Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?

Featured Replies

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?

 

அதிமுகவை கால்நூற்றாண்டுகாலமாக குத்தகைக்கு எடுத்தவர்களாக ஆட்டம் போட்ட சசிகலா கோஷ்டிக்கு குட் பை சொல்லப்பட்டுவிட்டது.

சென்னை: கவியரசர் கண்ணதாசனின் ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? என்ற பாடல் வரிகள் அப்படியே சசிகலா கோஷ்டிக்குத்தான் கனகச்சிதமாக பொருந்துகிறது.

எம்ஜிஆர் எனும் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரால் உருவாக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம், ராகவானந்தம், ஹண்டே என பழுத்த அரசியல்வாதிகள் பலரும் நிறைந்து இருந்த இயக்கம்..

இளைய தலைமுறை அரசியல்வாதிகளையும் அரவணைத்துக் கொண்டு போன மாபெரும் இயக்கம்... ஒருகட்டத்தில் ஜெயலலிதாவும் அதிமுகவின் ஒரு அங்கமாகவும் இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுபட்டது. ஆனால் ஜானகி எம்ஜிஆரின் விட்டுக் கொடுப்பால் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் புத்துயிர் பெற்றது.

2-ம் கட்ட தலைவர்கள் இல்லை

2-ம் கட்ட தலைவர்கள் இல்லை

ஜெயலலிதா அதிமுகவில் பட்ட அவமானங்கள்... எதிர்கொண்ட ஏளனங்கள் ஏராளம்... ஆனால் ஜெயலலிதாவே அதிமுக தலைமை ஏற்றபோது 2-வது கட்ட தலைவர்கள் யாருக்குமே இடமில்லாமல் போனது. இதற்கு காரணமே சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான்.

வெறித்தனமான கொள்ளை

வெறித்தனமான கொள்ளை

1991-ம் ஆண்டு முதல்வர் நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்ததுதான் தாமதம்... சசிகலா குடும்பத்தினர் அரசாங்க சொத்துகளை வெறிகொண்டு சூறையாடத் தொடங்கினர்.. இந்த வெறித்தனமான கொள்ளையாட்டம்தான் ஜெயலலிதாவை மட்டுமல்ல அதிமுகவையும் சீரழித்துவிட்டது.

ரத்த கண்ணீர்தான்

 

ரத்த கண்ணீர்தான்

அடேங்கப்பா... நினைத்துப் பார்க்க நமக்கே மலைப்பாக இருந்தால்... ஜெயலலிதா காலத்திலேயே ஒட்டுமொத்த அதிமுகவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சசிகலா கோஷ்டி போட்ட ஆட்டங்களை நினைத்தால் நிச்சயம் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் ரத்த கண்ணீர் வடித்துதான் இருப்பார்கள்... அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா போட்ட பேயாட்டத்தை தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

கூவத்தூர் கூத்துகள்

கூவத்தூர் கூத்துகள்

சசிகலாவையே பொதுச்செயலராக்க 25 நாட்கள் நாடகம்.... ஜெயலலிதாவை போல வேசம் போட்டுக் கொண்டு டூப்ளிகேட்டாக வலம் வந்தது.. எதைத்தான் தமிழகம் மறக்கும்? இதன் உச்சமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரப் போகிறது என்று தெரிந்தும் முதல்வர் நாற்காலியில் ஒருமுறையேனும் உட்கார்ந்துவிட கூவத்தூரில் அடித்த கூத்துகளை நாடும் நாட்டு மக்களும் மறக்கத்தான் முடியுமா?

மறக்க முடியாத சபதம்

 

மறக்க முடியாத சபதம்

ஓபிஎஸ் தியானம் என்ற பெயரில் கலகக் குரல் எழுப்ப நள்ளிரவில் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் 'ஒரிஜனல்' முகத்தைக் காட்டிய சசிகலாவின் குரூரம் இன்னும் கண்களைவிட்டு அகலவில்லை.. அதுவும் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கப் போகிற போது, நியாயவானைப் போல ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் சத்தியமெல்லாம் செய்து எம்ஜிஆர் இல்லத்தில் போய் தியானமெல்லாம் இருந்து...அடேங்கப்பா எத்தனை கூத்துகள்!

தினகரன் ஆட்டம்


தினகரன் ஆட்டம்

சசிகலா சிறைக்குப் போனபின்னர் தினகரன் ஆடிய ஆட்டம்... போட்ட வேடம்தான் எத்தனை எத்தனை! ஆர்கே நகரில் இவரே வேட்பாளராம்.. .ஆனால் முதல்வராகமாட்டாராம்... கொள்ளையடித்த பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என எத்தனை எத்தனை நூதன முறைகளில் பணப்பட்டுவாடா... ஆர்கே நகரே அல்லோகலப்பட்ட அந்த 15 நாட்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரலாற்று கல்வெட்டுகளில் எழுதி வைத்து வருங்கால தலைமுறையினர் படித்து தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்!


