Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் !

Featured Replies

’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் !

            தினகரன்

டைத்தேர்தல் நடக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கிவிட்டதால்,தொகுதி முழுக்க பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை இல்லாமல்  நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அரசியல் கட்சியான தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதனால் தொகுதி முழுக்க உதயசூரியன் சின்னம் மட்டும்தான் எல்லோரின் கண்களுக்கும் பழகிய சின்னமாக காட்சியளிக்கிறது.மீதியுள்ள சின்னங்கள் எல்லாம் இன்னும் அவ்வளவாக வெளியே காணமுடியவில்லை.இதில் டி.டி.வி.தினகரனின் தொப்பி சின்னமும், மது சூதனின் இரட்டை மின்விளக்கு சின்னமும் பல்வேறு இடங்களில் போஸ்டர் வடிவிலும்,பேனர் வடிவிலும் காண கிடைக்கின்றன.தினகரனின் சார்பில் அவரின் ஆதரவாளர்கள் வைத்துள்ள விளம்பர பேனர்களில் சசிகலா மிஸ்ஸிங். ஆனால் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டும் பளிச்சிடுகின்றன.

ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ள ஊடகங்கள்!  

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுடன் பேட்டி எடுப்பதிலும் அதனை லைவ் செய்வதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் தொலைக்காட்சிகளின் குழுவினர் இப்போது இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகரிலும் முகாமிட்டுள்ளனர்.அரசியல் அரங்கம்,வேட்பாளருடன் ஒருநாள் என்ற பல்வேறு தலைப்புகளில் ஒளிபரப்பு செய்யப்படும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கென பிரத்யேக பேட்டிகள், காட்சிகள் படம் பிடிக்க தொலைக்காட்சிகள் ஆர்.கே.நகரின் கொருக்குப்பேட்டை,தண்டையார்ப்பேட்டை,வ.உ.சி.நகர்,காமராஜ் நகர் என்று பல இடங்களில் குழுமியுள்ளனர்.

                   லோகநாதன்

வட்டமடிக்கும் வெளிமாவட்ட வாகனங்கள்!  

பிரசார நேரங்களில் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.அதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக பிளவுபட்ட நிலையில் நடக்கிறது. இதனால் பிளவு பட்ட அதிமுக பிரமுகர்களால் ஆர்.கே.நகர் நிரம்பியுள்ளது.அதிமுக அம்மா அணி சார்பில் களம் இறங்கியுள்ள டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி , ராமநாதபுரம், சேலம், கும்பகோணம்,திருச்சி என்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளனர்.காலை முதல் மாலைவரை ஆர்.கே.நகரின் எல்லா சாலைகளிலும் வெளிமாவட்ட பதிவெண் கொண்ட கார்கள் நூற்றுக்கணக்கில் அணிவகுத்துச் செல்கின்றன.இதனால் திரும்புகிற பக்கம் எல்லாம் வெள்ளைச் சட்டைகள் தென்படுகின்றன.ஆனால் யாரும் 'சின்னம்மா' குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் கவனமாக வாக்குச் சேகரிக்கிறார்கள் என்கிறார்கள் தொகுதி வாசிகள்.

                மதுசூதனன்

தினகரனை முந்திய மதுசூதனன்!

டி.டி.வி. தினகரன் நாளை மறுநாள்,ஆதி ஆந்திரர்கள் அதிகம் வசிக்கும் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க வருகிறார் என்பதை அறிந்துகொண்ட மதுசூதனன், இன்றே தனது பிரசாரத்தை அந்தப் பகுதிகளில் தொடங்கினார். அதுவும் ஆதி ஆந்திரர்களின் தாய் மொழியான தெலுங்கில் பேசி மதுசூதனன் வாக்குச் சேகரித்தார். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஓட்டுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒன்றாய் இருந்த கட்சியினர் இப்போது இரண்டு மூன்று அணியாய்ப் பிரிந்து ஓட்டு கேட்குறாங்களே'...என்ற குழப்பத்தில் வாக்காளர்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பிரசாரத்தில் இறங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

