Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... முடிவு யார் கையில்?!

Featured Replies

ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... முடிவு யார் கையில்?!

தேர்தல்ஆணையம்

ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... நடக்காதா என்பது டெல்லியில் இன்று (08-04-17) மாலை நடைபெற உள்ள தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. மேலும், பணத்துடன் ஆர்.கே.நகரில் சிலர் பிடிபடவும் செய்தார்கள். ஆர்.கே.நகர் தேர்தலை பணமில்லாத் தேர்தலாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் இருந்தாலும் பணம் கொடுப்பதைத் தடுக்கமுடியாமல் கையைப் பிசைந்து நின்றது.

வாக்காளர்களுக்குப் பணம்வரும் வழிகளை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வந்த தேர்தல் ஆணையம், தமிழக அமைச்சர்கள் வழியாகவே பண விநியோகம் நடப்பதை அறிந்து அதிர்ந்துபோனது. தேர்தல் களத்தில் முன்னிலையில் நின்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்த தேர்தல் ஆணையம், அதுகுறித்த தகவல்களை வருமானவரித் துறைக்கும் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று (07-04-17) காலை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, கல்குவாரி, அவருடைய உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் வீடுகள் எனப் பல இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தினர் வருமானவரித் துறையினர். அவர்கள் நடத்திய ரெய்டில் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 

தினகரன்அதில், ஆர்.கே.நகர்த் தொகுதியில் மொத்தம் உள்ள வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குக் கொடுக்கபட்ட தொகையின் விபரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள். இந்த நிலையில் இன்று காலை ஆர்.கே.நகரில் போட்டியிடும் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் டெல்லிக்குச் சென்று தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார்கள். 

அந்தப் புகார் மனுவில், “அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் கைப்பற்றபட்ட ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆர்.கே.நகரில் வாக்களார்களுக்கு ஆயிரக்கணக்கில் அமைச்சர்கள் வழியாகவே பணம் செல்கிறது. எனவே, தேர்தல் களத்தில் நிற்கும் அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்; இல்லை என்றால் தேர்தலை நிறுத்த வேண்டும்” என்று மூன்று சுயேட்சை வேட்பாளர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாகவும், அதில் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதா... வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/85828-ec-will-decide-about-rk-nagar-bypoll.html

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை... ராஜேஷ் லக்கானி டெல்லி பயணம்!

rajesh lakhoni

தமிழக தலைமைத் தேர்தல் ஆதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்கிறார். அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை டெல்லியில் சிறப்பு ஆலோசனை நடத்த உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆர்.கே.நகரில் தொடர்ச்சியாக பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை ராஜேஷ் லக்கானி நஜீம் ஜைதியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/india/85847-rajesh-lakhoni-set-to-travel-to-delhi-tomorrow.html

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் தொகுதியில், பணம் பட்டுவாடா நடந்தது தொடர்பாக, அறிக்கை அளிக்க, தனி தேர்தல் அதிகாரி, டில்லி சென்றுள்ளதால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்து உள்ளன.

 

Tamil_News_large_174781820170409000815_318_219.jpg

சட்டசபை பொதுத் தேர்தலின் போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு அதிக அளவில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக, புகார் எழுந்தது.

பறக்கும் படை, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில், கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியது. அதன் தொடர்ச்சியாக, இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்தி வைக் கப்பட்டது. ஜெ., மறைவுக்கு பின், அவர் வெற்றி பெற்ற, ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், சசிகலா அக்கா மகன் தினகரன், களம் இறங்கி யுள்ளார்.
 

அதிரடி நடவடிக்கை


மக்கள் எதிர்ப்பு அதிகம் உள்ள நிலையில், பணத்தை மட்டும் நம்பி, அவர் களம் இறங்கிய தால், பட்டுவாடா எதிர்பார்ப்பு, வாக்காளர்களி டம் ஏற்பட்டது. பணம் பட்டுவாடா தாராளமாக நடைபெறுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டது. அதை மீறி, தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வீதம், பட்டுவாடாவை கச்சிதமாக செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து, தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பன்னீர் அணியினர் பணம்

வழங்குவதற்காக, 'டோக்கன்' வழங்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு தினகரன் அணியினர், பணம் தரும் வீடியோ காட்சி கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது, தேர்தல் கமிஷனுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர் தல் பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப் பட்டு உள்ள, தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், தேர்தல் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை தேர் தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்தியேகன், தேர்தல் நடத்தும் அலுவ லர் பிரவீன் நாயர், சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா பங்கேற்றனர். அதில், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா நடந்தது குறித்த விபரங் களை, விக்ரம் பத்ரா கேட்டறிந்தார்.
 

