Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை எதிர் பங்களாதேஷ் ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

பங்களாதேஷூடனான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைவர்

பங்களாதேஷூடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 

எதிர்வரும் 25 ஆம் திகதி இச்சுற்றுப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக் குழாம் விபரம்: உபுல் தரங்க (அணித்தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்செய டி சில்வா, குசல் மெண்டிஸ், அசேல குணரட், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, சுரங்க லக்மல், லஹிரு குமார, விக்கும் சஞ்சய பண்டார, திசேர பெரேரா, சச்சின் பத்திரண, சீக்குகே பிரசன்ன, லக்ஷான் சந்தக்கன்

http://metronews.lk/?p=3721

  • தொடங்கியவர்

விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை தரப்பு

 
SLPBXI vs Ban
singer-league-2017-728.jpg

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி ஆகியவற்றிடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஒரு நாள் பயிற்சிப் போட்டியில், மிக நேர்த்தியான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை தரப்பு போட்டியில் இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக சென்று  வெறும் 2 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியினை வீழ்த்தி த்ரில்லர் வெற்றியினை பெற்றுக்கொண்டது.

இலங்கை சுற்றுப் பயணத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி, எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அணியுடன் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பிலான அணியுடன் மோதிய இப்போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் ஆரம்பாகியது.

போட்டியின் நாணய சுழற்சியினைப் வெற்றிகொண்ட  பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மிலிந்த சிறிவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரிய அணிக்கு வழங்கினார்.

இதன்படி தில்ஷான் முனவீர மற்றும் குசல் பெரேரா ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பிக்க மைதானம் விரைந்த வாரிய அணி வீரர்கள் அதிரடியான ஆரம்பத்தினை வெளிக்கொணர்ந்தனர்.

வாரியத் தலைவர் அணியின் முதல் விக்கெட்டாக, விரைவாக துடுப்பாடியிருந்த தில்ஷான் முனவீர 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் புதிதாக களம் நுழைந்த சந்துன் வீரக்கொடி களத்தில் நின்றிருந்த ஏனைய ஆரம்ப வீரர் குசல் பெரேராவுடன் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.  

மீண்டும் விறுவிறுப்பான ஒரு போர் களத்தில் சந்திக்கவுள்ள DS மற்றும் மஹாநாம கல்லூரிகள்

இருவரினதும் சிறந்த ஆட்டத்தினால் இரண்டாம் விக்கெட்டுக்காக குறுகிய இடைவெளியில், 116 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெறப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரிய அணியில் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நுழைந்த சந்துன் வீரக்கொடி பங்களாதேஷ் அணியினால் வீசப்பட்ட பந்துகளை பவுண்டரி எல்லைக்கு அப்பால் சிதறடித்ததுடன், அதிரடி ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 67 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டார்.

எனினும், களத்தில் நின்ற குசல் பெரேரா சதூர்யமான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்திருந்தார். 64 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது தனது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்ட பெரேரா, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வெளிக்காட்டியிருந்த தொடர்ச்சியான சிறப்பாட்டத்தினை இந்த போட்டியிலும் காட்டி வழமையான ஆட்டத்திற்கு திரும்பியிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

பின்னர், இலங்கை சார்பிலான அணியின் மத்திய வரிசை வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு முதுகெலும்பாக செயற்பட, தமது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து இமாலய மொத்த ஓட்டங்களான 354 ஓட்டங்களினைக் குவித்துக்கொண்டது.

இதில் மத்திய வரிசையில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தனன்ஞய டி சில்வா, 47 பந்துகளிற்கு அரைச்சதம் தாண்டி 52 ஓட்டங்களினை குவித்திருந்ததுடன், திசர பெரேரா 30 பந்துகளிற்கு 41 ஓட்டங்களினை விளாசியிருந்தார். அத்துடன், அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 350 தாண்ட உறுதுனையாக நின்றிருந்த தசுன் சானக்க இறுதி நேரத்தில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக, 12 பந்துகளிற்கு 26 ஓட்டங்களினைப் பெற்று சிறப்பித்திருந்தார்.

