Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாட்டிகிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Featured Replies

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை.

 

Tamil_News_large_1747104_318_219.jpg

அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. இவர்கள் பதுக்கிய பணத்தை கண்டறிய, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் விடாப்பிடி சோதனை நடந்து வருகிறது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சசிகலா அணியினர், கூவத்துாரில் அடைத்து வைத்திருந்த போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார். அப்போது, விஜயபாஸ்கருக்கு எதிராக, அவரது சொத்து குவிப்பு பட்டியலை, பன்னீர் அணியினர் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினர்.

காலை 6 மணி


தற்போது, ஆர்.கே.நகரில் போட்டியிடும், தினகரனின் வலது கரமாக, விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அங்கு நடந்த தாராள பணம் பட்டுவாடாவை பார்த்து, தேர்தல் ஆணையம் அதிர்ந்து போய், சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்துள்ளது.அதைத் தொடர்ந்து, தினகரனுக்கு பக்கபலமாக செயல்படும் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர்.
வழக்கத்துக்கு மாறாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை, பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்களின் உதவிக்கு, தமிழக போலீசாரும் வந்திருந்தனர்.சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, கெங்கு ரெட்டி தெருவில் உள்ள, விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, திருவொற்றியூரில் உள்ள மற்றொரு சகோதரி வீடு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் உள்ள, ஐந்து அறைகளிலும் சோதனை நடந்தது. இதில், விஜயபாஸ்கர் அறையில் இருந்து, 1.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 85 கோடி

அமைச்சரின் கணக்கு வழக்குகளை கவனிக்கும் சீனிவாசன் என்பவரின், வளசரவாக்கம் வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான, 89 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் சிக்கின.இதற்கிடையில், அமைச்சர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை, ஒரு கும்பல், புதுக்கோட்டை நிர்வாகிகள் தங்கியிருந்த, எழும்பூர், கென்னட் லேன், லட்சுமி லாட்ஜிக்கு கடத்தியது. அந்த தகவல் தெரிந்ததும், அந்த லாட்ஜிலும், அதிகாரிகள் புகுந்தனர். அங்கு, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்கள் பட்டியலும், அவர்களுக்கு பணம் தந்ததற்கான ஆவணங்களும் சிக்கின.
இது தவிர, திருவல்லிக்கேணியில் வசிக்கும், அமைச்சருக்கு நெருக்கமான நயினார் முகமது வீட்டில், மூன்று கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், அமைச்சருக்கு நெருக்கமான தரகர்,

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்பேஷ் ஷா என்பவரின் வீட்டில், 1.1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள, தமிழக மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., ராஜேந்திரன் வீடு உட்பட,சென்னையில், 26 இடங்களில் சோதனை நடந்தது.

ஸ்ரீரங்கம், தேவகோட்டை


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், சவுராஷ்டிரா தெருவில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, இரண்டு வீடுகள்; திருவேங்கைவாசல் பகுதியில், பினாமி நிறுவனமான, 'ராசி புளூ மெட்டல்ஸ் குவாரி' ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.மேலும், நச்சாந்துப்பட்டியில் உள்ள, அமைச்சரின் டிரைவர் அப்துல்லா வீட்டிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான அன்னை தெரசா கல்வி நிறுவனங்களிலும், இலுப்பூர் ராசி லாட்ஜிலும் சோதனை நடந்தது.மேலும், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மணப்பாறையிலும், நாமக்கல்லில் உள்ள அமைச்சரின் உறவினரான, கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் என, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் சோதனை நடந்தது.இதில், 89 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுவாடா ஆவணங்கள் மற்றும், 4.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சோதனையில், சென்னை, திருச்சி, கோவை, சேலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 30 க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.

