Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழா ஓடி வந்து படி....

Featured Replies

''இலங்கை வாழ் தமிழர் வரலாறு.....''

தமிழா ஓடி வந்து படி....

இந்த நூல் பல வரலாற்று சான்றுகளை பகிர்கிறது

கௌதம புத்தர் இலங்கைக்கு 3 முறை விஜயம் செய்ததாகவும்

அதில் தமிழ் மன்னர்கள் இருவர் சண்டை செய்யும் போது

அவர்களை சமதான படுத்தி போனதாகவும் சொல்கிறது...

இதில் சில முரன்பாடுகள் எனக்கு உள்ளது..ஏனெனில் விநாசி தம்பி

எழுதிய இவ்வாறான புத்தகத்திற்க்கும் இவருடைய கருத்தியிலுக்கும் அல்லது

சான்றுகளில் சில முரன்பாடுகள் தோன்றுகின்றன...

எது எப்படியோ தமிழர் வரலாற்றை பறைசாற்றும் ஒரு ஆவனமாக

இந்ந நூல் அமைகிறது..

ஆனால் இதில் இவர் தனது முடிவிற்கேற்றவாறு அல்லது விளங்குதலின் அடிப்படையிலும்

சிலவற்றை புகுத்தியுள்ளரா என்ற சந்தேகம் எழுகிறது.

அத்துடன் இதில் பல பழமை வாத துள்ளியமானதும் கடினமானதுமான தமிழ்

சொற்க்கள் புகுத்தப்பட்டுள்ளன.

இதை எழுதியவர்- பேராசரியர் கணபதிபிள்ளை

ஒவ்வொரு ஈழ தமிழனும் இதை கற்றறிய வேண்டும்

எனவே தமிழா வா படி உன் வரலாற்றை அறி..

களமேறி வந்து வாதாடு..கருத்து வை சந்தேகம் தீர்...

பிறரிடம் கருத்தை கேட்டு உன் சந்தேகம் களை..

சரி..இனி வரலாற்றுக்குள் நுழைவோம்....

''சரித்திர காலத்துக்கு முந்திய யாழ்ப்பாணம்''

இராமாயணத்தினின்று இலங்கை இராவணனால் அளப்பட்டு வந்த நாடு

என அறிகிறோம். இராவணன் அசுர வமிசத்தைச் சேர்ந்தவன்.

ஆரியர் இந்தியாவிற்க்கு வந்தபோது தாசர் என்னுஞ் சாதியரோடு போராடினர் என

இருக்கு வேதம் முதலியவற்றால் அறிகின்றோம்.

அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நாகசாதியினரையே ஆரியர்'' அசுரர்''

என்றும் '' தாசர்'' என்றும் அழைத்தனர் என்பது அறிஞர் கருத்து. நாகர் என்னும்

பெயர் வேதங்களில் வழங்கப்படவில்லை. எனினும் இருக்கு வேதத்தில் அசுரர் அல்லது தாசரைப்

பேசுமிடத்து ''அகி'' ( பாம்பு) என்ற சொல் வருகின்றது.

விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தினால் அடித்த போது வெட்டி வீழ்த்தப்பட்ட

மரம் போல் அகி என்பவன் வீழந்து கிடந்தான்.

இதினின்றும் பிற சான்றுகளினி;ன்றும் நாகரை அசுரரென அழைத்தல் வழக்கமாய்

இருந்ததெனத் தெரிகின்றது.

அடுத்து புராண காலத்தில் நாக அரசர்கள் கடலுக்குக் கீழேயுள்ள பாதளத்திலிருந்து

அரசாண்டனர் எனப் புராணங்கள் கூறும். இக்குவாகுவின் மகனான அரியாசவன் என்பான்

மகள் யாதுவை தூயவர்மன் எனும் நாக அரசன்

கடலுக்கு கீழேயுள்ள நாட்டிற்க்குக் கொண்டு சென்றான் எனவும்.

