Jump to content

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...


Recommended Posts

வங்கதேசத்தை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிடுமா இந்தியா? புள்ளிவிபரக் கணக்கு #MatchPreview #CT17

 
 

இன்னமும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி என்றால் சூடு குறைவதில்லை. போட்டி நடக்கும்போது இரண்டு நாட்டின் ரசிகர்களிடமும் கூட ஆக்ரோஷமான மனநிலை இருக்கும். ஆனால், அந்த போட்டி முடிந்தவுடன் முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் மற்றொரு அணியுடன் மோதும்போது பாகிஸ்தான் வென்றால் அவர்களை வாழ்த்துவதில் தயக்கம் காட்டியதில்லை இந்திய ரசிகர்கள். இரு நாடுகளுக்கும் பகை இருக்கலாம், ஆனால் விளையாட்டுகள்தான் பகைவனையும்  நண்பனாக்க உதவும் ஆயுதம். ஆனால் சில நேரங்களில் விளையாட்டுகளையே ஒரு வித பகையையும் தூண்டிவிடுகின்றன என்பதை மறுக்க முடியாது. 

சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கரின்  மிகச்சிறந்த சதம் வீணாகிப் போய் பாகிஸ்தான் வென்றது. இந்தியா தோற்றதை நம்புவதற்கே கடினமாக இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்டியது. சயீத் அன்வர் இதே சென்னை மைதானத்தில் இந்திய பவுலர்களை துவைத்தெடுத்த போது  ரசிகர்கள் கவுரமாக வரவேற்பு கொடுத்தார்கள். இதெல்லாம் பாகிஸ்தான் அணியே எதிர்பார்க்காத விஷயங்கள். இந்த சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி. எளிய வெற்றி என்பதால் இந்திய ரசிகர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை. எங்களுக்கு ஆக்ரோஷமாக ஆடும் பாகிஸ்தான் அணிதான் வேண்டும் என்றனர் இந்திய ரசிகர்கள். இந்தியாவுடனான  தோல்விக்கு பிறகு பாகிஸ்தான்  வீறு கொண்டு எழுந்து தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறது. இதோ மீண்டும்  இந்தியா - பாகிஸ்தான் அணிகள்  மீண்டுமொரு ஞாயிற்றுக்கிழமையில், அதுவும் ஐசிசி கோப்பையின்  இறுதிப்போட்டியில் மோதுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு தடை இருக்கிறது. அது அரை இறுதியில் இந்திய அணி வங்கதேசத்தை வெல்ல வேண்டும் என்பதே அது!  

இந்தியா Vs வங்கதேசம்

இப்போது இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு கிட்டத்தட்ட இணையாக இருக்கும் அளவுக்கு வங்கதேசம் - இந்தியா இடையிலான போட்டிகள் மாறியுள்ளன. பல முக்கியமான ஆட்டங்களில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது  வங்கதேசம். பதிலடியாக வங்கதேசத்தை பல முறை துவைத்து காயப்போட்டிருக்கிறது இந்தியா. 

2015 உலக கோப்பைக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் நடைபெறும் சமயங்களில் எல்லாம் சமூக வலைதளம்  மீம்ஸ்களால் திணறுகிது. இந்திய கொடியை அவமதிப்பது, இந்திய கேப்டனின் தலையை வங்கதேச வீரர்  வைத்திருப்பது போன்ற போட்டோஷாப் செய்வது மாதிரியான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் வங்கதேச ரசிகர்கள் இறங்க, கொதித்தெழுந்தனர் இந்திய ரசிகர்கள். இந்தியா வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்று ஒருநாள் போட்டிகளில் மோசமான தோல்வியைச் சந்தித்தபோது,  இந்திய அணியின் மீதும் தோனியின் கேப்டன்சி மீதும் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக கடந்த டி20 உலக கோப்பையில் பழி தீர்த்தது தோனி தலைமையிலான இந்திய அணி. 

வெற்றிகான  எல்லைக்கோட்டை வங்கதேசம் தொடும் முன்னர், தோனியின் சமயோசித கேப்டன்சியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்தியா வென்றதும், வங்கதேச ரசிகர்கள் இன்னும் கடுப்பானார்கள். அரை இறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் இந்தியா தோற்றபோது வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கொழுந்து விட்டு எரிந்த 'தீ'-க்கு  மண்ணெண்ணெய் ஊற்ற, ஏற்கனவே தோல்வி விரக்தியில் இருந்த இந்திய ரசிகர்கள் வங்கதேசத்தை சரமாரியாக விமர்சித்தார்கள். இதெல்லாம் கடந்தகால வரலாறு. கடந்த ஆண்டு தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க துடிப்புடன் காத்திருக்கிறது வங்கதேசம். சிந்தாமல் சிதறாமல் அரை இறுதியில் கால் எடுத்து வைக்க வேண்டும் என விரும்புகிறார் இந்திய அணியின் கேப்டன் கோலி.  இந்த சூழ்நிலையில்தான் இன்று அரை இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. 

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? 

இந்தியாவும் வங்கதேசமும் இதுவரை 31 ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கின்றன. இதில் ஐந்து முறை படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்தியா. அந்த ஐந்து போட்டிகளும் இந்தியாவுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தவை. அவற்றை பற்றிப் பார்ப்போமா? 

1988 ஆம் ஆண்டு முதன் முதலாக வங்கதேசத்துடன் ஒருநாள் போட்டிகளில் ஆடியது இந்தியா. அந்த போட்டியில் 93 ரன்களில் சுருண்டது வங்கதேசம். அந்த சோகம் அடுத்த 16 வருடங்கள் தொடர்ந்தது. இந்த 16 ஆண்டுகாலத்தில் இந்தியாவுடன்  தொடர்ச்சியாக 12 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது வங்கதேச அணி. 2004 டிசம்பரில்  வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது  என முடிவு செய்யப்பட்டது. டெண்டுல்கர், டிராவிட் போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. அந்த தொடரில்  முக்கியமான இரண்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்கள். அந்த இரண்டு பேருக்கும் அப்போது  பின்னாளில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல கதாநாயகனாக அமையப்போகிறோம் எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். அதில் ஒருவர் இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளை பெற்றுத்தந்த தலைசிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி. இரண்டாமவர் 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இறுதி ஓவரை வீசிய ஜோகீந்தர் ஷர்மா. 

இந்தியா Vs வங்கதேசம்

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்றது. ஆனால் அந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார் தோனி. இரண்டாவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இருந்தது இந்திய அணி.  காலை எழுந்ததும் அந்தத் துயரைச் செய்தி  இந்திய வீரர்கள் காதில் சொல்லப்பட்டது. டிசம்பர் 26, 2004 அன்று இந்திய நாட்டையே உலுக்கிய மாபெரும் ஆழிப்பேரலையால் கொத்துக் கொத்தாக இறந்து மடிந்தது மனிதக் கூட்டம். அந்த சோகத்தோடு அன்றைய போட்டியை எதிர்கொண்டது இந்தியா. வங்கதேசம் 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

சேவாக் டக் அவுட் ஆனார். யுவராஜ் வெறும் நான்கு ரன்னில் நடையை கட்டினார். முகமது கைஃப், ஸ்ரீதரன் ஸ்ரீராம் இணை சற்றே நம்பிக்கையளித்தாலும் அடுத்தடுத்து அவுட் ஆயினர். பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 12 ரன்னில் மோர்தசா பந்தில் வீழ்ந்தார். ஜோகீந்தர் ஷர்மா இறுதிக் கட்டத்தில் போராடினாலும் இந்தியாவால் இலக்கை அடைய முடியவில்லை. 15 ரன்கள் வித்தியாசத்தில்  வென்றது  வங்கதேசம்; அதிர்ச்சியடைந்தது இந்தியா. தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன; அதே வேளையில்  மூன்றாவது போட்டியில் வென்று தொடரை வென்றது கங்குலி தலைமையிலான இந்திய அணி. 

அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் இந்தியாவும் வங்கதேசமும் ஒருநாள் போட்டியில் மோதவில்லை. 2007 உலகக் கோப்பையில் இந்தியா வலுவான அணியாக இருந்தது. உலகக் கோப்பையை வெல்லும் டாப் - 3 அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது இந்திய அணி. தோனி டக் அவுட் ஆனார். இந்திய வீரர்களின் வீடுகள் மீது கல் எறிந்து கேவலமாக நடந்து கொண்டார்கள் இந்திய ரசிகர்கள். வங்கதேசத்துடனான தோல்வி இந்தியாவை லீக் சுற்றோடு வெஸ்ட் இண்டீசில் இருந்து புதுடில்லிக்கு விமானம் ஏறுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. 

அந்தத் தோல்வி சீனியர்களை அணியில் இருந்தே ஓரம்கட்ட அடித்தளம் போட்டது. இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம்.'தோனி என்றொரு மிகச்சிறந்த கேப்டன் கிடைக்கவும் அடித்தளம் போட்ட தோல்வி 'அது' .

இந்தியா Vs வங்கதேசம்

அதன் பின்னர் அடுத்த தோல்வி 2012 ஆசிய கோப்பையில் வந்தது. சச்சினின் நூறாவது சதத்தை வீணாக்கினார்கள் இந்திய பவுலர்கள். 289 ரன்கள் குவித்தும் சேஸிங்கில் கோட்டை விட்டனர் இந்திய பவுலர்கள். வங்கதேச அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது. அந்தத் தோல்வியால் இந்தியாவால் ஆசியக் கோப்பை  இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் போனது. 2015 உலக கோப்பையில் காலிறுதியில் இந்தியாவை எதிர்கொண்டது வங்கதேசம். 'இந்தியாவை அதன் ஊருக்கு அனுப்புவோம்'  என வங்கதேச ரசிகர்கள் சொன்ன வீடியோக்கள் வைரலாகி அனலைக் கூட்டின. ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 302 ரன்கள் குவித்தது இந்திய அணி. உமேஷ் யாதவின் அனல் பறந்த பந்துவீச்சில் 193 ரன்களில் சுருண்டது வங்கதேசம்.  அந்த போட்டியில் ரோஹித் ஷர்மா அவுட் ஆன போது இடுப்புக்கு மேல் புல்டாஸாக வீசப்பட்டதால் அந்த பந்தை நோபால் என அறிவித்தார் அம்பயர். அது தவறான முடிவு என போட்டி முடிந்த பின்னர் கதறினார்கள் வங்கதேச ரசிகர்கள். 