ஆர்.கே.நகர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.லோகநாதன் தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார்.அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.பி.ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்.கே.நகர் முழுக்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் பிரசார சூடு தகிக்க தொடங்கிவிட்டது.

http://www.vikatan.com/news/politics/84601-all-political-parties-gears-up-for-rk-nagar-bypoll.html

  • தொடங்கியவர்

சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

 
சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்
 

ஆர்.கே.நகர் தொகுதியில் ‘‘இரட்டை இலை’’ சின்னம் இல்லாததை அ.தி.மு.க.வின் இரு அணியினருமே பெரும் குறையாக கருதுகிறார்கள்.

முன்பெல்லாம் அ.தி.மு.க. வினர் ஓட்டு கேட்க செல்லும்போது இரண்டு விரலை ஆங்கில ‘வி’ எழுத்து வடிவில் விரித்து காட்டுவார்கள். அடுத்த வினாடியே அது இரட்டை இலை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இது அ.தி.மு.க.வினருக்கு மட்டுமின்றி வாக்காளர்களுக்கும் மிக, மிக எளிதானதாக இருந்தது.

ஆனால் இன்று ஆர்.கே.நகரில் அத்தகைய சூழ்நிலை இல்லை. அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்தவர்கள் தொப்பியோடு அலைகிறார்கள். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் இரட்டை விளக்கு மின்கம்பத்துடன் சுற்றி வருகிறார்கள்.

தொப்பியையும், மின் கம்பத்தையும் மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அ.தி.மு.வின் இரு அணியினருக்கும் ஏற்பட்டுள்ளது. தொடர் விளம்பரம் மற்றும் இடைவிடாத பிரசாரம் மூலம் தொப்பி, மின்கம்பம் சின்னத்தை மக்களுக்கு தெரியும் வகையில் பிரபலப்படுத்தி விட முடியும் என்று இரு அணியினரும் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சிகளில் அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் நிச்சயம் ஓரளவு வெற்றி கிடைத்து விடும். இதன் காரணமாக மக்களுக்கும் இந்த தடவை இரட்டை இலைக்கு பதில் ஒன்று இரட்டை விளக்கு மின் கம்பத்துக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தெளிவான மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

ஆனால் 12-ந்தேதி ஓட்டு போட போகும் போது அவர்கள் இரட்டை விளக்கு மின்கம்பம் அல்லது தொப்பி சின்னத்தை தேடி திணற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைய பேர் போட்டியிடுவதுதான்.

60-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 4 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட கூடும். ஒவ்வொரு எந்திரத்திலும் தலா 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள்தான் இடம் பெற்றிருக்கும். இப்படி 4 எந்திரங்களிலும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் வரிசையாக இருக்கும்.

இதில் எந்த எந்திரத்தில் எந்த இடத்தில் தொப்பி அல்லது மின்கம்பம் சின்னம் உள்ளது என்பதை அ.தி.மு.க. வினர் தேட வேண்டிய திருக்கும். இந்த சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்களோடு சின்னமாக கலந்து இருக்கும் என்பதால் சாதாரண மக்களை அது திணற வைத்து விடும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் முதலில் இடம் பெறும். இதனால் 2015-ம் மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஆர்.கே.நகரில் தேர்தல்கள் நடந்தபோது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் எந்திரத்தில் முதல் சின்னமாக இருந்தது. வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந் ததுமே பட்டனை அமுக்கி விட்டு வந்து விட்டனர். 12-ந்தேதி அப்படி செய்ய முடியாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னத்தை வரிசைப்படுத்துவதற்காக 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 38-வது பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மூன்று விதமாக வரிசைப்படுத்தப் படுகின்றன.

அதன்படி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் முதலில் இடம் பெறுவார்கள். அந்த வகையில் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் அடிப்படையில் முதலில் வருவார்கள். இவர்களைத் தொடர்ந்து மாநில கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள தி.மு.க. வேட்பாளரின் பெயர் அடுத்ததாக இடம் பெறும். எனவே உதயசூரி யன், தாமரை சின்னங்கள் முதல் மின்னணு எந்திரத்தில் முதலாவதாக உயரத்தில் இருக்கும்.

