Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரம்பரிய உளவுத் தகவல்களும் தொழில் நுட்பமும் - 2

Featured Replies

உலகில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆளில்லாத உளவு விமானங்கள் இன்று நவீன தோற்றங்களையும், அதிகூடிய தொழில்நுட்பத்தையும் கொண்டவையாக மாற்றமடைந்துள்ளன.

இவை கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் பறப்பதுடன் தரமான படங்களை எடுக்கக்கூடிய உயரத்திலும் பறக்க வல்லன. அமெரிக்காவிடம் உள்ளவற்றில் புறப்லர் இயந்திரம் (Pசழிநடடநச- னசiஎநn Pசநனயவழச) கொண்ட சிறிய உளவு விமானங்கள் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெற் இயந்திரமுடைய (துநவ-Pழறநசநன புடழடியட ர்யறம) பெரிய உளவு விமானங்கள் 50 மில்லியன் டொலரும் பெறுமதியானவை. தற்போது பாவனையில் முன்னனியில் நிற்பதுவும் இந்த விமானங்களே.

உளவு விமானங்கள் செய்மதிகளை விட அதிக அனுகூலங்களை கொண்டவை. அதாவது ஒரு பிரதேசத்தின் மேல் பலமணிநேரம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியவை. மேலும் ளுலவொநவiஉ யுpநசவரசந சுயனயச (ளுயுசு), அதிகூடிய துல்லியமான படங்களையும், வீடியோப் படங்களை எடுக்கும் ஒளிப்படக் கருவிகள், இரவில் தொழிற்படும் கடந்த ஊதா ஒளிப்படக் கருவிகள் என்பனவற்றை கொண்டிருப்பதனால் இவற்றால்; திரட்டப்படும் தகவல்கள் பெறுமதியானவை.

இவ்வாறான உளவு விமானங்களில் ஒன்று தான் நேட்டோ படைகளால் தேடப்பட்டு வந்த சேர்பிய போர்க்குற்றவாளி ஒருவரை பொஸ்னியா-ஹெசெகோவினாவின் எல்லையில் கண்டுபிடித்து கைது செய்ய உதவியது.

ஆனால் இந்த உளவு விமானத்தை அந்தப் பகுதியில் அவதானிப்பில் ஈடுபடுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது களத்தில் இருந்து மனிதர் ஒருவரால் கொடுக்கப்பட்ட தகவலே. எனினும் வழங்கப்பட்ட தகவலின் மூலம் விமானத்தை எங்கு அனுப்ப வேண்டும் என்பது தெளிவாக முடிவு செய்யப்பட்டது இங்கு முக்கியமானது.

எனினும் ஆளில்லாத உளவு விமானங்களில் உள்ள குறைபாடுகளாக:

- விலையும் பராமரிப்புச் செலவுகளும் அதிகம் என்பதுடன் கண்காணிப்பு தூரங்களும் மட்டுப்படுத்தப்பட்டவை (டுiஅவைநன கநைடன ழக எநைற).

- கடுமையான காலநிலை மாற்றங்களின் போது விமானங்களின்; இயங்குதன்மை, ஒளிப்படக்கருவிகள், ரடார்கள், சமிக்ஞைகள் போன்றவற்றின் இயங்கு தன்மைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.

- இலகுவாக எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம். உதாரணமாக யுகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற மோதல்களில் நேட்டோப் படைகள் 22 ஆளில்லாத உளவு விமானங்களை இழந்திருந்ததை குறிப்பிடலாம்.

- மோதல்ககள், வீழ்ந்து நொருங்குதல் போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளில் இருந்து சுயமாக சீர்செய்ய முடியாத தன்மை.

- இவற்றின் பிரசன்னத்தை ராடார்கள் மூலம் எதிரி இலகுவாகக் கண்டறியும் தன்மை என்பவற்றை குறிப்பிடலாம்.

உளவு விமானத்தின் குறைபாடு தொடர்பாக அமெரிக்க இராணுவ மேஜர் லூயிஸ் பெலோ கூறுகையில் 'நீங்கள் எதனை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பீர்கள் ஆனால் உங்களால் காணமுடியாததை புறக்கணித்து விடுவீர்கள்" (வுhந னயபெநச ளை லழர பநவ வழழ கழஉரளநன ழn றாயவ லழர உயn ளநநஇ யனெ நெபடநஉவ றாயவ லழர உயn'வ ளநந) இது ஆபத்தானது. சமகாலத்தில் பல்வேறு இடங்களில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பான தகவல்கள் முக்கியமானவை.

