Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுத்தடிக்காமல் மிகத் தௌிவாக செயற்படுவதற்கான அவகாசமே இது - ரணிலிடம் அழுத்திக் கூறியது பன்னாட்டு மன்னிப்புச் சபை

Featured Replies

இழு­த்­த­டிக்­காமல் மிகத் தௌிவாக செயற்ப­டு­வ­தற்­கா­ன ­அவகா­சமே இது - ரணிலிடம் அழுத்திக் கூறியது பன்னாட்டு மன்னிப்புச் சபை
 
 
இழு­த்­த­டிக்­காமல் மிகத் தௌிவாக செயற்ப­டு­வ­தற்­கா­ன ­அவகா­சமே இது - ரணிலிடம் அழுத்திக் கூறியது பன்னாட்டு மன்னிப்புச் சபை
ஜ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் வழங்­கப்­பட்ட கால அவ­கா­சத்தை, கால இழுத்­த­டிப்­புக்­கா­கப் பயன்­ப­டுத்­தக் கூடாது. தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நிறை­வேற்ற வழங்­கப்­பட்ட காலத்தைப் பயன்­ப­டுத்த வேண்­டும். 
 
இவ்­வாறு கொழும்பு அர­சின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் அழுத்­தம் திருத்­த­மாக எடுத்­து­ரைத்­துள்­ள­தாக, பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை­யின் செய­லர் சயில் செட்டி தெரி­வித்­தார்.இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள சயில் செட்டி தலை­மை­யி­லான குழு­வி­னர், வடக்­குப் பய­ணத்தை முடித்­துக் கொண்டு நேற்று பி.ப. 2.30 மணிக்கு, கொழும்பு இத­ழி­யல் கல்­லூ­ரிக் கேட்­போர் கூடத்­தில் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பை நடத்­தி­னர்.
 
போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை ஏற்­றுக் கொள்­ள­மாட்­டோம் - அங்­கீ­க­ரிக்­க­மாட்­டோம் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட அர­சின் தலை­மை­கள் தொடர்ச்­சி­யா­கத் தெரி­வித்து வரு­கின்­றன. இது தொடர்­பில் மன்­னிப்­புச் சபை­யின் நிலைப்­பாடு என்ன என்று பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.
 
அதற்­குப் பதி­ல­ளித்த சயில் செட்டி, அர­சி­யல்­வா­தி­கள் வேறு­பட்ட கருத்­துக்­க­ளைச் சொல்ல முடி­யும். இறு­திப் போரில் பார­தூ­ர­மான சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றன என்ற குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. இதன் உண்­மைத் தன்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்­டும். அதற்­குப் பன்­னாட்­டுப் பங்­க­ளிப்­பு­டன் கூடிய கலப்பு நீதி­மன்­றம் நிறு­வப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டும். குற்­ற­மி­ழைத் த­வர்­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும். 
 
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு இரண்டு வருட கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­னைக் கால இழு­த­டிப்­புக்கு பயன்­ப­டுத்­தக் கூடாது. ஐ.நா. தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று ­வ­தற்கே பயன்­ப­டுத்­த­வேண்­டும். இதனை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­மசிங்­க­வி­டம் அழுத்­தம் திருத்­த­மா­கக் கூறி­யுள்­ளோம். 
 
வடக்கு மாகா­ணத்­தில் நடை­பெ­றும் போராட்­டங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்­ளோம். வடக்­கில் அதி­க­ளவு இரா­ணு­வப் பிர­சன்­னத்தை உணர முடி­கின்­றது. இரா­ணு­வப் பிர­சன்­னம் குறைக்­கப்­ப­ட­வேண்­டும். மக்­க­ளின் காணி­கள் அவர்­க­ளி­டமே திருப்­பிக் கொடுக்­கப்­ப­ட­வேண்­டும். காணா­மற்­போ­னோர் விட­யங்­க­ளை­யும் ஆராய்ந்­துள்­ளோம். ஒரு­வர் காணா­மற்­போ­யி­ருப்­பி­னும் அது தொடர்­பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்­டும். பன்­னாட்டு விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் - என்­றார். 
 