இரண்டாவதாக தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்து இருந்தும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சி களின் வேட்பாளர் களும், அவர்களது சின்னங்களும் இடம் பெறும். தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சிகள் இந்த வரிசைக்கு வருவார்கள்.

மூன்றாவதாக சுயேட்சை வேட்பாளர்களின் பெயரும் அவர்களுக்குரிய சின்னங்களும் இடம் பெறும். சுயேட்சைகள் அதிகம் உள்ளதால் அவர்களது பெயர்கள் அகர வரிசைப்படி தொகுக்கப்படும்.

அப்போது தினகரன், மதுசூதனன், ஜெ.தீபா ஆகிய மூவரின் பெயரும் சுயேட்சை வேட்பாளர்களில் எத்தனைவது இடத்தில் இடம் பெறும் என்பது தெரியவரும். 4 எந்திரங்களில் அவர்களது பெயர், சின்னம் எந்த எந்திரத்தில், எந்த இடத்தில் இடம் பெறும் என்பதும் தெரிய வரும்.

வாக்காளர்கள் தொப்பி யையும், மின்கம்பத்தையும் தேடி திணறக் கூடாது என்பதற்காக, அந்த சின்னம் இருக்கும் பகுதியை வரைபடம் மூலம் மக்களுக்கு விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த அ.தி.மு.க.வின் இரு அணியினரும் திட்ட மிட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தைப் பொருத்தே வாக்காளர் கள் தொப்பி அல்லது மின் கம்பத்தை தேடி அலையாமல் எளிதில் வாக்களிக்க முடியும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/26132108/1076101/RK-Nagar-byelection-admk-symbol-order-in-independent.vpf

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதியில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிகை 63 பேர்களுக்கு மேலிருந்தால் தற்போதிருக்கும் வாக்கு இயந்திரங்கள் கையாள முடியாது, அதனால் பழமை முறையான காகிதத்தில் புள்ளடி போடும் நடைமுறைக்கு மாறவேண்டியிருக்குமென சமீபத்திய செய்தியில் படித்தேனே..?think_smiley_50.gif

ஒவ்வொரு நாளும் மற்றுபட்ட செய்திகளால் ஒரே குழப்பமாக உள்ளதே..! think_smiley_47.gif

வாக்காளர்கள் ஓட்டுப்போடும் முறை பற்றி தெளிவாக இருந்தால் சரிதான்..!!

  • தொடங்கியவர்

தண்டையார்பேட்டையில் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா?: தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

 

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்ததும் தி.மு.க.வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
தண்டையார்பேட்டையில் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா?: தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
 

ராயபுரம்:

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 23-ந்தேதி முடிவடைந்தது. அ.தி.மு.க. 2 அணியாகவும், தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தீபா பேரவை, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. 8 முணைப்போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினர் முற்றுகையால் பரபரப்பாக காணப்படுகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக வேட்பாளர் மதுசூதனன், மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. இதையடுத்து பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் கமி‌ஷன் தீவர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது.

இதுபற்றி அறிந்ததும் தி.மு.க. வட்ட செயலாளர் குமார் தலைமையில் 100-க் கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் மற்றும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரத்துக்கு பின்னர் பறக்கும்படை அதிகாரிகளும், போலீசாரும் வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து கோவில் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பணம் எதுவும் சிக்கவில்லை. ஒரு நோட்டு மட்டும் சிக்கியது. அதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்களின் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

0D179F85-CD07-41E6-AA51-16703C9F4451_L_s

அங்கிருந்த பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி இவ்வளவு பேர் இங்கு திரண்டு இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, சாமி கும்பிட வந்ததாக மட்டும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தி.மு.க. வினர் கூறும்போது, “ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காகவே பெண்களை இங்கு அழைத்து உள்ளனர். 2 அமைச்சர்களும் அங்கு இருந்தனர். நாங்கள் திரண்டதும் அமைச்சர்கள் வெளியே சென்று விட்டனர்.