உதாரணமாக சில டாங்கிகள் உங்களை நோக்கி நகருவதை உளவு விமானங்கள் தெளிவாக காண்பிக்கலாம். ஆனால் உங்களுக்கு அருகாமையில் நூற்றுக்கணக்கான துருப்புக்கள் மறைந்துள்ளதை காண்பிக்காது விட்டுவிடலாம். டாங்கிகளை விட அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

பொதுவாக நிலையான இலக்குகள், மரபுவழிப்படையணிகள், எதிரிகளின் நிலையான பாரிய படைத்தளங்கள், இராணுவ கேந்திர மையங்கள் என்பவற்றை தாக்கி அழிப்பதில் உளவு விமானங்களின் பங்களிப்புக்கள் அளப்பரியன. அதனை மறுக்கவும் முடியாது. ஆனால் இடம் மாறும் இலக்குகள், இடம்மாறும் படையணிகள், கெரில்லா போர்முறை, தொழில்நுட்பத்திலும் இராணுவ பலத்திலும் வலிமையான எதிரி போன்ற சூழ்நிலைகளில் அதன் பங்களிப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டவையே.

மேலும் உளவு விமானங்களும், செய்மதிகளும் உளவியல் போரில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதாவது அவை தொடர்பாக வெளியிடப்படும் செய்திகளும், அதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பும், கற்பனைகளும் எதிரிக்கு அச்சத்தை கொடுக்க வல்லவை என்பதும் உண்மை.

இடம்பெற்று வரும் ஈழப்போர்களை பொறுத்த வரை உயர் தொழில்நுட்ப உளவு விமானங்களின் பயன்பாடும், செய்மதித் தகவல்களின் பயன்பாடும் மூன்றாம் ஈழப்போரில் சிறிலங்கா அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த

பல கோடிரூபாய்கள் செலவளித்து வாங்கிய உளவு விமானங்கள் சிறீ லங்கா அரசுக்கு எதிர்பார்த்தளவு நன்மைகளைக் கொடுக்கவில்லை என கட்டுரை ஆசிரியர் கூறுகின்றார். பின் அதே கட்டுரை ஆசிரியர் விடுதலைப் புலிகளும் இவ்வாறு தகவல்களை புலனாய்வு விமானங்கள் மூலம் பெறுகின்றார்கள் என கூறுகின்றார். மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று முரணாக உள்ளது.

சிறீ லங்கா அரசு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து வெற்றி தராத ஒரு யுத்த தந்திரோபாயத்தை, அதை அறிந்தும் அதே வெற்றி தராத ஒரு தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளும் பயன்படுத்துகின்றார்கள் என கட்டுரையாளர் கூறுவது முட்டாள்தனம்.

Edited by மாப்பிளை

வாட்டஜெற்றில் ஒலிகன் பூட்டி அடிக்கலாம் என்றதை உலகிற்கு புலிகள் தான் அறிமுகப்படுத்தினது எண்டும் எழுதின வித்துவானும் உவர் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீ லங்கா அரசு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து வெற்றி தராத ஒரு யுத்த தந்திரோபாயத்தை, அதை அறிந்தும் அதே வெற்றி தராத ஒரு தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளும் பயன்படுத்துகின்றார்கள் என கட்டுரையாளர் கூறுவது முட்டாள்தனம்.

ஒரு உபகரணத்தை எப்படிப் பயன் படுத்துகிறோம் என்பதில் தான் அதன் வெற்றி தங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் UAV யை effective ஆகப் பாவித்திருக்கலாம்.

இந்தியாவின் உள்ளூர்த் தயாரிப்பான குறுந்தூர தந்திரோபாய களமுனை ஆளில்லா வேவு விமானம்.

இலங்கைக்கு விற்கவும் முயற்சி?

Indian Army Looks Towards Short Ranged Tactical Small UAV's

[ India Defence ]

Impressed by an Indian private firm's design and development of a tactical mini Unmanned Aerial Vehicle (UAV) — the first and only private initiative of its kind in the country — the Army has invited the company for field trials of the product. So far, the 11-month-old company has developed three models for testing. One of them will be used for the Indian Army trials. Demand for such tactical UAVs is mounting in both the armed services and the paramilitary forces. Besides, Speck Systems is also upbeat about the equipment's export potential. The UAV, christened, BAAZ, is lined up for technical demonstration in Thailand, Sri Lanka and South Africa, according to senior manager (UAV division) Major Rajendra K. Sonawane (Retd.)

http://www.india-defence.com/reports/2892

வாட்டஜெற்றில் ஒலிகன் பூட்டி அடிக்கலாம் என்றதை உலகிற்கு புலிகள் தான் அறிமுகப்படுத்தினது எண்டும் எழுதின வித்துவானும் உவர் தான்.