முக்கிய முடிவு


மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை யில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த தற்கான, ஆவணங்கள் சிக்கி உள்ளன.இதன் தொடர்ச்சியாக, 'தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். பட்டுவாடா புகாருக்குள்ளான கட்சி வேட்பாளரை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அரவக்குறிச்சி தொகுதியில் நடந்தது போன்ற சம்பவங்கள், தற்போது, ஆர்.கே.நகரில் அரங்கேறி உள்ளன. அதனால், ஆர்.கே.நகர் தொகுதியிலும், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. இச் சூழ்நிலையில், தனித்தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, பணம் பட்டுவாடா குறித்து, தேர்தல் கமிஷ னுக்கு அறிக்கை அளிப்பதற் காக, நேற்று மாலை, 5:00 மணிக்கு, விமானத்தில், டில்லி புறப்பட்டு சென்றார்.

அவர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், தேர்தல் கமிஷன் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, 'ஆர்.கே.நகர்

 

இடைத்தேர்தலை, ஜூன், 5க்குள் நடத்தி முடிக்க வேண்டும். போதிய கால அவகாசம் இருப்பதால், தேர்தல் கமிஷன் நினைத்தால், தேர்தலை ஒத்திவைக்க முடியும்' என்றனர்.
 

தலைமை தேர்தல் அதிகாரிக்கு அழைப்பு


ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா நடந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, தேர்தல் கமிஷன் அவசரமாக, டில்லிக்கு அழைத்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான, ஆதாரங் கள் சிக்கி உள்ளன. வருமான வரித்துறையும், தாங்கள் நடத்திய சோதனை குறித்து, தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, டில்லி வரும்படி, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி உத்தரவிட்டுள்ளார்.

அதை ஏற்று, ராஜேஷ் லக்கானி இன்று காலை, விமானம் மூலம் டில்லி செல்கிறார். ஆலோசனைக்குப்பின், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என, தெரிகிறது. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1747818

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகிறதா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RK Nagar

ஆர்.கே.நகர் வருகின்ற 12-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை சுமார் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. அந்த சோதனையின் முடிவில் விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

 
 

மேலும், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவை வெளியாகின. அந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவர்கள் மூலமாக ஒரு வாக்களருக்கு 4,000 ரூபாய் வரை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆர்.கே.நகர்த் தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து 85 சதவீத வாக்களர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணப்பட்டுவாடா செய்த ஆவணங்களை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளதை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தேர்தல் ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. சில ஆங்கில செய்தி நிறுவனங்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரால், ஏற்கெனவே கடந்த சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/85917-election-commission-of-india-cancelled-rk-nagar-by-poll.html

  • கருத்துக்கள உறவுகள்

election1.jpg

 

நன்றி புதியதலைமுறை

  • தொடங்கியவர்

பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவு: ஏப்ரல் 10, 2017 00:23

 
 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது.

 
 
 
 
பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12-ந்தேதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகரில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. 62 பேர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 2 அணிகளுக்கும் (சசிகலா- ஓ.பி.எஸ். அணி) தி.மு.க.வுக்கும் இடையே அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கமி‌ஷனுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
201704100023489476_Copy%20of%20RK-nagar.
ஆனால் தேர்தல் அதிகாரிகளின் கண்ணை மறைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பணம் வெட்டவெளிச்சமாக வினியோகம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பணப்படுட்டுவாடா செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரியான நஜீம் ஜைதி தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
201704100023489476_FDSLAHF._L_styvpf.gif
முன்னதாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நேற்று முன்தினம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கரின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களிடமிருந்து ரூ.3 கோடிக்கும் மேல் ரொக்கப் பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/10002348/1079046/Election-Commission-cancelled-RK-Nagar-By-Polls.vpf

  • தொடங்கியவர்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளதாக, நேற்றிரவு தகவல் வெளியானது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்றிரவு, 11:30 மணிக்கு வெளியானது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் கமிஷன், ரத்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tamil_News_large_1748452_318_219.jpg

இதனால், பணத்தை வாரி இறைத்த, அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர், தினகரன்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ., வாக இருந்த ஜெயலலிதா காலமானதை அடுத்து, இத்தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

தேர்தலில், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில்,

அக்கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரனும், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், முன் னாள் அமைச்சர் மதுசூதனனும் வேட்பாளர் களாக களம் இறங்கினர். தி.மு.க., சார்பில், மருதுகணேஷ் உட்பட, மொத்தம், 62 பேர் களமிறங்கினர்.

எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தினகரன் பணத்தை வாரி இறைத்து வந்தார். தேர்தல் கமிஷன் கெடுபிடி களை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக் காளர்களுக்கு வழங்கிய, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. இதை யடுத்தும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.
இந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளி யாகின. அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான,

 

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர் களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொரு வரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டில்லிக்கு விரைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கியது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆலோசனையில் இவர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை துவங்கி, இரவு வரை நடந்த நீண்ட ஆலோசனைக்கு பின், தேர்தலை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றிரவு, 11:30க்கு வெளியானது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1748452

  • தொடங்கியவர்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள்

பதிவு: ஏப்ரல் 10, 2017 01:43

 
 

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

 
 
 
 
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள்
 
புதுடெல்லி:
 
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருந்த நிலையில் பல்வேறு ஆலோசணைகள் நடத்தப்பட்ட பின் தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான அறிவிப்பை இணையத்தளம் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. 
 
பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் வருமான வரி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. முறைகேடுகளை தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் நூதன முறையில் மீறப்பட்டுள்ளன. 
 
201704100143529603_ec._L_styvpf.gif
 
அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 21இல் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக இதுவரை மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.    
 
ஏப்ரல் 7-ந்தேதி வரை ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன், வெள்ளித் தட்டு, புடவைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் பலர் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
201704100143529603_ec%20order._L_styvpf.
 
டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்கு பின் தேர்தல் ரத்து செய்யப்படும் முடிவு எட்டப்பட்டுள்ளது. 
 
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/10014352/1079050/key-facts-why-RK-Nagar-Bypoll-was-rescinded.vpf

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காலிசெய்த விஜயபாஸ்கர்: தேர்தல் ஆணையம் அடுக்கும் ஆதாரங்கள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 12-ம் தேதி நடைபெற இருந்தது. ஆளும்கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் வீதம் 85 சதவிகித வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது எனச் செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை திடீர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியது. அவரது வீட்டில் சிக்கியதாக சில ஆவணங்கள் வெளியானது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை சார்பில் ரகசிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடமும் அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் 12-ம் தேதி நடக்க இருந்த இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்துசெய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக, 29 பக்க அறிக்கையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:

RK Nagar

சென்னையில் 21 இடங்களிலும் சென்னையைத் தாண்டி 11 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகள் இந்தச் சோதனையில் முக்கியமான இடங்கள் ஆகும். 12- ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக, விஜயபாஸ்கர் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா  நடக்கிறது என்று வருமான வரித்துறைக்கு தகவல் வந்துகொண்டிருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கரின் அக்கவுன்டென்ட் சீனிவாசனிடமிருந்து சில தாள்கள் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா தொடர்பாக தகவல் இருந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன் சில வாகனங்கள்மூலம் பணப் பட்டுவாடா  செய்துள்ளார். 

விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 5 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. எம்எல்ஏ-க்கள் விடுதியில் விஜயபாஸ்கருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில், பணப்பட்டுவாடா எப்படி எல்லாம் நடத்த வேண்டும். வார்டு , பூத் வாரியான புள்ளி விவரங்கள், 89 கோடி ரூபாயை யார் யாரெல்லாம் செலவுசெய்ய வேண்டும் என்ற விவரம், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்தது. அ.தி.மு.க, தி.மு.க என்று வாக்காளர்களைப் பிரித்து, பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. மேலும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பான நிறைய ஆவணங்களும் வருமான வரி சோதனையில் கிடைத்தன.

Election Commission team

தேர்தல் அதிகாரிகளால் ஆர்.கே.நகரில் ரூ.31.91 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக, 8 முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல் தேர்தல் பார்வையாளர், "பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் சப்ளை, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் எல்லாம் தேர்தல் நடத்தைகளையே சவால்விடும் வகையில் இருந்தது'' என்று கூறியுள்ளார்.

இரண்டாவது, தேர்தல் பார்வையாளர் கொடுத்துள்ள அறிக்கையில், ''ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள், மூத்த தலைவர்களே முன்னின்று பணம் சப்ளைசெய்ததாக, கட்டுபாட்டு அறைக்கு நிறைய புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள், வருமான வரித்துறையோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது" என்று கூறியுள்ளார்.

VijayaBaskar

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கவனித்தது. மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஆய்வுசெய்தோம். இவை எல்லாவற்றின் அடிப்படையில், அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் அட்டவணை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. தேர்தல் நியாயமாக நடத்தும் வகையில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

http://www.vikatan.com/news/india/85926-reason-to-cancel-rk-nagar-by-election.html

  • தொடங்கியவர்

ஓட்டுக்கு பணம்: ஆர்.கே.நகரில் தேர்தல் கமிஷன் அதிரடி - கற்றுத்தரும் பாடம் என்ன?

