Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...

Featured Replies

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: இலங்கைக்கு 300 ரன்கள் நிர்ணயித்தது தென்னாப்ரிக்கா

 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் தொடரில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்ரிக்கா 299 ரன்கள் குவித்தது.

 
சாம்பியன்ஸ் டிராபி: இலங்கைக்கு 300 ரன்கள் நிர்ணயித்தது தென்னாப்ரிக்கா
 
லண்டன்:
 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் தொடரில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்ரிக்கா 299 ரன்கள் குவித்தது.
 
சாம்பியன்ஸ் டிராபி திருவிழாவில், லண்டனில் இன்று நடைபெறும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. ‘நம்பர் ஒன்’ அணியான தென்ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் தலைமையில் களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
 
201706031924392383_amla2._L_styvpf.gif
 
தென்னாப்ரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹசீம் அம்லா மற்றும் குவின் டி காக் ஆகியோர் களமிறங்கினார். இலங்கை வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடிய ஹசீம் ஆம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 44 ரன்களில் இந்த ஜோடி பிரிந்தது. 23 ரன்கள் எடுத்த குவின் டி காக் பிரதீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 
 
பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் டூ பிளிசிஸ், அம்லாவுடன் இணைந்து ரன்களை குவித்தார். 75 ரன்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் டி வில்லியர்ஸ் வெறும் 4 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தின் 41 வது ஓவரில் 115 பந்துகளில் அம்லா சதமடித்து அசத்தினார்.
 
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டுமினி 38 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி சார்பில் பிரதீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்க உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/03192438/1088876/south-africa-sets-300-target-to-srilanka-in-champions.vpf

  • Replies 236
  • Views 21.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
South Africa 299/6 (50.0 ov)
Sri Lanka 81/1 (9.3 ov)
Sri Lanka require another 219 runs with 9 wickets and 40.3 overs remaining
 
50 ஓவர் போட்டியை T 20 போட்டி மாதிரி விளையாடுகிறார்கள்..:rolleyes:
  • தொடங்கியவர்
சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

ஆம்லா சதம்: தென் ஆப்ரிக்கா வெற்றி ,

ஆம்லா சதம்: தென் ஆப்ரிக்கா வெற்றி

 

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஆம்லா சதம் விளாசினார்.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இலங்கை அணி கேப்டன் தரங்கா, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

ஆம்லா சதம்:

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. குயின்டன் டி காக் 23 ரன்னுக்கு அவுட்டானார். டுபிளசி, தனது 28வது அரைசதம் எட்டினார். 2வது விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்த போது, டுபிளசி (75) அவுட்டானார். கேப்டன் டிவிலியர்ஸ் (4) கைவிட்ட போதும், ஆம்லா தனது 25வது சதம் கடந்தார். மில்லர் (18) நீடிக்கவில்லை. மறுபுறம் ஆம்லா (103), கிறிஸ் மோரிஸ் (20) ரன் அவுட்டாகினர். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. டுமினி (38), பார்னெல் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

தரங்கா ஆறுதல்:

கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு டிக்வெல்லா (41), தரங்கா ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. 'மிடில் ஆர்டரில்' மெண்டிஸ் (11), சண்டிமால் (12), கபுகேதரா (0) கைவிட, தோல்விப் பாதையில் சென்றது. தரங்கா 57 ரன் எடுத்தார். குணரத்னே (4), பிரசன்னா (13) 'சரண்' அடைந்தனர். மலிங்கா (1) வந்த வேகத்தில் திரும்பினார். இலங்கை அணி 41.3 ஓவரில் 203 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்க அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. குசால் பெரேரா (44) அவுட்டாகாமல் இருந்தார்.

151

ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 25வது சதம் அடித்த வீரர் ஆனார் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா. மொத்தம் 154 போட்டிகளில் பங்கேற்ற இவர், 151 இன்னிங்சில் விளையாடி, இந்த இலக்கை எட்டினார். இதற்கு முன் இந்தியாவின் கோஹ்லி, 162 இன்னிங்சில் தான் 25வது சதம் அடித்து இருந்தார்.

http://www.dinamalar.com/icc-champions-trophy-2017/detail.php?id=635

  • தொடங்கியவர்

திடீர் சரிவுகண்டு சுருண்டது இலங்கை

 
திடீர் சரிவுகண்டு  சுருண்டது இலங்கை
 

மினி உலகக்கிண்ணத்தில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாபிரிக்காவும், இலங்கை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் இருந்தும் திடீர் சரிவுகண்டு சுருண்டது இலங்கை.

நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தீர்மானித்தது இலங்கை அணி. மலிங்க, லக்மல் கூட்டணியின் பந்துவீச்சு ஆரம்பத்தில் மிக அபாரமாக அமைந்தது. ஓட்டங்களைப் பெறவிடாமல் இலங்கை அணி கட்டிப்போட்டது. களத்தடுப்பில் சிறந்த வியூகங்களை வகுத்தார் தரங்க. 23 ஓட்டங்களுடன் குயின்டன் ஆட்டமிழந்தார். அம்லா, பிளாசிஸ் இணை சரிவை சமன்செய்தது. அம்லாவின் பிடியெடுப்பைக் கோட்டைவிட்டார் மலிங்க. சாதகமாகப் பயன்படுத்தி சதம் கடந்தார் அம்லா. முடிவில் 6 இலக்குகளை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது தென்னாபிரிக்கா.

பந்துவீச்சில் பிரதீப் 2 இலக்குகளையும், லக்மல், பிரசன்னா இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கிய இலங்கை அணிக்கு நேர்த்தியான ஆரம்பம் வழங்கியது டிக்வெல்ல, தரங்க இணை. ஆரம்பம் முதுல் அடித்தாடினார் டிக்வெல்ல. அணி 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் அவர் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குசல் மென்டிஸ், சந்திமல், கப்புக்கெதர மத்திய வரிசையைப் பலப்படுத்தத் தவறினர். எவரும் பதின்ம ஓட்டங்களைத் தாண்டவில்லை. அத்தனை பேரையும் திக்குமுக்காட வைத்தார் தாகிர். அரைச்சதம் கடந்தார் தரங்க. 57 ஓட்டங்களுடன் தரங்கவையும் வீழ்த்தினார் தாகிர். குசல் ஜெனித் பெரேரா ஓர் முனையில் நிலைத்துநிற்க மறுமுனையில் இலக்குகள் சரிந்தன. முடிவில் 203 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது இலங்கை அணி. 96 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அபார வெற்றிபெற்றது.

பந்துவீச்சில் தாகிர் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். மொறிஸ் 2 இலக்குகளையும், ரபாடா, மோர்கல் இருவரும் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.

தாகிர் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

263927-1024x691.jpg

263907.jpg

263930.jpg

263942-1024x752.jpg

263945-1024x694.jpg

18891464_1616964164989340_1663005588572963954_o-1024x672.jpg

263947.jpg

http://uthayandaily.com/story/5083.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சண்டே ‘சண்டை’ : இன்று இந்தியா–பாக்., மோதல் ,

சண்டே ‘சண்டை’ : இன்று இந்தியா–பாக்., மோதல்

 

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த பரபரப்பான போட்டியை காண உலக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் 'டாப்- 8' அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

இதில் இன்று(சண்டே) பர்மிங்காமில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடன் அனைத்து வித விளையாட்டு உறவுகளையும் துண்டித்தது இந்தியா. இருப்பினும், ஐ.சி.சி., நடத்தும் தொடரில் மட்டும் இரு அணிகளும் பங்கேற்கின்றன. இதனால், இன்றைய போட்டி ஒட்டு மொத்த கிரிக்கெட் உலக ரசிகர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

துவக்கம் முக்கியம்:

இந்திய அணிக்கு துவக்க ஜோடியாக ஷிகர் தவான், ரோகித் சர்மா களமிறங்க உள்ளனர். சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் ரன் மழை பொழிந்த தவானுக்கு, இங்கிலாந்திலும் 'ராசி' தொடர்கிறது. கடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 363 ரன்கள் குவித்த இவர், சமீபத்திய பயிற்சி போட்டிகளிலும் விளாசினார் (40, 60 ரன்). இவருடன் ரோகித் சர்மா சிறப்பான துவக்கம் தர முயற்சிக்க வேண்டும்.

'மிடில் ஆர்டர்' பலமா:

'மிடில் ஆர்டரில்' கேப்டன் கோஹ்லி வருகிறார். கடந்த ஆண்டு பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த கோஹ்லி, சமீபத்திய ஆஸ்திரேலிய தொடர், ஐ.பி.எல்., தொடரில் ஏமாற்றினார். தவிர, 2014ல் இங்கிலாந்து மண்ணில் சொதப்பியுள்ளார்.