Water jet என்பது அலைகள் குறைந்த சிறுகடல் பிரதேசத்துக்கு சாதகமாக செய்யப்பட்ட படகு... தண்ணீரை உள் இளுத்து வெளியில் தள்ளும் விசையில் படகு முன்நோக்கி போகும் தொழில் நுட்பம் சார்ந்தது... பொரிய அலைகள் உள்ள கடலில் அலைக்கு அலை படகு தாவும் சந்தர்ப்பம் வந்தால் படகு இயந்திரம் இயங்கா நிலைக்கு போகும் அபாயம் இருபதால் அவ்வகையான படகின் கடையார் பகுதி மாற்றி அமைக்கப்பட்டு வெளியினைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட பிறகு அதை Water Jet ஏண்று சொல்வது சரியாக இருக்காது.....!

சிறீ லங்கா அரசு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து வெற்றி தராத ஒரு யுத்த தந்திரோபாயத்தை, அதை அறிந்தும் அதே வெற்றி தராத ஒரு தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளும் பயன்படுத்துகின்றார்கள் என கட்டுரையாளர் கூறுவது முட்டாள்தனம்.

படையியல் ரீதியிலும் தலைமயக நிலையிலும் புலிகளுக்கும் இலங்கை படைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கு... இலங்கை படைகள் என்பன நிலையான படை நிலைகளையும், தலைமையகங்களையும் கொண்டது..... புலிகளை பொறுத்த வரை அவை அரசியல் அலுவலகங்கள் மட்டும்தான் நிலையான இடங்களை கொண்டு இயங்குகிறது....

UAV பாவிக்கும் போது உச்ச பயன் என்பது இலங்கை படைகளை விட புலிகளுக்கு சாதகமாக அமையலாம்.....!

LRRP யை பொறுத்த வரைஆழ ஊடுருவும் நிகழ்வுகள் பெரிய அளவில் சேதம் விளைவிக்குமாறு தாக்குதல் செய்ய முடியாதவாறு மட்டு படுத்த படுகிறது புலிகள் பெரிய அளவில் ரோந்து செய்யாதமையும், ஆக குறைந்த அளவிலான அணியின் ரோந்து நடவடிக்கைகளும் அதன் மீது தாக்குதல் நடந்தால் இளப்புக்களையும் குறைக்கிறது.... சிறிய அணியால் இராணுவ நகர்வும் அவதானிக்க வல்லவாறு தடையங்கள் பெரிய அணியான இராணுவத்தால் விடப்படுகின்ரது....

இராணுவத்தால் ஊடுருவி புலிகளின் பெரிய முகாம்களை தாக்க முடியாமல் போவதற்க்கு புலிகளின் மீட்ப்பு குழுக்களில் இருப்பு எங்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் எண்று தெரியாமல் இருப்பதும் இராணுவத்துக்கு சாதகமாக இருப்பதில்லை...! வந்த வளி அடை பட்டால் அல்லது வளி மறிக்க பட்டால் என்ன செய்ய எனும் நிலையும் பாதகம் கொண்டது, அப்படியான தேவைப்படும் இதுபோண்ற தகவலை இராணுவ தொழில் நுட்பங்களால் பெற முடிவதில்லை....!

சண்டைக்கு வந்திர வேண்டாம். எனக்கண்டா எங்கேயோ இடிக்குது. எப்படி அப்ப ஆழ்கடலில அவ்வளவு அலைகள் உள்ள பசுமிக் சமுத்திர கடலில உந்த வாட்டர் ஜெட்டுகள் போட்டிகளின் போது பிரச்சனையில்லாம் பறக்குதே எப்படி? :rolleyes:

Hull Design

Planing and Semi-planing Hulls

When a planing hull is either not moving or going very slowly, it is, in effect, a displacement hull. As power and speed increase, however, a planing hull lifts itself up on top of its own bow wave. This causes the boat to displace much less water. As a result, there is much less wetted surface on the hull bottom, meaning much less friction as well. The speed of the boat will now increase at a great rate. With this hull, the more horsepower added, the faster the boat will go.

The advantage of a planing hull is that it is capable of much greater speed. Just keep adding horsepower and away you go! However, a disadvantage is that the boat is no longer going through the waves, but is now going from one wave top to the next. Consequently, as the waves get larger, the pounding of the boat increases. This, at the least, causes crew discomfort. At its worst, pounding can injure passengers and cause considerable damage to the boat's hull and equipment.

