Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுண்நிதி நிறுவனங்களால் நொந்து நுாலாகும் நிலை

Featured Replies

நுண்நிதி நிறுவனங்களால் நொந்து நுாலாகும் நிலை
 
 
நுண்நிதி நிறுவனங்களால் நொந்து நுாலாகும் நிலை
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள், ‘‘சிறுப்பிட்டியில் கில்லாடிப் பெண் கைது’’ என்ற தலைப்பில் உதயன் நாளி தழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதனை வாசித்தபோது 64 குடும்பப் பெண்களிடமிருந்து, ஒருவரிடமிருந்து 5000 ரூபா வீதம் என்ற ரீதியில் 3,20,000 ரூபாவை ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட ‘கில்லாடிப் பெண்’ ஒருவரைத் தாம் கைது செய்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருந்தனர் என விவரம் வௌியிடப்பட்டிருந்தது. 
 
அரச வங்கி ஒன்றில் வேலை பார்ப்பதாகப் பொய்யாகத் தம்மை இனம் காட்டிக் கொண்ட அந்தப் பெண், வங்கியில் இருந்து ஒவ்வொரு வருக்கும் 5,00,000ரூபா  வரையில் கடன் பெற்றுத் தருவ தாகக் கூறியே ஒவ்வொருவரிடம் இருந்தும் 5000 ரூபாவைப் பெற்றுள்ளார்.
 
பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுப்பிட்டி தெற்கு, சிறுப்பிட்டி மேற்கு, கைதடி, அச் செழு, புத்தூர், புத்தூர் கிழக்கு, காளியானை ஆகிய  ஊர்க ளைச் சேர்ந்தவர்கள் என மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது போன்ற வெவ்வேறு ஏமாற்றுச் சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே இடம்பெறுவதை யும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
 
குறித்த இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய செய்திக்கு ‘கோதையினால் வாதைப்பட்ட பேதைகள்’ என்ற தலையங்கமும் மிகப் பொருத்தமாக அமைந் திருக்கும். 
 
ஒருவர் இருவர் ஏமா றலாம்!  ஒரு பெண்,  ஏறக்குறைய  ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த  பல பெண்களை இவ்விதம் ஏமாற்று கிற அளவுக்கு எமது பெண்கள் புத்திக்கூர்மை அற்ற – எச்சரிக்கை உணர்வு அற்ற ஏமாளிகளா? என்ற கேள்வி மனதில் எழு வதைத் தவிர்க்க முடி யாதுள்ளது. 
 
இதுபோன்று, ஓரிரு ஆண்டு களுக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தரு வதாகக் கூறிய இருவர், மதவாச் சியில் போலி முகவர் நிலைய மொன்றைத் திறந்து ஏறக் குறைய 50 பேரிடம் தலா 50,000 ரூபா பணம் பெற்ற சம் பவம் ஒன்று இடம்பெற்றதை இங்கு நினைவுபடுத்துவது பல ருக்கு ஒரு முன்னெச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவதாக அமையும். 
 
இவ்வாறு, ஏமாற் றப்பட்டவர்களில் அனேகமான வர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப, புதுப்புது விதங்களில் வடிவமைக்கப்பட்ட ஏமாற்று வழிக ளின் ஊடாக, தனிநபர்களும், நுண்நிதி நிறுவனங்களும் சாதாரண மக்களின் பணத் தைச் சுரண்டுவதற்குக் கங்க ணம் கட்டி நிற்பது உணரப்படுகிறது. 
 
இதனை மக்கள் நன்கு புரிந்து கொண்டு இவர்களின் ஏமாற்று வேலைகளுக்குள் சிக்காமல் தங்களைக் காத் துக்கொள்ள வேண்டியவர்கள் ஆகின்றார்கள். 
 
நிதி நிறுவனங்களின் பெருக்கம் எதற்கு?
 
வங்கிகள், (லீசிங்) குத்தகை நிறு வனங்கள் (பினான்ஸ்), முற் கடன் வழங்கும் நிறுவனங்கள் என வடமாகாணத்தை மைய மாகக்கொண்டு பல நுண் நிதி நிறுவனங்கள் தங்கள் அலுவ லகங்களைத் திறந்து வைத்திருக்கின்றன. தங்கள் வருவா யைப் பெருக்கும் நோக்கில்தான் இத்தகைய நிலையங்களை, நிறுவி வைத்திருக்கிறார்கள் என் பதைப் புரிந்து கொள்ளாதவர் களாக எமது மக்கள், மாறியி ருப்பதுதான் கவலையளிக்கிற விடயமாகும். 
 