சற்று மோசமான பந்து வீச்சினை வெளிக்கொணர்ந்த பங்களாதேஷ் அணியில் மஷ்ரபி மொர்தஸா, தஸ்கின் அஹமட், அபுல் ஹஷன் மற்றும் சுன்சமுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை சுருட்டி இருந்தனர்.

இதனையடுத்து, மிகவும் சவாலான வெற்றி இலக்கான 355 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, முதல் பந்திலேயே தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸினை, வலது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாந்துவின் பந்து வீச்சில் ஓட்டம்  ஏதுமின்றி பறிகொடுத்தது.

இதனால், மோசமான ஆரம்பத்தினை பங்களாதேஷ் பெற்றிருப்பினும் தளராது நுட்பமான முறையில், இலக்கினை எட்ட விரை கதியில் ஓட்டங்களினை சேர்த்தது.

இரண்டாம் விக்கெட்டிற்காக 115 ஓட்டங்களினை சேர்த்த பங்களாதேஷ் அணியில், இரண்டாம் விக்கெட்டாக பறிபோன செளம்யா சர்க்கர் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 43 பந்துகளிற்கு 47 ஓட்டங்களினைப் பெற்று அரைச் சதத்தைத் தவறவிட்டார்.  

மத்திய வரிசை வீரர்களான சப்பீர் ரஹ்மான் மற்றும் மொசாதிக் ஹொசைன் ஆகியோர் துரித கதியிலான ஆட்டம் மூலம் அரைச் சதங்கள் கடந்து  அணியின் பாரிய இலக்கினை எட்டும் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்தனர்.

இதில் சப்பீர் ரஹ்மான் 63 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் உள்ளடங்களாக 72 ஓட்டங்களினை விளாசியதோடு,  இலங்கை அணியுடனான கடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாயிருந்த மொசாதிக் ஹொசைன் 53 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.  

பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா

இதனையடுத்து இலங்கை தரப்பிலான அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த, பங்களாதேஷ் விரைவாக சில விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. எனவே, போட்டியில் இலங்கை கிரிக்கெட் வாரிய அணி வெற்றி பெறும் என்பது உறுதியாகும் தருவாயில் இருந்தது.  

எனினும், பங்களாதேஷின் 7ஆம் விக்கெட்டினை அடுத்து மைதானம் நுழைந்த அவ்வணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா திடுக்கிடும் வகையிலான அதிரடி ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்து போட்டியின் போக்கையே மாற்றினார்.

களத்தில் நின்றிருந்த மஹமதுல்லாவுடன் கைகோர்த்த அவர், 8ஆம் விக்கெட்டிற்காக 101 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், வெற்றியலக்கிற்கு மிகவும் நெருங்கியதாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை கொண்டு வந்தார். எனினும், லஹிரு மதுசன்க மூலம் அவரது அதிரடி ஆட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.  

மொர்தஸா ஆட்டமிழந்திருப்பினும் போட்டி முழுமையாக, இலங்கை தரப்பிடம் வந்திருக்கவில்லை. எனினும், வாரிய அணியின் வீரர்கள் எதிரணியினை கட்டுப்படுத்தும் விதமாக செயற்பட்டதால் பரபரப்பான இப்போட்டியில், பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று வெறும் 2 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணியில் இறுதி வரை களத்தில் நின்றிருந்த மஹமதுல்லாஹ் 71 ஓட்டங்களினைப் பெற்றிருந்ததுடன், போட்டியின் திசையினை மாற்றிய மொர்தஸா வெறும் 35 பந்துகளிற்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களினை தமது அணிக்காக சேர்த்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணியின் பந்து வீச்சில், அகில தனன்ஞய மூன்று விக்கெட்டுக்களையும், சத்துரங்க டி சில்வா இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி – 354/7 (50) சந்துன் வீரக்கொடி 67(54), குசல் பெரேரா 64(78), தனன்ஞய டி சில்வா 52(47), திசர பெரேரா 41(30), மிலிந்த சிறிவர்த்தன 32(29), தசுன் சானக்க 26(12)*, சுன்சமுல் இஸ்லாம் 27/1(6)

