Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி

Featured Replies

'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி

                         பன்னீர்செல்வம்

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,"ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக வை அழிக்க பல பேர் முயன்றனர். எதிர்க்கட்சிகள் எல்லாம் கங்கணம் கட்டிக்கொண்டு தொடர்ந்து முயன்றன. 28 ஆண்டுகாலம் நமது இயக்கத்துக்கு வந்த வேதனைகளை சோதனைகளை தாங்கி, கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. இன்று எந்தக் கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்கமுடியாத எஃகு கோட்டையாக கட்சியை ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கிறார். மக்களின் நலனுக்காகவே ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களுக்காகவே 50% நிதியை ஒதுக்கி திட்டங்கள் பல நிறைவேற்றி இந்தியாவிலேயே சிறந்த முதல்வராகத் திகழ்ந்தார். 'எனது உறவுகள் எல்லாம் மக்களாகிய நீங்கள்தான் ' என்று கூறி மக்களாட்சி நடத்தியவர்.

எம்ஜிஆர் காலத்திலும்,ஜெயலலிதா காலத்திலும் எவ்வாறு மக்கள் இயக்கமாக அதிமுக வீறுநடை போட்டதோ, அவர்கள் இருவரின் ஆட்சியும் மக்கள் ஆட்சியாக எப்படி வீறு நடை போட்டதோ இன்று நிலைமை மாறிவிட்டது. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கைக்குள் கட்சி சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிமுக உருவானது. அதையேதான் ஜெயலலிதாவும் செய்தார். ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் கைக்குள் செல்லவிடமாட்டேன், எம்ஜிஆர் எப்படி மக்கள் இயக்கமாக நடத்தினாரோ அதே போலத்தான் நடத்துவேன். என்னுடைய காலத்துக்குப் பிறகும் இது தொடரவேண்டும் என்றார்.

ஆனால் இன்று தனிப்பட்ட குடும்பம், கட்சியையும் ஆட்சியையும் கபளீகரம் செய்கின்ற அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நாம் இந்த தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். அதன் தொடக்கம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம். 75 நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றார். அவரை யாரும் உள்ளே சென்று பார்க்கவில்லை. நாங்கள் காலையில் அங்கே செல்வோம். மாலையில் வருவோம். ஒருவரையும் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கிறார்களே அப்படி என்னதான்  அவருக்கு நேர்ந்தது, லண்டன் அமெரிக்கா சென்று வைத்தியம் செய்து அவரை உயிரோடு பார்க்கவேண்டுமே என்று பலமுறை அவர்களிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் (சசிகலா உறவினர்கள்) காதுகொடுத்துக் கூட கேட்கவில்லை.

ஜெயலலிதா மரணமடைந்த நாளில் மாலை 6.30 மணிக்கு எனக்குத் தகவல் வந்தது. உடனே நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறி, இரவு 11.30 மணிக்கு அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தியை சொன்னார்கள். இப்போது மக்கள் நலத்துறைச் செயலாளர் கூறுகிறார், எல்லா செய்தியும் நிலவரமும் என்னிடம் தெரிவித்தார்கள் என்று. ஆனால் எந்த செய்தியும் தகவலும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை வெளியிட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன். 

               ஜெயலலிதா சசிகலா

அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார், பன்னீர்செல்வத்தைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்று. நான்தானே முதலில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறியது. அதுவும் சிபிஐ வேண்டும் என்று. அப்போதுதானே நாட்டுமக்களுக்கு உண்மை தெரியும் என்று. வரட்டும் என்னிடம். விசாரிக்கட்டும். என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். உண்மையில் நீதிவிசாரணை வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான்.

2011-ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், சசிகலா, எம்.நடராஜன், சுதாகரன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன், தங்கமணி, சுந்தரவதனம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார். பின்னர் 4 மாதம் கழித்து சசிகலா கொடுத்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டார். அந்தக் கடிதத்தில் கூறியபடி சசிகலா இப்போது நடந்துகொள்ளவில்லை. அப்போதும் ஜெயலலிதா கூறினார், நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று. இது எல்லோருக்கும் தெரியும். கட்சியையும் ஆட்சியையும் தமது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் கொண்டு வர சதித்திட்டம் தீட்டினார்கள் என்பது தெரிந்துதான் கட்சியில் இருந்து ஜெயலலிதா அவர்களை எல்லாம் நீக்கினார். ஆனால் அந்த சதித்திட்டம் இப்போது நடந்துள்ளது.