போட்டுக் கொடுத்த சேகர் ரெட்டி


'அமைச்சர் விஜயபாஸ்கர், என் மறைமுக தொழில் கூட்டாளி' என, சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் தான், அவரது வீட்டில் சோதனை நடத்த காரணமாகி உள்ளது.தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:அரசு மணல் குவாரிகளை நடத்தும் உரிமம் பெற்றிருந்த, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில், 2016 டிசம்பரில் வருமான வரி சோதனை நடந்தது. அதில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் சிக்கியது.அவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின், சேகர் ரெட்டி மற்றும் அவரது தொழில் பங்குதாரர்கள், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக, சேகர் ரெட்டியிடம், டிசம்பர், 8ல் வாக்குமூலம் பெற்றோம். அப்போது, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற மணல், கிரானைட் சாம்ராஜ்ஜியத்தில், நான், சீனிவாசலு, ரத்தினம் ஆகிய மூவருடன், அமைச்சர் விஜயபாஸ்கர், சைலன்ட் பார்ட்னராக இருக்கிறார்' என்ற அதிர்ச்சி தகவலை, சேகர் ரெட்டி கூறினார். இந்தத் தகவல், அவரின், ௧௨௪ பக்க வாக்குமூலத்திலும் இடம் பெற்றுள்ளது.அப்போதிருந்தே விஜயபாஸ்கரை கண்காணித்து வருகிறோம். தேர்தல் பணம் பட்டுவாடாவுக்காக மட்டும், இந்த சோதனை நடைபெறவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மணல் சாம்ராஜ்ஜியம்!அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.ஏ.சுப்பையா என்பவரின் பெயரில், இலுப்பூரில் மணல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு, ஜல்லி, கிராவல் மண் ஆகியவை எடுக்கப்படுகின்றன. இந்த குவாரி வளாகத்தில், 'கான்கிரீட் மிக்சிங்' நிறுவனத்தை, மனைவி ரம்யா பெயரில், விஜயபாஸ்கர் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனங்களுக்கு, விஜயபாஸ்கரின் குடும்பத்தார் பெயரிலும், அவரின் பினாமிகள் பெயரிலும், நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இங்கு, 100 ஏக்கர் பரப்பில், மலை போல் குவிக்கப்பட்டுள்ள மணல் மற்றும் ஜல்லிகளை பார்த்தால், 10 ஆண்டுக ளுக்கு சப்ளை செய்ய முடியும் என, வருமான வரி அதிகாரிகள் திகைப்புடன் தெரிவித்தனர்.அணி மாற கைமாறிய பணம்!வருமான வரித்துறையினர் கூறியதாவது:நடிகர் சரத்குமாரை,

 

தினகரனுக்கு ஆதரவாக இழுக்க, விஜயபாஸ்கர் கடுமையாக முயன்றுள்ளார். இதில், ஏழுகோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது.சரத்குமாரை, தினகரனிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அழைத்து வந்துள்ளார். அதனால், சரத்குமாருக்கு தரப்பட்டதாக கருதப்படும் ரொக்கப் பணத்தை, அவரது வங்கி லாக்கர்களில் தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குட்கா அதிபரிடம் பல கோடி மாமூல்!


வருமான வரித்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் பான், குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை விதித்திருந்தார். ஆனால், மாநிலம் முழுவதும், அவை தங்கு தடையின்றி விற்பனையாகின. அந்த ஆலை அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் குவித்தனர்.அதனால், நாங்கள், 2016 ஜூலை மாதத்தில், சென்னை, திருச்சி மற்றும் ஆந்திராவில் உள்ள, குட்கா ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினோம். அதில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆலை அதிபர் மற்றும் கூட்டாளிகளிடம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 'டைரி' மூலம், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில், தடை விதிக்காமல் இருப்பதற்கு, மாமூல் தரப்பட்டிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

கீதாலட்சுமி சிக்கியது எப்படி?


தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் அரசு பொது மருத்துவமனை டீன் போன்ற பதவிகளை வகித்தவர்.சில பணி நியமனங்கள் மற்றும் மருந்து கொள்முதல்களுக்கு, விஜயபாஸ்கருக்கு தரகர் போல் செயல்பட்டதால், அவர் வீட்டில் சோதனை நடத்தியதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

 

அரசியல் பழிவாங்கல்!


வருமான வரி அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணிக்கு, வீட்டுக்கு வந்ததும், அமைச்சர் திடுக்கிட்டார். அப்போது, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, சமைப்பது போன்ற பணிகள் தொடரட்டும் என, அதிகாரிகள் கூறினர்.ஆனால், தன் மகளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என, அமைச்சர் பேட்டி கொடுத்ததால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.இதற்கிடையில், அமைச்சர் அளித்த பேட்டியில், ''தினகரன் வெற்றியை தடுக்கும் திட்டத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் மீறி, அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான், இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளதே தவிர, வேறெந்த காரணமும் இல்லை,'' என்றார்.
 

