Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட்

Featured Replies

ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட்

 
 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி.

ronaldo

வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில்  2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின.

முதல் பாதியில் இரு அணியும் கோல் போடாமல் ஆட, இரண்டாவது பாதியில் லவன்டோஸ்க்கி பேயர்ன் அணியின் கோல் கணக்கை துவக்கிவைத்தார். இதற்குப் பதிலடியாக, நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்து சமன்செய்ய, அடுத்த சில நிமிடங்களில் ரியல் மாட்ரிட் வீரர் ராமோஸ் ஓன் கோல் போட்டுக் கொடுத்தார். 2-1 என பேயர்ன் முன்னிலையில் இருந்தபோதும், முந்தைய போட்டியின் கோல் காரணமாக, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

 இதையடுத்து விளையாடிய ரியல் மாட்ரிட் தரப்பில், ரொனால்டோ மேலும் இரண்டு கோல்களை அடித்தார். ரியல் மாட்ரிட் வீரர் அசன்சியோவும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இக்கட்டான ஆட்டத்திலும் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியுள்ளார், கிறிஸ்டியானோ ரொனால்டோ.  

http://www.vikatan.com/news/sports/86913-ronaldos-hatrick-makes-real-madrid-to-reach-semis.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஒரு சோர்ட்  வீடியோவும் இணைக்கிறது.....!  tw_blush:

  • தொடங்கியவர்

ரொனால்டோ மீது தவறு இல்லை... அவர் செய்தது நியாயமும் இல்லை... பின்னே? #RealMadridvsBayernMunich #MatchAnalysis #Championsleague

 
 

கால்பந்தில் ஆஃப் சைடில் நின்று கோல் அடிப்பது செத்த பாம்பை அடிப்பதற்குச் சமம். நேற்றிரவு ரொனால்டோ இரண்டு செத்த பாம்புகளை அடித்துவிட்டு, படமெடுத்து ஆடிய பாம்பைக் கொன்றதற்கு நிகராக கொண்டாடியதாக குற்றம் சாட்டுகின்றனர் பார்சிலோனா ரசிகர்கள். அவர்கள் பரவாயில்லை. பார்சிலோனா டிஃபண்டர் ஜெரார்டு பீக்கே ஒரு படி மேலே போய், இந்த ஒட்டுமொத்த களேபரத்தையும் ... என மூன்று புள்ளிகளில் ட்வீட் செய்து முடித்து விட்டார்.

...

— Gerard Piqué (@3gerardpique) April 18, 2017

சாம்பியன்ஸ் லீக் போன்ற பெரிய தொடர்களில், அதுவும் காலிறுதி எனும் முக்கியமான கட்டத்தில் ரெஃப்ரியின் தரம் இப்படி இருக்குமேயானால், ஃபைனலில்  ரியல் மாட்ரிட் - பார்சிலோனா மோத வேண்டும் என மேட்ச் ஃபிக்ஸிங் நடந்து விட்டதா என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

விஷயம் இதுவே, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரின்  காலிறுதி இரண்டாவது கட்ட போட்டியில் ரியல் மாட்ரிட், ஜெர்மனியைச் சேர்ந்த பேயர்ன் மியூனிக்  கிளப்கள் மோதின. மியூனிக்கில் கடந்த வாரம் நடந்த முதல் கட்ட காலிறுதியில் 2-1 என ரியல் மாட்ரிட் வெற்றிபெற்றது. ரியல் மாட்ரிட்டின் இரண்டு கோல்களையும் அடித்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ரொனால்டோ

இரண்டு Away கோல்கள் அடித்த கெத்துடன் நேற்று இரண்டாவது கட்ட போட்டியில், தன் சொந்த மண்ணில் பேயர்ன் மியூனிக்கை எதிர்கொண்டது ரியல் மாட்ரிட். போட்டி பரபரப்பாக இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தது. மேட்ச்  எக்ஸ்ட்ரா டைம் வரை நீண்டது. ரொனால்டோ ஹாட்ரிக் அடித்தார். ரியல் மாட்ரிட் 4-2 என வென்றது. இரண்டு கட்டங்களாக நடந்த காலிறுதியின் முடிவில் ரியல் மாட்ரிட் 6-3 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. எல்லாம் சரி. வேற என்ன பிரச்னை?