அந்நாட்டின் பெயர்'' இரத்தினத்துவீபம்'' எனவும் அந்நாட்டிலுள்ளோர் நாவாய் பல வைத்திருந்தனர் எனவும்

அவர் கடல் வணிகஞ் செய்தனர் எனவும் முத்துகுளித்தனர் எனவும் அரிவமிசம் என்னும்

புராண நூல் நவிலும்.

அசுரர் என்பார் திரவிடரென ஆராய்ச்சியாளர் முடிபுக்கு வந்திருக்கின்றனர்.

கௌதம புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்ததாக மகாவமிசம் கூறும்.

முதன் முறை மகியங்கனை என்னும் இடத்திற்க்கும்.

இரண்டாம் முறை நாகதீபத்திற்க்கும். மூன்றாம் முறை கலியாணி என்ற பெயருடைய

களனி என்னும் இடத்திற்க்கும் வந்தார் எனவும். நாகதீபத்திலும் கலியாணியிலும்

நாகர் வசித்தனர் எனவும்.

நாக தீபத்திலுள்ள அரச குடும்பததில் அரசு கட்டில் ஒன்றன் பொருட்டாக ஏற்ப்பட்ட

குழப்பத்தைத் தீர்பதற்காக வந்தார் எனவும் அந்நூல் நவிலும்.

மேலும் நாகதீபத்தில் உள்ள அரச குடும்பத்தின் உறவினர் கலியாணியில்

இருந்தனரெனவும் அப் பாளி நூல் கூறும்.....!

தொடரும்..- 02

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூல் பற்றி அறியத்தந்தமை மகிழ்ச்சி.

இதைப்பற்றி அறியவும் ஆசை.

இந்த நூல் எந்த காலப்பகுதியில் எழுதப்பட்டது எண்டு சொல்லுவீங்களா?

  • தொடங்கியவர்

வணக்கம்..

கறுப்பி அக்கா...எங்கு பார்த்தாலும் ஓடி வந்து தனது எண்ண கருத்துகளை

பகிர்ந்த தெரியாததை nதிரிந்து கொள்ள நினைக்கும் தங்களிற்க்க எனது

விசேட நன்றிகள்...''

சரி..இனி தாங்கள் கேட்ட கேளவி;களிற்க்கு

ஆவணத்தில் உள்ளவற்றை அப்படியெ தருகின்றொம்...

படித்தறியுங்கள்....

தலைப்பு.....இலங்கை வாழ் தமிழர் வரலாற...

ஆசிரியர்..- க. கணபதிப்பிள்ளை

பதிப்பு...- 2003

வெளியிடு..குமரன் பதிப்பகம். கொழும்பு

தொ.பே.. - 421388

முதல் பதிப்பின் மன்னுரை...

விளக்கம் இதில்....

ஈநழ நாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அரசரின் வரலாற்றை சுரக்கமாக எடுத்துக்

கூறுகிறது இந்நூல். கி.பி.1519 முதல் கி.பி. 1565 வரை யாழ்பாணத்தை அரசாண்ட சங்கிலி என்பவனைத்

தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும் நாடக நூலின் ஒரு பகுதியாக அமைந்த இவ்வரலாற்றைப்

பற்றிய விhவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளி வரும்.

க.கணபதிப்பிள்ளை

பல்கலைக்கழகம்

பேராதனை

20-08-1956

இன்னும் விளக்கம் வேணுமென்றால் அவர்களின் மன்னுரைகளை தருகின்றோம் அதை படியங்கள் ...

நன்றி ..

  • தொடங்கியவர்

தொடர் - 02

பண்டைக்காலத்தில் வட இலங்கை கிரக்கே

உரோமர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.

இந்த உண்மை அங்கு கண்டெடுத்த கிரேக்க-

உரோம நாணயங்களினால் தெரிகின்றது.