சரித்திரம்....

சரித்திரம்....

காலம் எப்படியெல்லாம் மாறுகிறது மக்களே.... கால்நூற்றாண்டுகாலமாக தமிழகத்தை சூறையாடிய மாஃபியா கும்பலின் ஆட்சி அதிகார கனவுகள் அனைத்தும் தகர்ந்து போனது! நேற்று கொடி பிடித்து கூழை கும்பிடு போட்டவர்கள் இன்று போர்க்கொடி தூக்கி தரித்திரங்களை விரட்டியடித்து சரித்திரம் படைத்துவிட்டனர்!

 

நாணய சிகாமணிகள் அல்ல

 

நாணய சிகாமணிகள் அல்ல இன்று போர்க்கொடி தூக்கியவர்கள் எல்லாம் நாணய சிகாமணிகள் என உச்சிமோந்து பாராட்ட முடியாது...இவர்கள் எல்லாம் மாஃபியா கும்பலின் காலடி மண்ணைத் தொட்டு வணங்கிய குறுநில கும்பல்கள்தான்.. ஆனாலும் ஏதோ ஏதோ நிர்பந்தங்களின் பெயரிலாவது இன்று சசிகலா கும்பலை அரசியலின் பக்கங்களில் இருந்து துடைத்து தூக்கி எறிந்து குப்பை தொட்டியில் வீசியதற்காக நிச்சயம் பாராட்டுவோம்!

ஆம் கண்ணதாசனின் இந்த வரிகள் இந்த சசிகலா கும்பலுக்கு சாலவே பொருந்தும்..

ஆடிய ஆட்டம் என்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வம் என்ன?

திரண்டதோர் சுற்றம் என்ன?


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-says-good-bye-chinnamma-family-280284.html

  • தொடங்கியவர்

சசிகலா, தினகரன்... கைப்பற்றிய அதிகாரத்தின் சரிவும்... மிச்சமிருக்கும் அறமும்!

 
 

தினகரன்

ரியாக எழுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே ஏப்ரல் மாதத்தில்தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த இரண்டு மனிதர்கள் வரலாற்றில் மிக மோசமான சரிவைச் சந்தித்து, வீழ்ந்து...  தொலைந்து போனார்கள். அவர்கள் இருவரும், உலகம் தங்கள் கண்ணசைவில் பயணிக்க  வேண்டும் என்று விரும்பியவர்கள். தங்கள் நுகத்தடி அசைவுக்கு அனைத்தும் இயங்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள். அதிகாரத்தின் சுவையில் திளைத்தவர்கள். இன்னும்... இன்னும் தங்கள் அதிகாரம் விரிவடைய வேண்டும் என்று முடிவிலிகளைத் தாண்டியும் விருப்பம் கொண்டவர்கள். காலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று நம்பியவர்கள். ஆனால், அவர்களின் வீழ்ச்சி எப்படி இருந்தது தெரியுமா...? ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொருவர் மோசமான மரணத்துக்கு அஞ்சி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். முன்னவர் முசோலினி; பின்னவர் ஹிட்லர்.  

அதுவும் முசோலினி துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட பின்னரும், அவர் மீதான மக்களின் கோபம் அணு அளவும் குறையவில்லை. ஆம், அவர் இறந்த பின்னும், அவரை மக்கள் அழுகிய காய்கறிகளால், கற்களால் அடித்துத் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தினர். இதனைக் கண்டு அஞ்சிய ஹிட்லர், முசோலினி இறந்து சில நாட்களில் சயனைடு உட்கொண்டு மரணித்தார்.  இது வரலாறு. ஏனோ தெரியவில்லை... எப்போதும் நமக்கு வரலாறு கசந்தே இருக்கிறது. அந்த கசப்பினால்தான் என்னவோ...  வரலாற்றிலிருந்து உரிய பாடத்தைப் படிக்க மறுக்கிறோம்.  மீண்டும் மீண்டும் வீழ்கிறோம்.

சரி நிகழ்காலத்துக்கு வருவோம். நம் கண்முன்னே அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் ஏறத் துடித்தவர்கள் எந்தப் பிடிமானமும் இல்லாமல், பெரும் சரிவைச் சந்தித்து அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சசிகலா... தினகரனைத் தான் குறிப்பிடுகிறேன்.  இவர்கள் ஹிட்லர், முசோலினியைப் போல பெரும் சாம்ராஜ்யத்தை உண்டாக்கத் துடித்தவர்கள் அல்ல... எல்லையை மீறி நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும். தேசத்தின் எல்லைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று விரும்பியவர்களும் அல்ல.  இவர்கள் விரும்பியது ஒரு கட்சியை தன்  கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதும், அதன் மூலம் ஒரு அரசைக் கைப்பற்ற வேண்டும் என்பதும்தான். ஆனால், இவர்களும் அந்த பாசிசவாதிகளும் அதிகாரம், மற்றும் மக்களின் விருப்பத்துக்கு எதிரான செயல்பாடு என்ற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள். 