இதே­வேளை பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை­யின் செய­லா­ளர் அடங்­கிய குழு­வி­னர் நேற்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னை­யும் அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்து பேசி­னர். இதன் போது மன்­னிப்­புச் சபை­யி­னால் தயா­ரிக்­கப்­பட்ட ‘‘நீதி மட்­டுமே எமது காயங்­களை ஆற்­றுப்­ப­டுத்­தும்’’ என்ற ஆவ­ணம் வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.        

http://www.onlineuthayan.com/news/25451

  • தொடங்கியவர்

சர்வதேச விசாரணை மூலம் நீதியை நிலைநாட்ட வேண்டும்

p26-32c0b2add84e4a21d0183ec23fea5f877e9f115b.jpg

 

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் வலியுறுத்தல்
* இருவருட காலஅவகாசம் ஓய்வுக்கானது அல்ல

* காணிவிடுவிப்பு அவசியமானது

* உணர்வுகளுடன் விளையாட வேண்டாம்
(பா.ருத்­ர­குமார்)

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சர்­வ­தேச விசா­ரணை பொறி­மு­றையின் கீழ் நீதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். வடக்கு கிழக்கில் யுத்தத்தின் எந்­த­வொரு தழும்­பு­களும் 

ஆற்றுப் படுத்தப்படவில்லை. அங்கு மாற்றம் நிகழ்­வ­தாக அர­சாங்கம் வெளிக்­காட்ட முற்படுகின்றபோதும் சர்­வ­தே­சத்தை ஏமாற்ற முடி­யா­து என்று சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் செயலாளர் நாயகம் செலில் செட்டி தெரிவித்தார்.

கடந்த மூன்­று­நாட்­க­ளாக இலங்­கையில் தங்­கி­யி­ருந்து வடக்கு கிழக்கில் பாதிக்­கப்­பட்­பட மக்­களை பார்­வை­யிட்டு அவர்­க­ளது குறை­களை கேட்­ட­றிந்த சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் சிறப்­புக்­குழு தனது இறுதி ஊட­க­வி­ய­ளாளர் சந்­திப்பை நேற்று இலங்கை இத­ழியல் கல்­லூ­ரியின் கேட்போர் கூடத்தில் நடத்­தி­யி­ருந்­தது. இங்கு கருத்து தெரி­வித்தபோதே சர்­வ­தேச மன்­னிப்பு ்சபையின் செய­ளாளர் நாயகம் செலில் செட்டி இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது;

சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் சிறப்­புக்­குழு இலங்­கையில் மூன்­று­நாட்கள் தங்­கி­யி­ருந்து யுத்தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பல­த­ரப்பு மக்­களின் உண்­மை­யான உணர்­வு­களை கேட்­ட­றிந்­துக்­கொண்­டுள்­ளது. குறிப்­பாக வடக்கில் மனித உரிமை சவால்­களை எதிர்­நோக்கும் அந்த உற­வு­களின் பரா­மு­கத்தை கண்டும் இரா­ணுவ பிர­சன்­னத்தை கண்டும் நாம் ஆச்­சரி­யப்­பட்டோம்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட இரண்டு வரு­ட­கால கால­நீ­டிப்பு அர­சாங்கம் ஓய்­வெ­டுத்­துக்­கொண்டு மீண்டும் அதே கதையை ஒப்­பிப்­ப­தற்­கா­க­வல்ல என்­ப­தனை நன்கு உணர்ந்­துக்­கொள்ள வேண்டும். குறிப்­பாக தமிழ்­மக்கள் அவர்­க­ளுக்கு என்ன வேண்டும். அவர்­க­ளுக்­கான தேவை என்ன என்­பதில் தெளிவா­க­வுள்­ளனர். நாம் அவர்­க­ளுடன் கதைக்கும் போது சர்­வ­தேச விசா­ர­ணையின் அவ­சியம் பற்றி மிகத்தெளி­வாக கருத்­துக்­களை கொண்­டுள்­ளார்கள் என்­பதை விளங்­கக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.

அம்­மக்கள் உள்­நாட்டு பொறி­மு­றை­யின்­மீது துளி­ய­ள­விலும் நம்­பிக்கை கொள்­ள­வில்லை. காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வுகள் வவு­னி­யா­விலும் கிளி­நொச்­சி­யிலும் முல்­லைத்­தீ­விலும் யாழ்ப்­பா­னத்­திலும் ஆங்­காங்கே நின்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டு­கின்­ற­மையை பார்க்கும் போது அம்­மக்­களின் உண்­மை­யான தேவை என்ன என்­பது இலங்கை அர­சாங்­கத்­துக்கு: புரி­யா­ம­லுள்­ளமை கவ­லை­ய­ளிக்­கின்­றது. 

