Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலையத்தை அண்டிய காணி விடுவிப்பு தொடர்பில் இணக்கப்பாடு இல்லை

Featured Replies

பலாலி விமான நிலையத்தை அண்டிய காணி விடுவிப்பு தொடர்பில் இணக்கப்பாடு இல்லை

p10-9e5f4e07927c2fb382a2922772c300e40900adc7.jpg

 

படைத்தரப்பினருடனான சந்திப்பையடுத்து சுமந்திரன் எம்.பி.தகவல்

(எம்.நியூட்டன்)

பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான பலாலி விமான நிலை­யத்தை சூழ்ந்த நான்­கா­யிரம் ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­ட­முள்­ளது. இதனை விடு­விப்­பது குறித்த பேச்­சு­வார்த்­தையில் எவ்­வி­த­மான முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

காணி விடு­விப்பு குறித்து மாவட்ட ரீதி­யான மேற்­கொள்­ளப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்கள் முன்­னேற்­ற­ம­ளித்­துள்­ள­தோடு அடுத்த கட்­ட­மாக உயர் மட்ட அர­சியல் ரீதி­யான பேச்­சு­வார்த்­தை­களின் ஊடா­கவே இறுதி முடி­வுகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

எம்­மு­டைய தர­வு­களின் பிர­காரம் யாழ்.மாவட்­டத்தில் யுத்தம் நிறை­வ­டைந்த போது 27ஆயிரம் ஏக்கர் காணிகள் படை­யி­ன­ரி­டத்தில் இருந்­தன.ஆனால் தற்­போது பலாலி விமான தளக் காணிகள் உட்­பட 4ஆயி­ரத்து 700ஏக்கர் காணிகள் தங்­க­ளி­டத்தில் இருப்­ப­தாக படைத்­த­ரப்பு கூறு­கின்­றது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருந்த மைதி­ரி­பால சிறி­சேன தனியார் காணிகள் அனைத்தும் விடு­விக்­கப்­படும் என்று எழுத்து மூல­மான வாக்­கு­றதி அளித்­துள்­ள­தா­கவும் சுமந்­திரன் எம்.பி குறிப்­பிட்டார்.

வடக்கு மாகா­ணத்தில் படை­யி­ன­ரி­டத்தில் உள்ள பொது­மக்கள் காணி­களை விடு­விப்­பது குறித்து பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான சந்­திப்பு நடை­பெற்­றி­ருந்து.

முதற்­கட்­ட­மாக முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­களில் அர­சாங்க அதிபர், மாவட்ட பிர­தி­நி­திகள், மற்றும் பாது­காப்பு அதி­கா­ரிகள், பொது­மக்கள் சகிதம் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வ­தென அச்­சந்­திப்பில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இதற்­க­ட­மைய கடந்த 19ஆம் 20ஆம் திக­தி­களில் முல்­லைத்­தீவு மற்றும் கிளி­நொச்சி மாவட்­டங்­களில் கலந்­து­ரை­யா­டல்­களும் அப­ரிக்­கப்­பட்­டுள்ள காணி­களை நேரில் பார்­வை­யிடும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் நேற்று வௌ்ளிக்­கி­ழமை யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் மாவட்ட செய­லாளர் நா.வேத­நா­யகன் தலை­மையில் கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா எம.ஏ.சுமந்­திரன் த.சித்­தார்த்தன், சி.சிறி­தரன், ஈ.சர­வ­ண­பவன் ஆகி­யோரும், யாழ்.மாவட்­டத்­திற்கு முப்­ப­டையைச் சேர்ந்த பொறுப்­பான உயர் அதி­கா­ரிகள், பொலிஸ் உயர் அதி­கா­ரிகள், பிர­தேச செய­லா­ளர்கள் ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

காலை 9மணி­முதல் 12.30 மணி வரையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யாடல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கருத்து வௌியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், வடக்கு மாகா­ணத்தில் விசே­ட­மாக யாழ்.மாவட்­டத்தில் விடு­விக்­கப்­ப­டா­துள்ள பொது­மக்­களின் காணிளை விடு­விப்­பது குறித்து நாங்கள் இன்­றைய தினம் (நேற்று) நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தோம்.  

இதன்­போது மிக முக்­கி­ய­மா­ன­தா­கவும் பிர­தான பிரச்­சி­னை­யாக பலாலி விமான நிலை­யத்தைச் சுழ்ந்­துள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­விக்­கின்ற விட­ய­மாகும். இந்த காணி­களை விடு­விக்­கின்ற விட­யத்தில் எவ்­வி­த­மான முன்­னேற்­றங்­களும் ஏற்­ப­ட­வில்லை.