“இது பி.ஜே.பியின் திட்டமும்... காலத்தின் கணக்கும்”

 “உளறாதீர்கள்.  கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்தவர்களுடன், இவர்களை ஒப்பிடுவதா...  அதுமட்டுமல்ல, இது அனைத்தும் பி.ஜே,பியின் திட்டம் என்பதை நீங்கள் அறியவில்லையா...?  அவதூறுகளையும், வசவுகளையும் அள்ளி வீசாதீர்கள்” என்று நீங்கள் கோபம் கொள்வது புரிகிறது. ஒன்றைத் தெளிவாக மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.  சசிகலாவையும், தினகரனையும் அந்த பாசிசவாதிகளுடன் ஒப்பிடுவதற்கு காரணம், இவர்கள் அனைவரும் அதிகாரத்தில் திளைக்க விரும்பியவர்கள் என்பதனால் மட்டும்தான்.

தினகரன்

 

சரி... அடுத்து நீங்கள் குறிப்பிடுவது ‘இது பி.ஜே.பி’-யின் திட்டம் என்பது.   உண்மையில் இது பி.ஜே.பியின் திட்டமாகவே இருந்துவிட்டுப்போகட்டுமே. இவர்கள் என்ன புனிதர்களா...? இப்போது சசிகலா மற்றும் தினகரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் என்ன இட்டுக்கட்டியவையா? இல்லை இவர்கள் அனைவரும் மக்கள் பணி செய்து மக்களுக்காகவே உழைத்து, சிறைச் சென்று முன்னேறி வந்தவர்களா?  அவர்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது காவிரி. அந்த காவிரி உரிமைக்காக போராடியவர்களா... சித்தாந்தவாதிகளா...? இல்லை தானே. இது எதுவும் இல்லைதானே. அவர்கள் மக்களைச் சந்திக்காமல், மக்களுடன் நிற்காமல் மேலே வந்தவர்கள். தங்களை யாரும் வெல்ல முடியாது என்று இறுமாப்புக் கொண்டு முன்னேறிச் சென்றவர்கள். ஆனால், காலம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது. அவர்களின் தவறுகளை கணக்கெடுத்துக் கொண்டது. அந்த காலம் மக்களின் மத்தியில் இவர்கள் குறித்த ஒரு துல்லியமான  பிம்பத்தை உண்டாக்கியும் வைத்திருந்தது.  அந்த பிம்பத்தை வைத்தே இப்போது பி.ஜே.பி இவர்களை துவம்சம் செய்கிறது. 

உண்மையில் இவர்கள் கொள்கை அரசியல் செய்து... யார் நிலத்தையும் அடாவடியாக வாங்காமல், தான்தோன்றித்தனமாக நடக்காமல், உண்மையில் மக்களுடன் இருந்து, மக்களுக்கான அரசியலை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா...? மக்கள்தான்... இது அவர்களின் பிரச்னை என்று கைகட்டி வேடிக்கை பார்த்திருப்பார்களா...? மக்களை ஏய்த்து அரசியல் செய்ததால்தான் இறுதியில் அட்டக்கத்தியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.  மக்கள் தேவையில்லை, அதிகாரத்தை கைப்பற்றினால் அனைத்தையும் கைப்பற்றிவிடலாம் என்ற திமிரின் சரிவு இது. 

இதற்கெல்லாம் மேலாக பி.ஜே.பிதான் இது அனைத்தையும் செய்கிறது என்று சொல்லும் துணிவு தினகரனுக்கே  இல்லை. ஆனால், நாம்தான் இங்கு தத்துவார்த்த அரசியல் பேசி அவர்களுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

“மிச்சமாக கொஞ்சம் அறம்”

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் நிகழ்ந்தது, தத்துவார்த்த அரசியல் மீது நம்பிக்கையில்லாமல், மக்களின் விருப்பங்களுக்கு எதிராக, அறமற்ற அரசியலை முன்னெடுப்பவர்களுக்கான பாடம்.  இதிலிருந்து அரசியல் கட்சிகள் படிப்பினையைப் பெறாமல், இந்த அடாவடி அரசியலை பின்பற்றுவார்களானால், அவர்களின் அஸ்தமனமும் இப்படியானதாகத்தான் இருக்கும்.... ஏனெனில், நாம் முதல் பத்தியில் பார்த்ததுபோல பேரரசுகளின் வீழ்ச்சிகளெல்லாம் இப்படியாகத்தான் இருந்திருக்கிறது. 

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.