சசிகலாவின் பினாமியாக இன்று ஆட்சி நடத்துகிறார்கள். இந்த அசாதாரண சூழலில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது, நீதி விசாரணை வரும் வரை நமது தர்ம யுத்தம் ஓயாது." என்று கூறினார்.

http://www.vikatan.com/news/politics/83097-will-reveal-the-truth-to-cbi-says-o-panneerselvam.html

  • தொடங்கியவர்
gallerye_000447662_1726399.jpg

 

  • gallerye_224846667_1726399.jpg

 

'சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் ஒழியும் வரை, தர்மயுத்தம் ஓயாது,'' என, ஜெ., மர்ம மரணம் குறித்து, நீதி விசாரணை கோரி நடத்தப் பட்ட உண்ணா விரத பந்தலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சூளுரைத்தார்.

 

Tamil_News_large_1726399_318_219.jpg

ஜெ., மரணத்தில் உள்ள, மர்மங்களைக் கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியி னர், நேற்று மாநிலம் முழுவதும், 33 இடங் களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டு மின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்ட ரங்கம் அருகில் நடந்த உண்ணாவிரதத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாலையில், உண்ணாவிரதத்தை முடித்து வைத்து, பன்னீர்செல்வம் பேசியதாவது:


'எனக்கு உறவுகள் இல்லை; மக்களாகிய நீங்கள் தான், என் உறவு' என, மறைந்த ஜெயலலிதா, கட்சியை மக்கள் இயக்கமாகவும், ஆட்சியை மக்களாட்சியாகவும் நடத்தினார். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள், கட்சி சென்று விடக் கூடாது என்பதற்காக தான், அ.தி.மு.க., வை, எம்.ஜி.ஆர்., உருவாக்கினார். ஆனால், இன்று ஒரு தனிப்பட்ட குடும்பம், கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. நமது கட்சியையும், ஆட்சி யையும், அந்த குடும்பத்திடம் இருந்து மீட்டு, மக்கள் இயக்கமாக, மக்களாட்சியாக மாற்ற, தர்மயுத்தம் துவக்கி உள்ளோம்.

தர்மயுத்தத்தின் துவக்கம் தான், இந்த

உண்ணாவிரதம். ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள், அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஜெ.,க்கு என்ன தான் நடந்தது; சிக்கலான வியாதி இருந்தால், வெளி நாடு சென்று சிகிச்சை அளிக்கலாம் என, பலமுறை மன்றாடினேன்.சமீபத்தில், சுகாதாரத் துறை செயலர் வெளியிட்ட, அரசு அறிக்கை யில், ஜெ., மரணமடையும் சூழல் இருப்பதாக, எனக்கு தெரிவித்ததாகக் கூறி உள்ளார். எனக்கு, எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

அந்த அறிக்கையை, அரசு செயலர் ராதாகிருஷ்ணன், உடனே வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது வழக்கு தொடர்வேன். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெ., சிகிச்சை பெற்ற, அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில், ஏழு பேரை நிறுத்தி இருந்தார். அவர்கள், ஆளுக்கொரு பேனா வைத்திருப்பர். 'பன்னீர்செல்வம் வந்தார்; உட்கார்ந்தார்; எழுந்தார்' என எழுதி, அவரிடம் தெரிவிப்பர். அங்கு வருவோர் விபரங்களை குறிப்பெடுத்து, விஜயபாஸ்கரிடம் கொடுப்பர்.

முதலில் எனக்கு தெரியவில்லை. பத்து நாட்களாக, அவர்கள் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்து, கேட்டபோது தான், விஜயபாஸ்கர் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறினர்.'நீதி விசாரணை அமைத்தால், பன்னீர்செல்வத்தை முதலில் விசாரிக்க வேண்டும்' என, விஜய பாஸ்கர் கூறி உள்ளார். நான் தானே, 'நீதி விசாரணை வேண்டும்' எனக் கேட்கிறேன். சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான், மரணத்தில் புதைந்துள்ள மர்மம் மற்றும் உண்மைகள் தெரிய வரும்.

என்னை விசாரிக்கட்டும்; என்ன நடந்தது என்பதை, நான் கூறுகிறேன். நீதி விசாரணை யில், உண்மை தெரிய வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் தான்.கடந்த, 2011ல், ஜெ., ஒரு அறிக்கை வெளியிட்டார். 'சசிகலா, அவரது கணவர் நடராஜன், உறவினர்கள் திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், வெங்கடேஷ், ராமச்சந்திரன், அடையாறு மோகன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும், நீக்கி வைக்கப்படுகின்றனர். அவர்களுடன் யாரும், எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது' என அறிவித்தார். நான்கு மாதம் கழித்து, சசிகலா

 

மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத் தில், அக்காவுக்கு எதிராக, எனது உறவினர்கள் சில சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுடன், எனக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என, கூறியிருந்தார். அதை ஏற்று, சசிகலாவை மட்டும் சேர்த்தஜெயலலிதா, அவரது குடும்பத் தினரை சேர்க்கவில்லை.

