Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார்; அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார்; அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

 

 

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2_V_Prez_MS.jpg

கொழும்பில் சற்று முன்னர் ஆரம்பமான பல்வேறு ஊடகங்களினது உயரதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த வாக்குறுதிகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், அவை அனைத்தும் கூறியபடியே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரச நிறுவனங்கள் சிலவற்றின் தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். குறிப்பிட்ட சில நிறுவனங்களை மேலும் திறமையாகச் செயற்பட வைக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/19176

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் உதை இன்னும் ஒழிக்கவில்லையே....ஒழிக்கிறோம் ஒழிக்கிறோம் என்று ஒழிச்சுபிடிச்சு விளையாடுறாங்கள் போல கிடக்கு...


தமிழ் மக்களுக்கு அடுத்த ஆண்டு தீர்வு கிடைக்கும் என்ற மாதிரித்தான் இதுவும்....

  • தொடங்கியவர்

மூன்­று­ மாத காலத்­துக்குள் மீள் குடி­யேற்றம் காணாமல் போனோர் பிரச்­சி­னைக்கும் தீர்வு

p2-e7eba5b666a50674f7481f99a517b03e6cc91c92.jpg

 

இரண்­டு­ வ­ருட கால அவ­கா­சத்தின் பின்­னரே பதி­ல­ளிக்-கும் கடப்­பாடு என்­கிறார் ஜனா­தி­பதி  

(நமது நிருபர்)

வடக்கில் தம்மை மீளக் குடி­யேற்றக் கோரியும் காணா­மல்­போனோர் விட­யத்­துக்கு தீர்வு வழங்­கு­மாறு கோரியும் மக்கள் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இடம்­பெ­யர்ந்து நலன்­புரி முகாம்­களில் உள்ள மக்கள் இன்­னமும் 3 மாத காலத்­துக்குள் மீளக் குடி­யேற்­றப்­ப­டுவர். காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­துக்கும் விசேட வேலைத்­திட்­டத்தின் மூலம் தீர்வு வழங்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்தார்.

 ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யா­னது எமக்கு 2 வருட கால அவ­கா­சத்தை வழங்­கி­யுள்­ளது. சர்­வ­தேச நாடு­களின் நம்­பிக்­கையை நாம் பெற்­றுள்ளோம். ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் வலுப்­ப­டுத்தி நீதி­மன்ற நியா­யா­திக்­கத்தை பாது­காக்கும் வகையில் நாம் இவ்­வி­ட­யத்­துக்கு தீர்வு காண்போம் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.

தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்­களின்  பிர­தா­னி­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.  இந்த சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.    

 தமிழ் மக்­களின் விவ­காரம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது,  ஐ.நா. மனித உரிமை பேர­வையில் பொறுப்­புக்­கூறும் விடயம் தொடர்பில் ஏற்­க­னவே பிரே­ரணை நிறை­வேற்­றப்ட்­டி­ருந்­தது. 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­ற­தை­ய­டுத்து அந்­த­வ­ருடம் மார்ச் மாதம் எமக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. செப்­டெம்பர் மாதம் வரையில் இவ்­வாறு கால­அ­வ­கா­சத்தை நாம் பெற்­றுக்­கொண்டோம். இந்த விட­யத்தில் எம்மால் செயற்­ப­டுத்­தக்­கூ­டிய விட­யங்கள் குறித்தும் செயற்­ப­டுத்த முடி­யாத விட­யங்கள் தொடர்­பா­கவும் நாம் நேர­டி­யா­கவே கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தோம்.    

