Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் !

Featured Replies

ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் !

ஜெயலலிதா இறுதி மரியாதை

ஜெயலலிதா  மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அப்போலோவில் அவருடைய இறுதி நிமிடங்களின்போது நடந்த சிகிச்சைகள் குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை சேகரித்து வருகிறது. அதில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை, போயஸ் கார்டனிலிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள், அப்போலோவின் இரண்டாவது தளத்துக்கு அவரை எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்த பல்வேறு வினாக்கள் இப்போது கிளப்பப்பட்டு வருகின்றன. 'ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடும், காய்ச்சலும் உள்ளது' என்று முதலில் அப்போலோ அறிக்கை வெளியிட்டாலும், நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு இருக்கும் வேறு சில நோய்களையும் பட்டியலிட்டு... அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் வரிசையாக அறிக்கைகளை வெளியிட்டனர், அப்போலோ நிர்வாகத்தினர். 

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து... அப்போலோ நி்ர்வாகம், ''அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சாப்பிடுகிறார்; பேசுகிறார்; வீடு திரும்புவதைப் பற்றி அவரே முடிவு செய்வார்” என்றெல்லாம் சொல்லிவந்தது. ஆனால், திடீரென டிசம்பர் 4-ம் தேதி மாலை அவருக்கு இதயஅடைப்பு  ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்துவிட்டதாக அதே மருத்துவமனை மூலம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், அவர் மரணம்வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது அனைத்து தரப்பு மக்களையும் கேள்விக்குள்ளாக்கியது. அ.தி.மு.க-வில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட முன்னணியினர்கூட, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அதிர வைத்தனர். மத்திய அரசிடமும் சசிகலா புஷ்பா எம்.பி-யும்... ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பி-க்களும் மனு அளித்து மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். 

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர் என்பதால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த விவகாரம் அவரையும் யோசிக்கவைத்தது. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற கேள்வி, மத்திய அரசிடம் இன்னும் உள்ளது. ஓ.பி.எஸ் அணியினர், 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும்' என்று கோரிக்கைவைத்தபோதே இந்த விவகாரத்தில் நடந்தது குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதிகாரபூர்மற்ற இந்த விசாரணையில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்களாம். இதற்குக் காரணம் மத்திய அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று அறிவித்தால், அதற்கு முன்னேற்பாடாகத்தான் இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். மத்திய அரசின் மனநிலையை அறிந்துதான் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா சசிகலா

ஜெயலலிதா மரணமடைந்த அப்போலோ மருத்துவமனையில் இருந்துதான் இவர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் விசாரணையில் இருந்து கிடைத்த தகவல்கள்தான் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.மத்திய உளவுத்துறை அதி்காரி ஒருவரிடம் நாம் பேசியபோது “ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள் குழுவோடு ஒன்பது மருத்துவ உதவியாளர்கள் குழுவும் பணியில் இருந்துள்ளார்கள். ஒரு ஷிப்ஃட்டுக்கு 3 பேர் வீதம் ஒன்பது பேரும் மாறிமாறி 75 நாட்களும் பணியில் இருந்துள்ளார்கள். அதில் மூன்று மருத்துவ உதவியாளர்களிடம் ஜெயலலிதா குளோஸாகப் பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்துள்ளது. அவரைச் சாதாரண வார்டுக்கு மாற்றிய பிறகு, விரைவில் நலம் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் அனைவரும் இருந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறையில் சசிகலா மட்டுமே முழு நேரமும் இருந்துள்ளார். ஷிப்ஃடில் இருக்கும் மருத்துவ உதவியாளர்கள், தேவைப்பட்டால்... அறைக்குள் சென்று செக்கப் செய்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டுள்ளனர்.

டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா படுக்கையில் இருந்துள்ளார். இயல்பாக அவர் தூங்கிக்கொண்டிருந்ததால், அப்போது பணியில் இருந்த இரண்டு மருத்துவ உதவியாளர்கள் வெளியே இருந்துள்ளனர். திடீரென ஜெயலலிதா இருமல் சத்தம் தொடர்ந்து கேட்டதும், பதறியடித்து இரண்டு மருத்துவ உதவியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஜெயலலிதா பக்கத்தில் சசிகலா கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஜெயலலிதா இருமியதால், தீடிர் என வாந்தியும் எடுத்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதட்டம் அடைந்துள்ளார்கள். அதன்பிறகுதான் சிறிது நேரத்தில் நெஞ்சு வலியும் மூச்சுத்திணறலும் வந்துள்ளது'' இதுவரை நாங்கள் விசாரித்துள்ளோம் என்கிறார். அடுத்த கட்டமாக “ஜெயலலிதாவிற்கு தீடிர் என இருமலும் அதை தொடர்ந்து வாந்தியும் வந்தது ஏன்?, அவருக்கு அந்த நேரத்தில் ஏதாவது திரவ உணவு கொடுக்கபட்டதா? என்பதையெல்லாம் உடன் இருந்த மருத்துவ உதவியாளர்கள் தான் விளக்க வேண்டும். அவர்களோடு அறையில் இருந்த சசிகலாவும் வாய் திறக்க வேண்டும். இதை தான் நாங்கள் அடுத்து விசாரிக்க உள்ளோம்” என்றும் அந்த உளவுத்துறை அதிகாரி கூறுகிறார்.

அப்போலோஇப்போது அதிகாரிகள் விசாரணை வட்டத்தில், ஜெயலலிதாவின் சிகிச்சையில் உடனிருந்த ஒன்பது மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். மேலும், டாக்டர் பாலாஜியும் விசாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு முறையாக விசாரணைக்கு உத்தரவிட்டதும் முதலில் விசாரிக்கப்படும் நபர், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார்தான் என்கிறார்கள். அப்போலோவில் பணியாற்றும் சில நபர்களைவைத்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் கேமரா புட்டேஜ்களையும் கைப்பற்றியுள்ளனர்.. 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புவரை டாக்டர் சிவக்குமார்தான் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் அளித்துள்ளார். அதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற விபரம் சிவக்குமாருக்கு மட்டுமே தெரியும் என்று உறுதியாக நம்புகிறது மத்திய அரசு. எனவே, அவர் மீதுதான் இப்போது கண்வைத்துள்ளனர். விரைவில் விசாரணைக்குழு அதிகாரபூர்வ விசாரணையில் இறங்கிவிடும் நிலை வந்துவிடும். மத்திய அரசும் அதற்குத் தயாராக உள்ளது என்பதே கடைசிகட்ட தகவலாகத் தெரிகிறது.

http://www.vikatan.com/news/coverstory/83119-mystery-in-and-around-jayalalithaa-death-intelligence-collects-detail-about-9-medical-assistants.html

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ஸப்பா..! இந்த ஊடகங்கள் அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப வேறு வேறு செய்தி தலைப்புகளில் அரைச்சி கடுப்பேத்துகிறார்கள்..!! vil-mechant.gif

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்த "செயலலிதா சிகிச்சை புராணம்" பாடப்போகிறார்களோ..? enrage-2010.gif

களத்திற்கு சென்று மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஏ.சி அறையிலிருந்துகொண்டு சமகால நிகழ்வுகளை அலசுகிறோமென்ற போர்வையில், ஊகங்களை செய்தியாக வெளியிட்டு பக்கத்தை நிரப்புகின்றனர்..!

இதில் விகடனும் ஐக்கியமாகியிருப்பது, கேவலம்! punch.gif

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஸ்ஸப்பா..! இந்த ஊடகங்கள் அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப வேறு வேறு செய்தி தலைப்புகளில் அரைச்சி கடுப்பேத்துகிறார்கள்..!! vil-mechant.gif

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்த "செயலலிதா சிகிச்சை புராணம்" பாடப்போகிறார்களோ..? enrage-2010.gif

களத்திற்கு சென்று மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஏ.சி அறையிலிருந்துகொண்டு சமகால நிகழ்வுகளை அலசுகிறோமென்ற போர்வையில், ஊகங்களை செய்தியாக வெளியிட்டு பக்கத்தை நிரப்புகின்றனர்..!