அந்த போட்டிக்கு பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. வலுவான அணியாக கிளம்பிப்போன இந்திய அணியைத் துவைத்தெடுத்தது வங்கதேசம். மூன்று போட்டிகளில் 2 -1 என வென்றது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகள் தோற்றதிலும், வங்கதேச அணியிடம் முதன் முறையாக தொடரை இழந்ததிலும் கடும் கோபமுற்றனர் இந்திய ரசிகர்கள். தோனி கேப்டன்சியை விட்டு நீக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. 

இந்தியா Vs வங்கதேசம்

இதோ ...இப்போது... மீண்டும் இந்தியா - வங்கதேசம்!  இந்த முறை வங்கதேசம் வலுவான அணியாக உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்தை அசைத்துப் பார்த்தது. இன்னும் 20 - 30 ரன்கள் வங்கதேசம்  எடுத்திருந்தால்  போட்டியின் முடிவே மாறியிருக்கக்கூடும். ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி அடைய வேண்டிய நிலையில் இருந்து மழையால் தப்பித்தது. நியூசிலாந்து அணியுடனான போட்டியில் போர்க்குணத்துடன் மீண்டு வந்து வென்றது. அந்தப் போட்டியில் வங்கதேசத்தின் சேஸிங் அட்டகாசம். 

கடைசி மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவைத் தவிர மீது ஏழு முக்கியமான அணிகளுடனும் வெற்றிப் பெற்றிருக்கிறது வங்கதேசம். நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான்  ஆகிய அணிகளுடனான தொடர்களை வென்றிருக்கிறது. 2004 க்கு பிறகு இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்றதே வங்கதேசத்துக்கு மிகப்பெரிய சாதனைதான். அரை இறுதி வரை முன்னேறியது வரலாற்றில் பொறிக்கப்படும். இப்போது அரை இறுதியிலும் வென்று இறுதிப்போட்டியிலும் காலடி எடுத்துவைக்க விரும்புகிறது மோர்தசா அணி. 

தமீம் இக்பால் இதுவரை 16 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளார். அதில் ஆறு முறை அரை சதம் எடுத்திருக்கிறார். அவர் இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார். முஷ்பிகுர் ரஹீம், மஹமதுல்லா, ஷகிப் அல்  ஹசன் ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். முஸ்தாபிசுர் நன்றாக பந்து வீசுகிறார்.நியூசிலாந்துடனான போட்டி அவர்களுக்கு பெரும் தன்னம்பிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவுடனான போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் தைரியமாக விளையாடும் வங்கதேச அணி.

இந்தியா

இந்திய அணி எப்படி இருக்கிறது? 

இந்த தொடரில் அதிசிறப்பான ஆட்டத்தை இன்னமும் வெளிப்படுத்தவில்லை. எனினும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது சில வீரர்கள் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடுவதால் அரை இறுதிக்கு நுழைந்திருக்கிறது. இலங்கையுடன் சேஸிங்கில் அடைந்த தோல்வி இந்திய அணியின் பவுலிங்கில் உள்ள பலவீனங்களை காட்டுகிறது. எனினும் இந்திய அணி பயப்படத் தேவையில்லை. வங்கதேசத்தை விட பல மடங்கு வலுவாக இருக்கிறது இந்தியா. அனைத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேர்த்தியாக போட்டியை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசை. 2015 அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் உலக கோப்பையில் மண்ணை கவ்வியது இந்திய அணி. 2016ல்  அரை இறுதியில் வேஸ்ட் இண்டீசிடம் தோற்று வெளியேறியது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டிலும் அந்த சோக நிகழ்வு ஏற்படக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இந்திய கூடாரத்தில் இருக்கிறது. நாங்கள்  வங்கதேசத்தை ஒரு சதவீதம் கூட எளிதாகி எடுத்துக் கொள்ள மாட்டோம் எனச் சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 

 

இந்தியா Vs பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் மோதினால் அனல் பறக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். ஒட்டுமொத்த இந்திய தேசமும் எதிர்பார்க்கும் அந்த நிகழ்வு நடைபெற வேண்டுமெனில் வங்கதேசத்தை முதலில் வீழ்த்த வேண்டும். அது நிச்சயம் சவாலானது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்துவதற்குரிய அதே உழைப்பு இன்றும் தேவை. இந்தியா இறுதிப்போட்டிக்குச் செல்ல வாழ்த்துவோம்.

http://www.vikatan.com/news/sports/92357-will-india-beat-bangladesh-in-semis.html

Link to comment
Share on other sites

  • Replies 236
  • Created
  • Last Reply

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: பாகிஸ்தானிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கும் ஸ்டெயின்

 

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் எதிர்பார்க்கிறார்

 
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: பாகிஸ்தானிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கும் ஸ்டெயின்
 
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், போட்டியை நடத்தும் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறும் அணியுடன் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தி அரையிறுதி பேட்டிக்கு முன்னேறியது. உச்சக்கட்டமாக நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்தை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தியது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

இதனால், பாகிஸ்தான் அணிக்கு புகழாரம் சூட்டியுள்ள தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின், நாக்அவுட் போட்டியில் தரவரிசை பெரிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

201706151629539347_steyn-s._L_styvpf.gif

பாகிஸ்தான் வெற்றி குறித்து ஸ்டெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள். நாக்அவுட் சுற்றுகளில் விளையாடும்போது தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. சாம்பியன்ஸ் அணி எப்படி விளையாடுமோ, அப்படி விளையாடி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/15162948/1091052/ICC-Champions-Trophy-2017-Dale-Steyn-expects-great.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை உச்சகட்ட மோதலில் இந்தியா - பாகிஸ்தான்

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கவுள்ளது.

அதிரடி சதமடைத்த ரோகித் சர்மாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅதிரடி சதமடித்த ரோகித் சர்மா

இந்திய அணித் தலைவர் விராத் கோலி மற்றும் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இந்தியா எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களத்தில் இறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே நன்கு அடித்தாடியது.

'ஆரம்பமே அதிரடிதான்'

இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் ஷிகர் தவான் 2 பவுண்டரிகளையும், அடுத்த ஓவரில் ரோகித்சர்மா 3 பவுண்டரிகளையும் விளாசி, வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விரைவாக ரன் குவிக்கும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய தொடக்க ஆட்டகக்காரரர்களை பிரிக்க பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் வங்கதேசத்தால் இந்திய அணியின் ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை; தொடக்க ஜோடியையும் பிரிக்க முடியவில்லை.

தவான் ஆட்டமிழப்பு: சதமடித்த ரோகித்சர்மா

அணியின் என்ணிக்கை 83-ஆக இருந்தபோது, 46 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் முர்தஸாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா விரைவாக அரைச்சதம் எடுத்தார். அணித்தலைவர் கோலியுடன் இணைந்து விளையாடிய ரோகித் சர்மா, 111 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பவுண்டர்களுடன் சதமடித்தார்.

Virat Kohliபடத்தின் காப்புரிமைREX FEATURES

அதிரடியாக விளையாடிய விராத் கோலி 42 பந்துகளில் அரைச்சதம் எடுத்தார். இறுதியில் 40. 1 ஓவர்களில் 1 விக்கெட்மட்டுமே இழந்து 265 ரன்கள் எடுத்து இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 123 ரன்களுடனும், விராத் கோலி 96 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

264 ரன்கள் எடுத்த வங்கதேசம்

முன்னதாக, முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணியில், அதிகபட்சமாக, தமிம் இக்பால் 70 ரன்களையும், முஷ்ஃபிகர் ரஹீம் 61 ரன்களையும் எடுத்துள்ளனர்.

சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார்

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், பூம்ரா மற்றும் கேதார் ஜாதவ்ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அரையிறுதி போட்டியில் வென்றுள்ள இந்தியா, வரும் ஞாயிற்றுக்கிழமை ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி, இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.bbc.com/tamil/sport-40294035

Link to comment
Share on other sites

#ChampionsTrophy கங்குலியின் சாதனையை முறியடித்தார் ஷிகர் தவான்...!

 
 
 

இந்திய வீரர்களில் சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் ஷிகர் தவான்.

தவான்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்குப் பாகிஸ்தான் முன்னேறிய நிலையில், இன்று இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 264 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 

இதனிடையே இந்திய வீரர்கள் தரப்பில் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் அதிக ரன்கள் குவித்த கங்குலியின் சாதனையை தவான் உடைத்துள்ளார். லீக் சுற்றில்  நடைபெற்ற போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்துள்ள தவான், சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் 680 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்திய வீரரின் அதிகபட்சமாக கங்குலியின் 665 ரன்களே இருந்தது. மேலும் உலக அளவில் சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்தவர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார். கெயில் (791) முதலிடத்திலும், ஜெயவர்தனே (742), சங்ககாரா(683) முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/92440-shikar-dhawan-breaks-gangulys-record.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: டோனியின் கையுறையால் வந்த வினை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் டோனி பயன்படுத்திய கையுறை பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படுத்தியதால் எதிரணிக்கு 5 ரன் இலவசமாக வழங்கப்பட்டது.

 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: டோனியின் கையுறையால் வந்த வினை
 
ஆட்டத்தின் 40-வது ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் வங்காளதேச வீரர் மக்முதுல்லா அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது பந்தை பீல்டிங் செய்த யுவராஜ்சிங் விக்கெட் கீப்பர் டோனி வசம் எறிந்தார். பொதுவாக இது போன்ற சமயத்தில் டோனி ஒரு கையுறையை (குளோவ்ஸ்) கீழே கழற்றி போட்டு விட்டு பந்தை பிடித்து ரன்-அவுட் செய்ய முயற்சிப்பது வழக்கம்.

அதே போலவே இந்த ஆட்டத்திலும் ஒரு கையுறையை கழற்றி போட்டார். துரதிர்ஷ்டவசமாக, ஸ்டம்பை நோக்கி அவர் வீசிய பந்து அருகில் கிடந்த கையுறையில் பட்டு விட்டது. ஹெல்மெட், கையுறை உள்ளிட்ட உபகரணங்களை பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒரு அணி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி இந்தியாவை தண்டிக்கும் (பெனால்டி) வகையில் எதிரணிக்கு 5 ரன் இலவசமாக வழங்கப்பட்டது.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட 5 முக்கிய அம்சங்கள்

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதில் வென்றது.

வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா மகத்தான வெற்றிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவங்கதேசத்துக்கு எதிராக இந்தியா மகத்தான வெற்றி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் போல, அண்மைக்காலமாக இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியா பெற்ற முக்கிய வெற்றியை சாத்தியமாக்கிய 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

  • கணிக்க முடியாத கேதார் ஜாதவ்: துல்லியமாக பந்துவீசிய பூம்ரா

முதலில் பேட் செய்த வங்கதேச அணி, ஒரு கட்டத்தில் 300 அல்லது 330 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

27.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து மிக வலுவான நிலையில் இருந்த வங்கதேசம், பகுதி நேர சுழல் பந்துவீச்சாளரான கேதார் ஜாதவின் பந்துவீச்சை சமாளிப்பதில் திணறியது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தமிம் இக்பால் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் ஆகிய இருவரும் ஜாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

தான் பந்துவீசிய 6 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுக்களை பெற்ற ஜாதவ், வங்கதேச அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர்.

இதே போல், வங்கதேச இன்னிங்சின் இறுதி கட்டங்களில் துல்லியமாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பூம்ரா, 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி அந்த அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

கணிக்க முடியாத கேதார் ஜாதவ்படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionகணிக்க முடியாத கேதார் ஜாதவ்
  • சோபிக்காத வங்கதேச பின்வரிசை மட்டைவீச்சாளர்கள்

எளிதாக 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய வங்கதேச அணி, 264 ரன்களை மட்டும் பெற்றதற்கு, அந்த அணியின் அனுபவம் மிகுந்த ஷாகிப் அல் ஹசன் மற்றும் மகமத்துல்லா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது முக்கிய காரணமாகும்.

அணித்தலைவர் முர்தஸாவை தவிர, வங்கதேச பின்வரிசை வீரர்கள் யாரும் அதிரடி ஆட்டம் ஆடாத காரணத்தால், அந்த அணியின் ரன்குவிப்பு வெகுவாக மட்டுப்பட்டது.

மேலும், முக்கியமான தருணத்தில் தமிம் இக்பால் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர்.

துல்லியமாக பந்துவீசிய பூம்ராபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதுல்லியமாக பந்துவீசிய பூம்ரா
  • வியூகத்திலும் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

வங்கதேச அணியின் ஆட்டத்தை எளிதில் கணிக்க இயலாது. மிகவும் ஆக்ரோஷமாக வங்கதேச அணி விளையாடக்கூடும் என்றெல்லாம் போட்டியின் முன்னர் கூறப்பட்டாலும், வங்கதேச அணியை விட வியூகம் வகுத்து, அதனை திறன்பட நிறைவேற்றியதில் இந்திய அணியின் பங்கு சிறப்பாக இருந்தது.

அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற சுழல் பந்துவீச்சாளர்களை , ஏற்கனவே பலமுறை வங்கதேச அணி வீரர்கள் சந்தித்துள்ளதால், அவர்களுக்கு பெரிதும் பரிச்சயம் இல்லாத கேதார் ஜாதவை கோலி பந்துவீச அழைத்தார். இது மிகவும் பலன் அளித்த வியூகமாகும்.

இதே போன்று, இறுதி கட்டங்களில் பூம்ராவை பந்துவீச செய்ததன் மூலம், அவர் தனது துல்லியமான 'யார்க்கர்' பந்துகளால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேச அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

PAபடத்தின் காப்புரிமைPA
  • கோலி, ரோகித் சரவெடி

இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் ஷிகர் தவான் 2 பவுண்டரிகளையும், அடுத்த ஓவரில் ரோகித்சர்மா 3 பவுண்டரிகளையும் விளாசி, வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விரைவாக ரன் குவிக்கும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர், 46 ரன்களை எடுத்த தவான் ஆட்டமிழந்த போதிலும், விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஜோடி தங்கள் அதிரடி ஆட்ட பாணியை தொடர்ந்தனர்.

129 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 123 ரன்களுடனும், 78 பந்துகளில் விராத் கோலி 96 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், 40.1 ஓவர்களில் இலக்கை எட்டி இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.

அதிரடி ஆட்டம் ஆடிய கோலி, ரோகித்படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionஅதிரடி ஆட்டம் ஆடிய கோலி, ரோகித்
  • நேர்த்தியாக பந்துவீச தவறிய வங்கதேச பந்துவீச்சாளர்கள்

ரோகித் சர்மா, விராத் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடி பேட்டிங் செய்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வங்கதேச பந்துவீச்சாளர்கள் போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை என்றே கூறலாம்.

8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் வங்கதேச அணியால் ஒரு விக்கெட் மட்டுமே பெற முடிந்தது.

வங்கதேச அணித்தலைவர் முர்தஸாவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் பந்துவீசாதது அந்த அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

http://www.bbc.com/tamil/sport-40296597

Link to comment
Share on other sites

கேதார் ஜாதவ் புத்திசாலி: விராட் கோலி | மடத்தனமாக விக்கெட்டைக் கொடுத்தோம்: மோர்டசா

 

 
 
விராட் கோலி | கோப்புப் படம்: வி.வி.கிருஷ்ணன்
விராட் கோலி | கோப்புப் படம்: வி.வி.கிருஷ்ணன்
 
 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வங்கதேசத்தை துவைத்துக் காயப்போட்ட இந்திய வெற்றிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்தவர் கேதார் ஜாதவ். அவர் தமீம் இக்பால், முஷ்பிகுர் இருவரையும் வீழ்த்த வங்கதேச பேட்டிங் சரிவு கண்டது.

இதனையடுத்து கேதார் ஜாதவ் குறித்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர், கேப்டன் விராட் கோலியும், மஷ்ரபே மோர்டசாவும்.

விராட் கோலி கூறும்போது:

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதுதான் நம் டாப் ஆர்டர் பேட்டிங்கின் தரம். கேதார் ஜாதவ் ஒன்றும் எதிர்பாராமல் ஆச்சரியமேற்படுத்தும் பவுலர் அல்ல, அவர் புத்திசாலி, பந்தை எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர், பிட்ச் என்ன செய்கிறது என்பதையும் புரிந்தவர்.

இந்தப் பிட்சில் 300-310 ரன்கள்தான் நல்ல ஸ்கோர், அப்படியிருக்கையில் 264 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் கேதார் ஜாதவ் எடுத்த 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தை ஏற்படுத்தின.

பேட்டிங்கில் நான் 10-15 பந்துகள் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆடினேன். கடந்த முறை வந்தவுடன் ஆட்டமிழந்தேன். எனவே நான் அதற்கேற்ப ஆட வேண்டும், எனக்கு சவால்கள் பிடிக்கும். நம்பிக்கை வளர்ந்தது. ஷார்ட் பிட்ச் பந்துகள் பற்றி கூற வேண்டுமெனில் நாம் நன்றாக ஆடும் போது அது ஒரு கவலையில்லை.

இறுதியில் பாகிஸ்தானுடனான போட்டியை இன்னொரு போட்டி என்பதாகவே எடுத்துக் கொள்வோம், இவ்வாறு கூறுவது சோர்வளிக்கக்கூடியது என்று எனக்குத் தெரியும், ஆனால் எங்களது மனநிலை இதுதான்.

நடுவரிசை வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காதது கவலை தரும் விஷயமல்ல, அனைவரும் பயிற்சியில் அருமையாகவே அடித்து ஆடி வருகின்றனர்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

மோர்டசா கூறும் போது, “இன்று நாங்கள் ஆடியது ஏமாற்றம் தருகிறது. 320-330 ரன்களைக் குவிக்கும் நிலையில் இருந்தோம். ஆனால் இந்திய பவுலர்கள் ரன்கொடுக்காமல் சில பந்துகளை வீசினர். பகுதி நேர வீச்சாளர் (கேதார் ஜாதவ்) என்பதால் அதிக ரன்களை எடுக்கலாம் என்று பார்த்தனர். எப்போதாவது வீசும் பவுலரிடத்தில் விக்கெட்டுகள் கொடுத்தது பாதித்தது. அங்கிருந்து அவர்கள் நல்ல இடங்களில் பந்தை பிட்ச் செய்து கட்டுப்படுத்தினர்.

இப்படியெல்லாம் நடக்கும் என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் நிறைய போட்டிகளை ஆடி அனுபவம் பெற்றுள்ளோம் சில வேளைகளில் ரன்கள் எடுக்க முடியாது அதற்காக பதற்றம் அடைதல் கூடாது, மடத்தனமான ஷாட்களை ஆடினோம். இந்தப் பிட்சில் 260-270 என்பது ஸ்கோரே அல்ல.

இவ்வாறு கூறினார் மோர்டசா.

http://tamil.thehindu.com/sports/கேதார்-ஜாதவ்-புத்திசாலி-விராட்-கோலி-மடத்தனமாக-விக்கெட்டைக்-கொடுத்தோம்-மோர்டசா/article9728250.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரோகித் சதம் ஓகே... கோலியின் அந்த கவர் ட்ரைவ்... பாகிஸ்தான் பீ கேர்ஃபுல்! #MatchAnalysis

 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் எப்போதுமே அனல் பறக்கும். எதிர்பார்ப்பு எகிறும். இரு நாடுகளின் எல்லைகள் பதற்றமாகும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்றுநோக்கும். ஹர்ஷா போக்ளேக்கள் ஓவர்டைம் பார்ப்பர். இதைப் புரிந்துகொண்ட ஐ.சி.சி ஒவ்வொரு முறையும், லீக் சுற்றில் இந்த இரு அணிகளும் மோதும் வகையில் அட்டவணை அமைக்கும். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அப்படித்தான். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐ.சி.சி நடத்தும் டோர்னமென்ட் ஒன்றில் இரண்டாவதுமுறையாக இந்தியா – பாகிஸ்தான் மோதுகின்றன. (இதற்கு முன் 2007 டி-20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் இருமுறை மோதின) இதற்கு, முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறிய வங்கதேசத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக வங்கதேச பெளலர்களுக்கு...

