ற நட­வ­டிக்­கையில் பிள­வு­பட்­டி­ருப்­பதைத் தெளி­வாகக் காண முடி­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கிச் செயற்­பட்டு வரு­கின்­ற­போ­திலும், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைமை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்பதில் போதிய ஈடுபாட்டுடன் செயற்படவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் தாங்களாகவே இறங்கியிருக்கின்றனர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று வவுனியாவில் நடத்தப்பட்ட நான்கு நாள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தையடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்க உயர்மட்டத்துடன் பேச்சுக்கள் நடத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்கள் அழைக்கப்பட்டிருந்த போது, அந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று போராட்டக்காரர்கள் பிடிவாதமாக மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, வவுனியாவில் மீண்டும் சுழற்சி முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதேபோன்று கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்து செயற்படுவதை விடுத்து, பிளவுபட்ட நிலையில் அரசியல் நடத்துவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை இழப்பதற்கும், அதன் காரணமாக மேலும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்குமே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் அரசியல் தலைவர்கள் குறிப்பாக இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருக்கின்றனர்.    

எனவே, பல கட்சிகளைக் கொண்டிருந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புக்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒரு குரலில் பேச வேண்டும். இது இன்றைய இலங்கையின் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது. 

– செல்­வ­ரட்னம் சிறி­தரன் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.