Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய ‘டெபி’ புயல்: ஆஸ்திரேலியாவில் கடும் எச்சரிக்கை

Featured Replies

மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய ‘டெபி’ புயல்: ஆஸ்திரேலியாவில் கடும் எச்சரிக்கை

 

 
படம்.| பிபிசி.
படம்.| பிபிசி.
 
 

மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய காற்றுடன் ‘டெபி’ புயல் தாக்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாகாண கடற்கரை ஊர்களிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பீதியில் வெளியேறியுள்ளனர்.

மற்றவர்கள் அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்து வருகின்றனர், இவர்களையும் அவ்விடத்திலிருந்து அகற்ற அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

செவ்வாயன்று வடகிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ‘டெபி’ புயல் 4-ம் எண் புயற்காற்று என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2011 யாசி சூறாவளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவைத் தாக்கும் பயங்கரமான புயல் இது என்று கருதப்படுகிறது. யாசி புயலினால் வீடுகளும், பயிர்களும், தீவு சுற்றுலாப் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

டவுன்ஸ்வில் பகுதியில் சுமார் 3,500 பேர் வெளியேற்றப்பட்டனர், அதே போல் போவென் பகுதியிலிருந்து 2000 பேர் வெளியேறுகின்றனர். ‘வெளியேற வாய்ப்பும், கால நேரமும் நெருங்கி வருகிறது, இப்போதே வெளியேறினால் நல்லது’ என்று குவீன்ஸ்லாந்து மாகாண தலைவர் அனாஸ்டேசியா பலாசுக் என்பவர் எச்சரித்துள்ளார். இது மிகவும் மோசமான புயல் என்று நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

அபாட் பாயிண்ட் நிலக்கரி முனையம், மெக்காய் மற்றும் ஹே பாயிண்ட் துறைமுகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில் விமான நிலையம் மூடப்பட்டது. பல விமான நிறுவனங்கள் திங்கள், செவ்வாய் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன.

கனமழை மற்றும் பயங்கரக் காற்றினால் அங்கு பயிராகும் வாழைப்பழங்களுக்கு கடும் சேதம் ஏற்படும் என்று தெரிகிறது.

http://tamil.thehindu.com/world/மணிக்கு-300-கிமீ-வேகத்துடன்-கூடிய-டெபி-புயல்-ஆஸ்திரேலியாவில்-கடும்-எச்சரிக்கை/article9602158.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை மிரட்டும் புயல்: வடபகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

 

ஆஸ்திரேலியாவை புயல் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், அந்நாட்டின் வடக்கு பகுதியான குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 
 
ஆஸ்திரேலியாவை மிரட்டும் புயல்: வடபகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
 
சிட்னி:
 
ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குவின்ஸ்லாந்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 140 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் பலத்த காற்றுடன் மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் உட்பட குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் 
வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியேறுவதற்காக ரெயில் போக்குவரத்து 
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நாளை(செவ்வாய்கிழமை) புயல் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வானம் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. 
 
C8B57959-F92A-4822-90EC-62B99363BE15_L_s
 
முன்பு இல்லாத அளவில் மக்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுவது தற்போது தான் நிகழ்வதாக குவின்ஸ்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சுமார் 3500 பேர் ஹோம் ஹில் பகுதியில் பிரோசர்பின் நகருக்கும், கடற்கரை பகுதியான போவெனில் இருந்து, பலஸ்ஜுக்குக்கு 2 ஆயிரம் மக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
E9CFC427-79F2-40BF-9632-EBF4B76AB408_L_s
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/27224916/1076434/Australia-Thousands-evacuated-as-monster-cyclone-bears.vpf

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்

 

 

அவுஸ்திரேலியாவில் “டெபி“ புயல் தாக்குமென, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

8389912-3x2-700x467.jpg

இதுவரை 3500 க்கும் மேற்பட்டோர், அபாயமிக்க பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

42048341_-_26_03_2017_-_australia_cyclon

மணிக்கு 300  கிலோ மீற்றர் வேகத்தில் இப்புயல் வீசவுள்ளது. இப்புயல் காற்றினால் அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பெரும் தாக்கம் ஏற்படலாமெனஇ அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017-03-26T035228Z_1867152441_RC14EFE96A

குறிப்பாக குயின்ஸ்லாந்து பகுதியில் பெரும் தாக்கங்கள் ஏற்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றை தொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்படலாமெனவும், மக்கள் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