சரத்குமார் வீட்டில்நடந்த பரபரப்பு



சென்னை, கொட்டிவாக்கத்தில், சரத்குமார் வீடு உள்ளது. நேற்று காலை, 6:00 மணி முதல், வருமான வரித்துறையினர், இந்த வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டு வாசலில் நின்ற, இரண்டு பிரசார வாகனத்தை சோதனையிட்டனர்.வீட்டில், சரத்குமார், அவரது மனைவி ராதிகா இருந்தனர். சிறிது நேரத்தில், அங்கு கூடிய ரசிகர்கள், மோடி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.மாலை, 3:00 மணிக்கு, வீட்டுக்குள் நுழைய முயன்ற ரசிகர்களை, போலீசார் தடுத்தனர். அப்போது, போலீசார் மற்றும் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சரத்குமார் கூறியதாவது:தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க, என் வீட்டை சோதனையிட்டு உள்ளனர். மனைவி ராதிகா குளித்துக் கொண்டிருந்த போது, குளியலறை கதவை தட்டி, சாவி கேட்டனர். மருந்து வாங்கக் கூட வெளியே அனுப்பவில்லை. அதிகாரிகள், நாகரிகம் இல்லாமல் நடந்தனர்.நான், தினகரனை சந்தித்த பின், என் வீட்டை சோதனையிட்டது போல், பன்னீர்செல்வத்தை சந்தித்த வாசன் வீட்டை, ஏன் சோதனையிடவில்லை?இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1747104

  • தொடங்கியவர்
கமிஷனரிடம் புகார்அமைச்சர் கைதாவாரா?
 

 

  • gallerye_230608927_1747111.jpg

 

 
 

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம், வருமான வரித்துறையினர் புகார் அளித்துள்ளதால், அவர் கைதாக வாய்ப்புள்ளதாக, போலீசார் கூறினர்.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, வீட்டு வசதித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், காவலை மீறி உள்ளே புகுந்து, வாக்குவாதம் செய்தனர்.

அவர்களுடன் சேர்ந்து, விஜயபாஸ்கரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

 

பாதுகாப்பு கேட்டு புகார்

 


மேலும், சிலஆவணங்களையும், விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் பறித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹாவிடம், வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள், கூடுதல் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்தனர்.
தங்களது பணிக்கு இடையூறு செய்ததால், விஜயபாஸ்கர் மீது, போலீஸ் கமிஷனரிடம்,

 

 

வருமான வரித்துறையினர் புகார் அளித்துள்ளனர். அதனால், அவர் கைதாக வாய்ப்பு உள்ளதாக, போலீசார்தெரிவித்தனர்.

வருமான வரி ஆபீசில் பத்ரா!


ஆர்.கே.நகர் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்திற்கு, நேற்று பகல், 12:00 மணிக்கு வந்தார். தேர்தல் பணப் பட்டுவாடா குறித்து, அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பணப் பட்டுவாடா ஆவணங்கள் குறித்து அறிக்கை கேட்டுள்ளார்.அதை பெற்றுக் கொண்டு, பத்ரா, இன்று டில்லி செல்கிறார். அதன்பின், தேர்தல் ரத்து பற்றிய அறிவிப்பு வரவும் வாய்ப்பு உள்ளது.
-- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1747111

  • தொடங்கியவர்
விஜயபாஸ்கரை நீக்குங்கள்:
ஸ்டாலின் வலியுறுத்தல்
 
 
 


சென்னை, :'வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான, அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

 

Tamil_News_large_1747110_318_219.jpg


ஸ்டாலின் அறிக்கை:
ஊழல் செய்து, கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை வரவேற்கத்தக்கது. அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்
சுந்தரம் ஆகியோர், வருமான வரி அதிகாரிகளுடன் பிரச்னை செய்தது, கடும் கண்டனத்திற்குரியது.
வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான, அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக, முதல்வர் பழனிசாமி

பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அந்த நடவடிக்கையை, பொறுப்பு கவர்னர் எடுக்க வேண்டும்.
 

கண்டனம்



ஆர்.கே.நகர் தொகுதியில், பன்னீர்செல்வம் அணி சார்பில், மறைந்த முதல்வர், ஜெ., உருவ பொம்மை மீது, தேசியக் கொடிபோர்த்தப்பட்ட சவப்பெட்டியை, தெருவில் இழுத்து சென்று, குறுகிய அரசியல் நோக்குடன் ஓட்டு சேகரித்துள்ளனர். இது, தேசியக் கொடியின் மாண்பையும், கண்ணியத்தையும் கறைபடியச் செய்வதாகாதா என, பன்னீர்செல்வம் ஒருமுறை யோசித்துப் பார்ப்பது நல்லது.
இந்த பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் பாண்டியராஜனுக்கும், பன்னீர்செல்வம் அணியில் உள்ளோருக்கும், ஜெ., மீது எந்த அளவிற்கு வன்மம் உள்ளது என்பதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

ஓட்டுக்கு பணம் தி.மு.க.,வினர் 12 பேர் கைது



ஆர்.கே.நகரில், தி.மு.க.,வும்ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, புகார் கூறப்படுகிறது. பண வினியோகம் செய்த, 12

 