30 வரு­ட­கால யுத்­தத்தின் வடுக்­களை ஆற்ற முடி­யாது கண்­ணீர்­விட்டு அழும் மக்கள் தங்­க­ளது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரு­கின்­றனர். தங்­க­ளது சொந்த நிலங்­களில் குடி­யேற முடி­யாமல் முழு­மை­யான இரா­ணுவ பிர­சன்­னத்­துக்குள் அம்­மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். அம்­மக்­களின் போராட்டம் மிகவும் நியா­ய­மா­னது. 

நல்லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் எந்­த­ள­வு­தூரம் விரை­வாக செயற்­பட வேண்டும் என்­பதை மிகவும் அழுத்­த­மாக இலங்கை அர­சாங்கம் கடைப்­பி­டிக்­கின்­றதை உணர்­கின்றோம். ஆனால் அதே நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு, தங்­க­ளது உற­வு­களை இழந்து தவிக்கும் மக்­க­ளுக்கு, சொந்த காணி­களை பெற­மு­டி­யாது ஏங்­கி­இ­ருக்கும் மக்­க­ளி­டத்தில் எந்­த­ள­வு­தூரம் கொண்டு சென்­றுள்­ளது என்­பது மிகவும் கேள்­விக்­கு­றி­யா­க­வுள்­ளது.

உணர்வுகளுடன் விளையாட வேண்டாம்

இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட இரண்டு வருட கால­நீ­டிப்பை தனது கௌர­வத்­துக்­கா­கவோ அல்­லது சுய­ம­ரி­யா­தைக்கோ அல்­லது பகட்­டுக்­கா­கவோ பாவித்து அம்­மக்­களின் உணர்­வு­க­ளோடு விளை­யாட வேண்டாம் என்ற கோரிக்­கையை விடுக்க விரும்­பு­கின்றோம். இலங்கை அர­சாங்கம் இந்த இரண்டு வருட காலப்­ப­கு­திக்குள் செயற்­பட வேண்­டிய கால அட்­ட­வ­ணையை துல்லி­ய­மாக வரை­யறை செய்ய வேண்டும். அதன்­படி செயற்­பட வேண்டும்.

கால­நீ­டிப்பு என்ற பதத்தை இலங்கை அர­சாங்கம் தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­திக்­கொள்ள கூடாது என்­பதில் உறு­தி­யா­க­வி­ருக்­கின்றோம். இதன்­கா­ர­ண­மா­கவே நாம் வடக்­கி­லுள்ள மக்­க­ளது தேவை­களை முழு­மை­யாக அம்­மக்­க­ளுடன் இருந்து தெரிந்­துக்­கொண்­டுள்ளோம். 

நாம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதும் அவர் குறித்த இரண்டு வருட காலப்­ப­கு­திக்குள் செயற்­பட வேண்­டிய கால அட்­ட­வணை மற்றும் வௌிப்­ப­டைத்­தன்­மையில் பாதிப்பு ஏற்­ப­டாது என்­பதை உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேர­வையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் மிகவும் தெளிவா­னவை. அதி­லி­ருந்து விலகி ஒரு­போதும் அர­சாங்கம் செயற்­பட முடி­யாது. அதன் பரிந்­து­ரை­களை ஏற்­றாக வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ள­மையை இலங்கை அர­சாங்கம் உணர்ந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவ வேண்டும். எமது உத்­தி­யோ­கப்­புர்­வ­மான விஜ­யத்­தின்­போது மூன்று முக்­கி­ய­மான சவால்கள் தொடர்ப்ில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

நம்­ப­கத்­தன்மை

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­க­கூ­டிய காத்­தி­ர­மான செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும். இது­வ­ரைக்­கா­லப்­ப­கு­தியில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் யாவுமே ஒட்­டு­மொத்த இலங்கை மக்­களின் அபி­லா­சை­யாக இருந்­தது என கூறப்­பட்­டாலும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விசேட தேவை அல்­லது கவ­னிப்பு அவ­சி­ய­மா­கின்­றது என்­பதை அர­சாங்கம் உணர வேண்டும்.