95096936.jpg

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாண கடற்கரையை அண்மித்துள்ள பகுதிகளில் இருந்து  சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

170326224630-australia-cyclone-debbie-ch

செவ்வாயன்று வடகிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ‘டெபி’ புயல் 4 ஆம் எண் புயற்காற்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2011 யாசி சூறாவளிக்குப் பிறகு அவுஸ்திரேலியாவை தாக்கும் பயங்கரமான புயல் இது என்று கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

1490578473647.jpg

cycolej-kyXF--621x414_LiveMint.jpg

http://www.virakesari.lk/article/18361

  • தொடங்கியவர்

ஆரம்பித்தது டெபி சூறாவளியின் தாக்கம்! மூன்றாம் நிலையாக அறிவிப்பு! (video)

 

 

 

அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில், ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டபடி டெபி சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் 260 கிலோமீற்றர் வேகத்தில் வீசிவரும் சுழல் காற்றால் வீடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. கடல் அலைகளும் அச்சுறுத்தும் நிலையில் வீசி வருகின்றன.

4_V_Australia_Debbie.jpg

நான்காம் நிலைச் சூறாவளி எனக் குறிப்பிடப்பட்ட டெபி, சிறிது நேரத்தில் அதியுச்ச ஆபத்து நிலையான ஐந்தாம் நிலைக்கு மாறுமோ என்ற அச்சமும் தோன்றியிருந்தது. எனினும், சிறிது நேரத்துக்கு முன் அதன் வேகம் சற்றுக் குறைந்ததால், மூன்றாம் நிலைச் சூறாவளியாக நிலை மாறியிருக்கிறது. 

குவீன்ஸ்லாந்தின் வட பகுதி தொலைதூர நகரங்களை டெபி சூறாவளி தாக்கலாம் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததால், உயிர்ச் சேதங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. குவீன்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனில், சூறாவளியால் சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேகமாகச் சுழன்றடித்த காற்றினால் கரையோர நகரங்கள், துறைமுகங்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகின. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொலைத் தொடர்பு மற்றும் மின்சாரம் என்பன முற்றாகச் செயலிழந்துவிட்டன. 

தற்போது மூன்றாம் நிலைச் சூறாவளியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் டெபி, நாளை காலை குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/18376

  • தொடங்கியவர்

தத்தளிக்கும் குவீன்ஸ்லாந்து: டெபி சூறாவளியை அடுத்து பெரும் வெள்ள அபாயம்! (படங்கள் இணைப்பு)

 

 

டெபி சூறாவளியால் அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து கடும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், சூறாவளியின் எதிரொலியால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், சுமார் 40 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

4_V_Debbie_1.jpg

கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பித்த டெபி சூறாவளி, நான்காம் கட்ட சூறாவளி நிலையை எட்டியது. இந்த அதிதீவிர சூறாவளியால் குவீன்ஸ்லாந்து முழுமையாக முடக்கப்பட்டது. சுற்றுலா விடுதிகள் சரிந்து விழ, தொடர்பு சாதனங்கள், மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையையடுத்து பெரும்பாலான குவீன்ஸ்லாந்து மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறியமையால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது.

4_V_Debbie_2.jpg

நேற்று புதன்கிழமை சூறாவளியின் வேகம் சற்றுக் குறைந்தபோதும், இரவு மீண்டும் வேகம் கூடியது. சூறாவளியால் கொட்ட ஆரம்பித்த கடும் மழை இன்னும் தொடர்கிறது.

4_V_Debbie_4.jpg

இதையடுத்து, குவீன்ஸ்லாந்தின் மேட்டு நிலப் பகுதிகள் உட்படப் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.

4_V_Debbie_3.jpg

குவீன்ஸ்லாந்தின் அண்டை மாகாணமான நியூசௌத் வேல்ஸ் பகுதியின் லிஸ்மோர் நகரிலும் டெபியின் தாக்கம் பரவியுள்ளது. அங்குள்ள தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரத் தொடங்கியுள்ளனர். கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டதே இதற்குக் காரணம்.

4_V_Debbie_5.jpg

டெபி சூறாவளிக்கு ஒரு பெண் சுற்றுலாவாசி பலியாகியுள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

4_V_Debbie_6.jpg

http://www.virakesari.lk/article/18494

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.