இருப்பினும், பயிற்சியில் அரைசதம் விளாசியது இவரது நம்பிக்கையை மட்டுமல்ல, நமக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவருடன் சமீபத்தில் தொடர்ந்து ஏமாற்றி வரும் ரகானே, சுதாரித்து ரன்கள் சேர்த்தால் நல்லது.

தோனி நம்பிக்கை:

முன்னாள் கேப்டன், அனுபவ வீரர் தோனி, முன்னதாக பேட்டிங் செய்ய வருவார் என நம்பப்படுகிறது. களத்தில் நங்கூரம் போல நிலைத்து நின்று விட்டால், அப்புறம் இவரை பெயர்த்து எடுப்பது எதிரணிக்கு மிகவும் சவாலான விஷயம். 'சீனியர்' விக்கெட் கீப்பரான தோனியின், மின்னல் வேக 'ஸ்டம்பிங்' திறன் நிச்சயம் இன்று வெற்றிக்கு கைகொடுக்கும்.

வருவாரா யுவராஜ்:

மீண்டும் சர்வதேச அரங்கிற்கு திரும்பிய யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் விளாசினார். அடுத்து ஐ.பி.எல்., தொடரில் ஓரிரு போட்டிகள் தவிர, மற்றவற்றில் சொதப்பல் தான். தவிர, இரு பயிற்சி போட்டியிலும் பேட்டிங், பவுலிங் செய்யாததால், இன்று யுவராஜ் சிங் களமிறங்குவாரா என்பது சந்தேகம் தான். மற்றபடி கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடஜோ தொல்லை தரலாம்.

கைகொடுக்குமா 'வேகம்':

பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், பும்ரா கூட்டணி எதிரணிக்கு கடும் சவால் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இவர்களுடன் முகமது ஷமி இடம் பெறுவாரா என இன்று தான் தெரியும். 'சுழலில்' அஷ்வின், ஜடேஜா என, இருவரும் பாகிஸ்தானை பதம் பார்க்க காத்திருக்கின்றனர்.

இளம் கேப்டன்:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சியில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் உள்ளது. அதேநேரம், மிஸ்பா, யூனிஸ் கான் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல், பேட்டிங் படை வலுவற்றதாக உள்ளது. இருப்பினும், துவக்க வீரர்கள் அசார் அலி, அகமது ஷேசாத், பாபர் ஆசம் அணிக்கு கைகொடுப்பர் எனத் தெரிகிறது. இளம் கேப்டன் சர்பராஸ் அகமதுவும் வெற்றி பெற தேவையான திட்டங்களை வகுக்கலாம்.

சோயப் மிரட்டல்:

இந்த அணியில் உள்ள முக்கிய வீரர் சோயப் மாலிக். நல்ல அனுபவம் வாய்ந்த இவர், தனி நபராக போராடி போட்டியை தன் பக்கம் கொண்டு செல்லும் வல்லமை படைத்தவர். இவருக்கு முகமது ஹபீஸ் கைகொடுக்கலாம்.

பவுலிங் எப்படி:

பவுலிங்கில் வகாப் ரியாஸ், ஜுனைடு கானுடன், இளம் புயல் என வர்ணிக்கப்பட்ட முகமது ஆமிர் இணைகிறார். இந்த கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தருமா என்பது இன்று தெரியும். 'சுழலில்' ஹாரிஸ் சோகைல், இமாம் வாசிம் உள்ளனர்.

http://www.dinamalar.com/icc-champions-trophy-2017/detail.php?id=636

  • தொடங்கியவர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

 

 
கோப்புப்படம்: விராட் கோலி, சர்ப்ராஸ் அகமது
கோப்புப்படம்: விராட் கோலி, சர்ப்ராஸ் அகமது
 
 

விராட் கோலி குழுவின் ஒட்டுமொத்த பலமா? பாக். அணியின் கணிக்க முடியா எழுச்சியா? உச்சக்கட்ட பரபரப்பில் ரசிகர்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசைக்கும், பாகிஸ்தான் அணியின் ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சுக்கும் இடையிலான சிறந்த மோதலாக இந்த ஆட்டம் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்திய அணி ஒட்டுமொத்தமாக வலுவாக திகழ்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி எந்த நிலையிலிருந்தும் எழுச்சிபெற்று எதிரணியினரை வீழ்த்தும் திடீர்த் திறமை கொண்டது.

வலுவான பேட்டிங் வரிசை

கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை எந்தவித பந்து வீச்சுக்கும் அச்சுறுத்தலாகவே விளங்கும்.

ஆனால் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் மற்றும் அவருக்கு நிகரான திறமை கொண்ட ஜூனைத் கான் ஆகியோர் இங்கிலாந்து சூழ்நிலைகளில் அதிலும் பேட்டிங்குக்கு சாதக மான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சோதனை யாக இருக்கக்கூடும்.

கணிக்க முடியாத அணியாக திகழும் பாகிஸ்தான் அணி, போட்டி யின் தினத்தில் சிறப்பாக செயல் படும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும். இம்முறை இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறக்கும் தன்மை உள்ளது.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அணியை சமநிலை அடையச் செய்யும் காரணியாக திகழ்கிறார். ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் கடந்த இரு ஆண்டுகளாக குறுகிய வடிவிலான போட்டிகளில் அற்புத மான திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெற்றிகரமான டெஸ்ட் சீசனுக்கு பிறகு உமேஷ் யாதவின் பந்து வீச்சு மெருகேறி உள்ளது. அதே வேளையில் சிறந்த பேட்ஸ்மேன் களின் திறனை சோதிக்கும் வகையிலான பந்து வீச்சை முகமது ஷமி கொண்டுள்ளார்.

அஸ்வினா? ஜடேஜாவா?

பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலது கை பேட்ஸ்மேன்களையே அதிகம் கொண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாள ராக இடம் பெறுவதில் ரவீந்திர ஜடேஜாவுடன் அஸ்வின் மல்லுக் கட்ட வேண்டியது இருக்கும்.

சமூக அரசியல் காரணமாக மற்ற அணிகள் மோதும் போட்டிகளை விட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.

எல்லை கடந்த தீவிரவாதம், அத்துமீறல்கள் காரணமாக நீடித்து வரும் பதற்றமும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்த் துள்ளது. கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை இது மற்றொரு ஆட்டம். ஆனால் தீவிர ரசிகர் களுக்கு அப்படியல்ல. வெற்றியை தாண்டி சாதிக்க வேண்டும் என தங்களது கிரிக்கெட் கதாநாயகர் களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலிக்கு, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது தெரிந்திருக்கும். ஆனால் தற்போது அவர் ஒரு கேப்டனாக களமிறங்க உள்ளார். இதனால் இந்த ஒட்டுமொத்த தொடரும் கேப்டன்ஷிப்பில் கோலியின் வளர்ச்சி எந்தவிதத்தில் உள்ளது என்பதை சோதிப்பதாக இருக்கும்.

மேலும் தலைமை பயிற்சியாள ரான அனில் கும்ப்ளே உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்த தொடரை கோலி அணுகுகிறார். இந்த விஷயத்தில் இருந்து அவர் எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை இன்றைய ஆட்டம் பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும். தேவையில்லாத நேரத்தில் முக்கியத்துவம் அற்ற பிரச்சினையில் (கோலி-கும்ப்ளே மோதல்) இருந்து இந்திய அணி எளிதாக கடந்து செல்லும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்தலாம்.

கருத்து மோதல்கள்

சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சம் இல்லாதது பாகிஸ்தான் அணி. சர்ச்சைகளின் மீது சவாரி செய்யும் போக்கு கொண்ட அந்த அணியில், உடல் தகுதி பிரச்சினை காரணமாக உமர் அக்மல் இங்கிலாந்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேர்வுக்குழு தலைவர் இன்சாமுக்கும், வாரியத்துக்கும் இடையே கருத்து மோதல்களும் உருவானது.

ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன்ஸ் டிராபியில் மட்டுமே பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக சிறப்பான சாதனைகளை வைத்துள்ளது. இதுவரை மோதி உள்ள 3 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி 2 வெற்றிகளையும், இந்தியா ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு

ஆனால் தற்போதைய நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங்கை பாகிஸ்தான் அணியிடன் ஒப்பிடும்போது அதிக அனுபவமும், தரமும் கொண்டதாக உள்ளது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 6 மாதங்களுக்கு பிறகு சர்தேச போட்டியில் களமிறங்கு கிறார்.

மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண், 2013-ம் ஆண்டு சாம்பி யன்ஸ் டிராபியில் சிறந்த பேட்ஸ் மேனாக தேர்வு செய்யப்பட்டி ருந்தார். மீண்டும் அதுபோன்ற தொரு செயல்திறனை வெளிப் படுத்த அவர் விரும்புவார்.