ஜெ., மறையும் வரை, நான் சசிகலாவுடன் பேசியதில்லை. மருத்துவமனையில் ஜெ., சேர்க்கப்பட்டு, 20 நாட்கள் கழித்து சசிகலா வெளியே வந்து, 'ஜெ., நலமாக இருக்கிறார்' என என்னிடம் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினர் செய்த சதி என்ன தெரியுமா? அவரது குடும்பத்தில் ஒருவரை கட்சியிலும், ஆட்சியிலும் கொண்டு வர வேண்டும் என்பது தான். அந்த சதி திட்டம், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து, அ.தி.மு.க.,வை காப்பாற்ற, இந்த தர்மயுத்தம் துவக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு ஆதரவாக, 122 எம்.எல்.ஏ.,க் கள் உள்ளனர்; மக்கள் நம்முடன் உள்ளனர். பினாமி ஆட்சியை, யார் நடத்துகிறார் என்பதை, மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். உரிய நீதி விசாரணை வந்தால் மட்டுமே, மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு விலகும். நீதி விசாரணை வரும் வரை, நமது போராட்டம் தொடரும்.

சசிகலாவின் பிடியில் இருந்து, நம் கட்சி யையும், ஆட்சியையும் மீட்கும் வரை, தர்மயுத் தம் ஓயாது. அதற்காக, எந்த தியாகத்தையும் செய்ய, தயாராக உள்ளோம். இந்த போராட்டம் தொடரும்; மக்கள் இயக்கமாக வளரும். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.
 

ஓ.பி.எஸ்., பாடல்'சிடி' வெளியீடு


* பன்னீர்செல்வம் புகழ் பரப்பும் பாடல்கள் அடங்கிய, 'புறப்பட்டார் தலைவர் புறப்பட்டார்' என்ற, 'சிடி' வெளியிடப்பட்டது.

* பன்னீர் அணி செய்தி தொடர்பாளர் அழகு தமிழ்செல்வி, பன்னீர்செல்வம் பிரசார வேனை, அவரிடம் வழங்கினார்.

* உண்ணாவிரத பந்தலில், பேச்சாளர்கள் பேசுவதை பார்க்க, எல்.இ.டி., திரைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்தன.

* பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள், உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; மாற்று திறனாளிகளும் பங்கேற்றனர்.

* பன்னீருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள், பூங்கொத்து மற்றும் சால்வை கொண்டு வந்தனர்; அவற்றை அவர் வாங்கவில்லை.

* அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியில் தாங்கள் வகிக்கும் பொறுப்பை, பேனர்களில் குறிப்பிட்டிருந்தனர்.

* அதிக அளவில் கட்சியினர் பங்கேற்றதால், அந்த சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1726399

  • தொடங்கியவர்
ஜெ., மரணத்தில் நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதத்தில் குவிந்த தொண்டர்கள்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, மத்திய அரசின் நீதி விசாரணை வேண்டி, பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

 

சேலம், கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, காலை, 9:00 மணி முதல், கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், பெண்கள் குவிந்தனர்.மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலை
பேசியதாவது:

இது, காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல; தானாக சேர்ந்த கூட்டம். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., மூலமாகவோ, வேறு அமைப்புகள் மூலமாகவோ, மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.செப்., 22ல், போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும். பிரதமர் மோடி வந்து பார்த்திருந்தால், வெளிநாட்டு சிகிச்சைக்கு கூட ஏற்பாடு செய்திருக்கலாம். விரைவில், 'பினாமி' ஆட்சி முடிவுக்கு வரும். இவ்வாறு செம்மலை பேசினார்.
 

gallerye_231345938_1726452.jpg

'டிபாசிட்' கிடைக்காது

நாமக்கல், பூங்கா சாலையில் நடந்த போராட்டத்தில், எம்.பி., சுந்தரம் பேசியதாவது:
ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது. அவர் இறந்த பின், எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை இறந்த பின், இரண்டு நாட்கள் வைத்திருந்தனர். ஆனால், ஜெயலலிதாவை, ஒரு நாள் கூட வைக்கவில்லை.

எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், 3 கோடி ரூபாய், 3 கிலோ தங்கத்துக்கு விலை போய் விட்டனர். இவர்கள் ஆட்சி, மூன்று அல்லது ஆறு மாதம் தான். அப்புறம் நடுத்தெருவுக்கு வரவேண்டும். முதல்வர் பழனிசாமி, இடைப்பாடியில் நின்று டிபாசிட் வாங்கினால், நான் அரசியலை விட்டு போகிறேன்.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன் நடந்த போராட்டத்தில், ஓ.பி.எஸ்., அணி மற்றும் தீபா பேரவையினர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் உட்பட, பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

நடிகன் - மகா நடிகன்

ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்த நிலையில், அப்பகுதியில், முதல்வர் பழனி சாமி ஆதரவாளர்கள் சார்பில், 'நடிகன் - மகா நடிகன்' என பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்திருந்தனர்.

அதில், 'ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், காவிரி பிரச்னை தொடர்பாக, செயலர்களிடம் பேசியதாகவும் முன்பு கூறிய பன்னீர், தற்போது மாற்றி பேசுகிறார். ஸ்டாலின்
பின்னணியில் செயல்படுகிறார்' என, குற்றம்சாட்டி உள்ளனர்.

திருத்திய நடராஜன்

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே போராட்டத்தை துவக்கி வைத்து, 'மாஜி' அமைச்சர் முனுசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஜெ., இறந்த சில நாட்கள் கழித்து, உடல்நிலை சரியில்லை என, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்த நடராஜன், மருத்துவ அறிக்கையில் திருத்தம் செய்துள்ளதாகசந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு, எந்த நிலையில் கொண்டு வரப்பட்டார் என, தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா இறப்பதற்கு முன், அவரை சந்தித்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு முனுசாமி கூறினார்.

கூண்டு காத்திருக்கு

திண்டுக்கல்லில் நடந்த உண்ணாவிரதத்தில், 'மாஜி' அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: இந்த உண்ணாவிரதத்தை கண்டு, ஆளும் தரப்பினர் புலம்புகின்றனர். நாங்கள், ஓ.பி.எஸ்., அணியல்ல; ஜெ., அணி. 'வெகுமதி கிடைக்கும்' என எதிர்பார்த்து இருப்பவர்கள் சசிகலா அணி. இந்த உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம், ஜெ., மரணம் குறித்து விசாரணை துவங்கும்; குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவர்.
இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

வேலுார் அண்ணா கலையரங்கம் அருகே, எம்.பி., செங்குட்டுவன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையை சேர்ந்தவர்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், எம்.பி., வனரோஜா, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் திரண்டனர்.

திருவண்ணாமலை - சென்னை சாலையில், 500 மீட்டருக்கு, ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் வழிந்ததால், சாலையின், இருபுறமும் வெயிலையும் பாராமல் பலர் உண்ணாவிரத போராட்டத் தில் பங்கேற்றனர். எம்.பி., வனரோஜா, ''ஜெ., மரணம் குறித்து, நீதி விசாரணை கேட்டு வலியுறுத்தி, லோக்சபாவில் பேசுவேன்,'' என்றார்.

உண்மை வரும்

கோவை சிவானந்தா காலனியில், முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேசுகையில், ''90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஜெ., மரணத்தில் மர்மம் விலக வேண்டும். நீதி விசாரணைநடத்தினால், படிப்படியாக, உண்மை வெளிச்சத்துக்கு வரும்,'' என்றார்.

சினிமா இயக்குனர், பவித்ரன்,ஆர்.சுந்தர்ராஜன், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுக்குட்டி, சின்ராஜ், அருண்குமார் உட்பட திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.திருச்சியில் நடந்த உண்ணாவிரதத்துக்கு, முன்னாள் அமைச்சர் பூனாட்சி தலைமை வகித்தார். இதில் பேசிய அனைவரும், 'ஜெயலலிதாவை, திட்டமிட்டு சசிகலா தரப்பினர் கொலை செய்து விட்டனர். ஆகையால், மத்திய அரசு நீதி விசாரணை நடத்தி, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்' என்பதை
வலியுறுத்தினர்.

திருச்சியில், 1,500, பெரம்பலுாரில், 300, அரியலுாரில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த போராட்டத்தில், 8,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழுப்புரத்தில், எம்.பி., ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நடிகர் ராமராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

தொண்டர்கள் குவிந்ததால், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல், காந்தி சிலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.புதுச்சேரியிலும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- நமது நிருபர் குழு -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1726452

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்காலத்திலை அரிசி கள்ளரை விட அரசியல் கள்ளர் எக்கச்சக்கமாய் கூடீட்டாங்கள்.:grin:

  • தொடங்கியவர்

சசி அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஓ.பி.எஸ். அணியின் போராட்டம்

95027643unnamed-ec0f4eadb19b3d2acd6685fbdf03fa2873e98ed2.jpg

 

முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தில் மர்மம் இருப்­ப­தாக தமி­ழ­கத்தின் அர­சியல் கட்­சி­களும், பொது அமைப்­புக்­களும், பொது­மக்­களும் பர­வ­லாகத் தெரி­வித்து வரு­வ­துடன், அது­பற்றி விசா­ரணை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்த நிலையில் ஜெய­ல­லி­தாவின் மரணம் குறித்து உரிய விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி, அ.தி.மு.க.வின் ஓ.பன்­னீர்­செல்வம் அணி­யினர் கடந்த புதன்­கி­ழமை தமி­ழ­கத்தின் பல்­வேறு இடங்­க­ளிலும் ஒரு நாள் அடை­யாள உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்­தினர். ஓ.பி.எஸ்.ஸின் ஆத­ர­வா­ளர்கள் பெரும் எண்­ணிக்­கையில் இதில் கலந்து கொண்­டனர்.

இது ஓ.பி.எஸ்.ஸுக்கு அ.தி.மு.க. தொண்­டர்­க­ளி­டையே இருக்கும் பெரும் ஆத­ரவை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது. இதன் மூலம் இரண்டு விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. ஒன்று அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸுக்கே அதி­க­ளவில் ஆத­ரவு இருக்­கி­ற­தென்­பது, மற்­றை­யது சசி­கலா தரப்­பினர் ஆட்­சியைக் கைப்­பற்­றி­யி­ருந்­தாலும் அவர்­க­ளுக்கு அ.தி.மு.க.தொண்­டர்­களின் ஆத­ரவு இல்­லை­யென்­ப­தாகும்.

ஓ.பி.எஸ்.ஸுக்கு சேர்ந்த மக்கள் கூட்டம் சசி­கலா தரப்­பி­ன­ருக்கு குறிப்­பாக துணைப் பொதுச் செய­லாளர் டி.டி.வி.தின­கரன், முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆகி­யோ­ரி­டத்தில் பெரும் அதிர்ச்­சி­யையும் ஏமாற்­றத்­தையும் கொடுத்­தி­ருக்­கின்­றது.

ஓ.பி.எஸ்.தரப்­பினர் நடத்­திய உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான தொண்­டர்கள் கலந்து கொண்­டாலும், அதில் பெண்­களின் தொகை அதிக­மென்று தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சென்னை, ராஜ­ரத்­தினம் மைதா­னத்தில் நடை­பெற்ற உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஓ.பன்னீர் செல்வம், மது­சூ­தனன், முன்னாள் சபா­நா­யகர் பி.எச்.பாண்­டியன் உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர். காலை 10 மணிக்கு ஆரம்­ப­மாகி மாலை 5 மணிக்கு நிறை­வு­பெற்­றது.

அதே­போன்று மதுரை, சேலம், திருச்சி, சிவ­கங்கை, திருப்பூர், கரூர், தஞ்­சாவூர், நீல­கிரி, கிருஷ்­ண­கிரி, ஆவடி, நாமக்கல் உள்­ளிட்ட சுமார் 38 இடங்­களில் உண்­ணா­வி­ரதப் போராட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன. திட்­ட­மிட்­டப்­படி ஓ.பி.எஸ்.அணி­யினர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்தி முடித்­துள்­ளனர். இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­களை தடுத்து நிறுத்­து­வ­தற்கும், மக்­களை பங்­கு­பற்­ற­வி­டாமல் செய்­வ­தற்கும் சசி­கலா தரப்­பினர் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்த போதும், அத­னை­மீறி பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்­து­கொண்­டனர்.

இது ஆளும் தரப்­பி­ன­ருக்கு பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், அவர்­க­ளி­டையே பெரும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஏனெனில், ஜெய­ல­லிதா மரணம் தொடர்­பி­லான விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­ய­துடன், அ.தி.மு.க. ஆட்­சி­யையும் சசி­கலா குடும்­பத்­தினர் கைப்­பற்­றி­ய­மைக்கு எதிர்ப்பும் தெரி­வித்­தி­ருந்­தனர். சசி­கலா குடும்­பத்­தி­னரின் ஆதிக்­கத்தை விரும்­பாத அ.தி.மு.க. நிர்­வா­கி­களும், தொண்­டர்­களும் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றனர்.

ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தின் பின்­னணி, அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த போது இடம்­பெற்­றவை, வைத்­திய சிகிச்­சைகள், போயஸ் கார்டன் இல்­லத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் அனைத்­தையும் ஓ.பி.எ.ஸ். அணி­யி­லுள்ள முன்னாள் சபா­நா­யகர் பி.எச்.பாண்­டியன் மற்றும் மனோஜ் பாண்­டியன், பொன்­னையன் போன்றோர் விளா­வா­ரி­யாக ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்து வரு­கின்­றனர். இது உட­னுக்­குடன் மக்­களைச் சென்­ற­டை­கின்­றன. இதனால் மக்கள் சசி­கலா தரப்­பினர் மீது கடும் அதி­ருப்தி மற்றும் கோபத்­துடன் இருக்­கின்­றனர்.