நாகதீபெமென்னும் பகுதி எங்குள்ளதெனச் சரித்திர ஆராய்ச்சியாளர்

தடுமாறியிருக்கையில் செப்போட்டுச் சாசனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அதன்படி வட இலங்கையே பண்டைக் காலத்தில் நாகதீப மெனக் குறித்தனர்

எனத் தெரிந்தது.

விசயன் பிறப்பதற்க்கு முன்னரேயே நாகதீபம் ( வட இலங்கை)

மிகவும் செழிப்புள்ள பெரிய வணிகத்தலமாக விளங்கியது.

பின்னர் இவ்வடபகுதியில் வாழ்ந்த நாகசாதியினர் காலத்தக்குக் காலம்

தமிழரோடு கலப்பாராயினர்.

அதனால் அண்மையிலிருக்கும் தமிழகத்திலிருந்து பல குடிகள் வந்திறங்கின. காலப்போக்கில்

வட இலங்கை தமிழர் குடியிருப்பாக மாறியது.

பல்லவ காலத்தில் வாழ்ந்த சைவ நாயன்மார் இலங்கையின் வட பகுதியிலுள்ள

திருக்கேதீச்சரம். திருகோணமலை ஆகிய தலங்களைப் பாடியிருப்பதும்

இங்கு நோக்கத்தக்கது.

சைவ சமயத்தை மேற்கொண்டொழுகிய தமிழர் இப்பகுதிகளில் வாழ்ந்தனர்

என்பது இதனால் அறியப்படுமன்றோ...!

இதுவரை பெரும்பாலும் புராண வரலாறுகளைக் கொண்டும் மகாவமிசத்தில் சொல்லப்பட்ட

வற்றைக் கொண்டும் கர்ணபரம்பரைக் கதைகளைச் சேர்த்தும் ஒருவாறு இப்பகுதியின்

பழயை வரலாற்றைத் தொகுத்துக் கூறினோம்.

இனி பிற சரித்திரச் சான்றுகளின் துணைக்கொண்டு பிற்கால

வரலாற்றினை ஒருவாறு ஆராய்வோம்.

உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை...

பண்டைக் காலத்திலே இலங்கை நாக சாதியின் குடியிருப்பாக இருந்த காலத்த

சிங்கைபுரம் அல்லது சிங்கை நகர் என்று பெயர் கொண்டு விளங்கிய நகரத்திலே

கலிங்க தேசத்திலிருந்து வந்து குடியெறிய குடும்பங்கள் சில வாழ்ந்த வந்தன.

உத்தர பிரதேசமென்று மகாவமிசம் குறிப்பிடும்

இப்பகுதியல் தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய

தமிழ்க் குடும்பங்கள் பல வாழ்ந்து வந்தன.

இக்காலப் பகுதியில் சிங்கள அரசர்கள் அனுராதபுரத்தைத்

தலை நகராகக் கொண்டு இலங்கையின் பிற பகுதிகளை ஆண்டு வந்தனர்.

மகாவமிசம் எடுத்து மொழிந்த அரச பரம்பரையின் வரலாற்றைத் தொடர்ந்து கூறும்

குளவமிசம் மேலும்'' ஆறு இராசாக்கள் காலம்'' என்னும் பிரிவில் இவ்வுத்தரப் பிரதேசத்தில்

கலகங்கள் துறைக்கு முறையெழுந்தன வெனவும்.

அவற்றை அனுராத புரத்திலிருந்தாண்ட அரசரின் சேனைகள் அங்க போய் அடக்கி வந்ததெனவும்

இயம்பும். சீலமேகன் என்னும் சிங்கள அரசன் மகன் மகிந்தன் என்பான் மாதோட்டத்தில்

எழுந்த புரட்சியை அடக்கி உத்தரதேசத்தைத் தனது ஆணைக்குள் ஆக்கினான் என அந்நூல் கூறும்.

