Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை

Featured Replies

பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை

 

பாரீசில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 
 
பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை
 
பாரீஸ்:

பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் தெரிவித்த பாரீஸ் போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஜோகன்னா பிரிமெவர்ட் கூறுகையில், சுற்றுலாத்துறையின் பிரபல இடத்திற்கு அருகே உள்ள ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் சுரங்கப்பாதை காவல் நிலையத்தை குறிவைத்து மர்மநபர் தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
201704210549028885_paris2._L_styvpf.gif
3 நாட்களுக்கு முன்னதாக பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருந்தது. இந்நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து மர்ம நபர்கள் இருவரை பாரீஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

மர்ம நபர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட உடனேயே உயிரிழந்தவர்கள் உடல்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/21054848/1081019/Paris-police-say-officer-and-attacker-shot-killed.vpf

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் பயங்கரவாத தாக்குதல் - ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

பிரான்ஸ் - பரிஸ் மத்திய நகர் பகுதியில் பயங்கரவாதிகளினால் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் மேலும் இரு உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு பிரிவினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. 

இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பயங்கரவாதியொருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர். 

தமது ஒரு உறுப்பினரினால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஐஎஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

பிரான்ஸில் ஐஎஸ் அமைப்பினரால் 2015ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் 238 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.adaderana.lk/news.php?nid=90678

  • தொடங்கியவர்

''இதுப்போன்ற ஓர் பதற்றமான காட்சியை அனுபவித்ததில்லை '' : பாரிஸ் துப்பாக்கிச்சூடு (புகைப்படத் தொகுப்பு)

 

பாரிஸின் மத்திய பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  • Police secure the area after a gunman opened fire on Champs Elysees in Paris, 20 April 2017GETTY IMAGES

    நேற்று வியாழக்கிழமையன்று பாரிஸின் சேம்ப்ஸ் எலிஸீயில் தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து அந்த பகுதி விரைவில் மூடப்பட்டது.

  • French Police officers react after a shooting in which a police officer was shot dead along with the gunman in an attack near the Champs-Elysees in Paris, France, 20 April 2017EPA

    ஆயுதமேந்திய போலீஸார் அந்தப்பகுதியிலிருந்தவர்களை வெளியேற்றினார்கள். வெளியேறுங்கள், இந்த பகுதி பாதுகாப்பானது அல்ல.'' என்று பொதுமக்களிடம் கூறி வந்தனர்.

  • People hold their hands up as they walk towards police officers near the site of a shooting at the Champs-Elysees in Paris, 20 April 2017AFP/GETTY IMAGES

    கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்தவர்கள் அதிகாரிகளின் கூறிய வழிகாட்டுதல்களை தொடர்ந்து, தங்கள் கைகளை தூக்கியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.

  • Police officers secure the area after a gunman opened fire on the Champs-Elysees in Paris, 20 April 2017GETTY IMAGES

    துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய பகுதியில் அதிகாரிகள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பதுங்கி அந்தப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

  • French police react after a shooting in which an officer was fatally shot along with the gunman in an attack near the Champs Elysees Paris, 20 April 2017EPA

    தாக்குதல்தாரி என சந்தேகிக்கப்பட்டவர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  • Police officers secure the area after a gunman opened fire on Champs Elysees in Paris, 20 April 2017GETTY IMAGES

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆயுதமேந்திய அதிகாரிகள் காவல் வளையம் ஒன்றை அமைத்தனர்.

  • French soldiers stand guard at the Arc de Triomphe near the Champs Elysees in Paris after a shooting on April 20, 2017.AFP/GETTY IMAGES

    சேம்ப்ஸ் எலிஸீயின் ஒரு பகுதியின் முடிவிலுள்ள ஆர்க் டி ட்ரையோம்ப்பில் ஆயுதமேந்திய ஃபிரெஞ்சு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Masked police stand on top of their vehicle on the Champs Elysees Avenue after a policeman was killed and another wounded in a shooting in Paris, 20 April 2017REUTERS

    அதன் பிரபலத்தன்மை காரணமாக, சேம்ப்ஸ் எலிஸீ நீண்ட காலமாகவே தாக்குதல் நடைபெறுவதற்கு சாத்தியமுள்ள ஓர் இடமாக பார்க்கப்பட்டது.

  • Two women hug each each other after a shooting near the Champs Elysees in Paris, France, 20 April 2017EPA

    ''இதுப்போன்ற ஓர் பதற்றமான காட்சியை அனுபவித்ததில்லை ''என்று உயிர் தப்பிக்க கடைகளில் தஞ்சம் புகுந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பின்னர் தெரிவித்தனர்.

 

 

http://www.bbc.com/tamil/global-39670112

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.