Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் இருப்பு

Featured Replies

கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் இருப்பு

 

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு உள்­ளிட்ட பல்­வேறு நலன்­க­ளையும் தீர்­மா­னிக்­கின்ற கூட்டு ஒப்­பந்தம் பெரும் இழு­ப­றி­க­ளுக்கும் மத்­தியில் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டமை தெரிந்த விட­ய­மாகும். எனினும் இக்­கூட்டு ஒப்­பந்­தத்தின் சரத்­துகள் சில­வற்றை கம்­ப­னி­யி­னரும் தோட்ட நிர்­வா­கமும் மீறி செயற்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அதி­ருப்தி நிலைக்கு மத்­தியில் தற்­போது சர்­வ­தேச சந்­தையில் தேயி­லையின் விலையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­அ­தி­க­ரிப்பின் கார­ண­மாக தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய நிலுவைப் பணத்­தினை வழங்க வேண்டும் என்று இப்­போது கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. மேலும் இத்­த­ரு­ணத்தில் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்பில் மீள் பரி­சீ­லனை செய்­யப்­பட வேண்டும் என்றும் கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் கலந்து பேசி தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்­பினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

 

சவால்கள்

பெருந்­தோட்ட தொழிற்­துறை என்­பது இப்­போது மிகவும் ஒரு மோச­மான பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தனை சொல்லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை. சகல மட்­டங்­க­ளிலும் பெருந்­தோட்­டத்­து­றையில் நெருக்­கீ­டுகள் அதி­க­ரித்து வரு­வ­தனை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. தொழி­லா­ளர்கள் மீதான நெருக்­கீ­டு­களும் தோட்ட உத்­தி­யோ­கத்தர்கள் மீதான நெருக்­கீ­டு­களும் கணி­ச­மா­கவே அதி­க­ரித்து வரு­கின்­றன. தோட்­டங்­களின் சம­கால நிலை­மைகள் தொடர்பில் ஆராய்ந்து வரு­ப­வர்கள் பெருந்­தோட்­டங்­களின் எதிர்­கால இருப்பு தொடர்பில் கேள்வி எழுப்பி இருக்­கின்­றனர். பெருந்­தோட்­டங்கள் அழிந்­து­வி­டக்­கூ­டாது. அதன் இருப்பு பாது­காக்­கப்­ப­டுதல் வேண்டும். தொழிற்­கு­லத்தின் நலன்கள் பேணப்­பட வேண்டும் என்­றெல்லாம் வலி­யு­றுத்தல் இடம்­பெற்று வரு­கின்­றன. சிறு­தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தொழில் அபி­வி­ருத்தி கருதி பல்­வேறு சலு­கை­க­ளையும் அர­சாங்கம் வழங்­கு­கின்­றது. எனினும் பெருந்­தோட்­டங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றதா என்­பது இப்­போது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. ஒரு காலத்தில் பெருந்­தோட்­டத்­து­றை­யா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு கூடு­த­லான பங்­களிப்­பினை வழங்­கி­யி­ருந்­தது. எனினும் தற்­போது சிறு­தோட்­டங்­களின் பங்­க­ளிப்பே பெருந்­தோட்­டங்­களைக் காட்­டிலும் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