போட்டியின் தினத்தில் சிறந்த ஆடுகளங்களிலும் திறனை வெளிப்படுத்தி வெற்றியாளர்களாக இந்த ஜோடியால் தங்களை நிரூபிக்க முடியும். ரோஹித் சர்மா-ஷிகர் தவண் ஜோடியின் சராசரி ரன்குவிப்பு 38 ஆகும். ஆனால் அதேவேளையில் பாகிஸ்தான் தொடக்க ஜோடியான அசார் அலி - அகமது ஷேசாத் ஜோடியின் ரன்குவிப்பு சராசரி 33 ஆகவே இருக்கிறது.

3-வது இடத்தில் களமிறங்கும் கோலி உலக பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரது வரிசையில் 4-வது வீரராக உள்ளார். இதே இடத்தில் களமிறங்கும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின், ஒருநாள் போட்டி சராசரி 45 ஆக உள்ளது.

22 வயதான அவர் பாகிஸ்தான் அணியின் சமீபகால சிறந்த கண்டு பிடிப்பாக திகழ்கிறார். 26 போட்டி களில் மட்டுமே விளையாடிய நிலையில் அவர் 5 சதங்கள் அடித் துள்ளார். இருப்பினும் இந்தியா வுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது திறனை சோதித்துக்கொள்ள முடியாது. பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்தின் முன்னால் எந்த மனநிலையில் அவர் விளை யாடுகிறார் என்பதை பொறுத்தே அவரது சிறந்த பேட்டிங் வெளிப் படும்.

யுவராஜ் சிங்

முகமது ஹபீஸ், கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோருடன் ஒப்பிடும் போது யுவராஜ் சிங், தோனி ஆகியோர் தரம் வாய்ந்த வீரர்களாகவும், சிறந்த திறனை வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனர். வைரஸ் காய்ச்சல் காரண மாக இரு பயிற்சி ஆட்டங்களிலும் யுவராஜ் சிங் விளையாடவில்லை.

ஆனால் கடந்த இரு நாட்களாக அவர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒருவேளை அவர் விளையாடாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். முதன்முறை யாக துணைக்கண்டங்களுக்கு வெளியே நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க உள்ள கேதார் ஜாதவுக்கு சோதனை காத்திருக்கிறது.

முகமது அமிர், வகாப் ரியாஸ், ஜூனைத்கான் ஆகியோரை கொண்ட மூவர் கூட்டணியால் வேகப் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சற்று மேலோங்கிய அணி யாகவே உள்ளது. ஆனால் இந்தியா வின் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரும் தாக்குதல் தொடுக்க சளைத்தவர்கள் இல்லை.

புவனேஷ் குமார் பாகிஸ் தானுக்கு எதிராக 21.55 என்ற பவுலிங் சராசரி வைத்துள்ளார், சிக்கன விகிதமும் அபாரமான ஓவருக்கு 4.21 என்று உள்ளது.

ஷோயப் மாலிக் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார். புதிய அதிரடி ஆல்ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப் இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் தன்னை நிரூபிக்க முனைப்புடன் இருப்பார். ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ள இந்த ஆட்டத்துக்கு மழை அச்சுறுத்தலும் உள்ளது. போட்டி நடைபெறும் பர்மிங்காமில் காலை மற்றும் மதிய வேளையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்:

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, பாபர் அசாம், பாஹிம் அஸ்ரப், பஹர் ஜமான், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், முகமது அமிர், முகமது ஹபீஸ், ஷதப் கான், ஷோயிப் மாலிக், உமர் அக்மல், வகாப் ரியாஸ்.

நேரம்: பிற்பகல் 3

இடம் : பர்மிங்காம்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

http://tamil.thehindu.com/sports/ஐசிசி-சாம்பியன்ஸ்-டிராபி-தொடர்-இந்தியா-பாகிஸ்தான்-இன்று-பலப்பரீட்சை/article9719467.ece?homepage=true

  • தொடங்கியவர்

அடுத்து வரும் இரு போட்டிகளில் உப்புல் இல்லை

 

அடுத்து வரும் இரு போட்டிகளில் உப்புல் இல்லை

 

 
இலங்கை அணி வீரர் உப்புல் தரங்க சம்பியன் ட்ராபி தொடரில் அடுத்து வரும் இரு போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அந்த அணியின் தற்போதை தலைவரான அவர், நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், பந்து வீச்சுக்காக அதிக நேரத்தை வீணடித்தமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றையதினம் இலங்கை அணி 50 ஓவர்கள் பந்து வீச நான்கு மணித்தியாலங்களுக்கும் அதிக காலத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாகும்.

இதன்படி, உபுல் தரங்க அடுத்து இடம்பெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இடம்பெற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=92067

  • தொடங்கியவர்

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு

லண்டனில் நேற்று 2 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு
 
பர்மிங்காம்:

8-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் 8 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதிய 2-வது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நேற்று நடந்த 3-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 96 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

4-வது ‘லீக்’ ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜபஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - சர்பிராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்து இருக்கும்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. வானிலை நிலவரப்படி பிற்பகலில் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று லண்டனில் 2 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதையொட்டி இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை சீர்குலைக்கும் வகையில் எட்ஜ்பஸ்டனிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இங்கிலாந்து உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பெரும் பீதி அடைந்து உள்ளனர். உளவுத்துறையின் எச்சரிக்கையில் மேலும் அச்சத்தில் உள்ளனர். இங்கிலாந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். வீரர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அவர்கள் அளித்து உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/04125051/1088942/India-vs-Pakistan-match-addition-security-protection.vpf

  • தொடங்கியவர்

#ChampionTrophy: இந்தியா பேட்டிங் - அஸ்வின் அணியில் இல்லை..!

 
 

18926194_867327656752631_1882135311_o_14

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 


இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 'சாம்பியன்ஸ் ட்ராஃபி' தொடரில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இங்கிலாந்தின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஸ்வின் இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக லண்டனில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பர்மிங்ஹாம் நகரத்தில் உள்ள ஹோட்டலில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. 

http://www.vikatan.com/news/sports/91325-pakistan-won-the-toss-and-choose-to-field.html

  • தொடங்கியவர்

1 நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு தொடங்கியது இந்தியா-பாக்., ஆட்டம்

 
 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் மோதி வருகின்றன.

மௌன அஞ்சலிக்கு பிறகு தொடங்கிய இந்தியா-பாக்., ஆட்டம்

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சனிக்கிழமை இரவு லண்டனில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவான ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

அரங்கு முழுவதும் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் குழுமியுள்ளனர் என்றாலும், மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டிக்கான பல இருக்கைகள் இன்னும் காலியாகவுள்ளதை காண முடிகிறது என்று அங்கிருக்கும் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் கூறுகிறார்.

லண்டனில் சனிக்கிழமை இரவு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், பாதுகாப்பில் பெரிய கெடுபிடிகள் காணப்படவில்லை.

http://www.bbc.com/tamil/global-40149674

  • தொடங்கியவர்

எட்ஜ்பாஸ்டனில் இந்திய வீரர்கள் 'சரவெடி': பாகிஸ்தானுக்கு 324 வெற்றி இலக்கு

 

பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

எட்ஜ்பாஸ்டனில் இந்திய வீரர்கள் 'சரவெடி': பாகிஸ்தானுக்கு 320 வெற்றி இலக்குபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிக்க, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது.

இந்திய தொடக்க ஆட்டக்காரரர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

65 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், ஷதாப் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித்சர்மாவுடன் அணித்தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

அரைச்சதம் எடுத்த தவான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅரைச்சதம் எடுத்த தவான்

இதனிடையே, 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா எதிர்ப்பாராத விதமாக 'ரன் அவுட்'டாக, யுவராஜ் சிங் மற்றும் கோலி ஜோடி பாகிஸ்தானின் பந்துவீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது.

39 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பவர் ப்ளேயில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் விரட்டியடித்தனர்.

இதனால் மளமளவென்று இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை எட்டினர்.

யுவராஜ்சிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகுறைந்த பந்துகளில் அரைச்சதம் எடுத்த யுவராஜ்சிங்

ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளின் உதவியோடு, 32 பந்துகளில் 53 ரன்களை எடுத்த யுவராஜ்சிங், ஹாசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா இறுதி ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் அடித்து இந்திய அணி வலுவான ஸ்கோர் எடுக்க உதவினார்.

81 ரன்களுடன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்கள் எடுத்துள்ளது.