பதிவு: ஏப்ரல் 10, 2017 10:51

 
 

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ள நிலையில் இனிவரும் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக இங்கே ஆய்வு செய்வோம்.

 
 
 
 
ஓட்டுக்கு பணம்: ஆர்.கே.நகரில் தேர்தல் கமிஷன் அதிரடி - கற்றுத்தரும் பாடம் என்ன?
 
சென்னை:

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டாக உடைந்த அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணி என எதிரும் புதிருமாக இருந்த அணிகள் தேர்தல் களத்தில் மோதின. பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான தி.மு.க.வும் போட்டியிட்டது. 62 பேர் களத்தில் இருந்த போதிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 அணிகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேதான் போட்டி நிலவியது.

சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும் களம் இறங்கினர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தலை நடத்துவதற்காக சிறப்பு அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமிக்கப்பட்டார். இவர் டெல்லியில் இருந்து சென்னை வந்து மாநில தேர்தல் ஆணையரான ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தேர்தலில் முறைகேட்டை தடுக்க துணை ஆணையரான உமேஷ் சின்காவும் நியமிக்கப்பட்டார். மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி மேற்பார்வையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்திகேயன் மற்றும் நூற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள் பரபரப்பாக தேர்தல் களத்தில் இயங்கினர்.

பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமிராக்களும் அமைக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா ஜோராக நடைபெற்றது.

டி.டி.வி.தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் சிக்கியது. இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளருமான அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனையில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து இடைத்தேர்தலுக்கு ஆணையம் கிடுக்குப்பிடி போட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்து அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
201704101051596107_money._L_styvpf.gif

திருமங்கலம் இடைத்தேர்தலில் தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது அதிகமாக பேசப்பட்டது. அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வீடு வீடாக சென்று பால் பாக்கெட்டுகளுடன் பணமும் சப்ளை செய்யப்பட்டது. அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தல்களிலும், திருமங்கலம் பார்முலாவை பின்பற்றியே ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

ஆனால் எந்த இடைத்தேர்தலிலும் ஆர்.கே.நகரில் நடந்தது போன்ற பணப்பட்டுவாடா அதிகமாகவும், வெட்ட வெளிச்சமாகவும் நடந்தது இல்லை. இதன் காரணமாகவே ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஆர்.கே.நகர் மக்கள் மத்தியிலும் சரி, தமிழகம் முழுவதிலும் சரி, எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக இது எதிர்பார்த்த ஒன்றுதானே என்று மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பணப்பட்டுவாடா அனைத்து தரப்பினரையுமே முகம் சுளிக்க வைத்திருந்தது ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கி விடுமோ? என்கிற கவலை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலுமே காணப்பட்டது. இதனை போக்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பரவலான கருத்து உள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருப்பதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. ஒரு தொகுதியில்தானே தேர்தல் நடந்தது. அந்த தேர்தலை கூட நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் ஆணையத்தால் நடத்திக் காட்ட முடியவில்லையே? என்கிற ஆதங்கம் எல்லோரது மனதிலுமே ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் கதையாகவே உள்ளது. செய்ய வேண்டியவற்றை முறையாக செய்யாமல் (ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாமல்) கடமையில் இருந்து பின்வாங்கி விட்டதாகவே ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

தேர்தலை நடத்த டெல்லியில் இருந்து வந்த சிறப்பு அதிகாரி, நுண்பார்வையாளர்கள், துணை ராணுவப் படையினர், போலீசார் என அத்தனை பேரின் கண்ணையும் மறைத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வி‌ஷயம் அவமானம் என்றே சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சரி... இப்போது தேர்தலை ரத்து செய்தாகி விட்டது. அடுத்த முறை தேர்தல் நடக்கும்போது, இது போன்ற முறைகேடுகள் நடைபெறாதா? அதற்கு தேர்தல் ஆணையத்தால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.

இடைத்தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக என்று குறிப்பிடும் அளவுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது “தமிழகத்துக்கே அவமானம்” என்கிற குற்றச்சாட்டையும் அரசியல் கட்சியினர் முன் வைக்கிறார்கள். இதனை அப்படியே துடைத்துப்போட்டு விட்டு சென்று விட முடியாது.
 
201704101051596107_election-commission._

வருங்காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவே மாறிப் போய் இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது இதுபோன்ற “பல பாடங்களையும் கற்றுத்தந்திருக்கிறது.