புதிதாக கட்டப்பட்டு உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளது. வெற்றி பெற செய்தால் அதனை ஒதுக்கி தருவதாகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

பணப்பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சியினர் மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

தி.மு.க. வினர் கொடுத்த தகவலின் அதே பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரது வீட்டிலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/26162008/1076130/thandayarpettai-temple-cash-Distributed-200-woman.vpf

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்- வாக்குசீட்டு மூலம் தேர்தல்?

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. 63 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. 63-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் வாக்குச் சீட்டு முறை மூலம் தேர்தல் நடைபெறும். தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

 

மருதுகணேஷ்( திமுக), மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா), டிடிவி தினகரன்( அதிமுக அம்மா), மதிவாணன் (தேமுதிக), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்கட்சி), கங்கை அமரன் (பாஜக), தீபா (மேட் பேரவை) உட்பட 70 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாற்று வேட்பாளர்களுடன் மொத்தம் 82 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளை மாலைதான் மொத்தம் எத்தனை பேர் களத்தில் உள்ளனர் என்ற நிலவரம் தெரியவரும்.

63 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/ec-switch-ballot-paper-system-rk-nagar-election-277968.html

  • தொடங்கியவர்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றி,கள்ள ஓட்டுகள்
போட தினகரன் தரப்பு சூழ்ச்சி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

Tamil_News_large_1738770_318_219.jpg

இதன் காரணமாகவே, அதிக சுயேச்சைகள் களமிறங்கி, 127 வேட்பு மனுக்கள் தாக்கலானதாக கூறப்படுகிறது. அத்துடன், வாக்காளர்களுக்கு விதவிதமான முறையில், பணம் கொடுக்கும் வேலைகளிலும், அவரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோவிலுக்குள், பெண்களுக்கு பணம் கொடுக்க முற்பட்ட போது, தி.மு.க., வினர் முற்றுகையிட்டதால், அமைச்சர்கள் ஓட்டம் பிடித்தனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிசம்பர், 5ல் மறைந்ததை அடுத்து, அவர் தேர்வான, ஆர்.கே.நகர் தொகுதியில், அடுத்த மாதம்,12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், தினகரன்; அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன்; தி.மு.க., சார்பில், மருது கணேஷ்; பா.ஜ., சார்பில், கங்கை அமரன்; ஜெ., அண்ணன் மகள் தீபா உட்பட, 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
 

தள்ளுபடி


மனுக்கள் பரிசீலனையின் போது, 70 பேர் சார்பில் தாக்கலான, 82 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். இன்று மாலை, 5:00 மணிக்கு, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலின் படி, வேட்பாளரின் பெயரும், அவரது சின்னமும்

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும்.

ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 வேட்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் சின்னங்கள் மட்டுமே இடம் பெற முடியும். இதன் படி பார்த்தால், ஒரு தொகுதியில், நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இடம் பெறக் கூடிய அளவான,64வேட்பாளர்களில், 63 பேர் களத்தில் இருந்தால் மட்டுமே, ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியும். ஏனெனில், 64ல் ஒரு சின்னமாக, 'நோட்டா' இடம் பெறும்.
 

ஏழு பேர்


அதனால், தற்போதுள்ள, 70 பேரில், ஏழுபேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், ஓட்டுச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்படும். நேற்றைய நிலவரப்படி, எந்த ஒரு சுயேச்சை வேட்பாள ரும், மனுவை வாபஸ் பெறவில்லை. மேலும், தற்போது உள்ள, 70 வேட்பாளர்களில், 25க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தினகரன் துாண்டுதலில் தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுச் சாவடியில், வேட்பாளர் சார்பில், ஒரு ஏஜன்ட் அனுமதிக்கப்படுவார்.