மழையின் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பாகிஸ்தான் அணிக்கு 48 ஓவர்களில் 324 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

http://www.bbc.com/tamil/sport-40150804

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்

பர்மிங்ஹாமில் கிரிக்கெட் கண்ணாமூச்சி: போட்டியை இந்தியா 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் ஆடிய இந்திய 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான்164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 91, கோலி 81, ஷிகார் தவான் 68, யுவராஜ் சிங் 53 மற்றும் பாண்ட்யா 20 ஓட்டங்களை எடுத்தனர்.

பாகிஸ்தான் அணியில் அசர் அலி மட்டுமே சிறப்பாக ஆடி 50 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணி அடுத்து இலங்கையை எதிர்த்தும், பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவை எதிர்த்தும் ஆடவுள்ளன.
--------------------------------------------------------------------------------------------------

கடைசி ஆட்டக்காரரும் ஆட்டமிழந்தார்.

ஒன்பதாவதும் விழுந்தது(9/164)

கடைசியாக ஆட்டமிழந்தவர் ஹஸன் அலி

எட்டு பேர் அவுட்(8/163)

ஒன்பது ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் முஹமது அமீர் அவுட்

-----------------------------------------------------------------------------------------
நெருக்கடியில் பாகிஸ்தான். ஏழாவது விக்கெட்டும் விழுந்தது.(7/151)

அணியின் தலைவர் சர்ஃபராச் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இன்னும் எவ்வளவு ஓவர்கள் பாகிஸ்தானால் தாக்குபிடிக்க முடியும் என்று கேள்விகள்

--------------------------------------------------------------------
ஆறாவது விக்கெட்டும் விழுந்தது(6/135)

கடைசியாக ஆடவந்த இமாத் வசீம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கியுள்ளவர் ஷதாப் கான்

------------------------------------------------------------------------------------
ஐந்தாவது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்(5/131)

முகமது ஹஃபீஸ் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தில் புவனேஷ் குமாரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

நெருக்கடி நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. ஓவருக்கு 10க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் எனும் சூழல்.

புதிதாக ஆடவந்துள்ளார் இமாத் வசீன். அவரும் அணித் தலைவருமான சர்ஃபராஸும் ஆடி வருகின்றனர்.
------------------------------------------------------------------------------------------

நான்காவது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்( 4/114)

ரவீந்திர ஜடேஜா வேகமாக வந்த பந்தை தடுத்து இடது கையால் நேராக ஸ்டம்பை நோக்கி வீச ஷோயிப் மாலிக் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ஓட்டங்கள் 15. அதில் இரண்டு பவுண்டிரிகள் ஒரு சிக்ஸர்.
---------------------------------------------------------------------------------------------

100 ஓட்டங்களை எட்டியது பாகிஸ்தான். 130 பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்து அந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதுவரை 90 நிமிடங்கள் ஆடியுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------

மூன்றாவது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்(3/91). சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துவக்க ஆட்டக்காரர் அசர் அலி 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

65 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 பவுண்ட்ரிகளை அடித்தார்.
----------------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழபுக்கு 89 ஓட்டங்கள்

இன்றைய போட்டியைக் காண 24,156 பேர் வந்திருந்தனர் என்று ஐ சி சி அறிவித்துள்ளது.

எனினும் மாலையில் வானிலை சற்று மேம்பட்ட பிறகே ஏராளமானோர் அரங்குக்கு வந்தனர்.
-----------------------------------------------------------------------------------

அசர் அலி தப்பித்தார். ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் அவர் ஒரு பந்தை ஓங்கி உயர்ந்து அடிக்க அது புனவேஷ் குமார் இருக்கும் திசையை நோக்கி பயணித்தது.

எனினும் சுலபமாக பிடித்திருக்க கூடியதை அவர் தவறவிட்டார்.

இதனிடையே 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகள் இழ்ப்புக்கு 67 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------

இரண்டாவது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். அணியின் ஓட்ட எண்ணிக்கை 61ஆக இருந்தபோது, 8 ஓட்டங்களை எடுத்திருந்த பாபர் ஆசாம் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை அடுத்து முஹமது ஹஃபீஸ் ஆடவந்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. 47 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அஹ்மத் ஷெஜாத் புவனேஷ்குமாரின் பந்துவீச்சில் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே பாகிஸ்தான் அணி 50 ஓட்டங்களையும் கடந்துள்ளது. 10ஆவது ஓவரில் அவர்கள் 50ஐ கடந்தனர்.
------------------------------------------------------------------------------------------

வெயில் வந்தது ஆட்டம் தொடர்கிறது.

பாகிஸ்தான் அணிக்கான இலக்கு 41 ஓவர்களில் 289 ஓட்டங்களாக மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

--------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் அணியின் 4.5 ஓவர்கள் முடிந்த நிலையில் மீண்டும் மழை. ஆடுகளம் மூடப்படுகிறது. இச்சூழலில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.

துவக்க ஆட்டக்காரர்கள் அசார் அலி 12 ஓட்டங்களும், அஹமத் ஷெஜாத் 7 ஓட்டங்களும் எடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
--------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் அணிக்கு 48 ஓவர்களில் 324 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிப்பு.

அசார் அலியும் அஹமத் ஷெஜாதும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியுள்ளனர்.

முதல் இரண்டு ஓவர்களில் அவர்கள் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------------

இந்திய அணியின் ஆட்டம் நிறைவு. 48 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்கள்.

விராட் கோலி ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களும், பாண்ட்யா 20 ஓட்டங்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
-----------------------------------------------------------------------------------

இந்தியா 300 ஓட்டங்களைக் கடந்தது. கோலி திடீரென அதிரடி தொடர்ச்சியாக நான்கும் ஆறுமாக அடித்து வருகிறார்.

இமாத் வசீம் வீசிய கடைசி ஓவரில் பாண்ட்யா தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை அடுத்து அரங்கிலிருந்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
எனினும் அடுத்த பந்தையும் பவுண்ட்ரிக்கு வெளியே அடிக்க எடுத்த முயற்சி பலனிக்கவில்லை.

இதனிடையே மிண்டும் மழை.

----------------------------------------------------------------------

யுவராஜ் சிங் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணியின் ஆட்டம் முடிய இன்னும் சில பந்துகளே எஞ்சியுள்ள நிலையில், கோலி அதிரடி ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
அவருடன் ஹர்திக் பாண்ட்யா ஆடி வருகிறார்.
இந்தியா 300 ஓட்டங்களை எட்டும் நிலையில் உள்ளது.
--------------------------------------------------------------------

விராட் கோலியும் தப்பித்தார்.

44ஆவது ஓவரில் ஹஸன் அலி வீசிய பந்தை விராட் கோலி சரியாக அடிக்காததால், பந்து மட்டையின் விளிம்பில்பட்டு மிகவும் உயரமாக எழுந்து சுலபமாக பிடிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.

எனினும் மாற்று ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமானால் அதை பிடிக்க முடியவில்லை.
இதுவும் மிகவும் சுலபமாக பிடித்திருக்க வேண்டிய ஒன்று
------------------------------------------------------------------------------------------------

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் திடீரென ரன் மழை. இயற்கை மழையால் ஆட்டம் அவ்வப்போது தடைபட, ஆட்டம் அணிக்கு 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

எனினும் 40ஆவது ஓவருக்கு பிறகு யுவராஜ் சிங் அதிரடியாக ஆடிவருகிறார்.

பந்துகள் திக்கெட்டு பறக்கின்றன. ரன் மழை கொட்டுகிறது என்று அரங்கில் கூடியுள்ள இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

மறுமுனையில் அணித் தலைவர் விரார் கோலி சற்று அடக்கி வாசிப்பது போலத் தெரிகிறது.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமத் அமீருக்கு தசைபிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் ஆடுகளத்திலிருந்து வெளியேறுகிறார். அவர் வீசிவந்த ஓவரில் எஞ்சியிருக்கும் இதர ஐந்து பந்துகளை வஹாப் ரியாஸ் வீசுகிறார்.
----------------------------------------------------------------------
தப்பித்தார் யுவராஜ் சிங். 39ஆவது ஓவரில் அவர் சிக்ஸர் அடிக்க முயன்ற பந்து எதிர்பார்த்த உயரமும் தூரமும் செல்லாமல் நேராக ஹஸன் அலியிடம் சென்ற பந்தை அவர் கைநழுவவிட்டார்.

மிகவும் சுலபமாக பிடித்திருக்க வேண்டிய பந்து அது.
-------------------------------------------------------------------------------------------

இந்தியா 200 ஓட்டங்களைப் பெற்றது. 213 பந்துகளில் இந்திய அணி துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

விராட் கோலியும் யுவராஜ் சிங்கும் ஆடி வருகின்றனர்.