இந்த நிலை­மைக்கு பெருந்­தோட்­டங்கள் மீதான தொடர்ச்­சி­யான புறக்­க­ணிப்­பு­களே கார­ண­மாகும் என்றும் கருத்­துகள் மேலெ­ழுந்து வரு­கின்­றன. இக்­க­ருத்­துக்­க­ளையும் மீறி மலை­யக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களில் அதி­க­மானோர் தமி­ழர்கள் என்­கிற கார­ணத்­தினால் புறக்­க­ணிப்­புகள் தொட­ர்­கின்­ற­னவா? என்றும் சிலர் இன­வாத கண்­ணோட்­டத்­தி­னையும் செலுத்தி வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது. கம்­ப­னி­களின் பொறுப்பில் உள்ள தோட்டத் தொழி­லா­ளர்­களும் அரசின் பொறுப்பில் உள்ள தோட்டத் தொழி­லா­ளர்­களும் இன்று பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இலா­பத்தை மட்­டுமே நோக்­கமாகக் கொண்டு செயற்­படும் கம்­ப­னி­யினர் தொழி­லா­ளர்­களின் நலன்­களை புறந்­தள்­ளியே செயற்­ப­டு­கின்­ற­மையும் புதிய விட­ய­மல்ல. தோட்­டங்­களை கொண்டு நடத்­து­வதில் பல்­வேறு சிர­மங்­க­ளையும் எதிர்­நோக்கி வரு­வ­தா­கவும் கம்­ப­னி­யினர் தெரி­வித்து வரு­கின்­றனர். உற்­பத்திக் குறைவு, உற்­பத்திச் செலவு அதி­க­ரிப்பு, தொழி­லா­ளர்கள் வேலைக்கு செல்­வதில் ஏற்­படும் குறை­நிலை, தொழி­லா­ளர்­களின் தொழில் ரீதி­யான ஈடு­பா­டற்ற தன்மை உள்­ளிட்ட பல கார­ணங்­களால் தாம் சிர­மத்தை எதிர்­கொள்­வ­தாக கம்­ப­னி­யினர் தெரி­விக்­கின்­றனர். மேலும் வெளியார் உற்­பத்தி முறையின் அடிப்­ப­டையில் தேயிலைச் செடி­களை தொழி­லா­ளர்­க­ளுக்கு பிரித்துக் கொடுக்கும் நட­வ­டிக்கை தொடர்­பிலும் கம்­ப­னி­யினர் கவனம் செலுத்தி வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

இந்­நி­லையில் வெளியார் உற்­பத்தி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சில தோட்­டங்­களில் தொழி­லா­ளர்­களின் நிலைமை ஏற்­க­னவே மோச­ம­டைந்­துள்­ளமை தொடர்­பிலும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. கம்­ப­னி­யி­னரின் பொறுப்பில் உள்ள தோட்­டங்­களில் உழைப்­புக்­கேற்ப ஊதி­யத்­தினை பெற்­றுக்­கொள்­வ­திலும் திருப்­தி­யற்ற நிலையே காணப்­ப­டு­கின்­றது. கம்­ப­னி­யி­னரின் பொறுப்பில் உள்ள தோட்­டங்­களின் திருப்­தி­யற்ற நிலையைப் போன்றே அரச பொறுப்பில் உள்ள தோட்­டங்­க­ளிலும் தொழி­லா­ளர்கள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றனர். குறிப்­பாக கண்டி மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களில் உள்ள தோட்­டங்கள் தொடர்பில் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தனது அதி­ருப்­தி­யினை அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்தார். அவர் இது­பற்றி கூறு­கையில், மாத்­தளை மாவட்­டத்தில் உள்ள மக்கள் பெருந்­தோட்ட அபி­வி­ருத்தி சபை, அரச பெருந்­தோட்ட கூட்டுத் தாபனம், எல்­க­டுவ பெருந்­தோட்ட கூட்­டுத்­தா­பனம் ஆகிய நிர்­வா­கங்­க­ளுக்கு கீழ் பரா­ம­ரிக்­கப்­படும் தோட்­டங்­களை மீண்டும் தனி­யா­ருக்கு வழங்கும் முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இச்­செயல் வன்­மை­யாக கண்­டிக்­கத்­தக்க ஒரு விட­ய­மாகும். அப்­பாவி தொழி­லா­ளர்கள் ஏற்­க­னவே தனி­யாரின் ஆதிக்­கத்தில் பல துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் இச்­செ­ய­லா­னது அத்­தொ­ழி­லா­ளர்­களை அதல பாதா­ளத்­திற்கு தள்­ளி­விடும் ஒரு நிலை­யாக உள்­ளது. மலை­யக சமூ­கத்தின் நலன்­க­ருதி இந்­ந­ட­வ­டிக்­கையை மீளாய்வு செய்­வ­தற்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுக்­கின்றேன்.