விராட் கோலி

‘வங்கதேசத்தை இன்னும் கத்துக்குட்டி அணியாக பாவிக்க வேண்டியதில்லை. ஒன்றை மறந்துவிட வேண்டாம், அவர்கள் ஐ.சி.சி.யின் தரவரிசைப் பட்டியலில் எட்டு இடங்களுக்குள் இடம்பிடித்ததால்தான், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்’ என நடப்பு சாம்பியன் இந்தியாவை எச்சரிக்கை செய்தார் சவுரவ் கங்குலி. உண்மைதான், அவர்கள் நியூஸிலாந்தை வீட்டுக்கு அனுப்பி இருந்தனர். இருந்தாலும், நாங்கள் இன்னும் கத்துக்குட்டிகள்தான் என்பதை நிரூபித்து விட்டது வங்கதேசம். அல்லது இதுபோன்ற பெரிய தொடர்களில் எப்படி வெல்ல வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா. கிட்டத்தட்ட ஒன்சைட் மேட்ச். அரை இறுதிக்கு உரிய விறுவிறுப்பு இல்லை. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் எந்த இடத்திலும் பிடியை இறுக்கவில்லை. இந்தியா ஆரம்பத்தில் இருந்தே பிடியைத் தளர்த்தவில்லை. ஆக, இந்தியா  எளிதில் வெற்றி. இந்தப்போட்டியில் வெற்றி என்பதைக் கடந்து காலத்துக்கும் நிற்கும் நினைவுகளாக பல சாதனைகள் அரங்கேறின. 

விராட் கோலி - இந்திய அணி

இங்கிலாந்தில் முதல் சதம், சாம்பியன்ஸ் டிராபியில் முதல் சதம், வங்கதேசத்துக்கு எதிராக இரண்டாவது சதம், ஒட்டுமொத்தமாக 11 சதம் என இது ரோகித்தின் நாள். வங்கதேசம் 264 ரன்களை எடுத்தபோதே தெரிந்து விட்டது, மீண்டும் ரோகித் தாண்டவம் ஆடுவார், இந்தியா வெற்றிபெறும் என்று. ஏனெனில், 264 ரோகித்தின் அதிர்ஷ்ட எண். இல்லையா? ரோகித் மட்டுமல்ல, இது விராட் கோலியின் நாளும் கூட. 42 பந்துகளில் 42வது அரை சதம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 8,000 ரன்களைக் கடந்தவர், அதிலும் இளம் வீரர், முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் கேப்டன் பொறுப்பு என விராட்டுக்கும் இது மெமரபிள் மேட்ச்.

முதன்முறையாக இந்தத் தொடரில் அரை சதம் கடக்க முடியவில்லை என்றாலும், கங்குலியை ஓவர்டேக் செய்து, சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களைக் குவித்த இந்தியர் என்ற பெருமை பெற்றது... அலட்டாமல், அதேநேரத்தில் தஸ்கின் அகமது வீசிய ஷார்ட் பாலில் Pull shot மூலம் சிக்ஸர் அடித்து மிரட்டியது என ஷிகர் தவனுக்கும் இது நல்ல மேட்ச். ஆனால், தன் 300வது போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங்குக்கு மட்டும் சொல்லும்படியான கேரக்டர் ரோல் கிடைக்காதது துரதிர்ஷ்டம். மற்றபடி இந்தியாவுக்கு இது நன்நாள். ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் ஒன்பதாவது முறையாக ஃபைனல், அதிலும் 2010ம் ஆண்டுக்குப் பிறகு மட்டுமே நான்காவது முறையாக ஃபைனல், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என இந்தியாவின் கோப்பை கனவுக்கு அச்சாரம் போட்ட நாள்.

Bangladesh player congrats Rohit


  அரையிறுதியில் இந்தியா – வங்கதேசம் மோதல் என்றதுமே உறுதியாகி விட்டது இது இந்தியாவின் பேட்டிங்குக்கும், வங்கதேச பெளலிங்குக்கும் இடையிலான போட்டி என்று. கடந்த ஏழு ஆண்டுகளில் ஆறாவது முறையாக ஐ.சி.சி தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது இந்தியா. எனவே, எப்போது எதிர் அணி தவறு செய்யும், அதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சூட்சுமம் இந்தியாவுக்கு அத்துப்படி. செளமியா சர்க்கார் (0), சபீர் ரஹ்மான் (19) இருவரையும் புவனேஸ்வர் குமார் சொற்ப ரன்களில் அவுட்டாக்கினாலும், தமீம் இக்பால், முஷ்ஃபிகுர் ரஹ்மான் இருவரும் அரைசதம் அடித்து நங்கூரமிட்டனர். 25 ஓவர்களில் 142/2 என வலுவாகவே இருந்தது வங்கதேசம்.

bhuvneshwar kumar bowling action

நிச்சயம் ஸ்கோர் 300 ரன்களைத் தாண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மெயின் ஸ்பின்னர்களை அற்புதமாக கையாண்டு, ஹர்திக் பாண்டியாவின் மூன்று ஓவர்களில்  28 ரன்கள் விளாசிய தமீம்  இக்பால், முஷ்ஃபிகுர் ஜோடி, பார்ட் டைம் பவுலரான கேதர் ஜாதவின் ஸ்பின்னில் ஏமாந்ததுதான் பரிதாபம். வங்கதேசத்தின் சரிவு தொடங்கியதும் அங்குதான். ஜஸ்ப்ரிட் பும்ரா தன் கடைசி ஸ்பெல்லில் (5-0-27-1) நேர்த்தியாக வீசினார் எனில், ஃபைனலுக்கு இவர் வேண்டுமா என யோசிக்க வைக்கும் வகையில் இருந்தது  ஹர்திக் பாண்டியாவின் பெளலிங். ஐந்தாவது பவுலர் குறித்து இந்தியா சிந்திக்க வேண்டிய நேரம் இது. 

இந்தியா இந்த ஸ்கோரை சேஸ் செய்யும் என்பது தெரியும். எப்படி சேஸ் செய்யும், யார் சதம் அடிப்பர் என்பது மட்டுமே கேள்வி. ரோகித் சதம் அடித்தார். ஓகே. இந்தத் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர், புல் லெந்த்தில் வீசப்பட்ட பெரும்பாலான பந்துகளை ட்ரைவ் அல்லது தன் பிரத்யேக புல் ஷாட் மூலம் பவுண்டரிக்கு அனுப்பி உள்ளார். ரோகித் அவுட்டாகாமல் 123 ரன்கள் எடுத்தார் என்றாலும், விராட் கோலியின் ஷாட்கள்தான் பக்கா.

இந்தியா - வங்கதேசம் மோதல்... களமிறங்கியது முதல் வெளியேறியது வரை... ஆல்பம்!

ஸ்டெம்புகள் தெறிக்க ஒரு பேட்ஸ்மேனை போல்டாக்குவது பெளலருக்கு அழகு எனில், ஃபீல்டர் யாரும் தொடாத வகையில், விரட்ட முடியாத வகையில், இடைவெளியில் பவுண்டரி விரட்டுவது பேட்ஸ்மேனுக்கு அழகு. விராட் கோலி நேற்று அடித்த ஒவ்வொரு பவுண்டரியும் அவ்வளவு அழகு. 

Virat Kohli Cover drive


முஷ்டஃபிசுர் ரஹ்மான் வீசிய 20வது ஓவரில் கோலி அடித்த ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், மீண்டும் அவர் ஓவரில் அடித்த கவர் ட்ரைவ் பவுண்டரி எல்லாம் ப்ப்ப்பா… சான்சே இல்லை. பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த ஷாட்டைப் பார்த்து, வர்ணனையில் இருந்த ஷேன் வார்னே இப்படிச் சொன்னார், ‘ஷாட் ஆஃப் தி மேட்ச்.’ 

அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்ட அந்த பந்தை அவ்வளவு நளினமாக பவுண்டரிக்கு விரட்டினார் விராட். ஃபுட்வொர்க், ரிஸ்ட் வொர்க் என எல்லாமே அவ்வளவு நேர்த்தி. இந்தத் தொடரில் இதுவரை விராட்டிடம் இருந்து இப்படியான ஷாட்கள் வரவில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து நேற்று மொத்தமாக விருந்து வைத்தார். அடுத்து ரூபெல் ஹுசைன் பந்தில் மீண்டும் ஒரு கவர் ட்ரைவ்.  அதை ‘டெக்ஸ்ட் புக் கவர் ட்ரைவ் ஃபரம் கிளாஸ் பிளேயர்’ என வர்ணித்தனர் வர்ணனையாளர்கள். மொசதேக் பந்தில்  மீண்டும் ஒரு ட்ரைவ்..  மிட் ஆஃப் - எக்ஸ்ட்ரா கவர் இடையே பாய்ந்த அந்த பவுண்டரி எல்லாம் கிளாசிக். இப்படிப்பட்ட ஷாட்கள்தான்,  கோலியை அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் ஆக்குகிறது என்பதை மறுக்கவே முடியாது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் 2016 டி-20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அஃப்ரிடியின் பந்திலும் இதேமாதிரிதான் கவர் ட்ரைவ் விளாசினார் விராட். சேஸிங், முக்கியமான போட்டிகள் என்றாலே உக்கிரமாகி விடுகிறார். அதுமட்டுமல்லாது அவரது பெஸ்ட், பெர்ஃபெக்ட் ஷாட்கள் வெளிவருகிறது.  ஐ.சி.சி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள விராட், ஒரு கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் முழு அளவில் தயாராகி விட்டார்.

பாகிஸ்தான் பீ கேர்ஃபுல்!

http://www.vikatan.com/news/sports/92492-rohit-smashes-ton-kohlis-elegance-best-of-luck-pakistan.html

Link to comment
Share on other sites

சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம்: சங்ககாரா புகழாரம்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

 
 
சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம்: சங்ககாரா புகழாரம்
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வங்காளதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
 
வங்கதேசம் அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மழை காரணமாக தப்பித்தாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் வெளியேறிய நிலையில் வங்கதேசம் அணி அரையிறுதி வரை சென்றது. 
 
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த போட்டியில் வங்கதேசம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியா உடனான தொடருக்காக அந்த அணி நம்பிக்கையுடன் டாக்கா திரும்புகிறது. அதேபோல், 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் தந்திரமான திட்டமிடலுடன் தீவிர போட்டியாளர்களாக இருக்க வேண்டும். 
 
தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தால் இரண்டு பெரிய ஐ.சி.சி தொடர்களில் நாக்-அவுட் சுற்றுவரை வங்கதேசம் அணி சென்றுள்ளது. பயிற்சியாளர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் சங்கத்தின் முழு ஒத்துழைப்பு, முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் தலைமையிலான மூத்த வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/16180945/1091264/Bangladesh-can-be-proud-of-their-performance-Sangakkara.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்: ரசிகர்கள் உற்சாகம்

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவது ரசிகர்களிடையே கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்: ரசிகர்கள் உற்சாகம்
 
இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றி கொள்ளும். ஆனால் இரு நாட்டு பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை.

