Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் நிரந்தர வதிவுரிமை! இலங்கையர்கள் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு

Featured Replies

13677.jpg

அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

சாதாரணமாக உள்விவகார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மாதங்களுக்குள் அவர்களுடைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்பொழுது 6 மாதங்களுக்கு மேலாகவும் பல மாதங்களாக ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பாக கொள்கை மாற்றம் வந்தமையினால்தான் உள்விவகார அமைச்சு இவ்வாறாக விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துள்ளதாக பல தரப்பாலும் பேசப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக உள்விவகார அமைச்சு,

“தற்பொழுது உள்விவகார அமைச்சின் இணயத்தளத்தில் உள்ள இலங்கைக்கான Guide தவிர கொள்கை மாற்றம் தொடர்பாக எங்களிடம் தகவல்கள் இல்லை” என உள்விவகார அமைச்சு Jay Visva Solicitorsக்கு தெரிவித்துள்ளது.

இருப்பினும், நாட்டுக்குரிய கொள்கை மற்றும் தகவல் குழு (Country Policy and Information Team) இலங்கைக்கு அண்மையில் ஒரு உண்மை கண்டறியும் பயணத்தை 2016 ஜூலை 09ற்கும் 23ஆம் திகதிக்குமிடையில் மேற்கொண்டதாகவும், அது தொடர்பான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாகவும் உள்விவகார அமைச்சு Jay Visva Solicitorsக்கு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் உள்விவகார அமைச்சு முடிவுகள் எடுக்காமால் இருக்கின்ற விண்ணப்பங்களுக்கு விரைவில் முடிவுகள் எடுக்கலாம் அல்லது அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் கொள்கை மாற்றங்களைக் கொண்டுவந்து விண்ணப்பதாரர்களிடம் மேலதிக விபரங்களை கேட்டறிந்து Asylum Policy Instruction Revocation Of Refugee Status Version (4.0) அமைவாக முடிவுகள் எடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய நீங்கள் Jay Visva Solicitors தொடர்பு கொள்ளலாம்.

Jay Visva Solicitors
First Floor
784 Uxbridge Rd
HayesUB4 0RS
Tell: 020 8573 6673

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13677&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளம்பரம், அப்பாவிகளை ஏமாற்ற,

ஏமாந்திடாதீங்க..... ஏமாத்துவாங்க......

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

நல்ல விளம்பரம், அப்பாவிகளை ஏமாற்ற,

ஏமாந்திடாதீங்க..... ஏமாத்துவாங்க......

 
 
 
 

இப்பவும் இப்படி கிளம்புறார்களா?

முன்பு மார்க்கண்டு சொலிஸிட்டர்ஸ். விளம்பரம் வாங்கப் போன பத்திரிக்கையாளருக்கு... இந்த கட்டுரையைப் போடுங்கோ காசு தாறம்...  என்று கொடுத்து... இதே மாதிரி அவிச்சு இறக்க... 

சனம் அல்லோல கல்லோலமாக அள்ளுப்பட்டது. பிறகு MK Sri, Raja & Co. 

எல்லோரும், காத்தில அடிபட்டுப்போன பூச்சிகள் போல, legal aid இல்லாது போனவுடன் போய் விட்டார்கள். 

இப்ப புதுசா இவையள் கிளம்பி இருக்கினம்.

அகதிகள் கொள்கை நாடுகள் ரீதியானது. ஆனால் உள்ளே சட்டபூர்வமாக வாழும் ஒருவருக்கான நிரந்தர வதிவுடைமை குறித்த முடிவுகள் நாடு தழுவிய ரீதியில் எடுக்க முடியாது. சட்டம் பொதுவானது.

இவையளுக்கு, வந்த கடிதத்தின் கருத்து அவயலுக்கே விளங்கவில்லை போல கிடக்குது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
10 hours ago, MEERA said:

நல்ல விளம்பரம், அப்பாவிகளை ஏமாற்ற,

ஏமாந்திடாதீங்க..... ஏமாத்துவாங்க......

 

9 hours ago, Nathamuni said:

இப்பவும் இப்படி கிளம்புறார்களா?

முன்பு மார்க்கண்டு சொலிஸிட்டர்ஸ். விளம்பரம் வாங்கப் போன பத்திரிக்கையாளருக்கு... இந்த கட்டுரையைப் போடுங்கோ காசு தாறம்...  என்று கொடுத்து... இதே மாதிரி அவிச்சு இறக்க... 

சனம் அல்லோல கல்லோலமாக அள்ளுப்பட்டது. பிறகு MK Sri, Raja & Co. 

எல்லோரும், காத்தில அடிபட்டுப்போன பூச்சிகள் போல, legal aid இல்லாது போனவுடன் போய் விட்டார்கள். 

இப்ப புதுசா இவையள் கிளம்பி இருக்கினம்.

அகதிகள் கொள்கை நாடுகள் ரீதியானது. ஆனால் உள்ளே சட்டபூர்வமாக வாழும் ஒருவருக்கான நிரந்தர வதிவுடைமை குறித்த முடிவுகள் நாடு தழுவிய ரீதியில் எடுக்க முடியாது. சட்டம் பொதுவானது.

இவையளுக்கு, வந்த கடிதத்தின் கருத்து அவயலுக்கே விளங்கவில்லை போல கிடக்குது.

நன்றி மீரா, நாதஸ் ..... இந்த செய்தியில் இருந்த Jay Visva Solicitors என்ற பெயரை கவனிக்க மறந்து விட்டேன்.., ஏதோ அரச நிறுவனத்தின் விலாசம் என நினைத்து விட்டேன்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.