இதில் விகடனும் ஐக்கியமாகியிருப்பது, கேவலம்! punch.gif

 

களவாணியம்மா பூட்டாங்க... தமிழகத்துக்கு விடுதலை அவ்வளவு தான். enrage-2010.gif

  • தொடங்கியவர்

அப்போலோவை அதிரவைத்த ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா! #VikatanExclusive

deepa-_ops_13415.jpg

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லும் பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, தீபாவும் சொல்லத் தொடங்கி இருக்கிறார். இவர்களுக்கு தீபக் மூலம் பதிலடிகொடுக்க, சசிகலா தரப்பு முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஜெயலலிதாவின் மரண விவகாரத்தை பன்னீர்செல்வம் அணியினர் மக்கள் மேடைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதற்காக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தைத் தொடங்கியுள்ளார். மகளிர் தினமான மார்ச் 8ல் பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஜெயலலிதாவின் மரணம்குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த அணி தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம்குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துவிட்டது. எய்ம்ஸ் டாக்டர்களும் அறிக்கை கொடுத்துள்ளனர். அதன்பிறகும் பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிவருகின்றனர். இந்த அணியினரைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரண விவகாரத்தில், அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தரப்பிலிருந்து வரும் ஜெயலலிதாவின் மரண விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவின் கோரிக்கைக்கு அவரின் சகோதரன் தீபக்மூலம் பதிலடி கொடுக்க சசிகலா தரப்பு முடிவுசெய்துள்ளது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

தீபாவின் ஆதரவாளர்கள் கூறுகையில்,  "ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரம்குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை, எங்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அதில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு குடும்பத்தினரிடம் சம்மதம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ரத்த சொந்தமாக தீபா, தீபக் ஆகியோர் மட்டுமே இருக்கிறோம். தீபாவிடம் எந்தவித சம்மதமும் பெறவில்லை. ஒருவேளை, தீபக்கிடம் சம்மதம் பெற்றிருந்தால், அதுதொடர்பான ஆவணங்களை அரசு வெளியிட வேண்டும். அதோடு, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உயிர்காக்கும் உபகரணங்களை நீக்க யாரிடம் சம்மதம் பெறப்பட்டது. அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டவரின் விவரத்தையும் அரசு வெளியிட வேண்டும் என்று தீபா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கேள்விகளுக்கும் அரசும், அப்போலோ நிர்வாகமும் பதில் அளிக்க வேண்டும். இதற்குப் பதில் அளிக்கவில்லை என்றால், சட்டப்படி அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பல தடவை அவரைச் சந்திக்க தீபா சென்றார். ஆனால், சசிகலா தரப்பினர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதுவே, ஜெயலலிதாவின் சிசிக்சை மற்றும் மரணத்தில் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரத்தை அவசர அவசரமாகத் தெரிவித்த அப்போலோ நிர்வாகம், பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை. மேலும், ஜெயலலிதாவுக்கு இருந்த உயர்பாதுகாப்பை விலக்கச் சொன்னது யார் என்பதும் தெரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அரசு, சசிகலா ஆகியோர் பதில் சொல்ல வேண்டும்" என்றனர். 

death_long_13346.jpg

பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "ஜெயலலிதாவின் மரணத்துக்காக நாங்கள் தொடங்கியுள்ள தர்ம யுத்தம் நிச்சயம் வெற்றி பெறும். அவரது மரணத்தில் புதைந்திருக்கும் சந்தேகங்களுக்கு நிச்சயம் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். இதன்மூலம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் முகத்திரையை நிச்சயம் கிழிப்போம். உண்ணாவிரதப் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவுமூலம் நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம் என்பதை உணர்கிறோம். அடுத்து, சிபிஐ, விசாரணை கமிஷன் ஆகியவற்றை வலியுறுத்துவதோடு, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேகரித்துவருகிறோம். அந்த ஆதாரங்களை நிச்சயம் வெளியிடுவோம். ஜெயலலிதா சிகிச்சை விவரங்களில் சில உண்மைகள் தீபக்கிற்குத் தெரிய வாய்ப்புள்ளது. அப்போலோ மருத்துவமனையில் நடந்த ரகசியம், பன்னீர்செல்வத்துக்கும் தெரியும்.

ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தோம். தற்போது சூழ்நிலை அப்படியில்லை. சசிகலாவுக்கு எதிராக யுத்தம் தொடங்கிவிட்டது. உண்ணாவிரதப் போராட்டத்தில் பி.ஹெச் பாண்டியன் பேசும்போது, 'ஜெயலலிதாவின் மரணத்தில் சிறை அறை எண் 3525 ல் இருக்கும் சசிகலாதான் முதல் குற்றவாளி. அடுத்து, போயஸ்கார்டன் வீட்டில் செல்போன் சிக்னலுக்காக தனியாக டவர் உள்ளது. ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நாளில், அந்த செல்போன் டவரை ஆராய வேண்டும். மேலும், 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் இருந்த ஜெயலலிதாவுக்கு அந்தப் பாதுகாப்பை விலக்கச் சொன்னது யார், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள நபர் மரணம் அடைந்தால், பாதுகாப்பு அளித்தவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனைகூட விதிக்க வழிவகை உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் 'நெல்லை டு சென்னை, சென்னை டு பெங்களூரு வரை' சம்பந்தம் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். உண்மைகளை நாங்கள் சொல்லிவிட்டோம். அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

அப்போலோ வட்டாரங்கள் கூறுகையில், "ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்கி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்த விவரங்களை உடனுக்குடன் பத்திரிகைகளுக்குக் கொடுத்தோம். ஒருவரின் நோய், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களையும், புகைப்படங்களையும் வெளியிடக்கூடாது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் என்றதும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்த முழுவிவரங்களை லண்டன் டாக்டர் ரிச்சர்டு பெய்ல் மற்றும் மருத்துவக்குழு மூலம் பேட்டி கொடுத்து விட்டோம். இதன்பிறகும் அவரது மரணத்தில் சந்தேகம் என்று குற்றம் சுமத்துபவர்கள்தான் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டால், அதற்கு நாங்கள் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம்" என்றனர். 

http://www.vikatan.com/news/coverstory/83136-o-panneerselvam-and-deepas-statement-leaves-apollo-threatened.html

  • தொடங்கியவர்
போயஸ் கார்டனில் ஜெ.,க்கு நடந்தது என்ன?
 
 
 

தமிழக சுகாதார துறை மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களும், மர்மங்களும் அதிகரித்துள்ளன.

 

Tamil_News_large_1728315_318_219.jpg

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, தமிழக அரசின் சுகாதார துறை, அப்பல்லோ மருத்துவமனை, டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சார்பில், சமீபத்தில், அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்த அறிக்கைகளால், மேலும் சந்தேகங்கள், மர்மங்கள் அதிகரித்துள்ளன.

அதுபற்றிய விபரம்:

* அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, சுயநினைவு குறைந்து, மயங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில், அவருக்கு என்ன நடந்தது; உடன் இருந்தவர்கள் யார்; உடனடியாக செய்த முதலுதவி என்ன; யாருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது; எவ்வளவு நேரமாக, அவர் பாதிக்கப்பட்டிருந்தார்

* போயஸ் கார்டன் இல்லத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகள் என்ன; முதல்வர் என்ற முறையில், அரசு மருத்துவ மனை டாக்டர்கள், அங்கு பணியில் இருந்தனரா?

* ஜெயலலிதாவுக்கு வழக்கமாக சிகிச்சை அளித்த டாக்டர்கள், அங்கு இருந்தனரா; ஜெயலலிதா உடல்நிலை மோசமான தகவல், கவர்னர் அலுவலகம், தலைமை செயலர், உள்துறை செயலர், சுகாதார துறை செயலர்

போன்றோருக்கு, உடனடியாக சொல்லப்பட்டதா?

* ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போது, அவருக்கு, 48 சதவீதம் அளவுக்கே சுவாசம் இருந்ததாக, அப்பல்லோ அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அளவுக்கு மோசமாகும் வரை, அவரை வீட்டில் வைத்திருந்தது ஏன்?

* முதல்வரின் உடல்நலம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளிக்கப் பட்டதா; மத்திய உள்துறை, இதுகுறித்து நேரடி விசாரணை நடத்தியதா; முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்ட விபரம், அவரது உறவினர்கள், உடன் இருந்த ஊழியர்கள், ரத்த உறவிலான குடும்பத்தின ருக்கு தெரியப்படுத்தப் பட்டதா; அவர்கள் சுதந்திர மாக, ஜெயலலிதாவின் உடல்நலம் அறிய அனுமதிக்கப்பட்டனரா?

* ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட, 'இசட் பிளஸ்' பாதுகாவலர்களுக்கு, எப்போது தகவல் தெரிவிக்கப் பட்டது; அவர்கள் யாரிடம், இதுகுறித்து தகவல் அளித்தனர்; அதன் நகலை அரசு பெற்றதா?

* ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும் முன், செரிமான பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், கொஞ்சம் கூட கவனிக்கப்படாத சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பி பிரச்னை, கடும் வலியுடன் கூடிய குடல் நோய், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, தொடர் இருமல் போன்ற பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்

* அந்த நோய்கள், அவருக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளன என, மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது. இதை, அவருடன் இருந்து கவனிக்காமல் விட்டது யார்; நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு, அவருடைய உடல்நிலை மிக மோசமாக மாற என்ன காரணம்?

* லண்டனில் இருந்து வந்த ரிச்சட் பீலே, அமெரிக்க டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உட்பட, 13 பேர், மருத்துவ அறிவுரை வழங்கியதாக மட்டும், மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, அரசும், மருத்துவமனையும் வழங்கப்பட்ட தகவல்களில், பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. அதன் முரண்பாடு களுக்கு என்ன பதில்?

* எய்ம்ஸ் அறிக்கையின்படி, சிகிச்சையில் சில ,

 

நேரங்களில், அவர் லேசாக சுய நினைவுக்கு வந்துள்ளார். ஆனால், 'அவர், டிஸ்சார்ஜ் ஆவதுஅவருடைய விருப்பத்தை பொறுத்தது' என, ஊடகங்களில் தகவல் தெரிவித்தது எப்படி; அந்த தகவல் வரும்போது, அதை அரசும், அ.தி.மு.க.,வும் மறுக்காதது ஏன்?

* எய்ம்ஸ் டாக்டர்கள், தலைமை செயலர், அமைச்சர்களுடன் அவ்வப்போது, உடல்நிலை விபரத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், முறைப்படி, முதல்வரின் உடல் நலம் குறித்து, அரசின் செய்திக்குறிப்பு வராதது ஏன்?

* ஜெயலலிதா சிகிச்சை குறித்து, சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால், அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு, அவர்கள் சிகிச்சையே அளிக்காமல், சிகிச்சை குறித்து தகவல் வெளியிட்டது எப்படி?

* சிகிச்சை அளித்த போதும், மருத்துவ மனையில் ஜெயலலிதாவை சேர்க்கும் போதும், மூத்த அமைச்சரான பன்னீர் செல்வத் துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா; அந்த விபரங்கள், அறிக்கையில் இல்லை. ஆனால், இறப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாளில் தான், பன்னீர் செல்வத்துக்கு, தகவல் அளிக்கப்பட்டு உள்ளதை, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்

* அவர், முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன் தான், அந்த தகவலை தெரிந்து கொண்டாரா?
இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், இன்னும் விரிவான பதில் கிடைக்கவில்லை. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1728315

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.