தனியார் கம்­ப­னிகள் தோட்­டங்­களை பொறுப்­பேற்­ப­தனால் பல்­வேறு நன்­மை­களும் கிடைக்கும் என்று பல்­வேறு ஆசை வார்த்­தைகள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் நடை­மு­றையில் இது தலை­கீ­ழாகி இருக்­கின்­றது. பட்டு வேட்­டிக்கு ஆசைப்­பட்டு கட்டி இருந்த கோவ­ணத்­தையும் இழந்த நிலை­மை­யி­லேயே தொழி­லா­ளர்­களின் நிலைமை போய்க்­கொண்­டி­ருக்­கின்­றது. இதனை தெரிந்து கொண்டும் மீண்டும் குழியில் விழு­வ­தற்கு எம்­ம­வர்கள் தயா­ராக இல்லை. மேற்­படி தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி உள்­ளிட்ட மேலும் பல கொடுப்­ப­ன­வு­களும் இன்னும் உரி­ய­வாறு கொடுக்­கப்­ப­டாத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது. நிலு­வை­க­ளாக பல மில்­லியன் ரூபாவை தொழி­லா­ளர்­க­ளுக்கு செலுத்த வேண்­டியும் இருக்­கின்­றது. இவ்­வாறு பாரிய நிலுவைத் தொகை­யி­னையும் செலுத்­தாது தோட்­டங்­களை தனி­யா­ருக்கு வழங்­கு­வ­தற்கு ஆர்வம் காட்டி வரு­வது எவ்­வி­தத்­திலும் நியா­ய­மா­காது. தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­ப­டு­வ­தனை பார்த்­துக்­கொண்டு எம்மால் வெறு­மனே இருந்­து­விட முடி­யாது.

தனி­யாரின் நிர்­வ­கிப்பின் கீழ் மலை­யக தொழி­லா­ளர்கள் நிர்க்­கதி நிலைக்கு உள்­ளாகி இருக்­கின்­றார்கள். இருப்­பிட வச­திகள் மற்றும் மருத்­துவ வச­திகள் உள்­ளிட்ட பலவும் சீர்­கே­ட­டைந்து காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் மீண்டும் தோட்­டங்­களை தனி­யா­ருக்கு அர­சாங்கம் கைய­ளிக்க முற்­ப­டு­வது பிழை­யான செய­லாகும். அர­சாங்கம் மாற்­றாந்தாய் மனப்­பாங்குடன் தொழி­லா­ளர்­களை நடத்­து­வதை வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன் என்­கிறார் எம்.சிவ­ஞானம்.

மேலும் மாத்­தளை மாவட்ட தோட்­டங்­களை அர­சாங்கம் தனி­யா­ருக்கு வழங்­கு­வதை கைவிட வேண்டும். மாறாக இத்­தோட்­டங்­களை தொழி­லா­ளர்­க­ளுக்கு பிரித்­துக்­கொ­டுக்க வேண்டும். இவ்­வாறு தோட்டக் காணி­களை தொழி­லா­ளர்­க­ளுக்கு பிரித்­துக்­கொ­டுப்­பதன் மூல­மாக சிறு­தோட்ட உரி­மை­யா­ளர்கள் என்­கிற நிலைக்கு தொழி­லா­ளர்­களை இட்டுச் செல்ல வேண்டும். இந்­ந­ட­வ­டிக்­கையின் மூல­மாக தொழி­லா­ளர்­களின் பொரு­ளா­தார நெருக்­கடி உள்­ளிட்ட பல பிரச்­சி­னை­க­ளுக்கும் உரிய தீர்­வினை காண முடியும் என்று சிவ­ஞானம் வலி­யு­றுத்தி இருக்­கின்றார்.

