Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...

Featured Replies

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

 
சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
 
லண்டன்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 6-வது ஆட்டம் கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி இங்கிலாந்தின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் 37 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடியை பிரித்தார் மில்னே. அவரது பந்துவீச்சில் ராஜ் (13) போல்டாகி வெளியேறினார். அதன்பின்னர் ஹேல்ஸ், ரூட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கேர்ர் உயர்ந்தது.

201706062344197693_england2._L_styvpf.gi

இந்நிலையில் ஹேல்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில், மில்னே பந்தில் போல்டானார். கேப்டன் மோர்கன் 13 ரன்கள் மட்டுமேசேர்த்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட், 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 48 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினர். அப்போது அணியின் ஸ்கோர் 210 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பட்லர் மட்டும் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். இதனால், 49.3 ஓவர்களில் இங்கிலாந்து 310 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பட்லர் 61 ரன்களுடன் களத்திலிருந்தார்.

நியூசிலாந்து தரப்பில் மில்னே, ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். சவுத்தி 2 விக்கெட்டும், போல்ட், சான்ட்னெர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், குப்தில், ரோஞ்சி தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர். முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே ரோஞ்சி டக் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் மற்றும் கப்தில் அணியின் ஸ்கோரை உயர்த்த கடும் முயற்சி எடுத்தனர். 14-வது ஓவரில் கப்தில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய டெய்லர், வில்லியம்சனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 87 ரன்களில் வுட் பந்தில் வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் வருவதும் போவதுமாக இருந்தனர், இதனால், அணியின் ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்துவீச்சினால் அந்த அணி 45 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பிளங்கிட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/06234415/1089368/england-won-against-newzealand-by-87-runs-in-champions.vpf

  • Replies 236
  • Views 21.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாக்.?- தென் ஆப்ரிக்க அணியுடன் இன்று மோதல்

 
வஹாப் ரியாஸ்.| கோப்புப்படம்.
வஹாப் ரியாஸ்.| கோப்புப்படம்.
 
 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிர்மிங்காமில் இன்று நடை பெறும் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்த்து பாகிஸ்தான் ஆடுகிறது. இத்தொட ரின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் தென் ஆப்ரிக்காவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றதால் பாகிஸ் தான் அணிக்கு அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு அலையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், இத்தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. இந்த இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இன்று தென் ஆப்ரிக்காவைச் சந்திக்கிறது.

ஒருநாள் போட்டித் தொடரை பொறுத்தவரை தென் ஆப்ரிக்க அணி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அதனால் அந்த அணியை தோற்கடிக்க பாகிஸ்தான் அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

இந்தியாவிடம் முதல் போட்டியில் தோற்றபோதிலும், பாகிஸ்தான் அணி, எளிதில் கணிக்க முடியாத அணியாகவே உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பல போட்டிகளில் முன்னணி அணிகளை வீழ்த்தி பாகிஸ்தான் அதிர்ச்சி அளித்துள்ளது. எனவே பாகிஸ்தான் அணியை தென் ஆப்ரிக்காவால் அத்தனை எளிதில் ஒதுக்கித்தள்ள முடியாது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலமாக பந்துவீச்சு உள்ளது. அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ், காயத்தால் பாதிக்கப்பட்டு தொடரில் இருந்து வெளியேறிய போதிலும், ஜூனைத் கான், முகமது அமிர், ஷடப் கான் என்று தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சொதப்பினாலும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சர்ப்ராஸ் அகமது, அகமது ஷேசாத், அசார் அலி, ஷோயிப் மாலிக் ஆகியோரைக் கொண்ட வலுவான பேட்டிங் வரிசையையும் பாகிஸ்தான் அணி கொண்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், எப்போதெல்லாம் மோசமான தோல்வியை சந்திப்பார்களோ, அப்போதெல்லாம் அடுத்த போட்டி யில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்று தங்கள் இமேஜை சீர்படுத்தியுள்ளனர். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் அவர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் முதல் போட்டியில் இலங்கையை வென்ற தென் ஆப்ரிக்க அணி, இப்போட்டியில் வெல்வதன் மூலம் எந்த டென்ஷனும் இல்லாமல் அரையிறுதிச் சுற்றுக்கு நுழையும் எதிர்பார்ப்பில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஹசிம் ஆம்லா, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. டி காக், டுபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ், மில்லர் ஆகியோர் அவருக்கு தோள்கொடுக்கும் வகை யில் ஆடினால் தென் ஆப்ரிக்க அணியை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். பேட்டிங்கை போலவே பந்து வீச்சிலும் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக விளங்கு கிறது. காகிசோ ராபாடா, இம்ரன் தகிர், மோர்க்கெல் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆவேசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். எனவே இன்றைய போட்டியில் வெல்ல பாகிஸ்தான் அணி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

அணிகள் விவரம்:

பாகிஸ்தான்:

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, பாபர் அசாம், பாஹிம் அஸ்ரப், பஹர் ஜமான், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், முகமது அமிர், முகமது ஹபீஸ், ஷதப் கான், ஷோயிப் மாலிக், உமர் அக்மல்.

தென் ஆப்ரிக்கா:

டி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, பர்ஹான் பெகார்டியன், டுமினி, குயிண்டன் டி காக், டு பிளெஸ்ஸிஸ், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மோர்ன் மோர்க்கெல், கிறிஸ் மோரிஸ், வெயின் பார்நெல், அன்டில் பெலுக்வயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ராபாடா, இம்ரன் தகிர்.

நேரம்: மாலை 6

இடம்: பர்மிங்காம்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

http://tamil.thehindu.com/sports/அரையிறுதி-வாய்ப்பை-தக்கவைக்குமா-பாக்-தென்-ஆப்ரிக்க-அணியுடன்-இன்று-மோதல்/article9721765.ece?homepage=true

  • தொடங்கியவர்

அரைஇறுதி வாய்ப்பை பெற அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்: ஸ்டீவன் சுமித்

அரைஇறுதி வாய்ப்பை பெற அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறினார்.

 
அரைஇறுதி வாய்ப்பை பெற அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்: ஸ்டீவன் சுமித்
 
லண்டன் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் நேற்று முன்தினம் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் (பகல்-இரவு) ஆஸ்திரேலியா-வங்காளதேசம் (ஏ பிரிவு) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் 182 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக முதல் லீக் ஆட்டத்தில் சதம் அடித்த தமிம் இக்பால் 95 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அவர் ஒரு ஓவரில் தமிம் இக்பால் உள்பட 3 விக்கெட்டுகளை சாய்த்ததும் இதில் அடங்கும். ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், ஹேசில்வுட், கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் (19 ரன்) ருபெல் ஹூசைன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 40 ரன்னுடனும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டன. இந்த போட்டி தொடரில் மழையால் ரத்து செய்யப்பட்ட 2-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் இதேபோல் மழையால் கைவிடப்பட்டது.

அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி பெறும் நிலையில் இருந்த போது மழை பெய்ததால் தப்பியது. இந்த முறை வங்காளதேசத்தை எளிதில் வெல்லும் நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மேலும் 4 ஓவர்கள் நடந்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி வெற்றியை ருசித்து இருக்கும். ஆனால் மழை வலுத்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு புள்ளியுடன் திருப்திபட வேண்டியதானது.

201706070956496650_match-rain._L_styvpf.
வங்காளதேச கேப்டன் மோர்தசா விக்கெட் வீழ்ந்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர்.

2 புள்ளியுடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கிறது. 1 புள்ளியுடன் உள்ள வங்காளதேச அணி கடைசி லீக் ஆட்டத்தில் 9-ந் தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது.

ஆட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘வெற்றி பெற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. முந்தைய ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் எங்களது பந்து வீச்சு நல்ல முன்னேற்றம் கண்டு இருந்தது. எல்லா பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள். அந்த வகையில் எனக்கு திருப்தி அளிக்கிறது. அரைஇறுதி வாய்ப்பை பெற அடுத்த ஆட்டத்தில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்’ என்று தெரிவித்தார்.

வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதேநேரத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தோல்வியில் இருந்து தப்பியதால் தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பில் நாங்களும் நீடிக்கிறோம். இந்த ஒரு புள்ளி எங்களுக்கு நிறைய வகையில் உதவி செய்யும். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் நியூசிலாந்துடன் மிகவும் கடினமாக விளையாட வேண்டும். சமீபத்தில் முத்தரப்பு தொடரில் நாங்கள் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதை யாரும் மறந்துவிட வேண்டாம். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/07095645/1089405/chance-to-win-the-next-match-in-the-semi-finals-Steven.vpf

  • தொடங்கியவர்

குரூப் 'ஏ' வில் அரை இறுதிக்குத் தகுதிபெறப்போவது யார் ? #ChampionsTrophy

 

சாம்பியன்ஸ் டிராபி பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் மழை தன் கைவரிசையைக் காட்டியதால், சில அணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சரி, குரூப் 'ஏ'-வில் எந்தெந்த அணிகள் அரை இறுதிக்குச் செல்லும், ஒவ்வோர் அணிக்கும் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது என  நிறைய முடிவுகள் வர வாய்ப்பு இருப்பதால், கட்டுரையைச் சற்றே பொறுமையாகப் படிக்கவும்.

முதலில் குரூப் - ஏ-வின் தற்போதைய  நிலையை இந்தப் படத்தில் பார்ப்போம்:

Group A  அரையிறுதி

குரூப் ஏ-வில் இனி நடக்கவுள்ள போட்டிகள்:

நியூசிலாந்து Vs வங்கதேசம்         - 09 / 06 /2017

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து - 10 /06 /17

1. இங்கிலாந்து :

முதல் அணியாக செமி ஃபைனலுக்குள் நுழைந்திருக்கும் இங்கிலாந்து அணி, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியிருக்கிறது. வரும் சனிக்கிழமையன்று ஆஸ்திரேலிய அணியைச் சந்திக்கவுள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இங்கிலாந்துக்குப் பாதகமில்லை. குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, இப்போதைக்கு முதல் இடத்தில் உள்ளது. நல்ல ரன்ரேட்டும் இருக்கிறது (1.069). ஆஸ்திரேலியாவை வென்றால் முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்படாலும், இங்கிலாந்து தன் குரூப்பில் முதல் இடம் பிடிக்கும். 

ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் குறைவான ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 45 ஓவர்கள் வரை போட்டி நீடித்துத் தோற்றாலோ பிரச்னை இல்லை. நல்ல ரன்ரேட் என்பதால், இரண்டு அணிகள் நான்கு புள்ளிகள் பெற்றிருந்தாலும் இங்கிலாந்து முதல் இடத்தில்தான் இருக்கும். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை  நூறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ, 35 ஓவர்களுக்குள் சேஸிங்கை முடித்து ஜெயித்தலோ புள்ளிப்பட்டியலில் மாற்றம் நிகழலாம்.  இங்கிலாந்து இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்படக்கூடும். புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தால், குரூப் பி-யில் முதல் இடத்தைப் பிடிக்கும் வலுவான அணியோடு அரை இறுதியில் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

2.  வங்கதேசம் :

முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நிச்சயம் தோல்வியடைந்திருக்க வேண்டும். ஆனால், மழையால் தப்பித்தது. மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி வங்கதேசத்துக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது  மூன்றாம் இடத்தில் இருக்கிறது வங்கதேசம். வங்கதேசத்துக்குப் பிந்தைய இடத்தில் இருக்கிறது நியூசிலாந்து. 

வங்கதேசத்துக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் நியூசிலாந்தை ஜெயித்தால், வங்கதேசம் இரண்டு புள்ளிகள் பெறும். ஆக, மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும். சனிக்கிழமையன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் நடந்தால் வங்கதேசம் 'குரூப் - ஏ'விலிருந்து அரை இறுதிக்குச் செல்லும்.

வங்கதேசம், நியூசிலாந்தை வென்றுமுடித்தபிறகு... இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால், வங்கதேசம் தொடரிலிருந்து வெளியேறவேண்டியதுதான். ஏனெனில், அப்போது வங்கதேசம் மூன்று புள்ளிகளும், ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகளும் பெற்றிருக்கும்.

வங்கதேசம் - நியூசிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டாலும், வங்கதேசத்துக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வென்று, ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் வங்கதேசத்தின் ரன்ரேட்டைவிட சரிந்தால் வங்கதேசம் செமி ஃபைனல் செல்லும்.

வங்கதேசம்

ஒருவேளை நியூஸி-யை வென்று, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டால் ஆஸ்திரேலியாவும் வங்கதேசமும் மூன்று புள்ளிகளுடன் இருக்கும். அப்போதைய நிலைமையில் ரன்ரேட் பார்க்கப்படும். வங்கதேசத்தின் தற்போதைய ரன்ரேட்( -0.407). ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்( 0). ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஒரு புள்ளி கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், ரன்ரேட்டில் மாற்றம் இருக்காது. வங்கதேசம் நியூசிலாந்து அணியுடன் வென்று மைனஸ் ரன்ரேட்டிலிருந்து ப்ளஸ் ரன்ரேட்டுக்கு வர வேண்டும். அப்போதுதான் வங்கதேசம் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும். நியூசிலாந்துடன் வென்று மைனஸ் ரன்ரேட்டிலேயே வங்கதேசம் இருந்தால், நிச்சயம் தகுதிபெற முடியாது. ஒரு வெற்றி பெற்றும் வங்கதேசம் வெளியேறும். ஒரு வெற்றிகூட பெறாத ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் செல்லும்.

ஒருவேளை  நியூசிலாந்திடம் வங்கதேசம் தோற்றுவிட்டால், வெறும் ஒரு புள்ளியுடன் கடைசி இடம் பிடித்து, தொடரிலிருந்து வெளியேறும். இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால், வந்தேசம் மூன்றாவது இடத்தில் இருக்கும். ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் சென்றுவிடும்.

நியூசிலாந்து :

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் வெற்றியை நோக்கிப் பயணித்தது நியூசிலாந்து. அந்தப் போட்டியில் மழை வரவே போட்டி கைவிடப்பட்டு, புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது நியூசிலாந்துக்குப் பெரும்பின்னடைவாகிப்போனது. இங்கிலாந்துடனான போட்டியிலும் சேஸிங்கில் ஒருகட்டத்தில் நல்ல நிலைமையிலிருந்தது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் அவுட் ஆன பிறகு, மற்ற வீரர்களும் பெவிலியனுக்குப் படையெடுத்ததால் படுதோல்வி அடைந்தது. 

நியூஸி-க்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. வங்கதேசத்துக்கான அதே நிலைமைதான் நியூசிலாந்துக்கும். 9-ம் தேதி நடக்கும் போட்டியில் வங்கதேசத்தை வென்றால்தான் நியூசிலாந்து, அரை இறுதி வாய்ப்பைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியும். வங்கதேசத்தை வென்றாலும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடிப்பதற்காகக் காத்திருக்க வேண்டும். இரண்டு முடிவுகளும் சுபமாக அமைந்தால், மூன்று புள்ளிகளுடன் அரை இறுதிக்குச் செல்லும் நியூசிலாந்து.

நியூசிலாந்து அணி

வங்கதேசம் - நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டால், நியூசி. ஒரு  புள்ளிபெறும். இப்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தாலும் வங்கதேசத்துக்குக் கிடைத்ததுபோல ஒரு வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில், நியூசிலாந்து வங்கதேசத்தைவிட ரன்ரேட் அடிப்படையில் பின்தங்கியிருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து, ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தைவிட ரன்ரேட்டில் பின்தங்கினாலும்கூட அரை இறுதிக்குச் செல்லமுடியாது நியூசி. இப்படியொரு நிலைமையில் ஆஸ்திரேலியா கடைசி இடத்தையும், நியூசிலாந்து மூன்றாம் இடத்தையும் பிடிக்கும். வங்கதேசம் அரை இறுதிக்குச் சென்றுவிடும். 

வங்கதேசத்துடனான போட்டியில் வெற்றி கிடைத்து, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டால்,  இன்னொருவிதமான முடிவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்து வங்கதேசத்தை அபாரமாக வென்று ப்ளஸ் ரன்ரேட்டில் இருந்தால், மூன்று புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளில் இருந்து நியூசி. அரை இறுதிக்குச் செல்லும். ஒருவேளை வங்கதேசத்தை வென்றாலும் ரன்ரேட் மைனஸில் இருந்தால், ஒரு வெற்றிகூட பெறாத ஆஸ்திரேலியா செமி ஃபைனலுக்குச் செல்லும். நியூசிலாந்து தனது பிரிவில்  மூன்றாம் இடத்தைப் பிடிக்கும்.

வங்கதேசம் - நியூசிலாந்து  போட்டியும் மழையால் கைவிடப்பட்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியும் மழையால் கைவிடப்பட்டால்,  நியூசிலாந்து அரை இறுதிக்குத் தகுதிபெற முடியாது. வங்கதேசத்துடனான போட்டியில் தோற்றால் அப்போதே அரை இறுதியிலிருந்து வெளியேறவேண்டியதுதான்.

ஆஸ்திரேலியாவுக்கு என்ன நிலைமை? 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை வென்றால், எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நேரடியாக  அரை இறுதிக்குச் செல்லும். 

மறைமுக வாய்ப்புகள் :

1.   வங்கதேசம் Vs நியூசிலாந்து  - மழையால் டிரா 

  ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  - இங்கிலாந்து வெற்றி 

- இப்படியொரு சூழ்நிலையில் வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மூன்று அணிகளும் இரண்டு புள்ளிகளும் பெற்றிருக்கும். ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் இப்போதைக்கு மற்ற இரண்டு அணிகளையும்விட நன்றாக இருக்கிறது. இங்கிலாந்துடன் படுதோல்வி அடைந்தும் வங்கதேசத்தைவிட ரன்ரேட் அதிகமாக இருந்தால் ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் செல்லும். 

ஒருவேளை வங்கதேசத்தைவிட ரன்ரேட் சரிந்தால் மூன்றாவது இடத்துக்கும், நியூசிலாந்தைவிட ரன்ரேட் சரிந்தால் நான்காவது இடத்துக்கும் ஆஸ்திரேலியா தள்ளப்படும். 

2. வங்கதேசம் Vs நியூசிலாந்து  - மழையால் டிரா 

   ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  -  மழையால் டிரா 

இப்படியொரு சூழ்நிலை வந்தால் ஆஸ்திரேலியா மூன்று புள்ளிகள்பெறும். மற்ற இரண்டு அணிகளும் இரண்டு புள்ளிகளில் இருக்கும். ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் செல்லும்.

3. வங்கதேசம் Vs நியூசிலாந்து  -   வங்கதேசம் வெற்றி 

   ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  -  மழையால் டிரா 

இந்தச் சூழ்நிலையில் வங்கதேசம், ஆஸ்திரேலியா இரண்டும் மூன்று புள்ளிகளில் இருக்கும். வங்கதேசம் நியூசிலாந்தை வென்று ப்ளஸ் ரன்ரேட்டுக்குச் செல்லவில்லையெனில், ஆஸ்திரேலியா அரை இறுதிக்குத் தகுதிபெறும். 

4. வங்கதேசம் Vs நியூசிலாந்து  -   நியூசிலாந்து  வெற்றி 

  ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  -  மழையால் டிரா 

 

இந்தச் சூழ்நிலையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இரண்டும் மூன்று புள்ளிகளில் இருக்கும். நியூசிலாந்து, வங்கதேசத்தை வென்று ப்ளஸ் ரன்ரேட்டுக்குச் செல்லவில்லையெனில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்குத் தகுதிபெறும். நியூசிலாந்து  ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கியுள்ளதால் வங்கதேசத்தை 120 ரன்கள் வித்தியாசத்திலோ, 30 -35 ஓவர்களில் சேஸிங் செய்தோ வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு பாதிக்கப்படும். 

http://www.vikatan.com/news/sports/91616-which-teams-from-group---a-will-enter-into-semi-final-in-champions-trophy.html

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நீடிக்குமா?

சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன. இந்தியாவின் அதிரடி நாளைய போட்டியிலும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
சாம்பியன்ஸ் டிராபி: இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நீடிக்குமா?
 
லண்டன்:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா ‘பி’ பிரிவில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கையுடன் நாளை (வியாழக்கிழமை) மோதுகிறது. இந்த ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதே அதிரடி நாளைய ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

பேட்டிங் மிகவும் வலுவாக இருக்கிறது. ரோகித்சர்மா, தவான், கேப்டன் விராட் கோலி, யுவராஜ்சிங், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், பாண்டியா முத்திரை பதித்தனர்.

201706071353502945_IND._L_styvpf.gif

நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அஸ்வின் இடம் பெறும் பட்சத்தில் வேகப்பந்து வீரர்களில் ஒருவர் கழற்றிவிடப்படுவார். ஹர்த்திக் பாண்டியா ஆல்-ரவுண்டர் வரிசையில் ஜொலிப்பதால் நீக்கப்படமாட்டார்.

உமேஷ் யாதவ், புவனேஸ்வர்குமார், பும்ரா ஆகியோரில் ஒருவர் கழற்றிவிடப்படுவார். வெற்றிக்கான அணியே இடம்பெற வேண்டும் என்று கருதினால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.

இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அளவுக்கு இலங்கை வீரர்களின் ஆட்டம் மோசமாக இருந்தது.

உடல் தகுதி இல்லாததால் கேப்டன் மேத்யூஸ் கடந்த போட்டியில் ஆடவில்லை. நாளைய ஆட்டத்தில் இடம் பெறுவார். மெதுவாக பந்து வீசியதால் அந்த அணியின் தற்காலிக கேப்டன் உபுல் தரங்கா 2 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நாளை ஆட முடியாது.

201706071353502945_1nrgzol9._L_styvpf.gi

இந்தியாவுடன் ஒப்பீடுகையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இலங்கை பலவீனத்துடன் காணப்படுகிறது. மலிங்கா ஒருவரே பந்துவீச்சில் அச்சுறுத்தலாக இருப்பார்.

இலங்கை அணியின் பலவீனத்தை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம் தான்.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/07135345/1089475/India-v-Srilanka-collide-in-champions-trophy.vpf

  • தொடங்கியவர்

தென் ஆப்ரிக்கா திணறல் ,

தென் ஆப்ரிக்கா திணறல்

 

பர்மிங்காம்: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, தென் ஆப்ரிக்க அணி ரன் குவிக்க திணறுகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இன்று பர்மிங்காமில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார். கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பக்தர் ஜமான் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்:

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (16) அதிர்ச்சி தந்தார். ஹபீஸ் 'சுழலில்' குயின்டன் (33) சிக்கினார். டிவிலியர்ஸ் டக்-அவுட்டானார். ஹசன் அலி 'வேகத்தில்' டு பிளசி (26), டுமினி (8), பார்னெல் (0) ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்க அணி 29 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. மில்லர் (31), மோரிஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.dinamalar.com/icc-champions-trophy-2017/detail.php?id=662

  • தொடங்கியவர்

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கைக்கு மற்றுமொரு இழப்பு

 
Gunathilaka-and-Kapugedara-696x463.jpg
icc-clips-728-90-newest.jpg

இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சாமர கபுகெதர சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்திய அணியுடனான போட்டியினை முன்னிட்டு இன்றைய (ஜுன் 7) தினம் இடம்பெற்ற பயிற்சி  முகாமில் பங்கேற்றிருந்த வேளையில், முழங்கால் உபாதைக்கு உள்ளாகியுள்ளமையினால், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.  

 

சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக தற்பொழுது இங்கிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ThePapare.com இன் ஊடகவியலாளர் தமித் வீரசிங்க, இலங்கை அணி பயிற்சி பெரும் இடத்தில் இருந்து எமக்கு அளித்த தகவலுக்கு அமைய, குறித்த பயிற்சி முகாமின் போது, களத்தடுப்பு பயிற்சிகளை மேற்கொண்டிருந்த கபுகெதர மைதானத்தில் இருந்தவாறு தீடிரென கீழே விழுந்தார். உடனே, இலங்கை அணியின் உடற்பயிற்சியாளர் அஜந்த வத்தேகம மூலம் மைதானத்தில் வைத்து கபுகெதரவிற்கு உதவி வழங்கப்பட்டது.  

பின்னர் அவர், MRI ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட நிர்ப்பந்திக்கப்பட்ட காரணத்தினால், இலங்கை அணி முகாமைத்துவக் குழு அவருக்குப் பதிலாக அதிரடி ஆரம்ப வீரர் தனுஷ்க குணத்திலக்கவினை அணியில் பிரதியீடு செய்ய .சி.சி இன் போட்டி ஏற்பாட்டு குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவரது உபாதை தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அணி முகாமையாளர் அசங்க குருசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

கபுகெதரவின் உடற்தகுதி தொடர்பான முடிவு இன்று மாலை எமக்கு தெரியவரும். தற்போது .சி.சி இன் சிறப்பு வைத்தியர்கள் மூலம் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர் ஏனைய போட்டிகளுக்கு தகுதி பெறாதவிடத்து, நாங்கள் தனுஷ்க குணத்திலக்கவினை .சி.சி இடம் ஏனைய போட்டிகளுக்காக பரிந்துரை செய்யவுள்ளோம்என்று தெரிவித்தார்.

தொடரில் வீரர் ஒருவரை மற்ற வேண்டுமெனில், .சி.சி இன் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் அனுமதி அவசியமாகின்றது. எனவே, குணத்திலக்கவின் உள்ளடக்கத்திற்கு .சி.சி இன் அனுமதி அவசியமாகின்றது.

புகைப்படங்கள் – இலங்கை அணி இன்றைய பயிற்சிகளின்போது

இலங்கை அணிக்காக 19 ஒரு நாள் போட்டிகளில் ஆடியிருக்கும் குணத்திலக்க மிகச்சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவராக காணப்படுகின்றார். ஆரம்ப வீரரான இவர் அணியில் இணைக்கப்படுமிடத்து குசல் பெரேரா மத்திய வரிசையிலையே நாளைய போட்டியில் ஆடக்கூடிய நிலை ஏற்படும்.

ஏற்கனவே, தொடர்ச்சியாக சிறந்த திறமையை வெளிப்படுத்தி வந்த உபுல் தரங்கவிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், அவரும் இந்தியாவுடனான போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

என்னடா இது டிவில்லியர்ஸ்க்கு வந்த சோதனை...!

சாம்பியன்ஸ் டிராபி குரூப்-பி பிரிவில் தென் ஆப்ரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் மில்லர் 75 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ், கோல்டன் டக்கில் வெளியேறினார். அதாவது சந்தித்த முதல் பந்திலேயே அவர் வெளியேறினார்.

Devilliers


டிவில்லியர்ஸ் கேரியரில் கோல்டன் டக் ஆவது இதுவே முதல் முறையாகும். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் டிவில்லியர்ஸின் இந்த வேதனை சாதனை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி 27 ஓவர்களுக்கு 119 ரன் எடுத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு பாகிஸ்தான் கையே ஓங்குகிறது. 

http://www.vikatan.com/news/sports/91655-ab-de-villiers-falls-first-ever-golden-duck.html

  • தொடங்கியவர்

இலங்கை மீண்டெழுமா ?  இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்­டத்தில் இலங்கை – இந்­திய அணிகள் இன்று மோது­கின்­றன. 

India-vs-Sri-Lanka-3-Match-T20-Series-Fe

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்தில் நடை­பெற்று வரு­கி­றது. இந்­தப்­போட்­டியில் 8 நாடுகள் பங்­கேற்று விளை­யாடி வரு­கின்­றன. 

அவை இரண்டு பிரி­வுகளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் இலங்கை அணி ‘பி’ பிரிவில் உள்­ளது. தென்­னா­பி­ரிக்கா, பாகிஸ்தான், இந்­தியா ஆகிய நாடு­களும் அந்த பிரிவில் உள்­ளன.

இந்­நி­லையில் இலங்கை அணி இந்­தி­யாவை இன்று எதிர்­கொள்­கி­றது. தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான முத­லா­வது போட்­டியில் இலங்கை அணி தோல்­வியை சந்­தித்­தி­ருந்­தது. 

அதே­வேளை இந்­திய அணி தனது தொடக்க ஆட்­டத்தில் பாகிஸ்­தானை 124 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்தி அபார வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.  

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் விளையாடும் இரண்­டா­வது போட்­டி­யாக இன்று நடை­பெ­ற­வுள்ள போட்டி அமை­ய­வுள்­ளது. 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான ஆட்­டத்தில் இந்­திய வீரர்கள் அபா­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். அதே அதி­ரடி இன்­றைய ஆட்­டத்­திலும் நீடிக்­குமா என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை அணி தொடக்க ஆட்­டத்தில் தென்­னாபி­ரிக்­கா­விடம் 96 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோற்­றது. உண்­மையைச் சொன்னால் இலங்கை வீரர்­களின் ஆட்டம் மோச­மா­கத்தான் இருக்­கி­றது.

உடல் தகுதி இல்­லா­ததால் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் கடந்த போட்­டியில் ஆட­வில்லை. 

இந்­தி­யா­வுக்கு எதி­ரான இன்­றைய போட்­டியில் மெத்­தியூஸ் கள­மி­றங்­க­வுள்­ளார். ஆனால் அவர் இந்தப் போட்­டியில் துடுப்­பாட்ட வீர­ராக மட்­டுமே செயற்­ப­டுவார் என்றும் பந்­து­வீச மாட்டார் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான போட்­டியில் மெது­வாக பந்து வீசி­யதால் உபுல் தரங்க  2 போட்­டிகளில் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் இன்­றைய போட்­டியில் தரங்க விளை­யா­ட மாட்டார் என்பது இலங்­கைக்கு பின்­ன­டைவே. 