இல்லையெனில், இத்தனை நுண்நிதி நிறுவனங் கள் வட மாகாணத்தில் மையம் கொள்ள வேண்டியது ஏன்? இத்தனை நுண்நிதி நிறுவனங்களும் வடமாகாணத்துக்குத் தேவைதானா? 2014ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 42 சதவீத பங்களிப்பைச் செய்த மேல் மாகாணத்துடன் ஒப்பி டுகையில்,   மிகக்குறைவான,  04 சதவீத உற்பத்தியையே வழங்கிய வடமாகாணத்தில் நுண்நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அளவுக்கு  அதிக மாக இருப்பதாகத் தெரிய வருகிறது. 
 
அவ்வாறாயின், இது எமது மக்க ளின் உழைப்பைச் சுரண்டுவ தற்கான திட்டமிடப்பட்ட சதியா என்ற சந்தேகத்தை நுண்நிதி நிறுவனங்களின் பெரும் அதி கரிப்பு உருவாக்கியிருக்கிறது. எனவே தான், இந்தத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர் பெருமக்கள், சாதாரண ஏழைமக்கள் சுரண்டப் படாமலும், இத்தகைய நிதி நிறு வனங்களுக்கு இரையாகா மலும் இருக்க ஆக்கபூர்வமான அறிவுறுத்தல்களை அவ்வப்போது அள்ளி வழங்கிக்கொண்டு இருக்கவேண்டிய மிகப்பெரும் கடப்பாட்டில் 
இருக்கிறார்கள்.
 
மீற்றர் வட்டி!
 
இப்போது, வருவாயை அதி வேகமாகப் பெருக்க, ‘மீற்றர் வட்டி’ போட்டுத் தருகிறோம்” என்று  போட்டி போட்டுக் கொண்டு வீடு தேடி வருகிற ஏமாற்றுப் பேர் வழிகளிடம், இருப்பதையும் பறி கொடுத்துவிட்டுச்சிலர் மன நோயாளிகள் போல வாய் புலம்பித் திரிவதாகவும் சொல்லப்படுகிறது. 
வங்கிகள், தமது இலாபத்தைக் கருத்தில் கொண்டிருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.
 
அவை நம்பகத்தன்மை வாய்ந்தவை. வைப்புச் செய்கிற பணத்துக்கு உறுதிப்பாடு கிடைக்கிறது. அதேபோன்று கடன் பெறு கிறபோது அதன் சாதக பாதகங்களை வங்கி அதிகாரிகள் விளக்கிக் கூறுவதால், கடன் பெறுபவர் கடனை மீண்டும் செலுத்துவதற்கான அனுகூலங் களைப் பரிசீலித்து முடிவு செய்து அவற்றைப் பெறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. 
 
நிதி நிறுவனங்களால் சீரழிவோர் 
 
‘நிதி நிறுவனங்களால் சீரழியும் யாழ்.மக்கள்’ என்ற தலைப்பில், 2015ஆம்  ஆண் டின் மார்ச் மாதத்தில் உதயன் நாளிதழ் பத்தி எழுத்துப் பகுதியில் ‘‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், நிதி நிறுவனங்க ளின் ஆதிக்கத்தால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் கடன் சுமைகளில் இருந்து மீளமுடியாமல் தலைமறைவாகி இருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள் ளார்கள்’’ என நிதி நிறுவனங்களால் யாழ். மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல்துறை சிரேஷ்ட விரைவுரையாளரொருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
‘கழுத்துப்பட்டி’ கட்டிக்கொண்டு ஏமாற் றுபவர்கள், எப்படியும் தாம் சார்ந்த நிறு வனத்துக்கு இலாபம் ஈட் டிக்கொடுக்கும் இலக்குடன் பல்வேறு ஏமாற்று வழிகளில் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  20, 30 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ட்டுக்கு மேல் அணியும் கழுத்துப் பட்டியை அணி பவர்களாக இருந்தவர்கள்,  மிகப் படித்தவர்கள், உயர் அதிகாரிகள், வைத்தியர்கள் போன்றவர்கள்தான். 
 
ஆனால், இப்போது மேற்சொன்னவர்களோடு பல வகைப்பட்ட ஏமாற்றப் பேர்வழிகளும்‘கழுத்துப்பட்டி’ கட்டிக் கொண்டு பணமோசடி செய்ய வீடு தேடிக்கூட வருகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். எனவே, மக்கள் இந்த விடயத்தில் மிக விழிப்புடன் நடந்து கொள்ளவேண்டி இருக்கிறது. 
 