 தற்­போது எமக்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவை இரண்­டு­வ­ருட கால கால அவ­கா­சத்தை தந்­துள்­ளது. நாம் இந்த கால அவ­கா­சத்தின் பின்­னரே பதில் வழங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நாட்டின் ஜன­நா­யகம், சுதந்­திரம், அடிப்­படை உரி­மை­களை வலுப்­ப­டுத்தி நீதி­மன்ற நியா­யா­திக்­கத்தை பாது­காத்­துக்­கொண்டு பாது­காப்புப் பிரச்­சினை உரு­வா­கா­த­வ­கையில் இவ்­வி­ட­யத்­துக்கு நாம் தீர்வைக் காண்போம். சர்­வ­தேச நாடு­களின் நம்­பிக்­கையை நாம் பெற்­றி­ருக்­கின்றோம். இதனால் இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு காண்­ப­தென்­பது இல­கு­வான விட­ய­மே­யாகும்.

மீள் குடி­யேற்ற விவ­காரம்

 மீள் குடி­யேற்­றத்தை வலி­யு­றுத்தி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் 60 வீத­மா­னோரை நாம் மீள குடி­யேற்­றி­யுள்ளோம். சிறு அள­வி­லா­ன­வர்­களே இன்­னமும் நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே இவர்­களின் மீள்­கு­டி­யேற்றப் பிரச்­சி­னைக்கும் 3 மாத காலத்­துக்குள் தீர்வு காணப்­படும்.

காணாமல் போனோர் விவ­காரம்

 காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்­களும் வடக்கு, கிழக்கில் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். காணாமல் போனோர் தொடர்பில் ஏற்­க­னவே ஆணைக்­கு­ழுக்கள் அமை­கக்ப்­பட்டு அறிக்­கைகள் பெறப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய அறிக்­கை­களை வைத்தும் விசேட வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டும் காணா­மல்­போனோர் தொடர்பில் தக­வல்­களை பெற்­றுக்­கொ­டுக்க நாம் நட­வ­டிக்­கை­யினை எடுப்போம். இந்த விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்­வு­காண அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும்.

அர­சி­ய­ல­மைப்பு மாற்றம்

 புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இந்த வரை­வினை உரு­வாக்கும் செயற்­றிட்டம் இடம்பெற்று வருகின்றது. புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையினை ஒருவார காலத்துக்குள் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்குமாறு நான் கோரியிருக்கின்றேன். அமைச்சரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்யவேண்டுமா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-21#page-1

  • தொடங்கியவர்

மீதொட்­ட­முல்ல அனர்த்தம் நீதி­ய­ரசர் தலை­மையில் குழு

p3-aecd5ec559baa9340cb93056b56ebceac914decd.jpg

 

அரச நிறு­வ­னங்­க­ளிலும் விரைவில் மாற்றம்; ஜனா­தி­பதி மைத்­திரி அறி­விப்பு  

 (நமது நிருபர்)

மீதொட்­ட­முல்ல குப்­பை­மேடு சரிந்­த­தால் ஏற்­பட்ட பேர­னர்த்­தத்­ துக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்கு ஓய்­வு­பெற்ற நீதி­பதி தலை­மையில் விசேட குழு அமைக்­கப்­  படும். இந்த விட­யத்தில் எங்கு தவறு நடந்­தது? ஏன் இந்த அனர்த்தம் ஏற்  பட்­டது? இதற்­கான காரணம் என்ன  என்­பது குறித்து ஆராய்ந்து அறி க்கை சமர்ப்­பிக்கும் வகை­யி­லேயே இந்த சுயா­தீன பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.    

குழுவின் அறிக்­கைக்கு அமைய எவர் மீதா­வது சட்ட நடவ­டிக்கை எடுக்­க­வேண்­டுமானால் அதற்கும் அர­சாங்கம் தயா­ரா­க­வுள்­ளது. இந்தக் குழுவில் மக்­களும் விட­யத்துடன்  தொடர்­பு­டை­ய­வர்­களும் சாட்­சி­யம  ளிக்க முடியும். ஒரு­வார காலத்­துக் குள் இந்த குழு நிய­மிக்­கப்­படும். இந்தப் பேர­னர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு நிறு­வன ரீதி­யான, அதி­கார ரீதி­யான இழு­ப­றி­நி­லையே கார­ண­மாக அமைந்­துள்­ளது. தமக்­கி­டை­  யி­லான அதி­காரம் தொடர்பி­லான போட்­டியே இந்த அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருக்­கின்­றது என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.    

தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­ய ர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்­க ளின் பிர­தா­னி­களை ஜனா­தி­பதி மைத்  தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.  இந்தக் கலந்­து­ரை­யா­டலில்  இடர் முகா­மைத்­துவ அமைச்சர்  அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா, ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக, சுகா­தா­ரத்­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, உயர்­கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல, பிரதி ஊட­கத்­துறை அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தா­ரன ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.    

 இங்கு கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் தெரி­வித்­த­தா­வது,  மீதொட்­ட­ட­முல்ல குப்­பை­மேடு சரிந்­த­மை­யினால் பேர­னர்த்தம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கடந்த இரண்­டரை வரு­ட­கா­ல­மாக இந்தக் குப்­பை­மேட்டுப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. அமைச்­ச­ர­வை­யிலும் மூன்று விசேட கூட்­டங்கள் கூட்­டப்­பட்டும். இந்த விடயம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. எமது நிறு­வன ரீதி­யான அதி­கார ரீதி­யான இழு­பறி நிலையே இந்த அனர்த்­தத்­துக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது. தமது அதி­காரம் தொடர்­பான போட்­டா­போட்டி கார­ண­மா­கவே இவ்­வா­றான செயற்­பாடு இடம்­பெற்­றுள்­ளது. சில­ருக்கு இந்தக் குப்­பை­மேடு இருக்­க­வேண்­டிய அவ­சியம் காணப்­பட்­டது. இங்கு குப்பை லொறி ஒன்று உட்­செல்­லும்­போதும் வெளி­வ­ரும்­போதும் ஆயிரம் ரூபா அல்­லது 1500 ரூபா தர­கர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டிய நிலை காணப்­பட்­டது. இத்­த­கைய நிலைப்­பாட்டால் தான் இந்த அனர்த்தம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. தற்­போ­தைய நிலையில் எவ­ரையும் விரல் நீட்­ட­வேண்­டிய தேவை இல்லை. பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்­டி­யதே அவ­சி­ய­மா­கி­னற்து.    

 குப்பை மேட்டுப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டா­மை­யினால் தான் பெரும் அனர்த்தம் நடை­பெற்­றுள்­ளது. அர­சி­யல்­வா­திகள், அரச நிறு­வ­னங்கள் இதற்கு பொறுப்­பேற்க வேண்­டி­யுள்­ளது. இந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்கும் உத­வி­களை வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆபத்து மிக்க இப்­ப­கு­தி­யி­லி­ருந்து மக்­களை வெளி­யேற்­று­வ­தற்கும் குப்­பை­மேட்டை அக்­க­று­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

விசேட குழு அமைக்­கப்­படும்

 இந்த அனர்த்தம் குறித்து ஆராய்­வ­தற்­காக ஓய்­வு­பெற்ற நீதி­பதி தலை­மையில் விசேட குழு அமைக்­கப்­படும். இந்த அனர்த்தம் எவ்­வாறு நடந்­தது? இதற்­கான தவறு எப்­படி ஏற்­பட்­டது? இதற்­கான காரணம் என்ன என்­பன குறித்து ஆராய்ந்து சுயா­தீ­ன­மான பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை நடத்­தும்­வ­கை­யி­லேயே இந்­தக்­குழு ஒரு­வா­ர­கா­லத்­துக்குள் அமைக்­கப்­படும். ஒரு­மாத காலத்­துக்குள் விசா­ரணை நடத்தி தவறு எங்கு இடம்­பெற்­றுள்­ளது என்­பது குறித்து இந்­தக்­குழு அறிக்கை சமர்ப்­பிக்கும்.