இந்­தி­யா­வுடன் ஒப்­பி­டு­கையில் துடுப்­பாட்டம் மற்றும் பந்­து­வீச்சில் இலங்கை பல­வீ­னத்­துடன் காணப்­ப­டு­கி­றது. லசித் மலிங்க இந்­தி­யா­வுக்கு அச்சுறுத் தலாக இருப்பார். சங்கக்கார கூறியது போல இலங்கை அணி கர்வத்துடன் இந்தப் போட்டியில் விளையாடி னால் இந்திய அணியை வீழ்த்தி விடலாம். பொறுத் திருந்து பார்ப்போம் இந்தப் போட்டியில் சாதிக்கப்போவது யார் என்று.

http://www.virakesari.lk/article/20713

  • தொடங்கியவர்

27 ஓவர்கள் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால்... : தோல்விக்குப் பிறகு டிவில்லியர்ஸ்

 
டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்து செல்லும் காட்சி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்து செல்லும் காட்சி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
 
 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் சற்றும் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறையின் படி வீழ்த்தி தொடருக்கு உயிரூட்டியுள்ளது.

மழை வரும் என்று கணிப்புகள் கூறியும் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய டிவில்லியர்ஸ் முடிவெடுத்தார், பாசிட்டிவான முடிவாக இருக்கலாம் ஆனால் ஒரு சில தருணங்களில் பாசிட்டிவ் அல்லது நெகெட்டிவ் என்பதைத் தாண்டிய சாமர்த்தியமான, தந்திரோபாயமும் ஒரு கேப்டனுக்குத் தேவை.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிர்க்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அன்று இந்தியாவுக்கு எதிராக சகலத்திலும் படுமோசமாக ஆடிய பாகிஸ்தான் அணி நேற்று எப்படி இப்படி சிறப்பாக ஆடியது என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

அன்று ஆடியது நிஜமா அல்லது நேற்று ஆடியது நிஜமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. திடீரென ஒரு அணியின் அனைத்துப் பிரச்சினைகளும் ஒருநாளில் சரியாகிவிடுமா? இந்த கேள்வி எழும் அதேவேளையில் அன்று இந்திய அணிக்கு எதிராக ஆடிய ‘மோசமான’ ஆட்டம் அணியின் உண்மையான திறமையின்மையா, அல்லது ஒருகுறிப்பிட்ட நாளில் நிகழும் தவறா? துரதிர்ஷ்டமா? அன்று ஜுனைத் கான் ஏன் ஆடவில்லை, நேற்று ஆடியது எப்படி? அல்லது இன்னும் வேறு என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்று கேட்காமல் இருப்பது கடினம். இதனால் பாகிஸ்தானின் அன்றைய ‘மோசமான” ஆட்டம் நமக்குள் ஏற்படுத்தும் சந்தேகங்கள் ஆழமானவை. ஆனால் இவையெல்லாம் இன்றைய கிரிக்கெட் உலகில், அதுவும் ஐசிசி தொடர்களில், தடை செய்யப்பட்ட கேள்விகள் (taboos).

பாகிஸ்தான் அணியில் அன்று அனைவராலும் விமர்சிக்கப்பட்ட இமாத் வாசிம் 8 ஓவர்கள் 20 ரன்கள் 2 விக்கெட்டுகள், ஹசன் அலி 8 ஓவர்கள் 24 ரன்கள் 3 விக்கெட்டுகள். டிவில்லியர்ஸ் தன் பேட்டிங் குறித்து தீவிரமாக பரிசீலிப்பது நல்லது. ரன் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்தார். தொடக்கம் மந்தமாக இருந்தாலும் 40 ரன்கள் என்ற சுமாரான தொடக்கத்தை ஆம்லா, டிகாக் கொடுத்தனர். ஆனால் ஆம்லா, டிகாக், டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ், டுமினி, பார்னெல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்கா 29-வது ஓவர் முடிவில் 118/6 என்று திணறியது.

ஆனால் டேவிட் மில்லர் 104 பந்துகளில் 1 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுக்க கிறிஸ் மோரிஸ் 28 ரன்களையும் ரபாடா 26 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்கா 219/8 என்ற சுமாரான ரன் எண்ணிக்கையை எட்டியது.

பாகிஸ்தான் இலக்கைத் துரத்திய போது மீண்டும் அசார் அலி 22 பந்துகளில் 9 ரன்களுடன் தன் ஃபார்மை தேடிக்கொண்டிருக்க, அறிமுக தொடக்க வீரர் ஃபக்கார் ஜமான் மிக அருமையாக ஆடினார், அச்சமின்றி ஆடினார். இங்கிலாந்து பிட்சில் ரபாடா, மோர்கெல் ஆகியோரை ஆடுவது சாதாரண காரியமல்ல, ஆனால ஃபக்கார் ஜமான் பந்தை அடிக்க இடம் கொடுத்தாலும் நேரம் கொடுத்தாலும் சாத்தினார், கவர் திசையில் விளாசல், ஒதுங்கிக் கொண்டு நல்ல பந்துகளையும் அடிப்பது என்று உற்சாகம் காட்டி 23 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.

7 ஓவர்களில் 40 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்துக்குப் பிறகு மோர்கெல் ஒரே ஓவரில் அசார் அலியையும் ஃபக்கார் ஜமானையும் வீழ்த்தினார். 5-17-2 என்பது மோர்கெலின் பந்து வீச்சு அனாலிசிஸ். அதன் பிறகு 20 பந்துகளுக்கு ஒரு ரன் கூட வரவில்லை.

பாபர் ஆசம், மொகமது ஹபீஸ் தடுமாறிய படியே ஆடினாலும் விக்கெட்டைக் கொடுக்கவில்லை. ஒருவகையான சமாளிப்பு ஆட்டம். ஆனால் 53 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்த ஹபீஸ், மோர்கெலின் எழும்பிய பந்திற்கு இம்ரான் தாஹிரிடம் கேட்ச் ஆனார். ஹபீஸ் அவுட் ஆனது ஒருவிதத்தில் பாகிஸ்தானுக்கு நல்லதாகப் போனது ஷோயப் மாலிக் 14 பந்துகளில் 16 ரன்களை எடுத்தார், பாபர் ஆஸம் 31 நாட் அவுட் 27 ஓவர்களில் 119/3 என்ற நிலையில் மழைபிடித்துக் கொண்டது, ஆட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை. உண்மையில் டக்வொர்த் முறைப்படி 27 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆட்ட நாயகனாக ஹசன் அலி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து டிவில்லியர்ஸ் கூறியதாவது:

பாகிஸ்தான் அணி பந்து வீச்சு நன்றாக இருந்தது. எங்களை நெருக்கடிக்குள்ளாக்கினர். விக்கெட்டுகளை கொத்தாக இழந்தோம். ஆனால் மீண்டு எழுந்தோம், டேவிட் மில்லர் இன்னிங்ஸுக்கு நன்றி. நாங்கள் நன்றாக போராடினோம், உண்மையில் பவுலிங்கில் நல்ல நிலையில் இருந்தோம். இந்த ஸ்கோர் சரியான ஸ்கோர்தானா அல்லது இல்லையா என்பதைத் தாண்டி நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம்.

மழை காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. மிகவும் கடினமான சூழல், 27 ஓவர்கள்தான் நடைபெற போகிறது என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆடியிருப்போம், இன்னும் கொஞ்சம் பாகிஸ்தானை நெருக்கியிருப்போம், நெருக்கடிக்குள்ளாக்கியிருப்போம். நாங்கள் நன்றாகவே ஆடி வருகிறோம். இன்னும் சில இடங்களில் முன்னேற்றம் தேவை அதற்காக பயிற்சி எடுத்து வருகிறோம்.

இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ்.

http://tamil.thehindu.com/sports/27-ஓவர்கள்-என்று-முன்கூட்டியே-தெரிந்திருந்தால்-தோல்விக்குப்-பிறகு-டிவில்லியர்ஸ்/article9722806.ece?homepage=true

  • தொடங்கியவர்

#ChampionsTrophy- சதம் அடித்தார் தவான்... வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Dhawan

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இன்னும் சில நாள்களில் லீக் ஆட்டம் முடியவுள்ள நிலையில், அணிகளுக்கு இடையில் போட்டா போட்டி நடந்து வருகிறது. இதனிடையே, இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற இலங்கை அணி, பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை நிதானமாக ஆரம்பித்த இந்தியா, தற்போது அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில், தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், சதம் விளாசி தொடர்ந்து களத்தில் பந்தை சிதறடித்து வருகிறார். முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 300 ரன் மார்க்கை கடந்தது போல இன்றைக்கும் இந்தியா கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தவானுடன் தோனி களத்தில் உள்ளார். இந்தியா, 43 ஓவர்கள் முடிவில் 251 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 

http://www.vikatan.com/news/sports/91728-dhawan-score-century-in-match-number-8-against-sri-lanka-in-champions-trophy.html

India 297/5 (48.0 ov)

  • தொடங்கியவர்

விராட் கோலியின் பலவீனத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தி வீழ்த்திய நுவான் பிரதீப்

 
நுவான் பிரதீப் பொறியில் சிக்கி 0-அவுட் ஆன கோலி. | படம். ராய்ட்டர்ஸ்.
நுவான் பிரதீப் பொறியில் சிக்கி 0-அவுட் ஆன கோலி. | படம். ராய்ட்டர்ஸ்.
 
 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 34 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தாலும் விராட் கோலி டக் அவுட் ஆனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைக்க ரோஹித் சர்மா (78 ரன்கள், 79 பந்துகள், 6 நான்குகள் 3 ஆறுகள்), ஷிகர் தவண் ஜோடி சுமார் 25 ஓவர்களில் 138 ரன்கள் என்ற அபாரத் தொடக்கத்தைக் கொடுத்தனர்.

ரோஹித் சர்மா இலங்கைக்கு அபாயகரமான முறையில் ஆடிக் கொண்டிருந்தார், மலிங்கா வீசிய பந்தை ஹூக் ஷாட்டில் டாப் எட்ஜில் சிக்ஸ் அடித்த ரோஹித் சர்மா அடுத்த அதேமாதிரியான பந்தை மிகச்சரியாக கனெக்ட் செய்ய வேண்டும் என்று தன்னுணர்வுடன் ஆடினார், ஆனால் அது நேராக லெக் திசையில் டீப்பில் பெரேரா கையில் எளிதான கேட்ச் ஆக முடிந்தது.