---------------------------------------------------------------------------------

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். 91 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ரன் அவுட் ஆனார். இதையடுத்து இந்தியா இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எனும் நிலை.

அடுத்து யுவராஜ் சிங் ஆட வந்துள்ளார்
--------------------------------------------------------------------------------------

வானம் வெளுத்தது-மீண்டும் தொடங்கியது ஆட்டம் எனினும் அணிக்கு 50லிருந்து தலா 2 ஓவர்கள் குறைக்கப்பட்டு 48 ஓவர்களைக் கொண்ட போட்டியாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெறும் போட்டி இந்திய-பாகிஸ்தா அணிகளுக்கு இடையேயா அல்லது கிரிக்கெட் விளையாட்டுக்கும் மழைக்கும் இடையேயான போட்டியா என்று ரசிகர்கள் உரையாடுவதை கவனிக்கக்கூடியதாக இருந்தது

-----------------------------------------------------------------------------------

மீண்டும் மழை-ஆட்டம் தடை:

பர்மிங்ஹாம் நேரம் மதியம் 1 30 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் ஆட்டம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு.

33.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்துள்ளது.

துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா 77 ஓட்டங்களும், அணித் தலைவர் 24 ஓட்டங்களும் எடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆடுகளம் மூடப்படுகிறது.

------------------------------------------------------------------------------

ரோஹித் ஷர்மா 75 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 6 பவுண்ட்ரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

ஆடுகளத்தில் லேசான ஈரப்பதம் இருப்பதை காண முடிகிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பந்துகளை தடுப்பதில் சில சிரமங்களை எதிர்கொள்வதுபோல தோன்றுகிறது.
------------------------------------------------------------------------------------

30 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 74 அணித்தலைவர் கோலி 16 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

----------------------------------------------------------------------------------

இந்திய அணி 26 ஓவர்கள் முடிந்த நிலையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள்

ஷிகார் தவான் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 65 பந்துகளை எதிர்கொண்டார். அவர் 6 பவுண்ட்ரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார்.

அடுத்து அணித் தலைவர் விராட் கோலி ஆடவந்துள்ளார்.

------------------------------------------------------

துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் இருவரும் அரைசதம் அடித்துள்ளனர்.

22 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 125 ஓட்டங்கள்.

ஷிகார் தவான் ஒரே ஓவரில் மூன்று பவுண்ட்ரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார்.

இதையடுத்து இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாம அதிகரித்தது.

மழை மேங்கள் சற்று விலகியிருந்தாலும், ஈரமான காற்று அரங்கில் வீசிவருகிறது.

காற்றிலுள்ள ஈரப்பதம் காரணமாக, வீசப்பந்து பந்தின் வேகம் சற்று குறையும் என்பதால் தற்போது சுழல்பந்து

வீச்சாளர்கள் பந்துவீசி வருகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------

மழையின் காரணமாக இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டாலும், ஓவர்களின் எண்ணிக்கை குறையாது என அறிவிக்கப்பட்டும்ள்ளது.

இதையடுத்து மீண்டும் மழை வராமல் இருந்தால் தல 50 ஓவர்களைக் கொண்ட போட்டியாகவே இது இருக்கும்

ரோஹித் ஷர்மா 41 ஓட்டங்கள் மற்றும் ஷிகார் தவான் 29 ஓட்டங்களுடன்ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

------------------------------------------------------------

மழையால் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டிருந்த இந்த ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
பர்மிங்ஹா எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிவரும் இந்திய அணி தற்போது(உள்ளூர் நேரம் 12.15 மணி)
13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.

மழையின் காரணமாக திறந்தவெளி அரங்கிலிருந்து வெளியேறிய ரசிகர்கள் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். தற்போது அரங்கில் கூடுதல் இருக்கைகள் நிரம்பியுள்ளன.

Bild könnte enthalten: Stadion und im Freien
Bild könnte enthalten: Menschenmasse, Stadion und im Freien
Bild könnte enthalten: 2 Personen, Menschenmasse und im Freien
  • தொடங்கியவர்

இந்தியா இமாலய வெற்றி: பாக்., அணி ‘சரண்டர்’ ,

 

 

இந்தியா இமாலய வெற்றி: பாக்., அணி ‘சரண்டர்’

 

 

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கோஹ்லி, யுவராஜ் உள்ளிட்டோர் அரை சதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் 'டாப்- 8' அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

அஷ்வின் இல்லை:

இன்று பர்மிங்காமில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஷமி, 'சுழல்' வீரர் அஷ்வின் இடம்பெறவில்லை.

ரோகித் அரை சதம்:

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா துவக்கம் தந்தனர். ஆமிர் பந்தை ரோகித் பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்கு இமாத் வாசிம் பந்தை தவான் பவுண்டரிக்கு அனுப்பினார். மழை குறுக்கிட, போட்டி 50 நிமிடம் தடைப்பட்டது. பின், மீண்டும் துவங்கிய போட்டியில், ஷாதப் கான் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட இவர் அரை சதம் கடந்தார். தன் பங்கிற்கு தவானும் அரை சதம் விளாசினார். இவர் 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் மழை:

இந்திய அணி 33.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. 45 நிமிடங்களுக்குப்பின், தலா 48 ஓவர் என போட்டி மாற்றி அமைக்கப்பட்டது. ரோகித் (91) ரன்-அவுட்டாகி சத வாய்ப்பை இழந்தார். பின், இணைந்த கேப்டன் கோஹ்லி, யுவராஜ் ஜோடி எதிரணி பந்துவீச்சை பதம்பார்த்தது.

கோஹ்லி, யுவராஜ் அரை சதம்:

ஹசன் அலி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கோஹ்லி அரை சதம் கடந்தார். தன் பங்கிற்கு, வகாப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய யுவராஜ் (53) அரை சதம் அடித்தார். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினார். இமாத் வீசிய 48வது ஓவரில் இவர் தொடர்ந்து மூன்று சிக்சர் பறக்கவிட, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முடிவில், இந்திய அணி 48 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. கோஹ்லி (81), பாண்ட்யா (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின், 48 ஓவரில் 324 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. போட்டியின் 5வது ஓவருக்கு இடையே மழை வர, 40 நிமிடம் போட்டி பாதிக்கப்பட்டது. பின், 41 ஓவரில் 289 ரன்கள் இலக்குடன் மீண்டும் போட்டி துவங்கியது. ஷேசாத் (12), பாபர் அசாம் (8) விரைவில் வெளியேறினர்.

அபார பந்துவீச்சு:

அசார் அலி (50) அரை சதம் அடித்து அவுட்டானார். மாலிக் (15) ரன்-அவுட்டானார். ஜடேஜா 'சுழலில்' ஹபீஸ் (33) சிக்கினார். பாண்ட்யா 'வேகத்தில்' இமாத் வாசிம் (0), கேப்டன் சர்பராஸ் (15) ஆட்டமிழந்தனர். மற்றவர்களும் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 33.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி வீழ்ந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

http://www.dinamalar.com/icc-champions-trophy-2017/

 

  • தொடங்கியவர்

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

 
 

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 124ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவெற்றி பெற்றது.

இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியாவின் அமோக வெற்றிக்கு காரணமாக அமைந்த 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

  • அருமையான தொடக்கம்; நிதானமிழக்காத இந்திய வீரர்கள்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது.

இந்திய தொடக்க ஆட்டக்காரரர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஷிகர் தவான் 68 ரன்களையும், ரோகித் சர்மா 91 ரன்களையும் எடுத்தனர். இந்த அடித்தளம் இந்தியா 300 ரன்களுக்கு மேலாக குவிக்க பெரிதும் உதவியது

ரோகித் சர்மாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரோகித் சர்மா
  • யுவராஜ்சிங், கோலி அதிரடி

39 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பவர் ப்ளேயில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும், பாகிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் விரட்டியடித்தனர்.

இதனால் மளமளவென்று இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைச்சதத்தை எட்டினர். 32 பந்துகளில் 53 ரன்களை யுவராஜ்சிங் எடுக்க, 81 ரன்களுடன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

32 பந்துகளில் 53 ரன்களை எடுத்த யுவராஜ்சிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption32 பந்துகளில் 53 ரன்களை எடுத்த யுவராஜ்சிங்
  • வருண பகவானின் ஆட்டம்

இந்த போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு இணையாக, ஆட்டத்தின் போக்கை மாற்ற மழையும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

48 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தனது ஆட்டத்தை துவக்கிய பாகிஸ்தான் நான்காவது ஓவரை ஆடிக் கொண்டிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இமாலய இலக்கு பாகிஸ்தானின் வெற்றியை மேலும் கடினமாக்கியது.