நுண்நிதி நிறுவனங்களை மூடுமாறு ஆர்ப்பாட்டம்
 
நுண்நிதி நிறுவனங்களை மூட வலியுறுத்தி வவுனியாவில் கடந்த வருடம் ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. நுண்நிதி (‘மைக்ரோ கிரடிற்’) நிறுவனங்கள், -‘குத்தகை நிறுவனங்கள் பலருக்குக் கடன்களை வழங்குகின்றன. குறிப்பாக குடும்பப் பெண்களை இலக்கு வைத்து, அவர்களின் உழைப்பை இலகுவாகச் சுரண்டிச் செல்லும் விதமாக இந்த நுண்நிதி நிறுவனங்களால் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதனால், குடும்பப் பெண்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் இலகுவாக உள்ளாக்கப்படுகின்றனர். 
 
குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகும் நில மைக்குத் தள்ளப்படுகின்றன எனக் கோடிட்டுக் காட்டும் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு’, மேற்கூறப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராகக் குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. 
 
சீட்டுக்களால் சீரழிவோர்
 
அண்மையில் வௌிநாட்டிலிருந்து எனது நண்பர் ஒருவர் காணொளி ஒன்றை ‘வைபர்’ஊடாக அனுப்பி வைத்திருந்தார். அந்தக் காணொளியில் உள்ள பாடலொன்றை ஈழத்தைச் சேர்ந்த ஒருவர் பாடியுள்ளார். அதன் உள்ளடக்கம் சீட்டுக் கட்டுவது பற்றியதாகும். புலம்பெயர் நிலத்தில் சீட்டுக்களால் சீரழிந்தவர்களும், சீட்டுக்களை எடுத்துக்கொண்டு நாடுவிட்டு நாடு கடந்து ஒளிந்தோடி வாழுகிற எம்முடைய வீரர்களினதும் வீராங்கனைகளினதும் வரலாறு மிக நீண்டது. 
 
சீட்டைத் தொடக்கியவன்(ள்) வாழமுடியாமல் வீழ்ந்துபோனதும், சீட்டை எடுத்துக்கொண்டு ஓடியவன்(ள்) வீடு வாங்கி, காணிபூமி வாங்கி, கடை போட்டு, வட்டிக்குக் கொடுத்து வாழ்வதும் எம்மில் பலர் அறியாததொரு விடயம்! 
 
உள்நாட்டிலும்,‘எமது சொந்தக் கதை சோகக் கதையாய் இவ்விடயம் தொடர்வதாகத்தான் தெரிய வருகிறது. இந்தச் சீட்டுக் கொடுக்கல் வாங்கல்களுக்கும்‘குத்தகை நிறுவனங்களுக்கும் இடையில் நிறையத் தொடர்புகள் உண்டு என்பதால்தான் சீட்டுக்கட்டுகிற விடயமும் இங்கு சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. ஆயினும், சீட்டுக்கட்டும் நோயிலிருந்து இன்றும் எமது சமூகம் விடுபட்டதாகத் தெரியவில்லை! அவ்வாறான ஓர் அனுபவத்தைத்தான் இந்தக் காணொளி தருகிறது. 
 
‘ஐயையோ சீட்டுக்காசு’
 
அந்தக் காணொளியில் உள்ள பாடல் வரிகள் உங்கள் வசதிக்காக இங்கே பதி விறக்கம் செய்யப்பட்டுள்ளன. (இராகத்துடன் பாடிப்பாருங்கள்: படம்- கும்கி, பாடல் மெட்டு–‘ஐயையோ ஆனந் தமே...’): “ஐயையோ சீட்டுக்காசு, தாச் சிக்காரன் சுத்திப் போட்டான், ஓடியோடி உழைச்சு, நான் சேத்து வைச்ச சீட்டு, மாதம் மாதம் கட்டி, நான் போட்டு வைச்ச சீட்டு, அவனோ அதை எடுத்து, ஓடி ஐயோ போட்டான் - ஐயையோ சீட் டுக்காசு... 
 
சரணம்1: ஊரிலிருந்தவன் இங்கு வந்தும், அந்தக் கள்ளத்தனம் மாறயில்ல, இஞ்ச வந்தும் அதே சுத்து மாத்து, அவன விட்டுப்போகல்ல, நான் வீடு வேண்டச் சீட்டுப்போட்டனான், நான் கடைசிச் சீட்டு எடுக்க இருந்த னான், அறுவான், பத்தியெரிவான், ஐயையோ சீட்டுக்காசு... 
 
சரணம்2: என்ர மனிசியும் கொழும்பில நிண்டு இன்னும் வரவுமில்லை, நான் வீடு வேண்டக்  கட்டிவைத்த அந்தச் சீட் டைத் தரவுமில்லை, அவன் காசை வேண்டி ஓடிப்போயிட்டான், இத நினைச்சு எனக்கு தலையில் முடியும் போட்டுது, அப்பா என்ர காசு, ஐயோ அது போச்சு – ஐயையோ சீட்டுக்காசு...”
 