அதன் பிறகு பலத்த ஆரவாரத்துடன் விராட் கோலி களமிறங்கினார்.

மலிங்கா வீசிய முதல் பந்தை ஆடாமல் விட்டார். 26-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் வீச வந்தார், திட்டமிட்டபடி ஷிகர் தவணுக்கு லெக் திசையில் ஒரு ரன் கொடுக்கப்பட்டு விராட் கோலி பேட்டிங் முனைக்கு வந்தார்.

ஸ்லிப், கவர், ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர், மிட் ஆஃப் என்று ஆஃப் திசை வலுவாக்கப்பட்டது. இந்நிலையில் ஒருஆஃப் ஸ்டம்ப் பந்தை கோலி முன்னால் வந்து தடுத்தாடினார். லேசாக பொறியில் சிக்குவது போல் தெரிந்தது.

ஆனால் இன்னொரு அதே போன்ற ஆஃப் ஸ்டம்ப், அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் லைன் மிகவும் அற்புதமான பந்து வீச்சை வீசினார் நுவான் பிரதீப் கோலியின் ஈகோ தூண்டப்பட பந்து மேலே வரும்போதே டிரைவ் ஆட முயன்றார் மட்டையின் உள்விளிம்பில் பட்டு சரியாகச் சிக்காமல் போனது. ஷாட்டை சற்றே முன் கூட்டியே ஆடினார்.

அடுத்த பந்து எதிர்பார்த்தது நடந்தது, அருமையான ஆஃப் ஸ்டம்ப் லைன், பந்து வெகு லேசாக எதிர்பார்ப்பை விட உயர்ந்தது, கோலி மட்டையை நீட்டினார் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் டிக்கிவெல்லாவுக்கு எளிதான கேட்ச் ஆனது. ஆஞ்சேலோ மேத்யூஸ் மிக அருமையாக கேப்டன்சி செய்தார். வலது காலை முதலில் பின்னால் சற்றே குறுக்காக நகர்த்துவதாக அமையும் தொடக்க கால் நகர்த்தலில் இந்தப் பந்தை அவர் ஒருவேளை ஆடாமலே கூட விட்டிருக்கலாம், அல்லது சரியாக தடுத்தாடியிருக்கலாம். ஆனால் கோலியின் கால் நகர்த்தல் முன்னங்காலை நீட்டும் வகையறாவைச் சேர்ந்தது, அல்லது காலை நகர்த்தாமல் மட்டையை நீட்டும் பழக்கம் கொண்டது.

இங்கிலாந்து பிட்ச்களில் நல்ல ஆஃப் ஸ்டம்ப் லைன் பந்துவீச்சுக்கு எதிராக விராட் கோலியின் பலவீனத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் நுவான் பிரதீப்.

 

http://tamil.thehindu.com/sports/விராட்-கோலியின்-பலவீனத்தை-திட்டமிட்டுப்-பயன்படுத்தி-வீழ்த்திய-நுவான்-பிரதீப்/article9722881.ece?homepage=true

  • தொடங்கியவர்

183*, ஹெலிகாப்டர் ஷாட், அரை சதம் - இலங்கை என்றாலே குஷியாகிறாரா தோனி? #Statistics

சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கையுடன் இன்று விளையாடி வருகிறது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக ஆடி 321 ரன்களைக் குவித்திருக்கிறது. ரோஹித் ஷர்மா - தவான் இணை அருமையாக விளையாடியது. ரோஹித் அரை சதம் எடுத்தார். இலங்கைக்கு எதிராக அவர் ஆயிரம் ரன்களைக் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 78 ரன்களுக்கு அவுட் ஆனார். 

கோலி களம் புகுந்தவுடன் ஆராவாரம் எழுந்தது. ஆனால் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். பாகிஸ்தானை புரட்டி எடுத்த யுவராஜ் இன்று அடக்கி வாசித்தார். அவர் வெளுத்துக் கட்ட ஆரம்பிக்கும் முன்னரே பெவிலியன் அனுப்பி வைத்தார் அசேலா குணரத்னே. தோனி களமிறங்கியதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அவர் தவானுடன் இணைந்து அசத்தலாக ஆடினார்.

தவான் சதமும், தோனி அரை சதமும் கடந்தனர். 46 பந்துகளில் சதமடித்திருந்தார் தோனி. கடைசி ஓவரில் தோனி அவுட் ஆனார். அவர் 52 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 63 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் அதிரடி சிக்ஸர், பவுண்டரிகள் விளாச ஸ்கோர் 320ஐ கடந்தது.

தோனி

இன்று தோனி அடித்த அரை சதத்தின் மூலம் ஒரு புது சாதனை நிகழ்ந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், சயீத் அன்வர் ஆகியோருக்கு அடுத்தபடியாக  இலங்கைக்கு எதிராக அதிக முறை ஐம்பது ரன்களுக்கும் மேல் எடுத்த பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 25 முறை  இலங்கைக்கு எதிராக 50 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். சயீத் அன்வர் 20 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவரைத்தொடந்து இன்சமாம் உல் ஹக்கும், தோனியும் 18 முறை இலங்கைக்கு எதிராக ஐம்பதுக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். 

டாப் 3-ல் தற்போது கிரிக்கெட் ஆடுபவர் தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சரி சச்சின் டெண்டுல்கர், தோனி இருவரும் இலங்கைக்கு எதிராக  இதுவரை எப்படி விளையாடி வந்துள்ளனர் என்பதை பார்ப்போமா? 

சச்சின் டெண்டுல்கர் -  இலங்கைக்கு எதிராக 

போட்டிகள் -  84

இன்னிங்ஸ் - 80

ரன்கள் -  3113

அதிகபட்சம் - 138

சராசரி -  43.84 

ஸ்ட்ரைக் ரேட் - 87.54

சதம் -  8

அரை சதம் - 25 

மேன் ஆப் தி மேட்ச் -  6

 

மகேந்திர சிங் தோனி  -  இலங்கைக்கு எதிராக 

போட்டிகள் - 58

இன்னிங்ஸ் - 47

ரன்கள் -  2149

அதிகபட்சம் -  183*

சராசரி - 61.40

அதிகபட்சம் -  91.21 

சதம் - 2

அரை சதம் -  17 

மேன் ஆப் தி மேட்ச் - 6

 

2005-ல் தோனி இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் விளாசியதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 2011 உலக கோப்பையில் அவர் அடித்த அபாரமான அரை சதமும், அந்த ஹெலிகாப்டர் ஷாட்டும் இன்னமும் கண்களுக்குள் இருக்கின்றன. இப்போதும் இலங்கைக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறார் தோனி. ஒவ்வொரு வீரர்கள் ஒவ்வொரு நாட்டுக்கு எதிராக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் இலங்கையின் பவுலிங்கை நொறுக்கித் தள்ளுவதில் தோனி டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்.

http://www.vikatan.com/news/sports/91745-dhonis-terrific-records-against-sri-lanka.html

India 321/6 (50.0 ov)
Sri Lanka 271/3 (43.0 ov)
Sri Lanka require another 51 runs with 7 wickets and 42 balls remaining
  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: தவான் சதம் வீண் : இலங்கை அணி வெற்றி

 

லண்டன்: சாம்பியன் டிராபி லீக் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இங்கிலாந்தில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8-வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில்321 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 48.4அணி ஓவரில் 3விக்கெட்டுகளை இழந்து 322 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது

இந்தியஅணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி இம்முறையும் நல்ல துவக்கம் கொடுத்தது. மலிங்கா வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் ரோகித் சர்மா. தன் பங்கிற்கு லக்மல் பந்துவீச்சில் தவான் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார். அரை சதம் அடித்த ரோகித் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குண திலகா 76 ரன்கள் எடுத்தார். மெண்டிஸ் 89 ரன்களை எடுத்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1786546

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Sportler

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Sportler und im Freien

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: இலங்கையிடம் இந்தியா அதிர்ச்சித் தோல்வி

 

 
இன்றைய போட்டியில் இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவர்களில் ஒருவரான கேப்டன் ஏஞ்சலோ மாத்யூஸ் | படம்: கெட்டீ இமேஜஸ்
இன்றைய போட்டியில் இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவர்களில் ஒருவரான கேப்டன் ஏஞ்சலோ மாத்யூஸ் | படம்: கெட்டீ இமேஜஸ்
 
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது.

 

322 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணி 5-வது ஓவரிலேயே துவக்க ஆட்டக்காரர் டிக்வெல்லாவை (7 ரன்கள்) இழந்தது. இதன் பின் இணைந்த குணதிலகாவும், மெண்டிஸும் இணைந்து ரன் சேர்க்க ஆரம்பித்தனர். அவ்வபோது கிடைத்த மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸருக்கும் விளாசி 159 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.

குறிப்பாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருவரது ஓவர்களிலும் இலங்கைக்கு ரன் மழையே பொழிய ஆரம்பித்தது. குணதிலகா, மெண்டிஸ் இருவரும் சதம் கடக்க 28வது ஓவரில் குணதிலகா துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார் (76 ரன்கள்). தொடர்ந்து பெரேராவும் ரன் சேர்ப்பில் இணைந்தார்.

அடுத்த சில ஓவர்களில் புவனேஸ்வர் குமாரின் அற்புதமான ஃபீல்டிங்கினால் மெண்டிஸும் ஆட்டமிழக்க (89 ரன்கள்) கேப்டன் மேத்யூஸ் களமிறங்கினார். இங்கிருந்து ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது. ஒரு ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி என்ற ரீதியில் ரன் சேர இந்திய கேப்டன் கோலி செய்வதறியாது திகைத்தார். ஒரு கட்டத்தில் அவரே பந்துவீசவும் வந்தார். எதுவும் பலனளிக்காமல் போக இலங்கை, இலக்கை நெருங்க ஆரம்பித்தது. பும்ரா, உமேஷ் யாதவ் அவ்வபோது சில ஓவர்கள் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினாலும் அடுத்த ஓவர்களில் 2 பவுண்டரிகள் அடித்து அதற்கு சரி கட்டினர் இலங்கை வீரர்கள்.