  • நிலைத்து விளையாடாத பாகிஸ்தான் மட்டைவீச்சாளர்கள்

பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இந்த போட்டியில் நிலைத்து விளையாடதது அந்த அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும். நன்றாக ஆடிக் கொண்டிருந்த அஸார் அலி, அரைசதம் எடுத்த நிலையில், அடுத்த பந்திலேயே பாண்ட்யா கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

  • துல்லியமான பந்துவீச்சு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுபடத்தின் காப்புரிமைAFP Image captionஇந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு

 

http://www.bbc.com/tamil/sport-40154172

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இன்று மோதல்
 
லண்டன் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி அதில் மழையால் தோல்வியில் இருந்து தப்பித்து தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டது. வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தமிம் இக்பாலின் சதத்தின் துணையுடன் 305 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

201706050925012055_Australia-vs-Banglade

இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவாகும். இதில் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். அதனால் இரு அணி வீரர்களும் முழுமூச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 18-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/05092458/1089034/Champions-Trophy-Australia-vs-Bangladesh-today-collision.vpf

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் சுவாரஸ்யமான துளிகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை பதம் பார்த்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் நடந்த சுவாரஸ்யமான துளிகளை பார்க்கலாம்.

 
 
 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் சுவாரஸ்யமான துளிகள்
 
பர்மிங்காம் :

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் பர்மிங்காமில் நேற்று நடந்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) இந்திய அணி வெற்றி பெற்றது.

* கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்தியா 72 ரன்களை விளாசியது. இது 22 முதல் 35-வது ஓவருக்குள் (14 ஓவர்) எடுக்கப்பட்ட ஸ்கோரை விட அதிகமாகும்.

201706050901430500_Indian-team._L_styvpf

* ரோகித் சர்மா (91 ரன்), ஷிகர் தவான் (68 ரன்), விராட் கோலி (81 ரன்), யுவராஜ் (53 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஒரே இன்னிங்சில் இந்தியாவின் டாப்-4 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு முறை இவ்வாறு செய்திருக்கிறார்கள்.

* ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேகரித்தனர். சாம்பியன்ஸ் கோப்பையில் அவர்கள் ஜோடியாக 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது முறையாகும். இதுவும் ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு சாம்பியன்ஸ் கோப்பையில் வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால்-கெய்ல், தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ்-கிரேமி சுமித் ஆகியோர் தலா 2 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கொடுத்ததே அதிகபட்சமாகும்.

* முதல் 57 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த விராட் கோலி அடுத்த 11 பந்தில் 36 ரன்கள் எடுத்து வியப்பூட்டினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/05090141/1089028/Champions-Cup-Cricket-Interesting-drops-from-the-Indian.vpf

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணி நொடிந்து விழுந்தது: ஷாகித் அஃப்ரீடி வேதனை

 

 
கோப்புப் படம்.| கே.ஆர்.தீபக்.
கோப்புப் படம்.| கே.ஆர்.தீபக்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்த விதம் ‘போராட்டமற்ற சரண்’ என்று வர்ணித்த ஷாகித் அஃப்ரீடி அணி தோல்வி அடைந்தது வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஐசிசிக்காக எழுதிய பத்தியில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மீது எழுப்பப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. மறக்கக்கூடிய ஒரு ஆட்டத்தை பாகிஸ்தான் ஆடியது. ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ஆதரவாளராக படுமோசமாக ஆடியதைப் பார்க்கும் போது வேதனை ஏற்பட்டது.

வெற்றி பெறும் அணி என்று கணிக்கப்பட்ட இந்தியா, ஆரம்பத்திலிருந்தே அதற்குரிய தன்மையுடன் ஆதிக்கம் செலுத்தியது, பாகிஸ்தான் அணியோ நொடிந்து விழுந்தது.

டாஸ் வென்ற சர்பராஸ் அகமது மழை வரும் என்ற எதிர்ப்பாப்புக்கு இணங்க 2-வதாக பேட் செய்ய முடிவெடுத்தார், ஆனால் மோசமான திட்டமிடுதல் அதைவிடவும் மோசமான செயல்படுத்தல், தவிரவும் படுமோசமான பீல்டிங் ஆகியவை 2-வதாக பேட் செய்யக்கூடிய அனுகூலங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியது.

மொகமது ஆமீர் அருமையான முதல் ஓவரை வீசினார். அவர் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் விசித்திரமாக புதிய பந்தை அவர் ஸ்பின்னர் இமாத் வாசிமிடம் அளித்தார். மேகமூட்டமான சூழலில் ஸ்பின்னரை தொடங்கச் சொன்னது புதிராக இருந்தது. ஏனெனில் மேட்ச் என்ன அரபுநாட்டிலா நடந்தது? இந்தியாவுக்கு ஆச்சரிமளிக்க வேண்டும் என்று சர்பராஸ் நினைத்திருந்தாலும் ஓரிரு ஓவர்களுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சை கொண்டு வந்திருக்க வேண்டும்.

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் போன்ற திறமையான வீரர்களை நிலைபெற அனுமதித்தால் அதன் பிறகு அவர்களை நிறுத்துவது கடினம். இதைத்தான் பாகிஸ்தான் நேற்று அனுமதித்தது.

களைப்படைந்த பாகிஸ்தான் பந்து வீச்சை பிறகு விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் காட்டடி அடித்தனர். பிறகு ஹர்திக் பாண்டியா.

பாகிஸ்தான் பீல்டிங் மிகவ்ம் மோசம். 30 அடி வட்டத்துக்குள்ளேயே நிறைய சிங்கிள்களை விட்டுக் கொடுத்தார். அதோடு கோட்டை விட்ட கேட்ச்களும் இணைந்தது. பதற்றம் இல்லை என்று போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் கூறினாலும் வீரர்கள் பதற்றம் வெளிப்படை.

பேட்ஸ்மென்களுக்குத் திறமை போதவில்லை. மட்டைக்கு சாதகமான பிட்சில் 164 ரன்கள் என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. காரணம் இந்திய அணி சர்வ சாதாரணமாக 319 ரன்களை அடித்ததே, ஏன் இவர்களால் முடியவில்லை? காரணம் திறமை போதவில்லை.

இவ்வாறு சாடியுள்ளார் ஷாகித் அஃப்ரீடி.

http://tamil.thehindu.com/sports/பாகிஸ்தான்-அணி-நொடிந்து-விழுந்தது-ஷாகித்-அப்ரீடி-வேதனை/article9720545.ece?homepage=true

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்தை 182 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, வங்காளதேச அணியை 182 ரன்களுக்குள் சுருட்டியது.

 
சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்தை 182 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா
 
லண்டன்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து நேர்த்தியாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடினார். ஆனால், மறுமுனையில் அவருடன் இணைந்த வீரர்கள் களத்தில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சவுமியா சர்க்கார் (3), இம்ரல் கயிஸ் (6), முஷ்பிகுர் ரகிம் (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் அரை சதம் கடந்த தமீம் இக்பால் சதத்தை நோக்கி முன்னேறினார். அவருடன் 5-வது வீரராக களமிறங்கிய சாகிப் அல் அசன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தமீம் இக்பால் 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கடைசியில் ஸ்டார்க் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற, வங்காளதேச அணி 44.3 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
201706052133102694_cricket._L_styvpf.gif
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆடம் சம்பா 2 விக்கெட்டுகளும், ஹசில்வுட், கம்டமின்ஸ், ஹெட், ஹென்றிக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/05213307/1089182/Bangladesh-all-out-for-182-runs-against-Australia.vpf

Bangladesh 182 (44.3 ov)
Australia 13/0 (2.3 ov)
Australia require another 170 runs with 10 wickets and 47.3 overs remaining
  • தொடங்கியவர்

'நான் திணறினேன்... யுவராஜ் கலக்கினார்!'- கேப்டன் கோலி ஓபன் டாக்


நேற்று இந்தியாவுக்கும் அதன் 'பரம எதிரியான' பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், அனைவரும் எதிர்பார்த்தது போல், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கெத்து காட்டியது. 

Kohli


இந்திய அணி 319 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியடைந்தது. இதில் குறிப்பாக, இந்திய அணியின் எந்த பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்கவில்லை. மாறாக, களமிறங்கிய ஐந்து பேரில் நான்கு பேர் அரை சதம் அடித்தனர். அதுவும் கம்-பேக் கொடுத்த யுவராஜ் சிங், 32 பந்துகளுக்கு 52 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அணிக்கு அழுத்தம் இருந்த சமயத்தில் யுவராஜ் விளையாடியதுதான், வெற்றிப் பாதைக்கு இந்தியாவை நகர்த்தியது.