8-வது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றன. இரு அணிகளும் மோதும் ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர்.ஜூன் 4-ந் தேதி பர்கிங்காமில் நடந்த போட்டியில் இந்தியா 124 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
201706161247180751_wq6ejycs._L_styvpf.gi


தற்போது இரு அணிகளும் மீண்டும் போதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதுவும் சாம்பியன் பட்டத்துக்காக இறுதிப்போட்டியில் மல்லுக் கட்டுவது ரசிகர்களிடையே கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பரம எதிரியான பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்த வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் இந்தியாவும் சமபலத்துடன் திகழ்கிறது.

ஐ.சி.சி. நடத்தும் தொடரில் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதின.

இதில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் லீக் ஆட்டத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ‘டை’ ஆன அந்த போட்டியில் ‘பவுல்-அவுட்’ முறையில் இந்தியா வென்றது.

201706161247180751_zuinma8k._L_styvpf.gi

சரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் ஐ.சி.சி. தொடர் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று யாரும் நினைக்கவில்லை. அவர்கள் கணிப்பு பொய்த்து போய் விட்டது.

எப்படி இருந்தாலும் இறுதிப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/16124718/1091179/Champions-Trophy-Final-India-vs-Pakistan--Clash-fans.vpf

Link to comment
Share on other sites

வெல்லப்போவது யார்? இந்தியாவா பாகிஸ்தானா? : பாக். டிவியில் ரிச்சர்ட்ஸ், லாரா, இயன் சாப்பல் கலந்துரையாடல்

 
பிடிவி நிகழ்ச்சியில் லாரா, ரிச்சர்ட்ஸ், இயன் சாப்பல் கலந்துரையாடல்.
பிடிவி நிகழ்ச்சியில் லாரா, ரிச்சர்ட்ஸ், இயன் சாப்பல் கலந்துரையாடல்.

வரும் ஞாயிறன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதவிருப்பதையடுத்து பாகிஸ்தான் டிவியில் பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ், இயன் சாப்பல் ஆகியோர் ஆட்டம் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

அதில் விவ் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு வெற்றி பெற வாய்ப்பு ஏதாவது இருக்கிறது என்றால் டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைக்க வேண்டும். இது வித்தியாசமான ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். இரு நாடுகள் அதற்கேயுரிய அரசியல் சிக்கல்கள் காரணமாக இந்த ஆட்டம் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது, அதனால் இரு அணிகளும் நிச்சயம் பெரிய அளவில் சவாலாக ஆடும், இதில் சிறப்பாக ஆடும் அணி வெற்றி பெறும் இதைக்காணத்தான் நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

லாரா உடனே, “இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ஏனெனில் அந்த அணியிடம் ஒரு நிலையமைதி காணப்படுகிறது. பாகிஸ்தான் அணியும் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தது போல் தங்களை உணரமாட்டார்கள். இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது, திட்டங்களை நல்லவிதத்தில் செயல்படுத்துகிறார்கள், எனவே அடுத்த 48 மணி நேரங்களில் சர்பராஸ் மற்றும் மிக்கி ஆர்தர் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதாவது வீரர்கள் தங்கள் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளச் செய்வது அவசியம். இந்திய அணி போல் ரன் விகிதத்தை பாகிஸ்தானினால் பராமரிப்பது கடினம், எனவே டாஸில் வென்று நன்றாக பவுலிங் செய்து ஓவருக்கு 6 ரன்களுக்குள் என்ற விகிதத்தில் இலக்கை துரத்துமாறு வைத்துக் கொள்ள வெண்டும். ஆனால் இந்தப் போட்டி நிச்சயம் வெகு சுவாரசியமான போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை” என்றார்.

விவ் ரிச்சர்ட்ஸ், “பாகிஸ்தானை இந்தியா முந்தைய ஆட்டத்தில் எப்படி அடித்து நொறுக்கியது என்று பார்த்தோம், அதனால் பாகிஸ்தான் நிச்சயம் வித்தியாசமான ஆட்டத்துடன், அணுகுமுறையுடன் களமிறங்க வேண்டும். நிச்சயம் வித்தியாசத்துடன் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனே இந்திய தொடக்க வீரர்களின் ஃபார்மைக் குறிப்பிட்டு இந்திய அணி வெல்ல முடியாத அணியா? என்று இயன் சாப்பலிடம் கேட்ட போது, இயன் சாப்பல், “வெல்ல முடியாத அணி” என்று எதுவும் இல்லை என்று கூற மீண்டும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ‘பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணியை அப்படி அழைப்பதுண்டு, 1948-ல்... என்றார், உடனே லாரா ‘எத்தனை அணிகளுக்கு எதிராக?’ என்றா இங்கிலாந்துக்கு எதிராக என்று தொகுப்பாளர் பதில் அளித்தார்.

அப்போது இயன் சாப்பல், “யாரும் வெல்ல முடியாதவர்கள் என்பதெல்லாம் இல்லை. டான் பிராட்மேனுக்கு 100 ரன்கள் சராசரிக்கு 4 ரன்களே தேவை, ஆனால் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். எனவே பிராட் மேன் வீழ்த்த முடியாதவரா? அப்படியெல்லாம் இல்லை, யார் வீழ்த்த முடியாதவர்கள்? சரி. இந்தியா வலுவான பேட்டிங் அணியாகும். எனவே வலுவான அணியாக இருக்கும் ஒரு அணி முதலில் பேட்டிங் செய்வதற்கும் இலக்கைத் துரத்துவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்தியாவுக்கு இந்த வித்தியாசம் இல்லை என்றே கருதுகிறேன் ஏனெனில் வலுவான பேட்டிங் அணியாகும் அது. ஆனால் பாகிஸ்தானிடம் ஓரளவுக்கு நல்ல பந்து வீச்சு உள்ளது. எனவே நல்ல பேட்ஸ்மெனை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும். அதாவது ரோஹித் சர்மாவையோ, ஷிகர் தவணையோ வீழ்த்துவது எப்படி என்பதில் கவனமிருக்க வேண்டும். அவர்களை தொடக்கத்தில் நெருக்க வேண்டும் எந்த ஒருபேட்ஸ்மெனையும் அவர்கள் இறங்கியவுடன் நெருக்கினால் அவர்களை வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும். எனவே சிறந்த வீரர்களுக்கு சுலபமான சிங்கிள்கள், இரண்டுகள் என்று 20 ரன்களை எளிதில் விட்டுக் கொடுத்தால் பெரிய சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புதிய பந்தில் 2 ஸ்லிப்களை வைத்து வீச வேண்டும். அவர்களுக்கு சவால் அளிக்க வேண்டும், அதாவது நாங்கள் உங்களை அவுட் ஆக்கவே இங்கு வீசுகிறோம் என்பதை எதிரணிக்கு அறிவுறுத்த வேண்டும். எனவே இந்த இந்திய பேட்டிங் வரிசைக்கு எதிராக காத்திருப்பு ஆட்டம் ஆடினால் நீங்கள் நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டியதுதான்” என்றார்.

எனவே இந்தியாவின் டாப் 3 வீரர்களான ரோஹித் சர்மா, தவண், விராட் கோலியை வீழ்த்தி இந்திய அணியை கட்டுப்படுத்துவது எப்படி என்ற சவாலை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது என்பதை இந்த விவாதத்தின் மூலம் அறியலாம்.

http://tamil.thehindu.com/sports/வெல்லப்போவது-யார்-இந்தியாவா-பாகிஸ்தானா-பாக்-டிவியில்-ரிச்சர்ட்ஸ்-லாரா-இயன்-சாப்பல்-கலந்துரையாடல்/article9728733.ece?homepage=true

Link to comment
Share on other sites

#ChampionsTrophy- இறுதிப் போட்டியில் வெற்றி பெற கோலியின் ப்ளான் இதுதான்!

மீண்டுமொரு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி. இரு நாட்டின் ரசிகர்கள் மட்டுமன்றி, உலகத்திலிருக்கும் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் ஞாயிற்றுக்கிழமை இந்த இரு அணிகளுக்கும் இடையில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைத்தான் ஆர்வமுடன் நோக்கியுள்ளனர்.

விராட் கோலி

சமீபத்திய வரலாறு இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தாலும், பாகிஸ்தான், எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று யூகிக்க முடியாத நிலைவுள்ளதால் போட்டியின்மீது கூடுதல் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. 

 

 

 

இறுதிப் போட்டிக்கு இரு நாடுகளும் கடுமையாகப் பயிற்சி எடுத்து வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது 'கேம்-ப்ளான்' பற்றிக் கூறியுள்ளார். அது குறித்து, 'சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நாங்கள் விளையாடியதைப் போலவே மீண்டும் ஒருமுறை விளையாட முயல்வோம். பாகிஸ்தான் அணியினரின் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களுக்கு ஏற்ப சில மாறுதல்களைச் செய்வோம் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், ஓர் அணியாக நாங்கள் மாற்ற வேண்டியது நிறைய இல்லை. பெரிதாக எதைப் பற்றியும் கவலைப்படாமல், எங்கள் திறமையை இறுதிப் போட்டியன்று வெளிக்கொண்டுவருவதில் மட்டுமே எங்கள் கவனம் இருக்கும்.

 

கிரிக்கெட் ஒரு விசித்திரமான விளையாட்டு. ஆட்டத்தின் கடைசி பந்து போடப்படும் வரை, யார் வெற்றி பெறுவார் என்று சொல்ல முடியாது. அதேபோல, யாரையும் போட்டிக்கு முன்பே 'இவர்தான் வெற்றி பெறுவார்' என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. எனவே, எங்கள் முழுத் திறனை வெளிப்படுத்திக் கோப்பையை வெல்ல முயல்வோம்' என்று கச்சிதமாகப் பேசி முடித்தார் கேப்டன் கோலி.

http://www.vikatan.com/news/sports/92560-i-dont-know-if-theres-much-that-we-need-to-change-as-a-team-kohli-on-champions-trophy-final.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்குப் பழிதீர்க்க பொன்னான வாய்ப்பு: இம்ரான் கான்

இம்ரான் கான் | கோப்புப் படம்
இம்ரான் கான் | கோப்புப் படம்
 
 

இந்தியாவிடம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க இறுதிப் போட்டி சரியான வாய்ப்பு என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் சிறந்த கேப்டன் என்று வர்ணிக்கப்படும் இம்ரான் கான், அந்த அணி உலகக் கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இறுதி போட்டி குறித்து பாக். தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

அதில், "முதல் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு சிறந்த வாய்ப்பு இது. இந்தியாவிடன் சிறந்த பேட்டிங் உள்ளது. அவர்கள் முதலில் ஆடி பெரிய ஸ்கோர் அடித்தால் அது பாக். அணிக்கு அழுத்தம் தரும். அதனால் டாஸ் வென்றால் பாக். அணி பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும்.