தசைபிடிப்பின் வலியை சகித்துக் கொண்டே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெரேரா, ஒரு கட்டத்தில் களத்தில் நிற்க முடியாமல் வெளியேறினார் (47 ரன்கள்). அவர் பெவிலியன் திரும்பிய கட்டத்தில் இலங்கை அணிக்கு 42 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகளும் இருந்தன.

தொடர்ந்து களமிறங்கிய குணரத்னே, தான் சந்தித்த 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசி அவர் பங்குக்கு இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினார். அடுத்த ஓவரிலும் 2 பவுண்டரிகளை அடிக்க இலங்கை அணிக்கு 30 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே தேவை என்றானது. அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸருடன் மேலும் 11 ரன்கள் வந்ததால், தேவைப்பட்டது 24 பந்துகளில் வெறும் 21 ரன்கள். அடுத்த ஓவரில் மேத்யூஸ் அவர் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மேலும் 4 ரன்கள் வந்தது தேவை 18 பந்துகளில் 13 ரன்கள்.

தொடர்ந்து இந்த இணை சிக்ஸரிலும், பவுண்டரியிலுமே பதிலளித்துக் கொண்டிருக்க இலங்கை அணி 48.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. மாத்யூஸ் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், குணரத்னே 34 ரன்களும் எடுத்திருந்தனர். ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி இதுவரை விரட்டியிருக்கும் அதிகபட்ச இலக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தோல்வியுற்றதால் க்ரூப் - பி பிரிவில் எந்த அணியும் அரையிறுதிக்குப் போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் ஜெயிக்கும் அணியும், இலங்கை - பாகிஸ்தான் ஆட்டத்தில் ஜெயிக்கும் அணியும் க்ரூப் பி-ல் அரையிறுதிக்கு தகுதி பெறும். எனவே அடுத்து வரும் க்ரூப் - பி ஆட்டங்களை காலிறுதி ஆட்டங்கள் என்றே சொல்லலாம்.

சதமடித்த ஷிகர் தவண்

முன்னதாக ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா - தவண் அணியின் சிறப்பான ஆட்டத்தால், பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டது. சர்மா ஆட்டமிழந்ததும், கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். தொடர்ந்து யுவராஜ் சிங்கும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தோனி - தவண் இணை இந்தியாவை கரை சேர்த்தது. தவண் சதமும், தோனி அரை சதமும் கடக்க, கடைசியில் களமிறங்கிய கேதர் ஜாதவும் சில பவுண்டரிகள் விளாசி இந்தியாவை 321 ரன்களுக்கு எடுத்துச் சென்றார்.

http://tamil.thehindu.com/sports/சாம்பியன்ஸ்-டிராபி-இலங்கையிடம்-இந்தியா-அதிர்ச்சித்-தோல்வி/article9723067.ece

 

  • தொடங்கியவர்

நடப்புச் சம்பியனுக்கு இன்று சம்மட்டி அடி

முறையாகக் கவனித்தது இலங்கை அணி

நடப்புச் சம்பியனுக்கு  இன்று சம்மட்டி அடி
 

மினி உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவைத் தோற்கடித்து தனது அரையிறுதி வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்தது இலங்கை அணி.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக ரோகித், தவான் இருவரும் களமிறங்கினர். துடுப்பாட்ட ஆடுகளத்துக்குரிய அதிரடி இருக்கவில்லை. ஆயினும் இலக்குச் சரிவில்லாமல் இணைப்பாட்டம் நீண்டுகொண்டே சென்றது. வழக்கம் போல் மலிங்க களத்தடுப்பில் ஓரிரு பவுண்டரிகளைக் கோட்டை விட்டார். 19.2 பந்துப்பரிமாற்றத்தில் இந்தியா 100 ஓட்டங்களைத் தொட்டது. இருவரும் ஆளுக்கொரு அரைச்சதம் கடந்தனர். அணி 138 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் ரோகித். ஓட்டமெதையும் பெறவிடாமல் கோக்லியை பவிலியனுக்கு அனுப்பினார் பிரதீப். யுவராஜ் 18 பந்துகளை எதிர்கொண்டு 7 ஓட்டங்களை மட்டுமே பெற்று குணரத்னவிடம் போல்ட் ஆனார். ஓர் முனையில் தளம்பலும் தடுமாற்றமும் இருந்தாலும் மறுமுனையில் சதம் கடந்தார் தவான். டோனி, தவானுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். 46 பந்துகளில் டோனியின் அரைச்சதம் பதிவானது. இறுதிக் கட்டத்தில் தனது அரைச்சதத்துக்காக 46 பந்துகளை எடுத்துக் கொண்டமை பின்னடைவே. உண்மையில் 30 அல்லது 35 பந்துகளில் இந்த அரைச்சதம் பதிவாகியிருத்தல் வேண்டும். 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் தவான். முடிவில் 6 இலக்குகளை இழந்து 321 ஓட்டங்களைக் குவித்தது இந்திய அணி.

பந்துவீச்சில் மலிங்க 2 இலக்குகளையும், லக்மல், பிரதீப், பெரேரா, குணரத்ன நால்வரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர் டிக்வெல்ல ஏமாற்றினார். அவர் 18 பந்துகளை எதிர்கொண்டு 7 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டமிழந்தார். 11 ஓட்டங்களில் முதலாவது இலக்கை இழந்தாலும் அதன் பின்னர் இலங்கை அணிக்கு இலக்குச் சரிவு என்பது நீண்டநேரமாக இருக்கவில்லை. குணதிலக, மென்டிஸ் இருவரும் இணைந்து ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றினர். இருவரும் அரைச்சதம் கடந்தனர். மற்றொரு இலக்கை இழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றது இலங்கை. குறிப்பாக குணதிலக அடித்தாடி சராசரியை ஏற்றம்பெற வைத்தார். அவர் 76 ஓட்ஙட்களுடகும், மென்டிஸ் 89 ஓட்டங்களுடனும் ரண்அவுட் செய்யப்பட்டனர்.

மத்தியூஸூடன் இணைந்து குசல் ஜெனித் பெரேரா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு ரண்அவுட்களால் ஏற்பட்ட தடுமாற்றத்தை சமன் செய்யதனர். 47 ஓட்டத்தை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழப்பற்ற ஓய்வை அறிவித்துச் சென்றார் குசல் பெரேரா. சந்திமலை எதிர்பார்திருந்த நிலையில் வந்தார் அசல குணரத்ன. வழக்கம்போல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மத்தியூஸூம் முக்கியமான நேரங்களில் ஓரிரு பவுண்டரிகளைத் தட்டிவிட்டார். முடிவில் 8 பந்துகள் மீதமிருக்க 7 இலக்குகளால் வென்றது இலங்கை.

மத்தியூஸ் பந்துவீசவில்லை
இலங்கை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றது. மத்தியூஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. அணியின் பொறுப்புத் தலைவராக தரங்க செயற்பட்டார். நேற்றைய ஆட்டத்தில் மத்தியூஸ் அணிக்குத் திரும்பியிருந்தார். எனினும் ஓர் பந்துப்பரிமாற்றத்தையேனும் அவர் வீசவில்லை. இதனால் அவர் முழு உடல்தகுதி பெறவில்லை என்றும் கருதப்படுகிறது. 

264124.jpg

 

264125.jpg

264126.jpg

264135.jpg

 

 

264139.jpg

264145.jpg

http://uthayandaily.com/story/5697.html

  • தொடங்கியவர்

 இந்த தோல்வியால் அடுத்த போட்டியில் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் கொஹ்லிக்கு ஏற்பட்டுஇருக்கு.

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இலங்கையிடம் இந்தியா தோற்றது எதனால்?

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், இன்று வியாழக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடந்த போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இந்தியா தோற்றது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இந்தியா தோற்றது ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வியாழக்கிழமையன்று இலங்கைக்கு எதிராக நடத்த போட்டியில் 321 ரன்களை குவித்தும் தோல்வியை சந்தித்தது ஏன் என்று இந்த அலசல் விவரிக்கிறது.

  • 321 ரன்கள் போதுமான இலக்குதானா?

பொதுவாக ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்திய அணி 321 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கு வெற்றி இலக்காக அமையவில்லை.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 350 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி , யுவராஜ்சிங் மற்றும் பாண்ட்யா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணியால் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை.

350 ரன்களுக்கு மேல் இந்தியா குவித்திருக்க வேண்டும் என்று இந்திய அணித்தலைவர் கோலியும் கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

'321 ரன்கள் போதாது; 350 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்'படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'321 ரன்கள் போதாது; 350 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்'
  • இலங்கை வீரர்களின் தன்னம்பிக்கை

322 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய போதிலும், இலங்கை மட்டைவீச்சாளர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டனர். முதல் விக்கெட்டை 5-ஆவது ஓவரில் பறிகொடுத்தாலும், மெண்டிஸ் மற்றும் குணதிலக ஆகிய இரு இலங்கை வீரர்களும் நன்கு அடித்து விளையாடினர்.

அதிரடியாக விளையாடி மெண்டிஸ் 89 ரன்களையும், குணதிலக 76 ரன்களையும் குவித்தனர். இவர்களை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

பின்னர் களமிறங்கிய பெரேரா, குணரத்ன மற்றும் இலங்கை கேப்டன் மாத்யூஸ் ஆகியோர் பொறுப்பாக விளையாடி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.

மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் வென்றது இலங்கைபடத்தின் காப்புரிமைPA Image captionமெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் வென்றது இலங்கை
  • சோபிக்காத இந்திய அணியின் பந்துவீச்சு

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக மற்றும் நேர்த்தியாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில். நேர்த்தியான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. ஏராளமான ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விட்டுக் கொடுத்தனர்.

அதே போல், இந்திய பீல்டர்கள் பல கேட்ச்களை பிடிக்க தவறியதால், அதுவும் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது.

சோபிக்காத இந்திய அணியின் பந்துவீச்சுபடத்தின் காப்புரிமைREUTERS
  • அஸ்வின் இல்லாத சுழல் பந்துவீச்சு பாதிப்பா?