இந்நிலையில் யுவராஜின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, 'நான் 40 ரன்கள் எடுக்கும் வரை அடித்து ஆடவில்லை. அதற்குள்ளாகவே மழை காரணமாக நான்கு முறை பெவிலியனுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை மைதானத்துக்கு வரும்போதும், பழையபடி விளையாடுவது கடினமாக இருந்தது. ஆனால் யுவராஜ், என் மீதிருந்த அழுத்தத்தை இலகுவாக்கினார். 
அதுவும் அவர் விளையாடிய விதம் இருக்கிறதே... யார்க்கர் போல் வரும் பந்துகளை கூட சிக்ஸர் நோக்கி பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

அது பாகிஸ்தானியர்களை கொஞ்சம் கலக்கமடையத்தான் செய்தது. என் மீதிருந்த அழுத்தம் இதனால் முழுவதுமாக எடுக்கப்பட்டது. அவர் அவுட்டான உடன், நான் அடித்து ஆட ஆரம்பித்தேன். ஆனால், அவரது ஆட்டம் தான் போட்டியின் போக்கையே மாற்றியது. அவர் இப்படி விளையாடினால், அணி வெற்றி பெறுவது நிச்சயம். ஐந்தில் மூன்று முறை யுவராஜ் இதைப் போல விளையாடி அசத்துகிறார்.' என்ற யுவராஜ் சிங்குக்கு புகழாரம் சூட்டினார்

http://www.vikatan.com/news/sports/91443-kohli-open-talk-about-yuvraj.html

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி : ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆப்புவைத்த மழை..!

 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில், நேற்று நடந்த குரூப் - ஏ பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பங்களாதேஷ் அணிகள் மோதின. பங்களாதேஷ் அணி, தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்துடன் மோதிய போட்டி, மழையால் கைவிடப்பட்டது.

DBlej9QUAAAUzKl_02509.jpg


 அடுத்த சுற்றுக்கு முன்னேற, பங்களாதேஷ் அணியுடன் மோதி வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது ஆஸ்திரேலியா. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணியை, 182 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தியது ஆஸி. இதையடுத்து, ஈஸியாக ஜெயித்து விடாலம் என்று ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.


ஆனால், அந்த அணி 83 ரன்கள் எடுத்திருந்தபோது மழை கொட்டியது. மழை தொடர்ந்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைபடி, ஓவர் மற்றும் இலக்கு குறைக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால், ஆட்டம் எந்த முடிவும் இன்றி கைவிடப்பட்டது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவை மழை மீண்டும் புஸ்வாணம் ஆக்கியுள்ளது.


இதற்கிடையே ஆஸி அரையிறுதிக்கு முன்னேற, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வென்றாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/sports/91448-australia-vs-bangladesh-game-abandoned-due-to-rain.html

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள்!

 

 
bangladesh_fan1

 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுகிற சூழல் உருவாகியுள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறுகிற வாய்ப்புகள் பிரகாசமான உள்ளன. 

லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. வார்னர் 40, ஸ்மித் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தொடர்ந்து மழை பெய்ததாலும் கட்டாயத் தேவையான 20 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெறாததாலும் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு மூன்று வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எப்படி என்று பார்க்கலாம். 

Tamim_iqbal1.jpg

1. வங்கதேசம் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தையும் இங்கிலாந்து மீதமுள்ள இரு போட்டிகளையும் (நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக) வென்றால் வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

2. அல்லது வங்கதேசம் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை வெல்லவேண்டும். மறுபக்கம் இங்கிலாந்து மீதமுள்ள இரு லீக் போட்டிகளிலும் (நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக) தோற்கவேண்டும். இதனால் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெறும். வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் மூன்று புள்ளிகளுடன் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் தகுதி பெற வாய்ப்புண்டு.   

3. வங்கதேசம் நியூஸிலாந்தைத் தோற்கடிக்க வேண்டும். நியூஸிலாந்திடம் இங்கிலாந்து தோற்கவேண்டும். அதேசமயம் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வென்றுவிட்டாலும் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புண்டு. அதாவது 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து தகுதி பெறும். வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் மூன்று புள்ளிகளுடன் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் தகுதி பெற வாய்ப்புண்டு.  

ஆனால்... கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தை வங்கதேசம் தோற்கடித்தாலும் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போக வாய்ப்புண்டு.

வங்கதேச அணி கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தைத் தோற்கடிக்கிறது. அதேசமயம் இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் இங்கிலாந்து நியூஸிலாந்தையும் ஆஸ்திரேலியா இங்கிலாந்தையும் தோற்கடித்தால் அந்தோ பரிதாபம்! வங்கதேசம் தகுதி பெறாது. 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/06/bangladesh-championstrophy-2715425.html

  • தொடங்கியவர்

நியூஸிலாந்துடன் இன்று மோதல்: அரை இறுதி முனைப்பில் இங்கிலாந்து அணி

 

 
வலை பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.
வலை பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.
 
 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கார்டிப் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டம் ஆகும். இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இதன்மூலம் இந்த பிரிவில் 2 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ஏ பிரிவில் இருந்து அரை இறுதிக்கு முன்னேறும்.

நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்த ஆட்டம் மழை காரணமாக கைவிட்டப்பட்டததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தது.

நியூஸிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முழு புள்ளியை பெற முயற்சிக்கக்கூடும். ஏனேனில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலை நியூஸிலாந்துக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 306 ரன்கள் இலக்கை சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்தது. ஜோ ரூட் 133, அலெக்ஸ் ஹேல்ஸ் 95, கேப்டன் மோர்கன் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அவர் கடந்த 6 ஆட்டங்களில் ஒருமுறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகி இருப்பதும் இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது.

அவருக்கு பதிலாக அணியில் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித்து இடம் பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிக நேர்த்தியாக பேட் செய்து சதம் அடித்தார். முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய லூக் ரான்ஜியும் அரை சதம் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.

மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன் ஆகியோரும் அதிரடிக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட் கூட்டணி மீண்டும் மிரட்ட தயாராக உள்ளது.

அணிகள் விவரம்

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், ஷேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயிம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, ஸ்டீவன் பின், மார்க் வுட்.

நியூஸிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), மார்டடின் கப்தில், ஜிம்மி நீஷாம், ராஸ் டெய்லர், ஜீத்தன் படேல், கோரே ஆண்டர்சன், டாம் லதாம், லூக் ரான்ஜி, டிரென்ட் போல்ட், மிட்செல் மெக்லீனகன், மிட்செல் சான்ட்னர், நீல் புரூம், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, காலின் டி கிராண்ட் ஹோம்.

படம்: ராய்ட்டர்ஸ்
நேரம் : பிற்பகல் 3
இடம் : கார்டிப்
நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

http://tamil.thehindu.com/sports/நியூஸிலாந்துடன்-இன்று-மோதல்-அரை-இறுதி-முனைப்பில்-இங்கிலாந்து-அணி/article9720967.ece

 

  • தொடங்கியவர்

தமீம் இக்பால் ரன் மழைக்குப் பிறகு வான் மழை: வெற்றி வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா

 
95 ரன்கள் எடுத்த தமிம் இக்பால், அவரை வீழ்த்தி 4 விக்கெட்டுகளைச் சாய்த்த மிட்செல் ஸ்டார்க். | படம்.| ராய்ட்டர்ஸ்.
95 ரன்கள் எடுத்த தமிம் இக்பால், அவரை வீழ்த்தி 4 விக்கெட்டுகளைச் சாய்த்த மிட்செல் ஸ்டார்க். | படம்.| ராய்ட்டர்ஸ்.
 
 

அன்று நியூஸிலாந்துக்கு எதிராக தோற்றிருக்க வேண்டிய ஆட்டத்தை வருண பகவான் காப்பாற்ற நேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டத்தையும் ஆஸ்திரேலிய அணிக்கு கெடுத்தது மழை.

டாஸ் வென்ற வங்கதேசம் 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்கு படபடவென சரிந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஃபின்ச் விக்கெட்டை இழந்து ஆடிக் கொண்டிருந்த போது இடிபோல் மழை இறங்கியது அதன் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை. இன்னும் 4 ஓவர்கள் ஆட முடிந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு 2 புள்ளிகள் கிடைத்திருக்கும். ஆனால் இப்போது இரண்டு ஆட்டங்களில் 2 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது.

மஷ்ரபே மோர்டசா வீசிய கடைசி 5 பந்துகளை ரன் எடுக்க முயலாமல் லொட்டு வைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். மாலை 6.43 மணிக்கு வீரர்கள் மழை காரணமாக பெவிலியன் திரும்பினர், 9.20க்கு ஆட்டம் கைவிடப்பட்டது.