எப்படியும் இன்னொரு முறை ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும். அப்போதும் இது போன்ற தேர்தல் ஆணையம் கோட்டை விட்டு விடக் கூடாது. முறைகேடுகள் நடப்பது தெரியவந்தவுடன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், அதனை கொடுக்கச் சொல்லி தூண்டியவர்கள், சம்பந்தப்பட்ட வேட்பாளர் என அத்தனை பேர் மீதும் பாரபட்சமின்றி தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்ற வேண்டும்.

ஒரு வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆதாரங்களுடன் அம்பலமானால், அந்த வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒரு முறை இதுபோன்று நடவடிக்கை எடுத்துவிட்டால் போதும்... அது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தகுந்த பாடமாக நிச்சயம் அமையும்.

“லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர்...” என்கிற வாசகங்களை அரசு அலுவலகங்களில் பார்த்திருப்போம். ஆனால் மக்கள் பணியாற்ற போட்டி போடும் அரசியல் கட்சி வேட்பாளர் லஞ்சம் கொடுத்தே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இன்றைய அரசியல் களத்தில் காணப்படுகிறது. இதனை மாற்றிக் காட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

ஓட்டுக்கு பணம் வாங்குவதும் குற்றம்... கொடுப்பதும் குற்றம்... என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் தேர்தல் ஆணையம் அதனை கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்.

அதே நேரத்தில் “ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க” என்று பணத்தை கேட்டு வாங்கும் மக்களின் மனநிலையும் மாற வேண்டும். ஓட்டு கேட்டு செல்லும் அரசியல்வாதிகள் “உங்களது பொன்னான வாக்கு”களை என்று கூறியே ஓட்டு கேட்பார்கள். இதன் உள் அர்த்தத்தை மக்கள் உணர வேண்டும்.

பொன்னான வாக்குகளை புண்ணியவான்களுக்கு (நல்லவர்களுக்கே) போட்டு புண்ணியம் தேடிக்கொள்வோம். எந்த சூழ்நிலையிலும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்றும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையமும், விழிப்புணர்வு பிரசாரங்களை மட்டும் செய்து விட்டு நமக்கென்ன... என இருந்து விடாமல் கருமமே கண்ணாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான்... ஜனநாயகத்தை பணநாயகம் வெல்ல முடியாமல் காக்க  முடியும்.

விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அது சாத்தியப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/10105159/1079093/Election-Commission-order-to-RK-Nagar-Election-Cancel.vpf

  • தொடங்கியவர்

'ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்ய வைத்த விக்ரம் பத்ரா ஐ.ஆர்.எஸ்?!' - இறுதி கள நிலவரம்

ஆர்.கே.நகர்

அ.தி.மு.க அம்மா அணி சார்பில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் வரையில் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். 'வருமான வரித்துறை சோதனைக்கு முன்பாகவே, தேர்தல் ரத்து குறித்து மத்திய அரசில் உள்ளவர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாகவே ஐ.ஆர்.எஸ் அதிகாரி விக்ரம் பத்ரா அனுப்பப்பட்டார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, ஆளும்கட்சி நிர்வாகிகள் கள வேலைகளில் தீவிர ஆர்வம் காட்டினர். ஒரே காரணம், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதுதான். இரட்டை இலை முடக்கத்துக்குப் பிறகும், தொப்பி சின்னத்தை வீடு வீடாகக் கொண்டு சென்றனர். பண விநியோகத்திலும் விதம்விதமான யுக்திகளைக் கடைபிடித்தார் தினகரன். எந்த ஒரு நிர்வாகியிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் சிக்காத அளவுக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் எனப் பணத்தைப் பிரித்து விநியோகிக்க வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனும், வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரையில் விநியோகித்ததாக செய்திகள் வெளியானது. "தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கும் என்பதில் தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். ஒருவேளை ரத்து செய்யாவிட்டால் பார்த்துக் கொள்ளலாம் என தலைமைக் கழகத்தில் இருந்து அறிவுறுத்தியிருந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே, தஞ்சை, அரவக்குறிச்சியைப் போல் தேர்தலை ரத்து அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டது" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