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக நடந்த இரு போட்டிகளிலும் முன்னணி இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடாத சூழலில், பிரதான சுழல்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு இந்த போட்டியில் எடுபடவில்லை. ஜடேஜா தான் வீசிய 6 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அதே போல், அனுபவம் மிகுந்து இடதுகை பந்துவீச்சாளரான யுவராஜ் சிங் ஒரு ஓவர் கூட பந்துவீசாதது இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை.

இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிர்த்த அடுத்த போட்டியில் அஸ்வின் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • பலனளிக்காத வியூகங்கள்

இலங்கை மட்டை வீச்சாளர்கள் மளமளவென்று ரன்கள் குவித்துக் கொண்டிருந்த வேளையில், அவர்களை கட்டுப்படுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

அதே போல் இந்திய அணித்தலைவர் கோலி, அணிக்கு தேவையான விக்கெட்டை எடுக்க ஓவ்வொரு கட்டத்திலும் பாண்ட்யா, உமேஷ் யாதவ், ஜடேஜா என பந்துவீச்சாளர்களை மாற்றியும், அவர்களால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை. மாறாக, அவர்கள் ரன்களை வாரி வழங்கி இலங்கை அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

பலனளிக்காத வியூகங்கள்படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionபலனளிக்காத வியூகங்கள்

மேலும், கேதர் ஜாதவ் மற்றும் விராட் கோலி போன்ற பகுதி நேர பந்துவீச்சாளர்களாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

இலங்கை இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பி பிரிவில் அரையிறுதி வாய்ப்பு பெறும் அணி எவை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியா தென் ஆப்பிரிக்காவையும், இலங்கை பாகிஸ்தானையும் கடைசி லீக் ஆட்டங்களில் எதிர்கொள்ளும். அப்போட்டிகளில் வெல்லும் இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

http://www.bbc.com/tamil/sport-40205214

  • தொடங்கியவர்

வங்கதேசம் – நியூசி., இன்று மோதல் ,

 

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இங்கிலாந்தில், 8வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. கார்டிப் நகரில் இன்று நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஒரு புள்ளி மட்டும் பெற்ற நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இதேபோல, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த வங்கதேச அணிக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி கிடைத்தது.

'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் தலா ஒரு புள்ளியுடன் முறையே 3, 4வது இடங்களில் உள்ளன. எனவே இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், முதலில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதேநேரத்தில், இப்பிரிவில் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி அடைய வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து தோல்வி கண்டால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் நல்ல 'பார்மில்' உள்ளார். மார்டின் கப்டில், கோரி ஆண்டர்சன், டிம் சவுத்தீ, டிரண்ட் பவுல்ட், ஆடம் மில்னே உள்ளிட்டோர் கைகொடுத்தால் வெற்றி பெறலாம்.

வங்கதேச அணியில் தமிம் இக்பால் அசத்துகிறார். தவிர, சமீபத்தில் டப்ளினில் நடந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் வங்கதேசம் உள்ளது.

http://www.dinamalar.com/icc-champions-trophy-2017/detail.php?id=673

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணிகள் யார் யார்..?

 

சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் - ஏ பிரிவில், இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், மீதமுள்ள மூன்று அணிகளில் யார் அரையிறுதிச் சுற்றுக்குள் செல்வார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்களாலேயே யூகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ben-stokes-broke-the-second-wi_03052.jpg


ஆஸ்திரேலிய அணி விளையாடிய இரண்டு போட்டிகளுமே மழையால் பாதித்ததால், மனதளவிலும்  பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அந்த அணி இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, அடுத்த சுற்றுக்கு முன்னேற அது பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதே நேரத்தில், பங்களாதேஷ், நியூஸிலாந்து அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. பங்களாதேஷ் - நியூஸிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு (ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால்) அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

hazlewood-ended-with-6-for-52_03009.jpg


ஆனால், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து அந்த அணியும் அரையிறுதிக்குள் சென்று விடும். வருண பகவான் வழி விட்டால் மட்டுமே இது நடக்கும். போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் நிலைமை சிக்கல்தான். குரூப்-ஏ பிரிவில் இங்கிலாந்தைத் தவிர மற்ற அணிகளுக்கு சிறப்பான ரன் ரேட்டும் இல்லை.

DBEWuq2WAAAtzzU_03394.jpg


குரூப் - ஏ-வை விட, குரூப்-பி பிரிவில்தான் பயங்கர சிக்கல் நிலவுகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்று, இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. இலங்கையுடனான போட்டியில் எளிதாக வென்று, குரூப் - பி பிரிவில் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்குள் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைத் தவிடுபொடியாக்கி அதிர்ச்சியளித்துள்ளது இலங்கை. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அசைத்துப் பார்த்துவிட்டது. இந்த இரண்டு ட்விஸ்ட்களாலும் குரூப் - பி பிரிவில் அடுத்தடுத்து நடக்க உள்ள போட்டிகள் அனல் பறக்கும்.

ab-de-viliers-was-dismissed-fo_03122.jpg

அடுத்ததாக இந்தியா - தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு போட்டிகளுமே, கிட்டத்தட்ட காலிறுதிச்சுற்று மாதிரிதான். இந்தப் போட்டியில் வெல்லும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும். இந்தப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்குச் செல்ல ரன் ரேட் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுக்கும் எதிரான போட்டியிலும் 300+ ரன்களைக் குவித்துள்ளது. இதனால், டீசன்டான ரன் ரேட்டை இந்திய அணி தக்கவைத்துள்ளது. குறிப்பாக, இலங்கை அணியுடன் தோல்வியடைந்த போதும் ரன் ரேட் சிறப்பாக உள்ளதால், இந்திய அணி குரூப்-பி பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

imad-wasim-had-ab-de-de-villie_03236.jpg


ஆனால், அரையிறுதிக்கு முன்னேற பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இரண்டு பிரிவுகளிலுமே எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் லீக் சுற்றைப் போல இல்லாமல், காலிறுதிச்சுற்றுபோலத்தான் இருக்கும். ஒவ்வோர் அணியும் அரையிறுதிக்குள் செல்ல கடுமையாகப் போராடியாக வேண்டும்.

sri-lanka-did-well-to-restrict_03323.jpg


இதில், இங்கிலாந்து அணி மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சற்று ரிலாக்ஸாக ஆடலாம். இங்கிலாந்து அணிக்குதான் அது சம்பிரதாயப் போட்டியாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு அது, வாழ்வா... சாவா போட்டிதான். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கெத்தாக அரையிறுதிக்குள் நுழைவோம் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் கூறிவருகின்றனர்.


இதில், எந்த அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் நான்கு நாள்களில் தெரிந்துவிடும். அதுவரை இன்னும் நிறைய ஆட்டம் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com/news/sports/91756-which-teams-will-enter-for-champion-trophy-semi-finals.html

  • தொடங்கியவர்

தோற்கடிக்க முடியாத அணி அல்ல நம் அணி: தோல்விக்குப் பிறகு விராட் கோலி

 

 
விராட் கோலி | கோப்புப் படம்: ஏபி
விராட் கோலி | கோப்புப் படம்: ஏபி
 
 

சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அபார பேட்டிங்கினால் இந்திய அணி தோல்வி தழுவியதையடுத்து இந்தத் தொடர் திறந்த தொடராகியுள்ளது.

க்ரூப் பி-ல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுமாறு தொடர் மாறியுள்ளது. இது அன்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதாலும் நேற்று இலங்கை அணி திட்டமிட்டு முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்து 350 ரன்கள் சென்றிருக்க வேண்டிய ஸ்கோரை 321 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு இலக்கை வெகு எளிதாக விரட்டி வெற்றி பெற்றதாலும் ஏற்பட்டுள்ள நிலையாகும்.

இந்த ஆட்டம் குறித்து விராட் கோலி கூறும்போது,

“பேட்டிங் நன்றாக ஆடியதாகவே நினைக்கிறேன். முதலில் அடித்தளத்தை நன்றாக அமைத்துப் பிறகு கடைசியில் அடித்து நொறுக்கவே திட்டமிட்டோம். இப்படித்தான் எப்போதும் ஆடி வருகிறோம்.

50 ஓவர்களிலும் அடித்து நொறுக்கி ஆடும் அணியாக நாம் இருந்ததில்லை. ஆனால் இங்கு ஒரு அணி (இலங்கை) ஒரு வலுவான மன நிலையில் களமிறங்கி அவர்களது ஷாட்களை மிக அருமையாக ஆடி வெற்றி பெற்றிருக்கும் போது அந்த அணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் நமது சிரம் தாழ்ந்து, ’மிக நன்றாக ஆடினீர்கள்’ என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ரன்கள் போதாது என்று கூற முடியாது, நாங்கள் நன்றாகத்தான் திட்டமிட்டு ரன் விகிதத்தை உயர்த்தினோம். போதுமான ரன்கள் இருந்ததாகவே கருதுகிறேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது சில தருணங்களில் கொஞ்சம் அடித்து ரன் விகிதத்தை உயர்த்தியிருக்கலாம் என்று கூற முடியும். ஆனால் இதை ஒரு பெரிய விவகாரமாக நான் கருதவில்லை.

வேண்டுமானல் வரும் ஆட்டத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அடித்து ஆடி இன்னும் 20 ரன்களைக் கூடுதல் ஆதாரமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். அதுவும் இந்த முடிவைப் பார்க்கும் போது அத்தகைய முயற்சி தேவைப்படும் என்றே கருதுகிறேன்.

பவுலர்களும் ஓரளவுக்கு நன்றாகவே வீசினர். நம் அணி தோற்கடிக்கப்பட முடியாத அணியல்ல. இலங்கை அணி அவர்கள் திட்டமிடலை சரியாக பிரயோகப்படுத்தியதற்கு நாம் பாராட்டியே ஆகவேண்டும். நாம் சரியாக திட்டங்களை பிரயோகப்படுத்தவில்லை. அப்படியிருக்கும் போது சிந்தனைக்கு எப்போதும் தீனி இருந்து கொண்டுதான் இருக்கும். மேலும் இந்த தொடரில் 8 அணிகளும் ஏதோ ஒரு விதத்தில் சாம்பியன் அணிகளே, ஆகவே இந்தத் தொடர் இவ்வாறு சவாலான தொடராக அமையும் என்று எதிர்பார்த்ததே. எனவே மற்ற அணிக்கும் நாம் அதற்குரிய மதிப்பை அளிக்க வேண்டும், அவர்கள் வெற்றியை பாராட்ட வேண்டும்.