 பொரு­ளா­தார ரீதியில் நாடு பிரச்­சி­னை­களை சந்­தித்­த­போதே நாம் ஆட்­சியை பொறுப்­பேற்றோம். வெளி­நாட்டுக் கடன்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது பொரு­ளா­தார ரீதியில் நாட்டை சிறற்த வகையில் நாம் வழி­ந­டத்தி செல்­கின்றோம். சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் ஆலோ­ச­னைக்­கி­ணங்­கவும் வீழச்­சி­ய­டைந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.

 தற்­போது ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­துள்­ளது. தேயி­லைக்­கான உச்ச விலை கிடைத்­துள்­ளது. றப்பர் விலையும் உயர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. நெல் கொள்­வ­ன­வுக்கு நாம் உச்ச விலையை வழங்­கி­யி­ருக்­கின்றோம். சுகா­தார அமைச்சைப் பொறுத்­த­வ­ரையில் மருந்­து­களின் விலையை குறைத்­துள்­ள­துடன் சத்­தி­ர­கி­சிச்­ச­கை்கு கண் வில்­லை­க­ளையும் வழங்கி வரு­கின்­றோம. முன்­னைய அர­சாங்­கங்கள் செய்­யாத இந்த சேவை­களை நாம் முன்­னெ­டுக்­கின்றோம்.

 இலங்கை போக்­கு­வ­ரத்து சபை­யா­னது ஊழி­யர்­களின் சேம­லாப நிதி மற்றும் நம்­பிக்கை நிதி என்­ப­வற்றை செலுத்­தாமல் இருந்­தது. கடந்த 10,12 வரு­ட­கா­ல­மாக பன்­னி­ரண்டு பில்­லியன் ரூபா இவ்­வாறு செலுத்­த­வேண்­டி­யி­ருந்­தது. தற்­போது ஒன்­றரை வரு­ட­கா­லத்தில் 6 பில்­லியன் ரூபா செலுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இது­தொ­டர்­பான வழக்­கு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளது. புகை­யி­ரதத் திணைக்­கள காணிகள் தொடர்­பி­லான பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளது. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் ஓடு­பாதை குறு­கிய காலாத்தில் புனர் நிர்­மாணம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. விமா­ன­நி­லை­யங்­களில் இது­வரை வரிச்­ச­லுகை கடை­களை அமைச்­சர்­களின் உற­வி­னர்­களே நடத்­தி­வந்த நிலை காணப்­பட்­டது. ஆனால் தற்­போது அந்தக் கடைகள் கூட விலை மனுக்கள் கோரப்­பட்டு வழங்­கப்­ப­டு­கின்­றது.

 மொறக்­கா­கந்த நீர்த்­தேக்கம் உரு­வாக்­கப்­பட்டு பிர­தான அணைக்­கட்­டுகள் அமைக்கும் பணியும் இடம்­பெ­று­கின்­றது. இத­னுடன் தொடர்­பு­பட்ட வகையில் குரு­நாகல், அனு­ரா­த­புரம், பொல­ன­றுவை, கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய பகு­தி­களில் 600க்கும் மேற்­பட்ட குளங்­களை புன­ர­மைக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. வீதி அபி­வி­ருத்­தி­களும் கட்­டு­மானப் பணி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

நாடு­க­ளுக்கு எதையும் விற்­க­வில்லை

 அர­சாங்­க­மா­னது சீனா உட்­பட எந்­த­வொரு நாட்­டுக்கும் நம் நாட்டு வளங்­களை விற்­க­வில்லை. இதற்­கான ஒப்­பந்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. கொழும்பு துறை­முக நகர் ஒப்­பந்தம் முன்­னைய அர­சாங்க காலத்தில் 200 ஹெக்­டயர் நிலப்­ப­ரப்பை வழங்கும் வகையில் மேற்­கொள்­ளப்­பட்­டது. அன்­றைய ஒப்­பந்­தத்­தின்­படி காலி­மு­கத்­தி­ட­லுக்கு முன்­னா­லுள்ள பாது­காப்பு அமைச்­சி­ருந்து உலங்­கு­வா­னூர்தி மேலெழ முடி­யாத நிலை காணப்­பட்­டது. ஆனால் இத்­த­கைய ஒப்­பந்­தத்தை நாம் மாற்­றி­ய­மைத்­துள்ளோம்.