ஈண்டு குறிப்பிடுங் காலத்தில் கலிங்க தேசத்தினின்று வந்து வட இலங்கையிற் குடியேறிய

குடும்பங்களக்கு உக்கிரசிங்கனென்பான் தலைவனாக இருந்தன் என ஊகிக்கக் கிடக்கின்றது.

இவனைக் குறித்த யாழ்ப்பாண வைபவமாலையும். கைலாயமாலையும் எடுத்து மொழியுமே-

யன்றித் தென்னிந்திய வரலாறோ சூளவமிசமோ கல்வெட்டுக்களோ யாதுங் கூறா.

குறித்த உக்கிரசிங்கன் தன் காலத்து வாழ்ந்த ஏனைய உத்தரதேசத் தலைவரோடு சேர்ந்து

அனுராதபுரத்திலிருந்தாண்ட சிங்கள அரசருக்கெதிராகக் கலகங்கள் விளைத்துத் திரிந்தான்

என எண்ண இடமுண்டு.....!

தொடரும்...- 03

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து தாருங்கள்.பலர் நினைவுபடுத்திக்கொள்ள,தெரிந்

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டதற்கு உடனே பதில் பகிர்ந்தமைக்கு நன்றி வன்னி மைந்தன்

நன்றிகள் வன்னி மைந்தன் தொடருக்கு..எனக்கு கீழ் வரும் வசனங்களில்சில முரண்பாடு காஆப்படுகின்றன்னா என எண்ண தோன்றுகின்றது.நாகர் என்பவர் யார்?? புத்தர் இலங்கைக்கு முதன் முதலாக்க மகியங்கனைக்கு வந்ததாக வரலாறு அதன் பின் நாக அரசர்களுக்குள் இருந்த பிணக்கை தீர்க்க வந்ததாகவும் முகில்களை வரவழைத்து அவர்களை பயமுறுத்தியதாகவும் மகாவம்சம் கூறுகின்றது.ஆக நாகர் யார்.தமிழர்களா???.

விசயன் பிறப்பதற்க்கு முன்னரேயே நாகதீபம் ( வட இலங்கை)

மிகவும் செழிப்புள்ள பெரிய வணிகத்தலமாக விளங்கியது.

பின்னர் இவ்வடபகுதியில் வாழ்ந்த நாகசாதியினர் காலத்தக்குக் காலம்

தமிழரோடு கலப்பாராயினர்.

அதனால் அண்மையிலிருக்கும் தமிழகத்திலிருந்து பல குடிகள் வந்திறங்கின. காலப்போக்கில்

வட இலங்கை தமிழர் குடியிருப்பாக மாறியது.

பல்லவ காலத்தில் வாழ்ந்த சைவ நாயன்மார் இலங்கையின் வட பகுதியிலுள்ள

திருக்கேதீச்சரம். திருகோணமலை ஆகிய தலங்களைப் பாடியிருப்பதும்

இங்கு நோக்கத்தக்கது.

அதில் தமிழ் மன்னர்கள் இருவர் சண்டை செய்யும் போது

அவர்களை சமதான படுத்தி போனதாகவும் சொல்கிறது

  • தொடங்கியவர்

வணக்கம்... ஈழவன்

நான் கற்றறிந்த கேட்ட வற்றில்

நாகர் என்பவர்கள் தமிழர்கள் அல்லர் என்றும் ஆனால் அவர்களோடு

அவர்கள் பேசிய மொழிNயுhடு தமிழ் கலப்பு இருந்தமையினால்

அவர்களை தமிழர்கள் என சொல்லாகினர்...

இதனை பல வரலாற்று துறை ஆசிரியர்களும் தொல் பொருள்

ஆராய்ச்சியாளர்களும் கூறியுள்ளனர்..ஆனால் நாகரை தமிழர் என அவர்களால்

உறுதி பட கூற முடியவில்லை...