விக்ரம் பத்ராவருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "தலைமைச் செயலகத்தில் கடந்த நான்கு நாட்களாகவே தேர்தல் ரத்து தொடர்பான ஆலோசனைகள் வேகம் எடுத்து வந்தன. ஆர்.கே.நகரில் நடக்கும் பண விநியோகம் தொடர்பாக, தி.மு.க, சி.பி.எம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியைச் சந்தித்துப் புகார் மனு கொடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையரை  சந்திக்க அரசியல் கட்சிகள் சென்றுள்ளனர். அப்போது தீவிர மன உளைச்சலில் லக்கானி இருந்தார். ' தேர்தலை ரத்து செய்யுங்கள்' என டெல்லியில் இருந்து வந்த அழுத்தத்துக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார். கடந்த ஒரு வார காலமாக அவரிடம் இருந்து உறுதியாக எந்தப் பதிலும் வராததால், டெல்லியில் உள்ளவர்களுக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. இதையடுத்தே, ஐ.ஆர்.எஸ் அதிகாரியான விக்ரம் பத்ராவை அனுப்பி வைத்துள்ளனர். தேர்தல் செலவீனங்கள் தொடர்பானவற்றில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர் விக்ரம் பத்ரா. எந்த இடத்தில் எப்படியெல்லாம் விநியோகம் நடக்கும்; அதை எப்படிக் கையும் களவுமாகப் பிடிப்பது என்பதில் பத்ராவின் அனுபவம் மிக அதிகம். அவரது வருகைக்குப் பிறகே வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் சுறுசுறுப்பு நிலவியது. பணம் செல்கின்ற பாதையை மிக எளிதாக ட்ரேப் செய்துவிட்டனர்.

விஜயபாஸ்கர்குறிப்பாக, சீனியர் அமைச்சர்களின் உதவியாளர்கள் அனைவரும் கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்ற யோசனையே இல்லாமல், வெளிப்படையாகவே அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் நடந்து கொண்டனர். இதுகுறித்து, மிக முக்கியமான ஆதாரம் ஒன்று சோர்ஸ் மூலம் எங்களுக்கு வந்து சேர்ந்தது. இதன்பின்னரே விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தோம். ரெய்டின்போது ஏராளமான பணம் பிடிபடும் என்று நினைத்தோம். அவரது வரவு செலவு கணக்குகள் குறித்த அத்தனை ஊழல் விஷயங்களும் வெளிப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு ஆளும்கட்சி அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்தவில்லை. ' தங்கள் பக்கம் வர மாட்டார்கள்' என்ற நம்பிக்கையில் அவர்கள் வலம் வந்தார்கள். கூவத்தூர் நிகழ்வுக்கு முன்பிருந்தே விஜயபாஸ்கருக்குப் பணம் வரும் வழிகளைக் கண்டறிந்து, கண்காணித்து வந்தோம். அவரை நெருங்குவதற்கு ஆர்.கே.நகர் தேர்தல் களம் ஒரு கருவியாக அமைந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்குவதற்காக சனிக்கிழமை காலையில் விக்ரம் பத்ரா சென்றார். மறுநாள்(ஞாயிறு) லக்கானி சென்றார். லக்கானி வந்து சேருவதற்கு முன்பாகவே, தேர்தலை ரத்து செய்வது தொடர்பான முடிவை எடுத்துவிட்டனர்" என்றார் விரிவாக. 

" வாக்காளர்களுக்குப் பண விநியோகம் தொடர்பான தகவல்கள், இந்தளவுக்கு பகிரங்கமாக வெளியானதற்குக் காரணமே, தினகரனுக்கு தற்போது வலதுகரமாக இருக்கும் தென்மாவட்டப் புள்ளி ஒருவர்தான். பண விநியோகம் தொடர்பாக மூத்த அமைச்சர்களை அவர் தவறாகக் கையாண்டுவிட்டார். பணப்பட்டுவாடா தொடர்பான தகவல்களை வெகு சுதந்திரமாக வெளியில் உலவவிட்டுவிட்டார். ' சொந்த தொகுதிக்குள்ளேயே போட்டியிட்டுத் தோற்றுப் போனவருக்கு, ஆர்.கே.நகரில் விநியோகத்தைக் கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்' என தினகரனிடமே சீனியர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர். இதை காதில் வாங்காமல், மத்திய அரசின் முடிவால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் தினகரன். ' அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் நடக்கவிடாமல் சதி செய்துவிட்டனர். ‘நாம் வெற்றி பெறுவோம் என உறுதியாகத் தெரிந்தாலே, தேர்தலை ரத்து செய்யும் முடிவை அவர்கள் எடுப்பார்கள்’ என்பது நாம் அறிந்ததுதான். மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' எனப் பேசியிருக்கிறார். 'வருமானவரித்துறைக்கு நம்மைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு எது?' என்ற கேள்விதான் ஆளும்கட்சியினர் மத்தியில் வலம் வருகிறது" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