அரச நிர்­வாகக் கட்­ட­மைப்பில் மாற்றம்

 அரச நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­ப­டு­கின்­றன. அர­சாங்க நிர்­வா­கத்தின் செயற்­பா­டு­களில் புதிய மாற்­றங்­களை நான் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ளேன். அரச நிறு­வ­னங்கள் மற்றும் திணைக்­க­ளங்­களில் பதவி மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­படும். நிறு­வன ரீதி­யான செயற்­பா­டுகள் அறி­முகம் செய்­யப்­படும்.

 மாவட்டம் தோறும் பிர­தேச அபி­வி­ருத்திக் கூட்­டங்கள் மாவட்ட அபி­வி­ருத்திக் கூட்­டங்­கள ஒழுங்­காக நடை­பெ­ற­வ­தில்லை. அமைச்­சர்கள் இதற்­கான திக­தி­களை உரி­ய­வ­கையில் வழங்­கு­வ­தில்லை. இதனால் இவ்­வி­ட­யத்­துக்­கென கால அட்­ட­வணை தயா­ரித்து நடை­மு­றைப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. எமது செய­ல­கத்தின் மூலம் இதற்­கான திக­திகள் அறி­விக்­கப்­படும்.

 கேள்வி: மீதொட்­ட­முல்ல குப்­பை­மேட்டு அனர்த்தம் ஆராய ஓய­வு­பெற்ற நீதி­பதி தலை­மையில் குழுவை அமைக்க உள்­ளீர்கள். இந்­தக்­குழு யாரை­யா­வது குற்­ற­வா­ளி­யாக சுட்­டிக்­காட்டி அறிக்கை சமர்ப்­பித்தால் சட்ட நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா?

 பதில்: அறிக்­கையின் அடிப்­ப­டையில் இதற்­கான விதந்­து­ரைகள் காணப்­ப­டு­மானால் சட்ட நட­வ­டிக்கை உட்­பட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டிய சூழல் உரு­வாகும்.

 கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்தக் குப்­பை­மேட்டை அகற்­று­வ­தற்கு 2014ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்­டத்தில் நிதி ஒதுக்­க­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆனால் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும் குற்றம் சுமத்­தி­யுள்ளார். இது குறித்து உங்கள் பதில் என்ன?

 பதில்: மீதொட்­ட­முல்ல குப்­பை­மேட்­டினை அகற்றும் விட­யத்தில் ஒரு­போதும் நிதிப்­பி­ரச்­சினை இருந்­தி­ருக்­க­வில்லை. இதற்­கென தனி­யான நிதி ஒதுக்­கீடு தேவை­யற்­றது.

 கேள்வி: இந்த அனர்த்­தத்­தை­ய­டுத்து கொழும்­பி­லுள்ள குப்­பை­களை வேறு இடங்­களில் கொட்­டு­வ­தற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த விட­யத்­துக்கு அர­சாங்கம் எவ்­வாறு தீர்வு காணப்­போ­கின்­றது?

 பதில்: கழி­வுப்­பொ­ருட்கள் மற்றும் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு இடத்தை தெரி­வு­செய்­யும்­போது அங்கு குப்­பை­களை கொட்­ட­வேண்­டா­மென்று கோரி போராட்டம் நடத்­து­வது இது முதற்­ற­ட­வை­யல்ல. மக்­களை தவ­றான வழியில் நடத்­து­வ­த­னா­லேயே இத்­த­கைய போராட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன. கர­தி­யா­னவில் நேற்று முன்­தினம் குப்பை கொட்­டு­வ­தற்­கெ­தி­ராக போராட்டம் நடத்­தி­ய­போது அதனை வழி­ந­டத்­தி­ய­வர்கள் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­க­ளா­கவே உள்­ளனர். மக்­களை பிழை­யாக வழி­ந­டத்­து­வ­த­னா­லேயே இத்­த­கைய நிலை ஏற்­ப­டு­கின்­றது.