காணா­ம­லாக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்க தேவை­யான அணு­கு­மு­றை­களை காலம் தாழ்த்­தாது செயற்­ப­டுத்த வேண்டும். குறிப்­பாக வவு­னி­யாவில் காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களை நாம் சந்­தித்­தி­ருந்­த­போது பாது­காப்பு படை­யி­னரால் மட்­டு­மல்­லாது அனைத்து தரப்­பி­ன­ராலும் அம்­மக்­க­ளுக்கு அச்­சுறுத்தல் காணப்­பட்­ட­மையை உண­ரக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மேலும் அங்­குள்ள பெண்கள் யுத்தத்தில் தங்­க­ளது கண­வனை அல்­லது ஆண் உறவை இழந்து மன்­றாடும் போது அவர்­களின் தேவை­களை புறக்­க­ணிப்­பது மிகவும் அநா­க­ரி­க­மான விட­ய­மாகும்.

அவர்கள் தங்­க­ளுக்கு இனி­யொ­ரு­போதும் யுத்­தத்தின் வடுக்­களை இந்­த­ள­வு­தூரம் சுமக்க முடி­யாது என கூறு­கின்­றனர். நீதிக்­காக ஏங்­கு­கின்­றனர். அவ்­வா­றி­ருக்கும் போது அவர்­க­ளி­டத்தில் பொய்­யான வாக்­கு­று­தி­களை கொடுத்து அல்­லது அர­சியல் சாயங்­களை உள்­நு­ழைக்க நினைப்­பது மிகவும் தவ­றான விட­ய­மாகும்.

யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட உற­வு­களின் நீதிக்­காக உலக நாடுகள் ஒன்­றி­ணைய வேண்டும்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். இதற்­காக உலக நாடுகள் ஒன்­றி­ணைய வேண்­டும. தங்­க­ளது வடுக்­களை வார்த்­தை­களில் கூட சொல்ல இய­லாது தவிக்கும் மக்­களின் துன்­பங்­களை சர்­வ­தே­சத்தின் துணை­யோடு நீதி நிலை­நாட்­டப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். விசா­ரணை பொறி­மு­றை­களில் அம்­மக்கள் சர்­வ­தே­சத்தை மட்­டுமே தங்­க­ளது ஒரே இருப்­பாக நினைக்­கின்­றனர். ஒரு­போது உள்­நாட்டு விசா­ர­ணையை அம்­மக்கள் ஏற்­க­வில்லை.

காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களை கண்­ட­றிய ஆணைக்­கு­ழுவை அமைத்து தசாப்­த­கால கன­வு­களை அர­சாங்கம் மெய்ப்­பிக்க வேண்டும். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளி­னது தேவை­களை உணர்ந்து சான்­றி­தழ்­களை பெற்­றுக்­கொ­டுக்­கவும் அடிப்­படை வச­தி­களை பெற்­றுக்­கொ­டுக்­கவும் உட­னடி ஏற்­பா­டுகள் இலங்கை அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இவை அனைத்­துமே சர்­வ­தே­சத்தின் நேரடி கண்­கா­ணிப்­பின்கீழ் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தை ஒழித்தல்

யுத்த்­தினால் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களை கண்­ட­றி­யவும் வடக்கு கிழக்கில் இரா­ணுவ பிர­சன்­னத்தை குறைக்­கவும் பயங்­க­ரவாத் தடுப்பு சட்­டத்தை இல்­லா­ம­லாக்க வேண்­டும. எதேட்­சை­ய­தி­கார நட­வ­டிக்­கையை யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு திணிக்க அர­சாங்கம் முனை­யு­மாயின் அம்­மக்கள் கடும் விரக்­தி­ய­டை­வார்கள். என்­பதை அர­சாங்கம் உணர்ந்து செயற்­பட வேண்டும்.

சித்தி அமீனா, எக்­னெ­லி­கொட, வத­ன­சுந்­த­ரராஜ், முரு­கா­நந்தன் போன்ற ஊட­க­வி­ய­ளா­ளர்­களின் படு­கொ­லை­க­ளுக்கு அர­சாங்கம் என்ன நியா­யத்தை கூறப்­போ­கின்­றது. நீதி­யான விசா­ரணை மூலமே உண்­மையை கண்­ட­றிய முடியும். எனவே எவ்­வி­த­மான கால­தா­ம­த­மு­மின்றி காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­க­ளுக்கும் யுத்த்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் அர­சாங்கம் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கூடிய விசா­ர­ணையை ஆரம்­பிக்க வேண்டும். 