இன்று காலை வருமான வரித்துறையின் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 'ஆர்.கே.நகரை மையப்படுத்தி மட்டுமே கேள்விகள் இருக்காது; அதையும் தாண்டி பல விஷயங்களைத் துருவ இருக்கிறது புலனாய்வுத்துறை' என்கின்றனர் வருமானவரித்துறை வட்டாரத்தில். 

http://www.vikatan.com/news/tamilnadu/85944-final-moments-of-rk-nagar-by-election-vikram-batra-behind-the-cancellation.html

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக தேர்தல் கமி‌ஷனின் 29 பக்க விளக்கம்

பதிவு: ஏப்ரல் 10, 2017 12:20

 
 

ஆர்.கே.நகரில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையான முறையிலும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான சூழ்நிலை உருவான பின்புதான் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது.

 
 
 
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக தேர்தல் கமி‌ஷனின் 29 பக்க விளக்கம்
 
சென்னை:

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது.

201704101220161446_ammma._L_styvpf.gif

இதற்கான உச்சக்கட்ட பிரசாரம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் தேர்தல் விதிமீறல் அடிப்படையில் இடைத்தேர்தலை திடீரென்று தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்து நேற்று இரவு அறிவித்தது.

தேர்தலை ரத்து செய்தது ஏன் என்பது தொடர்பாக 29 பக்க விளக்க அறிக்கையை தேர்தல் கமி‌ஷன் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடைபெற்றன. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பும் போடப்பட்டது.

மாநில போலீசாருடன், மத்திய ரிசர்வ் படை போலீசாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகளும் தொடங்கப்பட்டன.

256 வாக்குச்சாவடிகளுக்கு 256 நுண்பார்வையாளர்களாக மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர தேர்தல் நடத்தும் பணியில் மத்திய அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

12-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியிலும், வெளியேயும் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இரவு நேர ரோந்துப் பணியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அரசியல் கட்சிகள் புகார்களின் அடிப்படையில் 22 போலீஸ் அதிகாரிகளும், 18 வருவாய்த் துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். மேலும் ஒரு உதவி கமி‌ஷனர், 2 நிர்வாக என்ஜினீயர்கள், 4 உதவி நிர்வாக என்ஜினீயர்கள், 4 உதவி என்ஜினீயர்களும் இட மாற்றம் செய்யப்பட்டார்கள்.

தேர்தல் பணிக்கு அரசுத் துறை வாகனங்களை அமைச்சர்களோ, அரசியல் தலைவர்களோ பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் கமி‌ஷன் தெரிவித்தது.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாகவும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன், பிரீபெய்டு போன் ரீச்சார்ஜ் கூப்பன்கள், பால் டோக்கன்கள், வாக்காளர்களின் வங்கி கணக்குகளை பெற்று அதன் மூலம் அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துதல் போன்றவை நடைபெறுவதாக தேர்தல் பார்வையாளர்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து வாக்காளர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. ரீசார்ஜ் செய்யும் மொபைல் நிறுவனங்கள், பால் விற்பனையாளர்கள் ஆகியோரும் கண்காணிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் டோக்கன்கள் மூலம் அதிக அளவில் பொருட்கள் விற்பனையாவதை வணிக வரித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். இது தொடர்பான புகார்கள் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 7-ந்தேதி வரை தேர்தல் பணப்பட்டுவாடா, தொடர்பாக நடைபெற்ற சோதனையில் ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பணம் தவிர விளக்குகள், டி.‌ஷர்ட்கள், சில்வர் தட்டுகள், செல்போன்கள், புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அ.தி.மு.க. அம்மா அணியினர் மிகப்பெரிய அளவில் தொப்பிகள், தலையை மூடக்கூடிய துணிகளை தொகுதி முழுவதும் சப்ளை செய்துள்ளனர்.

ஒரு நிறுவனத்திடம் இருந்து 1000 தொப்பி ரூ.30 ஆயிரம் விலையில் மொத்தம் 10 ஆயிரம் தொப்பிகள் ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பில்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதே போல் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் கட்சி சின்னத்துடன் கூடிய டி.‌ஷர்ட்டுகள் விநியோகம் செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த அணியைச் சேர்ந்த மணி என்பவர் பிடிபட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 டி.‌ஷர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்தவர்களை பறக்கும் படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே வரி ஏய்ப்பு மற்றும் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களிலும், சென்னையில் 11 இடங்களிலும் சோதனை நடத்தினார்கள்.

அவருடன் தொடர்புடைய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததில் அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய பங்காற்றியிருப்பது தெரிய வந்தது.