சில­வேளை, ஜெய­ல­லிதா மரணம் தொடர்­பாக சி.பி.ஐ.விசா­ரணை நடை­பெ­று­மானால் தான் சாட்­சி­ய­ம­ளிக்கத் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ள ஓ.பன்­னீர்­செல்வம், ஜெய­ல­லிதா மர­ணத்­துக்கு தமி­ழக சுகா­தா­ரத்­துறை அமைச்சர் விஜ­ய­பாஸ்­கரும் பொறுப்­புக்­கூற வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார். இதனை நிரா­க­ரித்­துள்ள அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் ஓ.பன்­னீர்­செல்­வத்தின் குற்­றச்­சாட்டு சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னது என தெரி­வித்­துள்ளார்.

ஜெய­ல­லிதா சுக­யீ­ன­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டது முதல், அவ­ரது இறப்­பு­வரை மர்மம் நீடிக்­கி­ற­தென்­பது உண்மை. அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போதும், உயி­ரி­ழந்த­போதும் அவர் ஒரு சாதா­ரண பிரஜை என்ற வகையில் அல்­லாமல், ஒரு மாநில முத­ல­மைச்சர் என்ற அடிப்­ப­டை­யி­லேயே மர­ண­மானார். எனவே, அவ­ரது சுக­யீனம், அவ­ருக்கு வழங்­கப்­பட்ட சிகிச்­சை­களின் விபரம், வைத்­தி­யர்­களின் விபரம், வைத்­தி­ய­சாலை பற்­றிய தகவல் போன்ற அனைத்­தையும் வெளி­யி­ட­வேண்­டிய பொறுப்பு ஒட்­டு­மொத்த தமி­ழக அமைச்­ச­ர­வை­யி­டமும், அர­சாங்­கத்­தி­டமும் இருந்­தது. இதனை எவரும் மறுக்க முடி­யாது.

அப்­போ­தைய காலப்­ப­கு­தியில் அமைச்­ச­ர­வையில் ஓ.பன்­னீர்­செல்­வமும் முக்­கிய பொறுப்­பினை வகித்தார். அமைச்­ச­ர­வையில் முதல்­வ­ருக்கு அடுத்த இட­மான நிதி­ய­மைச்­ச­ராக இருந்தார். அதே­போன்று விஜ­ய­பாஸ்­கரும் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தார். இருக்­கிறார்.

இவர்கள் அனை­வரும் ஜெய­ல­லி­தாவின் விட­யத்தில் தங்­க­ளது கட­மை­களை சரி­வர நிறை­வேற்­றா­த­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். அதா­வது மாநில முத­ல­மைச்­சரின் சுக­யீனம் பற்­றிய தக­வல்­களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கா­த­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். அமைச்­ச­ரவை சசி­க­லா­வையும், அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் மட்டும் நம்பி அவர்­களின் பொறுப்பில் முதல்­வரை விட்­டி­ருந்­தனர்.

இத்­த­னைக்கும் சசி­க­லாவும், அவ­ரது குடும்­பத்­தி­னரும் ஜெய­ல­லி­தாவின் நெருங்­கிய உற­வி­ன­ரா­கவோ அல்­லது அர­சாங்­கத்தின் ஒரு முக்­கி­யஸ்­த­ரா­கவோ இருந்­தி­ருக்­க­வில்லை. அவ்­வா­றான ஒரு­வரை நம்பி முதல்­வரை (நலன்­க­வ­னிக்க) அனு­ம­தித்­தது ஏன் என்ற கேள்வி பல­ராலும் எழுப்­பப்­பட்டு வரு­கி­றது. அதற்கு இது­வரை அமைச்­சர்கள், அரச அதி­கா­ரிகள் எவ­ரி­ட­மி­ருந்தும் இது­வரை பதில் வர­வில்லை.

ஜெய­ல­லிதா கால­மா­ன­தாக அறி­விக்­கப்­பட்ட அதே சந்­தர்ப்­பத்தில் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றுக்­கொண்ட ஓ.பன்­னீர்­செல்வம் அடுத்து வந்த சில தினங்­களில் ஜெய­ல­லிதா மரணம் பற்றி விசா­ரணை நடத்­து­மாறு அரச புல­னாய்­வுப்­பி­ரிவு மற்றும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருக்­கலாம். அப்­போது அவ­ருக்கு அதி­காரம் இருந்­தது.

(3 ஆம் பக்கம் பார்க்க)

சசி அணியை.....