இத்தகைய தொடர்கள் சவால் மிகுந்தவை என்று நான் ஏற்கெனவெ கூறியிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் போட்டிகள் ஏறக்குறைய காலிறுதிதான், இத்தகைய சோதனை வரவேற்கத்தக்கதுதான், அணிகளுக்கு இதனால் உத்வேகம் கூடுதலாகும்.

இவ்வாறு கூறினார் விராட்கோலி.

http://tamil.thehindu.com/sports/தோற்கடிக்க-முடியாத-அணி-அல்ல-நம்-அணி-தோல்விக்குப்-பிறகு-விராட்-கோலி/article9723313.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாகிஸ்தானிடம் தோல்வி: கேப்டனாக அணியை வழிநடத்துவது கடினமாக இருந்தது - டிவில்லியர்ஸ்

மழை எப்போது வரும் என்பதை கணிக்க முடியாத நிலையில், கேப்டனாக அணியை வழிநடத்துவது கடினமாக இருந்தது என்று தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 
 
 
 
பாகிஸ்தானிடம் தோல்வி: கேப்டனாக அணியை வழிநடத்துவது கடினமாக இருந்தது - டிவில்லியர்ஸ்
 
பர்மிங்காம் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் இரவு நடந்த 7-வது லீக்கில் தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் (பி பிரிவு) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 75 ரன்கள் (நாட்-அவுட்) எடுத்தார்.

தொடர்ந்து ஆடபாகிஸ்தான் 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது பாபர் அசாம் (31 ரன்), சோயிப் மாலிக் (16 ரன்) களத்தில் நின்றனர். ஆட்டத்தை தொடர முடியாத அளவுக்கு மழை பலமாக பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. 27 ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 101 ரன்களே போதுமானது. எனவே அந்த அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரைஇறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறாமல் தப்பியது. 2-வது ஆட்டத்தில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது முதல் தோல்வியாகும்.

201706090931128994_Pakistan-vs._L_styvpf
தோல்வி ஏமாற்றத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ்.

தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘பாகிஸ்தான் அணியினர் முதல் 10-15 ஓவர்கள் நேர்த்தியாக பந்து வீசி எங்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது. மழை எப்படியும் வரும் என்று அடிக்கடி ஆலோசித்தோம். ஆனால் மழை எப்போது வரும் என்பதை கணிக்க முடியாத நிலையில், கேப்டனாக அணியை வழிநடத்துவது கடினமாக இருந்தது. மழையால் வெறும் 27 ஓவர்கள் மட்டுமே விளையாடுவோம் என்று தெரிந்து இருந்தால் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட்டு இருப்போம். எது எப்படியோ இறுதியில் சிறப்பாக செயல்பட்ட அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாகும். அடுத்து என்ன தேவை என்பது எங்களுக்கு தெரியும். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக வேண்டியது அவசியம். எனக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/09093106/1089812/Failure-to-Pakistan-difficult-to-lead-the-team-as.vpf

  • தொடங்கியவர்

321 ஓட்ட இலக்கை பெற முன்னர் வீரர்களுக்கு கூறியது என்ன : வெளிப்படுத்தினார் மெத்தியூஸ் (காணொளி)

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெறுவோம் என யாரும் நம்பவில்லை. ஆனால் பல அழுத்தங்களுக்கு மத்தியில் களமிறங்கி சுதந்திரமான முறையில் விளையாடியமையால் போட்டியை வெற்றிக்கொண்டோம். இதேபோன்று எதிர்வரும் போட்டிகளிலும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எந்தவொரு அணியையும் இலகுவாக வெற்றிக் கொள்ள முடியும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.India-v-Sri-Lanka_-Champions-Trophy.jpg

இதேவேளை 321 ஓட்ட இலக்கை பெற முன்னர் இலங்கை அணி வீரர்களுக்கு என்ன கூறினார் என்பது தொடர்பிலும் மெத்தியூஸ் தெரிவித்துள்ளதோடு குமார் சங்கக்கார வழங்கிய ஆலோசனைகள் என்ன என்பதையும் வெளிப்படுத்தினார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மெத்தியூஸ் இதனைத் தெரிவித்தார்.

''இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே வீரர்களுடன் கலந்துரையாடினோம். சிறந்த பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு எதிராகவே களமிறங்க உள்ளோம். அணி வீரர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியத் தேவை இல்லை. எம்மால் என்ன முடியோ அதனை இன்றைய நாளில் செய்வோம்.

இதேபோன்று நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற போது ஆடுகளம் முதலில் பந்து வீசுவதற்கு சாதகமான முறையில் இருந்தது. நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் எமக்கு சாதகமாக காணப்பட்டது.

குறிப்பாக எமது வீச்சாளர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிரபல துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இந்திய அணியை 320 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய விடயமாகும். 

இந்த ஆடுகளத்தை பொறுத்தவரையில் 310, 320 என்ற ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக பெறமுடியும். இந்திய அணியை 320 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசியமை சிறப்பான அம்சமாகும்.

பந்து வீச்சை மேற்கொண்டு அரங்கு திரும்பிய பின்னர், 320 ஓட்ட இலக்கை அடைவதற்கு யாரும் அவசரம் கொள்ள வேண்டியத் தேவையில்லை என்று வீரர்களிடம் கூறினேன்.

மேலும் நிதானமாக துடுப்பெடுத்தாடி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தால் இடைநிலையில் களமிறங்கும் வீரர்களால் இலகுவாக துடுப்பெடுத்தாட முடியும். எனவே யாரும் அவசரப்படாமல் துடுபெடுத்தாடுமாறு கோரினேன்.

ஆரம்பத்தில் 30, 40 ஆட்டங்களை பெறாமல் 70 தொடக்கம் 100 ஓட்டங்களை பெற்றாமல் பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு இலகுவாக இருக்கும் எனவும்  கூறினோம்.

இந்நிலையில் தனுஷ்க குணதிலக, குசேல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுகொடுத்தனர். இதனையடுத்து குசேல் பெரேரா மற்றும் அசேல குணரட்ன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்ட உதவியுடன் இந்த போட்டியை வெற்றிக் கொள்ள முடிந்தது.

இதேவேளை போட்டிக்கு முன்னர் குமார் சங்கக்கார, ஆடுகளம் தொடர்பிலும் துடுப்பாட்டம் நுணுக்கங்கள் தொடர்பிலும் எமக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். அவர் துடுப்பாட்டத்தில் அரசன் போன்றவர். இந்த ஆலோசனைகளுடன் நாம் களமிறங்கினோம். இதேவேளை இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அகந்தையுடன் விளையாட வேண்டும் எனவும் சங்கா எமக்கு கூறினார்.''

 

http://www.virakesari.lk/article/20750

  • தொடங்கியவர்

நெருக்கடியைச் சமாளிக்க அஸ்வினை அழைக்கவுள்ளார் கோலி!

 

 
ashwin22

 

இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினை இதுவரை இந்திய அணி பயன்படுத்தவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா இந்திய அணியின் பிராதன சுழற்பந்துவீச்சாளராக உள்ளார்.

ஆனால் நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை. 
ஷிகர் தவன் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தபோதும், இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.

321 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் வெற்றிபெறமுடியாமல் போனது. அதிலும் அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஜடேஜா, பாண்டியா ஆகிய இருவரும் ரன்களை வாரி வழங்கினார்கள். உமேஷ் யாதவ் பந்துவீச்சும் நேற்று மோசமாக அமைந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. அதில் வென்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்த நெருக்கடியான நிலையில் ஞாயிறு போட்டியில் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன. 

ஜடேஜா, பாண்டியா, உமேஷ் யாதவ் ஆகிய மூவரில் ஒருவருக்குப் பதிலாக அஸ்வின் அணியில் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது. அணிக்கு ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதால் உமேஷ் யாதவுக்குப் பதிலாக அஸ்வின் அணியில் இடம்பிடிப்பார் என்று அறியப்படுகிறது. அதேசமயம் வேகப்பந்துவீச்சை மேலும் பலப்படுத்த ஷமியும் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்றைய போட்டியில் இலங்கை அணியில் மூன்று இடக்கை பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். ஆனாலும் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது கடும் விமரிசனங்களை உருவாக்கியுள்ளது. மூவரும் இளம் பேட்ஸ்மேன்கள். அவர்களால் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள நிச்சயம் சிரமமாக இருந்திருக்கும். வலுவான பேட்டிங்கைக் கொண்ட இந்திய அணி நிச்சயம் அஸ்வினை அணியில் சேர்த்திருக்கவேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சைச் சமாளிக்கத் தடுமாறும் என்பதால் அடுத்தப் போட்டியில் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிரான தோல்வியால் ஷமியும் அணியில் நுழைய வாய்ப்புண்டு.

http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/09/india-missed-ashwin-in-icc-champions-trophy-contest-against-sri-lanka-2717377.html

  • தொடங்கியவர்

தனஞ்சய டி சில்வா லண்டன் நோக்கி திடீர் பயணம்

தசைப்பிடிப்பு காரணமாக லண்டனில் இடம்பெறவுள்ள சம்பியன் ட்ராபி போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

dhana.jpg

இவருக்கு பதிலாக இலங்கை அணியின் சகல துறை வீரர் தனஞ்சய டி சில்வா சம்பியன் ட்ராபி போட்டியில் இடம்பெற்றவுள்ளார். 

மேலும், தனஞ்சய டி சில்வா இன்று லண்டன் நோக்கி புறப்பட உள்ளதாக விளையாட்டுத் திறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். 

http://www.virakesari.lk/article/20752

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.