அவரது கணக்காளர் சீனிவாசனிடம் இருந்து ரூ.89 கோடி பணம் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய இருப்பதற்கான துண்டு சீட்டுகள் கைப்பற்றப்பட்டது.

இதே போல் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் வீட்டில் இருந்தும் பெரிய அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. இதுவும் வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி பணம் சிக்கியது. எம்.எல். ஏ.க்கள் விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் அறையில் இருந்து பணப்பட்டுவாடா தொடர்பான பட்டியல் சிக்கியது. அதில் முன்னணி நிர்வாகிகள் வார்டு வாரியாக , பாகம் வாரியாக ஒவ்வொரு வாக்காளருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்ற குறிப்பும் இடம் பெற்று இருந்தது.

வருமான வரித்துறை நடத்திய சோதனையின் மூலம் மொத்தம் ரூ. 89 கோடி பணம் விநியோகம் நடைபெற இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதே போல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தொடர்ந்து நடத்திய சோதனையில் சுமார் ரூ.31.91 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரிசு பொருள் விநியோகம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தேர்தல் பொது பார்வையாளர், சிறப்பு பார்வையாளர் ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் கமி‌ஷனுக்கு சவால் விடும் வகையில் பண பலம், தேர்தல் விதிமீறல், சட்டம்-ஒழுங்கு மீறல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்றவை நடப்பதாகவும், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி தலைவர்கள் பணப்பட்டு வாடாவில் ஈடுபடுவதாக தங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பணப்பட்டுவாடா சம்பந்தமாக புகார்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி வருமான வரித்துறை சோதனை நடத்தி தேர்தல் கமி‌ஷனிடம் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது.

இந்த அறிக்கைகளையெல்லாம் கவனமுடன் தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை செய்தது.

தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் கமி‌ஷன் உறுதியாக உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரை தேர்தல் விதிமீறல்களில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும், கட்சி தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் மற்றும் பரிசு பொருள் கொடுத்து இருக்கிறார்கள்.

இதற்கு முன் கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது இதே போன்ற சூழ்நிலை அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஏற்பட்டபோது அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு பின்னர் நவம்பர் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

இதையெல்லாம் மூத்த அரசியல் தலைவர்களும், கட்சிகளும் புறந்தள்ளி விட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆர்.கே.நகரில் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வருகிற 12-ந் தேதி நடைபெற இருந்த வாக்குப்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

இப்போதைய நிலையில் ஆர்.கே.நகரில் பணப்பட்டு வாடா, பரிசு பொருள் விநியோகம் தொடர்பான அனைத்தும் முதலில் அகற்றப்பட வேண்டும். அதன் பிறகு நியாயமாகவும், நேர்மையான முறையிலும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை உருவான பின்புதான் அங்கு தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு தேர்தல் கமி‌ஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

201704101220161446_rk._L_styvpf.gif

ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்வதற்கான முடிவை தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசிம்ஜைதி, தேர்தல் கமி‌ஷனர்கள் ஓ.பி.ரவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் ஒருமனதாக எடுத்து உத்தரவில் கையெழுத்திட்டுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/10122015/1079121/RK-Nagar-bypoll-cancel-EC-29-pages-description.vpf

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்த 10 தகவல்கள்

 
 

சென்னையின் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது என்பது குறித்த பத்து தகவல்கள்:

 

1.தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2.வருமான வரித்துறையினரால் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

3.அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

4.ஏப்ரல் 7-ஆம் தேதி வரை, ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், 35 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5.விநியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த பணம் தவிர, விளக்கு, டி-ஷர்டுகள், சில்வர் தட்டுகள், மொபைல் போன், சேலை உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

6.வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் கிடைத்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரப்பட்டது.

7.விஜயபாஸ்கரின் கணக்காளரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு காகிதத்தில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க, அமைச்சர்கள் உள்பட பல்வேறு அரசியல்வாதிகளுக்கு 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான விவரங்கள் இடம் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரிடமிருந்து ரூ.5 கோடி கைப்பற்றப்பட்டது. 89 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு வழங்கும் பொறுப்பு யார் யாரிடம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல், எம்எல்ஏ விடுதியில் விஜயபாஸ்கரின் அறையிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. கைப்பற்றப்பட்ட வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு வாக்காளர் பெயருக்கு எதிரிலும், அவர் திமுகவா, அதிமுகவா, அவருக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும், வேறு சிலருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

10. தற்போதைய சூழ்நிலை, நியாயமாக தேர்தல் நடைபெறுவதற்கு உகந்ததாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

http://www.bbc.com/tamil/india-39551920

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.