(2ஆம் பக்கத்தொடர்ச்சி)

ஆனால், அவர் அதைச் செய்­ய­வில்லை. வேறு எதை­யெல்­லாமோ பேசினார்,

செய்தார். செய்ய வேண்­டி­யதைச் செய்­ய­வில்லை.

பதவி பறி­போ­னதன் பின்­னர்தான் , 'ஜெய­ல­லி­தாவின் மரணம் ஒரு மர்ம மரணம் என்றும் அதற்­காக சி.பி.ஐ.விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்ற ஞானோ­த­யமும்' ஏற்­பட்­டது.

சில­வேளை, முத­ல­மைச்சர் பத­வியில் ஓ.பன்­னீர்­செல்வம் தொடர்ந்­தி­ருப்­பா­ரே­யானால், ஜெய­ல­லி­தாவின் மரணம், மர்ம மரணம் என்றோ அதற்கு நீதி விசா­ரணை, சி.பி.ஜ. விசா­ரணை தேவை­யென்றோ கேட்­டி­ருப்­பாரா? என்­பது சந்­தே­கத்தான்.

எனவே, ஜெய­ல­லி­தாவின் மர­ணத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து விட­யங்­க­ளுக்கும் அப்­போ­தி­ருந்த அமைச்­ச­ர­வையும், அர­சாங்­கமும், சசி­கலா குடும்­பத்­தி­னரும் பொறுப்­பேற்க வேண்டும் என்­பதே உண்மை. ஒவ்­வொ­ரு­வரும் மற்­றவர் மீது குற்­றத்தை சுமத்­தி­விட்டு தப்­பித்துக் கொள்ள முடி­யாது. இவ்­வி­ட­யத்தில் அனை­வ­ருக்கும் பொறுப்­புள்­ளது.

நீதி­யான, நேர்­மை­யான விசா­ரணை ஒன்று நடத்­தப்­ப­டு­மானால், பல்­வேறு தரப்­பி­னரும், விசா­ரணை செய்­யப்­படக் கூடும். அப்­போது உண்­மைகள் வெளி­வரும். அப்­போது யார் குற்­ற­வாளி யார் குற்­ற­மற்­றவர் போன்ற விப­ரங்கள் வெளி­யாகும். உண்மை எப்­போதும் ஊமை­யாகி விடு­வ­தில்லை.

இத­னி­டையே சென்னை ஆர்.கே.நகர் சட்­டப்­பே­ரவைத் தொகு­திக்­கான இடைத்­தேர்தல் அடுத்­த­மாதம் 12 ஆம் திக­தி­யன்று நடை­பெ­று­மென்று தேர்தல் ஆணை­ய­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் (மார்ச்) 14 ஆம் திகதி வேட்­பு­மனு தாக்கல் ஆரம்­ப­மாகும். ஏப்ரல் 12 ஆம் திகதி வாக்­க­ளிப்பு இடம்­பெ­று­வ­துடன், ஏப்ரல்15 ஆம் திகதி தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­படும்.

ஆர்.கே.நகர் தொகு­தியில் கடந்த பொதுத்­தேர்­தலில் ஜெய­ல­லிதா போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருந்தார். அவ­ரது மறைவைத் தொடர்ந்தே அத்­தொ­கு­திக்கு தற்­போது இடைத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது.

2015 ஆம் ஆண்டு கர்­நா­டக மாநில உயர் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற சொத்­துக்­கு­விப்பு வழக்குத் தீர்ப்­பை­ய­டுத்து விடு­தலை செய்­யப்­பட்ட ஜெய­ல­லிதா ஆர்.கே.நகர் தொகு­தியில் போட்­டி­யிட்டு 1 இலட்­சத்து 50 ஆயிரம் வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கடந்த வருடம் (2016) மே மாதம் நடை­பெற்ற சட்­டப்­பே­ரவைப் பொதுத்­தேர்­த­லிலும் ஜெய­ல­லிதா அதே தொகு­தியில் போட்­டி­யிட்டார். ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராக பல்­வேறு கட்­சி­களும் வேட்­பா­ளர்­களை நிறுத்­தின. இவ்­வாறு 45 வேட்­பா­ளர்கள் அந்தத் தொகு­தியில் போட்­டி­யிட்­டனர்.

இது ஜெய­ல­லி­தா­வுக்கு கடும் போட்­டி­யாக அமைந்­தது. இவரை எதிர்த்து தி.மு.க.சார்பில் சிம்லா முத்­துச்­சோழன் போட்­டி­யிட்டார். இவரே ஜெய­ல­லி­தா­வுக்கு பிர­தான சவா­லாகக் காணப்­பட்டார். எனினும் இவ­ருக்கு 57 ஆயி­ரத்து 673 வாக்­கு­களே கிடைத்­தது. எனவே தோல்­வியைத் தழு­வினார்.