ரியல் மாட்ரிட் செமி ஃபைனலுக்கு முன்னேறியதை விட, ரொனால்டோ ஆஃப் சைடில் நின்று அடித்த அந்த இரண்டு கோல்கள்தான் இன்று பேசுபொருள். ரொனால்டோ முதலில் அடித்த ஹெட்டர் கோலில் எந்த பிரச்னையும் இல்லை. செம. அவர் அடித்த இரண்டாவது கோல்தான் சிக்கல். செர்ஜியோ ரமோஸ் கொடுத்த கிராஸை மார்பில் வாங்கி இடது காலில் நேர்த்தியாக கோல் அடித்தார். மேட்ச் போன போக்கில் பார்த்தபோது கோல் அடித்ததில் எந்தத் தவறும் இருந்ததாகத் தெரியவில்லை. Replay பார்த்தபோது, ரமோஸிடம் இருந்து பந்து ரிலீஸாவதற்கு முன்பே ரொனால்டோ ஆஃப் சைட் ஏரியாவில் நின்றிருந்தது தெளிவாகத் தெரிந்தது. அசிஸ்டன்ட் ரெஃப்ரியும் தூங்கி வழிந்தார். கொடியை மேலே உயர்த்தவே இல்லை. 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

சரி, இது பரவாயில்லை. ரியல் மாட்ரிட் லெஃப்ட் பேக் மார்செலோ தன்னந்தனியாக டிரிபிளிங் செய்து, பேயர்ன் மியூனிக் வீரர்களுக்கு தண்ணி காட்டி வந்து கொடுத்த பாஸை ரொனால்டோ, ஆஃப் சைடில் நின்று கோல் அடித்தார். தெள்ளத் தெளிவாக தெரிந்தது இது ஆஃப் சைட் என்று. ஆனால், ரெஃப்ரி இந்தமுறையும் கொடியை மேலே உயர்த்தவில்லை. பேயர்ன்  மியூனிக் மட்டுமல்ல டிவியில் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் ஆச்சர்யப்பட்டனர். மார்செலோவின்  டிரிபிளிங் பக்கா. ஆனால், அவர் ஆஃப் சைடில் இருந்தவருக்கு பாஸ் கொடுத்தது தவறு. அந்த பாஸை ரொனால்டோ  ஆஃப் சைடில் நின்று வாங்கியது தவறு. அதை கோல் அடித்தது தவறு. அதைப் பார்க்காமல் விட்டது ரெஃப்ரியின் தவறு. இப்படி பல தவறுகள்.

ரொனால்டோ முன்பொருமுறை இதே சாம்பியன்ஸ் லீக்கில், தனக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டதை, ‛ரெஃப்ரிகள் சில நேரம் ஹீரோவாக நினைக்கின்றனர்’ எனக் கண்டித்திருந்தார். இன்று அந்த அசிஸ்டென்ட்  ரெஃப்ரி செய்த தவறால், பெரிய பலனை அடைந்திருக்கிறது ரியல் மாட்ரிட், குறிப்பாக ரொனால்டோ. ஆம், அந்த கோல்கள் மூலம் தான் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 100 கோல்கள் அடித்தவர் என்ற பெருமை பெற்றார் CR7.   