 

பெருந்­தோட்ட காணிப் பகிர்வு

கண்டி, மாத்­தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்­தோட்ட காணிப்­ப­கிர்வு விடயம் இப்­போது பூதா­க­ர­மாகி இருக்­கின்­றது. இந்­நி­லையில் கண்டி, மாத்­தளை மாவட்­டங்­களில் உள்ள அரச பெருந்­தோட்ட காணிகள் அந்­தந்த பிர­தே­சங்­களில் வாழும் மக்­க­ளுக்கே வழங்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­தி­ருப்­ப­தாக அமைச்சர் மனோ­க­ணேசன் குறிப்­பிட்­டுள்ளார். பிர­த­ம­ருடன் நடை­பெற்ற பேச்­சுக்­களின் போது தோட்­டங்­களில் வாழும் இந்நாள், முன்னாள் மலை­யக தமிழ் தொழி­லாளர் குடும்­பங்­களின் எண்­ணிக்­கைகள் மற்றும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய காணி­களின் பரப்­ப­ளவு தொடர்­பான விப­ரங்­களை கண்­ட­றிந்து வாழ்­வா­தார காணிகள் அதே தோட்­டங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். இவை வீட்டுத் திட்­டங்­க­ளுக்­காக வழங்­கப்­ப­டு­கின்ற ஏழு பேர்ச்சஸ் காணி­யுடன் தொடர்­பில்­லாத வாழ்­வா­தார காணி­யாக கரு­தப்­பட வேண்டும் என்ற எமது நிலைப்­பாட்டை பிர­த­ம­ரிடம் முன்­வைத்­த­போது அவர் அதனை ஏற்­றுக்­கொண்டார். அத்­துடன் இந்த தோட்­டங்­களில் வாழும் மலை­யக தமிழ் குடும்­பங்­க­ளுக்கு வாழ்­வா­தார நோக்கில் காணிகள் பிரித்­துக்­கொ­டுக்­கப்­படும். தோட்­டங்­களை அண்­மித்து வாழும் கிரா­மத்­த­வர்­க­ளுக்கும் காணி­கள் பகிர்ந்து வழங்­கப்­படும். அதேபோல் காணிகள் தேவைப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தா­கவும் பிர­தமர் உறு­திப்­பட கூறினார் என்று மனோ­க­ணேசன் மேலும் தெரி­வித்­துள்ளார்.

 

பெருந்­தோட்ட சேவை­யா­ளர்கள்

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் பல்­வேறு துன்­ப­து­ய­ரங்­க­ளையும் நாளாந்தம் சந்­தித்து வரு­வ­தனைப் போன்றே பெருந்­தோட்ட சேவை­யா­ளர்­களும் துன்ப துய­ரங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். கம்­ப­னி­யினர் தோட்ட நிர்­வாகம் என்ற ரீதியில் இவர்கள் மீதான நெருக்­கீ­டுகள் அதி­க­ரித்து காணப்­ப­டு­வதும் தெரிந்த விட­ய­மாக உள்­ளது. தோட்ட சேவை­யா­ளர்­களின் முறை­யற்ற இட­மாற்றம் கொடுப்­ப­ன­வு­களை பெற்­றுக்­கொள்­வதில் இழு­பறி, சேவை­யா­ளர்­களின் இருப்­பி­டங்­களில் உள்ள குறை­பா­டுகள் நிவர்த்தி செய்­யப்­ப­டாமை, உழைப்­புக்­கேற்ற ஊதி­ய­மின்மை போன்ற நிலை­மைகள் இன்னும் தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன. தொழி­லா­ளர்­களைப் போன்றே தோட்ட சேவை­யா­ளர்­களும் கசக்கிப் பிழி­யப்­ப­டு­கின்­றார்கள். இவர்­களின் நியா­ய­மான கோரிக்­கைகள் பல சந்­தர்ப்­பங்­களில் புறக்­க­ணிப்­பிற்கு உள்­ளாகி வரு­கின்­ற­மையும் புதிய விட­ய­மல்ல.