ஜெய­ல­லி­தா­வுக்கு 97 ஆயி­ரத்து 218 வாக்­குகள் கிடைத்­தன. 39 ஆயி­ரத்து 545 மேல­திக வாக்­கு­களால் ஜெய­ல­லிதா வெற்றி பெற்றார்.

2015 ஆம் ஆண்டு ஒரு இலட்­சத்து 50 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற்­றிந்த ஜெய­ல­லி­தா­வுக்கு ஒரே வரு­டத்தில் அதா­வது 2016 இல் நடை­பெற்ற தேர்­தலில் சுமார் 53 ஆயிரம் வாக்­குகள் குறை­வாகக் கிடைத்­தமை மக்­க­ளிடம் அவ­ருக்­கான செல்­வாக்கு குறை­வ­டைந்­த­மையை எடுத்துக் காட்­டி­யது.

பெரும் சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே மேற்­கு­றித்த எண்­ணிக்­கை­யி­லான வாக்­கு­களை ஜெய­ல­லி­தாவால் பெற முடிந்­தது. தமி­ழ­கத்தின் முதல்­வ­ரா­கவும், செல்­வாக்குப் படைத்­த­வ­ரா­கவும் காணப்­பட்ட ஜெய­ல­லி­தா­வுக்கே அப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­பட்­டது.

தற்­போது ஜெய­ல­லி­தாவின் மறைவின் பின்னர் அ.தி.மு.க.பல பிரி­வு­க­ளாக சிதறிப் போயுள்­ளது. சசி­கலா – எடப்­பாடி பழ­னிச்­சாமி – டி.டி.வி.தின­கரன் ஒரு புறம். முன்னாள் முதல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் தலை­மை­யி­லான அணி மறு­புறம். இத­னி­டையே ஜெய­ல­லி­தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அணி இன்­னொ­ரு­புறம். இந்த மூன்று பிரி­வி­ன­ருமே ஆர்.கே. நகர் தொகுதி இடைத்­தேர்­தலில் போட்­டி­யிடத் தயா­ராகி வரு­கின்­றனர்.

அ.தி.மு.க. சார்பில் அதன் துணைப் பொதுச் செய­லாளர் டி.டி.வி. தின­க­ரனும், எம்.ஜி.ஆர். அம்மா, தீபா பேரவைத் தலைவர் ஜே.தீபாவும், ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில் ஒரு­வரும் போட்­டி­யிடப் போவ­தாக அறி­விப்­புகள் தெரி­விக்­கின்­றன. இவ்­வாறு ஒரே கட்­சியைச் (அ.தி.மு.க) சேர்ந்த மூவர் தனி­த­னி­யாக போட்­டி­யி­டு­வதால், அ.தி.மு.க.வின் வாக்­கு­களே பிரி­வ­டைந்து மூவ­ருக்கும் செல்­லக்­கூ­டிய வாய்ப்­புக்கள் ஏற்­படும். இதனால் அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பு ஏற்­படும். வெற்றி பெறு­வது கடினம்.

இதே­வேளை, இத்­தொ­குதி இடைத்தேர்தலில் தி.மு.க.வும் போட்டியிடலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் சிம்லா முத்துச் சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகளை, அதுவும் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுப் பெற்றிருந்தார். அந்த நிலையில் இம்முறையும் தி.மு.க.வேட்பாளர் போட்டியிட்டால் அவர் வெற்றிபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அ.தி.மு.க.வுக்குள் உட்கட்சி குழப்பம், அரச இயந்திரத்தின் மந்த செயற்பாடு, அமைச்சர்கள் மீதான அதிருப்தி, இலஞ்சக் குற்றச்சாட்டுகள், சசிகலாவின் பிடிக்குள் அ.தி.மு.க. சிக்கியுள்ளமை, அவரது குடும்பத்தவர்களின் தலையீடு ஆதிக்கம் என்று அ.தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அந்த அதிருப்தியின் வெளிப்பாடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெளிப்படக்கூடும்.

அதேவேளை, தற்போதைய நிலையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் ஒரு தேர்தலாகவும் இந்த இடைத்தேர்தல் இருக்கப்போகிறது. சென்னை மாநகராட்சி பெரும்பாகத்திற்குள் வரம் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்களின் தீர்ப்பு கற்றறிந்த, அரசியல் தெளிவுபெற்ற முற்போக்கு சிந்தனையுடைய மக்களின் தீர்ப்பாக இருக்குமென்பது பொதுவான எதிர்பார்ப்பாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-03-12#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.