மேட்ச் நடக்கும்போது எத்தனை பேர் அசிஸ்டன்ட் ரெஃப்ரியின் பணியைப் போற்றியிருப்போம்?ஆனால், சரியான நேரத்தில் ஆஃப் சைட் கணிக்கத் தவறியதால் இன்று உலகம் முழுவதும் அவரை தூற்றுகிறது. கோல்கீப்பர்களும் அசிஸ்டென்ட் ரெஃப்ரிகளும் ஒன்று. தவறு செய்யும்போது மட்டுமே கண்ணுக்குத் தெரியும் அப்பாவிகள். அதேநேரத்தில் முக்கியமானவர்கள்.  மெயின் ரெஃப்ரி களத்தில் நடப்பதை மட்டும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார். ஆக, அசிஸ்டென்ட் ரெஃப்ரிகள் நாலா பக்கமும் கண்காணிக்க வேண்டும். அலர்ட்டாக இருக்க வேண்டும். யோசிக்க நேரம் இருக்காது. ஆனால் சரியான முடிவை எடுக்க வேண்டும். இல்லையேல், ‛எங்கள் ஓராண்டு கடின பயிற்சியை ரெஃப்ரி சீரழித்து விட்டார்’ என பாதிக்கப்பட்ட அணி வசைபடும். 

ரொனால்டோ

இப்படித்தான், 2006 உலக கோப்பை ஃபைனலில் இத்தாலி டிஃபண்டர் மார்கோ மடராஸியை,  பிரான்ஸ் கேப்டன் ஜினாடின் ஜிடான் தலையால் முட்டி விட்டார். இது நடந்தது ஒரு மூலையில். ஆனால், களத்தில் இருந்த ரெஃப்ரி மறுமுனையில் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். உடனடியாக, டிவி ரெஃப்ரி தகவல் சொல்ல, மெயின் ரெஃப்ரி ஓடிப் போய் ஜிடானுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். ஆக, மெயின் ரெஃப்ரி மட்டுமல்ல களத்துக்கு வெளியே இருக்கும ரெஃப்ரிகளுக்கும், ஆட்டத்தை நல்லபடியாக வழிநடத்துவதில் முக்கிய பங்கு உண்டு. 

2014 உலக கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் பிரேசில் - குரோசியா மோதின. இதில் பிரேசில் வீரர் நெய்மருக்கு கருணை காட்டியதாக, ஜப்பான் நடுவர் யுசி நிஷிமுராவை அந்தத் தொடர் முழுவதும் நடுவராகப் பணியாற்ற,  FIFA அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட ரியல் மாட்ரிட் - பேயர்ன் மியூனிக் போட்டியில் அசிஸ்டென்ட் ரெஃப்ரியாக இருந்தவரும் இனி ஓரங்கட்டப்படலாம். மெயின் ரெஃப்ரி விக்டர் கசாய் பணியிலும், பேயர்ன் மியூனிக் பயிற்சியாளர் கர்லோ ஏன்சலெட்டி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்து தோல்வி விரக்தியில் பேயர்ன் மியூனிக் ஸ்ட்ரைக்கர் ஆர்ஜென் ராபன் ‛‛இது ஃபுட்பாலுக்கு நல்ல விளம்பரம். ஆனால், விசில் வைத்திருப்பவர் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பது நல்லதல்ல’’ என்றார் வேதனையுடன். ஆஃப் சைட் மிஸ்டேக் மட்டுமல்ல, பேயர்ன் மியூனிக் வீரர் விடாலுக்கு இரண்டு யெல்லோ கார்டு கொடுத்து அனுப்பியது, பேயர்ன் மியூனிக் அணிக்கு பெனால்டி கிக் கொடுத்தது என, ரெஃப்ரி தரப்பில் ஏகப்பட்ட தவறுகள். 

http://www.vikatan.com/news/sports/86932-cristiano-ronaldo-was-clearly-offside-for-two-big-goals-in-champions-league.html

35 minutes ago, suvy said:

அப்படியே ஒரு சோர்ட்  வீடியோவும் இணைக்கிறது.....!  tw_blush:

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ronaldo

அடுத்த முறையும் இவனுக்குத்தான் சிறந்த உதைபந்தாட்ட வீரன் எண்ட பரிசு குடுக்க வேணும் எண்டதை இப்பவே பரிந்துரை செய்யுறன்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.