பங்களாதேஷ் அணி – 352/8 (50) சப்பீர் ரஹ்மான் 72(63), மஹமதுல்லாஹ் 71(68)*,மசரபி மொர்தஸா 58(35), மொசாதிக் ஹொசைன் 53(50), செளம்யா சர்க்கர் 47(43), அகில தனன்ஞய 61/3(8), சத்துரங்க டி சில்வா 53/2(9)

போட்டி முடிவுஇலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி 2 ஓட்டங்களால் வெற்றி

 

 

 

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டியில் இருந்து குசால் பெரேரா நீக்கம்

 

வங்காள தேச அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இருந்து இலங்கை விக்கெட் கீப்பர் நீக்கப்பட்டுள்ளார்.

 
ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டியில் இருந்து குசால் பெரேரா நீக்கம்
 
இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (23) சனிக்கிழமை தொடங்குகிறது. நேற்று பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசால் பெரேரா 78 பந்தில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் தம்புல்லாவில் 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதி நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார். கொழும்பில் ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கும் போட்டியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அணியின் மானேஜர் அசாங்கா குருசிங்கா கூறுகையில் ‘‘குசால் பெரேராவின் காயம் சிறிய அளவில்தான் உள்ளது. அவர் 2-வது போட்டியில் இடம்பெறுவதற்கு உடற்தகுதியை பெற்று விடுவார். இருந்தாலும், கொழும்பில் இருந்து தம்புல்லாவிற்கு அணி செல்லும்போது அவர் சக வீரர்களுடன் செல்லவில்லை. இதனால் நாளைக்குள் மாற்று வீரரை தேர்வு செய்வோம். ஏப்ரல் 1-ந்தேதி கொழும்பில் நடைபெற இருக்கும் போட்டியின்போது அணியுடன் இணைந்து கொள்வார்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/23194038/1075617/Injured-Kusal-Perera-ruled-out-of-first-two-ODIs.vpf

  • தொடங்கியவர்

காயமடைந்த குசலுக்கு பதிலாக மிலிந்த சிறிவர்தன அணியில் இணைப்பு

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக அணியில் மிலிந்த சிறிவர்தன இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

milinda-siriwardana-_3_.jpg

கடந்த 22 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி போட்டியின் போது குசலின் தொடைப் பகுதியில் தசைப்பிப்பு ஏற்பட்டதையடுத்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக மிலிந்த சிறிவர்தன அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

 

இதனால் பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இவர் விளையாட முடியாத நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் குசல் ஜனித் பெரேரா விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/18220

  • தொடங்கியவர்

பங்களாதேஷை வென்றால் மாத்திரமே இலங்கைக்கு உலகக்கிண்ண வாய்ப்பு? : ஐ.சி.சி. எச்சரிக்கை!

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் தொடர் மிக முக்கியமான தொடராக மாற்றமடைந்துள்ளது.    

safsafaf.jpg

காரணம் நாளை நடைபெறவுள்ள இலங்கை - பங்களாதேஷ் தொடரை வெற்றிக்கொள்ளும் அணி 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்புள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

ஒருநாள் தரப்படுத்தலில் இலங்கை 98 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 91 புள்ளிகளுடன் 7 இடத்திலும் இருக்கின்றது.

இதில் இலங்கை அணி 3-0 என வெற்றிபெறுமாயின், 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி 3-0 என வெற்றிபெறுமாயின், இரு அணிகளும் 96 புள்ளிகளை பெறுவதுடன், உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

எவ்வாறாயினும் 8 மற்றும் 9 ஆம் இடங்களை பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இலங்கை பங்களாதேஷ் தொடர் மிக முக்கியமானதாக இருக்கும்.