மற்ற அணிகளுக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது சர்ஃபராஸுக்கு கை கொடுத்திருக்கலாம். ஆனால் இந்தியாவிட வலிமையான பேட்டிங் இருப்பதால் அவர்கள் அதிகமாக ஸ்கோர் அடித்து நமது பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என ஒரு தரப்புக்கும் இரண்டு மடங்கு அழுத்தம் தருவார்கள்.

பாக். அணியின் உண்மையான பலம் அதன் பந்துவீச்சு தான். எனவே நாம் முதலில் ஆடி பிறகு கட்டுப்படுத்துவதே சிறந்த திட்டமாக இருக்கும். சர்ஃபராஸ் என்ன ஆச்சரியப்படுத்தியுள்ளார், தைரியமான கேப்டனாக இருக்கிறார்" என்றார் இம்ரான் கான்.

அதே நிகழ்ச்சியில் மற்றொரு பாக் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டாட் பேசுகையில், "உண்மையாகப் பேச வேண்டுமென்றால் இந்தியா வெல்லவே வாய்ப்புகள் அதிகம். சிறந்த அணி அவர்களுடையது. ஆனால் இது போன்ற பெரிய ஆட்டங்களில் சிறிய தருணங்களில் நடப்பது முக்கியம் என நான் எப்போதும் நம்புவேன். எனவே இரு அணிகளும் வெல்ல 50-50 வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார்.

மேலும் அரசியல் காரணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் கிரிக்கெட் தொடர் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மற்றொரு முன்னாள் கேப்டன் ஆமிர் சோஹைல் கூறுகையில், "நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவிடம் 3-4 நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர், நல்ல சுழற்பந்து வீச்சும், மிக வலிமையான பேட்டிங்கும் இருக்கிறது. சாமர்த்தியமான விக்கெட் கீப்பரும் இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரரை விடவும் சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் தொடர் வெற்றியால் இந்தியா மெத்தனமடையலாம். அது பாக் அணிக்கு சாதகமாக இருக்கும்" என்றார்.

http://tamil.thehindu.com/sports/சாம்பியன்ஸ்-கோப்பை-இறுதிப்-போட்டி-தோல்விக்குப்-பழிதீர்க்க-பொன்னான-வாய்ப்பு-இம்ரான்-கான்/article9729243.ece?homepage=true

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

 
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு
 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கள நடுவர்களாக தென் ஆப்பிரிக்காவின் மாரசிஸ் ஏராமஸ், இங்கிலாந்தின் ரிச்சர்ட் கேட்லேபரோக் ஆகியோர் இருப்பார்கள்

3-வது நடுவராக ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் செயல் படுவார். மேட்ச் ரெட்ரியாக டேவிட் பூனும், மாற்று நடுவராக குமார தர்மசேனா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். .

ஐ.சி.சி.யில் இரு அணிகளின் நிலை

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை 4 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. அதன் விவரம்:-201706171242531672_ngfjs._L_styvpf.gif

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/17124252/1091355/Champions-Cup-final-umpire-announced.vpf

Link to comment
Share on other sites

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி: பயிற்சியின்போது அஸ்வினுக்கு காயம்

 

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி: பயிற்சியின்போது அஸ்வினுக்கு காயம்
 
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் கேட்ச் பிடிக்கும் வகையில் அஸ்வினுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பந்தை பிடிக்கும்போது அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து வலி இருந்ததால் அவர் பயிற்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் அணி பிசியோ பாட்ரிக் பர்ஹார்ட் அவருக்கு சிகிச்சை அளித்தார். அதன்பின் சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார். அப்போது அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிரமப்பட்டதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனால் நாளை அவர் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை.

கும்ப்ளே கண்காணிப்பின் கீழ் ஹர்திக் பாண்டியா, பும்ப்ரா ஆகியோர் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/17192047/1091446/Ravichandran-Ashwin-Hurts-His-Knee-During-Practice.vpf

Link to comment
Share on other sites

கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயமே இல்லை: விராட் கோலி

கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயமே இல்லை என்று நாளைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து விராட் கோலி கூறியுள்ளார்.

 
 
கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயமே இல்லை: விராட் கோலி
 
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி குறித்து விராட் கோலி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இறுதிப்போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாளை விளையாட இருப்பது மற்றொரு போட்டிதான். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்காக நாங்கள் விளையாடுகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் நடைபெற்றது அப்படியே தொடரும் என்று நான் பார்க்கவில்லை.

சிறப்பாக விளையாட வேண்டும் என்பது முக்கிய குறிக்கோள். கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயம் அல்ல. எந்தவொரு அணியும் வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல. சிறந்த மனநிலையை கொண்டிருக்கும் அணி வெற்றி பெறும்.

பாகிஸ்தான் அணிக்கு சாதகமான நாளில், அவர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். கடுமையான சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று எனக்குள்ளே பார்த்துக் கொள்வேன். அணியை அந்த சூழ்நிலையில் இருந்து என்னால் மீட்க முடியும் என்று எனக்குள்ளே சாதகமாக மாற்றிக் கொள்வேன். நேர்மறையான விஷயங்கள் என்னை போட்டி குறித்து நேர்மறையான சிந்தனைகளை சிந்திக்க வைக்க உதவுகிறது.

ஹர்திக் பாண்டியா குறித்து எனக்கு கவலையில்லை. அவரை போன்ற ஒரு வீரர் எப்போதும் அணியின் பின்னால் வருவார்கள். எந்தவொரு நேரத்திலும் போட்டியை வெற்றி பெற வைக்கக்கூடிய ஆட்டத்தை கொடுக்க முடியும். இதுவரை அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எந்த நேரத்திலும் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

நான் ஹாக்கி விளையாடியதே கிடையாது. அது மிகவும் அபாயகரமானது. இந்திய அணி நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை நம்புகிறேன்” என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/17213246/1091455/Past-Statistics-Records-Do-not-Matter-Says-Virat-Kohli.vpf

Link to comment
Share on other sites

இந்தியா - பாகிஸ்தான் இன்று இறுதி மோதல்: கோப்பை வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்?

 
இறுதியாட்டத்தில் மோதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைAFP Image captionயார் கைக்கு வரப்போகிறது?

கால்பந்து விளையாட்டில் வலிமையான இரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளாகவும், ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் போட்டிகளாகவும் பிரேசில்-ர்ஜென்டினா , இங்கிலாந்து - பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி-இத்தாலி அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள்கருதப்படும்.

இதே போல், கிரிக்கெட்டில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள், ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும் அளவு பரபரப்பை உருவாக்குவதுடன், இரு நாட்டு மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் சிறப்புமிக்கவையாகும்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியை, கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகெங்கும் தொலைக்காட்சியில் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா -பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் இரு நாட்டு மக்களின் கவனத்தையும் அதிக அளவில் ஈர்க்கின்றனபடத்தின் காப்புரிமைAFP

மிகவும் பரபரப்பான போட்டியாகவும், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள போட்டியாகவும் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியவருமான சடகோபன் ரமேஷ், பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

'பரபரப்பு தொடங்குவது ரசிர்களிடம்தான்'

''இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் அதிக அளவு பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்படுவது இயற்கைதான். ஒவ்வொரு முறையும், ஆரம்பத்தில் ரசிகர்களிடம் இருக்கும் பரபரப்பு போட்டி துவங்குவதற்கு முன் வீரர்களையும் தொற்றிவிடும்'' என்று சடகோபன் ரமேஷ் நினைவுகூர்ந்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் சாதகங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ரமேஷ் கூறுகையில், ''இந்தியா லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது. ஆனால், அதே சமயம் கடுமையாக போராடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணியையும் எளிதாக புறந்தள்ளி விடமுடியாது'' என்று குறிப்பிட்டார்.

சோயீப் மாலிக் போன்ற அனுபவம் மிகுந்த பாகிஸ்தான் வீரர், இதுவரை பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லையென்றால், இறுதிப்போட்டியில் இவரது பங்களிப்பு நன்றாக அமையலாம் என்று தெரிவித்த ரமேஷ், ''இந்தியாவுக்கு பக்கபலம் அதன் பேட்டிங். அதே சமயம் பாகிஸ்தானுக்கு பக்கபலம் அதன் பவுலிங். இந்த இரண்டில் எது மிகச் சிறப்பாக அமைகிறதோ அந்த அணியே வெல்லும்'' என்று குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முந்தைய போட்டிகள் குறித்த சில முக்கிய தகவல்களை தற்போது காண்போம்.

ுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியா -பாகிஸ்தான் இதுவரை:-

  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இதுவரை 128 ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. அதில், இந்தியா 52 முறையும், பாகிஸ்தான் 72 முறையும் வென்றுள்ளன. 4 போட்டிகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
  • 2017-ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றதன் மூலம், இதுவரை சாம்பியன்ஸ் கோப்பையில் நான்கு இறுதியாட்டங்களில் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெறும்.
  • சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் முதல் இறுதிப்போட்டி, ஞாயிறுக்கிழமையன்று இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியாகும்.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்ட பெரிய போட்டி தொடர்களான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 20-20 உலகக் கோப்பை போன்றவற்றின் நாக்-அவுட் போட்டிகளான காலிறுதி, அரையிறுதி, மற்றும் இறுதி போட்டிகளில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே வென்றுள்ளது.
  • 2007-ஆம் ஆண்டு நடந்த 20-20 உலகக் கோப்பை இறுதியாட்டம்தான் இவ்விரு அணிகளும் மோதிய கடைசி ஐசிசி தொடர் இறுதிபோட்டியாகும். பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா வென்றது.

'ஆட்ட பரபரப்பை நிதானத்துடன் கையாள்பவரே வெல்வார்'

இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், எந்த அணியால் பரபரப்பு மற்றும் ஆட்ட நெருக்குதலை திறம்பட சமாளிக்க முடிகிறதோ, அந்த அணியே போட்டியை வெல்ல முடியும் என்று மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியை எளிதில் கணித்துவிடமுடியாது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் கடந்த காலங்களில் எதிர்பாராத அளவு இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அதனை எப்போதும் இந்தியா நினைவில் கொள்ள வேண்டும் என்று விஜய் லோக்பாலி மேலும் தெரிவித்தார்.