The semi-displacement hull, generally seen on larger cruisers, has some lift capability. This is shown by the fact that as speed increases, the forward part of the hull lifts up and allows the boat to exceed its maximum displacement speed. Some disadvantages to semi-displacement hulled boats are that they need much bigger engines and consume much more fuel.

There are many other combinations of hull shapes. Some are Vee shaped forward and flat further aft. Others are Vee shaped forward and round further aft and so on. All of these many shapes (compromises) are attempts by the boat manufacturers to make the boat perform the way that the buyer expects it to perform. Again, a reminder: no one boat is going to answer everyone's needs!

சண்டைக்கு வந்திர வேண்டாம். எனக்கண்டா எங்கேயோ இடிக்குது. எப்படி அப்ப ஆழ்கடலில அவ்வளவு அலைகள் உள்ள பசுமிக் சமுத்திர கடலில உந்த வாட்டர் ஜெட்டுகள் போட்டிகளின் போது பிரச்சனையில்லாம் பறக்குதே எப்படி? :icon_idea:

அலைகள் அதிகம் இல்லாத காலநிலையில்தான் water jet படகு சவாரி செய்திருப்பார்கள்..... மற்றய காலநிலைகளின் குதிரைவலு150, 200 , 250 , எண்று வெளியினைப்பு இயந்திரங்களை வகைப்படுத்து போட்டிகள் வைப்பதுதான் வளமை....

எப்ப இருந்து புலிகள் ஆளில்லாத உளவு வானூர்தியை பயன்படுத்த தொடங்கினவை? ஐயோ எப்படி அந்த செய்தி என்ர கண்ணுக்கும் காதுக்கும் எட்டமால் போனது???

ஏன் குரங்கின் கழுத்தில் நைற்விசன் கமரா கட்டி அந்த காலத்தில உளவு எடுத்தவர்கள், இப்படியான பாரீய இராணுவ, அரசியல் தந்திரம் மிக்கவர்கள் அப்படியும் செய்திருக்கலாம். கெட்டிக்காரத்தலைமை அதனால் தான் என்னவோ எல்லாரும் திரும்பிப்பார்க்கப்போகிறார

சிறீலங்காவின் Buying Power குறைக்க பட வேண்டிய தேவையை இப்போ தமிழினம் எதிர் நோக்கி இருக்கிறது. என்னதான் புலிகள் புதுவகையான தொழில் நுட்பங்களை கொண்டு வந்தாலும் அதுக்கு மாற்றீடு என்பது இலங்கை அரசுக்கு உடனடி சாத்தியமானது....

எப்ப இருந்து புலிகள் ஆளில்லாத உளவு வானூர்தியை பயன்படுத்த தொடங்கினவை? ஐயோ எப்படி அந்த செய்தி என்ர கண்ணுக்கும் காதுக்கும் எட்டமால் போனது???

புலிகளிடம் ஆளில்லா வேவு விமானம் இருக்கு என்று எழுதவில்லை. புலிகளிடம் இருக்கும் விமானம் மூலம் வேவு பார்ப்பார்கள் என்று எழுதிப் போட்டு அது தான் புலிகள் உயர் தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய முறையையும் இணைத்து உளவு பார்ப்பதற்கு ஒரு உதாரணம் என்று புலம்பியிருக்கிறார் என்று நினைக்கிறன்.

விமானங்கள் எல்லாம் வேவுக்கு பயன்படுத்தலாம் என்பது தவறான கருத்தியல். வேவு விமானங்களாக ஏன் இன்றும் propellar விமானங்கள் பயன் படுத்தப்படுகிறது? jet விமானங்கள் எப்படியான வேவிற்கு பாவிக்கப்படுகிறது? வேவு அல்லாத பாவனைக்கு வடிவமைக்கப்பட்ட விமானத்தை வேவுக்கு பயன்படுத்தக் கூடிய மாதிரியான எதிரியோடா நாங்கள் மோதுகிறம்? சிங்களப் படைகள் என்ன அமேசன் காடுகளிற்குள் இருக்கும் பழங்குடிமக்களா?

இயந்திரக் கோளாறுகாரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் விழுந்த ஆளில்லா வேவு விமானத்தை புலிகள் திருத்தி பயன்படுத்தலாம் என்று இக்ப்பால் அத்தாஸ் ஒரு முறை எழுதினவன். ஆனா அவன் என்னத்துக் அப்படி எழுதினவன்?

U-2 spy plane எண்டதை எல்லா வகை வேவிற்க்கும் அமெரிக்கா பாவிக்கிறதாம்.... அது jet engin இல்லையோ..???

U2_below.jpg

http://www.area51zone.com/aircraft/u2.shtml

Edited by Thala

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.