ஏனெனில் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி இங்கிலாந்து அணி மற்றும் தரவரிசையில் முதல் 7 இடங்களை பிடித்துள்ள அணிகள் மாத்திரமே 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18230

  • தொடங்கியவர்

தமிம் இக்பால் சதம் : சவாலான இலக்கை நிர்ணயித்தது பங்களாதேஷ்!

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 324 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

asfasf.jpg

பங்களாதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் தனது 8 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்து 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், சகிப் ஹல் ஹசன் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லக்மால் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணி வெற்றிபெறவேண்டுமாயின் 10 விக்கட்டுகள் கைவசமிருக்க 325 ஓட்டங்களை பெறவேண்டும்

http://www.virakesari.lk/article/18273

Bangladesh 324/5 (50.0 ov)
Sri Lanka 158/6 (34.4 ov)
Sri Lanka require another 167 runs with 4 wickets and 15.2 overs remaining
  • தொடங்கியவர்

முதலாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்களால் இலங்கையை வென்றது பங்களாதேஷ்

இலங்கை அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

ரங்­கிரி தம்­புள்ளை சர்­வ­தே­ச அர­ங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு  324 ஓட்டங்களைக் குவித்தது. தமீம் இக்பால் 127 ஓட்டங்களைப் பெற்றார்.

325 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  45.1 ஓவர்களில் 234 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

தினேஷ் சந்திமால் 70 பந்துகளில் 59 ஓட்டங்களையும் திசேர பெரேரா 35 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் முஷ்தாபிகுர் ரஹ்மான் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

http://metronews.lk/?p=4410

  • தொடங்கியவர்

தோல்வியடைந்தமைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சந்திமால் 

 

பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி தோல்­வி­யுற்­ற­தற்கு காரணம் களத்­த­டுப்­பா­ளர்­கள்தான் என்று தினேஷ் சந்­திமால் தெரி­வித்­துள்ளார்.

260663.jpg

ஒவ்­வொரு போட்­டியின் முடி­விலும் போட்டி குறித்து விளக்­க­ம­ளிக்க அந்­தந்த அணியின் வீரர் ஒருவர் அழைக்­கப்­ப­டுவார். அந்த வகையில் இந்தப் போட்டி குறித்து பேச சந்­திமால் வந்­தி­ருந்தார்.

அவரும் தோல்­விக்கு கார­ணத்தை சொல்­லி­விட்டு சென்­று­விட்டார். ஒவ்­வொரு ரசி­க­னுக்கும் பார்­வை­யா­ள­னுக்கும் தேவை போட்­டியில் வெற்­றியே தவிர தோல்­விக்­கான கார­ணங்கள் அல்ல.

ஒவ்­வொரு முறை தோற்­கும்­போது துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு, களத்­த­டுப்பு, அல்­லது ஆடு­களம் எமக்கு கைகொ­டுக்­க­வில்லை. இப்­படி இதில் ஏதோ ஒன்றை சொல்­லி­விட்டு சென்­று­வி­டு­வார்கள். தோல்­விக்கு கார­ணத்தை ரசி­கர்கள் கேட்­க­வில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு போட்டியை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே.

இவ்­வ­ளவு நீண்ட விளக்­கத்தைக் கொடுக்க காரணம் பங்­க­ளாதேஷ் அணி முதன் முத­லாக இலங்கை அணிக்­கெ­தி­ராக முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி ஒருநாள் போட்­டியில் வெற்­றி­பெற்­றி­ருக்­கி­றது. அதேபோல் முதல் முறை­யாக சொந்த மண்ணில் இலங்­கையை வீழ்த்­தி­யி­ருக்­கி­றது.

தம்­புள்ளை ரங்­கிரி மைதா­னத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற முதல் ஒருநாள் போட்­டியில் தமீம் இக்பால் பெற்ற சதத்தால் இலங்­கையை 90 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்­தி­யது பங்­க­ளாதேஷ். இலங்கை – பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்கு இடை­யி­லான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி முதலில் களத்­த­டுப்பை தெரி­வு­செய்­தது.