''இந்தியாவின் மட்டைவீச்சாளர்கள் நல்ல முறையில் விளையாடி வருகின்றனர். அதே போல், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களும் கடுமையாக போராடக்கூடியவர்கள்தான். இந்த இரு தரப்புக்கும் இடையே நடக்கும் ஆக்ரோஷமான போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய மட்டைவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமையலாம்படத்தின் காப்புரிமைREUTERS Image captionபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய மட்டைவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலா?

'பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது'

இதனிடையே, லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இந்தியா -பாகிஸ்தான் இறுதிப்போட்டி குறித்து இந்திய அணித்தலைவர் விராத் கோலி கூறுகையில், சமூகவலைதளங்களில் செலவழித்து வந்த நேரத்தை குறைத்துக் கொண்டதால்தான், தற்போது இந்திய அணிக்கான தனது பங்களிப்பு நன்றாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் விராத் கோலி கூறுகையில், ''மற்றவர்களிடம் இருந்து வரும் அதிகப்படியான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை கேட்டுக் கொண்டிருந்தால், விளையாட்டு வீரனின் கவனம் சிதறிவிடும். அணிக்கு தேவையான பங்களிப்பை மேற்கொள்வது குறித்தே, விளையாட்டு வீரரின் கவனம் இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா 124 ரன்களில் வென்றதை வைத்து, அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்று கோலி தெரிவித்தார்.

விராத் கோலிபடத்தின் காப்புரிமைREUTERS

தொடர்பான செய்திகள்:

http://www.bbc.com/tamil/sport-40315369

Link to comment
Share on other sites

இந்தியா வியூகமா... பாகிஸ்தான் ஆக்ரோஷமா..?! சாம்பியன்ஸ் கோப்பை யாருக்கு? #CT17 #INDvPAK

 
 

எட்டாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடக்கும் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,  சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியைப் போலவே, இதுவும் இந்தியாவின் வலுவான பேட்டிங்கிற்கும், பாகிஸ்தானின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சுக்கும் இடையிலான சிறந்த மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - பாகிஸ்தான்

மேலோட்டமாகப் பார்க்கும்போதே, கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் இந்தியா பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது. ஆனால் அதற்காக பாகிஸ்தான் அணியை அவ்வுளவு எளிதாகக் கருதிவிட முடியாது. ஏனெனில், எந்த நிலையிலிருந்தும் திடீரென எழுச்சிபெற்று, எப்படிப்பட்ட எதிரணியினரையும் வீழ்த்தும் திறமை கொண்டவர்கள் என்பதை, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலேயே அவர்கள் நிருபித்துவிட்டார்கள்!

இந்திய அணியின் பேட்டிங் & பவுலிங் எப்படி?

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் அசத்தலான பேட்டிங் வரிசை, வேகம் - சுழல் என எந்தவித பந்துவீச்சுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதனை இந்த தொடர் முழுக்க பார்க்க முடிந்தது. குறிப்பாக 6 மாதங்களுக்கு பிறகு, ODI போட்டிகளில் களமிறங்கிய ரோஹித் சர்மா, இந்தியா சார்பில் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களை அடித்திருக்கும் ஷிகர் தவானுடன் இணைந்து, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்து வருகிறார். அனைத்து ஆட்டங்களிலும் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் - விராட் கோலி ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர்தான் பேட்டிங் செய்துள்ளது.

ஷிகர் தவான்

மிடில் ஆல்டர் பேட்ஸ்மேன்களான யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை; இது ஒரு பிரச்னையாக இருக்காது என்றாலும், இக்கட்டான சந்தர்ப்பங்களில் களமிறங்கும்போது, அவர்கள் செட்டில் ஆவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே முன்வரிசையில் களமிறங்க விரும்பும் தோனியை, யுவராஜ் சிங்கிற்கு முன்பாக விராட் கோலி களமிறக்கலாம். இதனால் அவர் களத்தில் செட்டில் ஆவதற்கு அதிக ஓவர்கள் கிடைக்கும் என்பதுடன், இறுதி ஓவர்களில் தனது பாணியிலான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

புவனேஷ்வர் குமார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, அணியை சமநிலை அடையச் செய்யும் முக்கியமான நபராகத் திகழ்கிறார். ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர், கடந்த இரு ஆண்டுகளில் இந்தியா விளையாடி இருக்கும் ODI & T20 போட்டிகளில், தொடர்ச்சியாகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமான பெர்ஃபாமென்ஸுக்குப் பிறகு, உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. முகமது ஷமி அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டதுடன், 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ODI போட்டிகளில் விளையாடவில்லை. எனவே ஃபைனலில் அவர் அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினம்.

ரவீந்திர ஜடேஜா

மேலும் முக்கியமான இறுதிப்போட்டியில், இதுபோன்ற ரிஸ்க்கை விராட் கோலி எடுக்கமாட்டார் என்றே தெரிகிறது. பாகிஸ்தான் அணியில் வலதுகை பேட்ஸ்மேன்களே அதிகமாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறுவதில், ரவீந்திர ஜடேஜாவுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியிட வேண்டி இருக்கும். ஆனால் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் திறமையை வைத்துப் பார்க்கும்போது, ரவீந்திர ஜடேஜாவையே விராட் கோலி டிக் செய்ய வாய்ப்புள்ளது. நல்ல பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், இந்தத் தொடரில் முகமது ஷமிக்கு ஏற்பட்டிருக்கும் அதே நிலைதான், அஜிங்கிய ரஹானே மற்றும் தினேஷ் கார்த்திக்கும் ஏற்பட்டிருக்கிறது. 

பாகிஸ்தான் அணியின் ப்ளஸ், மைனஸ்...

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்புவரை, பாகிஸ்தான் தொடக்க ஜோடியான அசார் அலி - அகமது ஷேசாத் ஜோடியின் ரன் சராசரி 33 ஆகவே இருந்தது.  இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சொதப்பிய அகமது ஷேசாத்துக்குப் பதிலாகக் களமிறங்கிய பஹர் ஜமான், இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தொடக்க ஆட்டக்காரராக அதிரடியாக ஆடியதால், இறுதிப்போட்டியில் இவர் அசார் அலியுடன் இணைந்து ஆடுவார் என நம்பலாம். இந்தியாவுக்கு விராட் கோலி போல, பாகிஸ்தானின் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக இருக்கும் 22 வயதே நிரம்பிய பாபர் அசாம், வெறும் 26 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், அதில் 5 சதங்கள் அடித்துள்ளார் என்பதுடன், ODI சராசரியும் 45-க்கு குறைவில்லாமல் வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான்

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் அவர் விரைவாக ஆட்டமிழந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இறுதிப்போட்டியில் அவரது வழக்கமான பேட்டிங் வெளிப்பட்டால், அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமையும். இவருக்கு அடுத்தபடியாகக் களமிறங்கும் முகமது ஹபீஸ் மற்றும் சர்ப்ராஸ் அகமது, சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இறுதிப் போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து விளையாடுவது அந்த அணிக்கு நல்லது. இந்தியா என்றாலே குஷியாகிவிடும் ஷோயப் மாலிக், இந்தியாவுக்கு எதிராக 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

சர்ப்ராஸ் அகமது

எனவே அவர் களத்தில் கொஞ்ச நேரம் நீடித்துவிட்டாலே, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றிவிடுவார். பாகிஸ்தானின் புதிய ஆல்ரவுண்டரான ஃபாஹிம் அஷ்ரப், இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தன்னை நிரூபிப்பதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் என நம்பலாம்.  இந்திய அணியின் பேட்டிங்குடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பது போல தெரிகிறது.  இருந்தாலும் போட்டியின் தினத்தில் அவர்கள் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் பாகிஸ்தானும், இந்தியாவைப் போலவே பலம் வாய்ந்த பந்துவீச்சைக் கொண்டிருக்கிறது.

முகமது ஆமிர், ஜூனைத் கான், ஹசன் அலி ஆகிய மூவர் கூட்டணி, பேட்டிங்கிற்குச் சாதகமான இங்கிலாந்து மைதானங்களில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கக் கூடும். இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் காயமடைந்த முகமது ஆமிர், இந்த போட்டியில் களமிறங்குவது பாகிஸ்தானுக்கு பெரிய ப்ளஸ்.  மேலும், காயமடைந்திருக்கும் வகாப் ரியாஸுக்குப் பதிலாக, விராட் கோலிக்குச் சவால் விடுத்த ஜூனைத் கான் அணியில் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், முகமது ஆமிருடன் பந்துவீச்சைத் துவக்கிய இமாத் வாசிமுக்கு, மீண்டும் ஒருமுறை அந்த வாய்ப்பை சர்ப்ராஸ் அகமது தருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு.  

சாம்பியன்ஸ் டிராபி

எதனால் முக்கியத்துவம்?

சமூக அரசியல் காரணமாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் போட்டிகளை விட, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி, அனைத்து வயதினராலும் சுவாரஸ்யமாக விரும்பிப் பார்க்கப்படுகிறது. எனவே இரு அணிகளில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும், இது மற்றுமொரு ஆட்டம்தான்; ஆனால் தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு, பலத்த எதிர்பார்ப்புடன் தமது ஆதர்ஷ ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருக்கும் அணி வெற்றிபெற வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலிக்கு, பாகிஸ்தானின் பவுலர்களை எப்படி மைதானத்தின் நாலாபுறமும் அடித்துவிரட்ட வேண்டும் என்பது தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு கேப்டனாகத் தற்போது, ஒட்டுமொத்த அணியையும் வீழ்த்துவதற்கான வியூகங்களுடன் களமிறங்க உள்ளார். இதனால் இதற்கு முன்பு விராட் கோலி எப்படி இருந்திருந்தாலும், ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான தொடர்களில், தனது கேப்டன்ஸி எந்தளவுக்கு இருக்கும் என்பதைக் காட்டுவதற்கான மேடையாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டி அமைந்திருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை இந்த இரு அணிகளும் 4 ஆட்டங்களில் மோதியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், மழையின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது. ஆனால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ள இந்தப் போட்டியில், இம்முறை வருண பகவான் எந்த இடையூறும் செய்யாமல், கிரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து போட்டியை ரசிப்பார் என்றே நம்பலாம். ஓவலில் நடைபெறும் இந்த ஹை-வோல்டேஜ் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. 