பலாலி விமான நிலை­யத்தை எதிர்­கா­லத்தில் விஸ்­த­ரிப்­பதா இல்­லையா அப்­படி விஸ்­த­ரிப்­ப­தாக இருந்தால் அதற்கு தேவை­யான காணி­களின் அளவு எவ்­வ­ளவு என்­கின்ற விட­யங்கள் உயர்­மட்­டத்தில் கலந்­து­ரை­யா­டியே தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய விட­ய­மாக உள்­ளது. இது தொடர்­பான தர­வுகள் எமக்குக் கிடைக்கப் பெற்­றுள்­ளன.

அத்­த­ர­வு­களை வைத்துக் கொண்டு பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக அல்­லது பிராந்­திய விமான நிலை­யாக விஸ்­த­ரிப்­ப­தாக இருந்தால் தனியார் காணிகள் சுவீ­க­ரிக்­கின்ற நிலைமை உள்­ளதா? அதற்கு மாற்று வழி­களைப் பயன்­ப­டுத்­த­லாமா? என்­பது பற்றித் தீர்­மா­னான முடிவு பின்­னரே எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. அந்த முடிவின் அடிப்­ப­டையில் படைத்­த­ரப்­பி­னோடு மீண்டும் பேச்சு நடாத்­துவோம்.

இதனைத் தவிர ஏனைய இடங்­களில் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள தனியார் காணி­களை அடை­யாளம் காட்­டி­யுள்ளோம். சில இடங்­களை அவர்கள் காணி­களை விடு­விப்­ப­தாக கூறி­யுள்­ளார்கள். பல இடங்கள் தனியார் காணிகள் என்­பதை உறு­தி­செய்­ய­வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக பல இடங்­களில் சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­போதும் அது முடி­வ­டை­யாது இருக்­கின்­றது இது தொடர்பில் அவர்கள் முடிவு எடுக்­க­வேண்­டி­ய­தாக இருக்­கின்­றது.

ஒவ்­வொரு பிர­தேச செய­ல­கங்­க­ளி­னதும் பிர­தேச செய­லார்கள் சமூகம் தந்­த­மையால் தனியார் காணி­களை விட்டு அவர்­க­ளுக்கு பாது­காப்பு கார­ண­மாக அர­சாங்கக் காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலும் இணங்கப் பெற்­றுள்­ளது.

அவ்­வாறு அரச காணி இருக்­கு­மாக இருந்தால் அது பாது­காப்­புக்கு தேவை­யாக இருந்தால் அதனை மாற்­று­வது சம­பந்­த­மாக தீர்­மானம் எடுப்­பார்கள்.

ஆகவே பிர­தேச செய­லா­ளர்கள் வெகு­வி­ரை­வி்­லேயே சில தக­வல்­களை அர­சாங்க அதி­ப­ரிடம் ஒரு வாரத்தில் வழங்­க­வுள்­ளனர். அத்­த­கைய தக­வல்­கள வழங்­கிய பிறகு மீளவும் இதே படைத்­த­ரப்­புடன் இன்­னுமோர் கலந்­து­ரை­யாடல் நடாத்தி அதில் தௌிவற்ற தன்மை இருந்தால் அதனை தௌிவு­ப­டுத்தி அந்தத் தக­வல்­களை பாது­காப்பு அமைச்­சுக்கு அனுப்பி வைத்து நாங்கள் பாது­காப்பு அமைச்­சோடு நடை­பெறும் பேச்­சு­வார்த்­தையில் அந்த விட­யங்­களை கையாள்வோம்.

ஆரம்ப கட்­ட­மாக படைத்­த­ரப்பு சில தக­வல்­களை தந்­துள்­ளார்கள். குறிப்­பாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த வேளையில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் யாழ்.மாவட்­டத்தில் தங்கள் வசம் இருந்­தா­கவும் தற்­போது 4 ஆயி­ரத்து 700 ஏக்கர் குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளார்கள் அதில் 4ஆயி­ரத்து 700 ஏக்­க­ரினுள் தான் பலாலி விமா­னத்­த­ளமும் அடங்­கி­யி­ருக்­கின்­றது.