இலங்கை அணி விட்ட முதல் பிழையே இதுதான். தனது சொந்த மைதா­னத்தில் ஆடு­க­ளத்தின் தன்­மையை உணர்ந்­து­கொள்­ளாமல் ஆரம்­பத்தில் விட்ட பிழை முடிவில் தோல்­விக்கு இட்­டுச்­சென்­றது. அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் அணி இலங்கை அணியின் பந்­து­வீச்சை மிகவும் இல­கு­வாக ஆடியது.

இலங்கை அணியின் பந்­து­வீச்­சா­ளர்­களும் தொழில்­நுட்ப ரீதி­யாக பந்­து­வீ­ச­வில்லை என்றே சொல்­லலாம். ஏதோ 50 ஓவர்  ­க­ளையும் வீசி முடிக்­க­வேண்டும் என்ற எண்ணம் மட்­டுமே அவர்­க­ளிடம் இருந்­ததைப் போலத்தான் தெரிந்­தது. சந்­திமால் குறிப்­பிட்­டது உண்­மைதான். இலங்கை அணியின் களத்­த­டுப்பு மிக மிக மோசமாக இருந்தது. 

பங்­க­ளா­தேஷின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­கிய தமீம் இக்பால் 47ஆவது ஓவர் ­வரை களத்தில் நின்று 127 ஓட்­டங்­களை விளா­சினார். சபீர் ரஹ்மான் (54), சஹிப் அல் – ஹசன் (72) ஆகி­யோரின் சிறப்­பான ஆட்­டத்தால் 50 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 324 ஓட்­டங்­களைக் குவித்­தது.

பின்னர் 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய இலங்கை அணி, சீரான இடை­வெ­ளியில் விக்­கெட்­டுக்­களை இழந்­ததால் 45.1 ஓவர்­களில் 234 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. இதனால் பங்­க­ளாதேஷ் அணி 90 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது.

இலங்கை அணியில் அதி­க­பட்­ச­மாக சந்­திமால் (59), திஸர பெரேரா (55) ஓட்­டங்­களைப் பெற்­றனர். இந்த வெற்­றியின் மூலம் பங்­க­ளாதேஷ் மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் 1–0 என முன்­னிலை பெற்­றுள்­ளது. 

சொந்த மண்ணில் பங்­க­ளாதேஷ் அணிக்­கெ­தி­ராக ஒருநாள் போட்­டி யை தோற்­றி­ருப்­பது இலங்கை அணிக்கு மிகப்­பெ­ரிய அடி. இன் னும் இரண்டு மாதங்­களில் சம்­பியன்ஸ் கிண்ணம் நடை­பெ­ற­வுள்­ளது. பங்­க­ளாதேஷ் தொடரை அதற்­கான பயிற்­சி­ ஆட்­ட­மாகக் கூட எடுத்து ஆடி­யி­ருக்­கலாம்.

ஆனால் இலங்கை அணியின் அச­மந்தப் போக்­கினால் 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ணத்தில் தகுதிகாண் சுற்றில் ஆடி பிரதான சுற்றுக்கு முன்னேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்தத் தோல்வியை பாடமாகக் கொண்டு அடுத்த இரண்டு போட்டிகளையும் இலங்கை அணி வெற்றி கொண்டு தொடரை வெல்லுமா என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆட்ட நுட்பத்தையும் திறனையும் மாற்றிக்கொள்ளுமா இலங்கை அணி? பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/18310

  • தொடங்கியவர்

நாளைய போட்டியில் விளையாடவிருந்த இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை : ஏமாற்றத்தில் ரசிகர்கள்

 

இலங்கை அணியை பொறுத்தவரையில் நாளைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்த்த, நிரோஷன் டிக்வெல்ல விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

a1.jpg

இவர் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் டிக்வெல்ல நாளைய போட்டியில் மட்டுமல்லாது, பங்களாதேஷ் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத நிலைய ஏற்படாலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி கடந்த சில நாட்களாக பிரகாசித்து  வந்த டிக்வெல்ல உபாதையடைந்துள்ளமை இலங்கை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18336

  • தொடங்கியவர்
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்க்கும் இலங்கை அணி
Sri Lanka vs Bangladesh

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்க்கும் இலங்கை அணி

singer-league-2017-728.jpg

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 90 ஓட்டங்களால் படு தோல்வியடைந்திருக்கும் இலங்கை அணியானது நடைபெற இருக்கும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை சமப்படுத்த பூரணமான ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றது.