தினகரன் துாண்டுதலில், 25க்கும் மேற்பட்டோர், சுயேச்சையாக போட்டியிட்டால், அவரின் ஆதரவாளர்கள் அதிக அளவில், பூத் ஏஜன்டு களாக, ஒவ்வொரு பூத்களிலும் இடம் பெற வாய்ப்பு உருவாகும். இதன் மூலம், பூத்களை கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், கள்ள ஓட்டு போட சூழ்ச்சி செய்துள்ள தும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், 63க்கும் மேற்பட்டோர் வேட்பாளர் களாக இருந்தால், ஓட்டுச்சீட்டு முறையில், ஓட்டுப்பதிவு நடக்கும்; அது, கள்ள ஓட்டுகள் போட மிகவும் வசதியாக இருக்கும் என்பதும், தினகரன் ஆதரவாளர்களின் கணிப்பு.
 

அமைச்சர்கள் ஓட்டம்


இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு,

 

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிலில், பெண்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது.உடன், தி.மு.க., வட்டச் செயலர் குமார் உட்பட, கட்சி நிர்வாகி கள் திரண்டனர். அப்போது, கோவிலின் உள்ளே, அமைச்சர் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததை பார்த்ததும்,வெளி கதவை மூடிவிட்டு, தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பிற கட்சிகளின் நிர்வாகிகளும் அங்கு குவிந்தனர். தேர்தல் அதிகாரிகள் வருவதற்குள் சுதாரித்த அமைச்சர்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள், கோவிலின் மற்றொரு வாயில் வழியாக, தப்பி ஓடினர்.தேர்தல் அதிகாரிகள் வந்து, கோவிலில் சோதனை செய்த போது, நோட்டுப் புத்தகம் ஒன்று சிக்கியது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், அவர்களின் மொபைல் போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருந் தன. இதன் மூலம், பெண்களுக்கு, பணம் பட்டு வாடா செய்து, ஓட்டுகளைப் பெற திட்ட மிட்டதும் தெரிய வந்தது.

இதுபோல, தினகரன் தரப்பினர், விதவிதமான முறைகளில், தொடர்ந்து பணம் வினியோகம் செய்து வருவதாகவும், போலீசார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் பல தரப்பினரும் புகார் செய்துள்ளனர்.
 

போலீஸ் உதவியுடன் பணம்பட்டுவாடா: மதுசூதனன் பகீர்


காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள, விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகளிடம், மதுசூதனன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வரா னதும், மீனவர்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும். ஜெ., சொத்துகளை மீட்போம். தேர்தல் கமிஷன், ஒருதலை பட்சமாக செயல் படுகிறது.வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்ய,தண்டையார் பேட்டை, புது வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர்கள், தினகரனின் ஏஜன்டுகளாக செயல்படுகின்றனர்; அவர்கள் மீது புகார் செய்யப்படும்.இவ்வாறு மதுசூதனன் பேசினார். - நமது நிருபர்கள் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1738770

  • தொடங்கியவர்

சசிகலா அணி அமைச்சர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு!

udumalai radhakrishnan- udhaya kumar

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு சசிகலா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பணம் கொடுப்பதாக, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தி.மு.க புகார் அளித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். தி.மு.க, அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொகுதி முழுவதும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னர் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் இன்று புகார் அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி இல்லை. இதனால், அவரது அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். மேலும், டெல்லி தலைமைத் தேர்தல் அலுவலகத்திலும் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்படும் என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/84678-d-m-k-lodges-complaint-against-ministers-radhakrishnan-and-udhaykumar-stating-bribe-at-r-k-nagar.html

  • தொடங்கியவர்

500 ரூபாய்க்கு ஆர்.கே.நகரில் ஆரத்தி!  -  போட்டி போடும் பெண்கள் 

தினகரன்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தால், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்சியினர் கொடுக்கின்றனர். இதனால், ஆரத்தி எடுக்க பெண்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. 

 ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது.  வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அ.தி.மு.க உள்கட்சி பூசலால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகள் உருவாகின. இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடுசெய்துள்ளது. 
இந்தச் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு வாக்குசேகரிக்க கட்சியினர் பெருந்திரளாகக் களமிறங்கியுள்ளனர்.  தொப்பி அணிந்த கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் பிரசாரத்துக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொப்பி அணிந்துகொண்டு, தொகுதி முழுவதும் சசிகலா அணியினர் வலம் வருகின்றனர். பிரசார வாகனத்தில் தொப்பி அணிந்தபடி டி.டி.வி.தினகரனும் வாக்கு சேகரித்துவருகிறார்.  
பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், வயதுமுதிர்ச்சி காரணமாக அடிக்கடி சோர்ந்துபோனாலும், மக்கள் கூட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். வாக்குசேகரிப்பின்போது, தொகுதி மக்களின் பெயர்களைச் சொல்லி அழைக்கிறார். இது, அவருக்குப் பிளஸ்பாயின்ட்டாக  இருக்கிறது. 

 தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷனுக்கு, உதயசூரியன் சின்னம் பலமாகக் கருதப்படுகிறது. தி.மு.க. ஓட்டுக்கள் அப்படியே விழும் என்பதால், அது தங்களுக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தும் என்று தி.மு.க-வினர் கருதுகின்றனர். அதோடு, மருதுகணேஷுக்குப் பத்திரிகையாளர் என்ற அடையாளம் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. தொகுதியில் உள்ள பிரச்னைகளைப் புள்ளி விவரங்களுடன் பிரசாரத்தின்போது சொல்கிறார். 

ttv_14060.jpg


 ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்தை நம்பிக் களமிறங்கிய தீபாவுக்கு, பல்வேறு சவால்கள் தொகுதியில் காத்திருக்கின்றன. அவர், தொடங்கிய எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, கோஷ்ட்டி பூசலில் சிக்கித் தவிப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடு பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதுவும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்கின்றனர். தீபாவை ஆதரித்தவர்களைச் சரியாக அவர் அனுசரித்துச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் மேலோங்கி நிற்கிறது. இதுபோன்ற சிக்கல்களைத் தாண்டி, அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

 உத்தரப்பிரதேச மாநில மெகா வெற்றிக்குப் பிறகு, பா.ஜ.க., ஆர்.கே.நகர் தொகுதியில் உற்சாகத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது. மக்களிடையே அறிமுகமான கங்கைஅமரன், தொகுதியில் உள்ள பிரச்னைகளை எளிய முறையில் மக்களிடம் எடுத்துச் சொல்லி, ஓட்டு கேட்டு வருகிறார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தேர்தல் வியூகத்தின்படி, பா.ஜ.க-வினர் ஆர்.கே.நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர, தே.மு.தி.க வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன் உள்பட சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

 ஓட்டு கேட்டுச் செல்லும் இடங்களில், வேட்பாளர்களைப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு அன்பளிப்பு கொடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆர்.கே.நகரில் ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வேட்பாளர்கள், நேரடியாக அன்பளிப்புக் கொடுக்காமல், கட்சியினர் மூலம் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மறைமுகமாகக் கொடுக்கின்றனர். இதனால், ஆரத்தி எடுக்கவே ஆர்.கே.நகர் தொகுதி பெண்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தகையப் பெண்கள், கட்சி வேறுபாடின்றி வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்குரிய அன்பளிப்பை, கட்சியினரிடமிருந்தும் பெண்கள் பெற்றுக்கொள்கின்றனர். இதைக் கட்டுப்படுத்தவேண்டிய தேர்தல் அதிகாரிகள், அதை வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/84675-rk-nagar-bypoll-are-women-receiving-cash-for-arthi.html

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2017 at 4:43 AM, ராசவன்னியன் said:

தொகுதியில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிகை 63 பேர்களுக்கு மேலிருந்தால் தற்போதிருக்கும் வாக்கு இயந்திரங்கள் கையாள முடியாது, அதனால் பழமை முறையான காகிதத்தில் புள்ளடி போடும் நடைமுறைக்கு மாறவேண்டியிருக்குமென சமீபத்திய செய்தியில் படித்தேனே..?think_smiley_50.gif

ஒவ்வொரு நாளும் மற்றுபட்ட செய்திகளால் ஒரே குழப்பமாக உள்ளதே..! think_smiley_47.gif

வாக்காளர்கள் ஓட்டுப்போடும் முறை பற்றி தெளிவாக இருந்தால் சரிதான்..!!