எமக்கு தெரிந்த தக­வலின் படி வலி வடக்கு பிர­தே­சத்தை சுழ்ந்த பகு­தியில் 12 ஆயிரம் ஏக்கர் காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக 2003 ஆண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­ஜாவும் அவ­ருடன் மேலும் இரு­வரும் மூன்று வழக்­கு­களைத் உச்­ச­நீ­தி­மன்றல் தாக்கல் செய்­துள்­ளார்கள்.

அதில் ஒருவர் மரணம் அடைந்­துள்ளார். மற்­ற­வ­ரு­டைய காணி உட­ன­டி­யாக விடு­வித்­தார்கள். அதன் பின்னர் மாவை.சேனா­தி­ரா­ஜா­வி­னு­னு­டைய வழக்கு தொடர்ந்து நடை­பெற்று வந்­தது அதன்­போது படிப்­ப­டி­யாக சில இடங்கள் விடு­விக்­கப்­பட்­டது.

2007ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்றம் குறித்த காணிகள் அனைத்­திலும் மக்கள் குடி­யேற்­றத்­திற்கு விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்ற இடைக்­கால உத்­த­ரவு வழங்­கி­யி­ருந்­தது. ஆனால் அதற்­கான படி­மு­றையும் பணித்­தி­ருந்தும் கூட 10 வரு­டங்­க­ளுக்கு பின்பும் விடு­விக்­க­ப­பட்ட காணி­கள குறைவு என்­ப­தற்­கான தக­வல்­களும் உள்­ளன.

அவ்­வா­றி­ருக்­கையில் ஆனால் இரா­ணுவம் 27 ஆயிரம் ஏக்கர் காணிகள் தற்­போது 4 ஆயிரம் வரை குறைந்­துள்­ள­தாக கூறு­கி­றது. இவை அனைத்தும் பிர­த­ன­மாக மக்கள் குடி­யி­ருந்த தனியார் காணி­களும் மக்கள் பாவ­னைக்கு விடப்­பட்ட அரச காணி­க­ளு­மே­யாகும்.

ஆகையால் மீள்­கு­டி­யேற்றம் அல்­லது சுமூக நிலை வரு­கின்­ற­போது மக்கள் திரும்­பவும் சொந்த நிலங்­க­ளுக்கு போக­வேண்டும் என்­பது எங்­க­ளு­டைய அடிப்­படை கோரிக்­கை­யாக இருந்­தது. புதிய அர­சாங்­கத்­துடன் நாங்கள் இணங்கி கொண்ட விட­ய­மு­மாகும்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­பாக விசே­ட­மாக ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருந்த மைதி­ரி­பால சிறி­சேன எழுத்­தி­லேயே அந்த வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார். அதா­வது தனியார் காணிகள் அனைத்தும் விடு­விக்­கப்­படும் என்ற வாக்­கு­ற­தியே அது­வாகும். ஆகவே ஜனா­தி­ப­தியின் பணிப்­பு­ரைக்கு அமை­யுவும் தான் நாம் பாது­காப்பு அமைச்­சுடன் இத்தகைய கலந்துரையாடலை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

முதலில் எவ்வளவிற்கு படைத்தரப்பினர் இணங்கி தனியார் காணிகளை விடுவித்து தங்களுடைய இடங்களை மாற்றி அமைத்து உண்மையான பாதுகாப்புக்கு ஏற்பான இடங்களுக்கு செல்ல முடியும் என்பதை பார்த்து விட்டு அதன் பின்னரும் படைத்தரப்பிடம் காணி இருக்குமானால் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை சிந்திக்க முடியும். ஆகையால் இந்த மூன்று கூட்டங்களும் பயனுள்ளதாக இருந்தன.

தகவல் பெறும் நோக்கத்திலும் கூட இவை பயனுடையதாக இருந்தது. சிலசில இடங்களை இந்த பேச்சுவார்த்தையில் விடுவிப்பதாக அறிவித்துள்ளார்கள். இத்தகைய மாவட்டங்கள் ரீதியான பேச்சுவார்த்தைக்கு பிறகு நடைபெறப்போகின்ற உயர் மட்ட அரசியல் தலைவர்களோடு நடைபெறவுள்ள சம்பாசனை தான் மிகவும் முக்கியமாகனதாக இருக்கும். அதில்தான் நாங்கள் அரசாங்கத்தை முடிவுகள் எடுக்கத் தூண்டுகின்றதாக அமையும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-22#page-1

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுகள் எட்டப்படாத நிலையில் வலி.வடக்கு காணி விடுவிப்பு கூட்டம்

 
 