முதல் போட்டியில் இலங்கை அணியானது பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் மோசமாக செயற்பட்டிருந்த வேளையில் பங்களாதேஷ் அணியானது, ஏனைய வளர்ந்திருக்கும் சர்வதேச அணிகளின் ஆட்டத்தினைப் போல் திறமையாக செயற்பட்டிருந்தது.

இலங்கை

இரண்டாம் ஒரு நாள் போட்டியில் அணிக்குத் திரும்பி முன்வரிசை துடுப்பாட்டத்தினை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிரோஷன் திக்வெல்ல பயிற்சி ஆட்டத்தின் போது, தனது விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படுவது சந்தேகமாகியுள்ளது. இதனால், தனஞ்சய டி சில்வாவிற்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக மோசமான ஆட்டத்தினை காண்பித்திருந்த சில்வா பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்றிருந்த ஒருநாள் பயிற்சிப்போட்டியில் அரைச்சதம் ஒன்றினை விளாசியிருந்தார்.

அதேபோன்று சில்வாவிற்கு பதிலாக (திக்வெல்லவின் ஓய்வினால்) மீண்டும் இலங்கை அணியின் ஆரம்ப வீரராக ஆடும் வாய்ப்பு தனுஷ்க குணதிலகவிற்கு நீடிக்கவும் வாய்ப்புண்டு. இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான ஒரு நாள் தொடரில் அதிக ஓட்டங்களினை குவித்திருந்த வீரரான குணதிலக முதல் போட்டியில் துரதிஷ்டவசமாக ஓட்டம் ஏதுமின்றி வெளியேறியிருந்தார். தனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இரண்டாம் போட்டியில் சாதிப்பார் எனின் தேசிய அணியில் தொடர்ந்து நிலைத்திருக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டும்.

நிரோஷன் திக்வெல்லவிற்கு பதிலாக அணியில் சகல துறை ஆட்டக்காரர் தில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. தில்ருவான் பெரேரா பங்களாதேஷ் அணிக்கு அழுத்தம் தந்த வீரர்களில் ஒருவராவார்.

முதலாவது ஒரு நாள் போட்டியில் இரண்டு வருடங்களின் பின்னர் அரைச்சதம் ஒன்றினைப் பெற்றுக் கொண்டிருக்கும் திசர பெரேராவின் துடுப்பாட்டம் இரண்டாம் போட்டியில் இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். எனினும் அவரது பந்து வீச்சு அவ்வளவு சரியானதாக இருக்கவில்லை. அதே போன்று கடந்த போட்டியில் பந்தினை கையாள்வதில் சசித் பத்திரன சிக்கல்களை எதிர் கொண்டிருந்தார். எனினும், துடுப்பாட்டத்தில் அவர் ஒரு தடுப்பினை வெளிப்படுத்தி இருந்தார். அத்தோடு, இலங்கை அணியின் ஏனைய சகல துறை ஆட்டக்காரரான மிலிந்த சிறிவர்தன மோசமாக செயற்பட்டிருப்பது, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏன் தூய துடுப்பாட்ட வீரர் ஒருவரின் இடத்திற்கு பிரயோஜனம் இன்றிய ஒரு சகல துறை ஆட்டக்காரரை விளையாட வைக்கின்றது எனும் கேள்வியினை எழுப்புகின்றது.

மிலிந்த சிறிவர்தனவின் இடத்திற்கு பதிலாக இலங்கை சகல துறை ஆட்டக்காரர் ஒருவரினை எதிர்பார்க்கும் எனில் தில்ருவான் பெரேராவிற்கு வாய்ப்பு தரலாம்.