இப்போது 2 புள்ளிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலியா இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் அவ்வளவே. வங்கதேசம் 1 புள்ளியுடன் வெளியேறிவிட்டது என்று கூற முடியாது.

இலக்கைத் துரத்திய போது வார்னர், பிஞ்ச் இருவரும் பவுண்டரிகளை அடித்தனர். 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த ஏரோன் பிஞ்ச், ரூபல் ஹுசைன் பந்தில் எல்.பி.ஆனார். வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4,000 ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய வீரரானார்.

மெஹதி ஹசன் மிராஸ் ஒரே ஓவரை மட்டுமே வீசினார், இதன் மூலம் வேகப்பந்து வீச்சை மட்டுமே பயன்படுத்தி விரைவில் ஆட்டம் கணக்கிற்கு வரத்தேவையான 20 ஓவர்களை வீசிவிடாமல் கேப்டன் மோர்டசா பார்த்துக் கொண்டார். வார்னர் 40 ரன்களயும் ஸ்மித் 22 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்த போது 16 ஓவர்களில் 83/1 என்ற நிலையில் ஆட்டம் முடிந்தது.

ஆஸ்திரேலியாவின் வேகக்கூட்டணிக்கு எதிராக தமிம் இக்பால் தனிநபராக எதிர்த்துப் போராடினார். 114 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 அருமையான சிக்சர்களுடன் தமிம் இக்பால் 95 ரன்கள் எடுத்து தனது 10-வது ஒருநாள் சதம், ஆஸி.க்கு எதிராக முதல் சதம் என்ற சொந்த சாதனையை நிகழ்த்தும் முன் ஸ்டார்க்கின் வேகத்தை புல் ஆட முயன்று கேட்ச் கொடுத்தார், அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் மஷ்ரபே மோர்டசாவும், ரூபல் ஹுசைனும் ஸ்டார்க்கின் பிரசித்தமான ரவுண்ட் த விக்கெட் கால் விரல்களைப் பெயர்க்கும் யார்க்கர்களுக்கு ஸ்டம்ப்களை இழந்தனர். மெஹதி ஹசன் மிராசும் ஸ்டார்க்கிடம் கடைசியாக பவுல்டு ஆக ஸ்டார்க் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலிய அணியில் மற்றொரு வீச்சாளரான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா மிகவும் தாமதமாக கொண்டு வரப்பட்டாலும் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து சபீர் ரஹ்மான், மஹமுதுல்லா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவரை ஏன் ஸ்மித் வெகு தாமதமாக கொண்டு வந்தார் என்பது புரியவில்லை.

முதலில் சவுமியா சர்க்கார் (3), இம்ருல் கயேஸ் (6), முஷ்பிகுர் ரஹிம் (9) ஆகியோர் 11 பந்து இடைவெளியில் நடையைக் கட்டினர். ஹேசில்வுட், கமின்ஸ், ஹென்றிக்ஸ் ஆகியோர் இவர்களது விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முஷ்பிகுர் ரஹிம் தனது எல்.பி, தீர்ப்பை ரிவியூ செய்யாமல் ஏற்றுக் கொண்டார், அது நாட் அவுட், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது. தமிம், ஷாகிப் இணைந்து 69 ரன்கள் சேர்த்தனர், ஷாகிப் 29 ரன்களில் ஹெட் பந்தில் எல்.பி. ஆனார். ஆனால் இதுவும் சந்தேகத்துக்குரிய தீர்ப்பே. மிகவும் வெளியே வந்து ஆடும்போது எப்படி எல்.பி. கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் பந்து ஸ்டம்புகளை தாக்கும் என்று ரீப்ளேயில் தெரிந்தது.

தமிம் இக்பால் டிராவிஸ் ஹெட்டை அடித்த 2 சிக்சர்கள் அபாரம், பிறகு அவர் அனைத்து பவுலர்களையுமே மேலேறி வந்து விளாச முயற்சி செய்தார், சில வேளைகளில் மாட்டியது, சில வேளைகளில் மாட்டவில்லை. மூன்று முறை ஹேசில்வுட் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட முயன்று சரியாக சிக்காமல் பீல்டர்களுக்கு அருகில் பந்து விழுந்தது. ஆனால் தமீமின் தைரியம் அபாரம். தைரியசாலிகள் பக்கம் அதிர்ஷ்டம் தன் பார்வையை வீசும் என்ற வாக்கியத்துக்கு ஏற்ப தமீமுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. ஹேசில்வுட் 10 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆட்டம் மழையினால் டிரா ஆக இருதரப்பினருக்கும் தலா ஒரு புள்ளி.

http://tamil.thehindu.com/sports/தமீம்-இக்பால்-ரன்-மழைக்குப்-பிறகு-வான்-மழை-வெற்றி-வாய்ப்பை-இழந்த-ஆஸ்திரேலியா/article9721108.ece?homepage=true

  • தொடங்கியவர்

வலுவான இந்திய அணியை வெல்ல இளம் இலங்கை அணியினர் கர்வத்துடன் ஆட வேண்டும்: சங்கக்காரா

 

 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.
 
 

சாம்பியன் இந்திய அணியை வீழ்த்த வேண்டுமெனில் இளம் இலங்கை அணி கர்வத்துடன் ஆட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டிக்கிவெலாவின் அசாத்திய அதிரடி தொடக்கத்துடன் 10 ஓவர்களில் 87 ரன்கள் என்று தொடங்கி அதன் பிறகு கோட்டை விட்ட இலங்கை அணி அடுத்ததாக இந்திய அணியை எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸை காயம் காரணமாக இழந்த இலங்கை அணி அன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பொட்டியில் ஓவர்களை மந்தமாக வீசி அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக பொறுப்பு கேப்டன் உபுல் தரங்காவையும் 2 போட்டிகளுக்கு இழந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானை நசுக்கிய இந்திய அணியை இலங்கை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் குறித்து குமார் சங்கக்காரா ஐசிசி கிரிக்கெட் இணையதளத்தில் எழுதிய பத்தியில் கூறியதாவது:

இந்த இளம் இலங்கை அணி ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இளைஞர்களுக்கேயுரிய கர்வமான அலட்சியத்துடனும், திமிருடனும் ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆக்ரோஷமான ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை ஆட வேண்டும். இதனை இவர்கள் செய்துவிட்டார்களென்றால் இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சித் தோல்வியைத் தர முடியும். ஆனால் அன்று பாகிஸ்தானை மிகவும் தன்னம்பிக்கையுடன் வென்ற இந்திய அணிக்கு எதிராக இது கடினமே.

அஞ்சேலோ மேத்யூஸ் உடல் தகுதி பெற வேண்டும், தரங்கா மீதான தடையும் கவலையளிப்பதாகும். ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக தரங்காவுக்கு 2 போட்டிகள் தடை பெரிய விரயமாகும்.

அனுபவமிக்க லசித் மலிங்கா, ஸ்பின்னர்களை அதிகம் வைத்துக் கொண்டு ஓவர்களை வீச 39 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டதை ஏற்க முடியாது.

இவ்வாறு கூறியுள்ளார் சங்கக்காரா.

http://tamil.thehindu.com/sports/வலுவான-இந்திய-அணியை-வெல்ல-இளம்-இலங்கை-அணியினர்-கர்வத்துடன்-ஆட-வேண்டும்-சங்கக்காரா/article9721145.ece?homepage=true

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 310 ரன்கள் குவிப்பு

 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில், நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 310 ரன்கள் குவித்துள்ளது.

 
சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 310 ரன்கள் குவிப்பு
 
கார்டிப்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 6-வது ஆட்டம் கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி இங்கிலாந்தின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் 37 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடியை பிரித்தார் மில்னே. அவரது பந்துவீச்சில் ராஜ் (13) போல்டாகி வெளியேறினார். அதன்பின்னர் ஹேல்ஸ், ரூட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கேர்ர் உயர்ந்தது.

இந்நிலையில் ஹேல்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில், மில்னே பந்தில் போல்டானார். கேப்டன் மோர்கன் 13 ரன்கள் மட்டுமேசேர்த்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட், 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 48 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினர். அப்போது அணியின் ஸ்கோர் 210 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பட்லர் மட்டும் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். இதனால், 49.3 ஓவர்களில் இங்கிலாந்து 310 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பட்லர் 61 ரன்களுடன் களத்திலிருந்தார்.
 
201706061938036620_doiguds._L_styvpf.gif


நியூசிலாந்து தரப்பில் மில்னே, ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். சவுத்தி 2 விக்கெட்டும், போல்ட், சான்ட்னெர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கி விளையாடுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/06193759/1089348/england-scored-310-runs-against-new-zealand-in-champions.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.