88_21042017_KAA_CMY.jpg

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

பலாலி விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை(21) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும், சிவஞானம் சிறிதரன், சரவணபவன், தர்மலிங்கம சித்தார்த்தன் உட்பட இராணுவம், கடற்படை, விமானப்படையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் போது, பலாலி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 4000 ஏக்கர் காணியை விடுவிப்பது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இன்றைய (நேற்றைய தின) கூட்டத்தில் அந்த காணிகள் விடுவிப்பது தொடர்பான தீர்மானங்கள் எட்டப்படவில்லை. விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கு மேலதிக காணிகள் தேவையா இல்லையா? என்பது தொடர்பான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதா? அல்லது பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதா? என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதாக இருந்தால், பொது மக்களுடனும் கலந்துரையாடி தனியார் காணிகள் சுவீகரிப்பதற்கான நிலமைகள் இருப்பதன் காரணமாக மாற்றுவழிகளை எடுக்கலாமா? என்ற முடிவுகளை பின்னர் எடுக்க வேண்டும்.

இக் கலந்துரையாடலில், இராணுவத்தினரிடம் இருக்கின்ற ஏனைய பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. சில இடங்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். தனியார் காணி என்பதை உறுதி செய்துள்ளனர். பல இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அவை முடிவடையவில்லை.

அது குறித்து இராணுவத்தினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், தனியார் காணிகளை விடுத்து அரச காணிகளில் பாதுகாப்பு கருதி இடங்கள் தேவைப்படின் அவைகளை இராணுவத்தினரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

காணிகள் குறித்த விபரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள். பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலாளரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன்பின்னர் பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஏனைய விடயங்களை கையாள முடியும்.

2009 போர் முடிவடைந்த பின்னர் 27 ஆயிரம் ஏக்கர் காணி படையினர் வசம் இருந்ததாகவும், தற்போது 4 ஆயிரத்து 700 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வலிவடக்கு பிரதேசத்தை சூழ்ந்த பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் ஆரம்பத்தில் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய இருவர் இணைந்து உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த போது, ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றயவரின் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜாவின் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகின்றது.

அதில் படிப்படியாக சில இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு இவை அனைத்து காணிகளும் மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு கையளிக்கப்பட வேண்டுமென்ற இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.

அதற்கான படிமுறைகளை வகுத்திருந்தும் கூட 10 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மிகக்குறைவானவையாகவுள்ளது. மீள்குடியேற்றம், அல்லது சுமுக நிலை வருகின்ற போது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ வேண்டுமென்பது எமது அடிப்படை கோரிக்கை. நல்லாட்சி அரசாங்கத்துடன் இணங்கிக்கொண்டிருந்த விடயமும் இது தான். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி தனியார் காணிகள் விடுவிக்கப்படுமென்று வாக்குறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

முதலில், எந்தளவிற்கு இராணுவத்தினர் இணங்கி தனியார் காணிகளை விடுவித்து, தமது இடங்களை மாற்றி அமைக்கப்பட்டதன் பின்னரும், எவ்வளவு இடங்களை குறைக்க முடியுமென அவதானித்த பின்னர், அதிகளவான காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் இருக்குமாக இருந்தால், அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சிந்திக்க முடியும்.

மாவட்ட ரீதியாக நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னர், அரசியல் தலைவர்களுடன்,அமைச்சர்களுடனும் நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடல்தான், மிக முக்கியமாக இருக்கும். அவை தான் காணி விடுவிப்பு குறித்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடலாக இருக்கும் என்றார். 

 

http://www.thinakaran.lk/2017/04/22/உள்நாடு/17448

  • தொடங்கியவர்

பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்துள்ள பகுதியை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

sumanthiran2.jpg

பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்து காணப்படும் 4 ஆயிரம் ஏக்கர் பகுதியை விடுவிப்பது தொடர்பாக இன்று இடம்பெற்ற  பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லையென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான கலந்துரையாடல், இன்று  யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தின் பின்னர்  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதனால் அவற்றை விடுவிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது எனவும்  விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமானால்  தனியார் காணிகளைச் சுவீகரிக்க கூடிய சூழல் உள்ளது எனவும் எவ்வளவு காணிகள் சுவீகரிக்கப்படும் என்பது தொடர்பில் உயர் மட்டத்துடன் கலந்துரையாடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த  தரவுகள் தற்போது  விவரங்கள் தற்போதும் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அதனை வைத்துக்கொண்டு மக்களுடனும் கலந்தாலோசித்து மேற்கொள்ளவேண்டிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்து  அதன்படி படைத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/24672

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.