பந்து வீச்சு துறையில், முதலாவது ஒரு நாள் போட்டியில் லக்‌ஷான் சந்தகன் மற்றும் சுரங்க லக்மால் சிறப்பானதொரு பந்து வீச்சினை வெளிக்காட்டினர். லக்மால் அன்றைய போட்டியின் போது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக தனது அனைத்து ஓவர்களையும் முழுமையாக வீசத் தவறியிருந்தார்.

அத்துடன் அவரது காயம் சரிவராத நிலையில் இரண்டாம் போட்டிக்காக நுவன் குலசேகர மற்றும்  நுவன் பிரதீப் ஆகியோர் அணிக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் இலங்கை அணியின் பந்து வீச்சினை சரிவர கொண்டு செல்ல வேண்டும்.

அத்துடன் பங்களாஷ் அணி அதிக ஓட்டங்கள் பெறக்காரணமாய் அமைந்திருந்த லஹிரு குமாரவிற்கு பதிலாக விக்கும் சஞ்சயவிற்கு இரண்டாம் போட்டியில் வாய்ப்புத் தரலாம்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை குழாம்:

தனுஷ்க குணதிலக்க/தனஞ்சஞய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, தில்ருவான் பெரேரா, தினேஷ் சந்திமால், திசர பெரேரா, சசித் பத்திரன, நுவன் குலசேகர/நுவன் பிரதீப், விக்கும் சஞ்சய, லக்‌ஷான் சந்தகன்

பங்களாதேஷ்

சனிக்கிழமை நடைபெற்றிருந்த போட்டியில் முழு நிறைவான ஆட்டத்தினை வெளிக்காட்டிய பங்களாதேஷ் அணியினை, அப்போட்டிக்கு முன்பாக இருவாரங்களுக்கு முன்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியுடன் விண்ணுக்கு (மகிழ்ச்சியில்) சென்றிருந்தது. அவ்வணியினை இப்போட்டியின் மூலம் மீண்டும் பூமிக்கு இலங்கை அணி அழைத்து வரும் என நினைத்திருந்த அனைவரது முகங்களிலும் பங்களாதேஷ் அணி மீண்டும் கரியினை பூசியிருந்தது. இவ்வாறாக ஒரு உறுதியான அணியினை கொண்டிருக்கும் பங்களாதேஷ் இரண்டாவது போட்டியில் பாரிய மாற்றங்களை செய்யப் போவதில்லை.

பங்களாதேஷ் அணி இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயற்பட முக்கிய காரணியாக இருப்பது அவர்களின் மாறாத்தன்மையே, முக்கியமாக அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் சீராக ஓட்டங்களினை குவித்து வருகின்றனர். அத்துடன் அவ்வணிக்கு செளம்யா சர்க்கர் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோரும் மேலதிக உறுதியினை வழங்குகின்றனர்.

அத்துடன், அவ்வணியின் பந்து வீச்சு துறையும் கடந்த போட்டியில் விக்கெட்டுகளை சாய்த்திருந்த முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமட் மற்றும் அணித்தலைவர் மசரபி மொர்தஸா ஆகியோரினால் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன், மெஹதி ஹஸனும் பந்து வீச்சுத்துறையினை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்வார். இதனால், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்கு இலகுவாக எந்தவொரு பந்து வீச்சாளரும் இருக்கப் போவதில்லை.

இரு அணிகளுக்கு இடையிலும் வேறுபடுத்தி பார்க்க கூடிய ஒரு முக்கிய விடயம் என்னவெனில் இரு அணிகளதும் களத்தடுப்பு பாணி, கடந்த போட்டியில் இலங்கையின் மோசமான களத்தடுப்பினால் 20 இற்கு மேலான ஓட்டங்கள் எதிரணியினால் பெறப்பட்டிருந்தது. ஆனால், பங்களாதேஷ் அணியினால் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறந்த களத்தடுப்பு மூலம் இலங்கை அணிக்கு முதலாம் போட்டியில் அழுத்தம் வழங்கப்பட்டிருந்தது.