 

பெருந்­தோட்ட சேவை­யாளர் கூட்டு ஒப்­பந்தம் 

பல்­வேறு விட­யங்­க­ளுக்கு ஒப்­பந்­தங்கள் செய்­து­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இலங்­கைக்கும் ஒப்­பந்­தங்­க­ளுக்கும் இடையில் மிக­நெ­ருங்­கிய தொடர்பு காணப்­ப­டு­கின்­றது. இந்த வகையில் பெருந்­தோட்ட சேவை­யா­ளர்­களின் கூட்டு ஒப்­பந்­தமும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. இலங்கை பெருந்­தோட்ட சேவை­யா­ளர்­களின் கூட்டு ஒப்­பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதத்­துடன் முடி­வ­டைந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் புதிய கூட்டு ஒப்­பந்­தத்­தினை கைச்­சாத்­திடும் நட­வ­டிக்­கைகள் இழு­ப­றி­யான ஒரு நிலை­யினை அடைந்­தி­ருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். புதிய கூட்டு ஒப்­பந்­தத்­திற்­கான 40 வீத சம்­பள உயர்­வுடன் முன்­வைத்த கோரிக்­கை­களை முத­லா­ளிமார் சம்­மே­ளனம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்கம் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் ஏற்­க­னவே மூன்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திய போதிலும் இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்கம் முன்­வைத்த கோரிக்­கை­க­ளுக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம் தெரி­விக்­க­வில்லை. இதனால் ஹட்டன், மத்­து­கம போன்ற இடங்­களில் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களை இலங்கை தோட்ட சேவை­யா­ளர்கள் நடத்தி இருந்­தனர்.

இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்­கத்தின் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­க­ளுக்கு பெருந்­தோட்ட சேவை­யாளர் காங்­கிரஸ் முழு ஒத்­து­ழைப்­பையும் வழங்­கு­வ­தாக பொதுச் செய­லா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான கா.மாரி­முத்து தெரி­வித்­தி­ருந்தார். மேலும் இன்­றைய சூழ்­நி­லையில் பெருந்­தோட்ட தொழி­லாளர் நாளாந்தம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களும் வாழ்க்கை செலவும் அதி­க­ரித்த வண்ணமே உள்­ளன. இவர்­களின் அன்­றாட தேவைகள், தமது பிள்­ளை­களின் கல்வி, எதிர்­காலம் போன்­ற­வற்­றிற்கு பொரு­ளா­தாரம் குன்றி இருப்­பதால் பாரிய சுமை­களை சுமக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழ்­நி­லையில் 25 சத­வீத சம்­பள உயர்வு கிடைத்தால் மட்­டுமே வாழ்க்­கையை கொண்டு நடத்த முடியும். இந்த நிலைப்­பாட்­டையே பெருந்­தோட்ட சேவை­யாளர் காங்­கிரஸ் கொண்­டி­ருக்­கின்­றது. நிலுவை சம்­ப­ளத்­தையும் வழங்க வேண்டும் என்று சட்­டத்­த­ரணி கா.மாரி­முத்து மேலும் வலி­யு­றுத்தி இருந்தார்.

இதற்­கி­டையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பெருந்­தோட்ட சேவை­யா­ளர்­களின் நலன்­க­ளுக்கு வலு­சேர்க்கும் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்­கத்­திற்கும், முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையில் உடன்­பாடு காணப்­பட்­டதை தொடர்ந்தே புதிய கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இப்­பு­திய ஒப்­பந்­தத்தில் இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்­கத்தின் சார்பில் தலைவர் டி.கே. தம்­மிக்க, பொதுச்­செ­ய­லாளர் நாத் அம­ர­சிங்க, பிரதித் தலைவர் எஸ்.எஸ்.ஜெய­குமார், பொரு­ளாளர் ரொபட் பிரான்சிஸ் ஆகி­யோரும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் சார்பில் தலைவர் ஏ.என்.டபிள்யூ.குண­வர்த்­தன, பொது இயக்­குநர் டபிள்யூ. எம்.கே.எல்.வீர­சிங்க, நிர்­வாக முகா­மை­யாளர் ரொசான் இரா­ஜ­துரை ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர். கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக பல்­வேறு சலு­கை­க­ளையும் தோட்ட சேவை­யா­ளர்கள் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் 25 வீத சம்­பள உயர்வு கிடைக்­கின்­றது. மேலும் வரு­டாந்த கொடுப்­ப­னவு 32 வீதம் முதல் 55 வீதம் வரை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஓய்­வூ­திய வய­தெல்­லை­யிலும் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மரண சகாய நிதி 50 ஆயி­ரத்தில் இருந்து 75 ஆயிரம் வரை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வீட்டு வாடகை பத்து சத­வீதம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தோட்ட சேவை­யா­ள­ராக ஆறு மாத பயிற்­சியின் பின் நிரந்­த­ர­மாக்க வேண்டும். மின்­சார வச­தி­யில்­லாத வீடு­க­ளுக்கு மாதாந்தம் 25 லீற்றர் மண்­ணெண்ணெய் வழங்­கப்­பட உள்­ளது. மருத்­துவ தாதி­மார்­க­ளுக்கு வழங்கும் சீரு­டைக்­கான மூவா­யிரம் ரூபா­வா­னது ஐயா­யிரம் ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது­போன்று மேலும் பல நன்­மை­களும் தோட்ட சேவை­யா­ளர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. புதிய கூட்டு ஒப்­பந்­த­மா­னது 2019 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