 கிரிந்­தி­வெ­லயில் நா.ௌான்றுக்கு 90 மெட்ரிக் தொன் குப்­பை­களை கொட்­டலாம். ஆனால் அங்கு குறைந்­த­ள­வான குப்­பை­களே கொட்­டப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தூண்­டுதல் கார­ண­மாக இடம்­பெறும் போராட்­டங்­க­ளுக்கு ஊட­கங்கள் முக்­கிய இடம் வழங்­கக்­கூ­டாது. சிங்­கப்பூர் எம்­மை­விட சிறிய நாடாகும். அங்கு நக­ருக்கு நடு­வி­லேயே குப்­பைகள் கொட்­டப்­ப­டு­கின்­றன. ஆனால் அங்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. ஜப்பான், கொரியா முத­லிய நாடுகள் கழி­வ­கற்றல் முகா­மைத்­துவ திட்­டத்தை மேற்­கொள்­வ­தற்கு முன்­வந்­தி­ருந்­தன. இதற்­கேற்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கின்­றன.

 கேள்வி: குப்­பை­மேட்டு அனர்த்தம் தொடர்பில் முக்­கிய அமைச்­ச­ரொ­ரு­வரும் மேல்­மா­காண முத­ல­மைச்­சரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் முரண்­பட்­டுக்­கொள்­கின்­றனர். கழி­வ­கற்றல் முகா­மைத்­துவ திட்­டத்தை மேற்­கொள்ள வந்த நிறு­வ­னத்­திடம் தரகுப் பணம் கேட்­ட­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?

 பதில்: அவ்­வா­றான விட­யங்கள் இருந்தால் அது குறித்து விசேட குழு­வுக்கு முறை­யிட முடியும்.

 கேள்வி: மீதொட்­ட­முல்ல குப்­பை­மேட்­டினை அகற்­று­வது குறித்து ஆரா­யப்­பட்­டதா?

 பதில்: இந்த அனர்த்தம் தொடர்பில் 3 நாட்­க­ளுக்­கொ­ரு­முறை ஆராய்ந்து வரு­கின்றோம். நேற்று இடம்­பெற்ற கூட்­டத்தில் பிர­த­மரும் கலந்­து­கொண்டார். இரா­ணுவ பொறி­யியில் பிரி­வி­னரும் நாரா நிறு­வ­னத்­தி­னரும் இணைந்து இந்த குப்பைமேட்டினை அகற்றுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 9 மாதகால அவகாசம் வேண்டுமென்று அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் குறைந்த காலத்தில் இதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நாம் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

 கேள்வி: அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் அரசாங்க நிருவாகத்தில் மாற்றங்களை கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்தீர்கள். அவ்வாறாயின் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுமா?

 பதில்: வெசாக் பௌர்ணமி தினத்துக்கு முன்னர் அதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

 கேள்வி: அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுமா?

 பதில்: மாற்றங்களை பார்த்துக்கொண்டிருங்கள். எதிர்க்கட்சி வரிசையில்கூட மாற்றங்கள் ஏற்படுமோ தெரியாது.

 கேள்வி: மீதொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்தில் பாதிக்கப்ட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு ஒரு கருத்தையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாற்றுக்கருத்தையம் தெரிவித்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

 பதில்: இந்த விடயத்தில் தவறு இடம்பெற்றுள்ளது. இடர் முகாமைத்துவ அமைச்சின் செயற்பாட்டுக்கு இந்த விடயத்தில் இடமளிக்குமாறு நான் பணிப்புரை விடுத்திருக்கிறேன். நட்டஈடு தொடர்பில் ஆராய்வதுடன் வீடுகளை வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 45 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் இந்த மக்களுக்கு வழங்கப்படும்.     

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.