இந்தப் பாடலை, வாசகர்கள் கட்டாயமாக காணொளியில் பார்க்கவேண்டும். பார்த்தால், மற்றவர்களைப் பார்க் கத் தூண்டுவதோடு சீட்டுக்களால் சீரழிந்துபோகும் நம்மவர்களின் நிலமை களைக் கொஞ்சமேனும் புரிந்து
கொள்ள வாய்ப்புக் கிட்டும். இந்தப் பொறியில் இருந்து தாங்களாகத் தப்பித்துக் கொள்வதற்கான வழி புலப்படும். கையில் இருந்த பணத்தைப் பறி கொடுத்துவிட்டுப் பிலாக்(பலா) காயைப் பாத்த பேயன்மாதிரித் திரிகிற எம்மவரைப் பார்த்து இதற்குமேல் என்ன கூறுவதென்றே தெரியவில்லை! 
 
உண்மையில்,‘தகுதியைமீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாய் மானத் தையும் சேர்த்துக் கட்டவேண்டி வரும்’ என்ற முகநூல் நண்பர் ஒருவரின் வரிகளில் நிறைய அர்த்தங்கள் இருப்பதாகவே தெரிகிறது. கடன் வாங்குவோர்,‘குத்தகை’ பெறுவோர், ஏன் சீட் டுக் கட்டுவோர் போன்றோர் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய வரிகள் இவை.
 
குத்தகையால் விளைந்த வில்லங்கங்கள்
 
‘குத்தகை’கொடுக்கல் வாங்கல்களால் பல்வேறுபட்ட வேதனைகளும், துன்பங்களும், பிரச்சினைகளும் சமுதாயத்தில் இன்று நிலவி வருவது கண்கூடு. பெற்றுக்கொண்ட முதலையும், முதலுக்குரிய வட்டியையும், வட்டியினுடைய குட்டியையும் கொடுக்க முடி யாத சூழலில் வாழுகிறவர்கள், ஊரை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று மறைந்து வாழுதல், வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுதல், வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தவறான முடிவெடுத்தல் போன்றவற்றால் இருக்கிற துன்பங்களோடு இன்னும் அதிக துன்பங்களைத் தாங்களே தேடிக்கொள்வதோடு, தங்களை நம்பி வாழும் குடும்பத்தவர்களுக்கும் உறவுகளுக்கும் துன்பத்தைத் தேடிக்கொடுக்கிறார்கள் என்பது நடைமுறையில் காண்கிற 
ஒரு விடயமாக இருக்கிறது. 
 
மேலும், குடும்பங்களில் பல பிளவுகளும் விரிசல்களும் இக்கடன் தொல்லைகளால் ஏற்படுகின்றன. இழந்துபோனதை மீட்க அல்லது வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெ ழுப்ப சட்ட விரோதமாக, சமூக வாழ்வுக்கு ஒவ்வாத, நெறிபிறழ்வான முறைகளில் முயற்சி செய்யத் தலைப் படுகிறார்கள். இது, பல குடும்பங்களின் நெறி பிறழ்வுக்கு வழிவகுத்திருக்கிறது. 
 
செய்துவந்த தொழிலையேதொடரமுடியாத துர்ப்பாக்கிய நிலைக் கும், வேறு முயற்சிகளில் ஈடுபட முடியாத மனோநிலைக்கும் இவ்வாறானவர்கள் தள்ளப்படுகிறார்கள்.இத்தகைய நுண்நிதி நிறுவனங்களின் உச்ச இலக்கு, பணம் ‘கறப்பதையே’ நோக்காகக் கொண்டிருப்பதால், பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில், எவ்வித விதிவிலக்கும் இல்லாமல் கடன் பெற்றவரின் நிகழ்காலத்துச் சூழ்நிலைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல், கொடுத்ததைப் பறித்துக்கொண்டு செல்கிறார்கள்.
 
 எனவே, நுண்நிதி நிறுவனங்களில் கடன்கள்,குத்தகைக் கடன்களைப் பெறு வதைத் தவிர்ப்பது,  சாதாரண மக்கள் தங்கள் இருப்பை இழந்து போகாதிருக்க துணை செய்யும்.

http://onlineuthayan.com/article/278

  • கருத்துக்கள உறவுகள்

பிழைகள் கட்டுக்கடங்காமல் போயிட்டுது. அழிச்சு அழிச்சு திருத்தி எத்தனை நாளுக்குத்தான் எழுதுறது.
எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு புதுசா எழுத தொடங்கிறததுதான் ஒரே ஒரு வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.