இதனை அண்மையில் தமிமீழ வரலாற்று துறை ஆசியரியர்

யோகி யோகரட்ணம் கூட கூறி உள்ளார்.

இது இன்னும் தீர்க்கப்பட முடியாத அல்லது தீர்வு காண முடியாத

ஒரு வரலாற்று படிமமாக அமைகிறது....

  • தொடங்கியவர்

தொடர்- 03

சூளவமிசம் உத்தரப் பிரதேசத்தைப் பற்றியும் தமிழரைப் பற்றியும்

தருங் குறிப்புக்களைப் பார்க்கும். பொழுது வட இலங்கைக்கும் தனியரசென்று

இருந்ததென நாம் ஊகிக்ககிடக்கின்றது.

அக்காலத்திலும் தமிழ்த் தலைவர்கள் அனுராதபுர அரசின்கீழ் மிகுந்த செல்வாக்குப்பெற்ற

பிரதானிகளாயிருந்து ஆட்சி செலுத்தின் ரென்பது சூளவமிசத்திற் காணப்படும் பொத்தக்குட்டன்

என்பான் வரலாற்றினின்றும் தெரிகின்றது.

அன்றியும் அனுராதபுரம் சிங்கள நாட்டுத் தலைநகராய் விளங்கிய காலத்தத் தமிழ் அரசரும்

காலத்துக்கு காலம் அங்கு ஆண்டு வந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

இன்னும் சிங்கள அரசர் சிலர் ''அரசியற் தொல்லைகள் ஏற்படுங்காலத்து வட இலங்கைக்குச்

சென்று அங்கு தங்காலத்தை அமைதியாகக கழித்தனர் என்றும் தெரிய வருகின்றது.''

பின்னர் மகிந்தன் அனுராதபுரத்து அரசரீடத்தேறி இரண்டாம் மகிந்தன் என்னும் பேருடன் அண்டு

வருங்காலத்தில் அவ்வரசனுக்கு உரிமை கோரித்தப்புளன் முதலியோர் அவ்வரசினைக் கவரும்

பொருட்டு மகிந்தனோடு போர் புரிந்து கலகம் விளைத்து வந்தனர். அக்காரணத்தால் நாட்;டில்

அமைதி குன்றியது.

அந்நிலையைப் பயன்படுத்தி வட பகுதியில் வலிமையோடு விளங்கிய உக்கிரசிங்கன்.

வட பகுதியிலுள்ள தலைவர்களை யெல்லாம் அடக்கிய பின். மாற்றார் கைக்கு

இலகுவில் படக்கூடிய கடற்கரைப் பட்டினமாகிய சிங்கை நகரைத் தன் தலைநகராகக் கொள்ளாது

அங்கிருந்து வெளியேறிப் பாதுகாக்க கூடியதும்.

மாற்றார் கைக்கு எளிதில் அகப்பட்ட முடியாததும் நிலப்பரப்பினால் கூழப்பட்டதும் பழைய நாகர்

தலைநகரமாயிருந்ததுமான ''கந்தரோடை'' என்னும் நகரத்தினை தன் தலைநகர் ஆக்கினான்.

ஆளும் அரசனை தொலைத்து நாட்டிற் கலகங்கள் ஏற்படங் காலங்களில் வலிமையுள்ளான்

ஒருவன் தன் வலிமையினால் ஆங்கு தான் ஆட்சியை நிறுவித்தானே அரசானதால் சரித்திரங் காணாத

தொன்றன்று.

இவ்வாறு அரசு கட்டிலேறிய உக்கரசிங்கன் ''மாவிட்டபுரம்'' என

இப்பொழுது வழங்கும் ஊரில் தென்னிந்தியாவிலிருந்து உடல் நலங்காரணமாக

வந்திரந்த'' மாருதப்புரவீகவல்லி'' என்னும் அரச கன்னியைக் கண்டு அவளைத்

தன் வாழ்க்கைத் துணைவியாக அக்கிக் கொண்டான் என்று கூறும் வரலாறு

இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் ஒருவனாகிய சயதுங்கவர

ராசசிங்கன் தந்தையின் பின் செங்கோலோச்சினான்.