மகேந்திர சிங் தோனி

உத்தேச இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

உத்தேச பாகிஸ்தான் அணி:

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அசார் அலி, பாபர் அசாம், பஹர் ஜமான், முகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், ஷதப் கான், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், முகமது ஆமிர்.

http://www.vikatan.com/news/sports/92652-indias-batting-or-pakistans-bowling-which-is-gonna-win-today.html

Link to comment
Share on other sites

#INDvPAK சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி... இந்தியா பௌலிங்!

 
 

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி தொடரின் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா, கோப்பையை தக்க வைப்பதற்காகவும், கோலி தலைமையில் முதல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

India Vs Pakistan


அதேநேரத்தில், 2007 டி-20 உலகக் கோப்பை தோல்வி மற்றும் இந்தத் தொடரில் லீக் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதினால் சாதாரணப் போட்டியிலேயே அனல் பறக்கும். இந்நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி என்றால் கேட்கவா வேண்டும்? 


மைதானம் முழுவதும் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதேபோல், டி.வியிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள், இந்தப் போட்டியை காண ஆர்வமாய் உள்ளனர். இந்நிலையில், டாஸ் வென்ற கேப்டன் கோலி பௌலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 


இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது அமீர் அணிக்கு திரும்பியுள்ளார்.

Link to comment
Share on other sites

இந்திய வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் பாகிஸ்தான் கேப்டனின் மாமா

கேப்டன் சர்ஃபிரஸ் அகமதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ள நிலையில், இரு நாட்டு ரசிகர்களும் தங்கள் அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டனின் தாய் மாமா, இந்தியாவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்.

உத்தர பிரதேசத்திலுள்ள இட்டா நகரில் வாழும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிரஸ் அகமதுவின் தாய் மாமாவான மெக்பூஹாசன், தன்னுடைய பிரார்த்தனை சர்ஃபிரஸூக்காக இருக்கும். ஆனால், தன்னுடைய நாடான இந்தியா வெற்றிபெற விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

பிராடாப்கார் மாவட்டத்தின் குண்டாவை சேர்ந்த மெக்பூ ஹாசன், இட்டாவா விவசாய பொறியில் கல்லூரியில் தலைமை கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார்.

கேப்டன் சர்ஃபிரஸூம் தாய் மாமன் மெக்பூ ஹாசன்படத்தின் காப்புரிமைMEHBOOB HASAN

பிபிசியிடம் பேசிய அவர், "இந்த போட்டியில் இந்தியா வெல்வது நிச்சயம். இந்திய அணி விளையாட்டின் எல்லா அம்சங்களிலும் (மட்டை வீச்சு, பந்து வீச்சு மற்றும், பீல்டிங்) சமநிலையில் இருப்பதுதான் இதற்கு காரணம். இந்திய கிரிக்கெட் வீரர்களும் நன்றாக விளையாடுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஜூன் 4ஆம் தேதி இந்தியாவுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், குறிப்பாக சர்ஃபிரஸ் அகமது மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

கிரிக்கெட் விளையாட்டு திடல்படத்தின் காப்புரிமைAFP

சர்ஃபிரஸ் அகமதுவின் பங்களிப்பை பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்திருந்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மெக்பூ ஹாசன், தன்னுடைய திறமையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃபிரஸ் வந்தாலும், பலரும் அதனை விரும்பவில்லை.

முஹாஜீராக (சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்) இருக்கும் ஒருவர், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பதை பல முன்னாள் வீரர்களும் விரும்பவில்லை.

முஹாஜீராக சர்ஃபிரஸ் இருப்பதால்தான், அவருக்கு எதிராக பலரும் குற்றம் சாட்டுகின்றனர் என்று மெக்பூ ஹாசன் கூறுகிறார்.

கராச்சிக்கு சென்றுள்ள மெக்பூ ஹாசனே இதனை அனுபவித்துள்ளதாக விளக்குகிறார்.

திருமணத்தின்போது எடுத்தப்படம்படத்தின் காப்புரிமைMEHBOOB HASAN

"இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்று குடியமர்ந்துள்ளோர் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இது அங்குள்ள அனைவருக்கும் தெரியும்".

ஆனால், முஹாஜீர் சமூகம் தான் பாகிஸ்தானில் பல முக்கிய பொறுப்புக்களை வகிப்பதுதான் உண்மை. ஜெனரல் பர்வேஸ் முஷரப் போல முஹாஜீர் பலர், பாகிஸ்தான் படையில் ஜெனரல் பொறுப்புகளை ஏற்றுள்ளனர் என்று ஹாசன் கூறினார்.

சர்.பிரஸூம், அவருடைய பெற்றோரும் இந்தியாவுக்கு வருவதுண்டு என்று தெரிவிக்கும் மெக்பூ ஹாசன், தாங்களும் பாகிஸ்தான் போவதுண்டு என்கிறார்.

திருமணத்திற்கு 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றபோது, சர்ஃபிரஸை கடைசியாக பார்த்ததாக மெக்பூ ஹாசன் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/sport-40318481

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் சிறப்பான ஆட்டம்: தொடக்க வீரர்கள் அரைசதம்; 128/1 (23 ஓவர்)

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர்கள் அரைசதம் அடித்துள்ளனர்.

 
பாகிஸ்தான் சிறப்பான ஆட்டம்: தொடக்க வீரர்கள் அரைசதம்; 128/1 (23 ஓவர்)
 
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், க்ரீஸிற்கு வெளியில் கால்வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது. இதனால் பகர் சமான் 3 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

இருவரும் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் பந்து வீச்சு எந்த வகையிலும் அச்சுறுத்தும் வகையில் இல்லை. இதனால் இருவரும் அரைசதம் நோக்கி முன்னேறினார்கள். 20-வது ஓவரில் இருவரும் அரைசதம் அடித்தனர். அசார் அலி 61 பந்தில் அரைசதமும், பகர் சமான் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 23 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.

அசார் அலி 59 ரன்னில் ரன்அவுட் ஆனார். பகர் சமான் 56 ரன்னுடன் விளையாடி வருகிறார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/18164336/1091541/Pakistan-smart-start-opening-batsmen-half-century.vpf

Pakistan 167/1 (27.0 ov)

Link to comment
Share on other sites

பும்ப்ராவின் நோ-பாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பகர் சமான் சதம் அடித்தார்

பும்ப்ராவின் நோ-பாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

 
பும்ப்ராவின் நோ-பாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பகர் சமான் சதம் அடித்தார்
 
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் அசார் அலி, பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

4-வது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பகர் சமான் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காமல் பும்ப்ராவின் கால் க்ரீஸை தாண்டி சென்றதாக சந்தேகம் இருக்கிறது என ரீப்ளே கேட்டார்.

இதில் பும்ப்ராவின் கால் க்ரீஸிற்கு வெளியே சென்றது தெள்ளத்தெளிவாக சென்றது. இதனால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது, இதனால் பகர் சமான் 8 பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

201706181740018453_zaman-s._L_styvpf.gif
சதம் அடித்த பகர் சமான்

60 பந்தில் 7 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்த பகர் சமான், 92 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். இது அவரின் முதல் சர்வதேச சதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர், 114 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

நோபாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பகர் சமான் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/18174007/1091552/Fakhar-Zaman-escaped-for-no-ball-then-hit-maiden-century.vpf

Link to comment
Share on other sites

#ChampionsTrophy ஃபகர் சமான் சதம்... இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு

 

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தான்

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பரம வைரியான இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதால், உலகம் முழுவதும் யார் வெல்வார்கள் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதனிடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஃபகர் சமான் 114 ரன்களும், ஹஃபீஸ் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும், அசார் அலி 59 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், பாண்டியா, ஜாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 339 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்குகிறது இந்தியா.
 

http://www.vikatan.com/news/sports/92702-india-needs-339-runs-to-win-the-match.html

Link to comment
Share on other sites

ரோஹித் ஷர்மா, விராட் கோலி அடுத்தடுத்து ஆட்டமிழப்பு: இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் !

சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 338 ஓட்டங்களை பெற்று இந்தியாவிற்கு 339 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

DCm8ij8WAAE2Kbh.jpg

இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி களமிறக்கியது இந்திய அணியின் தொடக்கவீரர்களாக ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர்.

DCm8asbVoAE0y9u.jpg

பாகிஸ்தான் அணியின் முதல் ஓவரை இளம் வேகப்புயல் அமிர் வீசினார். அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இருந்த ரோஹித் ஷர்மா மூன்றாவது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஓட்டம் எதுவும் பெறாமலே களத்தினை விட்டு வெளியேறினார்.

DCm-Ox7VYAAOvSv.jpg

 

இதனையடுத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அணித்தலைவர் விராட் கோலி களத்தில் இறங்கினார். ஆனால் அவரும் யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டமிழக்க இந்திய ரசிகர்களுக்கு மேலும் அதிச்சி அளித்தார். இவரது விக்கெட்டையும் அமிர் தான் கைப்பற்றினார்.

DCnAvYOXkAQqOXm.jpg

தற்போது யுவராஜ் சிங் களமிறங்கியுள்ளார். இந்திய அணி தற்போது வரை 8 ஓவர் முடிந்துள்ள நிலையில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.

DCnAvYNXUAQQGAO.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/21012

Link to comment
Share on other sites

19146097_1641000142585742_36822882451451

Pakistan Cricket Team sind Champions! 1f1f5_1f1f0.png

இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

 
இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்
 
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் பகர் சமான் 114 ரன்னும், பாபர் ஆசம் 46 ரன்னும், மொகமது ஹபீஸ் 57 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஆமிர் வீசினார். முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து வந்த விராட் கோலிக்கு கேட்ச் மிஸ் செய்த போதிலும், அடுத்த பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆமிரின் அபார பந்து வீச்சால் இந்தியா 33 ரன்களுக்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. இந்த மூன்று விக்கெட்டுக்களையும் ஆமிர் கைப்பற்றினார்.

அதன்பின் இந்திய அணியால் மீள முடியவில்லை. டோனி 4 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்தில் 76 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.

201706182143215641_8-pakistan-s._L_styvp

அதன்பின் வந்த ஜடேஜா 15 ரன்னிலும், அஸ்வின், பும்ப்ரா தலா ஒரு ரன்னிலும் அவுட்டாக இந்தியா 30.3 ஓவரில் 158 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர், ஹசன் அலி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/18214320/1091576/CT17-pakistan-beats-india-by-180-runs-and-won-first.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.