 

தோட்­டத்­தொ­ழி­லாளர் கூட்டு ஒப்­பந்தம்  

தோட்டத் தொழி­லா­ளர்­களின் புதிய கூட்டு ஒப்­பந்தம் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டமை தெரிந்த விட­ய­மாகும். ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வது பெரி­தல்ல. அந்த ஒப்­பந்தம் எந்­த­ள­வுக்கு உறு­தி­யுடன் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இதி­லேயே அவ் ஒப்­பந்­தத்தின் வெற்றி தங்கி இருக்­கின்­றது. எனினும் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட தொழி­லா­ளர்­க­ளுடன் தொடர்­பு­டைய கூட்டு ஒப்­பந்­தத்தின் பல சரத்­து­களை கம்­ப­னி­யினரும், தோட்ட நிர்­வா­கமும் மீறி வரு­வ­தாக கைச்­சாத்­திட்ட தொழிற்­சங்­கங்கள் கூறி­வ­ரு­கின்­றன. கம்­ப­னி­யினர் கூட்டு ஒப்­பந்­தத்­தினை புறந்­தள்­ளி­விட்டு எதேச்­சை­யான சில செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக இத்­தொ­ழிற்­சங்­கங்கள் குற்றம் சுமத்­து­கின்­றன. இத்­த­கைய மீறல் நட­வ­டிக்­கையின் கார­ண­மாக கூட்டு ஒப்­பந்தம் வலு­வி­ழந்­தி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். கூட்டு ஒப்­பந்­தத்தை கூடாத ஒப்­பந்­த­மாக சிலர் விமர்­சித்து வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். இதற்­கி­டையில் கூட்டு ஒப்­பந்­தத்தை விமர்­சிக்கும் இன்னும் சிலர் கூட்டு ஒப்­பந்­தத்­தி­னது சில சரத்­துகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு தீமை பயப்­ப­தாக இருப்­ப­தா­கவும், இச்­ச­ரத்­துகள் தொழி­லாளர் நலன் சார்ந்­த­தாக திருத்­தி­ய­மைக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென்றும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

 