தற்­போது வடக்கு, கிழக்கில் எங்கு பார்த்­தாலும் ஆர்ப்­பாட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவை தற்­போது அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை­யா­க­வுள்­ளது. அர­சாங்கம் அம்­மக்­களின் உணர்­வு­களை காணவும் அவர்­க­ளுக்­கான தேவையை புர்த்தி செய்­யவும் அவர்கள் எடுத்­துக்­கொண்ட விட­யமே இந்த ஆர்ப்­பாட்­டங்கள் இதனை இலங்கை அர­சாங்கம் அலட்­சி­யப்­ப­டுத்­தி­விட கூடாது.

அடுத்­த­தாக நடை­மு­றையில் உள்ள பிரச்­சி­னை­களை இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யாக கண்­ட­றிய வேண்டும். தற்­போது யுத்தம் நிறை­வ­டைந்து 8 வரு­டங்கள் ஆகின்­றன. தற்­போதும் பழைய கதை­களை பேசி அம்­மக்­க­ளுக்கு போலி விம்­பத்தை காண்­பிப்­பதால் எவ்­வித நன்­மையும் ஏற்­பட்­டு­வி­ட­போ­வ­தில்லை. 

மேலும் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தற்­போது வறு­மையின் பிடிக்குள் ஆளா­கி­யுள்­ளனர். குறிப்­பாக நாம் முள்­ளிக்­கு­ளத்­துக்கு சென்­றி­ருக்கும் போது அங்கு முஸ்லிம் குடும்­பங்­களும் தமிழ் குடும்­பங்­களும் வசித்து வந்­தனர். அவர்கள் அந்த நிலத்தில் எட்டு தலை­மு­றை­க­ளாக வாழ்ந்த வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். முஸ்­லிம்கள் 1990 இல் இடம்­பெ­யர்ந்து அங்கு வாழ்க்ின்­றனர். ஆனால் அவ்­வி­டத்தில் எவ்­வி­த­மான அடிப்­படை வாழ்­வா­தார விட­யங்­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது அம்­மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­ற­மான விட­ய­மாகும்.

கேள்வி: இலங்­கையில் இடம்­பெற்ற இறுதி யுத்­தத்­தின்­போது இந்­திய படை­யி­னரும் அதி­க­ளவில் பங்­கெ­டுத்­தி­ரந்­தனர். அவ்­வா­றெனில் யுத்தத்தில் இறந்த இந்­தி­யர்­களின் தொகை பற்றி குறிப்­பிட முடி­யுமா?

பதில்: அது பற்றிய ஆய்வுகள் அவசியம் ஆனால் யுத்த்தில் இந்திய படையினரின் பங்களிப்பும் அதிகமாகவிருந்தது என்பதை மறுக்க முடியாது.

கேள்வி: சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியாவுக்கான கிளையை இலங்கையில் அமைப்பதற்கான நோக்கம் என்ன?

பதில்: கொழும்பில் சர்வதேச மன்னிப்பு ்சபையின் கிளைக்காரியாலயத்தை அமைக்க அவசியமான பல காரணிகள் உள்ளன. குறிப்பாக தற்போதய இலங்கை அரசாங்கம் அதற்கான சாதகத்தன்மையை உருவாக்கியுள்ளது. அத்தோட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு: நிச்சயமாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாம் கொழும்பில் எமது கிளைக்காரியாலயத்தை ஆரம்பிக்க உத்தேசித்தோம்.

கேள்வி: இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க அரசாங்கத்தை எந்தளவுதூரம் அழுத்தம் கொடுப்பீர்கள்?

பதில்: இலங்கை அரசாங்கத்துக்கு கொடுத்துள்ள காலநீடிப்பை பயன்படுத்த வெண்டிய முறைமை தொடர்பிலேயே நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். இனியும் நாம் காலதாமதப்படுத்த முடியாது. அரசாங்கம் அவசியம் செய்ய வெண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் தெளிவாக வரையறுத்து கூறியுள்ளோம். இதற்கென அரசாங்கத்தில் பல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். அதற்கு மேலதிகமாக எமது கிளைக்காரியாலயமும் இலங்கையில் அமைக்கப்படவுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-06#page-1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

இழு­த்­த­டிக்­காமல் மிகத் தௌிவாக செயற்ப­டு­வ­தற்­கா­ன ­அவகா­சமே இது - ரணிலிடம் அழுத்திக் கூறியது பன்னாட்டு மன்னிப்புச் சபை

போயும்....போயும்  ஆரிட்டை போய் சொல்லியிருக்கிறாங்கள் பாருங்கோ..:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.