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் அணி

செளம்யா சர்க்கர், தமிம் இக்பால், சபீர் ரஹ்மான், முஸ்பிகுர் ரஹீம், சகீப் அல் ஹஸன், மொசாதிக் ஹொசைன், மஹமதுல்லாஹ், மசரபி மொர்தஸா, மெஹதி ஹஸன், தஸ்கின் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான்

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டஷ்கின் அஹமட் “ஹெட்ரிக்” :  300 ஓட்டங்களை கடந்தது இலங்கை

 

 

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Untitled-2.jpg

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 102 ஓட்டங்களையும், உபுல் தரங்க 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் வீரர் டஷ்கின் அஹமட் தனது முதலாவது ஒருநாள் ஹெட்ரிக் விக்கட்டினை கைப்பற்றியதுடன், 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இவர் இலங்கை இன்னிங்ஸின் இறுதி 3 பந்துகளில் குணரட்ன, லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து குறித்த ஹெட்ரிக்கை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18392

8.45pm That is that. The second ODI has been abandoned in Dambulla. The result now means Bangladesh can't lose the series from here. Sri Lanka have to win at the SSC to square the series. That is all we have for you from this game. Do come back for the third ODI on Saturday. Hope the weather is brighter at your end. Goodbye and good night for now.

Sri Lanka 311 (49.5 ov)
Bangladesh
No result
  • தொடங்கியவர்

குசால் மெண்டிஸின் சதம் வீண் : மழைக் காரணமாக போட்டி கைவிடப்பட்டது!

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது.

000_N23EH.jpg

இந்த போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியதன் பிறகு பெய்த கடும் மழையின் காரணமாக போட்டி இரவு 8.45 மணியளவில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இலங்கை அணி தொடரை சமனிலை செய்வதற்கு அடுத்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18397

  • தொடங்கியவர்

தொடரை பங்களாதேஷ் கைப்பற்றும் : ஹதுருசிங்க நம்பிக்கை

 

 

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க  தெரிவித்துள்ளார்.

260143.jpg

“அணி வீரர்களின் செயற்பாடு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கை அணிக்கு எதிராக நாம் சிறந்த முறையில் செயற்பட்டுவருகின்றோம். இலங்கை அணி சொந்த மண்ணில் மிகவும் சிறப்பாக விளையாடக்கூடியது.

எனினும் தற்போது நாம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றோம். தொடரை கைப்பற்றுவதற்கு  இதுவே சரியான தருணம்.

கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதனையடுத்து அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எதிரணிக்கு கடும் சவாலை விடுக்கும் வகையில் வீரர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது” என்றார்.

http://www.virakesari.lk/article/18499

  • தொடங்கியவர்

Sri Lanka 127/2 (23.3 ov)

  • தொடங்கியவர்

இலங்கை 280 ஓட்டங்கள் : 2 விக்கட்டுகளை இழந்து தடுமாறுகிறது

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும்,  திசர பெரேரா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மஸ்ரபீ முர்தசா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள பங்களாதேஷ் அணி 3 ஓவர்கள் நிறைவில் 10  ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்துள்ளது.

Sri Lanka 280/9 (50.0 ov)
Bangladesh 90/4 (16.2 ov)
Bangladesh require another 191 runs with 6 wickets and 33.4 overs remaining
  • தொடங்கியவர்

70 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியது இலங்கை! (படங்கள்)

Published by Pradhap on 2017-04-01 18:20:06

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

000_N64EM.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும்,  திசர பெரேரா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மஸ்ரபீ முர்தசா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

000_N64BC.jpg

இந்நிலையில் 281 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44.3 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணிசார்பில்  சகிப் ஹல் ஹசன் 54 ஓட்டங்களையும், மெஹிடி ஹாசன் மிராஷ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

000_N64AV.jpg

பந்து வீச்சில் நுவான் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக திசர பெரேரா தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் சிறப்பாட்டக்காரராக குசால் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

000_N63WY.jpg

000_N63Q3.jpg

000_N63OA.jpg

000_N63MS.jpg

000_N63FS.jpg

000_N63EI.jpg

 
 

Tags

http://www.virakesari.lk/article/18592

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.