நிலுவைப் பணம் வழங்­குதல்

கம்­ப­னிகள் உலக சந்­தையில் தேயி­லையின் விலை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளதை காரணம் காட்டி தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதில் இடர்­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்து வந்­தன.. எனினும் இப்­போது உலக சந்­தையில் தேயி­லையின் விலையில் அதி­க­ரிப்பு நிலை காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய நிலுவைத் தொகை­யினை உட­ன­டி­யாக வழங்க வேண்டும் என்று முக்­கி­யஸ்­தர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இது தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள அஸீஸ் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் அஷ்ரப் அஸீஸ் பின்­வ­ரு­மாறு தனது நிலைப்­பாட்­டினை தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விவ­காரம் தொடர்­பாக கூட்டு தொழிற்­சங்­கங்கள் மற்றும் முத­லா­ளிமார் சம்­மே­ளன பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்ற போதிலும் எவ்­வி­த­மான இணக்­கப்­பா­டு­மின்றி கடந்த இரண்­டரை வரு­டங்கள் இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்­தது. இத­னை­ய­டுத்து தொழி­லா­ளர்கள் தொழிற்­சங்­கங்­களின் நட­வ­டிக்­கை­களை புறந்­தள்­ளி­விட்டு தங்­க­ளுக்கு சம்­பள உயர்வு கிடைக்கும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என்று கூறி சுய­மாக போராட்­டத்தில் குதித்­தனர். நாட்டின் பல தரப்­பி­னரும் இதற்கு ஆத­ரவு வழங்­கியும் இருந்­தனர். பின்னர் இழு­ப­றி­களின் பின்னர் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. சம்­பள அதி­க­ரிப்பு விவ­காரம் இரண்­டரை வரு­டங்கள் இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்­ததன் கார­ண­மாக தோட்டத் தொழி­லாளி ஒருவர் 32 ஆயிரம் ரூபா சம்­பள நிலுவைப் பணத்­தினை இழந்­தி­ருக்­கின்றார். நிலுவைப் பணத்­தினை வழங்க வேண்­டு­மென்ற கோரிக்­கை­யினை முன்­வைத்த போது முத­லா­ளிமார் சம்­மே­ளன பிர­தி­நி­திகள் தற்­போது உலக சந்­தையில் தேயி­லையின் விலை வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றது. எனவே தற்­போது நிலுவைப் பணத்­தினை வழங்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஆனால், தற்­போது உலக சந்­தையில் தேயிலை விலை அதி­க­ரித்­துள்­ளதால் தொழி­லா­ளர்­க­ளுக்கு சேர வேண்­டிய நிலுவைப் பணத்­தினை வழங்க முடியும். அப்­படி செய்­வ­தனால் தோட்ட கம்­ப­னி­க­ளுக்கு எவ்­வி­த­மான நட்­டமும் ஏற்­படப் போவ­தில்லை. நிலுவைப் பணத்தை வழங்க மறுக்­கின்ற தோட்டக் கம்­பனி மற்றும் நிர்­வா­கத்­திற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­யினை கூட்டு தொழிற்­சங்­கங்கள் எடுப்­பது மிகவும் அவ­சி­ய­மாகும் என்று அஷ்ரப் அஸீஸ் மேலும் தனது நிலைப்­பாட்­டினை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்றார். உண்­மையில் அஸீஸின் கூற்று வர­வேற்­கத்­தக்க ஒரு விட­ய­மாக உள்­ளது. போலி­யான புள்ளி விப­ரங்­களை வெளி­யிட்டு கம்­ப­னிகள் இலா­பத்தை மூடி­ம­றைப்­ப­தாக ஏற்­க­னவே பல குற்­றச்­சாட்­டுகள் கம்­ப­னி­யினர் மீது இருந்து வரு­கின்­றன. புள்­ளி­வி­ப­ரங்­களின் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. நட்டம் என்ற பஞ்­சப்­பாட்­டையே பாடிக்­கொண்­டி­ருக்கும் கம்­ப­னி­க­ளுக்கு இலா­பமே இல்­லையா? என்று ஒரு கேள்வி எழு­கின்­றது. உண்­மையில் நட்டம் ஏற்­பட்­டி­ருக்­கு­மானால் அந்­நி­லையில் தொழி­லா­ளர்­களின் கொடுப்­ப­ன­வு­களை வழங்­க­மு­டி­யாது என்று இழுத்­த­டிக்கும் கம்­ப­னிகள் இலாபம் கிடைக்­கின்ற சந்­தர்ப்­பத்தில் உரி­ய­வாறு வழங்க வேண்­டி­யது நியாயம் தானே. உலக சந்­தையில் தேயி­லையின் விலை அதி­க­ரித்­துள்ள இந்­நி­லையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய நிலுவை பணத்­தையும், சம்­பள உயர்­வி­னையும் கம்­ப­னிகள் வழங்க வேண்டும். வெறும் ஏமாற்று வித்­தை­களில் கம்­ப­னிகள் ஈடு­பட முனைதல் கூடாது. தொழி­லாளர் தோழர்­களின் துன்­பங்­க­ளையும், வறுமை நிலை­யையும் கம்­ப­னிகள் புரிந்து செயற்­ப­டுதல் வேண்டும்.