பேர் சிக்கியுள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகர் மக்களின் ஓட்டுகளை கவர, அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு, பணம், பரிசு பொருட்களை பட்டுவாடா செய்து வருகின்றன. தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாயை, இரவோடு, இரவாக கொடுத்தாக புகார் எழுந்தது. பணம் பட்டுவாடா செய்த, தினகரன் அணியைச் சேர்ந்த, 15 பேர் போலீசில் சிக்கினர்.
இந்நிலையில், தி.மு.க.,வினரும், தொகுதியில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் என, ஒரே இரவில், பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
உடன், தேர்தல் பறக்கும் படையினர், தொகுதி முழுவதும் சோதனை நடத்தி, தங்கராஜ், பாபு, கரிகாலன், சேகர் உள்ளிட்ட, தி.மு.க.,வினர், 12 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து, 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1747110

  • தொடங்கியவர்

விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் புகுந்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பதிவு: ஏப்ரல் 08, 2017 11:45

 
 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு சேகர் ரெட்டி காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 
 
 
 
விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் புகுந்தது  எப்படி?: பரபரப்பு தகவல்கள்
 
சென்னை:

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு, ஆர்.கே.நகரில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் பணப்பட்டு வாடா மட்டுமே காரணம் அல்ல என்று தெரிய வந்துள்ளது.

அரசு மணல் குவாரிகளை நடத்த உரிமம் பெற்று, அதில் முறைகேடுகள் செய்ததாக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டி கொடுத்த பல்வேறு தகவல்கள் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த அதிரடி சோதனைக்கு அடிப்படை காரணம் என்று கூறப்படுகிறது.

மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டி முறைகேடுகளில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்ததும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.132 கோடி பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அந்த வாக்குமூலம் 124 பக்கம் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலத்தில் சேகர் ரெட்டி தனக்கு தொழில் ரீதியாக யார்-யார் எல்லாம் உதவியாக இருந்தனர் என்று கூறியுள்ளார்.

அதில் ஒரு இடத்தில், “அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடன் மறைமுக பங்கு தாரராக இருக்கிறார்” என்று சேகர்ரெட்டி கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

சேகர் ரெட்டி வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்பே விஜயபாஸ்கர் பற்றிய தகவல்களை வருமான வரித்துறை சேகரித்திருந்தது. சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம், அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறையினரின் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரையும், அவரது பணபரிவர்த்தனைகளை கடந்த 9 மாதமாக கண்காணித்து வந்ததாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக, அமைச்சர் விஜயபாஸ்கர், இலுப்பூரில் எஸ்.ஏ.சுப்பையா என்பவர் பெயரில் மணல் குவாரி நடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த மணல் குவாரி வளாகத்தில் தன் மனைவி பெயரிலும் அவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நேற்று அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதுபற்றி ஒரு அதிகாரி கூறுகையில், “அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் பெயரில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் சார்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மணல், ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
 
201704081145039802_vijaya-baskar%201._L_

அமைச்சர் விஜயபாஸ்கர் முதன் முதலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகப் பார்வை வளையத்துக்குள் வந்தார். கடந்த ஜூலை மாதம் பான், குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு குட்கா அதிபர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டைரியில், சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் குட்காவுக்கு தடை விதிக்காமல் இருப்பதற்காக விஜயபாஸ்கருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.

ஒவ்வொரு மாதமும் அந்த குட்கா அதிபர், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பல கோடி ரூபாயை மாமூல் போல் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இயலவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி சேகர்ரெட்டி வீட்டில் சோதனை நடந்தபோது கிடைத்த ஆவணங்கள், விஜயபாஸ்கருக்கு மணல் காண்டிராக்டர், குட்கா அதிபரிடம் இருந்த ரகசிய தொடர்புகளை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
 
201704081145039802_sekar-reddy._L_styvpf

சேகர் ரெட்டியை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அவரது கல்லூரி தோழர் ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்தது தெரிய வந்துள்ளது. மற்றொரு கல்லூரி நண்பர் மூலம் சசிகலா குடும்பத்தினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நெருக்கமானதும், வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுக பங்குதாராக இருப்பதாக கூறப்படும் எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் நிறுவனம், தினமும் தமிழ் நாட்டின் ஆறுகளில் இருந்து சுமார் 55 ஆயிரம் லாரி மணலை விற்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் குறைவாகவே கணக்கு காட்டப்படும்.

இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரூ.15,000 கோடியில் கணிசமான பணத்தை சேகர் ரெட்டி தன் பங்கு தாரர்களுக்கு பிரித்துக் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

இதை அடிப்படையாக வைத்து அமைச்சர் விஜய பாஸ்கர் எவ்வளவு பணம் பெற்றிருப்பார் என்று வருமான வரித்துறையினர் கணக்கிட்டுள்ளனர். இந்த கணக்கீடுதான் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனைக்கு வித்திட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/08114504/1078816/How-is-income-tax-department-entered-the-Vijaya-baskar.vpf

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.