இ..து நிகழுங்காலையில் அனுராதபுரத்தின முதலாஞ் சேனன் ( கி-பி- 832-851)

ஆண்டும் கொண்டிருந்தேன். இதே காலத்தில் தென்னிந்தியாவில் வலிமையோடிருந்த பல்லவ

அரச வலி குன்றியது. முதலாம் பாண்டியப் பேரரசு தலை தூக்கத் தொடங்கியது.

முதலாஞ்சேனன் காலத்துப் பாண்டிய அரசனொருவன் இலங்கை அரசினைக் கைப்பற்றம்

நோக்கத்துடன் வட இலங்கையில் வந்திறங்கினானெனச் சூளவமிசமெனும் பாளிநூல் கூறும்.

இப்பாண்டிய அரசன் வரகுபாண்டியெனென்னும் பராந்தக நெடுஞ்சடையன் மகன்ஸ்ரீ மாறஸ்ரீ வல்லபன்

ஆவன்.

பாண்டியன் வந்திறங்கியதை அறிந்த சிங்கள அரசன் அவனுக்கெதிராகப் படையொன்றினையனுப்பினான்

இச் சிங்களப்படையைப் பாண்டிய மன்னன் எளிதிற் தோற்கடித்து உத்தர தேசத்தைக் கைப்பற்றி''

மகாதாலித்தகாமம் என்னும் ஊரில் பாடி வீடமைத்தத் தன்படையுடன் இனைந்தான்.

உத்தரபிரதேசம் தமிழ்குடியிருப்பாக இருந்ததனால் அங்கு வாழ்ந்தோர் பாண்டியன்

பக்கஞ் சேர்ந்தனர். அதனால் பாண்டியப்படை இருமடங்கு வலியுற்றது.

இவ்வாறு தன்னோடு சேர்ந்த இலங்கைத் ''தமிழ்ப்படையின்'' உதவிகொண்டு

தட்டுத் தடக்கின்றி அனுராதபுரத்தேகி அந்நகரைக் கைப்பேற்றினான்.

எனினும் பாண்டியப்படை வட இலங்கைக் கரையில் இறங்கிய போது. அக்காலத்து

அங்கிருந்தது ஆணை செலுத்திய தலைவனாகிய செயதுங்கவரராசசிங்கன் மடிந்திருக்க வேண்டும்.

பின்பு பாண்டியன் நாட்டை விட்டு சென்ற போது கலகங்களும் குழப்பங்களும் இருந்து வந்தன.

இதனைக் கண்ணுற்ற சூழ்சித்திறனும் வலிமையும் படைத்த பாணன் ஒருவன் தருணத்தைத் தப்பவிடாது

குடிகளையடக்கித் தானே அரசனானான். செய்துங்கவரராசசிங்கன் வழித்தோன்றல்கள் விசய கூழங்கைச் சக்கரவாத்தி

காலம் வரை நாட்டையாண்டு வந்ததாக யாழ்ப்பண வைபவமாலை ஒன்றே கூறும் பாணனைப் பற்றிய பரமபரைக்

கதைகளை நவிலும்.

பிற சான்றுகள் எவையும் இதைப்பற்றி கூறிற்றில் . சரித்திரத்தில் சடுதியில் பதவி பெற்று உயர்ந்தோர்

போலவே இவனும் பெருமித முற்றுத் தன் பெயரையம் புகழையும் நிறுத்தும் வண்ணம். தன் பெயரினால்

ஒரு சிற பட்டினத்தை நிறுவி அதனை யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டனன் போலும். இதுவே பரம்பரைக்

கதைகளினின்றும் நாம் உடக்கக் கூடிய வரலாற்றக்கடக்கை.

தொடரும்....4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.