சில சுயேச்சைகள் வேட்புமனுவை "திரும்ப" பெறவும் tw_blush: எண்ணிக்கை இப்போது 62 ஆகிவிட்டதாம்.. :cool:

  • தொடங்கியவர்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தலில் போட்டியிடுவோர், 62 பேர். இவர்களில், ஜெ., மருமகள் தீபாவுக்கு, படகு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
 

 

Tamil_News_large_1739443_318_219.jpg

கடைசி நேரத்தில், எட்டு பேர் வாபஸ் பெற்றதால், இயந்திர ஓட்டுப்பதிவு உறுதியாகி உள்ளது. யாருக்கு வெற்றி என்பதில், பலத்த போட்டி இருப்பதால், பண மழை கொட்டும் என, வாக்காளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ஜெயலலிதா மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச், 16ல், வேட்பு மனு தாக்கல் துவங்கி, 23ல் நிறைவு பெற்றது. அரசியல் கட்சிகள், ஓட்டுச்சாவடிகளில் தங்கள் ஆட்கள் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக, சுயேச்சை களாக சிலரை களம் இறக்கின. அதன் காரணமாக, மொத்தம், 127 வேட்பு மனுக்கள் தாக்கலாகின.

70 மனு ஏற்பு



கடந்த, 24ம் தேதி நடந்த வேட்பு மனு

பரிசீலனையில், 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதில், மாற்று வேட்பாளர்கள் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து, மொத்தம், 70 வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டது.
வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், நேற்று மாலை, 3:00 மணி வரை, வாபஸ் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள்எண்ணிக்கை, 63க்குள் இருந்தால், ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்த முடியும். இல்லையெனில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும் நிலை வரலாம் என, கூறப்பட்டது.
இந்நிலையில், கட்சிகளுடன் பேசிய தேர்தல் அதிகாரிகள், சுயேச்சைகள் சிலரை வாபஸ் பெறும்படி வலியுறுத்தினர். அதனால், எட்டு சுயேச்சை வேட்பாளர்கள், நேற்று மனுவை வாபஸ் பெற்றனர்.மாலை, 3:00 மணிக்கு மேல், சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கும் பணி துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, இப்பணி நிறைவு பெற்றதும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம், 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எனவே, நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜெ., மருமகள் தீபாவிற்கு, படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வினர் இரண்டாக பிளவுபட்டு, எதிரும் புதிருமாக

 

நிற்கின்றனர்.
 

கட்டாயம்


யாருக்கு மக்கள் செல்வாக்கு என்பதை, நிரூபிக்க வேண்டிய கட்டாயம், இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., பிளவுபட்ட சூழலில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், தி.மு.க.,விற்கும் உள்ளது. இந்த தேர்தல் முடிவு, அரசியலிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ளனர். அதனால், வாக்காளர்களும், பண மழை கொட்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
 

3 தினகரன்; 2 மதுசூதனன்!


இந்த தொகுதியில், ௨௦௧௬ சட்டசபை தேர்தலில், 45 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை, 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள். மொத்த வேட்பாளர்களில், 49 பேர் சுயேச்சைகள்; மற்றவர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
வாக்காளர்களிடம் பெயர் குழப்பம் ஏற்படுத்த, முக்கிய கட்சி வேட்பாளர்களின் பெயரில், சுயேச்சை வேட்பாளர்களை களம் இறக்குவது வாடிக்கை. அந்த வகையில், ஆர்.கே.நகரில், மூன்று தினகரன்; இரண்டு மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1739443

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.