 

தோட்டக் கம்­ப­னி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்தை 

பெருந்­தோட்ட கம்­ப­னி­களின் செயற்­பா­டுகள் அதி­ருப்தி நிலை­யினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன. கூட்டு ஒப்­பந்­தத்தை மீறி­யுள்ள நிலை­மைகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு பல்­வேறு பாதிப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன. இந்­நி­லையில் கூட்டு ஒப்­பந்த மீறல் தொடர்பில் இரு­பத்­தி­ரெண்டு தோட்ட கம்­ப­னி­க­ளுக்கும் கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்ட தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை கடந்த 21ஆம் திகதி தொழில் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்­னவின் தலை­மையில் தொழில் அமைச்சில் இடம்­பெற்­றது. இப்­பேச்­சு­வார்த்­தையில் சாதக விளை­வுகள் எதுவும் எட்­டப்­ப­ட­வில்லை என்று தெரிய வரு­கின்­றது. இதன்­போது பறிக்­க­வேண்­டிய தேயிலை கொழுந்தின் அள­வினை தாம் அதி­க­ரிக்­க­வில்லை என்று கம்­ப­னி­யினர் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். நட­வ­டிக்­கை­களை ஆராய்­வ­தற்கு மாவட்ட உதவி தொழில் ஆணை­யா­ளர்­களின் உத­வியும் பெற்­றுக்­கொள்­ளப்­பட உள்­ளது. இதற்­கி­டையில் இப்­பேச்­சு­வார்த்தை மேலும் ஒரு மாத காலத்­திற்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான முத்து சிவ­லிங்கம் என்­னிடம் கருத்து தெரிவித்தார். தொழிலாளர்களின் நலன்களை உறுதிப்படுத்த இ.தொ.கா. அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் என்றும் முத்து சிவலிங்கம் மேலும் வலியுறுத்தி கூறினார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் 21 ஆம் திகதி கம்பனிகளுடனான பேச்சுவார்த்தைகளில், கலந்து கொண்டு பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், இலங்கையில் தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் ஏழை தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயமாக பல தடவை பல விடயங்கள் பேசப்பட்டும், மத்தியில் இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்குரிய வேதனம் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்டு வருகின்றார்கள். மனிதாபிமானமற்ற வகையிலே தோட்ட நிர்வாகங்கள் மிகவும் கெடுபிடி தன்மையாக தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து பலவந்தமாக வேலை வாங்குவது வேதனை தருகின்ற ஒரு விடயமாகும்.

கூட்டு ஒப்பந்தத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி இல்லாதவிடத்து கம்பனிகள் தோட்டங்களை ஒப்படைத்துவிட்டு வெளியேறுதல் வேண்டும். அரசாங்கம் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு தோட்ட கம்பனிகளை சரியாக நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர தொழிலாளர்களின் பிரச்சினை சம்பந்தமான பேச்சுவார்த்தைகளுக்கு தோட்ட அதிகாரிகள் செல்ல வேண்டுமே தவிர அங்கு எந்த உதவி அதிகாரிகளும் பதிலீடாக செல்லக்கூடாது. இப்பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டு இருபத்திரெண்டு கம்பனிகளும் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குதல் வேண்டும்.

 

இதனை மீறும்பட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும், அமைச்சச் மலிக் சமரவிக்ரமவினதும், கவனத்துக்கு கொண்டு வந்து தோட்டங்களை பறிமுதல் செய்வது தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ள ஆவன செய்யப்படும் என்று வடிவேல் சுரேஷ் தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி இருந்தார்.

 

எவ்வாறெனினும் கம்பனிகள் பொறுப்புணர்ந்து செயற்படுதல் வேண்டும். தொழிலாளர்களின்  இருப்பினை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது  அம்மக்களின் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட பல துறைக ளையும் மழுங்கடிக்கச் செய்யும்  நடவடி க்கைகளிலோ கம்பனியினர் ஒரு போதும் ஈடுபடுதல் கூடாது. அப்பாவி தொழிலாளர்களுக்கு கம்பனியினர் துரோகமிழைக்க கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-01#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.